Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

1st September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

1st September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 1st September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1st September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. 2022ஆம் ஆண்டில் G20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கிற நாடு எது?

அ. இந்தியா

ஆ. சீனா

இ. இந்தோனேசியா

ஈ. இலங்கை

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இந்தோனேசியா

  • G20 உறுப்புநாடுகளின் சுற்றுச்சூழல் அதிகாரிகள், காலநிலை நடவடிக்கை மற்றும் உக்ரைனில் நடைபெற்று வரும் போரின் உலகளாவிய தாக்கம் குறித்து இந்தோனேசியாவின் பாலி தீவில் பேச்சுவார்த்தை நடத்தினர். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப்போராடுவதற்கும் வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளிடையே இலக்குகளை ஒத்திசைப்பதற்கும் ஒவ்வொரு G20 நாடுகளின் பங்களிப்பை செயல்படுத்துவது பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.

2. நாட்டில் பாம்பு தீண்டுவதால் ஏற்படும் பாதிப்பு, இறப்பு, நோயுற்ற தன்மை மற்றும் சமூகப்பொருளாதார சுமை ஆகியவை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?

அ. AIIMS

ஆ. ICMR

இ. NITI ஆயோக்

ஈ. IMA

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ICMR

  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR) நாட்டில் பாம்பு தீண்டுவதால் ஏற்படும் பாதிப்பு, இறப்பு, நோயுற்ற தன்மை மற்றும் சமூகப்பொருளாதார சுமை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆய்வின்படி, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் பாம்பு தீண்டுவதால் மட்டும் 45,000–க்கும் மேற்பட்ட மக்கள் இறப்பெய்துகின்றனர். அதில் பாதிக்கப்பட்டவர்களுள் 30 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவ சிகிச்சை பெற மருத்துவமனைகளை அடைகின்றனர். இந்தியாவில் ஓராண்டுக்கு 46,900 பேர் விஷப்பாம்புக்கடியால் உயிரிழக்கின்றனர்.

3. இந்தியாவில் சமூகப் பங்குச்சந்தையை (SSE) அறிமுகப்படுத்தும் கட்டமைப்பை அறிவித்துள்ள ஒழுங்குமுறை அமைப்பு எது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி

ஆ. இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்

இ. நிதியியல் சேவைகள் துறை

ஈ. பொருளாதார ஆலோசனைக் குழு

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்

  • இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) இந்தியாவில் சமூகப்பங்குச்சந்தையை (SSE) அறிமுகப்படுத்தும் கட்டமைப்பை அறிவித்துள்ளது. இப்புதிய வகை பரிமாற்றம் சமூக நிறுவனங்களுக்கு நிதி திரட்ட கூடுதல் வழியை ஏற்படுத்தும். பங்குச்சந்தைகளில் இலாப நோக்கற்ற நிறுவனங்களை இந்தக்கட்டமைப்பு பட்டியலிடுகிறது மற்றும் அவைகளுக்கு மாற்று நிதி திரட்டும் வழியையும் வழங்குகிறது.

4. அண்மையில், பல்லுயிர் பாதுகாப்பு தொடர்பாக கீழ்க்காணும் எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது?

அ. ஜப்பான்

ஆ. நேபாளம்

இ. இலங்கை

ஈ. ஆஸ்திரேலியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நேபாளம்

  • வனங்கள், வனவுயிரிகள், சுற்றுச்சூழல், பல்லுயிர் பாதுகாப்பு, வழித்தடங்கள் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கும் பகுதிகளை மீட்டெடுப்பது உள்ளிட்ட பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி விரிவுபடுத்துவது, இருநாடுகளுக்கிடையே அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது என்ற கண்ணோட்டத்துடன் நேபாள அரசுடன் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் முன்மொழிவுக்குப் பிரதமர் தலைமையிலான நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

5. சமீபத்திய NSO தரவுகளின்படி, இந்த 2022–23 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் என்ன?

அ. 12.3%

ஆ. 13.5%

இ. 14.7%

ஈ. 15.2%

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 13.5% 

  • தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, இந்தியப் பொருளாதாரம் ஓர் ஆண்டில் மிகவிரைவான வேகத்தில் விரிவடைந்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 13.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இது ரிசர்வ் வங்கி கணித்திருந்த 16.2% பொருளாதார வளர்ச்சியை விடக்குறைவாகும். 2022–23இன் முதல் காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) மொத்த மதிப்புச் சேர்ப்பு (GVA) 12.7 சதவீதமாக உள்ளது.

6. உலக உடலுறுப்பு தான நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. ஆகஸ்ட்.11

ஆ. ஆகஸ்ட்.13

இ. செப்டம்பர்.13

ஈ. செப்டம்பர்.11

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஆகஸ்ட்.13

  • உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் ஆக.13ஆம் தேதி உலக உடலுறுப்புதான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் உறுப்பு செயலிழப்பும் ஒன்றாகும் என்பதால் இந்த நாள் உறுப்புகளை தானம் செய்ய மக்களை ஊக்குவிக்கிறது. ஒருவர் 18 வயதை அடைந்த பிறகு உறுப்புதானம் செய்ய பதிவுசெய்யலாம்.

7. ‘சூப்பர் கருடா தற்காப்புப் பயிற்சியை’ நடத்திய நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. இந்தோனேசியா

இ. ஆஸ்திரேலியா

ஈ. ஜப்பான்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்தோனேசியா

  • அமெரிக்கா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 5000–க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நடந்த கூட்டுப் போர்ப்பயிற்சியில் பங்கேற்றனர். இந்தோ–பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் சீன நடவடிக்கைகளுக்கு இடையே இந்தப்பயிற்சி நடத்தப்பட்டது. கடந்த 2009ஆம் ஆண்டில் இந்தப்பயிற்சி தொடங்கப்பட்டது.

8. இந்தியாவின் முதல் உவர்நீர் விளக்கின் பெயர் என்ன?

அ. வர்த்தினி

ஆ. லாவண்யா

இ. ரோஷினி

ஈ. கீர்த்தி

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ரோஷினி

  • LED விளக்குகளை இயக்குவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மின்முனைகளுக்கு இடையே கடல்நீரை மின்பகுபொருளாகப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் உவர்நீர் விளக்கை நடுவண் அறிவியல் & தொழில்நுட்பம், அமைச்சர் Dr ஜித்தேந்திர சிங் சென்னையில் அறிமுகப்படுத்தினார்.
  • கடல்சார் ஆராய்ச்சிக்காக சென்னையில் அமைந்துள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்பக்கழகத்தால் இயக்கப்பட்டு, பயன்படுத்தப்படும் சாகர் அன்வேஷிகா என்ற கடல்சார் ஆராய்ச்சிக்கப்பலை நேரில் சென்று பார்த்த அவர், ‘ரோஷினி’ என்று பெயரிடப்பட்ட இந்த உவர் நீர் விளக்கை அறிமுகப்படுத்தினார்.

9. உலக நலவாழ்வு அமைப்பால் (WHO) குரங்கம்மை தீநுண்மத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ பெயரென்ன?

அ. கிளேட்

ஆ. ஃப்ளீட்

இ. கிளியோ

ஈ. ஹேலோ

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. கிளேட்

  • உலக நலவாழ்வு அமைப்பு (WHO) குரங்கு அம்மை தீநுண்மத்தின் திரிபுகளுக்கு புதிய பெயர்களை அறிவித்துள்ளது; இது கலாச்சார அல்லது சமூக குற்றங்கள் ஏற்படுத்துவதைத் தவிர்க்கிறது. நிபுணர்கள், மத்திய ஆப்பிரிக்காவின் முன்னாள் காங்கோ படுகை கிளேடை (திரிபுகளின் குழு) ‘கிளேட் I’ என்றும், முன்னாள் மேற்கு ஆப்பிரிக்க கிளேடை ‘கிளேட் II’ என்றும் குறிப்பிடுவார்கள். இது, ‘கிளேட் IIa’ மற்றும் ‘கிளேட் Iib’ ஆகிய இரண்டு துணைப்பிரிவுகளைக் கொண்டுள்ளது. கடந்த 1958ஆம் ஆண்டு முதன்முதலில் இது கண்டுபிடிக்கப்பட்டபோது ‘குரங்கு அம்மை’ வைரஸ் என்று பெயர்சூட்டப்பட்டது.

10. 2022 ஆகஸ்ட்.15 நிலவரப்படி, இந்தியாவில் எத்தனை இராம்சர் தளங்கள் உள்ளன?

அ. 75

ஆ. 57

இ. 100

ஈ. 250

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 75 

  • விடுதலையின் 75ஆம் ஆண்டில் 13,26,677 ஹெக்டேர் பரப்பளவைக்கொண்ட 75 ராம்சர் தளங்களை உருவாக்க இராம்சர் தளங்களின் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 இடங்கள் உள்பட மேலும் 11 ஈரநிலங்களை இந்தியா சேர்த்துள்ளது. 11 புதிய தளங்கள்: தமிழ்நாட்டில் நான்கு (4) தளங்கள், ஒடிஸாவில் மூன்று (3), ஜம்மு & காஷ்மீரில் இரண்டு (2) மற்றும் மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் தலா 1 அடங்கும். இந்தத் தளங்களின் பெயர் சதுப்பு நிலங்களின் பாதுகாப்பு & மேலாண்மை மற்றும் அவற்றின் வளங்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்த உதவும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கர்ப்பப்பைவாய் புற்றுநோயைத் தடுப்பதற்கான ‘செர்வாவாக்’ தடுப்பூசி இந்தியாவில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளதாக நடுவண் அமைச்சர் Dr ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.

கர்ப்பப்பைவாய் புற்றுநோயைத் தடுப்பதற்கான, ‘செர்வாவாக்’ தடுப்பூசி இந்தியாவில் முதன்முறையாக உருவாக்கப் –பட்டுள்ளதாக நடுவண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) Dr ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.

கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இந்தியாவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதில், இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய Dr ஜிதேந்திர சிங், இந்த நோய் பெரிதும் தவிர்க்கக்கூடியதாக இருந்தபோதும், இந்த புற்றுநோயால் உலகில் ஏற்படும் மரணங்களில் சுமார் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் ஏற்படுவதாக கூறினார். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1.25 இலட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுவதாகவும், இவர்களில், 75,000 பேர் உயிரிழப்பதாகவும் அவர் தெரிவித்தார். ‘மாபெரும் சவால்கள் இந்தியா’ திட்டத்தில் பங்கேற்றுள்ள சீரம் இந்தியா நிறுவனத்தின் ஆதரவுடன் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைமூலம் உயிரி தொழில்நுட்பத்துறையும் உயிரி தொழில்நுட்ப தொழில்துறை ஆராய்ச்சி உதவி கவுன்சிலும் இணைந்ததன் விளைவாக, ‘செர்வாவாக்’ தடுப்பூசி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

2. முதல் காலாண்டில் GDP 13.5% உயர்வு

நிகழ் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 13.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2021–22 நிதியாண்டின் கடைசி மூன்று காலாண்டுகளில் பதிவான விகிதத்தைக் காட்டிலும், நிகழாண்டின் முதல் காலாண்டில் GDP 13.5 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) தெரிவித்துள்ளது.

கரோனா காலத்துக்கு முந்தைய நிலையை ஒப்பிடும்போது, GDP சுமார் 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதித் துறைச் செயலர் டி வி சோமநாதன் தெரிவித்தார். மேலும், 2023இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 7.5 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்டின் தொடக்கத்தில், ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை கூட்டத்தின்போது நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் GDP 16.2% வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இதே காலகட்டத்தில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 0.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

நாட்டின் வருவாய்ப் பற்றாக்குறை கடந்த ஏப்ரல்–ஜூன் வரையிலான காலகட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 20.5 சதவீதத்தை எட்டியதாக தலைமை கணக்கு அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில், வருவாய்ப்பற்றாக்குறை அதன் இலக்கில் 21.3 சதவீதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

3. குத்துச்சண்டையில் பதக்கங்களை வெல்ல உதவும் ‘ஸ்மார்ட் பாக்ஸர்’ மென்பொருள்: சென்னை ஐஐடி தகவல்

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் (ஐஐஎஸ்) உடன் இணைந்து, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கச்செய்ய மேம்பட்ட குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி வருகின்றனர்.

சென்னை IITஇன் விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான தனிச்சிறப்பு மையம் ‘ஸ்மார்ட் பாக்ஸர்’ என்ற பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி வருகிறது. அணியக்கூடிய சென்சார்கள் மற்றும் விடியோ கேமராக்களைப் பயன்படுத்தி ‘இன்டர்நெட்-ஆஃப்-திங்ஸ்’மூலம் பின்னூட்டம் மற்றும் செயல்திறன் மதிப்பீடுகளை இப்பகுப்பாய்வுத் தளம் வழங்கும். இந்திய விளையாட்டு வீரர்களின் போட்டித்திறனை மேம்படுத்த இது உதவும்.

எவ்வாறு செயல்படுகிறது? ‘இன்டர்நெட்-ஆப்-திங்ஸ்’ அடிப்படையில், பஞ்ச்-இன் வேகத்தை ஆயும் வகையில் சென்சாருடன் கூடிய கையுறைகள், தரை வினை விசையைப் பதிவுசெய்வதற்காக ‘வயர்லெஸ் ஃபுட் இன்சோலுடன் கூடிய அழுத்தமானி, விளையாட்டு வீரர்கள் உடலின் கீழ்பகுதியில் இயக்கத்தைப் பதிவு செய்வதற்காக வயர்லெஸ் இ எம் ஜி சென்சார்கள், விளையாட்டு வீரர்கள் உடலின் மேல்பகுதியில் இயக்கத்தைப் பதிவுசெய்வதற்காக இயக்கசக்தி அளவீட்டு அலகு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.

குத்துச்சண்டை வளையத்தில் வைக்கப்படும் விடியோ கேமராக்கள் வீரரின் இடது, வலது கைகளை அடையாளம் காண்பதுடன், தாக்குதல், தற்காப்பு, பாசாங்கு ஆகியவற்றை வகைப்படுத்தும். ஐஐஎஸ்-இல் சரிபார்க்கப்பட்டபின், சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் ஐஐஎஸ்-உடன் இணைந்து ‘ஸ்மார்ட் பாக்ஸர்’ காப்புரிமைக்காக விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளன.

4. இந்தியாவில் இணையவழி குற்றங்கள் 5% அதிகரிப்பு

இந்தியாவில் இணையவழியில் நடைபெறும் குற்றங்கள் கடந்த ஆண்டில் (2021) 5% அளவுக்கு அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் இது 15% அளவுக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. 2020-ஆம் ஆண்டு 50,035-ஆக இருந்த இணையவழிக் குற்றம் தொடர்பான புகார்கள், 2021-ஆம் ஆண்டில் 52,974-ஆக அதிகரித்துள்ளது. 2019-இல் 44,735 இணையவழிக்குற்றங்கள் நடைபெற்றுள்ளன.

இதுதொடர்பாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள தகவலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 2021-ஆம் ஆண்டில் தெலங்கானா, உத்தர பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில்தான் அதிக அளவில் இணையவழி குற்றங்கள் பதிவாகியுள்ளன. பதிவாகும் குற்றங்களில் மூன்றில் ஒன்றுக்குதான் காவல் துறையினரால் தீர்வுகாண முடிகிறது.

இணையவழிக் குற்றங்களில் 60.8% நிதி உள்ளிட்ட மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக உள்ளது. இதற்கடுத்து 8.6 சதவீதம் பாலியல் ரீதியான இணையவழிக் குற்றங்கள் ஆகும். 5.4 சதவீதம் மிரட்டுவது, அச்சுறுத்துவதுபோன்ற குற்றங்கள் ஆகும்.

தெலங்கானாவில் அதிகபட்சமாக 10,303 இணையவழிக்குற்றங்கள் பதிவாகியுள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிராகவும் இணையவழியில் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன. தகவல் திருட்டு, டெபிட், கிரெடிட் கார்டு மோசடிகள் இணையவழியில் நடப்பது அதிகம் உள்ளது. இதுதவிர இணையவழியில் பயங்கரவாதத்தைப் பரப்புவது தொடர்பாகவும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. இருவருக்கு மகசேசே விருது

“ஆசியாவின் நோபல் பரிசு” என்றழைக்கப்படும் பிலிப்பின்ஸின் மகசேசே விருதுக்காக, கம்போடியாவில் அரசின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய மனநல மருத்துவர் சொதியாரா சிம் (54), வன்கொடுமைக்குள்ளான ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கு உதவிய பிலிப்பின்ஸ் மருத்துவர் பெர்னடெட் மேட்ரிட் (64) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

1st September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which country holds the G20 Presidency in 2022?

A. India

B. China

C. Indonesia

D. Sri Lanka

Answer & Explanation

Answer: C. Indonesia

  • Environment officials from the Group of 20 nations met at Indonesia’s Bali Island for talks on climate action and the global impact of the war in Ukraine. They also discussed the implementation of each G20 nation’s contribution to fight climate change and synchronise targets among developing and developed countries.

2. Which institution has released the report incidence, mortality, morbidity and socio–economic burden of snakebite in the country?

A. AIIMS

B. ICMR

C. NITI Aayog

D. IMA

Answer & Explanation

Answer: B. ICMR

  • Indian Council of Medical Research (ICMR) has released a study on the incidence, mortality, morbidity and socioeconomic burden of snakebite in the country. As per the study, snakes kill more than 45,000 people in India each year, while only 30% of the victims reach hospitals to seek medical treatment. The number of deaths due to venomous snakebites in India is 46,900 per year.

3. Which regulatory body has notified a framework introducing a Social Stock Exchange (SSE) in India?

A. Reserve Bank of India

B. Securities and Exchange Board of India

C. Department of Financial Services

D. Economic Advisory Council

Answer & Explanation

Answer: B. Securities and Exchange Board of India

  • The Securities and Exchange Board of India (Sebi) has notified a framework introducing a Social Stock Exchange (SSE) in India. The new category of exchange will provide social enterprises an additional avenue to raise funds. The SSE lists non–profit organisations on stock exchanges and provides them with an alternative fund–raising avenue.

4. India recently signed a MoU with which country on biodiversity conservation?

A. Japan

B. Nepal

C. Sri Lanka

D. Australia

Answer & Explanation

Answer: B. Nepal 

  • India has recently approved an MoU with the Government of Nepal on biodiversity conservation, as proposed by the Ministry of Environment, Forest and Climate Change. The MoU aims to strengthen cooperation in the field of forests, biodiversity conservation, and climate change. It also aims at including the restoration of corridors and interlinking areas and sharing of knowledge and best practices, between the two countries.

5. As per the recent NSO Data, what was India’s GDP growth rate in the first quarter (April–June) of this fiscal year 2022–23?

A. 12.3%

B. 13.5%

C. 14.7%

D. 15.2%

Answer & Explanation

Answer: B. 13.5%

  • As per the recent data released by the National Statistical Office (NSO), the Indian economy expanded at the quickest pace in a year. The Gross Domestic Product (GDP) in the first quarter (April–June) of this fiscal year grew by 13.5%. This is lower than RBI’s projections of 16.2% economic growth. GVA for the first quarter of FY23 (April–June) has come in at 12.7%.

6. World Organ Donation Day is celebrated on which date?

A. August.11

B. August.13

C. September.13

D. September.11

Answer & Explanation

Answer: B. August.13

  • Every year, August 13 is celebrated as World Organ Donation Day to create awareness about organ donation. The day encourages people to donate organs as Organ failure is one of the major issues faced by people across the world. One can register for organ donation after attaining 18 years of age.

7. Which country hosted the ‘Super Garuda Shield Defence Exercise’?

A. USA

B. Indonesia

C. Australia

D. Japan

Answer & Explanation

Answer: B. Indonesia

  • Over 5000 soldiers from the US, Indonesia, Australia, Japan and Singapore participated in the joint combat exercises on Sumatra Island in Indonesia. The exercise was conducted amid growing Chinese maritime activity in the Indo–Pacific region. This is the largest edition of the exercise since it was launched in 2009.

8. What is the name of India’s first Saline Water Lantern?

A. Varthini

B. Lavanya

C. Roshini

D. Keerthy

Answer & Explanation

Answer:  C. Roshini 

  • Union Minister Dr Jitendra Singh launched India’s first Saline Water Lantern ‘Roshni’, during his visit to SAGAR ANVESHIKA, a Coastal Research Vessel. The first–of–its kind lantern uses seawater as the electrolyte between specially designed electrodes to power the LED lamps.

9. What is the official name given to the monkeypox viruses, by the World Health Organisation (WHO)?

A. Clade

B. Fleet

C. Cleo

D. Halo

Answer & Explanation

Answer: A. Clade

  • The World Health Organisation (WHO) has announced new names for variants of the monkeypox virus to avoid causing any cultural or social offence. Experts will refer to the former Congo Basin clade (group of variants) in Central Africa as Clade I, and the former West African clade as Clade II. It consists of two sub–clades, Clade IIa and Clade IIb. The monkeypox virus was named when it was first discovered in 1958.

10. As of August 15, 2022, India has how many Ramsar sites?

A. 75

B. 57

C. 100

D. 250

Answer & Explanation

Answer: A. 75

  • Union Environment Minister Bhupender Yadav announced that India has added 11 more wetlands to the list of Ramsar sites, bringing the country’s total count to 75. Of the 11 new sites, four are in Tamil Nadu, three in Odisha, two Jammu and Kashmir, and one each in Madhya Pradesh and Maharashtra. The 75 Ramsar sites cover an area of 1,326,677 ha in the country.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!