TnpscTnpsc Current Affairs

20th & 21st August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

20th & 21th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 20th & 21th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

20th & 21th August 2022 Tnpsc Current Affairs in Tamil

1. இந்தியாவின் முதல், ‘ஹர் கர் ஜல்’ சான்று பெற்ற மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. கோவா

இ. கர்நாடகா

ஈ. ஒடிஸா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கோவா.

விளக்கம்: ‘ஹர் கர் ஜல்’ சான்றுபெற்ற நாட்டின் முதல் மாநிலமாக கோவா மாறியுள்ளது. தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகியவை ‘ஹர் கர் ஜல்’ சான்றுபெற்ற யூனியன் பிரதேசமாக மாறியது. ஜல் ஜீவன் இயக்கமானது கடந்த 2019இல் அறிவிக்கப்பட்டது; 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஒவ்வொரு கிராமப்புற குடும்பங்களுக்கும் போதுமான அளவு, பரிந்துரைக்கப்பட்ட தரம் மற்றும் வழக்கமான மற்றும் நீண்டகால அடிப்படையில் குடிநீர் குழாய் வழி நீரை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டின் 10 கோடி கிராமப்புற குடும்பங்கள், குழாய்கள் மூலம் தூய நீரை வழங்கும் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2. இந்தியாவின் முதல் இருதள குளிர்பதன வசதிகொண்ட மின்–பேருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இடம் எது?

அ. புது தில்லி

ஆ. மும்பை

இ. ஹைதராபாத்

ஈ. பெங்களூரு

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மும்பை

விளக்கம்: இந்தியாவின் முதல் இருதள குளிர்பதன வசதிகொண்ட மின்–பேருந்தை நடுவண் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி மும்பையில் வைத்து அறிமுகம் செய்து வைத்தார். அசோக் லேலண்டின் துணை நிறுவனமான சுவிச், சுவிச் EiV 22 என்ற இந்தியாவின் முதல் இருதள குளிர்பதன வசதிகொண்ட மின்–பேருந்தை அறிமுகம் செய்தது. இது அரை–தாழ்தளம், குளிரூட்டப்பட்ட, இருதளம்கொண்ட முதல் மின்–பேருந்து ஆகும்.

3. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘மத்ஸ்ய சேது’ என்ற செயலியின் இணையவழி மீன்சந்தைக்கான சிறப்பு பகுதியின் பெயரென்ன?

அ. அக்வா பஜார்

ஆ. மத்ஸ்ய பஜார்

இ. மீன்வளம் இந்தியா

ஈ. மத்ஸ்ய பாரதம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. அக்வா பஜார் 

  • ‘மத்ஸ்ய சேது’ செயலியில் இணையவழி மீன்சந்தைக்கான ‘அக்வா பஜார்’ என்ற சிறப்பு பகுதியை நடுவண் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கிவைத்தார். பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின்மூலம் ஹைதராபாதில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதியுதவியுடன் புவனேசுவரில் உள்ள ICAR – CIFAமூலம் இச்செயலி உருவாக்கப்பட்டது.
  • மீன்குஞ்சுகள், தீவனம், மருந்துகள்போன்ற இடுப்பொருள்களுக்கான ஆதாரங்களை அறியவும், மீன்வளர்ப்புக்கு தேவையான சேவைகளை அறியவும், மீன்வளர்ப்போர் மற்றும் இதனோடு தொடர்புடையவர்களுக்கு இணைய வழி சந்தை உதவும். மேலும் மீனவர்கள் தங்களின் மீன்களை விற்பனைக்கும் இதில் பட்டியலிடலாம். மீன்வளர்ப்பு துறைகளில் உள்ள அனைவரையும், ஒருங்கிணைப்பது இதன் நோக்கமாகும்.

4. கிராமிய ஆஜீவிகா பூங்காக்களை (கிராமிய தொழிற்பூங்காக்கள்) அமைப்பதாக அறிவித்துள்ள மாநில அரசு எது?

அ. ஒடிஸா

ஆ. சத்தீஸ்கர்

இ. மேற்கு வங்கம்

ஈ. கர்நாடகா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சத்தீஸ்கர் 

  • சத்தீஸ்கர் மாநிலத்தில் கிராமப்புற தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. காந்தி ஜெயந்தி அன்று இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அறிவித்தார். இது கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும், ‘கௌ–தான்’ (கால்நடை) வாழ்வாதார மையமாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், முதல் ஆண்டில் முந்நூறு கிராமப்புற தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். சத்தீஸ்கரில் இதுபோன்ற பூங்கா முதலில் கான்கர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது; அதற்கு ‘காந்தி கிராம்’ என்று பெயரிடப்பட்டது.

5. ‘உலக நிழற்பட நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஆகஸ்ட் 15

ஆ. ஆகஸ்ட் 19

இ. ஆகஸ்ட் 20

ஈ. ஆகஸ்ட் 22

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஆகஸ்ட் 19 

  • ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்.19 அன்று ‘உலக நிழற்பட நாள்’ கொண்டாடப்படுகிறது. பண்டைய சீனர்கள் மற்றும் கிரேக்கர்கள் ஊசித்துளை அமைப்பைக்கொண்ட திரையில் ஒரு நிழற்படத்தைக் காட்டுவதற்கான முறைகளை அறிந்திருந்தனர். உலகின் முதல் நிழற்படத்தை பிரெஞ்சு விஞ்ஞானி ஜோசப் நிஸ்ஃபோர் நீப்ஸ் எடுத்தார். அதற்கு ‘வியூ பிரம் தி விண்டோ அட் லு கிராஸ்’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

6. ஆண்டுதோறும் சர்வதேச பழங்குடிகள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஆகஸ்ட்.09

ஆ. ஆகஸ்ட்.10

இ. ஆகஸ்ட்.11

ஈ. ஆகஸ்ட்.12

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. ஆகஸ்ட்.09 

  • சர்வதேச பழங்குடிகளின் நாளானது ஆண்டுதோறும் ஆக.9 அன்று கொண்டாடப்படுகிறது. “The Role of Indigenous Women in the Preservation and Transmission of Traditional Knowledge” என்பது நடப்பாண்டில் (2022) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். உலகம் முழுவதும் 90 நாடுகளில், 476 மில்லியனுக்கும் அதிகமான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இது, உலக மக்கள்தொகையில் 6.2% ஆகும். பழங்குடி மக்கள் தனித்துவமான கலாசாரம், மரபுகள் மற்றும் மொழிகள் ஆகியவற்றின் பரந்த பன்முகத்தன்மையைக் கொண்டவர்கள்.

7. உலக சிங்கங்கள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஆகஸ்ட்.09

ஆ. ஆகஸ்ட்.10

இ. ஆகஸ்ட்.11

ஈ. ஆகஸ்ட்.12

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஆகஸ்ட்.10 

  • சிங்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஆக.10 அன்று உலக சிங்கங்கள் நாள் கொண்டாடப்படுகிறது. சிங்கத்தின் பாதுகாப்பிற்கான ஆதரவைத் திரட்டவும் இந்த நாள் முயற்சி செய்கிறது. விலங்குகளுக்கான உலகளாவிய நிதியத்தின்படி (WWF) சிங்கங்கள், புல்வெளிகள் மற்றும் சமவெளிகளில் மட்டுமே வாழ்கிறது.  சசன்–கிர் தேசியப்பூங்காவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் கம்பீரமான ஆசிய சிங்கங்களின் தாயகம் இந்தியாவாகும்.
  • WWFஇன் கூற்றுப்படி, சிங்கங்கள் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் காணப்பட்டன. ஆனால் சமீப காலமாக, அவற்றின் எண்ணிக்கை இந்தக் கண்டங்களில் குறைந்து வருகிறது. சிங்கங்களைப் பாதுகாப்பதற்கான முன்னெடுப்பு, 2013இல் தொடங்கப்பட்டது. முதல் உலக சிங்கங்கள் நாள் 2013இல் அனுசரிக்கப்பட்டது.

8. பன்னாட்டு இளையோர் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஆகஸ்ட்.07

ஆ. ஆகஸ்ட்.10

இ. ஆகஸ்ட்.10

ஈ. ஆகஸ்ட்.12

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. ஆகஸ்ட்.12 

  • உலக இளையோர் நாளானது ஆக.12 அன்று கொண்டாடப்படுகிறது “Intergenerational Solidarity: Creating a World for All Ages” என்பது நடப்பாண்டு (2022) வரும் இந்த நாளுக்கான கருப்பொருள் ஆகும். முதல் உலக இளையோர் நாள், கடந்த 1999ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.

9. உலக யானைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. ஆகஸ்ட்.07

ஆ. ஆகஸ்ட்.10

இ. ஆகஸ்ட்.12

ஈ. ஆகஸ்ட்.20

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஆகஸ்ட்.12

  • உலக யானைகள் நாளானது ஆக.12 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. யானைகள் பாதுகாப்பில் இந்நாள் கவனம் செலுத்துகிறது. யானைகளுக்குச் சிறந்த பாதுகாப்பை வழங்குதல், தந்தம் சார்ந்த வணிதகத்தைத் தடுப்பது, அமலாக்க கொள்கைகளை மேம்படுத்தல், யானைகளின் வாழ்விடத்தை பாதுகாத்தல், சட்டத்துக்குப் புறம்பான வேட்டையைத் தடுத்தல், சிறைபிடிக்கப்பட்ட யானைகளை அவற்றின் இயற்கை வாழ்விடங்களில் கொண்டுவிடுதல்போன்ற முயற்சிகளை மேற்கொள்வதை உலக யானைகள் நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

10. உலக இடதுகை பழக்கமுள்ளவர்கள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஆகஸ்ட்.12

ஆ. ஆகஸ்ட்.13

இ. ஆகஸ்ட்.14

ஈ. ஆகஸ்ட்.15

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஆகஸ்ட்.13 

  • உலக இடதுகை பழக்கமுள்ளவர்கள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்.13 அன்று கொண்டாடப்படுகிறது. பெரும்பான்மையான மக்களைப் போலல்லாமல், இடதுகை பழக்கத்துடன் பிறந்தோரை அங்கீகரிக்கும் விதமாக இந்த நாள் உள்ளது. உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 10–12 சதவீதத்தினர், இடதுகை பழக்கமுடையோராக உள்ளனர். இடதுகை பழக்கமுடையோரைக் கண்டு அஞ்சும் மக்களும் உள்ளனர். இந்நிலை சினிஸ்ட்ரோபோபியா (Sinistrophobia) என்று அழைக்கப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்  

1. மத்திய உள்துறை செயலர் அஜை பல்லா பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு

மத்திய உள்துறை செயலர் அஜைகுமார் பல்லாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2023-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை அவர் பதவியில் இருப்பார். ஏற்கெனவே இரண்டு முறை அவர் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 1984ஆம் ஆண்டு அஸ்ஸாம்-மேகாலயம் பிரிவு இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான பல்லா, கடந்த 2019, ஆகஸ்டில் மத்திய உள்துறை செயலராக நியமிக்கப்பட்டார்.

2020, நவம்பர் மாதத்தில் 60 வயதை எட்டியதைத் தொடர்ந்து, அவர் பணிஓய்வு பெறவிருந்தார். ஆனால், அவரது பதவிக்காலத்தை 2021, ஆக.22 வரை நீட்டித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்பின்னர், மேலும் ஓராண்டுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 22-ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் நிறைவடையவிருந்த நிலையில், அதனை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் வழங்கியது. அகில இந்திய பணிகள் தொடர்பான விதி தளர்வுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, மத்திய பணியாளர் அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. பொலிவுறு நகரத்திட்ட முறைகேடு: முதல்வரிடம் விசாரணை அறிக்கை தாக்கல்

கடந்த அதிமுக ஆட்சியில் பொலிவுறு நகரத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் எழுந்த முறைகேடு தொடர்பான புகார்கள்குறித்து விசாரித்த அதிகாரி ஓய்வுபெற்ற இஆப அதிகாரி பி டபிள்யூ சி டேவிதார், தனது அறிக்கையை முதல்வர் மு க ஸ்டாலினிடம் சனிக்கிழமை தாக்கல் செய்தார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு நடுவணரசு சார்பாக பொலிவுறு நகரத் திட்டம் (ஸ்மார்ட் சிட்டி) அறிமுகப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் நாடு முழுவதும் 100 நகரங்களைத் தேர்வுசெய்து பொலிவுறு நகராக மாற்ற திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக தமிழகத்தில் 11 நகரங்கள் தேர்வுசெய்யப்பட்டன. அதற்கான அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. திட்ட செலவில் 50 சதவீதத்தை மத்திய அரசும், 50 சதவீதத்தை மாநில அரசும் பகிர்ந்துகொள்கின்றன. இதனிடையே, கடந்த ஆண்டு பெய்த மழைகாரணமாக சென்னை தியாகராய நகரில் மழைநீர் தேங்கியது. இதற்கு பொலிவுறு நகரத் திட்டங்களை சரியாக வடிவமைக்காததே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்தத்திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து மழைநீர் தேங்கிய இடங்களில் முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வுமேற்கொண்டார். அப்போது பொலிவுறு நகரத்திட்டத்தில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

டேவிதார் தலைமையில் குழு: விசாரணைக்குழுவின் தலைவராக ஓய்வுற்ற இஆப அதிகாரி பி டபிள்யூ சி டேவிதார் நியமிக்கப்பட்டார். அவர் தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசு கேட்டுக்கொண்டிருந்தது. இதையடுத்து, திட்டம் தொடர்பாக நடந்த பல்வேறு முறைகேட்டுப் புகார்கள்குறித்து விசாரணை அதிகாரி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் திட்டப்பணிகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்த விசாரணை அறிக்கையை ஓய்வுற்ற இஆப அதிகாரி டேவிதார், முதல்வர் மு க ஸ்டாலினிடம் வழங்கினார்.

20th & 21th August 2022 Tnpsc Current Affairs in English

1. Which is the first ‘Har Ghar Jal certified’ state in India?

A. Kerala

B. Goa

C. Karnataka

D. Odisha

Answer & Explanation

Answer: B. Goa 

  • Goa has become the first state in the country, which has been ‘Har Ghar Jal’ certified. Dadra Nagar Haveli and Daman and Diu also became Har Ghar Jal certified Union Territory.
  • Jal Jeevan Mission was announced in 2019, which aims to provide potable tap water supply in adequate quantity, of prescribed quality and on regular and long–term basis to every rural household of the country by 2024. 10 crore rural households of the country have been connected to the facility of clean water through pipes.

2. Where was India’s first Double Decker AC electric bus unveiled?

A. New Delhi

B. Mumbai

C. Hyderabad

D. Bengaluru

Answer & Explanation

Answer: B. Mumbai 

  • Union Transport Minister Nitin Gadkari launched India’s first Double Decker AC electric bus in Mumbai. Switch, a subsidiary of Ashok Leyland unveiled India’s first electric double–decker air–conditioned bus – Switch EiV 22. It is the first electric bus with semi low floor, air conditioned, electric double decker with wider door on rear overhang and a rear staircase.

3. What is the name of the Online Market Place feature of the ‘Matsya Setu’ mobile app, which was recently launched?

A. Aqua Bazaar

B. Matsya Bazaar

C. Fisheries India

D. Matsya Bharat

Answer & Explanation

Answer: A. Aqua Bazaar 

  • Parshottam Rupala, Union Minister for Fisheries, Animal Husbandry and Dairying, launched the Online Market Place feature “Aqua Bazar” in the “MatsyaSetu” mobile app. The app was developed by the ICAR–Central Institute of Freshwater Aquaculture (ICAR–CIFA), Bhubaneswar, with the funding support of the National Fisheries Development Board (NFDB). The online marketplace will help the fish farmers and stakeholders to source the inputs such as fish seeds, feed, medicines, etc., and services required for fish culture as well as farmers can also list their table–size fish for sale. The marketplace aims to connect all stakeholders in the aquaculture sector.

4. Which state government has announced to set up gramin aajeevika parks (rural industrial parks)?

A. Odisha

B. Chhattisgarh

C. West Bengal

D. Karnataka

Answer & Explanation

Answer: B. Chhattisgarh 

  • Chhattisgarh government announced to set up rural industrial parks in the state. Chief Minister Bhupesh Baghel announced that the project will be launched on Gandhi Jayanti. It aims to strengthen the rural economy and make the ‘gau–than’ (cattle shed) a centre of livelihood. Under the programme, in the first year there will be 300 rural industrial parks. The first such park in Chhattisgarh came up in Kanker district, which has been named Gandhi Gram.

5. When is the ‘World Photography Day’ celebrated?

A. August 15

B. August 19

C. August 20

D. August 22

Answer & Explanation

Answer: B. August 19 

  • The ‘World Photography Day’ is celebrated on August 19 every year. Ancient Chinese and Greeks were known the earliest methods to project an image on a screen with a pin–hole setup. The world’s first photograph was captured by French scientist Joseph Nicephore Niepce. It was titled ‘View from the Window at Le Gras’.

6. When was the International Day of Indigenous Peoples celebrated every year?

A. August.09

B. August.10

C. August.11

D. August.12

Answer & Explanation

Answer: A. August.09 

  • The International Day of Indigenous Peoples was celebrated on August 9, 2021 with its theme: “The Role of Indigenous Women in the Preservation and Transmission of Traditional Knowledge”. There are over 476 million indigenous peoples living in 90 countries across the world, accounting for 6.2% of the global population. Indigenous peoples are the holders of a vast diversity of unique cultures, traditions, languages and knowledge systems.

7. Which date is celebrated as World Lion Day?

A. August.09

B. August.10

C. August.11

D. August.12

Answer & Explanation

Answer: B. August.10 

  • World Lion Day is celebrated on August 10 every year in a bid to raise awareness on lions. The day also seeks to mobilise support for protection and conservation of Lion. As per World Wide Fund for animals (WWF), it only lives in grasslands and plains. India is home to majestic Asiatic Lion, who inhabit protected territory of Sasan–Gir National Park.
  • According to WWF, lions were once found throughout Africa, Asia and Europe. But over the years, their numbers have reduced across these continents. Initiative to protect lion started in 2013 so the first World Lion Day was observed in 2013 itself.

8. On which date of August is International Youth Day celebrated?

A. August.07

B. August.10

C. August.11

D. August.12

Answer & Explanation

Answer: D. August.12 

  • International Youth Day is marked on August 12. The theme of the day this year has been decided as “Intergenerational Solidarity: Creating a World for All Ages”. The first International Youth Day was celebrated in 1999.

9. Which date is observed as World Elephant Day?

A. August.07

B. August.10

C. August.12

D. August.20

Answer & Explanation

Answer: C. August.12 

  • 12th August is observed as World Elephant Day to draw focus towards protection and conservation of elephants. World Elephant Day aims to accelerate efforts to offer better protection to elephants, prevent the trade of ivory, improving enforcement policies, conserve elephant habitat, illegal poaching, better captive environments for elephants, and reintroduce the captive elephants back in their natural sanctuaries.

10. Which date in August is celebrated as the International Left–Handers’ Day?

A. August.12

B. August.13

C. August.14

D. August.15

Answer & Explanation

Answer: B. August.13 

  • The International Left–Handers’ Day 2021 is celebrated every year on August 13. It is a way to acknowledge those who, unlike the majority of the population, are born left–handed. A considerable part of the population, almost 10–12% of the global population, consists of left–handers. There are people who are afraid of the left–side or left–handed people. This condition can take the form of a phobia and is known as Sinistrophobia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!