Tnpsc

20th & 21st March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

20th & 21st March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 20th & 21st March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

20th & 21st March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

  1. மக்களவையில், தேசிய தலைநகர் தில்லி (திருத்த) மசோதா, 2021 ‘ஐ அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

அ) கல்வி அமைச்சகம்

ஆ) உள்துறை அமைச்சகம்

இ) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஈ) வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • மத்திய உள்துறை அமைச்சகமானது அண்மையில், தேசிய தலைநகர் தில்லி (திருத்த) மசோதா, 2021 ‘ஐ மக்களவையில் அறிமுகம் செய்தது. இம்மசோதா, ‘தில்லி அரசு’ என்பதன் பொருளை ‘தில்லியின் துணைநிலை’ என்று மறுவரையறை செய்ய முயற்சி செய்கிறது. இந்த மசோதா தில்லியின் துணைநிலை ஆளுநருக்கு அவரது விருப்பப்படி அதிகாரங்களை வழங்க முற்படுகிறது.

2. 2020-21 காலப்பகுதியில் MGNREGS’இன்கீழ், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முதலிடம் வகித்த மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கோவா

இ) இராஜஸ்தான்

ஈ) ஹரியானா

  • 2020-21 காலப்பகுதியில், MGNREGS’இன்கீழ், இந்தியா, ஒட்டுமொத்தமாக 366 கோடி நபர்களின் வேலை நாட்களை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின்கீழ், இதுவரை உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளிலே -யே இதுதான் அதிகபட்சமாகும். மாநிலங்களில், ராஜஸ்தான் 43 கோடி நபர்களின் வேலை நாட்களை உருவாக்கி முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன.

3. உலக மறுசுழற்சி நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) மார்ச் 18

ஆ) ஏப்ரல் 18

இ) மே 18

ஈ) ஜூன் 18

  • உலக மறுசுழற்சி நாளானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.18 அன்று அனுசரிக்கப்படுகிறது. நமது புவியின் இயற்கை வளங்கள் விரைவாகப் பயன்படுத்தப்படுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்நாள் அமைந்துள்ளது. மறுசுழற்சி செய்வதற்கான கருத்தை -யும் பழக்கத்தையும் இந்த நாள் ஊக்குவிக்கிறது.
  • “Recycling Heroes” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக மறுசுழற்சி நாளுக்கான கருப்பொருளாகும்.

4. உலக கவிதைகள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) மார்ச் 20

ஆ) மார்ச் 21

இ) மார்ச் 22

ஈ) மார்ச் 23

  • கவிதைகளைப் படித்தல், படைத்தல், பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.21 அன்று உலக கவிதைகள் நாள் கொண்டாடப்படுகிறது.
  • ஐநா அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான UNESCO நிறுவனத்தால் 1999ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 30ஆவது அமர்வின்போது அறிவிக்கப்பட்டு, உலக நாடுகள் முழுவதும் இந்த நாள் கொண்டாடப்பட்டுவருகிறது.

5. நடப்பாண்டில் (2021) வரும் பன்னாட்டு மகிழ்ச்சி நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Share Happiness

ஆ) Angry Birds Happy Planet

இ) Reclaim Happiness

ஈ) Happiness for all, forever

  • மகிழ்ச்சியாக இருப்பது மானுடர்களின் அடிப்படை உரிமை என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மார்ச். 20 அன்று உலகம் முழுவதும் பன்னாட்டு மகிழ்ச்சி நாள் கொண்டாடப்ப -டுகிறது. “Happiness for all, forever” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.

6. உலக சிட்டுக்குருவிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) மார்ச் 20

ஆ) மார்ச் 21

இ) மார்ச் 22

ஈ) மார்ச் 23

  • நவீன உட்கட்டமைப்பு, நுண்ணலை கோபுரங்கள் மற்றும் பூச்சிக்கொல் -லிகளால் ஏற்படும் மாசுகள் மற்றும் குறைந்துவரும் பசுமைவெளிகள் போன்ற காரணங்களால் அருகிவரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன்மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • “I Love Sparrows” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். Nature Forever Society of India என்னும் அமைப்பு, பிரான்ஸைச் சார்ந்த Eco-Sys Action Foundation என்னும் தொண்டு நிறுவனம் மற்றும் பல்வேறு பன்னாட்டு அமைப்புகளால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

7. 2021 உலக தூக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) மார்ச் 19

ஆ) மார்ச் 20

இ) மார்ச் 21

ஈ) மார்ச் 22

  • ஒவ்வோர் ஆண்டும் இளவேனிற்கால சமய இரவு நாளுக்கு முந்தைய நாளன்று உலக தூக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2021) மார்ச்.19 அன்று இந்நாள் வருகிறது. இதை உலக தூக்க சங்கத்தின் உலக தூக்க நாள் குழுமம் ஏற்பாடு செய்கிறது. “Regular Sleep, Healthy Future” என்பது நடப்பாண்டு வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

8. நடப்பாண்டில் (2021) வரும் பன்னாட்டு காடுகள் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Forests and Water

ஆ) Forests and Energy

இ) Forests and Sustainable Cities

ஈ) Forest restoration: a path to recovery and well-being

  • அனைத்து வகையான காடு மற்றும் மரங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான ஒரு நாளாகவும், அவைகள் தம்மையும் தம்மை சார்ந்திருக்கும் மற்றவையையும் பாதுகாக்க பயன்ப -டுத்தும் வழிகளை கொண்டாடுவதையும் நோக்கமாகக்கொண்டு ஒவ் -வோர் ஆண்டும் மார்ச்.21 அன்று பன்னாட்டு காடுகள் நாள் கடைப்பிடிக் கப்படுகிறது. “Forest restoration: a path to recovery and well-being” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

9. நடப்பாண்டில் (2021) வரும் உலக தண்ணீர் நாளுக்கான கருப் பொருள் என்ன?

அ) Why Waste Water?

ஆ) Valuing Water

இ) Water is Life

ஈ) Better Water, Better Jobs

  • தண்ணீரின் முக்கியத்துவம்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.21 அன்று உலக தண்ணீர் நாள் கடைபிடிக்க -ப்படுகிறது. “Valuing Water” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக தண்ணீர் நாளுக்கான கருப்பொருளாகும்.

10. மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு, 2020’இன்படி, சிறப்புவகை பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படும் உச்சவரம்பு காலம் என்ன?

அ) 20 வாரங்கள்

ஆ) 24 வாரங்கள்

இ) 28 வாரங்கள்

ஈ) 32 வாரங்கள்

  • மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு செய்வதற்கு தற்போதுள்ள 20 வார உச்சவரம்பிலிருந்து 24 வாரங்களாக அதை மாற்ற அனுமதிப்பதற்கான திருத்த மசோதாவை மாநிலங்களவை நிறைவேற்றியது.
  • பாலியல் வண்புணர்விலிருந்து தப்பியவர்கள், தகாத உறவுமுறையால் பாதிக்கப்பட்டவர்கள், பருவ வயதினை எட்டாதோர் & மாற்றுத்திறனாளி -கள் உள்ளிட்ட சிறப்புவகை பெண்களுக்கு இந்த வரம்பு பொருந்தும். இந்த மசோதாவை, மக்களவை, ஓராண்டுக்கு முன்பு நிறைவேற்றியது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தேவேந்திர குல வேளாளர் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்த ஏழு பிரிவினரை அதிலிருந்து விலக்கி தேவேந்திர குல வேளாளராக அறிவிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் இனப் பிரிவில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதிலுள்ள தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய ஏழு பிரிவினர்கள், தங்களை பட்டியல் இனப்பிரிவிலிருந்து விலக்கி ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளராக அறிக்கும்படி தமிழ்நாடு அரசிடமும் மத்திய அரசிடமும் கோரிவந்தனர்.

இதைத் தொடர்ந்து, அரசியலமைப்புச் சட்டம் 1950, பிரிவு 341’இன்கீழ் தகுந்த திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை, தமிழ்நாடு அரசு வலியுறுத்தி கேட்டுக்கொண்டது. மத்திய அமைச்சரவை ஒப்புதலின் பேரில் அரசியல் சாசன (தாழ்த்தப்பட்டோர் பிரிவு) திருத்த மசோதா – 2021, மக்களவையில் கடந்த பிப்.13 அன்று தாக்கலானது. மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் மசோதாவை தாக்கல் செய்தார்.

இம்மசோதா நிறைவேற்றப்பட்டதன்மூலம் தற்போது பட்டியலினப்பிரிவில் உள்ள தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 பிரிவினரும் இனி ‘தேவேந்திரகுலவேளா -ளர்’ என அழைக்கப்படுவர்.

இதில் முக்கியமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோ -ட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்டங்க -ளின் கடற்கரைபகுதியிலுள்ள ‘கடையன்’ பிரிவினர் மட்டும் தேவேந்திர குலவேளாளர் பிரிவில் சேர்க்கப்படவில்லை. மீனவர்களான அவர்கள், ‘தேவேந்திரகுலவேளாளர்’ பிரிவுக்குவர விருப்பமில்லை எனக்கூறியதால், அவர்கள் இந்தப்பிரிவில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

2. நீர் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான கட்டமைப்புகள் அவசியம்

நீர் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான கட்டமைப்புகளை உலக நாடுகள் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று ஐநா’இல் இந்தியா வலியுறுத்தி உள்ளது. உலக தண்ணீர் நாள் மார்ச்.22 அன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, ‘நீர்குறித்த ஐநாஇன் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை 2030ஆம் ஆண்டுக்குள் அடைதல்’ என்ற தலைப்பிலான விவாதம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

அதில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறு -கையில், “உலகில் சுமார் 110 கோடி மக்களுக்கு குடிநீர் முறையாகக் கிடைப்பதில்லை. சுமார் 270 கோடி மக்கள் ஆண்டில் ஒரு மாதமாவது குடிநீர்த்தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றனர்”. என்றார்.

2018-2028’ஆம் ஆண்டு வரையிலான தசாப்தத்தை ‘தண்ணீருக்கான தசாப்தமாக’ ஐநா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3. சுரங்க மேம்பாட்டு சட்டத்திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

கனிமச்சுரங்க மேம்பாடு & ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 1957’ஆம் ஆண்டைய சுரங்கங்கள், தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா, மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, இறக்கும -தியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் செய்வது ஆகிய நோக்கங்களுக்காக சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன்மூலம், நேரடியாகவும் மறைமுகமாகவும் 55 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தாதுவளஆராய்ச்சியில் தனியா -ருக்கு அனுமதியளிக்கப்படும். அந்நிறுவனங்கள் அதிநவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ச்சியில் ஈடுபடும். அதிக எண்ணிக்
-கையிலான சுரங்கங்களும் ஏலத்துக்கு விடப்படும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுரங்கத்துறையின் பங்களிப்பு 1.75 சதவீதமா -க உள்ளது. இந்தச் சீர்திருத்தம்மூலம், அத்துறையின் பங்களிப்பு 2.5 சதவீதமாக அதிகரிக்கும்.

4. தான்சானியாவுக்கு முதல் பெண் அதிபர்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் முதல் பெண் அதிபராக சமியா சுலுஹி ஹஸன் (61) பதவியேற்றார். அந்த நாட்டின் துணை அதிபராக இதுவரை பொறுப்பு வகித்து வந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக அதிபர் ஜான் மெகுபுலி காலமானதைத்தொடர்ந்து அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இன்னும் ஐந்தாண்டுகளுக்கு சமியா சுலுஹி ஹஸன் அதிபர் பதவியை வகிப்பார்.

5. இந்தியப்பொருளாதாரம் 12% வளர்ச்சி காணும்: மூடிஸ்

இந்தியப்பொருளாதாரத்தின் வளர்ச்சி 2021’ஆம் ஆண்டில் 12 சதவீத -மாக இருக்கும் என சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் அனாலிடிக்ஸ் தெரிவித்துள்ளது. கரோனா பொதுமுடக்கத்தின் விளை -வாக செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.5 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது. இந்த நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியால் அண்மைக்காலமாக பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. இது வளர்ச்சிக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்கியதன் விளைவாக டிசம்பர் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்த்ததைக் காட்டிலு -ம் வலுப்பெற்று 0.4 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டிப்பிடித்தது.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதிலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுக -ளில் மக்களிடையே நுகர்வுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியு -ள்ளது. இது, அண்மைக்காலங்களில் தயாரிப்புத்துறை உற்பத்தியை மேம்படுத்த வழிவகுத்துள்ளது. 2020’இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக சரிவைக் கண்டிருந்தது. இந்த நிலையில், வளர்ச்சிக்கு உகந்தசூழல் காணப்படுவதால் நடப்பு 2021’இல் நாட்டின் பொருளாதாரம் 12 சதவீத வளர்ச்சியை எட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என மூடிஸ் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

6. TATA கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறியது மத்திய அரசு

TATA கம்யூனிகேஷன்ஸின் பத்து சதவீத பங்குகளை விற்பனை செய்ததையடுத்து அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய தொலைதொடர்புத் துறை SEBI’க்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: TATA கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் மத்திய அரசு 2,85,00,000 பங்குகளை வைத்திருந்தது. இது, அந்த நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனத்தில் 10 சதவீதமாகும். இந்த 10 சதவீத பங்கு மூலதனத்தை TATA சன்ஸின் துணை நிறுவனமான பானாடோன் ஃபின்வெஸ்ட்டு -க்கு 2021 மார்ச்.18’இல் விற்பனை செய்யப்பட்டது.

இதன்மூலம், TATA கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திலிருந்து மத்திய அரசு முழுமையாக வெளியேறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பரிவர்த்தனைக்கு முன்னதாக, TATA கம்யூனிகேஷனில் மத்திய அரசுக்கு 26.12 சதவீத பங்குகளும், பானாடோன் ஃபின்வெஸ்ட்டுக்கு 34.80 சதவீத பங்குகளும், டாடா சன்ஸுக்கு 14.07 சதவீத பங்குகளும், பொதுமக்களிடம் எஞ்சிய 25.01 சதவீத பங்குகளும் இருந்தன. இதில், மத்திய அரசு 16.12 சதவீத பங்குகளை ஏற்கெனவே பங்கு ஒன்று `1,161 என்ற அடிப்படை விலையில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

7. மலிவான விலையில் குடிநீர் கிடைக்கும் நகரங்கள் பட்டியலில் பெங்களூரு!

மலிவான விலையில் குடிநீர் கிடைக்கும் உலக நகரங்கள் பட்டியலில் பெங்களூரு இரண்டாவது இடத்தைப்பிடித்துள்ளது. உலக நாடுகளின் முக்கிய நகரங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் குடிநீர் போத்தல் சராசரியாக எவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது என்பது குறித்த ஆய்வை தனியார் சுற்றுலா நிறுவனம் மேற்கொண்டது.

அமெரிக்காவின் முப்பது நகரங்கள், உலக நாடுகளின் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குடிநீரின் விலை அதிகமாகக் காணப்படும் நகரங்களின் பட்டியலில் நார்வேயின் ஓஸ்லோ முதலிடத்தில் உள்ளது. அங்கு ஒரு போத்தல் குடிநீர் சுமார் `130’க்கு விற்கப்படுகிறது. இந்தப் பட்டியலின் முதல் 5 நகரங்களில் அமெரிக்காவைச்சார்ந்த 3 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

குடிநீர் மலிவான விலைக்குக் கிடைக்கும் நகரங்கள் பட்டியலில் லெப -னானின் பெய்ரூட் முதலிடத்தில் உள்ளது. அந்தப்பட்டியலில் கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூரு இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு ஒரு போத்தல் குடிநீரின் விலை சுமார் `9’ஆக உள்ளது. குடிநீரின் விலையுடன் சேர்த்து தரம் தொடர்பான ஆய்வையும் அந்த நிறுவனம் மேற்கொண்டது.

பெங்களூரில் குடிநீரின் தரம் சராசரி நிலையில் உள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் விலை அதிகமாகக் காணப்படும் நகரங்கள்

ஓஸ்லோ, நார்வே – `130

விர்ஜினியா கடற்கரை, அமெரிக்கா – `115

லாஸ் ஏஞ்சலீஸ், அமெரிக்கா – `110

நியூ ஓர்லியன்ஸ், அமெரிக்கா – `107

ஸ்டாக்ஹோம், சுவீடன் – `106

குடிநீர் விலை மலிவாகக் காணப்படும் நகரங்கள்

பெய்ரூட், லெபனான் – `3

பெங்களூரு, இந்தியா – `9

அக்ரா, கானா – `11

லாகோஸ், நைஜீரியா – `12

இஸ்தான்புல், துருக்கி – `13

8. தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் பொறியியல் பாடப்புத்தகம்- வரும் கல்வியாண்டு முதல் தாய்மொழி கல்வி அமல்: ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தகவல்

தமிழ் உள்ளிட்ட 8 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடநூல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாகவும், வரும் கல்வியாண்டுமுதல் தாய்மொழிக்கல்வி அமலுக்கு வரவுள்ளதாகவும் AICTE தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தெரிவி -த்தார். நம் நாட்டின் தேசிய கல்விக்கொள்கை 1968ஆம் ஆண்டு முதன்மு -தலில் உருவாக்கப்பட்டது. பின்னர், 1986 & 1992 ஆகிய ஆண்டுகளில் கல்விக்கொள்கை திருத்தப்பட்டது. அதன்பின் கடந்த 2016ஆம் ஆண்டும் கல்விக்கொள்கையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், தேசிய கல்விக்கொள்கையில் 2019ஆம் ஆண்டு பல்வேறு திருத்தங்களும், மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு, கஸ்தூரி இரங்கன் தலைமையில் பரிந்துரைக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கை, 2020’க்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.

9. ரூ.1,188 கோடியில் 4,960 ஏவுகணைகள்

தரைதளத்திலிருந்து, எதிரிகளின் பீரங்கிகளை தாக்கியழிக்கும், 4,960 ஏவுகணைகளை, `1,188 கோடி மதிப்பில் கொள்முதல்செய்ய, இராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டது. கடந்த சில மாதங்களாக, நாட்டின் மூன்று படைப்பிரிவுகளின் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை, ராணுவ அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

இவற்றை, இராணுவ பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ், பிரான்ஸ் நாட்டின் தொழினுட்ப உதவியுடன் தயாரிக்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், மூன்று ஆண்டுகளில் தயாரிப்பு பணிகள் நிறைவடையும் என, இராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.

10. புதிய தேசிய சாதனையோடு வட்டு எறிதல் வீராங்கனை கமல்பிரீத் கவுர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

24ஆவது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய சீனியர் தடகள சாம்பியன் -ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்தது. 5ஆம் நாளன்று நடந்த பெண்களுக்கான வட்டு எறிதலில் பஞ்சாப் வீராங்கனை கமல்பிரீத் கவுர் 65.06 மீ தூரம் எறிந்து தேசிய சாதனையோடு தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். தனது முதல் முயற்சிலேயே நீண்டதூரம் வீசி அசத்திய கமல்பிரீத் கவுர் (25) ஜூலை-ஆகஸ்டில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கு 63.5 மீட்டர் தூரமாகும். தடகளத்தில் தனிநபர் பிரிவில் இருந்து ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற 10ஆவது இந்தியர் கமல்பிரீத் கவுர் ஆவார்.

கமல்பிரீத் வட்டு வீசிய தூரம் புதிய தேசிய சாதனையாகவும் பதிவானது. இதற்கு முன்பு நட்சத்திர வீராங்கனை கிருஷ்ண பூனியா 2012-ம் ஆண்டில் 64.76 மீட்டர் தூரம் வீசியதே தேசிய சாதனையாக இருந்தது. அந்த 9 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்.

பெண்களுக்கான 200 மீ ஓட்டத்தில் அஸ்ஸாம் வீராங்கனை ஹிமா தாஸ் புதிய போட்டி சாதனையுடன் (23.21 வினாடி) தங்கப்பதக்கத்தை வசப்படுத் -தினார். அத்துடன் தகுதிச்சுற்றில் தன்னை பின்னுக்கு தள்ளிய தமிழக வீராங்கனை திருச்சியைச் சார்ந்த தனலட்சுமியை வீழ்த்தி பதிலடி கொடுத்தார். தனலட்சுமி 23.39 வினாடிகளில் இலக்கை கடந்து 2ஆவது இடத்தைப்பிடித்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். மற்றொரு தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் வெண்கலப்பதக்கம் (23.60 வினாடி) பெற்றார். இதன் ஆண்கள் பிரிவில் தமிழக வீரர் இலக்கியதாசன் (21.19 வினாடி) தங்கப்பதக்கத்தை வென்றார். மற்றொரு தமிழக வீரர் விக்னேசுக்கு (21.57 வினாடி) வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர்கள் முதல் 3 இடங்களை பிடித்து பதக்கத்தை அறுவடை செய்தனர். தருண் ஐயாசாமி 50.16 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். சந்தோஷ்குமார் (51.49 வினாடி), சதீஷ் (52.11 வினாடி) அடுத்த இரு இடங்களை பெற்றனர். இதன் பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை வித்யா இராம்ராஜ் 59.59 வினாடிகளில் ஓடி முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்தை பெற்றார்.

11. சென்னை, விசாகப்பட்டனம் இடையே பாய்மரப் படகு நல்லெண்ணப் பயணம்

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் தளமான INS வீரபாகு பொன்வி -ழாவைக்கொண்டாடும் வகையில் சென்னை, விசாகப்பட்டனம் இடையே பாய்மரப் படகுப் பயணம் தொடங்கியது. கிழக்குப் பிராந்திய கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கப்பல் தளம் 1971 மே 19 அன்று தொடங்கி வைக் -கப்பட்டது. தற்போது 50 ஆண்டுகளை எட்டியுள்ளதையடுத்து இக்கப்பல் தளத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

பொன்விழாவினையொட்டி கடற்படைசார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு நிகழ்ச்சியாக கடற்படையின் பாய்மரக் கப்பலான நீல்காந்த் தனது சிறப்பு பயணத்தை சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மூன்று நாள்கள் பயணம்: சென்னைத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட நீல்காந்த் பாய்மரப் படகுப் பயணத்தை தமிழ்நாடு, புதுச்சேரி கடற்படை அதிகாரி புனீத் சத்தா கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். பாய்மரப் படகு சிறப்புப்பயணத்தில் கமாண்டர் தீபக்ராஜ் தலைமையில் INS வீரபாகு கப்பல் தளத்தைச் சார்ந்த 5 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 366 கடல் மைல் தூரத்தை 3 நாள்களில் பயணித்து விசாகப்பட்டினம் அடைய உள்ளது இப்படகு. இப்பயணத்தின் மூலம் வீரர்களிடையே மனவுறுதி, கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு, கடல் பயணத்தில் ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொள்ளும் சாகசத்தில் நிபுணத்துவம் உள்ளிட்டவற்றை வளர்க்க இயலும்.

12. மகளிர் உரிமை ஒப்பந்தத்திலிருந்து துருக்கி விலகல்

பெண்களுக்கு சம உரிமை அளிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து துருக்கி விலகியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கின் மிகப்பெரிய நகரான இஸ்தான்புல்லின் பெயரிடப்பட்ட அந்த ஒப்பந்தத்திலிருந்து அந்த நாடு விலகியுள்ளது. துருக்கியிலும் ஐரோப்பாவின் பிறபகுதிகளிலும் வசிக்கும் பெண்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக மனித உரிமை ஆர்வலர் -கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளைத் தடுக்க வகை செய்யும் இந்த ஒப்பந்தத்திலிருந்து துருக்கி விலகியிருப்பது, அத்தகைய வன்முறைச் சம்பவங்களை அதிகரிக்கும் என்று மகளிர் உரிமை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 47 நாடுகளை உறுப்பினர்களாகக்கொண்ட ஐரோப்பி -ய கவுன்சில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கடந்த 2011’ஆம் ஆண்டு நடத்திய மாநாட்டில் மகளிர் உரிமை ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பத்தில் முதலாவது நாடாக துருக்கி கையெழுத்திட்டது.

அந்த ஒப்பந்தத்தில், ஆண்களுக்கு நிகரான அனைத்து உரிமைகளையும் பெண்களுக்கு அளிக்க அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதன் மூலம், பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகளைத் தடுக்கவும் அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை பெற்றுத் தரவும் வழிவகை செய்யப்பட்டது.

13. மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 139ஆவது இடம்

ஐநா வெளியிட்டுள்ள மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் இந்தியா 139ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ‘உலக மகிழ்ச்சி அறிக்கை 2021’ஐ ஐநா அமைப்பு அண்மையில் வெளியிட்டது. 149 நாடுகளின் மக்கள் கடந்த ஆண்டில் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பது குறித்து ஆராய்ந்து, அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், இந்தியா 139ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 140ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.

பன்னாட்டு மகிழ்ச்சி நாளான மார்ச்.20 தேதியையொட்டி, ஐநா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘மக்களின் வாழ்வில் கரோனா நோய்த்தொற்று பரவல் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அத்தொற்றை உலக நாடுகள் எவ்வாறு எதிர்கொண்டன என்பதும் ஆராயப்பட்டது.

கரோனாவை எதிர்கொள்வதில் ஒரு சில நாடுகள் மற்ற நாடுகளை விடச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்தது. இந்தியாவைப் பொருத்தவரையில், மக்களை நேரடியாகச் சந்தித்தும் தொலைபேசி வாயிலாகவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 19ஆவது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகள் இந்தப் பட்டியலில் இந்தியாவைவிட முன்னணியில் உள்ளன. போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தனிநபருக்கான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), சுகாதார நிலை, மக்களுக்கு நிலவும் சுதந்திரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

மகிழ்ச்சி நிறைந்த மக்கள் வாழும் முதல் 5 நாடுகள்

1-பின்லாந்து; 2-ஐஸ்லாந்து; 3-டென்மார்க்;

4-சுவிச்சர்லாந்த; 5-நெதர்லாந்து.

பட்டியலில் கடைசி இடங்களில் உள்ள நாடுகள்

149-ஆப்கானிஸ்தான்; 148-ஜிம்பாப்வே;

147-ருவாண்டா; 146-போட்ஸ்வானா; 145-லெசோதோ.

இந்தியாவின் அண்டை நாடுகளின் நிலை

84-சீனா; 87-நேபாளம்; 89-மாலத்தீவுகள்;

101-வங்கதேசம்; 105-பாகிஸ்தான்; 126-மியான்மர்; 129-இலங்கை.

14. தமிழகத்தில் 28% இருந்த குழந்தைத் தொழிலாளர்கள் கரோனாவுக்கு பின்னர் 79 சதவீதமாக அதிகரிப்பு: கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் 28.2 சதவீதமாக இருந்த குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கரோனாவுக்கு பின்னர் 79.6 சதவீதமாக அதிகரித்துள்ளது என குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சாரம் என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

கடந்த செப்டம்பர் முதல் நவம்பர் வரை தமிழகத்தில் 24 மாவட்டங்களில் குழந்தைத் தொழிலாளர் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டன. கரோனா தொற்றுக்கு முன்னர் 28.2 சதவீதமாக இருந்த குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, தொற்றுக்குப் பின்னர் 79.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் குழந்தைத்தொழிலாளர் எண்ணிக்
-கை வேகமாக அதிகரித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால், தேனி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரிப்பு சதவீதம் குறைவாக உள்ளது.

இதில், 30.8 சதவீதம் குழந்தைகள் உற்பத்தித் துறையிலும், 26.4 சதவீதம் குழந்தைகள் சேவைத் துறையிலும் பணிபுரிகின்றனர். மூன்றாவதாக உழவுத்துறையிலும் அதிக குழந்தைத்தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

குழந்தைத் தொழிலாளர்கள் 4 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை பணிபுரிகின்றனர். குழந்தைத்தொழிலாளர்களில் 94% பேர் பொருளாதார நெருக்கடி காரணமாக பணிபுரிவதாகக் கூறுகின்றனர். குழந்தைத் தொழிலாளர்களில் 81 சதவீதம் பேர் மீண்டும் பள்ளிக்கு செல்வோம் என்று கூறியுள்ளனர். 14% குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டோம் என்றும் 5.1 சதவீதம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது தொடர்பாக முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.

15. நெல், தானியங்களை சேமித்து வைக்க உதவிய மண் கலன் கண்டுபிடிப்பு

அகரத்தில் அகழாய்வின் போது நெல், தானியங்களை சேமித்து வைக்க உதவிய பழங்கால மண் கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகழாய்வு பணி சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 7ஆம்கட்ட அகழ்வாராய்ச்சி நடந்துவருகிறது. இந்தப் பணிகள் முதலில் கீழடியிலும் பிறகு கொந்தகை, அகரத்திலும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கீழடியில் தோண்டப்பட்ட ஒரு குழியில் பாசி மணிகள், சில்லுவட்டுக்கள் மற்றும் பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கொந்தகையில் வாய்ப்பகுதி மூடிய நிலையில் உள்ள முழுமையான முதுமக்கள்தாழி மற்றும் சேதமுற்ற முதும -க்கள்தாழிகள் என பல கண்டுபிடிக்கப்பட்டன.

மண்கலன் கண்டுபிடிப்பு

அகரத்தில் ஒரு குழிதோண்டி அகழாய்வு மேற்கொண்டபோது முதலில் சேதமுற்ற நிலையில் சிறிய பானை ஓடுகள் கிடைத்தன. தொடர்ந்து குழியை ஆழமாக தோண்டியபோது சேதமுற்ற நிலையில் தானியங்கள் சேமித்து வைக்கும் மண்கலன் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கலன் சேதமுற்ற நிலையில் சுவருடன் ஒட்டிய நிலையில் உள்ளது.

முந்தைய காலத்தில் களிமண்ணால் வட்ட உறையாக செய்து வீடுகளில் ஒன்றின்மேல்ஒன்றாக அடுக்கிவைத்து பூசியிருக்கிறார்கள். இக்கலன்களி -ல் நெல், தானியம் சேமித்து வைத்து, தேவைப்படும் போது சிறுக, சிறுக எடுத்து பயன்படுத்தி இருப்பதாக தொல்லியலாளர்கள் தெரிவித்தனர்.

1. Which ministry has moved the National Capital Territory of Delhi (Amendment) Bill, 2021 in the Lok Sabha?

A) Ministry of Education

B) Ministry of Home Affairs

C) Ministry of Labour and Employment

D) Ministry of Agriculture and Rural Development

  • The Union Ministry of Home Affairs (MHA) has recently moved the National Capital Territory of Delhi (Amendment) Bill, 2021 in Lok Sabha. This bill seeks to redefine the meaning of “Government of Delhi” as “Lieutenant Governor of Delhi”. The bill seeks to give discretionary powers to the Lieutenant Governor of Delhi in aspects in which the Legislative Assembly of Delhi is empowered to make laws.

2. Which state has topped in employment generation under MGNREGS during 2020–21?

A) Tamil Nadu

B) Goa

C) Rajasthan

D) Haryana

  • During the year 2020–21, India as a whole has generated 366 crore person days of work under MGNREGS. This is the highest ever employment generation under the scheme. Among the states, Rajasthan has generated the highest employment of 43 crore person days, which is followed by West Bengal, Uttar Pradesh and Tamil Nadu.

3. World Recycling Day is observed in which date?

A) March 18

B) April 18

C) May 18

D) June 18

  • Global Recycling Day is observed every year on March 18 to create awareness among the masses about the rapid pace at which our natural resources are being used.
  • The day also promotes the concept and practice of recycling. In 2021, the theme of Global Recycling Day is “Recycling Heroes”.

4. The World Poetry Day is celebrated on which date?

A) March 20

B) March 21

C) March 22

D) March 23

  • World Poetry Day is celebrated on March 21 every year with the aim of promoting the reading, creating and teaching of poetry. Announced during the 30th session of the United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) in 1999, the day is celebrated around the world.

5. What is the theme of the 2021 International Day of Happiness?

A) Share Happiness

B) Angry Birds Happy Planet

C) Reclaim Happiness

D) Happiness for all, forever

  • The International Day of Happiness is observed every year on March 20 to recognize the importance of happiness in the lives of people around the world. The day is to inspire individuals to share happiness with others and create a happier world for all. The 2021 theme is “Happiness for all, forever”.

6. World Sparrow Day is observed on which date?

A) March 20

B) March 21

C) March 22

D) March 23

  • The World Sparrow Day is observed every year on March 20 to highlight the declining population of the bird due to modern infrastructure, pollution by microwave towers and pesticides and lesser green spaces. The 2021 theme is “I Love Sparrows”.
  • It is an international initiative by the Nature Forever Society of India in collaboration with the Eco–Sys Action Foundation (France) and numerous other international organizations across the world.

7. When is the 2021 World Sleep Day observed?

A) March 19

B) March 20

C) March 21

D) March 22

  • The day before the Vernal Equinox of every year is observed as World Sleep Day. This year falls on 19th March. It is organised by the World Sleep Day Committee of the World Sleep Society. The 2021 theme is “Regular Sleep, Healthy Future”.

8. What is the theme of the 2021 International Day of Forests?

A) Forests and Water

B) Forests and Energy

C) Forests and Sustainable Cities

D) Forest restoration: a path to recovery and well–being

  • The International Day of Forests is observed every year on March 21 to provide a platform to raise awareness of the importance of all types of woodlands and trees and celebrate the ways in which they sustain and protect us. The 2021 theme is “Forest restoration: a path to recovery and well–being”.

9. What is the theme of the 2021 World Water Day?

A) Why Waste Water?

B) Valuing Water

C) Water is Life

D) Better Water, Better Jobs

The World Water Day is observed every year on 22 March to raise awareness about the importance of water. The 2021 theme “Valuing Water”. The day is about focusing on the importance of water and the need to preserve it.

10. What is the upper limit to permit abortion to special categories of women, as per the Medical Termination of Pregnancy Bill, 2020?

A) 20 weeks

B) 24 weeks

C) 28 weeks

D) 32 weeks

  • Rajya Sabha passed the Medical Termination of Pregnancy (Amendment) Bill, 2020, to raise the upper limit for permitting abortions from the present 20 weeks to 24 weeks.
  • This limit is applicable for special categories of women including rape survivors, victims of incest, minors and the differently–abled. The bill was passed by Lok Sabha about a year ago.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!