Tnpsc

20th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

20th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 20th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

20th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெகுதொலைவில் உள்ள காமா-கதிரை உமிழும் பேரடையின் பெயர் என்ன?

அ) நேரோ-லைன் செபெர்ட் 1

ஆ) ஆண்ட்ரோமெடா

இ) ஸ்கை வே

ஈ) மில்க் லைன்

  • அண்மையில், விண்வெளி அறிவியலாளர்கள் ஒரு புதிய செயற்பாட்டில் உள்ள பேரடையைக்கண்டுபிடித்தனர். இது, இதுவரை கண்டுபிடிக்கப்ப -ட்ட காமா-கதிரை உமிழும் பேரடைகளிலேயே வெகுதொலைவில் உள்ளது என்று கருதப்படுகிறது. இந்தப் பேரடைக்கு, Narrow-Line Seyfert 1 (NLS1) பேரடை என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, பூமியிலிருந்து சுமார் 31 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது ஓர் அரிய வான்பொருள் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

2. 2020-21ஆம் ஆண்டில், முந்தைய ஆண்டை விடவும் எத்தனை சதவீதத்திற்கு நிகர மறைமுக வரி வசூல் அதிகரித்துள்ளது?

அ) 1%

ஆ) 10%

இ) 12.3%

ஈ) 15%

  • மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2020-21ஆம் ஆண்டில் நிகர மறைமுக வரி வசூல் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 12.3% அதிகரித்துள்ளது. மொத்த வசூல் `10.71 இலட்சமாக உள்ளது. இதன்மூலம் 2020-21ஆம் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட மறைமுக வரி வசூல் இலக்கான `9.89 இலட்சத்தை அது தாண்டியது.

3. வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான, ‘மத்திய ஆசிய’ மையம் கட்டப்பட்டு வருகிற நாடுகள் எவை?

அ) உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான்

ஆ) ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் இந்தியா

இ) சீனா மற்றும் ஜப்பான்

ஈ) ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் ஐக்கியப் பேரரசு

  • ‘மத்திய ஆசியா’ என்பது வர்த்தகம் & பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒரு பன்னாட்டு மையத்தின் பெயராகும். இது, உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய இருநாடுகளின் எல்லைகளில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நாளொன்றுக்கு இருதிசைகளிலும் இருந்து வரும் 35,000 பேர்வரை தங்கவைக்க முடியும். மேலும், 5,000 பொதியுந்துகள் வரை நிறுத்தமுடியும். இது, இரு நாடுகளுக்குமான ஒரு பெரிய தொழிற் துறை, வர்த்தகம் மற்றும் போக்குவரவு தளமாக செயல்படும்.

4. தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) சுஷில் சந்திரா

ஆ) பிரசன்ன சந்திரா

இ) அஜய் குமார் பல்லா

ஈ) இஞ்செட்டி சீனிவாஸ்

  • இந்தியாவின் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா அவர்களை இந்திய அரசு நியமித்துள்ளது. அவர், 2021 ஏப்.13ஆம் தேதி ஓய்வுபெற்ற சுனில் அரோராவைத் தொடர்ந்து இப்பதவிக்கு வந்துள்ளார். மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் முன்னாள் தலைவரான சுஷில் சந்திரா, 2019 பிப்.14 அன்று தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

5. பின்வரும் எந்த நாட்டில், ஒரு கொலைகார ஆல்காவால் 4200 டன் சால்மன் கொல்லப்பட்டது?

அ) ஐக்கியப் பேரரசு

ஆ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ) கனடா

ஈ) சிலி

  • தென்னமெரிக்க நாடான சிலியில், 4200 டன்களுக்கும் அதிகமான சால்மன்களைக்கொன்ற ஒரு கொலைகார ஆல்கா பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இப்பாசித்திரள்கள், நீரிருப்பை குறைக்க வழிவகுத்தது; அது, சால்மன் மீன்களை மூச்சுத்திணறலுக்கு உள்ளாக்கியது. இது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய சால்மன் உற்பத்தியாளரான சிலியில் பதிவு செய்யப்பட்ட, அண்மைய ஒரு பேரிறப்பு நிகழ்வாக கருதப்படுகிறது.

6. ஐரோப்பிய ஆணையம் அதன் பொருளாதாரத்தை பசுமையாகவும் டிஜிட்டலாகவும் மாற்றுவதற்கு 2026ஆம் ஆண்டு வரை ஆண்டு தோறும் எவ்வளவு நிதியைத் திரட்ட திட்டமிட்டுள்ளது?

அ) 150 பில்லியன் யூரோக்கள்

ஆ) 1000 மில்லியன் அமெரிக்க டாலர்

இ) `1000 கோடி

ஈ) பூப்பந்து

  • 2026ஆம் ஆண்டு வரை 150 பில்லியன் யூரோக்கள் கடன் வாங்க ஐரோப்பிய ஆணையம் திட்டமிட்டுள்ளது. இக்கடன் ஐரோப்பிய ஆணை -யம் அதன் பொருளாதாரத்தை பசுமையாகவும் டிஜிட்டல் மயமாகவும் மாற்ற பயன்படுத்தப்படும். முதன்மை ஒப்பந்த வலையமைப்புமூலம் ஏல -ம் மற்றும் ஆட்சிக்குழு மூலம் நிதி திரட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

7. விராட் கோலியை விஞ்சி ICC ஆண்கள் ஒருநாள் பேட்டிங் தரவரி -சையில் முதலிடம் வகிக்கும் பாகிஸ்தான் வீரர் யார்?

அ) பாபர் ஆசாம்

ஆ) ஹசன் அலி

இ) முகமது அமீர்

ஈ) பக்கர் ஜமான்

  • ICC ஆண்கள் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் ஆசாம் முதலிடம் பிடித்தார். கடந்த 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். பாகிஸ்தான்-தென்னாப்பிரிக்க தொடரில் 13 புள்ளிக ளைப் பெற்றதை அடுத்து இந்திய கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் விராட் கோலியை பாபர் ஆசாம் விஞ்சினார்.

8. நாட்டில் செயல்படும் வங்கிகள், காப்பீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு மேலாளர்கள் தங்கள் வணிகத்தால் நிகழும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்து தெரிவிப்பதை கட்டாயமாக்கியுள்ள நாடு எது?

அ) இந்தியா

ஆ) நியூசிலாந்து

இ) ஆஸ்திரேலியா

ஈ) சுவிச்சர்லாந்து

  • நியூசிலாந்து அரசு ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது; இதன் மூலம் நாட்டில் செயல்படும் வங்கிகள், காப்பீட்டாளர்கள் மற்றும் முதலீட் -டு மேலாளர்கள் தங்கள் வணிகத்தால் நிகழும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை தெரிவிக்க வேண்டும். இத்தகைய சட்டத்தைக் கொண்டு வந்த முதல் நாடு நியூசிலாந்து. இப்புதிய சட்டத்தின்படி, NZ$ 1 பில்லியனு -க்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்ட வங்கிகளும், காப்பீட்டாள -ர்களும் இதனை தெரிவித்தல் வேண்டும்.

9. NEGVAC’இல் உள்ள ‘C’ என்பது எதைக் குறிக்கிறது?

அ) Commission

ஆ) Collection

இ) Corruption

ஈ) COVID-19

  • தடுப்பூசி கொள்முதல், இருப்புநிலை மேலாண்மை, தடுப்பூசி தெரிவுசெய் -தல், தடுப்பூசி விநியோகம் மற்றும் கண்காணிப்பு பொறிமுறைக்காக இந்திய அரசாங்கத்தால் COVID-19’க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய வல்லுநர் குழு (National Expert Group on Vaccine Administration for COVID-19 (NEGVAC)) அமைக்கப்பட்டது.
  • அண்மையில், அந்நிபுணர் குழு, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐரோப்பா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் அதிகாரிகளால் அவசர ஒப்புதல் வழங்கப்பட்ட COVID-19 தடுப்பூசிகளை பரிந்துரை செய்துள்ளது. உலக நலவாழ்வு அமைப்பின் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் பட்டியலிடப்பட்ட COVID-19 தடுப்பூசிகளுக்கும் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.

10. தேசிய நாற்றுப்பண்ணை வலைத்தளத்தைத் தொடங்கியுள்ள வாரியம் அல்லது அமைப்பு எது?

அ) தேசிய வீட்டுவசதி வாரியம்

ஆ) தேசிய தோட்டக்கலை வாரியம்

இ) தேசிய தேயிலை வாரியம்

ஈ) NITI ஆயோக்

  • தேசிய நாற்றுப்பண்ணை வலைத்தளத்தை தேசிய தோட்டக்கலை வாரியம் தொடங்கியுள்ளது. இது ஒரு வலைத்தளம் மற்றும் திறன்பேசி வடிவத்தில் கிடைக்கப்பெறும் ஒரு இணையதளமாகும். நாற்றுப்பண்
    -ணைகளும் வாங்குவோரும் தாவரங்களின் விற்பனை தொடர்பாக தொடர்புகொள்ளக்கூடிய இணையவழி சந்தைப்புறத்தை உருவாக்க இந்த வலைத்தளம் நோக்கங்கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. செவ்வாய் கிரகத்தில் பறந்த முதல் ஹெலிகாப்டர்!

அமெரிக்க விண்வெளி நிறுவனமான NASA, செவ்வாய் கிரகத்துக்கு பெர்சிவரன்ஸ் விண்கலத்துடன் இணைத்து அனுப்பியுள்ள ஹெலிகாப்டர் வெற்றிகரமாகப் பறந்தது. இதன்மூலம் வேற்றுக்கிரகத்தில் பறந்த முதல் ஹெலிகாப்டர் என்ற பெருமையை அதுபெற்றது.

செவ்வாய் கிரகத்தில் இன்ஜெனிட்டி ஹெலிகாப்டர் வெற்றிகரமாகப் பறந்த -தை ‘ரைட் சகோதரர்கள்’ தருணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 1903ஆம் ஆண்டு ரைட் சகோதரர்களின் முதல் விமானம் வெற்றிகரமாகப் பறந்தது. உலகிலேயே முதல் விமானமான அதன் இறக்கையில் இடம்பெற் -றிருந்த துணியின் ஒரு சிறிய பகுதி இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் ரைட் சகோதரர்களின் முதல் விமானம் படைத்த சாதனையை செவ்வாய் கிரகத்தில் படைத்துள்ளது இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர்.

2. கரோனா முன்களப் பணியாளர்களுக்குப் புதிய காப்பீட்டுத் திட்டம்

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் முன்களப் பணியா -ளர்களுக்குப் புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘பிரதமரின் ஏழைகள் நலன் தொகுப்புத் திட்டத்தின்கீழ் கரோனா முன்களப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அத்திட்டத்தின் கீழ் 287 பேர் காப்பீட்டுத் தொகையைப் பெற்றுள்ளனர்.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று பணியாற்றிவரும் முன்களப் பணியாளர்களின் மனவலிமையை இந்தக் காப்பீட்டுத் திட்டம் மேம்படுத்தியுள்ளது. வரும் 24ஆம் தேதி வரை இந்தக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருக்கும். அதுவரை இத்திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகையைக் கோரமுடியும்.

அதன்பிறகு கரோனா முன்களப் பணியாளர்களுக்கென புதிய காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமரின் ஏழைகள் நலன் தொகுப்புத்திட்டமானது கடந்தாண்டு மார்ச்சில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அத்திட்டமானது மூன்றுமுறை நீட்டிக்கப்பட்டது. அத்திட்டத்தின்கீழ் `50 இலட்சம் காப்பீடு பெற முடியும்.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் முன்களப் பணியா -ளர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்தினர் பலனடையும் நோக்கில் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

3. SIDBI வங்கியின் தலைவராக எஸ். இராமன் பொறுப்பேற்பு

SIDBI வங்கி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் தலைவராக சிவசுப்ரமணியன் இராமன் பொறுப்பே -ற்றுக்கொண்டார்.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: SIDBI வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக சிவசுப்ரமணிய -ன் இராமன் பொறுப்பேற்றுள்ளார். இவர், மூன்று ஆண்டுகளுக்கு அந்தப் பொறுப்பை வகிப்பார் என SIDBI வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 1991ஆம் ஆண்டு இந்திய தணிக்கை மற்றும் கணக்குகள் பணிக்கு (IA&AS) தேர்வான இராமன், இதற்கு முன் தேசிய மின்னாளுகை சேவைகள் நிறு -வனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியவர்.

4. ஒலிம்பிக்கில் சென்னை மாணவி

சென்னையைச் சேர்ந்த மாணவி நேத்ரா குமணன், ஒலிம்பிக் பாய்மரப் படகுப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார். ஒலிம்பிக் படகுப் போட்டிக்குத் தகுதிபெறும் முதல் இந்தியப் பெண் இவர். 2020 உலகக் கோப்பை பாய்மரப் படகுப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் இவர்.

1. What is the name of the farthest gamma–ray emitting galaxy that has been discovered recently?

A) Narrow–Line Seyfert 1

B) Andromeda

C) Sky Way

D) Milk Line

  • Recently, space scientists have discovered a new active galaxy, which is considered to be the farthest gamma–ray emitting galaxy discovered so far. This galaxy is named Narrow–Line Seyfert 1 (NLS1) galaxy, which is about 31 billion light–years away from earth. This has been described as a rare space entity.

2. By what percentage, the net indirect tax collection in 2020–21 has grown over the previous year?

A) 1%

B) 10%

C) 12.3%

D) 15%

  • As per the data released by the Union Finance Ministry, net indirect tax collection in 2020–21 grew 12.3% over the previous financial year. The total collection stood at Rs.10.71 lakh, thereby exceeding the indirect tax collection target of Rs.9.89 lakh set for the FY 2020–21.

3. “Central Asia” center for trade and economic cooperation is being constructed by which countries?

A) Uzbekistan and Kazakhstan

B) USA and India

C) China and Japan

D) USA and UK

  • ‘Central Asia’ is the name of an international center for trade and economic cooperation, being constructed by Uzbekistan and Kazakhstan at the borders of the two countries.
  • The center would have a capacity of accommodating 35,000 people and 5,000 trucks per day in both directions. It would serve as a large industrial, trade and logistics platform for both countries.

4. Who has been appointed as the Chief Election Commissioner?

A) Sushil Chandra

B) Prasanna Chandra

C) Ajay Kumar Bhalla

D) Injeti Srinivas

  • The Government of India has appointed Sushil Chandra as the next Chief Election Commissioner of India. He succeeds Sunil Arora who retired on 2021 April.13. Sushil Chandra is the former CBDT (Central Board of Direct Taxes) Chairman and was appointed as an election commissioner on February 14, 2019.

5. Over 4200 tonnes of salmon have been killed by a killer alga in which country?

A) United Kingdom

B) United States of America

C) Canada

D) Chile

  • In the South American country of Chile, has witnessed the spread of a killer algae which has claimed the lives of more than 4,200 tonnes of salmon. The algal bloom has led to decreased water availability that led to suffocating the salmon.
  • This is considered to be the latest mass mortality event recorded in Chile, which is the world’s second largest producer of salmon.

6. The European Commission has planned to raise what amount annually until 2026, to make its economy green and digital?

A) 150 billion euros

B) USD 1000 million

C) Rs.1000 crore

D) USD 50 million

  • The European Commission has proposed to make borrowings amounting 150 billion euros till the year 2026. The proceeds of the borrowing will be used to make its economy greener and more digitalized. The funds are proposed to be raised through auctions and syndication through a primary deal network.

7. Which Pakistani Player has topped the ICC men’s ODI batting rankings, surpassing Virat Kohli?

A) Babar Azam

B) Hasan Ali

C) Mohammad Amir

D) Fakhar Zaman

  • Pakistani cricketer Babar Azam has topped the ICC men’s ODI batting rankings. He has clinched the top spot after a huge gap by any one from the country since 2003. He has replaced Indian Skipper and Batsman Virat Kohli after he gained 13 points in the Pakistan South Africa series.

8. Which country has mandated banks, insurers and investment managers operating in the country to report the impacts of climate change on their business?

A) India

B) New Zealand

C) Australia

D) Switzerland

  • The Government of New Zealand has introduced a new legislation, whereby banks, insurers and investment managers operating in the country are required to report the impacts of climate change on their business. New Zealand is the first country to bring such legislation.
  • As per the new legislation, banks with total assets of more than NZ$1 billion and insurers with more than NZ$1 billion in total assets have to make the disclosure.

9. What does “C” in NEGVAC stand for?

A) Commission

B) Collection

C) Corruption

D) COVID–19

  • The National Expert Group on Vaccine Administration for COVID–19 (NEGVAC) was constituted by the Government of India for vaccine procurement, inventory management, vaccine selection, vaccine delivery and tracking mechanism.
  • Recently, the expert group recommended that COVID–19 vaccines manufactured in foreign countries and granted emergency approval by authorities of US, Europe, the UK, Japan or those listed with WHO Emergency Use listing may be given emergency use approval in India.

10. Which board or organisation has launched the National Nursery Portal?

A) National Housing Board

B) National Horticulture Board

C) National Tea Board

D) NITI Aayog

  • The National Nursery Portal has been launched by National Horticulture Board. It is a platform which is available both in the form of a web portal and a mobile application. It intends to create an online market place where nurseries and buyers can interact for sale of plants.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!