20th August 2020 Current Affairs in Tamil & English

20th August 2020 Current Affairs in Tamil & English

20th August 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

20th August 2020 Current Affairs Pdf Tamil

20th August 2020 Current Affairs Pdf English

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.விடுதலை நாள் கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில், கீழ்க்காணும் எந்தெந்த ஆவணப்படங்கள், திரைப்படப்பிரிவால் திரையிடப்பட்டன?

அ. Vice Roy’s House & Mangal Pandey

ஆ. The Legend of Bhagat Singh & Chittagong

இ. India Wins Freedom & India Independent

ஈ. India Untouched & Gulabi Gang

 • 2020 ஆக.15 – எழுபத்து நான்காம் விடுதலை நாள் கொண்டாட்டத்தில், திரைப்படப்பிரிவு, “India Wins Freedom & India Independent” ஆகிய இரண்டு ஆவணப்படங்களை திரையிட்டது. மேற்கண்ட இரண்டு படங்களைத்தவிர, விடுதலை இயக்கம் குறித்த தேர்ந்தெடுக்கப்பட்ட 14 திரைப்படங்கள், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, “இணையவழி தேசபக்தி திரைப்பட விழாவில்” 2020 ஆக.7-21 வரை, “www.cinemasofindia.com” வலைத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.

2.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற உயிரி மருந்துப் பகுப்பாய்வு மையம் அமைந்துள்ள நகரம் எது?

அ. மும்பை

ஆ. புனே

இ. தில்லி

ஈ. ஹைதராபாத்

 • புனேவில் அமைக்கப்பட்டுள்ள உயிரி மருந்துப் பகுப்பாய்வு மையத்தை மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் மெய்நிகராக தொடக்கிவைத்தார். இது, புனேவில் அமைந்துள்ள CSIR – தேசிய வேதியியல் ஆய்வகத்தின் ஆதரவிலுள்ள தொழில்நுட்ப வணிகக்காப்பகமான வெஞ்சர் மையத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.
 • உயிரி மருந்தாளுமை தயாரிப்பாளர்களுக்கு உயர்தரம் வாய்ந்த பகுப்பாய்வுச் சேவைகளை இந்தப் பகுப்பாய்வு மையம் வழங்கும். உயிரியல், உயிரி மருந்தாளுமைக் கட்டமைப்பு இயக்கத் தன்மைகள் பற்றி பகுப்பாய்வதற்கான ஆதார மையமாக இம்மையம் உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3.இந்தியா தனது மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டத்திற்காக, எந்த நாட்டிற்கு, $500 மில்லியன் டாலர் கடனுதவியை அறிவித்துள்ளது?

அ. இலங்கை

ஆ. வங்கதேசம்

இ. மாலத்தீவுகள்

ஈ. நேபாளம்

 • இந்தியா சமீபத்தில் தனது மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டத்திற்கு, $500 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை அறிவித்துள்ளது. இந்நிதியில், தலைநகரான மாலேவை, மூன்று அண்டைத்தீவுகளான வில்லிங்கிலி, குல்கிபாஹூ மற்றும் திலாபுசி ஆகியவற்றுடன் இணைக்கும் நோக்கில் $400 மில்லியன் டாலர் கடனும் $100 மில்லியன் டாலர் மானியமும் வழங்கப்படும். இத்திட்டம், பொருளாதார செயல்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளையும் மேம்படுத்தும்.

4.இந்தியாவில், ஆண்டுதோறும் நடைபெறும் பன்னாட்டுத் திரைப்பட விழா (IFFI) எங்கு நடைபெறுகிறது?

அ. கொல்கத்தா

ஆ. கோவா

இ. புது தில்லி

ஈ. ஜெய்ப்பூர்

 • இந்திய பன்னாட்டுத் திரைப்பட விழா என்பது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தில் கோவாவில் நடைபெறும் ஒரு வருடாந்திர திரைப்பட விழாவாகும். நடப்பாண்டு (2020) நவம்பர் 20-28 வரை, கோவாவில், திட்டமிடப்பட்டபடி இந்த விழா நடைபெறும் என்று கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உறுதிப்படுத்தியுள்ளார். கோவா மாநில அரசுக்கு சொந்தமான பொழுதுபோக்குச் சங்கத்துடன் இணைந்து திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

5.இணையவழிக் கல்வியை மேம்படுத்துவதற்காக, 2500’க்கும் மேற்பட்ட திறன்பேசிகளை இந்திய சிறார்களுக்கு வழங்கவுள்ள திறன்பேசி தயாரிப்பு நிறுவனம் எது?

அ. ஒப்போ

ஆ. விவோ

இ. ஷாவ்மி

ஈ. ஹூவாவே

 • சீன திறன்பேசி நிறுவனமான ஷாவ்மி அதன் MI இந்தியா பிரிவானது இணையவழிக் கல்விமுறைக்கு ஆதரவாக இந்திய சிறார்களுக்கு `2 கோடி மதிப்புள்ள 2,500’க்கும் மேற்பட்ட திறன்பேசிகளை வழங்கும் என அறிவித்தது. விநியோக செயல்முறையை முன்னெடுப்பதற்காக, MI இந்தியா, ஓர் இந்திய இலாப-நோக்கற்ற அமைப்பான, ‘Teach for India’ உடன் கூட்டிணையும். இந்தச் சேவையை திறம்பட பயன்படுத்தவும், சிறார்களுக்கு தரமான கல்வி கிடைக்கவும், சுழற்சி முறையில் இந்தத் திறன்பேசிகள் வழங்கப்பட்டு பயன்படுத்தப்படும்.

6.வரிவிதிப்பு சீர்திருத்தத்தின் ஒருபகுதியாக, பிரதமரால் வெளியிடப்பட்ட தளத்தின் பெயரென்ன?

அ. நேர்மையாக வரி செலுத்துவோரின் தகவல் பலகை

ஆ. வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையானவர்களை கெளரவித்தல்

இ. தடையில்லாத மதிப்பீட்டுத் திட்டம்

ஈ. PM வெளிப்படைத்தன்மை

 • “வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையானவர்களை கெளரவித்தல்” என்ற தளத்தை பிரதமர் மோடி, காணொளிக்காட்சிமூலம் தொடங்கிவைத்தார். 21ஆம் நூற்றாண்டின் வரிவிதிப்பு அமைப்பின் தேவையை நிறைவேற்றும் வகையில், இந்தத் தளம் தொடங்கப்பட்டுள்ளது.
 • நேர்மையாக வரிசெலுத்துவோர் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், இணக்கத்தை எளிதாக்கு வதையும், பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறையை விரைவாக்குவதையும் இத்தளம் நோக்கம் எனக்கொண்டுள்ளது. தடையில்லா மதிப்பீடு, தடையில்லா மேல்முறையீடு மற்றும் வரி செலுத்துவோ -ருக்கான சாசனம் போன்ற மிகப்பெரும் சீர்திருத்தங்களை இந்தத் தளம் கொண்டுள்ளது.

7.Transiting Exoplanet Survey Satellite (TESS) என்பது எந்த நாட்டு விண்வெளி அமைப்பின் செயற்கைக் கோளாகும்?

அ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ. பிரான்ஸ்

இ. ஆஸ்திரேலியா

ஈ. சீனா

 • NASA ஏவிய Transiting Exoplanet Survey Satellite (TESS) தனது முதன்மை பணியை முடித்துள்ளது. அதன் ஈராண்டுகால முதன்மை பணியின்போது, அது நமது சூரியக்குடும்பத்திற்கு வெளியே 66 புதிய புறக்கோள்களைக் கண்டறிந்தது. மேலும், ஈராயிரத்துக்கும் மேற்பட்ட விண்பொருள்களையும் TESS கண்டறிந்தது. விரைவில் அவையனைததும் வானியலாளர்களால் உறுதிப்படுத்தப்படும். TESS’இன் நீட்டிக்கப்பட்ட பணி, எதிர்வரும் 2022ஆம் ஆண்டில் நிறைவடையும்.

8.டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியின், அதிகாரப்பூர்வ ஆதரவாளராக அறிவிப்பு செய்யப்பட்டுள்ள நிறுவனம் எது?

அ. INOX குழுமம்

ஆ. பைஜூ’ஸ்

இ. PVR சினிமா

ஈ. இண்டிகோ

 • இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஓர் அண்மைய அறிவிப்பின்படி, மறுதிட்டமிடப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியின் அதிகாரப்பூர்வ ஆதரவாளராக INOX குழுமம் இருக்கும். தற்போது நிலவும் COVID-19 தொற்றுநோய் சூழல் காரணமாக, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை.23 முதல் ஆகஸ்ட்.8 வரை மாற்றியமைக்கப்பட்டது. இக்குழுமம் தனது பொழுதுபோக்கு நிறுவனமான, ‘INOX Leisure Ltd’மூலம் அணியின் விளம்பரங்களை ஒளிபரப்பும். INOX குழுமம், நாடு முழுவதும் பன்னடுக்கு பொழுதுபோக்குச் சங்கிலித்தொடரைக் கொண்டுள்ளது.

9.அண்மைய அறிக்கையின்படி, உலகில் மலிவான வாடகை குடியிருப்புகள் கிடைக்கும் இரண்டாவது நகரமாக இடம்பெற்றுள்ள இந்திய நகரம் எது?

அ. ஹைதராபாத்

ஆ. பெங்களூரு

இ. தில்லி

ஈ. சென்னை

 • பியூர்லி டையமண்ட்ஸின் புதிய அறிக்கையின்படி, வியட்நாமின் பெருநகரமான ஹோ சி மின் நகரம், உலகிலேயே மிகவும் மலிவான வாடகை குடியிருப்புகள் கிடைக்கப்பெறும் நகரமாகும். உலகிலேயே வாடகை குடியிருப்புக்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரமாக நியூயார்க் நகரம் உள்ளதாக அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. நியூயார்க்கைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளது. இந்திய தலைநகரமான தில்லி, உலகிலேயே மிகவும் மலிவான வாடகை குடியிருப்புகள் கிடைக்கும் இரண்டாவது நகரமாக உள்ளது. தில்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை உள்ளது.

10. ‘பவித்ராபதி’ என்ற ஆயுர்வேத அடிப்படையிலான மக்கி அழியக்கூடிய முகமறைப்பை (face-mask) உருவாக்கியுள்ள அமைப்பு எது?

அ. பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பு

ஆ. இந்திய விண்வெளி ஆய்வு மையம்

இ. மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துக்கான பாதுகாப்பு நிறுவனம்

ஈ. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட்

 • “பவித்ரபதி” என்ற ஆயுர்வேத அடிப்படையிலான மக்கி அழியக்கூடிய முகமறைப்பை புனேவில் உள்ள மேம்படுத்தப்பட்ட தொழினுட்பத்துக்கான பாதுகாப்பு நிறுவனம் (DIAT) உருவாக்கியுள்ளது. இது ரீதியாக, DIAT புனே & தனியார் நிறுவனமொன்றுக்கு இடையே, இதனை பேரளவில் உற்பத்தி செய்வதற்கான ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிறுவனம் தற்போது இந்த முகமறைப்பை வணிக ரீதியிலான விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இதேபோல், “ஒளஷதா தாரா” என்று பெயரிடப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு உடையை உருவாக்கும் தொழில்நுட்பமும் இந்நிறுவனத்திற்கு மாற்றப்படுகிறது.

1. What documentary films were screened by the Films Division, to mark the celebration of Independence Day?

[A] Vice Roy’s House & Mangal Pandey

[B] The Legend of Bhagat Singh & Chittagong

[C] India Wins Freedom & India Independent

[D] India Untouched & Gulabi Gang

 • At the 74th Independence Day celebration on 15th August 2020, the Films Division would screen two documentary films – ‘India wins Freedom’ and ‘India Independent’. Apart from the above 2 films, 14 selected films on Independence movement were showcased in the “Online Patriotic Film Festival” being organised by the Ministry of Information and Broadcasting from 7th Aug 2020 to 21st Aug 2020 in www.cinemasofindia.com.

2. The Centre for Bio Pharma Analysis (CBA) that was in news recently, is set up at which city?

[A] Mumbai

[B] Pune

[C] Delhi

[D] Hyderabad

 • The Center for Biopharma Analysis (CBA), which is set up at Pune has been virtually inaugurated by the Secretary of Department of Bio Technology. It is an initiative of the Venture Centre, which is a Technology Business Incubator hosted by CSIR– National Chemical Laboratory, Pune.
 • The CBA is supported and funded by National Bio Pharma Mission implemented by the Department of Bio Technology. The CBA is a facility with high end instrumentation which complies with globally accepted standards of Bio pharmaceutical analysis.

3. India has announced a USD 500 million assistance to which country, for its largest civilian infrastructure project?

[A] Sri Lanka

[B] Bangladesh

[C] Maldives

[D] Nepal

 • India has recently announced a financial assistance of USD 500 million assistance for its largest civilian infrastructure project.
 • Out of the fund, USD 400 million line of credit and USD 100 million grant will be provided for the project that aims to connect the capital city Male with three neighbouring islands Villingili, Gulhifahu and Thilafushi. The 6.7 km Greater Male Connectivity Project (GMCP) will also improve economic activity and employment opportunities.

4. Where is the annual International Film Festival of India (IFFI) held in India?

[A] Kolkata

[B] Goa

[C]New Delhi

[D] Jaipur

 • The International Film Festival of India (IFFI) is an annual film festival held in Goa, every year in the month of November. The Chief Minister of Goa Pramod Sawant has confirmed that the Film Festival will be held as per schedule in Goa between November 20 and 28, this year. This festival is organised by the Directorate of Film Festivals in association with the state government–owned Entertainment Society of Goa.

5. Which smartphone maker is set to distribute over 2500 smartphones to Indian children, to promote online education?

[A] Oppo

[B] Vivo

[C] Xiaomi

[D] Huawei

 • Chinese smartphone giant Xiaomi announced that its arm MI India will distribute over 2,500 smartphones worth Rs 2 crore to Indian children, to support online education. MI India will partner with Indian non–profit organisation ‘Teach for India’, to carry out the distribution process. The hand sets would be used in shifts to utilise the service effectively, to enable children access quality education.

6. What is the name of the platform unveiled by the Prime Minister, as a part of taxation reform?

[A]  Honest Tax Payer Dashboard

[B] Transparent Taxation–Honoring the Honest

[C] Faceless assessment Yojana

[D] PM Transparency

 • The Indian Prime Minister Narendra Modi has launched a new platform “Transparent Taxation – Honoring the Honest”. The platform aims to ease the compliance and fast–track the refunds so that all honest taxpayers are benefitted. Three main features of the platform include faceless assessment, faceless appeal and tax payers’ charter.

7. Transiting Exoplanet Survey Satellite (TESS) is a satellite of which country’s space organisation?

[A] United States of America

[B] France

[C] Australia

[D] China

 • The United States’ NASA launched Transiting Exoplanet Survey Satellite (TESS) has completed its primary mission. During its 2–year long primary mission, the survey satellite has found 66 new exoplanets outside our solar system. TESS also found over 2000 objects which would be confirmed by astronomers soon. The extended mission of TESS is to be completed in 2022.

8. Which company is set to be the official sponsor of the Indian team for the Tokyo Olympics?

[A] INOX Group

[B] Byju’s

[C] PVR Cinema

[D] IndiGo

 • As per the recent announcement of the Indian Olympic Association (IOA), the INOX Group will be the official sponsor of the Indian team for the rescheduled Tokyo Olympics. Due to the prevalent COVID–19 pandemic, the Tokyo Olympics was rescheduled to next year, from July 23 to August 8 in 2021. The Group will also support the team’s promotions through its entertainment company – INOX Leisure Limited that owns a multiplex chain across the country.

9. As per a recent report, which Indian city has been ranked second cheapest city to rent in the world?

[A] Hyderabad

[B] Bengaluru

[C] Delhi

[D] Chennai

 • According to a new report by Purely Diamonds, Ho Chi Minh City, the largest city of Vietnam is the cheapest city to rent in the world. The report also revealed that New York is the most expensive city to rent, in the world. The Indian Capital, Delhi is the second cheapest city in the world. Delhi is followed by the capital of Tamil Nadu, Chennai. New York is followed by Los Angeles as the second most expensive city.

10. An Ayurveda based bio degradable face mask named “Pavitrapati” is developed by which organisation?

[A] Defence Research Development Organisation

[B] Indian Space Research Organisation

[C] Defence Institute of Advanced Technology

[D] Hindustan Aeronautics Limited

 • An Ayurveda Based Biodegradable Face Mask named “Pavitrapati” has been developed by Defence Institute of Advanced Technology, (DIAT) Pune. In this regard, an agreement was signed between DIAT Pune and a private company for mass development of the product. The company has now offered the face mask for sale. Similarly, the technology of developing anti–microbial body suit named “Aushada tara” is also transferred to the company.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *