TnpscTnpsc Current Affairs

20th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

20th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 20th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இந்தியா சமீபத்தில் அறிமுகப்படுத்திய சூப்பர்சோனிக் ஏவுகணை அடிப்படையிலான டார்பிடோ அமைப்பை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?

அ) DRDO 

ஆ) ISRO

இ) NSIL

ஈ) BHEL

 • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கிய சூப்பர்சோனிக் ஏவுகணை அடிப்படையிலா -ன டார்பிடோ அமைப்பை இந்தியா அறிமுகப்படுத்தியது. இந்த அடுத்த தலைமுறை ஏவுகணை அடிப்படையிலான ஸ்டாண்ட்ஆஃப் டார்பிடோ டெலிவரி சிஸ்டம், ஒடிஸாவில் உள்ள வீலர் தீவிலிருந்து ஏவப்பட்டது.

2. இணையஞ்சார்ந்த தளமான ‘VIHANGAM’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ) சுரங்கப் பணி 

ஆ) கலால் வரி

இ) ஜிஎஸ்டி வசூல்

ஈ) செமிகண்டக்டர் உற்பத்தி

 • மகாநதி நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் “Remotely Piloted Aircraft System” உடன் ஒருங்கிணைக்கப்பட்ட ‘VIHANGAM’ என்ற இணையதளம் திறக்கப்பட்டுள்ளது.
 • இந்த அமைப்பு சுரங்கப்பணிகளின் வான்வழி காணொளி -களை சுரங்கங்களிலிருந்து நேரலையாக இந்தத் தளத்திற்கு பரிமாறும். அதனை ‘VIHANGAM’ தளம்மூலம் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் அணுகலாம்.

3. The Indus Entrepreneurs (TiE) வழங்கும் ‘ஆண்டின் சிறந்த தொழில்முனைவோர் விருதை’ வென்றவர் யார்?

அ) ரத்தன் டாடா

ஆ) குமார் மங்கலம் பிர்லா 

இ) உதய் கோடக்

ஈ) ஆதி கோத்ரெஜ்

 • சிந்து தொழில்முனைவோர் (TiE) ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவை, COVID தொற்று நோய்களின்போது தலைமைதாங்கியதற்காக, ‘வணிக மாற்றத்தில் ஆண்டின் உலகளாவிய தொழில்முனைவோராக’ அறிவித்துள்ளது. இவ்விருதைப் பெறும் முதல் இந்திய தொழிலதிபர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
 • எலோன் மஸ்க் (ஆண்டின் உலகளாவிய தொழில்முனை வோர்-புலம்பெயர் தொழில்முனைவோர்), ஜெப் பெசோஸ் (ஆண்டின் உலகளாவிய தொழில்முனைவோர் – முதல் தலைமுறை) மற்றும் சத்யா நாதெல்லா (ஆண்டின் உலகளாவிய தொழில்முனைவோர் – தொழில்முனை
  -வோர் CEO) ஆகியோர் பிற விருதாளர்களாவர்.

4. COVID-19 நெருக்கடியைக் கையாளுவதற்காக ஏழை நாடுகளுக்கு உதவும் நோக்கில் $93 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகுப்பை அறிவித்த நிறுவனம் எது?

அ) ஏடிபி

ஆ) உலக வங்கி 

இ) IMF

ஈ) ஏஐஐபி

 • COVID தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்கவும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் ஏழை நாடுகளுக்கு உதவுவதற்காக, பன்னாட்டு வளர்ச்சி சங்கத்தின் $93 பில்லியன் டாலர் தொகுப்பை உலக வங்கி அறிவித்துள்ளது. இச்சமீபத்திய உறுதிமொழியில் 48 உயர் மற்றும் நடுத்தர வருமான நாடுகளின் மூல தனச் சந்தைகள், திருப்பிச் செலுத்துதல்கள் மற்றும் உலக வங்கியின் சொந்த பங்களிப்புகள் உள்ளிட்டவை சேர்ந்த $23.5 பில்லியன் பங்களிப்புகளும் அடங்கும்.

5. பாராலிம்பிக் விளையாட்டு விருதுகளில் ‘சிறந்த அறிமுக வீராங்கனை’ விருதை வென்ற அவனி லெகாராவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) டென்னிஸ்

ஆ) உயரந்தாண்டுதல்

இ) துப்பாக்கிச் சுடுதல் 

ஈ) டேபிள்-டென்னிஸ்

 • டோக்கியோ பாராலிம்பிக்ஸ் சாம்பியனான அவனி லெகாரா, 2021 பாராலிம்பிக் விளையாட்டு விருதுகளில் ‘சிறந்த அறிமுக வீராங்கனை’ விருதை வென்றார். செக் குடியரசின் போசியா வீரர் ஆடம் பெஸ்கா ‘சிறந்த அறிமுக வீரர்’ விருதை வென்றார்.
 • இந்திய துப்பாக்கி சுடுதல் பாரா விளையாட்டு வீராங்க
  -னை அவனி லெகாரா, இந்தியாவிலிருந்து பாராலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற முதல் பெண்மணி ஆவார். பாராலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

6. சமீபத்தில் பிலிப்பைன்ஸைத் தாக்கிய சூறாவளியின் பெயர் என்ன?

அ) ராய் 

ஆ) பாய்

இ) நோர்டே

ஈ) சியர்கோவ்

 • ‘ராய்’ எனப்பெயரிடப்பட்ட சூறாவளி அண்மையில் பிலிப்
  -பைன்ஸைத் தாக்கியது. 5ஆம் வகை புயலாக வேகமாக தீவிரமடைந்து தெற்கு பிலிப்பைன்ஸில் அது கரையைக் கடந்தது. இந்த ஆண்டில் பிலிப்பைன்ஸைத் தாக்கும் 15ஆவது புயல் ‘ராய்’ ஆகும். இது மணிக்கு 195 கிமீ (121 மைல்) வேகத்தில் பலத்தகாற்றுடன் சியார்கோவ் தீவைத் தாக்கியது. இந்த ஆண்டில் பிலிப்பைன்ஸைத் தாக்கிய இரண்டாவது சக்திவாய்ந்த சூறாவளி இதுவாகும்.

7. அதன் ‘Laser Communications Relay Demonstration’ அறிமுகப்படுத்திய விண்வெளி நிறுவனம் எது?

அ) ISRO

ஆ) NASA 

இ) JAXA

ஈ) ESA

 • டிச.7 அன்று, NASA தனது புதிய லேசர் கம்யூனிகேசன்ஸ் ரிலே டெமான்ஸ்ட்ரேஷனை (LCRD) அறிமுகப்படுத்தியது. கேப் கனாவெரல் விண்வெளிப்படை நிலையத்தின் முதல் லேசர் தகவல் தொடர்பு அமைப்பு இதுவாகும். LCRD ஆனது விண்வெளியில் ஒளியியல் தொடர்பைச் சோதிக்க NASAவுக்கு உதவும். தற்போது, பெரும்பாலான NASA விண்கலங்கள் தரவுகளை அனுப்புவதற்கு ரேடியோ அலைவரிசை தொடர்புகளைப் பயன்படுத்துகின்றன.

8. முதன்முறையாக 4.5 நாட்கள் கொண்ட அலுவல் வாரத்தை அறிவித்த நாடு எது?

அ) சுவீடன்

ஆ) ஆஸ்திரேலியா

இ) ஐக்கிய அரபு அமீரகம் 

ஈ) ஆஸ்திரியா

 • ஐக்கிய அரபு அமீரகமானது வெள்ளி மதியம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசாங்க ஊழியர்களுக்கு விடுப்பு அளித்து புதிய 4.5 நாட்கள் கொண்ட அலுவல் வாரத்தை அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது வெள்ளி-சனி வாரயிறுதியாக உள்ளது.
 • உலகளாவிய 5 நாள் அலுவல் வாரத்தைவிட குறைவான தேசிய அலுவல் வாரத்தை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடு ஐக்கிய அரபு அமீரகம் ஆகும்.

9. ‘She is a Changemaker’ என்னும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ள நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) தேசிய பெண்கள் ஆணையம் 

இ) இந்திய ரிசர்வ் வங்கி

ஈ) அறிவியல் & தொழிலக ஆய்வுக்கழகம்

 • தேசிய பெண்கள் ஆணையம் ‘She is a Changemaker’ என்ற திறன் மேம்பாட்டுத் திட்டத்தை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தியது. அனைத்து மட்டங்களிலும் (கிராமப் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை) மற்றும் அரசியல் பணியாற்றும் பெண் பிரதிநிதிகளுக்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
 • இது பெண் அரசியல் தலைமைகளின் தலைமைத்துவ திறன், முடிவெடுக்கும் திறன் மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

10. “சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாளை” ஏற்பாடு செய்கிற ஐநா அமைப்பு எது?

அ) UNCTAD

ஆ) UNDP 

இ) UNESCO

ஈ) UNICEF

 • “சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள்” ஒவ்வோர் ஆண்டும் டிச. 9 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது ஐநா வளர்ச்சித் திட்டத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
 • நீடித்த வளர்ச்சி இலக்குகளை நோக்கி முன்னேறுவதை தடுக்கும் ஊழலை ஒழிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஊழலுக்கு எதிரான ஐநா’இன் தீர்மானம் UNCAC, கடந்த 2003’இல் உருவாக்கப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வரலாற்று வெள்ளி வென்றார் ஸ்ரீகாந்த்: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவில் உச்சம் தொட்ட முதல் இந்தியர்!

ஸ்பெயின் நாட்டின் ஹூயெல்வா நகரில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவுப் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெள்ளி வென்றார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவு போட்டியின் இறுதிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற மகத்தான சரித்திரத்தைப் படைத்த ஸ்ரீகாந்த் கிடாம்பி போராடி தங்கப் பதக்கத்தைப் போராடி பறிகொடுத்தார்.

இருப்பினும், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவு போட்டியில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையுடன் அவர் தேசம் திரும்ப இருக்கிறார்.

45 நிமிடங்கள் நடந்த இறுதிப் போட்டி: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிக்கு நுழைந்த ஸ்ரீகாந்த், களத்தில் சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூவை எதிர்கொண்டார். சுமார் 45 நிமிடங்கள் இந்தப் போட்டி நீடித்தது. ஆரம்பம் முதலே லோ கியான் வூ ஆதிக்கம் செலுத்த முதல் செட் கிடாம்பிக்கு மிகவும் சவாலானதாக அமைந்தது. இரண்டாவது சுற்றில் சற்றே தாக்குப்பிடித்த கிடாம்பி போராடித் தோற்றார்.

இறுதியில் 21-15, 22-20 என்ற நேர் செட் கணக்கில் போராடித் தோற்றார் ஸ்ரீகாந்த் கிடாம்பி.

சக வீரரை வீழ்த்திய வேகம்: முன்னதாக, ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சக நாட்டவரான லக்‌ஷ்யா சென்னுடன் மோதினார். அந்தப் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி வரலாற்றுச் சாதனை படைத்தார். சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 12-வது இடத்தில் உள்ள கிடாம்பி சக வீரரான லக்‌ஷ்யா சென்னை 17-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர். 1 மணி நேரம் 9 நிமிடங்களில் அவர் வெற்றிக் கனியைப் பறித்துவிட்டார்.

இதன்மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற சரித்திர பெருமையைப் பெற்றார் ஸ்ரீகாந்த். இப்போது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெள்ளி வென்று சரித்தரித்தில் இன்னொரு மைல்கல்லையும் அவர் தொட்டுவிட்டார்.

அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

2. பயணிகள் வசதிக்காக 543 ரெயில் நிலையங்களில் வைஃபை வசதி

தெற்கு ரெயில்வே மண்டலத்தில் 543 முக்கிய ரயில் நிலையங்களில் Wi-fi வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ரெயில் பயணிகளுக்கு இணையதள சேவை வசதிகளை வழங்க ரயில் நிலையங்களில் வைஃபை அறிமுகப்படுத்த திட்டம் தீட்டி வருவதாகவும் இதன் மூலம் முதல் ½ மணிநேரத்திற்கு பயணிகள் இலவசமாக Wi-fi வசதியை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை – 135, திருச்சி – 105, சேலம் – 79, மதுரை – 95, பாலக்காடு – 59, திருவனந்தபுரம் – 70 என மொத்தம் 543 ரயில் நிலையங்களில் Wi-fi வசதி ஏற்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. தெற்கு ரயில்வே மண்டலத்தில் இதுவரை 5,087 கிமீ தூரத்துக்கு ஒளியிழை வட தொடர்பு அமைப்பு என்றும் கூறப்படுகிறது.

3. தேர்தல் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

ஒரே நபர் வெவ்வேறு இடங்களில் வாக்களிப்பதைத் தடுப்பதற்காக, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தல் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து பேசிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்த சட்டத்திருத்தம்மூலம், வாக்களிப்பதில் நடக்கும் முறைகேடு தடுக்கப்பட்டு, நாட்டில் தேர்தல் நியாயமாக நடப்பது உறுதிசெய்யப்படும் என தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்புவோரிடம் அவர்களின் ஆதார் எண்ணைத்தேர்தல் அதிகாரிகள் கேட்பதற்கு இந்த மசோதா அனுமதி அளிக்கிறது. மேலும், ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்திருந்தாலும் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், வெவ்வேறு தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் அல்லது அதே தொகுதியில் வெவ்வேறு இடங்களில் உள்ள வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும் ஆதார் எண்ணை அதிகாரிகள் கேட்க முடியும்.

அதேசமயம், ஆதார் எண்ணைத் தர இயலாத நிலையில் இருப்பவர்களை வாக்காளர்களாக சேர்த்துக்கொள்ள மறுக்கக் கூடாது என்றும் அந்த மசோதா கூறுகிறது. ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இருப்பவர்களின் பெயரையும் நீக்கக்கூடாது; அவர்கள் அடையாளச் சான்றாக வேறு ஏதேனும் ஓர் ஆவணத்தைச் சமர்ப்பிக்கலாம் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நபருக்கு பல்வேறு இடங்களில் வாக்குகள் இருப்பதைத் தடுப்பதற்காக, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கப்படுகிறது. அதற்காக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950-இன் 23-ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

தற்சமயம், ஜனவரி 1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு 18 வயதை அடைபவர்கள் புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்யலாம். அதன் பிறகு 18 வயதை அடைந்தால், அடுத்த ஜனவரி 1-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும். இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்.1 ஆகிய தேதிகளைத் தகுதிநாள்களாகக் கொண்டு வாக்காளர் பட்டியலைத் தயார் செய்யும் வகையில், ஆர்.பி. சட்டத்தின் 14-ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

தற்போதைய நிலையில், பணிசார்ந்து ராணுவ வீரர் வெளியூர் சென்றுவிட்டால் அவருக்குப் பதிலாக அவருடைய மனைவி வாக்களிக்க முடியும். ஆனால், பெண் ராணுவ அலுவலர் ஊரில் இல்லாவிட்டால் அவருடைய கணவரால் வாக்களிக்க முடியாது. எனவே, கணவரும் வாக்களிக்கும் வகையில், இதுதொடர்பான சட்டப்பிரிவில் ‘மனைவி’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘வாழ்க்கைத்துணைவர்’ என்ற சொல்லைச்சேர்ப்பதற்காக ஆர் பி சட்டம், 1950-இன் 20-ஆவது பிரிவு, ஆர் பி சட்டம், 1951-இன் 60-ஆவது பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4. உலக பாட்மின்டன்: அகேன் எமகுச்சி, லோ கீன் யீவ் சாம்பியன்கள்; ஸ்ரீகாந்த்துக்கு வெள்ளி

WBA உலக பாட்மின்டன் போட்டியில் மகளிர் பிரிவில் ஜப்பானின் அகேன் எமகுச்சியும், ஆடவர் பிரிவில் சிங்கப்பூரின் லோ கீன் யீவும் சாம்பியன் பட்டம் வென்றனர். இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த்-லோ கீன் யீவ் மோதினர். இளம் வீரரான லோ கீன் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடினார். முதல் கேமில் ஸ்ரீகாந்த் 9-3 என முன்னிலை பெற்ற நிலையில், லோ கீன் தொடர்ந்து புள்ளிகளை குவித்தார். முதல் கேமை 21-15 என கைப்பற்றிய லோ கீன், இரண்டாவது கேமில் ஸ்ரீகாந்த்தின் கடும் சவாலை எதிர்கொள்ள நேரிட்டது.

14-14, 20-20 என ஸ்கோர் சமநிலை ஏற்பட்டாலும், 2வது கேமில் 22-20 என வென்ற லோ கீன் முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.

ஸ்ரீகாந்த்துக்கு வெள்ளி:

கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார். உலக பாட்மின்டன் போட்டி ஆடவர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பையும் பெற்றார் அவர். ஏற்கெனவே 1983-இல் பிரகாஷ் பதுகோன், 2019-இல் பிரணாய் ஆகியோர் வெண்கலம் வென்றிருந்தனர்.

1. Which institution has developed the supersonic missile assisted torpedo system, recently launched by India?

A) DRDO 

B) ISRO

C) NSIL

D) BHEL

 • India launched the supersonic missile assisted torpedo system developed by Defence Research and Development Organisation (DRDO). The next–generation missile–based standoff torpedo delivery system was launched from Wheeler Island in Odisha, from a ground mobile launcher.

2. VIHANGAM, an internet–based platform, is associated with which field?

A) Mining 

B) Excise

C) GST collection

D) Semiconductor Manufacturing

 • An internet–based platform called ‘VIHANGAM’ integrated with a Remotely Piloted Aircraft System (RPAS) was inaugurated at Mahanadi Coalfields Limited (MCL). The system enables real–time transmission of aerial video of mining activities from mines to the platform which can be accessed through VIHANGAM portal by authorized personnel.

3. Who won the ‘Global Entrepreneur of the Year Award’ from The Indus Entrepreneurs (TiE)?

A) Ratan Tata

B) Kumar Mangalam Birla 

C) Uday Kotak

D) Adi Godrej

 • The Indus Entrepreneurs (TiE) has named Aditya Birla Group Chairman, Kumar Mangalam Birla, as the Global Entrepreneur of the Year in Business Transformation, for his leadership during the Covid–19 pandemic. He is also the first Indian industrialist to receive this award.
 • Other awardees are Elon Musk (Global Entrepreneur of the Year–Immigrant Entrepreneur), Jeff Bezos (Global Entrepreneur of the Year–First Generation) and Satya Nadella (Global Entrepreneur of the Year – Entrepreneurial CEO).

4. Which institution announced a $93 billion package, to help poor countries deal with Covid crisis?

A) ADB

B) World Bank 

C) IMF

D) AIIB

 • The World Bank has announced a $93 billion package of the International Development Association (IDA) to help the poor countries tackle Covid crisis and boost economic growth.
 • The latest pledge includes $23.5 billion of contributions from 48 high– and middle–income countries, raised in the capital markets, repayments, and the World Bank’s own contributions.

5. Avani Lekhara, who took the ‘Best Female Debut’ at Paralympic Sport Awards, is associated with which sports?

A) Tennis

B) High–Jump

C) Shooting 

D) Table–Tennis

 • Tokyo Paralympics champion Avani Lekhara won the ‘Best Female Debut’ award at the 2021 Paralympic Sport Awards. Czech Republic’s Boccia player Adam Peska won the Male Debut accolade. Indian shooting Para sport athlete Avani Lekhara became the first–ever female Paralympic gold medallist from India. She also became the first Indian female to win two medals in the Paralympics.

6. Which typhoon recently hit Philippines?

A) Rai 

B) Fai

C) Norte

D) Siargao

 • Typhoon Rai hit Philippines and rapidly intensified to a Category 5 storm and made landfall in the southern Philippines. Rai is the 15th typhoon to enter Philippines this year. It has hit the island of Siargao with sustained winds of up to 195 km (121 miles) per hour.
 • This is set to be the second–most powerful typhoon to strike the nation this year.

7. Which space agency launched its ‘Laser Communications Relay Demonstration (LCRD)’?

A) ISRO

B) NASA 

C) JAXA

D) ESA

 • On December 7, NASA launched its new Laser Communications Relay Demonstration (LCRD). It is the agency’s first–ever laser communications system from Cape Canaveral Space Force Station. The LCRD will help the NASA to test optical communication in space. At present, most NASA spacecraft use radio frequency communications to send data.

8. Which country is the first to announce a working week of 4.5 days?

A) Sweden

B) Australia

C) UAE 

D) Austria

 • The United Arab Emirates (UAE) announced its new working week of 4.5 days, with Friday afternoon, Saturday and Sunday forming the new weekend for government employees. The UAE currently has a Friday–Saturday weekend, which corresponds with other countries in the region. The UAE is the first nation in the world to introduce a national working week shorter than the global five–day week.

9. Which institution launched a capacity building programme, ‘She is a Changemaker’?

A) NITI Aayog

B) National Commission for Women 

C) Reserve Bank of India

D) Council of Science and Industrial Research

 • National Commission for Women (NCW) launched a pan–India capacity building programme, ‘She is a Changemaker’. The programme has been launched for women representatives at all levels, gram panchayats to parliament members and political workers. It aims to improve leadership skills, decision making and communication skills of women political leaders.

10. Which UN Body organises the “International Anti–Corruption Day”?

A) UNCTAD

B) UNDP 

C) UNESCO

D) UNICEF

 • The “International Anti–Corruption Day” is observed on December 9 every year, across the world. It is organised by the United Nations Development Program. The Day aims to raise awareness on the importance of getting rid of corruption, which prevents the progress towards sustainable development goals. The UNCAC United Nations Convention Against Corruption was drafted in 2003.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button