TnpscTnpsc Current Affairs

20th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

20th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 20th December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

20th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘ஐநா பல்லுயிர் மாநாடு – COP15’ஐ நடத்தும் நாடு எது?

அ. சீனா

ஆ. சுவீடன்

இ. கனடா

ஈ. ஆஸ்திரேலியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சுவீடன்

  • ஐக்கிய நாடுகளின் பல்லுயிர் மாநாடு அல்லது COP15 ஆனது கனடாவின் மாண்ட்ரீலில் ஏற்பாடு செய்யப்பட்டது. அடுத்த பத்தாண்டுகளில் இயற்கைக்கான புதிய இலக்குகளை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக இம்மாநாடு கூட்டப்படுகிறது. ஐநா பல்லுயிர் மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்தியோர், 2030ஆம் ஆண்டுக்குள் பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிப்பதற்காக $200 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவழிப்பதற்கான ஓர் உடன்பாட்டை எட்டினர்.

2. 2022ஆம் ஆண்டு FIFA உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற நாடு எது?

அ. பிரான்ஸ்

ஆ. அர்ஜென்டினா

இ. இங்கிலாந்து

ஈ. மொராக்கோ

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அர்ஜென்டினா

  • நடப்புச் சாம்பியனான பிரான்ஸை பெனால்டியில் 4–2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா 2022 – FIFA உலகக்கோப்பை சாம்பியன் ஆனது. FIFA உலகக்கோப்பையை 3ஆவது முறையாக அர்ஜென்டினா வென்றுள்ளது. பிரான்ஸ் அணிக்காக கைலியன் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்தார். அர்ஜென்டினா அணிக்காக அவ்வணியின் அணித்தலைவர் லியோனல் மெஸ்சி ஒரு கோலும், ஏஞ்சல் டி மரியா ஒரு கோலும் அடித்தனர்.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சேலா கணவாய் சுரங்கப்பாதை அமைந்துள்ள மாநிலம் எது?

அ. ஒடிஸா

ஆ. அருணாச்சல பிரதேசம்

இ. மேற்கு வங்கம்

ஈ. அஸ்ஸாம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அருணாச்சல பிரதேசம்

  • அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள சீன எல்லைக்கு அனைத்து வானிலைச் சூழலிலும் சாலைவழி இணைப்பை வழங்குவதற்காக, எல்லைப்புறச் சாலைகள் அமைப்பால் (BRO) சேலா கணவாய் சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. 13,000 அடி உயரத்தில் கட்டப்படும் இச்சுரங்கப்பாதை, தவாங் அருகேயுள்ள ஆதிக்க எல்லைக் கோட்டுக்கு செல்வதற்கான அணுகலை இந்திய இராணுவத்திற்கு வழங்கும்.

4. ‘ரைது பந்து’ என்பது கீழ்க்காணும் எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் முதன்மைத் திட்டமாகும்?

அ. கேரளா

ஆ. தெலுங்கானா

இ. கர்நாடகா

ஈ. ஒடிஸா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. தெலுங்கானா

  • தெலுங்கானா மாநிலத்தில், ‘ரைது பந்து’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரீப் மற்றும் இரபி பருவங்களுக்கு ஏக்கருக்கு `10,000 வீதம் இந்தத் திட்டத்தின்மூலம் விவசாயிகளுக்கு பயிர் முதலீடுகளை அரசாங்கம் வழங்குகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் சங்கராந்தி பண்டிகைக்கு முன்னதாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் `7,600 கோடியை மாநில அரசு வைப்பு வைக்கும்.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஊர்வசி சிங் என்பவருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. குத்துச்சண்டை

ஆ. ஹாக்கி

இ. ஸ்குவாஷ்

ஈ. பளு தூக்குதல்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. குத்துச்சண்டை

  • இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஊர்வசி சிங், தாய்லாந்தின் தேசிய சாம்பியனான தன்சனோக் பானனை வீழ்த்தி WBC இன்டர்நேஷனல் சூப்பர் பாண்டம்வெயிட் பட்டத்தை வென்றார். கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் அவர் WBC ஆசிய வெள்ளிக் கிரீடத்தையும் வென்றார். அவர் தற்போது உலக குத்துச்சண்டை கவுன்சில் ஆசிய கான்டினென்டல் மற்றும் சர்வதேச சாம்பியன் ஆவார்.

6. ‘உலக ஊதிய அறிக்கை 2022–2023’ஐ வெளியிட்ட நிறுவனம் எது?

அ. UNICEF

ஆ. ILO

இ. NITI ஆயோக்

ஈ. உலக வங்கி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ILO

  • ‘உலகளாவிய ஊதிய அறிக்கை 2022–2023’ என்ற தலைப்பிலான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் (ILO) ஓர் புதிய அறிக்கையின்படி, கடுமையான பணவீக்க நெருக்கடி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் உலகளாவிய மந்த நிலை ஆகியவை பல நாடுகளில் மாத ஊதியத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. இந்த மந்தநிலை உக்ரைனில் நடந்த போர் மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் ஒருபகுதியாக உள்ளது. இந்த அறிக்கையின்படி, இந்த நெருக்கடி நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் திறனைக் குறைத்து, குறைந்த வருவாய்கொண்ட குடும்பங்களைத் தாக்குகிறது.

7. ‘பராக் MX’ என்ற வான் பாதுகாப்பு அமைப்புடன் தொடர்புடைய நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. ரஷ்யா

இ. இஸ்ரேல்

ஈ. உக்ரைன்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இஸ்ரேல்

  • அதிநவீன சீர்வேக ஏவுகணைக்கு எதிராக நீண்டதூரம் இடைமறிக்கும் ஏவுகணையை இஸ்ரேலிய கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த LRAD ஏவுகணையானது பராக் MX பாதுகாப்பு அமைப்பின் ஒருபகுதியான இஸ்ரேலிய விண்வெளித் தொழிற்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவால் உருவாக்கப்பட்டதாகும். இது இந்தியாவின் பராக் 8 போன்றதாகும்.

8. உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக அனைத்து மகளிர் அமர்வு உருவாக்கப்பட்ட ஆண்டு எது?

அ. 1975

ஆ. 1985

இ. 1995

ஈ. 2013

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. 2013

  • கடந்த 2013ஆம் ஆண்டு, இந்திய உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக அனைத்துப் பெண்கள் அடங்கிய அமர்வு உருவாக்கப்பட்டது. அதில் நீதிபதிகள் கியான் சுதா மிஸ்ரா மற்றும் இரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் ஒன்றாக அமர்ந்தனர். இரண்டாவது முறையாக 2018ஆம் ஆண்டில் இவ்வாறு உருவாக்கப்பட்டது. அண்மையில், இந்திய தலைமை நீதிபதி DY சந்திரசூட், திருமண தகராறுகள் மற்றும் பிணை விவகாரங்கள் தொடர்பான இடமாற்ற மனுக்களை விசாரிக்க நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அனைத்து மகளிர் அமர்வை அமைத்துள்ளார். இந்திய உச்சநீதிமன்ற வரலாற்றில் அனைத்து மகளிர் அமர்வு அமைப்பது இது மூன்றாவது முறையாகும்.

9. எந்த நாட்டின்மீது விழுந்த விண்கல்லில் இரண்டு முற்றிலும் புதிய கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?

அ. எகிப்து

ஆ. சோமாலியா

இ. ஜப்பான்

ஈ. இந்தோனேசியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சோமாலியா

  • சோமாலியாவில் விழுந்த ஒரு பெரிய விண்கல்லில் முற்றிலும் புதிய இரு கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதிய கனிமங்களின் அதிகாரப்பூர்வ பெயர்கள் எலாலைட் மற்றும் எல்கிஸ்டன்டோனைட் ஆகும். சோமாலியாவில் உள்ள எல் அலி மாவட்டத்தில் இந்த விண்கல் தோண்டியெடுக்கப்பட்டதை, ‘எலாலைட்’ என்ற பெயர் குறிக்கிறது, மேலும், ‘எல்கின்ஸ்டன்டோனைட்’ நாசா நிபுணர் லிண்டி எல்கின்ஸ்–டாண்டனின் பெயரால் அழைக்கப்படுகிறது. மூன்றாவது அடையாளம் தெரியாத கனிமத்தை ஆல்பர்ட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர்.

10. ‘விஜய் ஹசாரே’ கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. கிரிக்கெட்

ஆ. ஹாக்கி

இ. டென்னிஸ்

ஈ. பூப்பந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. கிரிக்கெட்

  • அகமதாபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் சௌராஷ்டிரா அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மகாராஷ்டிராவை வீழ்த்தி, ‘விஜய் ஹசாரே’ கோப்பையை வென்றது. சௌராஷ்டிரா அணி வெல்லும் இரண்டாவது விஜய் ஹசாரே கோப்பை இதுவாகும். மகாராஷ்டிரா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 248 இரன்கள் எடுத்த நிலையில், சௌராஷ்டிரா அணி 21 பந்துகளில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பிரெஞ்சு கலாசாரத்தைப் பரப்பும் கலைஞருக்குச் ‘செவாலியர்’ விருது.

பிரெஞ்சு கலாசாரத்தைப் பரப்பும் பல்துறை கலைஞரும், அலையன்ஸ் பிரான்ஸிஸ் ஆப் மெட்ராஸ் அமைப்பின் தலைவருமான பிரவின் கண்ணூருக்கு செவாலியர் டெஸ் ஆர்ட்ஸ் எட் லெட்டர் டெக்கரேஷன் என்னும் விருதை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் எச் இ இம்மானுவேல் லெனைன் வழங்கினார். தமிழ்நாடு மற்றும் பிரான்ஸ் உடனான மொழி மற்றும் கலாச்சார உறவை பகிர்ந்துகொள்ளும் வகையில் அலையன்ஸ் பிரான்சிஸ் ஆப் மெட்ராஸ் என்னும் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

2. செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம்: சென்னை ஐஐடிக்கு கூகுள் `8 கோடி நிதியுதவி.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு கூகுள் நிறுவனம் சார்பில், சென்னை-ஐஐடிக்கு $1 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் `8.26 கோடி) நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

3. பல்லுயிர்ப் பாதுகாப்புக்கு $20,000 கோடி அமெரிக்க டாலர்.

பல்லுயிர்ப் பெருக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பாதுகாப்பதற்கான இலக்கை முப்பது சதவீதமாக அதிகரிக்கவும் 2030ஆம் ஆண்டுக்குள் $20,000 கோடி அமெரிக்க டாலர் நிதியைத் திரட்டவும் ஐநா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உலக அளவில் பல்லுயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இந்நிலையில், ஐநா பல்லுயிர்ப்பாதுகாப்பு அமைப்பின் 15ஆவது சர்வதேச மாநாடு கனடாவின் மான்ட்ரியால் நகரத்தில் நடைபெற்றது. அந்த அமைப்பில் இணைந்துள்ள 190க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

பல்லுயிர்ப்பெருக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த 17% நிலப்பகுதிகளும் 10 சதவீத கடல் பகுதிகளும் ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது 2030ஆம் ஆண்டுக்குள் 30 சதவீத நில மற்றும் கடல் பகுதிகளைக் காப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அதற்கான தீர்மானம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன.

மேலும், பல்லுயிர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 2030ஆம் ஆண்டுக்குள் $20,000 கோடி அமெரிக்க டாலரை நிதியாகத்திரட்டவும் தீர்மானத்தில் உறுதியேற்கப்பட்டுள்ளது. அந்நிதியைப் பலதரப்பிடமிருந்து திரட்ட உறுதியேற்க -ப்பட்டுள்ளது. பல்லுயிர்ப்பாதுகாப்பு அமைப்புமூலமாக நாடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத் திட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் தீர்மானத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஏழை நாடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியை 2025க்குள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் $2,000 கோடி அமெரிக்க டாலராக அதிகரிக்கவும், 2030க்குள் ஆண்டுக்கு 3,000 கோடி அமெரிக்க டாலராக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

20th December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which country is the host of the ‘UN Biodiversity Conference– COP15’?

A. China

B. Sweden

C. Canada

D. Australia

Answer & Explanation

Answer: B. Sweden

  • The United Nations Biodiversity Conference or COP15 was organised in Montreal, Canada. Governments from around the world are convened to agree to a new set of goals for nature over the next decade. The negotiators at a UN biodiversity conference reached an agreement, which seeks to spend USD 200 billion toward supporting biodiversity by 2030.

2. Which country is the FIFA World Cup champion in the year 2022?

A. France

B. Argentina

C. England

D. Morocco

Answer & Explanation

Answer: B. Argentina

  • Argentina became FIFA World Cup champion by beating the defending Champion France 4–2 in penalties. Argentina lifted the FIFA World Cup title for the third time. Kylian Mbappe scored a hat–trick for France, while Argentina captain Lionel Messi scored a brace and Angel di Maria netted one goal for Argentina.

3. Sela Pass tunnel, which was seen in the news, is located in which state?

A. Odisha

B. Arunachal Pradesh

C. West Bengal

D. Assam

Answer & Explanation

Answer: B. Arunachal Pradesh

  • The Sela Pass tunnel is being built by the Border Roads Organisation (BRO), to provide all–weather connectivity to China border in Arunachal Pradesh. The tunnel being built at a height of 13,000 feet, will give the Indian Army access to the Line of Actual Control (LAC) near Tawang.

4. ‘Rythu Bandhu’ is a flagship scheme of which Indian state/UT?

A. Kerala

B. Telangana

C. Karnataka

D. Odisha

Answer & Explanation

Answer: B. Telangana

  • ‘Rythu Bandhu’ scheme is being implemented by the state of Telangana. The government offers crop investments to farmers through this programme at a rate of ₹10,000 per acre for both the Kharif and rabi seasons. The State government would deposit ₹7,600 crore in the bank accounts of farmers, by January this year before the Sankranti festival.

5. Urvashi Singh, who was seen in the news, is associated with which sports?

A. Boxing

B. Hockey

C. Squash

D. Weight–lifting

Answer & Explanation

Answer: A. Boxing

  • Indian boxer Urvashi Singh beat Thailand’s national champion Thanchanok Phanan to clinch the WBC International Super Bantamweight title. The boxer also won the WBC Asia Silver crown in Colombo. She is now the World Boxing Council Asia Continental and International Champion.

6. Which institution released the ‘Global Wage Report 2022–2023’?

A. UNICEF

B. ILO

C. NITI Aayog

D. World Bank

Answer & Explanation

Answer: B. ILO

  • According to a new International Labour Organization (ILO) report titled ‘the Global Wage Report 2022–2023’, the severe inflationary crisis combined with a global slowdown in economic growth are causing a striking fall in real monthly wages in many countries. The slowdown is driven in part by the war in Ukraine and the global energy crisis. According to the report, the crisis is reducing the purchasing power of the middle classes and hitting low–income households.

7. ‘Barak MX’ Air Defence System is associated with which country?

A. USA

B. Russia

C. Israel

D. Ukraine

Answer & Explanation

Answer: C. Israel

  • The Israeli Navy conducted a successful test of a long–range interceptor missile against an advanced cruise missile. The LRAD missile, part of the Barak MX defense system, is developed by the Israeli Aerospace Industries and the Defense Ministry’s research and development division. It is similar to India’s Barak 8.

8. In which year, an all–women bench has been constituted for the first time in the Supreme Court?

A. 1975

B. 1985

C. 1995

D. 2013

Answer & Explanation

Answer: D. 2013

  • In 2013, the Supreme Court had an all–woman bench for the first time, when Justices Gyan Sudha Misra and Ranjana Prakash Desai sat together. The second occasion came in 2018. Recently, Chief Justice of India D.Y. Chandrachud has constituted an all–women bench comprising Justices Hima Kohli and Bela M. Trivedi to hear transfer petitions involving matrimonial disputes and bail matters. This is the third occasion in the history of the apex court of an all–women bench.

9. Two entirely new minerals have been found in a meteorite that fell on which country?

A. Egypt

B. Somalia

C. Japan

D. Indonesia

Answer & Explanation

Answer: B. Somalia

  • Two entirely new minerals have been found in a huge meteorite that fell on Somalia. The official names for the new minerals are elaliite and elkinstantonite. The name ‘elaliite’ marks the fact that the meteorite was unearthed in the district of El Ali in Somalia, and ‘elkinstantonite’ is named after the NASA expert Lindy Elkins–Tanton. A third unidentified mineral, is being analysed by the University of Alberta researchers.

10. ‘Vijay Hazare’ Trophy is related with which sports?

A. Cricket

B. Hockey

C. Tennis

D. Badminton

Answer & Explanation

Answer: A. Cricket

  • Saurashtra team beat Maharashtra by 5 wickets in the final to win the Vijay Hazare Trophy in Ahmedabad. This is Saurashtra’s second Vijay Hazare Trophy triumph. Maharashtra scored 248 runs for the loss of 9 wickets in 50 overs, while Saurashtra reached the target with 21 balls to spare losing five wickets.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!