Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

20th February 2020 Current Affairs in Tamil & English

20th February 2020 Current Affairs in Tamil & English

20th February 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

20th February 2020 Current Affairs in Tamil

20th February 2020 Current Affairs in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய கடற்படைக்கு, கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் & பொறியியலாளர்கள் வழங்கிய நான்காவது போர்க்கப்பலின் பெயர் என்ன?

அ. INS கில்டன்

ஆ. INS காமோர்தா

இ. INS கதமத்

ஈ. INS கவரட்டி

  • கொல்கத்தாவைச்சேர்ந்த இராணுவ பொதுத்துறை நிறுவனமான கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் & பொறியியலாளர்கள் நிறுவனத்தால் கட்டப்பட்ட, அதிநவீன வசதிகள்கொண்ட, நீர்மூழ்கிக்கப்பலால் தகர்க்க முடியாத, பிற கப்பல்களால் கண்டறியமுடியாத INS கவரட்டி என்னும் போர்க்கப்பலானது இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • ‘திட்டம் 28’இன்கீழ் இந்நிறுவனம் ஒப்படைத்துள்ள 4ஆவது போர்க்கப்பலாகும் இது. INS காமோர்தா, INS கதமத் மற்றும் INS கில்டன் ஆகிய மூன்றும் முன்னர் வழங்கப்பட்ட பிற 3 போர்க்கப்பல்களாகும். கார்பன்-பைபர் கலப்புப்பொருட்களால் ஆன, ஒரு மீகட்டமைப்பைக்கொண்ட இந்தியாவின் முதல் இரு பெரிய போர்க்கப்பல்களாக கவரட்டியும் கில்டனும் உள்ளன.

2. ‘நீடித்த வளர்ச்சிக்கு நீலப்பொருளாதாரம் குறித்த பணிக்குழு’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான ஒத்துழைப்பு ஆகும்?

அ. சுவிச்சர்லாந்து

ஆ. நார்வே

இ. சுவீடன்

ஈ. பிரான்ஸ்

  • “நீடித்த வளர்ச்சிக்கு நீலப்பொருளாதாரம் குறித்த இந்தியா-நார்வே பணிக்குழு”வானது அண்மையில் இந்தியாவின் புவி அறிவியல் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் நார்வேயின் காலநிலை & சுற்றுச்சூழல் அமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டது. இருநாடுகளும், “ஒருங்கிணைந்த பெருங்கடல் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி” ஒத்துழைப்புக்கான புதிய கட்டமைப்பைத் தொடங்கியுள்ளன. இந்தியா மற்றும் நார்வேவின் பிரதமரால் கூட்டாக, கடந்த 2019 ஜனவரியில் இப்பணிக்குழு அறிமுகப்படுத்தப்பட்டது.

3. ‘பெர்லினேல்’ என்பது ஜெர்மனியில் தொடங்கப்படவுள்ள எந்தப் புகழ்பெற்ற திருவிழாவின் 70ஆவது பதிப்பாகும்?

அ. பெர்லின் உணவுத்திருவிழா

ஆ. பெர்லின் திரைப்படத் திருவிழா

இ. பெர்லின் பாதுகாப்புக் கண்காட்சி

ஈ. பெர்லின் கலைக் கண்காட்சி

  • ‘பெர்லினேல்’ என்பது புகழ்பெற்ற பெர்லின் திரைப்பட விழாவின் 70ஆவது பதிப்பாகும். இந்த ஆண்டு பிப்.20 முதல் மார்ச்.1 வரை இத்திருவிழா நடைபெறவுள்ளது. இந்திய தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய தொழிற்துறை கூட்டமைப்புடன் இணைந்து இவ்விழாவில் பங்கேற்கிறது.
  • இவ்விழாவில் இடம்பெற்றுள்ள இந்திய அரங்கை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் S ஜெய்சங்கர் திறந்துவைப்பார். இந்தச்சர்வதேச நிகழ்வில் திரையிடுவதற்கென மூன்று இந்திய திரைப்படங்களும் ஒரு குறு-ஆவணப்படமும் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.

4. மருத்துவமனைகளை நவீனமயமாக்குவதற்காக, அண்மையில், ‘நாடு-நேடு’ என்றவொரு திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. தெலுங்கானா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. கர்நாடகம்

  • மருத்துவமனைகளை நவீனமயமாக்குவதற்காக, ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் Y S ஜெகன் மோகன் ரெட்டி, அண்மையில், ‘நாடு-நேடு’ என்ற திட்டத்தை தொடங்கினார். இந்தத்திட்டத்தின்கீழ், மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளும், மூன்று ஆண்டுகளில், `15337 கோடி அரசாங்க நிதியுதவியுடன் நவீனப்படுத்தப்படவுள்ளன.
  • அனைத்து அரசு மருத்துவமனைகளும் நாட்டின் மிகவுயர்ந்த இந்திய பொது சுகாதார தரநிலைகளுக்கு இணையாக மேம்படுத்தப்படவுள்ளன.

5. 2021ஆம் ஆண்டுக்கான ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பையை நடத்தவுள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. அர்ஜென்டினா

இ. பிரான்ஸ்

ஈ. பிரேசில்

  • 2021ஆம் ஆண்டுக்கான ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பையை இந்தியா நடத்தும் என்று சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அண்மையில் அறிவித்தது. ஜூனியர் மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை நிகழ்வானது தென்னாப்பிரிக்காவின் போட்செப்ஸ்ட்ரூமில் நடைபெறும். இதுபோன்ற ஒரு நிகழ்வை ஆப்பிரிக்க கண்டம் ஏற்பாடு செய்வது இதுவே முதல்முறையாகும். கண்டங்களுக்கு இடையேயான தகுதிப்போட்டிகள் இந்த ஆண்டு (2020) முழுவதும் திட்டமிடப்பட்டபடி நடத்தப்பட்டு, 2021ஆம் ஆண்டின் இறுதியில் உலகக்கோப்பை நடைபெறும்.

6. முதலமைச்சர் பயிற்சி மேம்பாட்டுத்திட்டம் மற்றும் யுவா உதயமிதா விகாஸ் அபியான் ஆகிய இரண்டும் எந்த மாநில அரசின் திட்டங்களாகும்?

அ. ஒடிசா

ஆ. மத்திய பிரதேசம்

இ. உத்தர பிரதேசம்

ஈ. பஞ்சாப்

  • உத்தரபிரதேச மாநில அரசு தனது பட்ஜெட் அறிவிப்பின்போது இரண்டு புதிய திட்டங்களை அறிவித்தது. அறிவிக்கப்பட்ட, “முதலமைச்சர் பயிற்சி மேம்பாட்டுத்திட்டத்தின்”கீழ், MSME அலகுகளில் உள்ள மாநில இளைஞர்களுக்கு பயிற்சியுடன்கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படும். இந்தப்பயிற்சியின்போது உதவித் தொகையும் வழங்கப்படவுள்ளது.
  • உபி திறன் மேம்பாட்டு திட்டத்தின் பல்வேறு பயிற்சித்திட்டங்களின்கீழ், 2 இலட்சம் இளையோருக்கு பயிற்சியளிப்பதற்காக, யுவா உதயமிதா விகாஸ் அபியான் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இவ்விரு திட்டங்களுக்கும் முறையே `100 கோடி மற்றும் `50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

7. பாதுகாப்பு ஆய்வுகள் & பகுப்பாய்வு நிறுவனம் (IDSA), எந்த முன்னாள் மத்திய அமைச்சரின் பெயரால் வழங்கப்படவுள்ளது?

அ. அருண் ஜெட்லி

ஆ. சுஷ்மா ஸ்வராஜ்

இ. மனோகர் பாரிக்கர்

ஈ. ஜார்ஜ் பெர்னாண்டஸ்

  • தில்லியில் உள்ள அரசாங்க மதியுரையகமான பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தை (IDSA), “மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம்” எனப்பெயர் மாற்றி மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், கோவா முன்னாள் முதலமைச்சருமான மனோகர் பாரிக்கரின் சேவையைப்பாராட்டும் வகையில் அவரின் பெயர் ஆய்வு மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்துக்கு வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • கடந்த 1965ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட IDSA நிறுவனம், பாதுகாப்புத்துறை தொடர்பான ஆய்வுகள், படிப்புகள் ஆகியவற்றைப் போதிக்கும் நிறுவனமாகும்.

8. ‘State of India’s Birds அறிக்கை 2020’இன்படி, எந்தப் பறவையினத்தின் எண்ணிக்கை பேரளவில் அதிகரித்துள்ளது?

அ. இந்திய மயில்

ஆ. கானமயில்

இ. தீக்கோழி

ஈ. வான்கோழி

  • புலம்பெயரும் பறவைகள் வனவிலங்கு பாதுகாப்பு சார்பாக குஜராத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச மாநாட்டில் “இந்திய பறவைகள் 2020” என்ற ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி, சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை நிலையானதாக உள்ளது. மொத்தம் 867 இந்தியப்பறவையினங்களின் இருப்பை மதிப்பிடுகையில் தற்போதைய நிலவரப்படி 79% சரிவு ஏற்பட்டுள்ளது.
  • 101 உயிரினங்கள் ‘உயர் பாதுகாப்பு’ அளிக்கப்படவேண்டிய நிலையில் உள்ளன. இந்திய மயிலின் எண்ணிக்கை மிகுதியாகவே அதிகரித்துள்ளது.

9. புவிசார் குறியீடுடைய கைவினைப் பொருட்களை பிரபலப்படுத்துவதற்காக, மத்திய ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்த கண்காட்சியின் பெயர் என்ன?

அ. ஷில்ப் மேளா

ஆ. கலா மேளா

இ. ஷில்ப் கும்பம்

ஈ. கலா கும்பம்

  • மேம்பாட்டு ஆணையர் (கைவினைப்பொருட்கள்) அலுவலகத்தின்மூலம் புவிசார் குறியீடுடைய (GI tag) கைவினைப் பொருட்களை பிரபலப்படுத்துவதற்காக, ‘கலா கும்பம்’ என்ற கைவினைக் கண்காட்சியை ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. அண்மையில், பெங்களூரு மற்றும் மும்பையில், ‘கலா கும்பம்’ கண்காட்சி திறக்கப்பட்டது. இது, அடுத்த மாதம் கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பிற முக்கிய இந்திய நகரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • கைவினைப்பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டுக்கவுன்சில் இந்தக் கண்காட்சிகளுக்கு நிதியுதவி செய்து வருகிறது. கடந்த 2019 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, நாடு முழுவதுமிருந்து மொத்தம் 178 புவிசார் குறியீடுடைய கைவினைப்பொருட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

10. அண்மையில் காலமான கிஷோரி பல்லால், எந்த மொழிசார்ந்த நடிகராக இருந்தார்?

அ. தெலுங்கு

ஆ. கன்னடம்

இ. உருது

ஈ. பஞ்சாபி

  • மூத்த கன்னட நடிகரான கிஷோரி பல்லால், அண்மையில் தனது 82ஆம் வயதில் காலமானார். ‘சுவதேஸ்’ என்ற படத்தில் ‘காவேரியம்மா’ என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக அவர் அறியப்படுகிறார். 1960ஆம் ஆண்டில், ‘இவலந்தா ஹெந்ததி’ திரைப்படத்தில் அறிமுகமான இவர், பல்வேறு இந்திய மொழிகளில், 75’க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!