TnpscTnpsc Current Affairs

20th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

20th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 20th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சமீப செய்திகளில் இடம்பெற்ற PARAKH என்பது எந்தத் துறையுடன் தொடர்புடைய இணையதளமாகும்?

அ) மாணவர் கற்றல் மதிப்பீடு 

ஆ) பாதுகாப்பு கொள்முதல்

இ) முதலீட்டு ஆலோசனை

ஈ) சுங்க அனுமதி

 • தேசிய கல்விக்கொள்கையானது PARAKH (Performance Assessment, Review, மற்றும் Analysis of Knowledge for Holistic Development) என்ற தேசிய மதிப்பீட்டு மையத்தை அறிமுகப்படுத்தியது.
 • அண்மையில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலானது (AICTE) இதற்கான இணையதளத்தை தொடங்கியது. இது உயர்கல்வி மற்றும் பள்ளி பயிலும் மாணவர்கள் குறித்த மதிப்பீடுகளை மேற்கொள்ளும்.

2. போபாலில் உள்ள வான் விகார் தேசியப்பூங்கா மற்றும் உயிரியல் பூங்காவின் குலாபோ சமீபத்தில் காலமானது. அது ஒரு ____?

அ) ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம்

ஆ) தேன் கரடி 

இ) வங்கப்புலி

ஈ) இராட்சத ஆமை

 • இந்தியாவின் வயதான தேன் கரடி ‘குலாபோ’, போபாலில் உள்ள வான் விகார் தேசியப் பூங்கா மற்றும் உயிரியல் பூங்காவில் தனது 40ஆம் வயதில் இறந்தது. இந்தப் பெண் கரடி, கடந்த 2006ஆம் ஆண்டு தனது 25 வயதில் தெருக் கலைஞரிடமிருந்து மீட்கப்பட்டது.
 • மூப்புகாரணமாக உள்ளுறுப்புகள் செயலிழந்ததே தேன் கரடியின் இறப்புக்குக்காரணம் என உடற்கூறு பரிசோதனைமூலம் தெரியவந்தது.

3. ‘செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்’ அமைந்து உள்ள நகரம் எது?

அ) மதுரை

ஆ) சென்னை 

இ) கோயம்புத்தூர்

ஈ) திருச்சிராப்பள்ளி

 • சென்னை நகரத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள பெரும்பாக்கத்தில் ‘செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவ -னத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இது முன்னர் ‘செம்மொழித் தமிழுக்கா -ன சிறப்பு மையம்’ என அறியப்பட்டது.
 • இது நடுவண் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது 2006 முதல் 2008 வரை மைசூருவில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வந்தது.

4. மூன்றாவது தேசிய நீர் விருதுகள்-2020’இல் ‘சிறந்த மாநிலப்’ பிரிவில் முதல் பரிசை வென்ற மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) உத்தர பிரதேசம் 

இ) குஜராத்

ஈ) மகாராஷ்டிரா

 • மூன்றாவது தேசிய நீர் விருதுகள்-2020’இல் ‘சிறந்த மாநிலப் பிரிவில்’ உத்தர பிரதேச மாநிலத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு உள்ளது. நீர்வளங்கள், ஆற்று மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிர் துறை, ஜல் சக்தி அமைச்சகம் ஆகியவை மாநிலங்கள், நிறுவனங்கள், தனிநபர்கள் போன்றவற்றுக்கு 11 வெவ்வேறு பிரிவுகளில் 57 விருதுகளை வழங்குகிறது.
 • நீர் மேலாண்மையில் முழுமையான அணுகுமுறையை கடைப்பிடிக்க அது அவற்றை ஊக்குவிக்கிறது. மேலும் சிறந்த நீர் பயன்பாட்டு நடைமுறைகளை பின்பற்ற மக்களை அது ஊக்குவிக்கிறது.

5. `2,000 கோடி மதிப்பிலான பால் பண்ணை கூட்டு நிறுவனத்தை உருவாக்க, ‘தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்துடன்’ ஒப்பந்தம் செய்துள்ள மாநிலம் எது?

அ) பஞ்சாப்

ஆ) அஸ்ஸாம் 

இ) குஜராத்

ஈ) அருணாச்சல பிரதேசம்

 • அஸ்ஸாம் அரசும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியமும் மாநிலத்தில் இத்துறையின் முழுமையான வளர்ச்சிக்காக `2,000 கோடி மதிப்பிலான கூட்டு நிறுவனத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
 • இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, 7 ஆண்டுகளில் ஆறு புதிய அலகுகளில் இருந்து 10 இலட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் நோக்குடன் `2,000 கோடியில் ஒரு கூட்டு நிறுவனம் அமைக்கப்படும். உலக வங்கியின் நிதியுதவி உடன் கூடிய, ‘அஸ்ஸாம் வேளாண் வணிகம் மற்றும் கிராமப்புற போக்குவரத்துத் திட்டத்தின்’கீழ் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

6. NSO’இன் முதல் முன்கூட்டிய உத்தேச மதிப்பீடுகளின்படி, 2021-22 நிதியாண்டிற்கான GDP வளர்ச்சி என்னவாக இருக்கும்?

அ) 8.5%

ஆ) 9.2% 

இ) 10%

ஈ) 11.5%

 • தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) 2021-2022ஆம் நிதியாண்டிற்கான ஆண்டு வருமானத்தின் முன்கூட்டிய உத்தேச மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. 2021-2022ம் ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2020-2021’ம் ஆண்டில் இது 7.3 சதவீதமாக இருந்தது.
 • மதிப்பீடுகளின்படி, இந்தியப்பொருளாதாரம் உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் பெரிய பொருளாதாரமாக அதன் நிலையை மீண்டும் பெறுவதற்கான பாதையில் உள்ளது. 9.5% வளர்ச்சி இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கியும் கணித்துள்ளது.

7. எந்த ஆண்டில், முதல் ஸ்டார்ட்-அப் இந்தியா ‘புத்தாக்க வாரம்’ தொடங்கப்பட்டது?

அ) 2015

ஆ) 2017

இ) 2019

ஈ) 2021 

 • இந்திய அரசாங்கம், 2021 ஜன.10 அன்று முதல் ஸ்டார்ட் அப் இந்தியா ‘புத்தாக்க வாரத்தை’ ஏற்பாடு செய்தது. இது புத்தாக்கங்களை ஊக்குவிக்கும் நோக்கிற்காக துளிர் நிறுவல்கள், தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள், அடைவுகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒரே தளத்தின் கீழ் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • தொழிலக & உள்நாட்டு வணிக மேம்பாட்டுத்துறை (DPIIT) இந்தப் புத்தாக்கக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தது.

8. கடவுச்சீட்டு சேவை திட்டம் 2.0’க்கான சேவை வழங்கு -நராக உள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?

அ) டெக் மஹிந்திரா

ஆ) TCS 

இ) அக்செஞ்சர்

ஈ) விப்ரோ

 • பாஸ்போர்ட் சேவா திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தை வெளியுறவு அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.
 • 2008’இல் அறிமுகப்படுத்தப்பட்ட இதன் முதல் கட்டத்தை டிசிஎஸ் வெற்றிகரமாக செயல்படுத்தியது. கடவுச்சீட்டு தொடர்பான சேவைகளை வழங்குவதை மேம்படுத்துதல், செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்குதல், காலக்கோட் -டை விரைவாகக் கண்காணித்தல் மற்றும் வெளிப்படை -த்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமா -கக் கொண்டதாகும் இது.

9. தேர்தல் ஆணையத்தின் அண்மைய அறிவிப்பின்படி, மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் செலவு உச்சவரம்பு என்ன?

அ) `95 இலட்சம் 

ஆ) `75 இலட்சம்

இ) `60 இலட்சம்

ஈ) `50 இலட்சம்

 • மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களுக்கான செலவு உச்சவரம்பை `70 இலட்சத்தில் இருந்து `95 இலட்சமாக உயர்த்தி தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 • தேர்தல் ஆணையம் செலவு காரணிகள் மற்றும் பிற சிக்கல்கள் குறித்து ஆய்வுசெய்ய ஒரு குழுவை அமைத்தது. சட்டமன்றத் தேர்தல்களுக்கு, வேட்பாளர்களுக்கான திருத்தப்பட்ட செலவின வரம்பு பெரிய மாநிலங்களுக்கு `40 இலட்சமாக உள்ளது. இது முன்னர் `28 இலட்சமாக இருந்தது. சிறு மாநில வேட்பாளர்களுக்கான வரம்பு `20 இலட்சத்திலிருந்து `28 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

10. இந்தியாவின் முதல் பல பரிமாண ‘சாகச விளையாட்டுப் பயணம்’ நடத்தப்பட்ட நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) பிரான்ஸ் 

இ) சுவிட்சர்லாந்து

ஈ) ஆஸ்திரேலியா

 • இந்தியாவின் முதல் பல பரிமாண ‘சாகச விளையாட்டுப் பயணம்’ 2021 அக்.27 அன்று தொடங்கப்பட்டது. இது பிரான்ஸில் உள்ள தேசிய மலையேற்ற மற்றும் அதனைச் சார்ந்த விளையாட்டுப் பயிற்சி நிறுவனத்தால் (NIMAS) நடத்தப்பட்டது. சமீபத்தில், பிரான்ஸ் நாட்டில் நடத்திய, சாகச விளையாட்டுப் பயணத்தில் பங்கேற்றுத் திரும்பிய, இந்தியாவின் முதலாவது பல-பரிமாணக் குழுவை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.
 • இந்தக் குழுவினர், ஆல்ப்ஸ் மலைத்தொடரில், பிரான்ஸ், சுவிசர்லாந்து மற்றும் இத்தாலி நாடுகளில், 250 கிமீக்கும் அதிக தொலைவுக்கு, குளிர்கால மலையேற்றத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக, ஆல்ப்ஸ் மலைத் தொடரிலிருந்து இங்கிலீஷ் கால்வாய் வரை 975 கிமீட்டர் தொலைவுக்கு உடலை நடுங்கவைக்கும் குளிரில், சராசரியாக, ஒரு நாளைக்கு 09-10 மணி நேரம் என்ற அளவிற்கு மிதிவண்டி பயணத்தையும் மேற்கொண்டனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையில் `1500 கோடி முதலீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையில் `1500 கோடி முதலீட்டுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

சுமார் 10,200 பணி-வருடங்கள் வேலைவாய்ப்பு உருவா -க்கத்திற்கும், வருடத்திற்கு சுமார் 7.49 மில்லியன் டன் கரியமில வாயு உமிழ்வைக் குறைக்கவும் இந்த முதலீடு உதவும்.

இந்திய அரசு கூடுதலாக `1500 கோடி முதலீடு செய்வதன் காரணமாக இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை கீழ்காணும் பலன்களை பெறும்:

1. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு `12000 கோடி கடன் வழங்க முடியும், இதன்மூலம் 3500-4000 மெகாவாட் கூடுதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனுக்கான கடன் தேவை நிறைவு செய்யப்படும்.

2. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்திய அரசின் இலக்குகளை எட்டுவதற்கு பங்காற்றும் வகையில் அந்தத் துறையின் நிகர மதிப்பை அதிகரித்து கூடுதல் புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி திட்டங்களுக்கு கூடுதல் நிதிவசதி ஏற்படும்.

3. கடன் வழங்கும் மற்றும் கடன் பெறும் செயல்களுக்கு வசதியளிக்கும் வகையில், மூலதனத்தையும் ஆபத்தையும் சரிபார்த்து மதிப்பீடுசெய்த சொத்து விகிதாச்சாரம் மேம்படும்.

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ‘மினி இரத்னா’ (வகை-1) நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு எ எனத் தனியாக, வங்கி அல்லாத நிதி நிறுவனமாக, 1987’இல் உருவாக்கப்பட்டது.

34 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்நுட்ப-வணிக நிபுணத்துவம் கொண்ட இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களு -க்கான நிதியளிப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

2. ஜன.19 – தேசிய பேரிடர் மீட்புப் படை நாள்

3. ஜன. 27இல் இந்தியா-மத்திய ஆசியா மாநாடு

இந்தியா – மத்திய ஆசிய நாடுகளிடையேயான மாநாடு முதல் முறையாக வரும் ஜனவரி 27-இல் காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிசுதான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 நாடுகளின் அதிபர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா- மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள் அளவில் நடைபெறும் முதல் மாநாடு இதுவே ஆகும்.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:

இந்தியா – மத்திய ஆசியா பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக அதன் வெளியுறவு அமைச்சர்கள் நிலையிலான 3ஆம் கட்ட சந்திப்பு, கடந்த டிசம்பர்.18 முதல் 20ஆம் தேதி வரை தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் இந்தியா- மத்திய ஆசிய நாடுகள் இடையிலான நட்புறவுக்கு உத்வேகம் அளித்தது.

ஆப்கானிஸ்தான் விவகாரம் மீதான பிராந்திய பாதுகாப்புப் பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு நவம்பர்.10’இல் தில்லியில் நடைபெற்றது. இதில், மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலர்கள் பங்கேற்றது. ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பொதுவான பிராந்திய அணுகுமுறையை வெளிப்படுத்தியது.

இந்தியா – மத்திய ஆசிய நாடுகளின் முதல் மாநாட்டில் இருதரப்பு உறவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வதற்கான உத்திகள் குறித்து தலைவர்கள் விவாதிப் -பர். மேலும், பிராந்திய பாதுகாப்புச் சூழல், சர்வதேச பிரச் -னைகள் குறித்து தலைவர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வர் என அதில் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

4. இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இதுவரை ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 14ஆவது ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கும் சானியா மிர்சா 19 வருடங்களாக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் முதல் சுற்றில் கலந்துகொண்டார் சானியா மிர்சா. பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா – உக்ரைனின் நாடியா கிச்னோக் இணை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி – ஸ்டோர்ம் சான்டெர்ஸ் ஜோடியுடன் மோதியது. இதில் சானியா மிர்சா ஜோடி தோல்வி அடைந்தது.

இதைத்தொடர்ந்து சானியா மிர்சா டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

5. `2.3 கோடியில் செல்லம்மாள் பாரதி மையம் – சபாநாயகர் மு அப்பாவு அடிக்கல் நாட்டினார்.

கடையத்தில் `2.3 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள செல்லம்மாள் பாரதி மையத்திற்கு சபாநாயகர் மு அப்பாவு அடிக்கல் நாட்டினார்.

6. முன்னாள் நீதியரசர் சி டி செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

காவலர் – பொதுமக்கள் நல்லுறவு மேம்படவும், காவலர் நலன் காத்திடவும் முன்னாள் நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையிலான புதிய காவல் ஆணையத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “காவலர் – பொதுமக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களுக் -கு நலத்திட்டங்களைச் செயல்படுத்திடவும், புதிய பயிற்சி முறைகளைப் பரிந்துரைத்திடவும் சென்னை உயர் நீதி மன்ற முன்னாள் நீதியரசர் சி டி செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்திட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த ஆணையம், காவலர்களின் நலன் மற்றும் காவல்துறையின் பல்வேறு அம்சங்களை விரிவாக ஆய்வு செய்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள் அரசுக்குத் தனது பரிந்துரைகளை அளிக்கும். காவல்துறையின் செயல்பாடுகளைச் சிறப்பாக மேம்படுத்துவதற்கும், இணையவழிக் குற்றங்களைத் தடுத்திடவும், சேவை வழங்குவதில் மனிதாபிமானத்துடன் கூடிய நட்புறவோடு பொதுமக்களை அணுகுவதற்கும், உரிய நடவடிக்கைகள் மூலமாகக் காவல்துறையினரின் சேவையை மேலும் வலுவூட்டுவதற்கும், இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் அமைந்திடும்” என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

7. கின்னஸ் உலக சாதனை படைத்த உலகின் வயதான மனிதர் 112 வயதில் காலமானார்

உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சாடர்னினோ டிலா ப்யூன்டே நேற்று முன்தினம் தனது 112ஆவது வயதில் காலமானார்.

ஸ்பெயின் நாட்டின் வடமேற்கில் உள்ள லியோன் நகரைச் சேர்ந்தவர் சாடர்னினோ டிலா ப்யூன்டே. இவரை உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது.

1. PARAKH, which was seen in the news recently, is a portal associated with which field?

A) Student Learning Assessment 

B) Defence Acquisition

C) Investment Advice

D) Customs Clearance

 • The National Education Policy introduced a national assessment centre named PARAKH (Performance Assessment, Review, and Analysis of Knowledge for Holistic Development). Recently, the All–India Council for Technical Education (AICTE) launched a portal of Student Learning Assessment (PARAKH), which will conduct assessments of students and faculty members of higher educational institutes and schools.

2. Gulabo, which recently passed away at the Van Vihar National Park and Zoo, Bhopal is a …………?

A) One–horned Rhino

B) Sloth Bear 

C) Bengal Tiger

D) Giant Tortoise

 • India’s oldest sloth bear, named Gulabo, died at the age of 40 at the Van Vihar National Park and Zoo in Bhopal. The female bear was rescued from a street performer in 2006 at the age of 25 years. The autopsy determined that failure of internal organs due to old age is the cause of death of the sloth bear.

3. ‘Central Institute of Classical Tamil’, is located in which city?

A) Madurai

B) Chennai 

C) Coimbatore

D) Tiruchirappalli

 • Prime Minister Narendra Modi inaugurated the new building of the Central Institute of Classical Tamil in Perumbakkam on the outskirts of the Chennai city. CICT was formerly known as the Centre of Excellence for Classical Tamil (CECT), is an autonomous organisation under the Union Ministry of Education. It was functioning at the campus of the Central Institute of Indian Languages, Mysore from 2006 to 2008.

4. Which state won the first prize in Third National Water Awards–2020 in the best state category?

A) Tamil Nadu

B) Uttar Pradesh 

C) Gujarat

D) Maharashtra

 • Uttar Pradesh has been awarded the first prize in Third National Water Awards–2020 in the best state category. It is followed by Rajasthan and Tamil Nadu. Department of Water Resources, River Development and Ganga Rejuvenation, Ministry of Jal Shakti gives 57 awards to States, Organizations, Individuals etc. in 11 different categories. It encourages stakeholders to adopt holistic approach in water management and motivate people to adopt best water usage practices.

5. Which state signed agreement with ‘National Dairy Development Board’ to create a Rs 2,000 Cr Dairy joint venture?

A) Punjab

B) Assam 

C) Gujarat

D) Arunachal Pradesh

 • The Assam government and National Dairy Development Board signed an agreement to create a Rs 2,000–crore joint venture for holistic development of the sector in the state. As per the MoU, a joint venture company will be set up for Rs 2,000 crore with a target of processing 10 lakh litres of milk from six new units in seven years. Foundation stone of Dairy’s expansion initiative under the World Bank–funded ‘Assam Agribusiness and Rural Transportation Project’ was also laid.

6. As per NSO First Advance Estimates, what is the GDP Growth forecasted for FY 2021–22?

A) 8.5%

B) 9.2% 

C) 10%

D) 11.5%

 • The National Statistical Office (NSO) released the First Advance Estimates of GDP Growth for FY 2021–22 as 9.2 per cent, as compared to the contraction of 7.3 percent in 2020–21.
 • As per the estimates, the Indian economy remains on track to regain its position as the world’s fastest–growing major economy. The Reserve Bank of India (RBI) forecast the growth at 9.5 percent.

7. In which year, the first Start–up India ‘Innovation Week’ was launched?

A) 2015

B) 2017

C) 2019

D) 2021 

 • The Indian Government is organising the first–ever Startup India ‘Innovation Week’ from January 10, 2021. It aims to bring together the startups, entrepreneurs, investors, incubators, funding entities, banks and policymakers under one platform to promote innovation. It also aims to showcase the spread of entrepreneurship across India.
 • Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) is organising the virtual week–long innovation celebration.

8. Which Technology company is the service provider for Passport Seva Programme 2.0?

A) Tech Mahindra

B) TCS 

C) Accenture

D) Wipro

 • The Ministry of External Affairs (MEA) has selected Tata Consultancy Services for the second phase of the Passport Seva Programme. TCS had successfully implemented its first phase, which was introduced in 2008. The programme aimed to improve delivery of passport–related services, digitise processes, fast–track the timelines, and improve transparency.

9. What is the expenditure limit for candidates for Lok Sabha elections, as per recent notification of Election Commission?

A) Rs 95 lakhs 

B) Rs 75 lakhs

C) Rs 60 lakhs

D) Rs 50 lakhs

 • The Election Commission announced a hike in expenditure limit for candidates to Rs 95 lakh, up from Rs 70 lakh for Lok Sabha elections. The Election Commission had formed a committee to study cost factors and other related issues.
 • For Assembly elections, the revised expenditure limit for candidates is Rs 40 lakh for big states, up from Rs 28 lakh. Candidates in smaller states can spend a maximum Rs 28 lakh instead of the earlier limit of Rs 20 lakh.

10. India’s first multi–dimensional ‘adventure sports expedition’ was carried out in which country?

A) USA

B) France 

C) Switzerland

D) Australia

 • India’s first multi–dimensional ‘adventure sports expedition’ was flagged off on October 27, 2021. It was conducted by National Institute of Mountaineering and Allied Sports (NIMAS) in France. Recently, Defence Minister Rajnath Singh flagged–in India’s first multi–dimensional adventure sports expedition.
 • The team, which included 8 Army personnel and 4 youths of Arunachal Pradesh, carried out over 250 kilometres of winter trekking in the Alps Mountain Ranges, paragliding, 975 kilometres of cycling and 12 deep scuba dives in the Mediterranean Sea.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button