Tnpsc

20th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

20th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 20th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

20th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. மத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ‘மத்ஸ்ய சேது’ என்றால் என்ன?

அ) ஜி பி எஸ் செயலி

ஆ) ஆன்லைன் பாடத்திட்ட செயலி

இ) மீன்பிடி ரோபோ

ஈ) செயற்கை நுண்ணறிவில் இயங்கும் படகு

 • மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வள அமைச்சகமானது “மத்ஸ்ய சேது” என்ற பெயரில் இணையவழி பாடத்திட்ட செயலியை அறிமுகப்படுத்தியது. இச்செயலியை புவனேஸ்வரத்தில் அமைந்துள்ள ஐ சி ஏ ஆர் – மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது.
 • ‘மத்ஸ்ய சேது’ திறன்பேசி செயலியில் இனங்கள் வாரியாக / பாட வாரியாக இணையவழி பாடத்தொகுதிகள் உள்ளன. இது நாட்டிலுள்ள மீன் உழவர்களுக்கு நவீன நன்னீர் மீன்வளர்ப்பு தொழில்நுட்பங்களை கற்பிக்கிறது.

2. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு, ‘மாநிலங்களில் சட்ட மேலவையை ஒழித்தல் / உருவாக்குதலுடன்’ தொடர்புடையது?

அ) பிரிவு 123

ஆ) பிரிவு 169

இ) பிரிவு 69

ஈ) பிரிவு 196

 • இந்திய அரசியலமைப்பின் 169ஆவது பிரிவு, ‘மாநிலங்களில் சட்ட மேலவையை ஒழித்தல் / உருவாக்குதலுடன் தொடர்புடையது. மேற்கு வங்கத்தின் சட்டமன்றம் சமீபத்தில் 2/3 பங்கு பெரும்பான்மையுடன் சட்டமேலவையை அமைப்பதற்கான தீர்மானத்தை 169ஆவது பிரிவின் கீழ் நிறைவேற்றியது.
 • இதற்கு 196 உறுப்பினர்கள் ஆதரவும் 69 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். கடந்த 1969ஆம் ஆண்டில் சட்ட மேலவை கலைப்புக்கு உள்ளாகும் வரை மேற்கு வங்க மாநிலத்தில் சட்ட மேலவை இருந்தது.

3. பொதுத்துறை நிறுவனங்கள் துறையானது கனரக தொழிற்துறை அமைச்சகத்திலிருந்து பின்வரும் எந்த நடுவண் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது?

அ) வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஆ) எம் எஸ் எம் இ அமைச்சகம்

இ) நிதி அமைச்சகம்

ஈ) உள்துறை அமைச்சகம்

 • நடுவண் அரசானது பொதுத்துறை நிறுவனங்களின் துறையை நிதி அமைச்சகத்தின்கீழ் கொண்டுவந்துள்ளது.
 • பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகளை திரும்பப்பெறும் செயல் முறைகளை இது எளிதாக்கும். முன்னதாக பொதுத்துறை நிறுவனங்கள் துறை மத்திய கனரக தொழிற்துறைகள் & பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சகத்தின்கீழ் இருந்தது. இது மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் இடம்பெறும் ஆறாவது துறையாக இருக்கும். கனரக தொழிற்துறைகள் & பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சகம் இனி நடுவண் கனரக தொழிற்துறைகள் அமைச்சகம் என்று அழைக்கப்படும்.

4. அண்மையில் படுகொலை செய்யப்பட்ட ஜோவெனல் மொய்ஸ், பின்வரும் எந்த நாட்டின் பிரதமராக இருந்தார்?

அ) தென்னாப்பிரிக்கா

ஆ) ஹைத்தி

இ) பப்புவா நியூ கினி

ஈ) ஈராக்

 • கடந்த 2017ஆம் ஆண்டில் பதவியேற்ற 53 வயதான ஹைத்தி பிரதமர் ஜோவெனல் மொய்ஸ், தனது வீட்டில் ஆயுதமேந்திய படுகொலையாளர்களால் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, ஹைத்தியில் உள்ள அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் பிரதமர் ஜோவெனல் மொய்சை படுகொலைசெய்தவர்கள் என ஐயப்படும் நால்வரை சுட்டுக்கொன்றனர். மேலும் இருவரைக் கைது செய்துள்ளனர். ஹைத்தி, டொமினிகன் குடியரசிற்கு அருகிலுள்ள ஒரு கரீபியன் நாடாகும்.

5. இத்தாலிய கடற்படையுடனான இராணுவப்பயிற்சியில் பங்கேற்ற இந்திய இராணுவக்கப்பல் எது?

அ) ஐ என் எஸ் தபார்

ஆ) ஐ என் எஸ் தல்வார்

இ) ஐ என் எஸ் திரிசூல்

ஈ) ஐ என் எஸ் திரிகண்ட்

 • மத்திய தரைக்கடலில் நடந்துவரும் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக INS தபார் கப்பல், இத்தாலியின் நேபிள்ஸ் துறைமுகத்திற்கு சென்றது.‌ துறைமுகத்திலிருந்து புறப்படுகையில் இத்தாலிய கடற்படை முன்னணி கப்பலான ஐடிஎஸ் அன்டோனியோ மார்செக்லியாவுடன் கடல்சார் கூட்டணி பயிற்சியை டிர்ஹெனியன் கடலில் ஐஎன்எஸ் தபார் கப்பல் மேற்கொண்டது. இராணுவத் தளபதி ஜெனரல் எம் எம் நரவாணே, இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பயணம் சென்றார்.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற டாஷ்லி தீவு அமைந்துள்ள கடல் எது?

அ) மத்திய தரைக்கடல்

ஆ) காஸ்பியன் கடல்

இ) கருங்கடல்

ஈ) அரபிக்கடல்

 • காஸ்பியன் கடலில் அமைந்துள்ள பாகு தீவுக்கூட்டத்தின் தீவுகளுள் ஒன்றுதான் டாஷ்லி தீவு. இந்த எரிமலை தீவு இக்னேசி கல் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. சமீபத்தில், அஜர்பைஜானுக்கு வெளியே காஸ்பியன் கடலில் ஓர் எண்ணெய் வயலுக்கு அருகில் வெடிப்பு ஏற்பட்டது. ஊடக அறிக்கையின்படி, ஒரு சேற்று எரிமலை தான் இவ்வெடிப்புக்கு காரணம்.
 • சேற்றெரிமலைகள் சூடான நீர் மற்றும் இயற்கை எரிவாயுவால் இயக்கப்படுகின்றன. புவியின் உட்புறத்தில், நீர் நிறைவுற்ற களிமண் பாறைகளின் அடுக்குகளுக்கு மேலேயுள்ள அடுக்குகளின் அழுத்தத்தால் அவை நிகழ்கின்றன.

7. சீன பொதுவுடைமை கட்சியின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் நினைவு நாணயத்தை வெளியிட்ட நாடு எது?

அ) இந்தியா

ஆ) இலங்கை

இ) தாய்லாந்து

ஈ) பாகிஸ்தான்

 • கட்சியின் 100ஆவது ஆண்டுவிழா மற்றும் 65 ஆண்டுகால இலங்கை-சீன உறவுகளைக் குறிக்கும் வகையில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாணயங்களை அச்சிட்டுள்ளதாக இலங்கையின் மத்திய வங்கி அறிவித்தது. அந்நாணயங்களில் ஒன்று, தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் ‘சீன பொதுவுடைமை கட்சி’ என்ற சொற்களைக் கொண்டு உள்ளது. மற்றொன்று கொழும்பில் அமைந்துள்ள சீனாவால் கட்டப்பட்ட நெலம் போகுனா மகிந்த இராஜபக்ஷ அரங்கத்தையும் ‘இலங்கை-சீனா 65 ஆண்டுகள்’ என்ற வாசகத்தையும் கொண்டுள்ளது.

8. 2030 செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டதோடு நிதிச்சந்தைகள் பேச்சுவார்த்தையின் தொடக்கக் கூட்டத்தை கீழ்காணும் எந்த நாட்டோடு இணைந்து இந்தியா நடத்தியது?

அ) அமெரிக்கா

ஆ) இங்கிலாந்து

இ) பிரான்ஸ்

ஈ) ஜெர்மனி

 • இந்தியாவும், இங்கிலாந்தும் நிதிச்சந்தை பேச்சுவார்த்தையின் தொடக்க கூட்டத்தை காணொலிக்காட்சிமூலம் நடத்தின. நிதித்துறையில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த, இந்தப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என, கடந்தாண்டு (2020) அக்டோபர் மாதம் நடந்த 10ஆவது பொருளாதார மற்றும் நிதி பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
 • இருநாட்டு பிரதமர்களின் சமீபத்திய கூட்டத்தின்போது இருநாடுகளும் ஏற்றுக்கொண்ட 2030 செயல் திட்டத்தின் முக்கிய தூணாக நிதி ஒத்துழைப்பு உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கீழ்கண்ட நான்கு விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டன: அவை 1. GIFT (Gujarat International Finance Tec) சிட்டி, இந்தியாவின் முன்னணி சர்வதேச நிதி மையம். 2. வங்கி மற்றும் பணம் செலுத்துதல் முறை. 3. காப்பீடு மற்றும் 4. முதலீட்டு சந்தைகள்.

9. WWF-UNEP அறிக்கையின்படி, எந்த இந்திய விலங்குகளின் 35% வனச்சரகங்கள், காப்பிடப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ளன?

அ) யானை

ஆ) புலி

இ) சிங்கம்

ஈ) சிறுத்தை

 • WWF மற்றும் UNEP’இன் புதிய அறிக்கையானது இந்தியாவின் புலிகள் வாழும் வனச்சரகங்களின் 35%, காப்பிடப்பட்ட பகுதிகளுக்கு வெளியே இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. இந்த அறிக்கை “A Future for All – A need for Human-Wildlife Coexistence” என்ற தலைப்பில் இருந்தது.
 • ஆப்பிரிக்க சிங்க வனச்சரகங்களின் 40 சதவீதமும் ஆப்பிரிக்க & ஆசிய யானை வனச்சரகங்களின் 70 சதவீதமும் காப்பிடப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ளன. காப்புப்பகுதிகள் துண்டிக்கப்படுவதால், விலங்குகள் அவற்றின் வாழ்விற்காக மனிதர்கள் வாழும் இடங்களை சார்ந்துள்ளது.

10. ICESat-2 என்பது எந்த நாட்டின் செயற்கைக்கோள்?

அ) அமெரிக்கா

ஆ) சீனா

இ) ஜெர்மனி

ஈ) இஸ்ரேல்

 • சமீபத்திய ஆய்வின்படி, நாசாவின் ‘Ice, Cloud and land Elevation Satellite’ அல்லது ICESat-2 ஆனது துணை பனியாற்றடி ஏரிகளை துல்லியமாக வரைபடமாக்க அறிவியலாளர்களுக்கு உதவுகிறது.
 • இந்தச் செயற்கைக்கோள் பனி மேற்பரப்பின் உயரத்தை அளவிடுகிறது புவியின் மேற்பரப்பை அளவிடக்கூடிய லேசர் அல்டிமீட்டர் முறையைப் பயன்படுத்தி ICESat-2, பனி மேற்பரப்பின் உயர மாற்றங்களை மிகத் துல்லியத்துடன் வரைபடமாக்குகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் நடமாடும் மருத்துவ வாகனம்

நடமாட முடியாத நிலையில் முடங்கிய கிடக்கும் நோயாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று சிகிச்சை அளிக்கும் நடமாடும் மருத்துவ வாகன திட்டத்தை இந்திய அளவில் தமிழ்நாட்டில் முதன்முதலாக திருவள்ளூரில் பால்வளத் துறை அமைச்சர் சா மு நாசர் தொடக்கி வைத்தார். திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு துறை சார்பில், வலி தணிப்பு மற்றும் புனர்வாழ்வு சிகிச்சை திட்டம்மூலம், நடமாடும் மருத்துவ வாகனத்தை அமைச்சர் சா மு நாசர் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.

2. வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிவிகிதம் 7.1 சதவீதம்: தமிழக அரசு உத்தரவு

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவே தொடர்வதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி.1ஆம் தேதி முதல் ஜூன்.30 வரையிலான ஆறு மாத காலத்தில் வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவே இருந்தது. இதைத்தொடர்ந்து, ஜூலை.1ஆம் தேதி முதல் செப்டம்பர் வரையிலான மும்மாதங்களிலும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவே தொடரும் என தனது ஆணையில் நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலர் தெரிவித்துள்ளார்.

3. தமிழ்நாடு சட்டப்பேரவை 100

பழம்பெரும் பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டைக் காண்கிறது. இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு தலைமை வகிக்க குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்தை, முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

1920’களின் இறுதியில் நடந்த தேர்தலில் நீதிக்கட்சி வென்று அதன் தலைமையில் அமையப் பெற்ற சட்டப்பேரவை இப்போது நூற்றாண்டைக் கண்டிருக்கிறது. இந்தியாவின் அனைத்து மாநில சட்டப்பேரவைகள் மற்றும் மக்களவைக்கு நடத்தப்படும் தேர்தலுக்கு அடிப்படை நாதமாக இருப்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்தான். இந்தச் சட்டம் 1952ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

இச்சட்டத்துக்கு முன்பாக, மாகாணங்களில் தேர்தல்களை நடத்துவதற்கு வகை செய்த சட்டம், இந்திய அரசுச் சட்டம் 1919.

முதல் முதல்வரைத் தந்த தேர்தல்: இந்திய அரசுச் சட்டத்தின்மூலமே தமிழ்நாட்டில் (சென்னை மாகாணம்) 1920ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கின. 127 உறுப்பினர்களைக் கொண்ட அப்போதைய சென்னை மாகாணத்துக்கு நவம்பர்.30’இல் தொடங்கி டிசம்பர்.2ஆம் தேதி வரை தேர்தல் நடந்தது.

காங்கிரஸ் பங்குபெற மறுப்பு:

அந்தத் தேர்தலில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சி பங்குபெற மறுத்தது; பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இருந்த கட்சிகள் மட்டுமே தேர்தல் களத்தில் இருந்தன. 127 உறுப்பினர்களில் 98 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாக இருந்தனர்; அதாவது, 98 உறுப்பினர்கள் மட்டுமே தேர்தல்மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அந்தத்தேர்தலில் 63 இடங்களைப் பிடித்து நீதிக்கட்சி பெரும்பான்மை பெற்றது. நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவராக இருந்த சர் பிடி தியாகராயர் முதல்வர் பொறுப்பை ஏற்க மறுத்ததால், ஏ சுப்பராயலு ரெட்டியார், முதல்வர் பொறுப்பை ஏற்றார். அவரே சென்னை மாகாணத்தின் முதல் முதல்வர் என்ற பெருமையைப் பெற்றார். இந்திய அரசுச்சட்டம் 1919’இன்படி, ஒரு தேர்தல்மூலமாக அமைக்கப்படும் பேரவையின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் மட்டுமே. அந்த வகையில், 1923, 1926 & 1930 ஆகிய ஆண்டுகளில் தேர்தல்கள் நடைபெற்றன.

பேரவையின் பதவிக்காலம் அதிகரிப்பு:

இதன் பின்பு, இந்திய அரசுச் சட்டம் திருத்தப்பட்டு, சட்டப்பேரவை, சட்டமேலவை என இரண்டு அவைகள் உருவாக்கப்பட்டன. மேலும், பேரவையின் பதவிக்காலம் 3 ஆண்டுகளில் இருந்து ஐந்தாண்டுகளாக உயர்த்தப்பட்டது. இந்தச் சட்டத்தின்மூலமாக நடைபெற்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் தேர்தல்கள் நடைபெறவில்லை. இதன்பின்பு, 1946ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிதான் வென்றது.

1947’இல் நாடு விடுதலைக்குப் பிறகு இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமாக உருப்பெற்று அந்தச் சட்டப்பிரிவுகளின் அடிப்படையிலேயே இன்றளவு தேர்தல்களும், தேர்தல் நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கு முன்பாக, இந்திய அரசுச்சட்டத்தின் மூலமாக தேர்தல் நடத்தப்பட்டு அதன்மூலமாக தமிழ்நாட்டில் சட்டப் பேரவை ஏற்பட்டு நூறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. நீதிக் கட்சிக்கு பேரவையில் நுழைய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த தேர்தல்தான் 1920ஆம் ஆண்டு தேர்தல். அந்தத் தேர்தல்மூலமாக உருவாக்கப்பட்ட சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது அதன்வழி வந்த தற்போதைய திமுக அரசு.

4. வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கும்

நாட்டின் சந்தை மதிப்பு, அடிப்படைக் கொள்கைகள் உள்ளிட்டவற்றின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டில் 25.4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டில் நாட்டின் அந்நிய நேரடி முதலீடு சுமார் `3.8 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டில் சுமார் `4.7 லட்சம் கோடியாக அதிகரித்தது.

கடந்த ஆண்டில் அதிக அளவில் அந்நிய நேரடி முதலீடுகளைப் பெற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா 8ஆவது இடத்திலிருந்து 5ஆம் இடத்துக்கு முன்னேறியது. கடந்த ஆண்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் புதிய கிளைகளைத் தொடங்குவதற்காக மேற்கொண்ட முதலீடுகள் 19% சரிவைச்சந்தித்தன. ஆனால் மற்ற வளர்ந்துவரும் நாடுகளில் அத்தகைய முதலீடுகள் சுமார் 44 சதவீத அளவுக்கு சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் சந்தை மதிப்பு, அடிப்படைக் கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கும். கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.3 சதவீதம் வீழ்ச்சி கண்டது என்று அந்தப் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1. What is ‘Matsya Setu’, which was released by the Union ministry for Fisheries, Animal Husbandry and Dairying?

A) GPS Application

B) Online Course Application

C) Fishing Robot

D) AI–powered Boat

 • Union ministry for Fisheries, Animal Husbandry and Dairying launched the Online Course Mobile App named “Matsya Setu”.
 • The app was developed by the ICAR–Central Institute of Freshwater Aquaculture (ICAR–CIFA), Bhubaneswar. Matsya Setu app has species–wise/ subject–wise self–learning online course modules. It also teaches the latest freshwater aquaculture technologies to the aqua farmers of the country.

2. Which Article in the Indian Constitution is associated with ‘Abolition or creation of Legislative Councils in States’?

A) Article 123

B) Article 169

C) Article 69

D) Article 196

 • Article 169 of the Indian constitution is associated with ‘Abolition or creation of Legislative Councils in States’. West Bengal Assembly has recently passed a resolution to set up Legislative Council with a two–thirds majority. The resolution moved under the Article 169, was favoured by 196 and opposed by 69. The Legislative Council existed till 1969 till a resolution was passed for its dissolution.

3. The Department of Public Enterprises (DPE) has been shifted to which Union Ministry, from the Heavy Industries Ministry?

A) Ministry of Commerce and Industry

B) Ministry of MSME

C) Ministry of Finance

D) Ministry of Home Affairs

 • The Union Government has brought Department of Public Enterprises (DPE) under the Finance Ministry, to facilitate its ambitious disinvestment programme. Earlier, the Department of Public Enterprises (DPE) was under the aegis of Ministry of Heavy Industries and Public Enterprises.
 • This will be the sixth department under the Finance Ministry. Ministry of Heavy Industries and Public Enterprises will be called the Ministry of Heavy Industries.

4. Jovenel Moise, who was assassinated recently, was the President of which country?

A) South Africa

B) Haiti

C) Papua New Guinea

D) Iraq

 • Haiti Prime Minister Jovenel Moise, a 53–year–old who took office in 2017, was shot dead recently by a group of heavily armed assassins, at his home. Subsequently, the country’s Security forces in Haiti have shot dead four suspected killers of President Jovenel Moise and captured two others. Haiti is a Caribbean country near to the Dominican Republic.

5. Which Indian military ship participated in the Military exercise with Italian Navy?

A) INS Tabar

B) INS Talwar

C) INS Trishul

D) INS Trikand

 • Indian Naval Ship Tabar participated in military exercises with the Italian Navy after entering the Port of Naples. The ship also undertook a Maritime Partnership Exercise with ITS Antonio Marceglia, a frontline frigate of the Italian Navy, in the Tyrrhenian Sea.
 • Indian Army chief Manoj Mukund Naravane is on a four–day visit to the UK and Italy.

6. Dashly Island, which was seen in the news recently, is located in which Sea?

A) Mediterranean Sea

B) Caspian Sea

C) Black Sea

D) Arabian Sea

 • Dashli ada or Dashly Island is one of the islands of Baku Archipelago, located in the Caspian Sea. The volcanic island is also called as the Ignatiy Stone Island. Recently, an explosion occurred near an oil field in the Caspian Sea off Azerbaijan.
 • As per media reports, a mud volcano is the cause of the explosion. Mud volcanoes are driven by hot water and natural gas. They tend to occur where layers of water–saturated clay rocks, in Earth’s interior, are under pressure from the layers above.

7. Which country issued a commemorative coin marking the centenary of the Chinese Communist Party?

A) India

B) Sri Lanka

C) Thailand

D) Pakistan

 • Sri Lanka’s Central Bank announced that it has minted two coins in gold and silver, in connection with the Party’s 100th anniversary, and 65 years of Sri Lanka–China relations.
 • One of the coins, bears the words ‘Communist Party of China’ in Sinhala, Tamil and English, while the other has a view of the China–built Nelum Pokuna Mahinda Rajapaksa Theatre, located in Colombo and the words ‘Sri Lanka–China 65 Years’.

8. India adopted 2030 Roadmap and held its inaugural meeting of Financial Markets Dialogue with which country?

A) USA

B) UK

C) France

D) Germany

 • India and the UK held the inaugural meeting of the India–UK Financial Markets Dialogue. It was established at the 10th Economic and Financial Dialogue (EFD)in October 2020.
 • Financial Cooperation is a key pillar of the 2030 Roadmap adopted by the two countries during the recent meeting of the two Prime Ministers. The Dialogue focused on four themes: (1) GIFT City 2) banking and payments, (3) insurance, and (4) capital market

9. As per the WWF–UNEP report, 35% of the ranges of which Indian animal lie outside protected areas?

A) Elephant

B) Tiger

C) Lion

D) Leopard

 • A new report by WWF and UNEP has found that 35 per cent of India’s tiger ranges currently lie outside protected areas. The report was titled “A Future for All – A need for Human–Wildlife Coexistence”.
 • 40% of the African lion range and 70% of the African and Asian elephant ranges fall outside protected areas. As the protected areas disconnected from each other, many animals depend on human–dominated spaces for their survival.

10. ICESat–2 is a satellite of which country?

A) USA

B) China

C) Germany

D) Israel

 • As per a recent study, NASA’s ‘Ice, Cloud and land Elevation Satellite 2’ or ICESat–2, allowed scientists to precisely map the sub–glacial lakes. The satellite measures the height of the ice surface. ICESat–2 maps the elevation changes of the ice surface with a precision, using a laser altimeter system that can measure Earth’s surface, with more details.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Turnoff the Ad Blocker to view the content