Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

20th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

20th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 20th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அண்மையில் மேகாலயாவில் கண்டுபிடிக்கப்பட்ட, Glischropus meghalayanus சார்ந்த இனம் எது?

அ. பாம்பு

ஆ. ஆமை

இ. வௌவால் 

ஈ. சிலந்தி

  • மேகாலயாவில் உள்ள மூங்கில் காட்டில் இருந்து மூங்கிலில் வாழும் புதிய வௌவால் இனத்தை அறிவியலாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. மேகாலயா அதன் 50ஆம் ஆண்டு மாநில நாளைக்கொண்டாடுவதன் நினைவாக அந்தப் புதிய உயிரினத்திற்கு, ‘Glischropus meghalayanus’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இக்கண்டுபிடிப்பின்மூலம், இந்தியாவில் உள்ள வௌவால் இனங்களின் மொத்த எண்ணிக்கை 131 இனங்களாக மாறியுள்ளது. அதில், 67 இனங்கள் மேகாலயாவில் காணப்படுகின்றன.

2. SCO உறுப்புநாடுகளுக்கு, ‘Solidarity-2023’ என்ற கூட்டு எல்லைசார் நடவடிக்கையை மேற்கொள்ள முன்வந்த நாடு எது?

அ. இந்தியா

ஆ. சீனா 

இ. நேபாளம்

ஈ. வங்காளதேசம்

  • இந்தியாவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மற்ற உறுப்புநாடுகளும் அடுத்த ஆண்டு கூட்டு எல்லைசார் நடவடிக்கையான, ‘Solidarity-2023’ஐ ஏற்பாடு செய்தற்கான சீனாவின் முன்மொழிவை ஆதரித்தன. இந்தியாவின் தலைமையில் தில்லியில் நடந்த SCO உறுப்புநாடுகளின் எல்லைசார் அதிகாரிகளின் தலைவர்களின் எட்டாவது கூட்டத்தின் முடிவில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) இயக்குநர் இதனை அறிவித்தார்.

3. ‘பேமெண்ட் விஷன் 2025’ என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. NPCI

ஆ. இந்திய ரிசர்வ் வங்கி 

இ. NITI ஆயோக்

ஈ. உலக வங்கி

  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் பணஞ்செலுத்துவதற்கான வழிகாட்டுதல்களுடன், ‘பேமெண்ட் விஷன் 2025’ என்ற ஆவணத்தை வெளியிட்டது. இந்த ஆவணம் டிஜிட்டல் நிதியின் கட்டமைப்பிலும் கவனஞ்செலுத்துகிறது. இதில் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் நிதிசார் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான பணஞ் செலுத்துவதற்கான விதிமுறைகள் உள்ளன; ‘இப்போது வாங்கு பிறகு பணஞ்செலுத்து’ சேவைகளை உள்ளடக்கிய பணஞ்செலுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்; மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்துதல்; மற்றும் கடனட்டைகள் மற்றும் வங்கி தயாரிப்புகளின் கடன்சார் கூறுகளை UPI உடன் இது இணைக்கிறது.

4. சமீபத்தில் அதன் ‘புஜியன்’ என்ற பெயரிலான அதிநவீன விமானந்தாங்கிக்கப்பலை அறிமுகப்படுத்திய நாடு எது?

அ. சீனா 

ஆ. இந்தியா

இ. பிரான்ஸ்

ஈ. அமெரிக்கா

  • சீனா தனது மூன்றாவது விமானந்தாங்கிக்கப்பலை, ‘புஜியான்’ என்ற பெயரில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இது சீனத்தின் மிகவும் மேம்பட்ட மற்றும் முழுமையாக உள்நாட்டில் கட்டப்பட்ட முதல் கடற்படைக் கப்பலாகும். ‘புஜியன்’ என்பது சீனாவின் கீழைக்கடற்கரை மாகாணமான புஜியானின் பெயராகும். லியோனிங் மற்றும் ஷான்டாங் ஆகியவை சீனாவின் முந்தைய இரண்டு விமானந்தாங்கிக்கப்பல்களின் பெயர்களாகும்.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘காயா மிஷன்’ என்பதுடன் தொடர்புடைய விண்வெளி நிறுவனம் எது?

அ. NASA

ஆ. CNA

இ. ESA 

ஈ. ஸ்பேஸ்X

  • ஐரோப்பிய விண்வெளி முகமையின் ‘காயா திட்டமானது’ புதிய தரவுகளின் தொகுப்பை வெளியிட்டுள்ளது; அது ‘ஸ்டார்குவாக்கு’களின் நிகழ்வுகளை வெளிப்படுத்தியுள்ளது. விண்மீன் நிலநடுக்கம் என்பது பூகம்பத்தைப் போன்ற நட்சத்திரங்களின் மேற்பரப்பில் ஏற்படும் பேரசைவுகள் ஆகும். விண்மீன் வரைபடமிடல் பணியை மேற்கொள்ளும் காயா ஆய்வூர்தி பால்வெளி விண்மீன் மண்டலத்தில் கிட்டத்தட்ட 1.8 பில்லியன் விண்மீன்களை வரைபடமாக்கி உள்ளது.

6. ஜெனிவாவைச் சார்ந்த மார்ட்டின் என்னல்ஸ் அறக்கட்டளையால் கௌரவிக்கப்பட்ட இந்தியர் யார்?

அ. பாதிரியார் ஸ்டான் சுவாமி 

ஆ. வரவர இராவ்

இ. சுதா பரத்வாஜ்

ஈ. ஆனந்த் டெல்டும்டே

  • மார்ட்டின் என்னல்ஸ் அறக்கட்டளை பாதிரியார் ஸ்டான் சுவாமிக்கு அவரது மறைவிற்குப்பின் அஞ்சலி செலுத்த முடிவு செய்துள்ளது. அவர் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜேசுட் பாதிரியார் மற்றும் பழங்குடியினர் உரிமை ஆர்வலர் ஆவார். அவர் ஆதிவாசி சமூகங்களின் நிலம், காடு மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க அவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றினார்.
  • மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கான நோபல் பரிசாகக் கருதப்படும் இவ்விருதை ஜெனிவாவைச் சார்ந்த மார்ட்டின் என்னல்ஸ் அறக்கட்டளை ஒவ்வோர் ஆண்டும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகளைப் பெற்றவர்களில் புர்கினா பாசோவைச் சேர்ந்த Daouda Diallo, வியட்நாமைச் சேர்ந்த Pham Doan Trang மற்றும் பஹ்ரைனின் அப்துல்-ஹாடி அல்-கவாஜா ஆகியோர் அடங்குவர்.

7. உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, எந்தத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்?

அ. சம்பாவத் 

ஆ. காதிமா

இ. கங்கோத்ரி

ஈ. யமுனோத்ரி

  • உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சம்பாவத் இடைத்தேர்தலில் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் 2022-இல் அவர் காதிமா சட்டமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்திருந்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மையைப் பெற்றிருந்தாலும்கூட முதல்வர் பதவிக்கு உரியவர் தோற்றிருந்தார். அவரின் இந்த வெற்றி பெற மிகமுக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

8. ‘சாதி ஆதார் கணனா’ என்ற சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ள மாநிலம் எது?

அ. பீகார் 

ஆ. உத்தரப்பிரதேசம்

இ. மத்திய பிரதேசம்

ஈ. ஜார்கண்ட்

  • பீகார் மாநிலத்தில் சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மாநில அரசு முடிவுசெய்துள்ளது. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இது, ‘சாதி ஆதார் கணனா’ என்று அழைக்கப்படும் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான தரவுகளை செய்தித்தாள்களில் விளம்பரங்கள்மூலம் மாநில அரசு வெளியிடும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.

9. 2021 பார்ச்சூன் 500 பட்டியலில் அதிக இழப்பீடுபெற்ற CEO-களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளவர் யார்?

அ. ஜாக் மா

ஆ. எலோன் மஸ்க் 

இ. டிம் குக்

ஈ. ஜென்சன் ஹுவாங்

  • ஸ்பேஸ்X மற்றும் டெஸ்லாவின் தலைமைச்செயலதிகாரியான எலோன் மஸ்க், 2021ஆம் ஆண்டுக்கான பார்ச்சூன் 500 பட்டியலில் அதிக இழப்பீடு பெற்ற தலைமைச் செயல் அதிகாரிகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 2021ஆம் ஆண்டில், மஸ்க் கிட்டத்தட்ட 23.5 பில்லியன் டாலர் மதிப்பிலான இழப்பீட்டைப்பெற்றார். அதே நேரத்தில் டெஸ்லா இந்த ஆண்டின் பார்ச்சூன் 500 பட்டியலில் 65ஆவது இடத்தைப்பிடித்தது. ஆப்பிள் Inc. CEO டிம் குக் 2021இல் $770.5 மில்லியனையும், NVIDIA தலைவரான ஜென்சன் ஹுவாங் 2021இல் $561 மில்லியனையும் பெற்றனர்.

10. 2022ஆம் ஆண்டு எந்த மாதத்தில், GST வருவாய் தொடங்கப்பட்டதிலிருந்து முதன்முறையாக `1.40 இலட்சம் கோடியைத் தாண்டியது?

அ. பிப்ரவரி 2022

ஆ. மார்ச் 2022 

இ. ஏப்ரல் 2022

ஈ. மே 2022

  • மே மாதத்திற்கான GST வருவாய் கிட்டத்தட்ட `1.41 இலட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெற்றதைவிட 44% அதிகமாகும் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. GST தொடங்கப்பட்டதிலிருந்து இது நான்காவது முறையாக மாதாந்திர GST வசூல் `1.40 இலட்சம் கோடியைத்தாண்டியுள்ளது மற்றும் 2022 மார்ச் முதல் தொடர்ந்து மூன்றாவது மாதமாக இவ்வாறாக உள்ளது. மார்ச் மாதத்தில் GST வருவாய் `1.42 இலட்சம் கோடியாகவும், பிப்ரவரியில் `1.33 லட்சம் கோடியாகவும் இருந்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 28% அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டில் இதுவரை உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 28 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய மின்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மின்சார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:

கடந்த 2021-22 நிதியாண்டில் 777 மில்லியன் டன்னாக இருந்த உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி, நடப்பு நிதி ஆண்டிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2022-23ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி மே 31 நிலவரப்படி, 137.85 மில்லியன் டன் ஆகும். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 104.83 மில்லியன் டன் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 28.6% அதிகமாகும். இந்த நிலைமை ஜூன் மாதத்திலும் நீடிக்கும்.

கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் (ஜூன் 16, 2022) உற்பத்தியை விட 28% அதிகமாகும். நடப்பு நிதியாண்டில் உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி இலக்கு 911 மில்லியன் டன் ஆகும். இது முந்தைய ஆண்டைவிட 17.2% அதிகமாகும்.

உள்நாட்டு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களுக்கான நிலக்கரி இறக்குமதி 2021-22ஆம் ஆண்டில் 8.11 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இது கடந்த எட்டு ஆண்டுகளில் மிகக்குறைந்த நிலக்கரி இறக்குமதியாகும். உள்நாட்டு மூலங்களிலிருந்து வலுவான நிலக்கரி வழங்கல் மற்றும் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக மட்டுமே இது சாத்தியமானது. கடந்த ஐந்து ஆண்டுகளில், நிலக்கரி அடிப்படையிலான மின்னுற்பத்தி அதிகரித்துள்ளது.

2. பள்ளிக்கல்வியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம்: UNESCO விருது

கரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில், ‘பிரதமரின் இ-வித்யா’ திட்டத்தின்கீழ் பள்ளிக்கல்வியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்காக UNESCO விருது கிடைத்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய கல்வி அமைச்சகத்தால் தற்சார்பு இந்தியா திட்டத்தின் பகுதியாக ‘பிரதமரின் இ-வித்யா திட்டம்’ தொடங்கப்பட்டது, இது தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி புகட்ட டிஜிட்டல், இணைய வழிமுறைசார்ந்த அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைக்கிறது. இதன்மூலம் கற்றல் இழப்பை குறைப்பதே நோக்கமாகும்.

1. Glischropus meghalayanus, which was recently discovered in Meghalaya, belongs to which species?

A. Snake

B. Turtle

C. Bat 

D. Spider

  • A team of scientists has discovered a new species of bamboo–dwelling bat from a bamboo forest in Meghalaya. It was named as ‘Glischropus meghalayanus’ after the state of Meghalaya, which is celebrating its 50 years of statehood. With this discovery, the total number of bat species from India stands at 131 species with Meghalaya registering the highest bat diversity with 67 species.

2. Which country proposed to organise a joint border operation named ‘Solidarity–2023’ for SCO member countries?

A. India

B. China 

C. Nepal

D. Bangladesh

  • India and other member countries of the Shanghai Cooperation Organisation (SCO) supported an initiative of China to organise a joint border operation ‘Solidarity–2023’ for the border agencies of the member countries next year. India’s Border Security Force (BSF) Director announced this at the conclusion of the eighth meeting of the heads of border authorities of SCO member states, which was held in Delhi, under the chairmanship of India.

3. Which institution released a report titled ‘Payments Vision 2025’?

A. NPCI

B. RBI 

C. NITI Aayog

D. World Bank

  • The Reserve Bank of India (RBI) recently released a document titled “Payments Vision 2025”, with guidelines on payments. The document also focussed on the architecture of digital finance.
  • It includes regulations for BigTechs and fintechs in payments; guidelines on payments involving ‘Buy Now Pay Later’ (BNPL) services; introducing the central bank digital currency (CBDC); and linking credit cards and credit components of banking products to the Unified Payments Interface (UPI).

4. Which country recently launched its most advanced aircraft carrier named ‘Fujian’?

A. China 

B. India

C. France

D. USA

  • China recently launched its third aircraft carrier named ‘Fujian’. It is also the country’s most advanced and the first fully domestically built naval vessel. Fujian is the name of China’s eastern coastal province of Fujian. Liaoning and Shandong are names of the two previous aircraft carriers of China.

5. ‘Gaia Mission’, which was found in the news recently, is associated with which space agency?

A. NASA

B. CNA

C. ESA 

D. SpaceX

  • European Space Agency’s Gaia mission has released a set of new data, which has revealed the phenomena of ‘starquakes’. Starquakes are massive movements on the surface of stars similar to earthquake. The star–mapping Gaia probe has covered almost 1.8 billion stars in the Milky Way galaxy.

6. Which Indian personality was honoured by the Geneva–based Martin Ennals Foundation?

A. Father Stan Swamy 

B. Varavara Rao

C. Sudha Bharadwaj

D. Anand Teltumbde

  • The Martin Ennals Foundation has decided to posthumously pay homage to Father Stan Swamy. He was a Jesuit priest and tribal rights activist from Jharkhand who had been arrested in the Bhima Koregaon case. He worked closely with Adivasi communities to safeguard their land, forest and labour rights. The Geneva–based foundation presents the award regarded as the Nobel Prize for human rights defenders every year. The recipients of this year’s awards include Daouda Diallo from Burkina Faso, Pham Doan Trang from Vietnam and Abdul–Hadi Al–Khawaja of Bahrain.

7. Uttarakhand Chief Minister Pushkar Singh Dhami won the bypoll from which constituency?

A. Champawat

B. Khatima

C. Gangotri

D. Yamunotri

  • Uttarakhand Chief Minister Pushkar Singh Dhami won from the Champawat bypoll by a margin of over 55,000 votes. He had earlier lost from Khatima assembly constituency in the Uttarakhand Assembly Polls 2022 even though BJP won a clear majority in the state. This was a crucial victory for the Chief Minister to win the bypoll to retain the Chief Minister post.

8. Which state has decided to conduct a caste–based census named ‘Jaati Aadharit Ganana’?

A. Bihar

B. Uttar Pradesh

C. Madhya Pradesh

D. Jharkhand

  • Bihar state government is set to conduct a caste–based census in the state. The decision was taken at an all–party meeting chaired by Chief Minister Nitish Kumar. The exercise would be called Jaati Aadharit Ganana and the state government will publish the data related to the census through advertisements in newspapers. The aim of this exercise is to carry out developmental work for people who are deprived.

9. Who has topped the 2021 Fortune 500 list of the most highly compensated CEOs?

A. Jack Ma

B. Elon Musk 

C. Tim Cook

D. Jensen Huang

  • Elon Musk, CEO of SpaceX and Tesla, has topped the 2021 Fortune 500 list of the most highly compensated CEOs. In 2021 Musk received compensation worth almost USD 23.5 billion while Tesla ranked 65 on this year’s Fortune 500 list. Apple Inc. CEO Tim Cook received USD 770.5 million in 2021 and Jensen Huang, the NVIDIA chief, received USD 561 million in 2021.

10. In which month of 2022, did the GST revenue crossed the Rs 1.40 lakh crore mark for the first time since inception?

A. February 2022

B. March 2022 

C. April 2022

D. May 2022

  • GST revenue for May was recorded at nearly Rs 1.41 lakh crore, a 44 per cent increase over the same month last year, as per the Finance Ministry. This is the fourth time that the monthly GST collection has crossed Rs 1.40 lakh crore mark since the inception of GST and the third straight month since March 2022. In March GST revenues were at Rs 1.42 lakh crore, while in February it was at Rs 1.33 lakh crore.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!