Tnpsc

20th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

20th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 20th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

20th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English


  1. அரபிக்கடலில் உருவான புயலுக்கு “டக்தே” என்ற பெயரை வழங்கிய நாடு எது?

அ) இந்தியா

ஆ) இலங்கை

இ) மியான்மர்

ஈ) பாகிஸ்தான்

  • இந்திய வானிலை ஆய்வுத்துறையின் கருத்துப்படி, அரபிக்கடலில் உருவான ஒரு தாழ்வழுத்தப்பகுதி, ஒரு புயலாக உருவானது. அதற்கு “டவ்-தே” என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பெயரை மியான்மர் வழங்கியுள்ளது. அரபிக்கடலில் உருவாகியுள்ள இந்தப் புயலால் குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் தெற்கு கொங்கன் பிராந்தியத்தில் பலத்த மழைப்பொழிய வாய்ப்புள்ளது.

2. வெரிஸ்க் மேப்பிள்கிராப்ட்டின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய நகரங்கள் குறித்த அறிக்கையின்படி, முதல் 100 இடங்களில் எத்தனை நகரங்கள் ஆசியாவில் உள்ளன?

அ) 2

ஆ) 19

இ) 56

ஈ) 99

  • வணிக இடர் ஆய்வு நிறுவனமான வெரிஸ்க் மேபிள்கிராப்ட் சமீபத்தில் சுற்றுச்சூழல் இடர்களுக்கு ஆளாகக்கூடிய நகரங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையின்படி, பாதிக்கப்படக்கூடிய முதல் 100 நகரங்களில் 99 நகரங்கள் ஆசியாவில் அமைந்துள்ளன. இந்தப் பட்டியலில் ஜகார்த்தா முதலிடத்திலும், தில்லி இரண்டாவது இடத்திலும் உள்ளன. மொத்தம் 1.5 பில்லியன் மக்கள்தொகைகொண்ட உலகெங்கிலும் உள்ள 400’க்கும் மேற்பட்ட பெரிய நகரங்கள் “அதீத” அல்லது “தீவிர” இடரில் உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

3. 2 வகை யோகன் செயற்கைக்கோள்களை ஏவிய நாடு எது?

அ) ஜப்பான்

ஆ) அமெரிக்கா

இ) சீனா

ஈ) இந்தியா

  • தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து சீனா சமீபத்தில் 2 வகையான யோகன் செயற்கைக்கோள்களை ஏவியது. இந்தச் செயற்கைக்கோள்களை சாங்சே 2 சி ஏவுகணை சுமந்துசென்றது. இந்தச் செயற்கைக்கோள்கள் மின்காந்த சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் பிற தொடர்புடைய தொழில்நுட்ப சோதனைகளில் பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

4. ‘மாதரி துலார் யோஜனா’ என்றவொரு திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ) உத்தரகண்ட்

ஆ) உத்தர பிரதேசம்

இ) சத்தீஸ்கர்

ஈ) ஒடிஸா

  • சத்தீஸ்கர் மாநில அரசு, “சத்தீஸ்கர் மாதரி துலார் யோஜனா” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், COVID-19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவுகளை அரசே ஏற்கும். 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் அத்தகைய குழந்தைகளுக்கு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாதத்திற்கு `500 உதவித்தொகை வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்.

5. இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வங்கி எவ்வாறு அறியப்படுகிறது?

அ) கூட்டுறவு வங்கி

ஆ) சிறு நிதி வங்கி

இ) அட்டவணையிடப்பட்ட வணிக வங்கி

ஈ) இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கி

  • இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வங்கி, ‘அட்டவணையிடப்பட்ட வணிக வங்கி’ என்றழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, DBS வங்கி இந்தியா லிமிடெட் உடன் இணைக்கப்பட்ட பின்னர் ரிசர்வ் வங்கி சட்டத்தின் இரண்டாவது அட்டவணையிலிருந்து இலக்ஷ்மி விலாஸ் வங்கியை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நீக்கியுள்ளது.

6. தனிப்பட்ட நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் உதவிகளைக் கண்டறிவதற்காக, CovAid என்றவொரு பிரத்யேக வலைத்தளத்தை அமைத்துள்ள நிறுவனம் எது?

அ) இந்திய உச்ச நீதிமன்றம்

ஆ) ICMR

இ) Give India அறக்கட்டளை

ஈ) NITI ஆயோக்

  • NITI ஆயோக் ஒரு விரிவான நிலையான இயக்க நடைமுறைமூலம், தனிப்பட்ட அமைப்புகளின்மூலம் வரும் அனைத்து உதவிகளையும் கண்காணிப்பதற்காக, ‘CovAid’ என்ற பிரத்யேக வலைத்தளத்தை அமைத்துள்ளது. தற்போதுவரை, உதவிகள் பெறுவதற்கு மூன்றுவழிகள் உள்ளன – அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு, வெளியுறவுத்துறை அமைச்சகம் வழியாக சுகாதார அமைச்சகத்திற்கு வழங்கப்படுவது; தனியார் நிறுவனங்களிடமிருந்து அரசாங்கத்திற்கு கிடைப்பது.
  • COVAID வலைத்தளம் மூலமாகவும், மாநிலங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் CSO ஆகியவற்றின் மூலமாகவும் நன்கொடைகள் பெறப்படுகின்றன.

7. அண்மையில் பதினெட்டு யானைகள் இறந்த குண்டலி காப்புக் காடு அமைந்துள்ள மாநிலம் எது?

அ) கர்நாடகா

ஆ) ஹிமாச்சல பிரதேசம்

இ) அஸ்ஸாம்

ஈ) கேரளா

  • மே.12 இரவு, அஸ்ஸாமின் கத்தியடோலி சரகத்திற்குட்பட்ட குண்டலி காப்புக்காட்டுப்பகுதியில் உள்ள பமுனி மலைப்பகுதியில், 18 யானைகள் இறந்து கிடந்தன. உடற்கூராய்வு பரிசோதனையின் ஆரம்பநிலை கண் -டறிவுகள், இறப்புக்கான காரணம் மின்னல் தாக்குதல் என சுட்டிக்காட்டுகின்றன. மேலும் நுண்ணுயிரியல் மற்றும் நச்சுயியல் பரிசோதனைக் -காக, மாதிரிகள், ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

8. நடப்பாண்டில் (2021) வரும் சர்வதேச குடும்பங்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Families during COVID

ஆ) Families and New Technologies

இ) Family during Quarantine

ஈ) Social Distancing for Families

  • 1993ஆம் ஆண்டில், ஐநா பொது அவை, ஒவ்வோர் ஆண்டும் மே.15’ஐ பன்னாட்டு குடும்பங்கள் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தது. “குடும்பங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள்” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். இது, குடும்பங்களின் நலவாழ்வில் புதிய தொழில்நுட்பங்களின் தாக்கங்களை மையமாகக் கொண்டுள்ளது.

9. எந்த மாநிலத்தின் புதிய மாவட்டமாக மலேர்கொட்லா அறிவிக்கப் -பட்டுள்ளது?

அ) பஞ்சாப்

ஆ) கர்நாடகா

இ) இராஜஸ்தான்

ஈ) உத்தரபிரதேசம்

  • பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங், மலேர்கொட்லாவை அம்மா -நிலத்தின் புதிய மாவட்டமாக அறிவித்தார். அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, மலேர்கொட்லா, பஞ்சாப் மாநிலத்தின் 23ஆ -வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மலெர்கொட்லா – இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நகர -மாகும். இது, சங்ரூர் மாவட்டத்தின் ஒருபகுதியாக இருந்துவந்தது. நாடு விடுதலையடைந்த காலத்தில் பஞ்சாபில் 13 மாவட்டங்கள் இருந்தன.

10. ‘வேளாண் சுற்றுலா கொள்கை’யை நிறைவேற்றிய முதலாவது மாநில அரசு எது?

அ) பஞ்சாப்

ஆ) மகாராஷ்டிரா

இ) இராஜஸ்தான்

ஈ) உத்தரபிரதேசம்

  • மகாராஷ்டிர மாநில அமைச்சரவை விவசாயிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட ஒரு வேளாண் சுற்றுலா கொள்கைக்கு, 2020 செப்டம்பரில் ஒப்புதல் அளித்தது. விவசாய விளைபொருட்களுக்கான சந்தையை வழங்குதல், விவசாயத்துடன் தொடர்புடைய வணிகத்தை ஊக்குவித்தல் மற்றும் கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் இளையோ -ருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் உலக வேளாண் சுற்றுலா நாள் – மே.16 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, மகாராஷ்டிர மாநில அரசும், வேளாண் சுற்றுலா மேம்பாட்டுக்கழகமும் இணைந்து வேளாண் சுற்றுலா தொடர்பான பன்னாட்டு மாநாட்டை நடத்தவுள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. டிஏபி உர மானியம் `1,200ஆக அதிகரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

சா்வதேச சந்தையில் உரங்களின் விலை அதிகரித்துள்ளபோதிலும், டை அமோனியம் பாஸ்பேட் (DAP) உரத்துக்கான மானியத்தை `1,200ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது, 140% அதிகரிப்பாகும். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. அதில், விவசாயிகள் உரத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பயன்படுத்தும் டை அமோனியம் பாஸ்பேட் உரத்துக்கான மானியத்தை 140% உயர்த்துதற்கு முடிவு செய்யப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முடிவால் அரசுக்கு கூடுதலாக `14,775 கோடி செலவாகும். கடந்த ஆண்டு, ஒரு மூட்டை உரத்தின் சந்தை விலை `1,700ஆக இருந்தது. அதில் மூட்டை ஒன்றுக்கு `500 மானியமாக வழங்கப்பட்டது. இதனால் ஒரு மூட்டை உரம் `1,200க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது சர்வதேச அளவில் உரம் மற்றும் ரசாயனங்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகளின் நலன்கருதி, உர மானியத்தை `1,200ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

எனவே, உழவர்கள் பழைய விலையிலேயே தொடர்ந்து உரத்தை வாங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விலையுயர்வால் ஏற்படும் நிதிசுமையை அரசே ஏற்றுக்கொள்கிறது. ஒரே நேரத்தில் இந்த அளவுக்கு உரமானியம் இதுவரை வழங்கப்பட்டதில்லை என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2. மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காக புதுமை திட்டம்: மத்திய அரசு அறிமுகம்

மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காக 6 மாதகால, சமுதாய அடிப்படை -யிலான ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் காணொலிமூலம் இதனை தொடங்கிவைத்தார்.

பயிற்சித்திட்டத்தின் 6 நூல்கள் இந்த விழாவின்போது வெளியிடப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கான பிரச்னைகளை எதிா்கொள்வதிலும், அவர்க -ளை சமுதாயத்துடன் இணைப்பதிலும் ஆஷா மற்றும் அங்கன்வாடி பணி -யாளர்களுடன் இணைந்துபணியாற்ற கூடிய கீழ்நிலை அளவு மறுவாழ் -வு பணியாளர்களை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண் -டுள்ளது. இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அரசுகளுக்கிடையே மாற்றுத் திறனாளிகள் துறையில் ஒத்துழைப்புக்காக 2018ஆம் ஆண்டு கையெழுத் -திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் இந்திய மறுவாழ்வுக் குழு மற்றும் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தால் இப்பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு -ள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிபுணர் குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய மறுவாழ்வுக் குழுவின்கீழ் இயங்கும் மறுவாழ்வு தோ்வுகளுக்கான தேசிய வாரியம் தேர்வுகளை நடத்தி தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கும்.

3. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி: முதல்வர் தொடக்கி வைத்தார்

தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை திருப்பூரில் முதல்வர் மு க ஸ்டாலின் தொடக்கி வைத்தார். சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்ய முதல்வர் மு க ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சேலத்தில் ஆய்வுப்பணிகளை முடித்தபின், திருப்பூர் ஈட்டிவீரம்பாளையத்தில் 18 முதல் 44 வயதுக்கு உள்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடக்கி வைத்தார். இதில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சான்றிதழ்க
-ளையும் முதல்வர் வழங்கினார்.

4. கருப்புப் பூஞ்சை பாதிப்பு: பரவும் நோயாக அறிவித்தது ராஜஸ்தான்

கருப்புப் பூஞ்சை பாதிப்பை, பரவும் ஒரு நோயாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்தது. ராஜஸ்தானில் தற்போது சுமார் 100 பேர் கருப்புப்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கருப்புப் பூஞ்சை பாதிப்பை ‘ராஜஸ்தான் கொள்ளை நோய்த் தொற்று சட்டம் 2020’இன் கீழ் நோயாக அறிவித்து, மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் அகில் அரோரா அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

‘மியூகோர்மைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சையாகும். இந்தப் பூஞ்சை தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பார்வைக் குறைபாடுபோன்ற அறிகுறிகள் உண்டாகும். இந்தப் பூஞ்சை பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம். பெரும்பாலும் கரோனாவில் இருந்து மீண்டவர்களையே தாக்கும் இந்தப் பூஞ்சையால், சர்க்கரை நோயாளிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நோயால் மகாராஷ்டிரத்தில் இதுவரை 52 பேர் உயிரிழந்துவிட்டனர். அதுதவிர ஹரியானா, உத்தரகண்ட் மாநிலங்களுக்கும் இந்நோய் பரவியு -ள்ளது. ஏற்கனவே ஹரியானாவில் ‘பரவும்நோயாக’ அறிவிக்கப்பட்டிருந்த கருப்புப்பூஞ்சை நோய் தற்போது ராஜஸ்தானிலும் அத்தகைய நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5. மே.20 – பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்தநாள்.

1. Which country has coined the name “Tauktae” for the cyclone in Arabian Sea?

A) India

B) Sri Lanka

C) Myanmar

D) Pakistan

  • As per the Indian Meteorological Department (IMD), a low–pressure area which was formed in the Arabian Sea, would evolve into a cyclonic storm and has been given the name “Tauktae”. This name has been coined by Myanmar. This cyclone in Arabia Sea is likely to bring heavy rains in Gujarat, Maharashtra, Goa and south Konkan region.

2. As per the report on environmentally vulnerable cities by Verisk Maplecroft, how many cities among the top 100 are located in Asia?

A) 2

B) 19

C) 56

D) 99

  • Business risk analysts Verisk Maplecroft has recently released a report on the cities which are most vulnerable to environmental hazards. As per the report, among the top 100 vulnerable cities, 99 are located in Asia. Jakarta has topped the list and Delhi has been ranked at No.2. More than 400 large cities across the globe with a total population of 1.5 billion are at “high” or “extreme” risk, as per the report.

3. Two classified Yaogan satellites have been launched by which country?

A) Japan

B) USA

C) China

D) India

  • China has recently launched two classified Yaogan satellites from Xichang Satellite Launch Center in South West China. These satellites were carried by Changsei 2C rocket. The satellites are said to be put for use in electromagnetic environmental surveys and other related technical tests.

4. Which state has launched the “Mahtari Dular Yojna” scheme?

A) Uttarakhand

B) Uttar Pradesh

C) Chhattisgarh

D) Odisha

  • The state Government of Chhattisgarh has launched the scheme named “Chhattisgarh Mahtari Dular Yojna”. Under this scheme, the state would bear the education expenses of the children who have lost parents to COVID–19. A stipend of Rs.500 per month will be paid to such children who are studying in Classes 1 to 8 and Rs.1000 per month for Classes 9 to 12. This scheme is applicable for children studying in both Government and Private schools.

5. A bank mentioned in the Second Schedule of the Reserve Bank of India Act is known as?

A) Co–operative Bank

B) Small Finance Bank

C) Scheduled Commercial Bank

D) Foreign Bank operating in India

  • A bank mentioned in the Second Schedule of the Reserve Bank of India Act is known as ‘Scheduled Commercial Bank’. The Reserve Bank of India (RBI) has excluded Lakshmi Vilas Bank (LVB) from the Second Schedule of the RBI Act after it was merged with DBS Bank India Ltd (DBIL) last year.

6. Which institution has set up a dedicated portal – CovAid, to track aid coming from individual organisations?

A) Supreme Court of India

B) ICMR

C) Give India Foundation

D) NITI Aayog

  • The NITI Aayog has set up a dedicated portal named ‘CovAid’, to track all aid coming via missions or by individual organisations, with a detailed SOP (standard operating procedure). At present, there are three channels for receiving aid – government to government, routed via the Ministry of External Affairs to the Health Ministry; Private to government, through COVAID portal and donations through states, NGOs and CSO.

7. Kundoli Proposed Reserve Forest, where 18 elephants have recent died, is situated in which state?

A) Karnataka

B) Himachal Pradesh

C) Assam

D) Kerala

  • On the night of May 12, as many as 18 elephants died in the Bamuni hillock in the Kundoli Proposed Reserve Forest under the Kathiatoli range, Assam. Initial findings from the post mortem indicate that the reason for the death was a lightning strike. The samples have been sent to laboratories for further microbiological and toxicological examination.

8. What is the theme of the International Day of Families 2021?

A) Families during COVID

B) Families and New Technologies

C) Family during Quarantine

D) Social Distancing for Families

  • In 1993, the UN General Assembly declared that 15 May of every year should be observed as The International Day of Families. The theme of this year’s observance is ‘Families and New Technologies’. It focuses on the impacts of new technologies on the well–being of families.

9. Malerkotla has been announced as the new district of which state?

A) Punjab

B) Karnataka

C) Rajasthan

D) Uttar Pradesh

  • Punjab Chief Minister Amarinder Singh announced Malerkotla as the state’s new district. After a long–pending demand of the people, Malerkotla is named as the 23rd district of the state. Malerkotla is a Muslim majority town and it was a part of Sangrur district. At the time of the country’s Independence Punjab had 13 districts.

10. Which is the first Indian state to pass ‘Agri–Tourism policy’?

A) Punjab

B) Maharashtra

C) Rajasthan

D) Uttar Pradesh

  • The Maharashtra cabinet approved an Agro–tourism policy aimed at empowering farmers, in September 2020. It aims to provide market for agriculture produce, encourage agriculture allied business, and provide employment opportunities to women and youth in rural areas. Every year World Agri–Tourism Day is celebrated on May 16. This year, Government of Maharashtra, Agri–Tourism Development Corporation is to organise International Conference on Agri–Tourism.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!