Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

20th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

20th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 20th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. உலக டுனா நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஏப்ரல்.30

ஆ. மே.02 

இ. ஜூன்.03

ஈ. மே.13

  • ஆண்டுதோறும் மே.2 அன்று உலக டுனா நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 2016 டிசம்பரில் ஐநா பொதுச் சபையால் இந்த நாள் நிறுவப்பட்டது; இது, அழிந்துவரும் இவ்வகை மீனினத்தைப் பாதுகாப்பதற்கும் நீடித்த மீன்பிடி நடைமுறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்குமாக கடந்த 2017 மே 2 அன்று, முதல் முறையாக அனுசரிக்கப்பட்டது. ஐநா சபையின் கூற்றுப்படி, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 7 மில்லியன் மெட்ரிக் டன் சூரை மீன் இனங்கள் பிடிக்கப்படுகின்றன. “Our Tuna, Our Heritage” என்பது இந்த ஆண்டு (2022) கொண்டாடப்பட்ட உலக சூரை மீன்கள் (டுனா) நாளுக்கானக் கருப்பொருளாகும்.

2. ஆண்டுதோறும், ‘உலக கால்நடை நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. ஏப்ரல் மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை 🗹

ஆ. மே மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை

இ. ஜூன் மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை

ஈ. டிசம்பர் மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை

  • ‘உலக கால்நடை நாளானது’ ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் வரும் கடைசி சனியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு (2022), ஏப்ரல்.30 அன்று இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை முன்னிலைப்படுத்தவும் மேம்படுத்தவும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த 1959ஆம் ஆண்டில், உலக கால்நடை சங்கம் ஸ்பெயினின் மாட்ரிட்டில் நிறுவப்பட்டது. “Strengthening Veterinary Resilience” என்பது நடப்பாண்டில் (2022) கடைப்பிடிக்கப்பட்ட உலக கால்நடை நாளுக்கானக் கருப்பொருளாகும்.

3. இந்திய ஆய்வறிஞர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கியூப்சாட் லக்ஷ்யாSAT என்ற நானோ செயற்கைக்கோள், கீழ்காணும் எந்த நாட்டிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது?

அ. அமெரிக்கா

ஆ. ஐக்கிய இராச்சியம் (UK) 

இ. இஸ்ரேல்

ஈ. ஆஸ்திரேலியா

  • ஆந்திர பிரதேசத்தைச்சேர்ந்த செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு ஆய்வறிஞர் சாய் திவ்யா, கியூப்சாட் லக்ஷ்யாசாட் என்ற ஆராய்ச்சி நானோ செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளார். அவர் தனது கியூப்சாட்டின் முன்மாதிரியை ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) அனுப்பியதை அடுத்து, B2ஸ்பேஸ் நிறுவனம் அச்செயற்கைக்கோளை ஏவியது. ஸ்பேஸ் பாக்ஸ் பிளாட்ஃபார்மிற்குள் வைக்கப்பட்ட, ‘கியூப்சாட்’ மாதிரியானது, உயரமான பலூனைப் பயன்படுத்தி அடுக்கு மண்டலத்தின் பல்வேறு அளவுருக்களை சேகரிக்கும் நோக்கோடு அடுக்கு மண்டலத்திற்கு அனுப்பப்பட்டது.

4. ‘Zhongxing 6D’ என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?

அ. இஸ்ரேல்

ஆ. சீனா 

இ. ஜப்பான்

ஈ. தென் கொரியா

  • சீனத்தின் தேசிய விண்வெளி நிர்வாகம் தனது நீண்ட விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய அதே நாளில், இரண்டு திட்டங்களைத் தொடங்கியுள்ளது. வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான சிறப்பு தகவல் தொடர்பு செயற்கைக்கோளான, ‘Zhongxing 6D’ஐ சுமந்துகொண்டு லாங் மார்ச் 3B ஏவுகணை புறப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள் தென்சீனக்கடல், தென்கிழக்காசியா மற்றும் பசிபிக் தீவு நாடுகளில் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகள் மற்றும் உயர் துல்லிய காணொளிகளை வழங்கும்.

5. அண்மையில் ஏவப்பட்ட, ‘NROL-85’ என்பது கீழ்காணும் எந்த நாட்டின் உளவுத்துறை செயற்கைக்கோளாகும்?

அ. அமெரிக்கா 

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. இஸ்ரேல்

ஈ. பிரான்ஸ்

  • ஸ்பேஸ்X ஆனது அமெரிக்க தேசிய உளவு அலுவலகத்திற்காக (NRO) உளவு செயற்கைக்கோளை ஏவியது. NROL-85 விண்கலத்தை ஏற்றிச்செல்வதற்கு இரண்டு-நிலை பால்கன்-9 ஏவுகணை பயன்படுத்தப்பட்டது.

6. சமீப செய்திகளில் இடம்பெற்ற ஹர்ஷதா ஷரத் கருட் என்பவருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. குத்துச்சண்டை

ஆ. பளு தூக்குதல் 

இ. ஸ்குவாஷ்

ஈ. ஹாக்கி

  • ஹர்ஷதா ஷரத் கருட், கிரேக்கத்தில் ஹெராக்லியோனில் நடந்த IWF ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், பளு தூக்குதலில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். அவர் 45-கிலோகிராம் எடைப்பிரிவில் 153-கிலோகிராம் தூக்கி முதலிடம் பிடித்தார். 18 வயதான ஹர்ஷதாவுக்கு முன், IWF ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில், இரண்டு இந்தியர்கள் பதக்கம் வென்றுள்ளனர். 2013-இல் மீராபாய் சானு வெண்கலமும், கடந்த ஆண்டு 2021-இல் அச்சிந்தா ஷூலி வெள்ளிப்பதக்கமும் வென்றிருந்தனர்.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சஜன் பிரகாஷ் மற்றும் வேதாந்த் மாதவன் ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. நீச்சல் 

ஆ. மட்டைப்பந்து

இ. குத்துச்சண்டை

ஈ. பூப்பந்து

  • டென்மார்க்கின் கோபன்கேகனில் நடைபெற்ற டேனிஷ் ஓப்பன் நீச்சல் போட்டியில் இந்தியாவின் முன்னணி நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் ஆடவருக்கான 200 மீட்டர் பட்டர்பிளை தங்கப்பதக்கத்தையும், ஆண்களுக்கான 1500 மீட்டர் பிரீஸ்டைல் போட்டியில் வேதாந்த் மாதவன் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர். கேரளாவைச் சேர்ந்த 28 வயது நீச்சல் வீரரான சஜன் பிரகாஷ், பிரீஸ்டைல், பட்டர்பிளை மற்றும் மெட்லி போட்டிகளில் நிபுணத்துவம் பெற்றவர். 16 வயதான வேதாந்த் மாதவன், 2021 மார்ச்சில் லாட்வியா ஓப்பனில் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார். கடந்த ஆண்டு ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் ஏழு பதக்கங்களை வென்றார்.

8. பேரிடர் தாங்கும் உட்கட்டமைப்புக்கான சர்வதேச மாநாட்டை நடத்திய நாடு எது?

அ. பிரான்ஸ்

ஆ. ஐக்கிய இராச்சியம் (UK)

இ. இந்தியா 

ஈ. நியூசிலாந்து

  • பேரிடர் தாங்கும் உட்கட்டமைப்புக்கான கூட்டணியானது (CDRI) புது தில்லியில் பேரிடர் தாங்கும் உட்கட்டமைப்பு (ICDRI) பற்றிய சர்வதேச மாநாட்டை நேரடி மற்றும் இணையவழி முறைமைகளில் நடத்தியது. இது அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் மற்றும் கானா மற்றும் மடகாஸ்கர் அதிபர்கள் கலந்துகொண்டனர். இந்தியா, COP26 2021-இல், ‘நெகிழ்திறன்மிக்க தீவு நாடுகளுக்கான உட்கட்டமைப்பு’ என்ற முன்னெடுப்பைத் தொடங்கியது.

9. 2022-இல் நடைபெற்ற இரண்டாவது ‘இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டை’ நடத்திய நாடு எது?

அ. பின்லாந்து

ஆ. நெதர்லாந்து

இ. டென்மார்க் 

ஈ. பெல்ஜியம்

  • டென்மார்க் தலைநகரம் கோபன்கேகனில் நடைபெற்ற இரண்டாவது இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டின்போது டென்மார்க், சுவீடன், பின்லாந்து, நார்வே மற்றும் ஐஸ்லாந்து பிரதமர்களுடன் உக்ரைன் நிலவரங்கள் குறித்து அவர் விவாதித்தார். இந்தியாவும் டென்மார்க்கும் சுமார் ஒன்பது ஒப்பந்தங்களில் அப்போது கையெழுத்திட்டன. அவற்றுள் பசுமை உத்திகள், இடம்பெயர்வு மற்றும் நகர்வு, கலாச்சார பரிமாற்றத்திட்டம் போன்றவை அடங்கும்.

10. 2022-இல் FIFA U-17 மகளிர் உலகக்கோப்பையை நடத்தும் நாடு எது?

அ. பிரேசில்

ஆ. இந்தியா 

இ. கனடா

ஈ. கிரேக்கம்

  • நடப்பு 2022ஆம் ஆண்டில், FIFA U-17 மகளிர் உலகக்கோப்பையை இந்தியா நடத்துகிறது. இந்த நிகழ்வானது புவனேசுவரம், கோவா மற்றும் நவி மும்பை ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும். போட்டிக்கான டிரா, ஜூன்.24 அன்று சூரிச்சில் நடைபெறும். இப்போட்டியை நடத்தும் இந்தியா மற்றும் பிரேசில், சிலி, சீனா PR, கொலம்பியா, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து ஆகிய ஆறு நாடுகள் இப்போட்டியில் கலந்துகொள்வதை உறுதி செய்துள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. ஆ இரா வேங்கடாசலபதிக்கு இயல் விருது

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் 2021ஆம் ஆண்டுக்கான, ‘இயல் விருது’ தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டு ஆய்வாளரான ஆ இரா வேங்கடாசலபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல கட்டுரை பிரிவில் நீதிபதி சந்துருவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்பைச் செலுத்தியவர்களுக்கு ‘இயல் விருது’ என்ற பெயரில் வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனை விருது வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழின் மிக முக்கியமான விருதாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஆ இரா வேங்கடாசலபதிக்கு 2021-ஆம் ஆண்டுக்கான ‘இயல் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. புனைவு இலக்கியப் பிரிவில் பா அ ஜயகரன், கவிதைப்பிரிவில் ஆழியாள், கட்டுரைப்பிரிவில் நீதிபதி சந்துரு, மொழிபெயர்ப்புப்பிரிவில் மார்த்தா ஆன் செல்பி ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

‘இயல் விருதை’ ஏற்கெனவே, சுந்தரராமசாமி, அம்பை, ஐராவதம் மகாதேவன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், சுகுமாரன், எஸ் இராமகிருஷ்ணன், இமையம், வண்ணதாசன், சு வெங்கடேசன் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.

2. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4%: ஐநா கணிப்பு

உக்ரைன்-ரஷியா இடையேயான போர்ச்சூழல் காரணமாக நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதம் அளவுக்கே இருக்கும் என ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐநாவின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை வெளியிட்ட பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பெருந்தொற்றின் பாதிப்பிலிருந்து மீண்டுவரும் உலக பொருளாதாரத்தை உக்ரைன்-ரஷியா இடையே நீடித்து வரும் போர் நிலைகுலையச் செய்துள்ளது. உணவு மற்றும் இதர பொருள்களின் விலை அதிகரிப்புக்கு காரணமாகியுள்ளதுடன் பணவீக்கத்தைத் தூண்டி உலக நாடுகளை அழுத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், ஐரோப்பாவில் நெருக்கடிகளை தூண்டிவிட்டுள்ளது.

2022 ஜனவரியில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டில் சர்வதேச பொருளாதாரம் 4.0 சதவீதம் அளவுக்கு வளர்ச்சிகாணும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது சர்வதேச நிலவரங்கள் முற்றிலும் மாறியுள்ளதால் உலகப் பொருளாதரம் 3.1 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரையில், அதிக பணவீக்கம், வேலைவாய்ப்பு சந்தையில் காணப்படும் சமச்சீரற்ற மீட்சி நிலையால் தனியார் நுகர்வு மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளில் பாதிப்பு ஆகியவற்றுக்கிடையிலும் வேகமாக வளர்ச்சி கண்டு வரும் மிக முக்கிய பொருளாதார நாடாக இன்னும் உள்ளது.

கடந்த ஆண்டில் இந்தியா 8.8 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், நடப்பாண்டில் 6.4 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2023 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மேலும் சரிந்து 6 சதவீதமாகும். உணவு மற்றும் எரிபொருள்களின் விலை அதிகரிப்பால், உலக பணவீக்கம் 2022-இல் 6.7 சதவீதமாக அதிகரிக்கும். இது, 2010-2020 ஆண்டுகளுக்கிடையில் காணப்பட்ட சர்வதேச பணவீக்கமான 2.9 சதவீதத்தைக் காட்டிலும் இருமடங்கு அதிகம் என ஐநா ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. உலக சாம்பியன் நிகாத் ஜரீன்

இஸ்தான்புல்லில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நிகாத் ஜரீன் வாகை சூடினார். இப்போட்டியில் சாம்பியன் ஆன 5-ஆவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், இறுதிச்சுற்றில் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் ஜித்போங் ஜுடாமûஸ தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றார். நிகாத் ஜரீனுக்கு முன், மேரி கோம் (2002, 2005, 2006, 2008, 2010, 2018), சரிதா தேவி (2006), ஜெனி R L (2006), லேகா K C (2006) ஆகியோர் மட்டுமே உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளாவர். இந்த ஆண்டு போட்டியில் நிகாத் ஜரின் தவிர்த்து, மனீஷா மெளன் (57 கிலோ), பர்வீன் ஹூடா (63 கிலோ) ஆகியோர் வெண்கலம் வென்றிருந்தனர்.

4. துப்பாக்கி சுடுதல்: இந்தியா முதலிடம்

சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் (ISSF) நடத்திய ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா 33 பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்து நிறைவுசெய்துள்ளது. ஜெர்மனியில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியாவின் பதக்க வரிசையில் 13 தங்கம், 15 வெள்ளி, 5 வெண்கலம் அடங்கும்.

5. காற்று மாசு உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா

அனைத்து விதமான மாசுபாடு காரணமாக உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் 23.5 இலட்சம் பேர் உயிர் இழந்திருப்பது தெரியவந்துள்ளது. உலக அளவில் இந்த எண்ணிக்கை 90 இலட்சமாக உள்ளது. இதில் காற்று மாசு முக்கியப்பங்கு வகிக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த “தி லான்செட்” மருத்துவ இதழ் உலகம் முழுவதும் மாசுபாடுகள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து ஆய்வு நடத்தி, அது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் வாகனப்போக்குவரத்து மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றால் ஏற்படும் காற்று மாசுவும் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலிடத்தில் இந்தியா: உலக அளவில் 2019ஆம் ஆண்டில் அனைத்து வகையான மாசுபாட்டுக்கு 90 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதில் வீடுகளிலிருந்து ஏற்படும் காற்று மாசு மற்றும் சுற்றுப்புற காற்று மாசு காரணமாக மட்டும் 66.7 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இந்தியா 23.5 இலட்சம் உயிரிழப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதில் சுற்றுப்புறச்சூழல் மாசுபாடு காரணமாக 9.8 இலட்சம் உயிரிழப்புகளும், வீடுகளினால் ஏற்படும் காற்று மாசு காரணமாக 6.1 இலட்சம் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவில் காரணம் என்ன? இந்தியாவைப் பொருத்தவரை வீடுகளில் விறகுகள் உள்ளிட்ட உயிரிக்கழிவுகள் எரிக்கப்படுவதே காற்று மாசுவுக்கு மிக முக்கியக் காரணமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, நிலக்கரி எரிப்பது, பயிர்க்கழிவுகளை எரிப்பது உள்ளிட்ட காரணங்களால் காற்று மாசு ஏற்படுகிறது.

காற்று மாசு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு தேசிய தூய்மை காற்று திட்டம் அறிமுகம், தேசிய தலைநகர பிராந்திய பகுதியில் காற்று தர மேலாண்மை ஆணையம் அமைத்தது, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமான நடவடிக்கைகள் எனப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதும், காற்று மாசுவைக் கட்டுப்படுத்த வலுவான மையப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதன் காரணமாக, ஒட்டுமொத்த காற்றின் தரத்தின் மேம்பாடு குறைவாகவும், சீரற்றதாகவும் உள்ளது.

`357 லட்சம் கோடி இழப்பு

மாசுபாட்டால் ஏற்பட்டிருக்கும் கூடுதல் உயிரிழப்புகள் காரணமாக உலக அளவில் 2019ஆம் ஆண்டில் `357 லட்சம் கோடி (4.6 டிரில்லியன் டாலர்) மதிப்பில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மொத்த உலகப் பொருளாதாரத்தில் 6.2 சதவீதமாகும். இந்தியாவில் காற்று மாசு, ஓசோன் மாசு, தொழில்சார் புற்றுநோய்கள் உள்ளிட்ட நவீன வடிவ மாசுபாடு காரணமாக ஏற்படும் பொருளாதார இழப்பு 2000-2019ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

நீர்நிலை மாசுபாடு

காற்று மாசுவுக்கு அடுத்தபடியாக நீர்நிலை மாசுபாடு காரணமாக உலக அளவில் 13.6 இலட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

1. When is the ‘World Tuna Day’ celebrated every year?

A. April.30

B. May.02 

C. June.03

D. May.13

  • World Tuna Day on May 2 was established in December 2016 by the United Nations General Assembly, with an aim to preserve endangered species and to highlight the importance of sustainable fishing practices On May 2– 2017, the first World Tuna Day was observed. As per the UN, around 7 million metric tons of tuna and tuna–like species are harvested every year. This year it is being celebrated under the theme “Our Tuna, Our Heritage”.

2. When is the ‘World Veterinary Day’ annually observed?

A. Last Saturday of April 

B. Last Saturday of May

C. Last Saturday of June

D. Last Saturday of December

  • ‘World Veterinary Day’ is annually observed on the last Saturday of April. This year, it fell on April 30. The day aims to highlight and promote the work performed by veterinarians all over the world. In 1959, World Veterinary Association (WVA) was founded in Madrid, Spain. This year it is being observed under the theme, “Strengthening Veterinary Resilience”.

3. CubeSat LakshyaSAT, a nano–satellite built by an Indian Research Scholar, was launched from which country?

A. USA

B. UK 

C. Israel

D. Australia

  • Sai Divya, research scholar in Satellite Communications from Andhra Pradesh has developed CubeSat LakshyaSAT, research nano–satellite. After she sent the prototype of the Cubesat to the UK, B2Space Company launched the satellite. The CubeSat model, placed inside a space box platform, was sent to the stratosphere to collect various parameters of the stratosphere using a high–altitude balloon.

4. Which country launched the ‘Zhongxing 6D’ communication satellite?

A. Israel

B. China 

C. Japan

D. South Korea

  • The China National Space Administration launched the two missions, on the same day of successful landing of its longest astronaut mission yet. A Long March 3B rocket lifted off carrying the Zhongxing 6D a special communication satellite for radio and television programs.
  • The satellite will provide high–definition video; radio and television broadcast services across the South China Sea, Southeast Asia and Pacific Island countries. A Long March 4C rocket launched a new atmosphere monitoring satellite into orbit.

5. NROL–85, which was launched recently, is an intelligence satellite of which country?

A. USA 

B. UAE

C. Israel

D. France

  • SpaceX launched a spy satellite for the US National Reconnaissance Office (NRO). A two–stage Falcon 9 rocket was used to carry the NROL–85 spacecraft.

6. Harshada Sharad Garud, who was seen in the news, is associated with which sports?

A. Boxing

B. Weight–Lifting 

C. Squash

D. Hockey

  • Harshada Sharad Garud made history by becoming the first Indian to win a gold medal in Weightlifting, at the IWF Junior World Championships at Heraklion in Greece. She lifted 153–kilogram in the 45–kilogram weight category, to finish on top of the podium. Before the 18–year–old sportsperson, there are only two Indians to win a medal in IWF Junior World Championships. Mirabai Chanu had won a bronze in 2013 and Achinta Sheuli won a silver medal last year.

7. Sajan Prakash and Vedaant Madhavan, who were seen in the news, are associated with which sports?

A. Swimming

B. Cricket

C. Boxing

D. Badminton

  • Top Indian swimmer Sajan Prakash won the men’s 200m butterfly gold and Vedaant Madhavan bagged silver medal in the men’s 1500m freestyle event at the Danish Open swimming meet in Copenhagen, Denmark.
  • Sajan Prakash is a 28–year–old swimmer from Kerala, who specialises in freestyle, butterfly and medley events. 16–year–old Vedaant Madhavan, had won a bronze medal at the Latvia Open in March 2021, won seven medals in Junior National Aquatic Championships last year.

8. Which country hosted the ‘International Conference on Disaster Resilient Infrastructure (ICDRI)’?

A. France

B. UK

C. India 

D. New Zealand

  • Coalition for Disaster Resilient Infrastructure (CDRI) hosted the International Conference on Disaster Resilient Infrastructure (ICDRI), in New Delhi, in both offline and online modes. It is being hosted in collaboration with the United States government. The conference was attended by the Prime Ministers of India, Australia and Japan, as well as Presidents of Ghana and Madagascar. India launched the initiative on ‘Infrastructure for Resilient Island States’ at COP26 2021

9. Which country is the host of second ‘India–Nordic Summit’ held in 2022?

A. Finland

B. Netherlands

C. Denmark 

D. Belgium

  • Prime Minister Narendra Modi recently attended the second India–Nordic Summit in Copenhagen, Denmark. He discussed the situation in Ukraine with the Prime Ministers of Denmark, Sweden, Finland, Norway and Iceland during the summit. India and Denmark signed nine agreements including that on Centre of Excellence in Green Shipping, on Migration and Mobility, Cultural Exchange Programme (CEP), etc.

10. Which country is the host of FIFA U–17 Women’s World Cup in 2022?

A. Brazil

B. India 

C. Canada

D. Greece

  • India is the host of FIFA U–17 Women’s World Cup in 2022 and the event will be held across three venues – Bhubaneswar, Goa and Navi Mumbai. The draw for the tournament will be held in Zurich on June 24. Host India and six other countries – Brazil, Chile, China PR, Colombia, Japan and New Zealand have been confirmed for the competition so far.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!