Tnpsc

20th October 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. ‘ஊழல் ஏற்றுமதி 2020’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்

ஆ. UNESCO

இ. உலக வர்த்தக அமைப்பு

ஈ. UNCTAD

  • பெர்லினில் உள்ள ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழுவான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தனது அண்மைய ஆய்வை, “ஏற்றுமதி ஊழல் 2020: OECD கையூட்டு ஒழிப்பு தீர்மானத்தின் அமலாக்கத்தை மதிப்பிடுதல்” என்ற தலைப்பில் வெளியிட்டது. ஆய்வின்படி, சீனா, ஜப்பான், நெதர்லாந்து, தென்கொரியா, ஹாங்காங், கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகியவற்றுடன் மிக மோசமான பதிவுகளைக்கொண்ட மிகப் பெரிய உலகளாவிய ஏற்றுமதியாளர்களுள் ஒன்றாக இந்தியா உள்ளது.
  • இந்திய ஏற்றுமதியாளர்கள் அயல்நாட்டு அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுப்பதைத் தடுப்பதற்கான எந்த ஒரு வழிமுறையும் இந்தியாவில் இல்லை என்பதையும் அவ்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

2. பன்னாட்டுச் செலவாணி நிதியம் (IMF) வெளியிட்டுள்ள, “உலக பொருளாதார கண்ணோட்டம்–2020” அறிக்கையின் தலைப்பு என்ன?

அ. A Long and Difficult Ascent

ஆ. Pandemic and Global Economy

இ. Tackling the Economic Crisis

ஈ. Longway Ahead

  • பன்னாட்டுச் செலவாணி நிதியம், “A Long and Difficult Ascent” என்ற தலைப்பில் “உலக பொருளாதார கண்ணோட்டம்-2020” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 10.30 சதவிகித அளவுக்கு குறுகிவிடும். நடப்பாண்டு (2020) உலகளாவிய வளர்ச்சி – 4.4 சதவிகித அளவுக்கு (குறுக்கம்) இருக்கும் என அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

3. உலைச்சாம்பலை வழங்குவதற்காக நாடு முழுவதுமுள்ள சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள இந்திய எரிசக்தி உற்பத்தி நிறுவனம் எது?

அ. அதானி பவர்

ஆ. TATA பவர்

இ. NTPC

ஈ. ரிலையன்ஸ் பவர்

  • நாட்டின் மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தி நிறுவனமும், மத்திய எரிசக்தி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமுமான NTPC லிமிடெட், நாடு முழுவதுமுள்ள சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் இணைந்து, சாம்பலை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச்செல்லும் பணியை தொடங்கியுள்ளது.
  • மின்னுற்பத்தி ஆலைகளிலிருந்து உலைச்சாம்பலை 100 சதவிகிதம் பயன்படுத்துவதற்கான NTPC’இன் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் பரந்து விரிந்த வலைப்பின்னலை பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும், குறைந்த செலவிலும் சாம்பலை நாடு முழுவதும் NTPC எடுத்துச்செல்கிறது. சிமென்ட் உற்பத்தியாளர்களுக்கு பதப்படுத்தப்பட்ட உலைச் சாம்பலை அனுப்பிய முதல் மின்னுற்பத்தி நிலையமாக உபி’இல் உள்ள NTPC ரிஹந்த் திகழ்கிறது.

4. AYUSH அமைச்சகத்தின் மண்டல மூல மருந்துக் களஞ்சியம் நிறுவப்பட்டுள்ள இடம் எது?

அ. சென்னை

ஆ. மும்பை

இ. கொல்கத்தா

ஈ. தில்லி

  • AYUSH திட்டத்தின்கீழ் சென்னையில் மண்டல மூலமருந்துக்களஞ்சியத்தை (Regional Raw Drug Repository – RRDR) மத்திய AYUSH அமைச்சகம் தொடங்கியுள்ளது. தேசிய AYUSH இயக்கத்தின்கீழ் மூலிகைத் தாவரங்களைப் பயிரிடுவதில் மண்டல மூலமருந்துக்களஞ்சியம் முக்கியப்பங்கு வகிக்கிறது. சென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. தென் மண்டலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மூலமருந்துகளைப் பாதுகாக்கவும், ஆவணப்படுத்தவும் இது ஏதுவாக இருக்கும்.

5. ஈராண்டுகாலத்திற்கு பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடு எது?

அ. பிஜி

ஆ. மொரீஷியஸ்

இ. இந்தியா

ஈ. நைஜர்

  • பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில், முப்பத்து நான்கு உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்தக்கூட்டத்தில், தலைவர் மற்றும் துணைத்தலைவராக இந்தியா மற்றும் பிரான்ஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
  • ஈராண்டு காலத்துக்கு இந்தப் பதவியில் இந்தியாவும், பிரான்சும் இருக்கும். ஆசிய-பசிபிக் பகுதிக்கு, பிஜி மற்றும் நெளரு, ஆப்பிரிக்காவுக்கு மொரீசியஸ் மற்றும் நைஜர், ஐரோப்பா மற்றும் இதர பகுதிகளுக்கு இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிக்கு கியூபா மற்றும் கயானா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் துணைத் தலைவர்களாக தேர்வுசெய்யப்பட்டனர்.

6. ‘அங்கிகார்’ திட்டம் குறித்த தேசிய அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சு

ஆ. வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

இ. மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. நிதி அமைச்சகம்

  • கடந்த 2019ஆம் ஆண்டில், ‘அங்கிகார்’ திட்டம் தொடங்கப்பட்டது; இதன்கீழ், பிரதமர் ஆவாஸ் திட்டத்தின் பயனாளிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு பிற நலத்திட்டங்களுக்கு அணுகல் வழங்கப்படுகிறது. மத்திய வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஓர் இணையவழி கருத்தரங்கில் பங்கேற்றார்; அப்போது, கட்டுப்படியாகக்கூடிய வாடகை வீட்டுவசதி வளாகங்களுக்கான வலைத்தளத் -தை அவர் தொடங்கிவைத்தார். இந்தக் கருத்தரங்கத்தின்போது, அவர், ‘ANGIKAAR’ திட்டம் குறித்த தேசிய அறிக்கையையும் வெளியிட்டார்.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற நகர்னர் எஃகு ஆலை அமைந்துள்ள மாநிலம் எது?

அ. மேற்கு வங்கம்

ஆ. சத்தீஸ்கர்

இ. குஜராத்

ஈ. ஒடிசா

  • தேசிய கனிம மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து (NMDC), நகர்னர் எஃகு ஆலையை (NSP) பிரிக்கவும், அதிலுள்ள நடுவணரசின் பங்குகளை முழுமையாக விற்கவும், பிரதமர் திரு. மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்கட்கான அமைச்சரவைக்குழு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது.
  • NSP பங்குகளை, NMDC’இன் கிளை நிறுவனமாக விற்பனை செய்ய கடந்த 2016ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த முடிவில் திருத்தஞ்செய்து, NSP நிறுவனத்தை தனி நிறுவனமாக பிரித்து அதன் பங்குகளை விற்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் செயல்முறை 2021 செப்டம்பருக்குள் நிறைவடையும் என எண்ணப்படுகிறது.

8. ஆப்பிரிக்காவின் மிகவுயர்ந்த சிகரமான கிளிமஞ்சாரோ அமைந்துள்ள நாடு எது?

அ. தென்னாப்பிரிக்கா

ஆ. தான்சானியா

இ. ஜிம்பாப்வே

ஈ. நைஜீரியா

  • கிளிமஞ்சாரோ சிகரம் தான்சானியாவில் அமைந்துள்ள ஒரு செயற்பாடற்ற எரிமலையாகும. இது, ஆப்பிரிக்காவின் மிகவுயர்ந்த சிகரமும் உலகின் மிகவுயர்ந்த தனித்த மலையுமாகும். அண்மையில், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், செய்திகளின்படி, ‘கிபுனிகா மலை’ என்று அழைக்கப்படும் பகுதி இன்னும் எரிந்துகொண்டுதான் உள்ளது. இந்தத் தீயில், 28 சகிமீ பரப்பளவில் இருந்த தாவரங்கள் தீக்கு இரையானதாக கூறப்படுகிறது.

9. கீழ்க்காணும் எந்த நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான முதலாவது மருந்தாக, ‘Inmazeb’ என்ற மருந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது?

அ. COVID-19

ஆ. எபோலா

இ. டெங்கு

ஈ. தட்டம்மை

  • ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒழுங்குமுறை அமைப்பான உணவு மற்றும் மருந்து நிர்வாகம், எபோலா சிகிச்சைக்கான முதலாவது மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ‘Inmazeb’ என்ற பெயரிலான இம்மருந்து ரீஜெனரான் மருந்துகள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. பிற சிகிச்சை முறைகளை ஒப்பிடும் போது, நோயாளிகளின் உயிர்வாழ்வு விகிதம் இந்த மருந்தில் அதிகமாக உள்ளது. காங்கோவில் ஈராயிரத்துக்கும் மேற்பட்டோரின் மரணத்திற்கு காரணமாக இருந்த எபோலா நோய்த்தொற்றின்போது இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டது.

10. பன்னாட்டுச் செலவாணி நிதியம் வெளியிட்டுள்ள, ‘உலக பொருளாதார கண்ணோட்டம்-2020’இன் படி, 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்னவாக இருக்கும்?

அ. USD 1800

ஆ. USD 1855

இ. USD 1877

ஈ. USD 2000

  • பன்னாட்டுச் செலவாணி நிதியத்தால் (IMF) அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ‘உலக பொருளாதார கண்ணோட்டம்–2020’இன்படி, இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2020ஆம் ஆண்டில் $1877 டாலராக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2020ஆம் ஆண்டில் $1888 டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இது, இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாகும். இந்த அறிக்கையின்படி, COVID-19 தொடர்பான நாடடங்கு மற்றும் பொருளாதார மந்தநிலையின் விளைவே தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் இந்த வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.

1. ‘Exporting Corruption 2020’ is a report released by which organisation?

[A] Transparency International

[B] UNESCO

[C] World Trade Organization

[D] UNCTAD

  • The Berlin–based Anti–corruption watchdog Transparency International released its recent study entitled ‘Exporting Corruption 2020: Assessing Enforcement of the OECD Anti–Bribery Convention’. As per the study, India is one among the biggest global exporters with the worst track records along with China, Japan, the Netherlands, South Korea, Hong Kong, Canada and Mexico. It also revealed that India lacks a mechanism to crack down on bribery of foreign officials by its exporters.

2. What is the title of the “World Economic Outlook 2020” report released by IMF?

[A] A Long and Difficult Ascent

[B] Pandemic and Global Economy

[C] Tackling the Economic Crisis

[D] Longway Ahead

  • The International Monetary Fund has released the “World Economic Outlook 2020” report titled “A Long and Difficult Ascent”. As per the report, the Indian economy would contract by 10.30% for FY 2020–21. The report has estimated the global growth to be – 4.4% (contraction) for this year.

3. Which Power producer of India has tied up with Cement manufacturers across the country for supply of ash?

[A] Adani Power

[B] TATA Power

[C] NTPC

[D] Reliance Power

  • India’s largest power producer NTPC Ltd has tied up with Cement manufacturers across the country to supply fly ash. This is a part of NTPC’s objective to achieve % by–product utilisation. NTPC is using the services of Indian Railways to transport fly ash from its thermal power plants to various cement plants. NTPC Rihand is the first power plant in Uttar Pradesh to send conditioned fly ash to cement manufacturers.

4. Where is the Regional Raw Drug Repository (RRDR) of the Ministry of AYUSH established?

[A] Chennai

[B] Mumbai

[C] Kolkata

[D] Delhi

  • Regional Raw Drug Repository (RRDR) of the Ministry of Ayush has been inaugurated at National Institute of Siddha – Chennai, Tamil Nadu. This repository will play an important role in medicinal plant cultivation. The RRDRwould help in collection, documentation, and authentication of raw drugs from the Southern Plateau Region.

5. Which country has been elected as the President of International Solar Alliance (ISA), for a term of two years?

[A] Top of Form

Fiji

[B] Mauritius

[C] India

[D] Niger

  • During the third assembly of International Solar Alliance, India and France were re–elected as the President and co–President of ISA for a term of two years. The representatives of Fiji and Nauru for Asia–Pacific, Mauritius and Niger for Africa, the UK and the Netherlands for Europe and others, Cuba and Guyana for Latin America and the Caribbean are elected as Vice–Presidents.

6. A National report on ‘ANGIKAAR’ campaign was released recently. The campaign is associated with which Ministry?

[A] Ministry of Social Justice and Empowerment

[B] Ministry of Housing and Urban Affairs

[C] Ministry of Electronics and IT

[D] Ministry of Finance

  • ANGIKAAR–campaign was launched in 2019, under which the beneficiaries of Pradhan Mantri Awas Yojana (PMAY) are trained and given access to other welfare schemes. The Union Minister of State (IC) for Housing and Urban Affairs Hardeep Singh Puri participated in a webinar to launch a portal for Affordable Rental Housing Complexes (ARHCs). During the webinar, he also launched a national report on ANGIKAAR campaign.

7. Nagarnar Steel Plant (NSP), which was seen in the news recently, is located in which state?

[A] West Bengal

[B] Chhattisgarh

[C] Gujarat

[D] Odisha

  • The Cabinet Committee on Economic Affairs (CCEA) gave in–principle approval to the demerger of Chhattisgarh–based Nagarnar Steel Plant (NSP) from National Minerals Development Corporation (NMDC). It also approved the strategic disinvestment of the demerged company by selling the entire government stake to a strategic buyer. This process is expected to be completed by September 2021. Earlier in 2016, it had been decided to disinvest NSP as a unit of NMDC.

8. Africa’s tallest mountain, the Mount Kilimanjaro is located in which country?

[A] South Africa

[B] Tanzania

[C] Zimbabwe

[D] Nigeria

  • Mount Kilimanjaro is a dormant volcano located in Tanzania. It is also the tallest mountain of Africa and the highest single free–standing mountain in the world. Recently, over 500 volunteers have been trying to put out a fire on the Mount Kilimanjaro. Thought the fire spread could be controlled, the area known as ‘Kifunika Hill’ was still burning, as per the news. The fire is said to have consumed 28 square kilometers of vegetation.

9. A drug named ‘Inmazeb’ has been approved as the first drug for treating which disease?

[A] COVID–19

[B] Ebola

[C] Dengue

[D] Measles

  • The United States regulator body Food and Drug Administration (FDA) has approved the first drug for the treatment of Ebola. The drug named ‘Inmazeb’ has been developed by Regeneron Pharmaceuticals increased the survival rate in participants than other treatments. The drug was tested during an outbreak in Congo that killed over 2000 people.

10. As per the World Economic Outlook 2020 released by IMF, what would be the Per Capita GDP of India in 2020?

[A] USD 1800

[B] USD 1855

[C] USD 1877

[D] USD 200

  • As per the World Economic Outlook 2020 released by the International Monetary Fund (IMF) recently, India’s Per Capital GDP is expected to fall to USD 1877 in the year 2020. The corresponding figure for Bangladesh is USD 1888, indicating that the per capita GDP for Bangladesh would be more than that of India in 2020. As per the report, India’s fall in per capita GDP is a result of COVID 19 related lock–down and economic slowdown.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!