Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

20th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

20th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 20th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சமீபத்தில் “மகாரத்னா” அந்தஸ்து கிடைக்கப்பெற்ற பொதுத்துறை நிறுவனம் எது?

அ) பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் 

ஆ) இந்திய விமான நிலையங்கள் ஆணையம்

இ) பாரத் டைனமிக்ஸ் லிட்

ஈ) BEML லிட்

  • பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனுக்கு (PFC) மத்திய அரசு “மகரத்னா” அந்தஸ்தை வழங்கியுள்ளது. ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், SAIL போன்ற உயரடுக்கு குழுவில் சேர்ந்து, இவ்வந்தஸ்தைப் பெறும் 11 ஆவது பொதுத்துறை நிறுவனம் PFC மாறியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு `5,000 கோடிக்கு மேல் நிகர இலாபத்தை பதிவு செய்த ஒரு நிறுவனத் –திற்கு “மகரத்னா” அந்தஸ்து வழங்கப்படுகிறது.

2. 2021 – உலக கீல்வாத நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Don’t Delay, Connect Today: Time2Work 

ஆ) Leaving No one behind

இ) Misdiagnosis in Arthritis

ஈ) 25 years of Arthritis Day

  • வாத மற்றும் தசைக்கூட்டு நோய்களின் இருப்பு மற்றும் தாக்கம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒவ்வோர் ஆண்டும் அக்.12 அன்று உலக கீல்வாத நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள், முதன்முதலில் கடந்த 1996’இல் அனுசரிக்கப்பட்டது. “Don’t Delay, Connect Today: Time2Work” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும்.

3. மத்திய உள்துறை அமைச்சகமானது கூர்கா பிரதிநிதிகள் மற்றும் எந்த மாநில அரசுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையை தொடங்கியது?

அ) ஒடிஸா

ஆ) மேற்கு வங்கம் 

இ) அஸ்ஸாம்

ஈ) ஜார்க்கண்ட்

  • மத்திய உள்துறை அமைச்சகமானது டார்ஜிலிங் குன்றுகள், டெர்ராய் மற்றும் தூர்ஸ் பிராந்தியத்தின் கூர்கா பிரதிநிதிகள் மற்றும் மே. வங்க மாநில அரசாங்கத்துடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.
  • வட வங்கப் பிராந்தியத்தில் மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேற்கு வங்க மாநில அரசாங்க அதிகாரிகளுடனான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை, 2021 நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

4. ‘செந்நாய்’ என்றும் அழைக்கப்படுகிற விலங்கினம் எது?

அ) ஆசிய காட்டு நாய் 

ஆ) கழுதைப்புலி

இ) தென்னாப்பிரிக்க ஓநாய்

ஈ) ஆப்பிரிக்க யானை

  • ‘செந்நாய்’ (Cuon alpinus) என்பது மத்திய, தெற்கு, கிழக்கு & தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு விலங்கு ஆகும். ஆசிய காட்டு நாய், இந்திய காட்டு நாய், விசில் நாய், சிவப்பு நாய் மற்றும் மலை ஓநாய் ஆகியவை இவ்வினங்களுக்கான பிறபெயர்களாகும். இது வனவுயிரிச் (பாதுகாப்பு) சட்டம், 1972’இன்கீழ் உள்ள அட்டவணை–II இனமாகும்.
  • சமீபத்திய ஆய்வில், 114 முன்னுரிமைகொண்ட வட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு செந்நாய் அல்லது ஆசிய காட்டு நாயின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வாழ்விடங்களை ஒருங்கிணைக் –க முடியும். இவ்விலங்குகள் இந்தியா முழுவதும் காணப்படுகின்றன.

5. புதிய நோய்க்கிருமிகளின் தோற்றுவாய் (SAGO) குறித்த அறிவியல் ஆலோசனைக் குழுவை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?

அ) UNICEF

ஆ) உலக நலவாழ்வு நிறுவனம் 

இ) உணவு & உழவு அமைப்பு

ஈ) ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்

  • உலக நலவாழ்வு அமைப்பின் தலைமை இயக்குநர் புதிய நோய்க்கிருமி –களின் தோற்றுவாய் (SAGO) குறித்த WHO அறிவியல் ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளார். வளர்ந்துவரும் & மீண்டும் தோன்றுகின்ற நோய்க்கிருமிகள்பற்றிய தொழில்நுட்ப மற்றும் அறிவியல் பரிசீலனைகள் குறித்து SAGO, செயலகத்திற்கு ஆலோசனை வழங்கும். ஓர் இந்திய தொற்றுநோயியல் நிபுணரான Dr இராமன் கங்காகேட்கர், COVID–19 தொற்றுநோயின் தோற்றுவாயை தீர்மானிப்பதற்கான உலக நலவாழ்வு அமைப்பின் அறிவியல் ஆலோசனைக்குழுவின் ஒருபகுதியாக இருப்பார்.

6. மலபார் தொடர் பயிற்சிகளானது இந்தியாவிற்கும் எந்நாட்டிற்கும் இடையிலான இருதரப்பு கடற்படை பயிற்சியாக, கடந்த 1992ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது?

அ) அமெரிக்கா 

ஆ) பிரான்ஸ்

இ) இலங்கை

ஈ) வங்காளதேசம்

  • மலபார் தொடர்பயிற்சிகள் என்பது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஆண்டுதோறும் நடத்தப்படும் இருதரப்பு கடற்படை பயிற்சியாக கடந்த 1992’இல் தொடங்கியது. ஜப்பானிய கடல்சார் சுய பாதுகாப்பு படை, இராயல் ஆஸ்திரேலியா கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை உடன் பலதரப்பு கடல்சார் பயிற்சியான மலபாரின் இரண்டாம் பகுதியில் இந்திய கடற்படை பங்கேற்கும்.
  • வங்காள விரிகுடாவில் 2021 அக்.12–15 வரை இப்பயிற்சி நடைபெறும். பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் 2021 ஆகஸ்ட்.26–29 வரை முதல் கட்ட பயிற்சி நடைபெற்றது.

7. ‘Fiscal Monitor’ அறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ) உலக வங்கி

ஆ) இந்திய ரிசர்வ் வங்கி

இ) பன்னாட்டுச் செலவாணி நிதியம் 

ஈ) உலக வர்த்தக அமைப்பு

  • பன்னாட்டுச் செலவாணி நிதியத்தின் ‘Fiscal Monitor’ அறிக்கையின்படி, உலகளாவிய கடன் $226 டிரில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்திற்கு உயர்ந்துள்ளது. 2020ஆம் ஆண்டில் உலகளாவிய கடன் குவிப்பில், மேம்பட்ட பொருளாதாரங்களும் சீனாவும் 90 சதவீதத்திற்கும் மேலாக பங்களித்தன. இந்தியாவின் கடன், 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 68.9 சதவீதத்திலிருந்தது.
  • அது, 2020ஆம் ஆண்டில் 89.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. அது, 2021 ஆம் 90.6 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8. 2021’இல் வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் சமீப அறிவிப்பின்படி, கருக்கலைப்பிற்கான அதிகபட்ச கால வரம்பு என்ன?

அ) 12 வாரங்கள்

ஆ) 18 வாரங்கள்

இ) 20 வாரங்கள்

ஈ) 24 வாரங்கள் 

  • அரசாங்கத்தின் புதிய விதிகளின்படி, இந்தியாவில் கர்ப்பத்தை கலைப்ப –தற்கான அதிகபட்ச காலவரம்பு 24 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வரம்பு, முன்பு 20 வாரங்களாக இருந்தது.
  • கர்ப்ப (திருத்தம்) விதிகள், 2021’இன்கீழ், பாலியல் வன்கொடுமை, பாலி –யல் வன்புணர்வு அல்லது தகாத உடலுறவு, 18 வயதெய்தா சிறார்கள் உள்ளிட்ட பெண்கள், கர்ப்ப காலத்தில் மணநிலை மாறும் பெண்கள் (கைம்பெண் & மணமுறிவு) மற்றும் உடல் குறைபாடுகள் உள்ளவர்கள் இந்தப் புதிய வரம்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

9. சமீப செய்திகளில் இடம்பெற்ற சேலா சுரங்கப்பாதை அமைந்துள்ள மாநிலம் எது?

அ) உத்தரகாண்ட்

ஆ) சிக்கிம்

இ) அருணாச்சல பிரதேசம் 

ஈ) அஸ்ஸாம்

  • பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சேலா சுரங்கப்பாதையின் இறுதிக்கட்டத்தை மெய்நிகராக வெளிக்காட்டினார். சுரங்கப்பாதையின் கட்டுமானம் 2022 ஜூனுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • சேலா சுரங்கப்பாதை உலகின் மிகப்பெரிய இருவழிச்சுரங்கப்பாதையாக 13,000 அடிக்கும் மேலான உயரத்தில் வீற்றிருக்கும் என்று எதிர்பார்க்க –ப்படுகிறது. இதன் கட்டுமானம் எல்லைப்புறச்சாலைகள் அமைப்பால் (BRO) மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சுரங்கப்பாதை சேலா கணவாய் வழியாக செல்கிறது. அருணாச்சல பிரதேச மாநிலம் வழியாக சீன எல்லைக்கான தூரத்தை 10 கிமீ வரை இது குறைக்கும்.

10. ‘WHO தலைமை இயக்குநர்’ விருதுபெற்ற ஹென்றிட்டா லாக்ஸ் சார்ந்த நாடு எது?

அ) அமெரிக்கா 

ஆ) ஆஸ்திரேலியா

இ) இந்தியா

ஈ) ஜெர்மனி

  • உலக நலவாழ்வு அமைப்பின் தலைவர், காலஞ்சென்ற ஹென்றிட்டா லாக்சிற்கு ‘WHO’இன் தலைமை இயக்குநர் விருது வழங்கி கௌரவித் –தார். அமெரிக்கப் பெண்மணியான லாக்சிற்கு தெரியாமல், 1950’களில் அவரிடமிருந்து புற்றுநோய் செல்கள் பெறப்பட்டன. கொரோனா வைரஸ் பற்றிய ஆராய்ச்சி உட்பட பரந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அந்தச் செல்கள் ஓர் அடித்தளத்தை வழங்கின. ஹென்றிட்டா லாக்ஸின் முதல் 2 எழுத்துகளிலிருந்து பெறப்பட்ட ‘HeLa’ செல்கள், மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசிகளின் உருவாக்கத்திற்கு உதவின.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மகப்பேறு நிதியுதவி கிடைப்பதில் தாமதமா? – ‘104’ஐ தொடர்பு கொள்ளலாம்: பொது சுகாதார இயக்குநர் தகவல்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் ‘104’ மருத்துவ சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியதாவது:

மத்திய, மாநில நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் தற்போது `18,000 வழங்கப்படுகிறது. 5 தவணைகளாக இந்த நிதி வழங்கப்படும்.

19 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதை பெற தகுதியுடையவர்கள். இலங்கைத் தமிழர்கள் முழுமையாகவும், வெளி மாநிலத்தவர்கள் 2 தவணையில் பெற்றும்பயனடையலாம். ஆரோக்கியமான குழந்தை பிறப்புக்காக, ஆண்டுக்கு `950 கோடியை அரசு வழங்குகிறது. இதில் `10 இலட்சம் பேர் பயனடைகின்றனர். ஆனாலும், முறையாக நிதியுதவி கிடைக்கவில்லை என 100’க்கும் மேற்பட்ட புகார்கள் மாதந்தோறும் வருகின்றன. நிதியுதவி பெற முடியாதவர்கள், அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகளிடம் இதுபற்றி தெரிவிக்கலாம்.

2. மத்திய கிழக்கு, ஆசிய விவகாரங்கள்: 4 நாடுகள் பேச்சுவார்த்தை

அமெரிக்கா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மத்திய கிழக்கு, ஆசிய விவகாரங்கள் குறித்து வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.

இஸ்ரேலில் அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சுற்றுப்பயணத்தின் 2ஆவது நாளில் நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு காணொலி வாயிலாக நடைபெற்றது. அதில் அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், இஸ்ரேல் அமைச்சர் யாயிர் லபீட், ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் ஜயீத் அல் நயன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பொருளாதார வளர்ச்சி, சர்வதேச விவகாரங்கள் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்குப் பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொள்ளப்பட்டது. இப்பேச்சுவார்த்தை சார்ந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும் ஒப்புக்கொள் -ளப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாார்.

ஒத்துழைப்பு மேம்பாடு: பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய கிழக்கு, ஆசிய விவகாரங்களில் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினார்.

வர்த்தகம், பருவநிலைமாற்றத்தை எதிர்கொள்வது, எரிசக்தி ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். அறிவியல்-தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் நான்கு தரப்பு நாடுகளின் மக்களுக்கு இடையேயான நல்லுறவை வளர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் விவா -தித்தனர். கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஒத்துழைத்து செயல்படுவது தொடர்பாகவும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய விமானப்படை வீரர்களுடன் சந்திப்பு

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், இஸ்ரேல் ஆகிய 8 நாடுகளின் விமானப் படைகள் பங்கேற்கும் ‘புளூ ஃப்ளாக்’ (நீலக்கொடி) கூட்டுப் பயிற்சி ஜெருசலேம் நகரில் நடைபெற்று வருகிறது. அதில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 85 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களை அமைச்சர் ஜெய்ங்கர் சந்தித்துப்பேசினார்.

‘மிராஜ் 2000’ போர் விமானங்கள் உள்ளிட்டவையும் இந்தியா சார்பில் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்றுள்ளன. இக்கூட்டுப் பயிற்சியானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

3. உலகளாவிய உணவுப் பாதுகாப்பு குறியீடு: இந்தியாவுக்கு 71ஆவது இடம்

உலகளாவிய உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் இந்தியா 71ஆவது இடம் பிடித்துள்ளது. மலிவாக உணவு கிடைக்கும் நாடுகளில் இந்தியாவை பாகிஸ்தான் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

பிரிட்டனின் தி எகனாமிஸ்ட் ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த அமைப்பு உணவின் தரம், பாதுகாப்பு, மலிவான விலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 113 நாடுகளில் உணவு பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் இந்தியா 71ஆம் இடத்தில் இடம்பெற்றுள்ளது. சீனா 34ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 75ஆவது இடத்தில் பாகிஸ்தான், 77ஆவது இடத்தில் இலங்கை, 79ஆவது இடத்தில் நேபாளம், 84ஆவது இடத்தில் வங்கதேசம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

மலிவாக உணவு கிடைக்கும் நாடுகளின் பிரிவில், இந்தியாவை பாகிஸ்தான் பின்னுக்குத் தள்ளியுள்ளது. அந்தப் பிரிவில் பாகிஸ்தான் 52.6 புள்ளிகளையும் இந்தியா 50.2 புள்ளிகளையும் பெற்றுள்ளன.

எனினும் உணவு உற்பத்திக்காக இயற்கை வளங்களை பாதுகாப்பது, உணவு எளிதாகக் கிடைப்பது, அதன் தரம், பாதுகாப்பு ஆகியவற்றில் பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை நாடுகளை இந்தியா விஞ்சியுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் பட்டினி என்பதே இல்லாத நிலை என்ற ஐநா’ன் இலக்கை எட்டுவதில் உள்ள அமைப்பு ரீதியிலான இடைவெளிகள், அந்த இலக்கை எட்டுவதற்கு துரிதப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தும் நோக்கில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுதொர்பான ஆய்வின்போது உலகளாவிய உணவுப் பாதுகாப்பு தொடர்ந்து 2ஆவது ஆண்டாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. ஐநா’இன் பட்டினி என்பதே இல்லாத நிலையை உருவாக்கும் இலக்கில் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

4. கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வு குறித்து இன்னும்முடிவு எடுக்கவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு

கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வு நடத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

அகழாய்வில் கண்டறியப்பட்ட உறைகிணற்றில் மீன் சின்னம்

கீழடியில் நடைபெற்ற 7ஆம் கட்ட அகழாய்வில் பல அடுக்குகள் கொண்ட கை வேலைப்பாடுகளால் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட சுடுமண் உறைகிணறு கண்டறியப்பட்டது. இந்த உறைகிணற்றில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அந்த உறை கிணற்றின் விளிம்பு பகுதியில் கழுத்துக்கு கீழ் வால் மட்டுமே தெரியும்படி அந்த மீன் சின்னம் காணப்படுகிறது. அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூல் பக்கத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணற்றின் நிழற்படத்தை பதிவிட்டு, கீழடியில் முதன்முறையாக மீன் சின்னம் பொறிக்கப்பட்ட உறைகிணறு கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

1. Which public sector unit has recently been accorded “Maharatna” status?

A) Power Finance Corporation 

B) Airports Authority of India

C) Bharat Dynamics Limited

D) BEML Limited

  • The Central Government has accorded “Maharatna” status to Power Finance Corporation (PFC). PFC is the 11th state–owned entity to get the status, joining the elite group of ONGC, Indian Oil Corporation, SAIL among others.
  • “Maharatna” status is granted to a company which has recorded more than ₹5,000 crore of net profit for three consecutive years.

2. What is the theme of the ‘World Arthritis Day 2021’?

A) Don’t Delay, Connect Today: Time2Work 

B) Leaving No one behind

C) Misdiagnosis in Arthritis

D) 25 years of Arthritis Day

  • World Arthritis Day is observed every year on October 12 to spread awareness about the existence and impact of rheumatic and musculoskeletal diseases. The day was first observed in 1996 and this year the theme of the day is “Don’t Delay, Connect Today: Time2Work”.

3. Union Home Ministry began tripartite talks with Gorkha representatives and which state government?

A) Odisha

B) West Bengal 

C) Assam

D) Jharkhand

  • The Union Home Ministry began tripartite talks with Gorkha representatives from the Darjeeling Hills, Terrai and Dooars region and the Government of West Bengal. The talks were held with the objective of resolving the demand of statehood in the North Bengal region.
  • The talks were chaired by Home Minister Amit Shah. The second round of talks with the officials of the Government of West Bengal is scheduled in November 2021.

4. Which animal species is also called as ‘Dhole’?

A) Asiatic Wild Dog 

B) Hyena

C) Aardwolf

D) African Elephant

  • The ‘Dhole’ (Cuon alpinus) is an animal native to Central, South, East, and Southeast Asia. Other names for the species include Asiatic wild dog, Indian wild dog, whistling dog, red dog, and mountain wolf. It is a Schedule II species under the Wildlife (Protection) Act, 1972.
  • A recent study has identified 114 priority tehsils where habitats can be consolidated to enhance population connectivity for the dhole or Asiatic Wild Dog. The animals are found across India.

5. Which institution has formed a Scientific Advisory Group for the Origins on Novel Pathogens (SAGO)?

A) UNICEF

B) World Health Organisation 

C) FAO

D) John Hopkins

  • The Director–General of the World Health Organisation has set up the WHO Scientific Advisory Group for the Origins on Novel Pathogens (SAGO). The SAGO will advise the Secretariat on technical and scientific considerations on emerging and re–emerging pathogens.
  • An Indian epidemiologist, Dr Raman Gangakhedkar, will be part of the World Health Organization’s (WHO) Scientific Advisory Group for determining the origin of covid–19 pandemic.

6. Malabar series of exercises began as a bilateral naval exercise between India and which country, in 1992?

A) USA 

B) France

C) Sri Lanka

D) Bangladesh

  • The Malabar series of exercises, which began as an annual bilateral naval exercise between India and the US in 1992. The Indian Navy is set to participate in the Second Phase of Multilateral Maritime Exercise Malabar along with the Japan Maritime Self Defence Force, Royal Australian Navy and the United States Navy. It is being conducted in the Bay of Bengal from 12 – 15 Oct 2021. First Phase of the exercise was conducted in the Philippines Sea in August.

7. Which institution releases the ‘Fiscal Monitor’ Report?

A) World Bank

B) Reserve Bank of India

C) International Monetary Fund 

D) World Trade Organization

  • As per the International Monetary Fund’s ‘Fiscal Monitor’ Report, the global debt has jumped to a new high of USD 226 trillion. Advanced economies and China contributed more than 90 per cent to the accumulation of world–wide debt in 2020.
  • India’s debt increased from 68.9 per cent of its GDP in 2016 to 89.6 per cent in 2020. It is projected to jump to 90.6 per cent in 2021.

8. As per Government’s recent notification released in 2021, what is the gestational limit for termination of pregnancy?

A) 12 weeks

B) 18 weeks

C) 20 weeks

D) 24 weeks 

  • As per the government’s new rules, the gestational limit for termination of a pregnancy in India has been increased to 24 weeks. Earlier the limit was 20 weeks.
  • Under the Medical Termination of Pregnancy (Amendment) Rules, 2021, the women including survivors of sexual assault, rape or incest, minors, those whose marital status changes during pregnancy (widowhood and divorce) and those with physical disabilities are included for the new limit.

9. Sela tunnel, which was seen in the news recently, is located in which Indian state?

A) Uttarakhand

B) Sikkim

C) Arunachal Pradesh 

D) Assam

  • Defence Minister Rajnath Singh virtually conducted the final breakthrough blast of the Sela tunnel in Arunachal Pradesh, recently. The construction of the tunnel is expected to be over by June 2022. Sela tunnel is expected be the world’s largest bi–lane tunnel at an altitude of more than 13,000 feet.
  • The construction is being undertaken by Border Roads Organisation (BRO). The tunnel goes through Sela Pass and will cut down the distance to the China border through Arunachal Pradesh by 10 km.

10. Henrietta Lacks, who received WHO Director–General’s Award, was from which country?

A) USA 

B) Australia

C) India

D) Germany

  • The Chief of the World Health Organisation honored the late Henrietta Lacks with the Director–General award. She an American woman whose cancer cells were taken without her knowledge during the 1950s. The cells provided the foundation for vast scientific inventions, including research about the coronavirus.
  • The ‘HeLa’ cell line, derived from the 1st two letters of Henrietta Lacks, helped in the development of human papillomavirus (HPV) vaccines.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!