Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

20th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

20th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 20th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. மதிப்புமிக்க பத்தாண்டுகால துபாய் கோல்டன் விசாவைப் பெற்ற உலகின் முதல் தொழிற்முறை கோல்ப் வீரர் யார்?

அ) டைகர் வூட்ஸ்

ஆ) ஜீவ் மில்கா சிங் 

இ) ரோரி மெக்லிராய்

ஈ) ஹிதேகி மத்சுயாமா

  • ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் நான்கு முறை வென்ற ஜீவ் மில்கா சிங், மதிப்புமிக்க பத்தாண்டுகால துபாய் கோல்டன் விசாவைப் பெற்ற உலகின் முதல் தொழிற்முறை கோல்ப் வீரராக மாறியுள்ளார். கோல்ப் விளையாட்டில் அவரது சாதனைகளைப் போற்றும் விதமாக அவருக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது.

2. பின்வரும் எந்த நாட்டுடன், இந்தியா, பருவநிலை நடவடிக்கை & நிதி திரட்டல் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது?

அ) சீனா

ஆ) ரஷ்யா

இ) பிரான்ஸ்

ஈ) அமெரிக்கா 

  • பருவநிலை நடவடிக்கை & நிதி திரட்டல் பேச்சுவார்த்தை தொடங்கியது. இப்பேச்சுவார்த்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலைத் துறை அமைச்சர் புபேந்தர் யாதவ், பருவநிலைக்கான அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதர் ஜான் கெர்ரி ஆகியோரால் தில்லியில் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்த பேச்சுவார்த்தை, பருவநிலை மற்றும் சுற்றுச்சூழலில், இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு கூட்டுறவை வலுப்படுத்துகிறது.

3. நடப்பாண்டில் (2021) வரும் உலக தேங்காய் நாளுக்கான கருப் பொருள் என்ன?

அ) Building a Safe Inclusive Resilient and Sustainable Coconut Community Amid COVID-19 Pandemic & Beyond 

ஆ) Coconuts and Nutrition World

இ) Coconuts and COVID-19

ஈ) Coconuts in Asian and Pacific regions

  • ஒவ்வோர் ஆண்டும் செப்.2 அன்று உலகம் முழுவதும் உலக தேங்காய் நாள் அனுசரிக்கப்படுகிறது. தேங்காயின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இது, ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமூகம் நிறுவப்பட்ட நாளையும் நினைவுகூர்கிறது. நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருள் – “Building a Safe Inclusive Resilient and Sustainable Coconut Community Amid COVID-19 Pandemic & Beyond”.

4. ‘பன்னாட்டுத் தொண்டு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) செப்டம்பர்.5 

ஆ) செப்டம்பர்.10

இ) செப்டம்பர்.15

ஈ) செப்டம்பர்.20

  • ஆண்டுதோறும் செப்.5 அன்று உலகம் முழுவதும் சர்வதேச தொண்டு நாள் அனுசரிக்கப்படுகிறது. தன்னார்வ & கொடை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மக்களையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் ஊக்குவிப்பதே இந்நாளின் நோக்கமாகும். செப்.5-அன்னை தெரசாவின் நினைவுநாளையும் குறிக்கிறது. கொல்கத்தாவில் மேற்கொண்ட தொண்டுகளுக்காக அவர் அறியப்படுகிறார். கடந்த 1979ஆம் ஆண்டில், அமைதிக்கான ‘நோபல்’ பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

5. நடப்பாண்டில் (2021) வரும், ஓசோன் படலத்தைக் காப்பதற்கான பன்னாட்டு நாளுக்கான (ஓசோன் நாள்) கருப்பொருள் என்ன?

அ) Ozone for Life

ஆ) Ozone and COVID–19

இ) Ozone defending Humans

ஈ) Montreal Protocol – Keeping us, our food and vaccines cool 🗹

  • உலக ஓசோன் நாள் அல்லது ‘ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச நாள்’, செப்.16 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ஓசோன் படலத்தைக்காப்பதற்கான வியன்னா தீர்மானம் 1985 மார்ச்.22 அன்று 28 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்டது. “Montreal Protocol – Keeping us, our food and vaccines cool” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

6. பன்னாட்டு சம ஊதிய நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) செப்டம்பர்.15

ஆ) செப்டம்பர்.18 

இ) செப்டம்பர்.20

ஈ) செப்டம்பர்.22

  • செப்டம்பர்.18ஆம் தேதியை பன்னாட்டு சம ஊதிய நாளாக ஐநா அவை கொண்டாடுகிறது. இந்த நாள் முதன்முறையாக இவ்வாண்டு (2020) கொண்டாடப்பட்டது. பெண்கள் & சிறுமிகளுக்கு எதிரான பாகுபாட்டை முடிவுக்குக்கொண்டுவருதற்காக ஐநா அவை இந்நாளை அனுசரிக்கிறது. ஐநா அவையைப் பொறுத்தவரை, உலகின் அனைத்து பகுதிகளிலும் ஆண்களைவிட பெண்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது.

7. உலக அல்சைமர் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) செப்டம்பர்.20

ஆ) செப்டம்பர்.21 

இ) செப்டம்பர்.22

ஈ) செப்டம்பர்.23

  • அல்சைமர் என்பது ஞாபக மறதிக்கு வழிவகுக்கிற ஒரு நாட்பட்ட நோய் ஆகும். காலப்போக்கில் இதன் நிலை மிகமோசமடைந்து அன்றாட பணிகளைச் செய்வதுகூட கடினமாகிறது. கடந்த 1994ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் செப்.21 அன்று அல்சைமர் நாள் அனுசரிக்கப்படுகிறது. உலகெங்குமுள்ள தேசிய & உள்ளூர் அல்சைமர் சங்கங்கள், இந்நோய் குறித்த விழிப்புணர்வு திட்டங்களை அடைய உதவும் வகையில், ஆண்டுதோறும் அல்சைமர் மாதமாக செப்டம்பரை அனுசரிக்கின்றன.

8. 2021 – உலக முதலுதவி நாள் கடைபிடிக்கப்பட்ட தேதி எது?

அ) செப்டம்பர்.10

ஆ) செப்டம்பர்.11 

இ) செப்டம்பர்.12

ஈ) செப்டம்பர்.13

  • உலக முதலுதவி நாளானது ஆண்டுதோறும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமையன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு (2021) செப்.11 அன்று இந்த நாள் கடைபிடிக்கப்பட்டது. முதலுதவி பயிற்சியில் மக்களை ஊக்குவிப்பதற்காக இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது; அது காயங்களைத் தடுக்கவும் மற்றும் முக்கியமான சூழ்நிலைகளில் உயிரைக் காக்கவும் உதவுகிறது. பன்னாட்டு செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின்படி, 2021 உலக முதலுதவி நாளிற்கான கருப்பொருள், “First aid and road safety” ஆகும்.

9. சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ) இக்பால் சிங் லால்புரா 

ஆ) அதிப் ரஷீத்

இ) P K பிஞ்சா

ஈ) ஜான் பார்லா

  • முன்னாள் இகாப அதிகாரி இக்பால் சிங் லால்புரா, சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசுத்தலைவரின் காவல் பதக்கம், சிறப்பாக சேவை புரிந்தமைக்கான காவல் பதக்கம், சிரோமணி சீக் சாஹித்கர் விருது, சீக்கிய அறிஞர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார். அவர் பஞ்சாபைச் சார்ந்தவராவார்.

10. இந்தியாவின் முதல் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட உயர் சாம்பல் நிலக்கரி வளிமயமாக்கல் அடிப்படையிலான மெத்தனால் உற்பத்தி ஆலை திறக்கப்பட்டுள்ள நகரம் எது?

அ) ஹைதராபாத் 

ஆ) சென்னை

இ) மங்களூரு

ஈ) பெங்களூரு

  • இந்தியாவின் முதல் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட உயர்-சாம்பல் நிலக்கரி வளிமயமாக்கல் அடிப்படையிலான மெத்தனால் உற்பத்தி ஆலை ஹைதராபாத் BHEL ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தில் திறக்கப்பட்டது. NITI ஆயோக், PMO-இந்தியா மற்றும் மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் முயற்சியான இந்த ஆலைக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியளித்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை வெளியீடு

சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி தேசிய தரவரிசைப் பட்டியலில் 109-ஆவது இடத்தையும், தமிழ்நாட்டில் 7-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. தேசிய அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 10 பொறியியல் கல்லூரிகள் குறித்த விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய அளவில் 45-ஆவது இடத்தைப் பெற்ற சென்னை SSN பொறியியல் கல்லூரி தமிழக அளவில் 1-ஆவது இடத்தையும், தேசிய அளவில் 53-ஆவது இடத்தைப் பெற்ற கோவை PSG பொறியியல் கல்லூரி தமிழக அளவில் 2-ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

தேசிய அளவில் 71-ஆவது இடத்தைப் பெற்ற மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி தமிழக அளவில் 3-ஆவது இடத்தையும், தேசிய அளவில் 78-ஆவது இடத்தைப் பிடித்துள்ள கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி தமிழக அளவில் 4-ஆவது இடத்தையும், தேசிய அளவில் 90-ஆவது இடத்தைப் பெற்ற குமரகுரு பொறியியல் கல்லூரி தமிழக அளவில் 5-ஆவது இடத்தையும், தேசிய அளவில் 102-ஆவது இடத்தைப்பெற்றுள்ள கோவை CIT பொறியியல் கல்லூரி தமிழக அளவில் 6-ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

தேசிய அளவில் 109-ஆவது இடத்தைப் பெற்ற சென்னை ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி தமிழக அளவில் 7-ஆவது இடத்தையும், தேசிய அளவில் 110-ஆவது இடத்தைப் பெற்ற ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி தமிழக அளவில் 8-ஆவது இடத்தையும் பெற்றுள்ளன. தேசிய அளவில் 124-ஆவது இடத்தைப் பெற்ற சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரி தமிழக அளவில் 9-ஆவது இடத்தையும், தேசிய அளவில் 128-ஆவது இடத்தைப் பெற்ற கோவை அரசு பொறியியல் கல்லூரி தமிழக அளவில் 10-ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

2. தேசிய தடகள சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் பிரவீணுக்கு தங்கம்

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் தமிழக வீரர் பிரவீண் சித்ரவேல் தங்கம் வென்றார். அவர் தனது முதல் முயற்சியிலேயே 16.88 மீ தூரம் தாண்டி முதலிடம் பிடித்தார். சர்வீசஸ் வீரர் அப்துல்லா அபுபக்கர் 16.84 மீ கடந்து வெள்ளியும், சகவீரர் கார்த்திக் உன்னிகிருஷ்ணன் 16.80 மீ கடந்து வெண்கலமும் வென்றனர்.

இந்திய வீரர்களில் இதுவரை சிறப்பாகச் செயல்பட்டவர்கள் வரிசையில், ரஞ்சித் மஹேஸ்வரி (17.30 மீ), அர்விந்தர் சிங் (17.17 மீ) ஆகியோரை அடுத்து பிரவீண் 3-ஆவது இடத்தில் இருக்கிறார்.

மகளிருக்கான 200 மீ ஓட்டத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன், தில்லியின் தரன்ஜீத் கௌரை தோற்கடித்து முதலிடம் பிடித்தார். ஆடவர் 200 மீ ஓட்டத்தில் அஸ்ஸாம் வீரர் அமலன் போர்கோஹெய்ன் 20.75 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். மகளிர் சங்கிலி குண்டு எறிதலில் மஞ்சு பாலா சிங் 64.42 மீ தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். ரயில்வேயின் சரிதா ரோமித் சிங், ஜோதி ஜாக்கர் ராணா ஆகியோர் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தனர். 10,000 மீ ஓட்டத்தில் சர்வீசஸ் வீரர் கார்த்திக் குமார், மகாரா -ஷ்டிர வீரர் சஞ்சீவனி பாபுராவ் ஜாதவ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

1. Who has become the first professional golfer in the world to get the prestigious 10–year Dubai Golden Visa?

A) Tiger Woods

B) Jeev Milkha Singh 

C) Rory Mcllroy

D) Hideki Matshuyama

  • 4–time winner on the European Tour, Jeev Milkha Singh has become the first professional golfer in the world to get the prestigious 10–year Dubai Golden Visa in recognition of his outstanding achievements in the sport.

2. With which country, India has launched the Climate Action and Finance Mobilisation Dialogue?

A) China

B) Russia

C) France

D) United States of America 

  • Environment Minister Bhupender Yadav and United States Special Presidential Envoy for Climate John Kerry have launched Climate Action and Finance Mobilisation Dialogue under India–US Climate and Clean Energy Agenda 2030 Partnership. This partnership will provide both countries an opportunity to renew collaborations on climate change while addressing the financing aspects.

3. What is the theme of the World Coconut Day 2021?

A) Building a Safe Inclusive Resilient and Sustainable Coconut Community Amid COVID–19 Pandemic & Beyond 

B) Coconuts and Nutrition World

C) Coconuts and COVID–19

D) Coconuts in Asian and Pacific regions

  • Every year, September 2 is observed as World Coconut Day across the world. It is celebrated to create awareness about the importance of the coconut and its benefits. It also commemorates the foundation day of the Asian and Pacific Coconut Community. This year, the theme is “Building a Safe Inclusive Resilient and Sustainable Coconut Community Amid COVID–19 Pandemic & Beyond”.

4. When is ‘International Day of Charity’ observed across the world?

A) September.5 

B) September.10

C) September.15

D) September.20

  • The International Day of Charity is observed every year on September 5, across the world. The day aims to sensitize people and NGOs to engage in volunteer and philanthropic activities. This date of 5 September marks the day of the anniversary of the passing away of Mother Teresa. She was honoured as a Saint was known for her missionary work in Kolkata. She received the Nobel Peace Prize in 1979.

5. What is the theme of ‘International Day for the Preservation of the Ozone Layer’ (World Ozone Day) 2021?

A) Ozone for Life

B) Ozone and COVID–19

C) Ozone defending Humans

D) Montreal Protocol – Keeping us, our food and vaccines cool 🗹

  • World Ozone Day or ‘International Day for the Preservation of the Ozone Layer’ is observed on September.16 all over the world. Vienna Convention for the Protection of the Ozone Layer was adopted and signed by 28 countries, on 22 March 1985. The theme of this year is “Montreal Protocol – Keeping us, our food and vaccines cool”.

6. When is the International Equal Pay Day observed?

A) September.15

B) September.18 

C) September.20

D) September.22

  • September 18 is observed as the International Equal Pay Day by the United Nations. It has been celebrated for the first time this year. The day is observed by the United Nations to throw light and end discrimination against women and girls.

7. On which date, World Alzheimer’s Day is observed?

A) September.21 

B) September.22

C) September.23

D) September.24

  • Alzheimer’s is a progressive disease which leads to memory loss. The condition worsens with time and makes it difficult to perform day to day functions. Since 1994, each year 21st September is observed as the World Alzheimer’s Day. September is the month which is observed each year as the World Alzheimer’s Month in order to enable national and local Alzheimer associations worldwide to extend their reach of awareness programmes over a longer period of time.

8. On which date, World First Aid Day – 2021 was observed?

A) September.10

B) September.11 

C) September.12

D) September.13

  • World First Aid Day is observed on the second Saturday of September annually. So, this year the day was celebrated on 11 September across the globe. The special day is marked to encourage people in first aid training which helps in preventing injuries and saving lives in critical situations. The theme for World First Aid Day 2021 is ‘First aid and road safety,’ according to the International Federation of Red Cross and Red Crescent Societies (IFRC).

9. Who has been appointed as chairman of National Commission for Minorities?

A) Iqbal Singh Lalpura 

B) Atif Rasheed

C) P K Pincha

D) John Barla

  • Former IPS officer Iqbal Singh Lalpura, has been chosen as chairman of National Commission for Minorities. The awards he has won include President’s police medal, police medal for meritorious services, Shiromani Sikh Sahitkar award, Sikh scholar award, etc. He hails from Punjab.

10. In which city, India’s first indigenously designed high ash coal gasification–based Methanol Production Plant has been inaugurated?

A) Hyderabad 

B) Chennai

C) Mangaluru

D) Bengaluru

  • India’s first indigenously designed high ash coal gasification–based Methanol Production Plant has been inaugurated at BHEL R&D Centre, Hyderabad. The plant was funded by Department of Science and Technology at the initiative of NITI Aayog, PMO–India and Ministry of Coal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!