Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

20th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

20th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 20th September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

20th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம்’ என்பது எந்த நடுவண் அமைச்சகத்தின் முனைவாகும்?

அ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

ஆ. சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

  • நடுவண் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் Dr வீரேந்திர குமார், ஒன்பது மாதிரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையங்களைத் தொடங்கிவைத்தார். அவை மாதிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையங்களாக அண்மையில் மேம்படுத்தப்பட்டன. கடந்த 20 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ள மறுவாழ்வுச் சேவைகளை வழங்குவதற்காக இம்மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையங்கள் நிறுவப்பட்டன.

2. ‘உலகளாவிய தூய ஆற்றல் நடவடிக்கைக்கான கருத்துக்களத்தை’ நடத்தும் நகரம் எது?

அ. புது தில்லி

ஆ. பிட்ஸ்பர்க்

இ. பாரிசு

ஈ. ரோம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பிட்ஸ்பர்க்

  • நடுவண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் நடைபெறும் உலகளாவிய தூய ஆற்றல் நடவடிக்கைக்கான கருத்துக்களத்தில் பங்கேற்கும் இந்தியக்குழுவை வழிநடத்த உள்ளார். தூய ஆற்றலைக் கண்டுபிடித்தல் மற்றும் அதனை பயன்பாட்டுக்குக் கொண்டுவருதலை விரைவுபடுத்து –வதற்கான வழிகளைப்பற்றி விவாதிக்க 30 நாடுகளைச்சேர்ந்த அமைச்சர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள்.

3. NITI ஆயோக் போன்று மாநில அளவிலான அமைப்பை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ள மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. மகாராஷ்டிரா

இ. தெலுங்கானா

ஈ. மேற்கு வங்காளம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மகாராஷ்டிரா

  • மகாராஷ்டிர மாநில அரசு NITI ஆயோக் போன்று ஓர் அமைப்பை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு துறைகளில் விரிவான தரவுப் பகுப்பாய்வு மற்றும் முடிவுகளை எடுப்பதற்கு இந்த அமைப்பு பொறுப்பாகும். NITI ஆயோக் இதேபோன்ற சிக்கல்களில் ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டு ஒரு கருவியை உருவாக்கியது. பல்வேறு துறைகளின் ஒன்றோடொன்று தொடர்புடைய தரவுகள் சிறந்த முறையில் முடிவெடுக்கும் செயல்முறைக்காக பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.

4. 2022ஆம் ஆண்டு நிலவரப்படி, இலங்கைக்கு அதிக அளவில் இருதரப்பு கடன் வழங்கும் நாடு எது?

அ. சீனா

ஆ. இந்தியா

இ. ஆஸ்திரேலியா

ஈ. அமெரிக்கா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்தியா

  • 2022இன் 4 மாதங்களுக்குள் மொத்தமாக $968 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியதன்மூலம், சீனாவை விஞ்சி இலங்கைக்கு மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது. 2017 முதல் 2021 வரையிலான ஐந்து ஆண்டுகளில் இலங்கைக்கு மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குபவராக சீனா தனது நிலையைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியானது 2021இல் $610 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியதன்மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய பலதரப்பு கடன் வழங்குநராக மாறியது.

5. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் நான்கு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் யார்?

அ. வினேஷ் போகத்

ஆ. பஜ்ரங் புனியா

இ. பபிதா குமாரி

ஈ. கீதா போகத்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பஜ்ரங் புனியா

  • அண்மையில் பெல்கிரேடில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் 65 கிகி பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றார். இந்தப் பதக்கத்தின்மூலம், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் நான்கு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பஜ்ரங் புனியா பெற்றார். அவர், 2013இல் வெண்கலம், 2018இல் வெள்ளி மற்றும் 2019இல் வெண்கலம் வென்றார். மற்றொரு இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் பெண்களுக்கான 53 கிகி பிரிவில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

6. நடப்பாண்டின் (2022) உலக தேங்காய் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Growing coconut for a better future and life

ஆ. Nutritional benefits of Coconut

இ. Sustainable Nature of Coconut

ஈ. Consuming Coconut and Eradicating Malnutrition

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. Growing coconut for a better future and life

  • உலகம் முழுவதும் செப்.2ஆம் தேதியன்று உலக தேங்காய் நாளாக அனுசரிக்கப்படுகிறது. “Growing coconut for a better future and life” என்பது நடப்பாண்டு (2022) உலக தேங்காய் நாளுக்கானக் கருப்பொருளாகும். தேங்காய்கள் எல்லோராலும் விரும்பப்படும் மிகவும் பிரபலமான உணவுப்பொருளாகும். இந்த நாள், நம் அன்றாட வாழ்வில் தேங்காய்களின் முக்கியத்துவத்தையும் நலத்திற்கு அவை பயக்கும் நன்மைகளையும் எடுத்துக்காட்டுகிறது.

7. இராமன் மகசேசே விருதுகளுடன் தொடர்புடையது எது?

அ. இதழியல்

ஆ. சமூக சேவை

இ. விளையாட்டு

ஈ. நாடகக்கலை

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சமூக சேவை

  • ‘இராமன் மகசேசே விருது’ ஆசியாவின் நோபல் பரிசாகக் கருதப்படுகிறது. காலஞ்சென்ற பிலிப்பைன்ஸ் அதிபரின் பெயரால் இந்த விருது வழங்கப்படுகிறது. இது தன்னலமற்ற சேவைகளை மேற்கொள்ளும் ஆசியாவில் உள்ள தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஆசிய மக்களுக்காக தன்னலமற்ற சேவை புரிந்த உலகத்தின் வேவேறு பகுதியில் வாழ்ந்து வரும் நால்வருக்கு இந்த ஆண்டுக்கான (2022) விருது வழங்கப்பட்டுள்ளது.

8. அண்மையில், முழுமையாக டிஜிட்டல் வங்கி அம்சம் நிறைந்த மாவட்டமாக மாறிய ஆலப்புழை அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளம்

இ. குஜராத்

ஈ. உத்தர பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கேரளம்

  • கேரள மாநிலத்தின் ஐந்தாவது முழுமையாக டிஜிட்டல் வங்கி அம்சம் நிறைந்த மாவட்டமாக ஆலப்புழை மாறியுள்ளது. இதனை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. இந்த முனைவின் ஒருபகுதியாக, மாவட்டத்தில் உள்ள 29 வங்கிகளின் 26 இலட்சம் வங்கிக்கணக்குள் கடன்–பற்றட்டை, இணையவழி வங்கிச்சேவை, திறன்பேசிவழி வங்கிச்சேவை, யுபிஐபோன்ற ஏதேனும் ஓர் எண்ம சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. திருச்சூர், கோட்டயம், பாலக்காடு மற்றும் காசர்கோடு ஆகிய இடங்களில் வங்கிச்சேவைகள் ஏற்கனவே எண்மமயமாக்கப்பட்டுள்ளன.

9. SEBI–இன் மறுசீரமைக்கப்பட்ட இணையவெளிப்பாதுகாப்பு தொடர்பான உயர்மட்டக்குழுவின் தலைவர் (2022 செப்டம்பர்) யார்?

அ. நவீன் குமார் சிங்

ஆ. அஜை தியாகி

இ. நந்தன் நிலேகனி

ஈ. சுபாஷ் சந்திர கர்க்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. நவீன் குமார் சிங்

  • இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) இணையவெளிப்பாதுகாப்பு தொடர்பான உயர்மட்டக்குழுவை மறுசீரமைத்துள்ளது; தற்போது 6 உறுப்பினர்களைக்கொண்ட இக்குழு, தேசிய முதன்மை தகவல் உட்கட்டமைப்பு பாதுகாப்பு மையத்தின் (NCIIPC) தலைமை இயக்குநர், நவீன் குமார் சிங் தலைமையில் இருக்கும். SEBI மற்றும் மூலதனச்சந்தைக்கான இணையவெளிப் பாதுகாப்பு முனைவுகளை மேற்பார்வையிடுதல் மற்றும் வழிகாட்டுதல் ஆகிய பணிகள் இந்தக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

10. 2022ஆம் ஆண்டின் சூப்பர் புயல் என்றழைக்கப்படும் வலுவான வெப்பமண்டலப் புயலான, ‘ஹின்னம்நோர்’ தாக்கிய நாடு எது?

அ. சீனா

ஆ. பிலிப்பைன்ஸ்

இ. ஜப்பான்

ஈ. நியூசிலாந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஜப்பான்

  • 2022ஆம் ஆண்டின் வலுவான வெப்பமண்டலப் புயலான சூப்பர் புயல், ‘ஹின்னம்நோர்’ என்று பெயரிடப்பட்டது. இந்தப் புயலின் காரணமாக மேலை பசிபிக் பெருங்கடலில் மணிக்கு 241 கிமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. இது வகை–5 புயலாக வகைப்படுத்தப்பட்டது; இது அளவில் மிகவுரிய வகைப்பாடாகும். இச்சூறாவளி ஜப்பான் தீவுகளை நோக்கி நகர்வதால் மேலும் வலுவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் வெள்ளம், கனமழை, நிலச்சரிவு மற்றும் இடியுடன் கூடிய மழை உள்ளிட்ட எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சென்னையில் உள்ள நடுவண் தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தோல்துறையின் திறன்மேம்பாட்டுக்கான ஸ்கேல் செயலியை தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்

தோல் தொழிற் துறையின் வேலைவாய்ப்புத் தேவைகள், திறன்மேம்பாடு, கற்றல், மதிப்பீடு ஆகியவற்றுக்கு ஓரிடத் தேர்வு வழங்கும் தோல்துறை ஊழியர்களுக்கான திறன் மதிப்பீட்டுச் சான்றிதழ் (ஸ்கேல்) ஸ்டுடியோ செயலியை சென்னையில் உள்ள CSIR–CLRI நிகழ்ச்சியில், மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.

தோல் தொழிற்துறையில் பயிற்சி பெறுவோருக்கு வடிவமைத்தல் மற்றும் தயாரித்தளிப்பதற்காக தோல் திறன் துறை கவுன்சில் இச்செயலியை உருவாக்கியுள்ளது. இவ்வமைப்பின் அலுவலகத்திலிருந்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்டுடியோமூலம் இணையதளம் வழியாக வகுப்புகள் நடத்தப்படும். தோல் தொழிற்துறையில் ஆர்வமுள்ள அனைத்து வயதினரும், இந்த ஸ்கேல் செயலியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

2. புவிசார் குறியீடுபெற்ற மதுரை மல்லி மற்றும் பாரம்பரிய மலர்கள் மஸ்கட் நகருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன

புவிசார் குறியீடுபெற்ற பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற்சியாக மதுரை மல்லி மற்றும் நிலக்கோட்டை, திண்டுக்கல், மதுரைக்கருகே உள்ள பகுதிகளைச்சேர்ந்த பாரம்பரிய மலர்களான முல்லை, பிச்சிப்பூ, பட்டன் ரோஜா, சாமந்தி, மரிக்கொழுந்து, துளசி, தாமரை, பன்னீர் ரோஜா, அல்லி ஆகியவை இன்று மஸ்கட் நகருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. நடுவணரசின் வேளாண் & பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இதனை மேற்கொண்டது.

3. மருத்துவ சிகிச்சை முறைகள் பரிமாற்றம்: தமிழ்நாடு-மேகாலயா இடையே ஒப்பந்தம்

மருத்துவ சிகிச்சை முறைகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு, மேகாலயா இடையே சென்னையில் கையொப்பமானது.

மேகாலய மாநில சுகாதாரக் குழுவினர் தமிழ்நாட்டிலுள்ள சிறப்பு மருத்துவ கட்டமைப்புகள், செயல்பாடுகளை கண்டு அறிந்து, சிறப்பான மருத்துவத் திட்டங்களின் செயல்பாடுகளை பார்வையிட்டு, அதனை அவர்களது மாநிலத்தில் செயல்படுத்தவுள்ளனர். குறிப்பாக, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம்மூலம் வழங்கப்படும் சேவைகள், அதன் பல்வேறு கட்டமைப்புகள், மருந்துக்கிடங்குகள் ஆகியவற்றின் செயல்பாடுகளை அறிந்து அதை மேகாலயா மாநிலத்தில் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டம், ‘இன்னுயிர் காப்போம் – நம்மைக்காக்கும் 48’ ஆகிய திட்டங்களின் செயல்பாட்டையும், தமிழ்நாட்டிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களின் செயல்பாடுகளையும் பார்வையிடவுள்ளனர்.

மேகாலய மாநிலத்தில் மலைவாழ் மக்கள் அதிகமுள்ளனர். அந்த மாநிலத்தில் இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன. தமிழ்நாடு, மேகாலய மாநிலங்களிடையே மருத்துவ முறைகளை பரிமாறிக்கொள்வதற்கும், மலைவாழ் மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

4. பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவு: செயலிமூலம் கண்காணிப்பு

பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவு முறையாக விநியோகிக்கப்படுகிறதா? என்பது குறித்து செயலிமூலம் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 1 முதல் 5ஆம் வகுப்பு வரையுள்ள அரசுப் பள்ளிக்குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி வைத்தார். ‘சிஎம்.13 எப் எஸ்’ என்ற செயலிமூலம் அதிகாரிகள் கண்காணிக்கிறார்கள்.

5. நிறைவு பெறுகிறது தென்மேற்குப் பருவமழை: வானிலை ஆய்வு மையம்

இரண்டு நாள்களில் தென்மேற்குப் பருவமழை விடைபெறுவது தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை தென்மேற்குப்பருவமழை காலமாக உள்ளது. இந்த ஆண்டு ஜூன் 1 முதல் செப்.19 வரை இந்தியாவில் 872.7 மிமீ மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 7% அதிகம். எனினும் அதிகளவில் நெல் உற்பத்தி செய்யப்படும் உத்தர பிரதேசம், பிகார் உட்பட 8 மாநிலங்களில் போதிய அளவு மழைபெய்யவில்லை. இந்நிலையில், வடமேற்கு இந்தியா மற்றும் குஜராத் மாநிலம் கட்ச் பகுதிகளில் இருந்து இரண்டு நாள்களில் தென்மேற்குப்பருவமழை நிறைவு பெறுவதற்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

20th September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. ‘District Disability Rehabilitation centre (DDRC)’ is an initiative of which Union Ministry?

A. Ministry of Social Justice and Empowerment

B. Ministry of Law and Justice

C. Ministry of Science and Technology

D. Ministry of Health and Family Welfare

Answer & Explanation

Answer: A. Ministry of Social Justice and Empowerment

  • Union Social Justice and Empowerment Minister Dr. Virendra Kumar virtually inaugurated 9 model District Disability Rehabilitation centres (DDRC), which had been upgrading to model DDRCs. DDRCs were established to provide effective rehabilitation services to the persons with disabilities (PwDs) for the last twenty years.

2. Which city is the host of ‘Global Clean Energy Action Forum’?

A. New Delhi

B. Pittsburg

C. Paris

D. Rome

Answer & Explanation

Answer: B. Pittsburg

  • Union Science and Technology Minister Jitendra Singh is set to lead an Indian delegation at Global Clean Energy Action Forum at Pittsburg in the US. Ministers from over 30 countries will participate in the event to discuss ways to accelerate clean energy innovation and deployment.

3. Which state has announced to set up NITI Aayog–like state–level institution?

A. Kerala

B. Maharashtra

C. Telangana

D. West Bengal

Answer & Explanation

Answer: B. Maharashtra

  • Maharashtra government has announced that it is planning to set up an institution on the lines of NITI Aayog. The institution would be responsible to perform comprehensive data analysis and make decisions on various sectors in the state. NITI Aayog has also carried out an extensive study on similar issues and developed a tool, where inter–related data from various departments is analysed for a better decision–making process.

4. As of 2022, which country is the largest bilateral lender to Sri Lanka?

A. China

B. India

C. Australia

D. USA

Answer & Explanation

Answer: B. India

  • India has become the largest bilateral lender to Sri Lanka by disbursing a total of USD 968 million in loans in four months of 2022, surpassing China. China has maintained its position as the largest bilateral lender to Sri Lanka in the past five years from 2017 to 2021. Asian Development Bank (ADB) has been the largest multilateral lender in the past five years by disbursing an amount of USD 610 million in 2021.

5. Who is the first Indian to win four medals at World Wrestling Championships?

A. Vinesh Phogat

B. Bajrang Punia

C. Babita Kumari

D. Gita Phogat

Answer & Explanation

Answer: B. Bajrang Punia

  • India’s Bajrang Punia recently won bronze in men’s 65 kg category at World Wrestling Championships in Belgrade. With this medal, Bajrang Punia becomes first Indian to win four medals at world wrestling championships. He won bronze in 2013, silver in 2018 and bronze in 2019. Another Indian wrestler Vinesh Phogat captured a bronze medal in the women’s 53 kg category.

6. What is the theme of the ‘World Coconut Day 2022’?

A. Growing coconut for a better future and life

B. Nutritional benefits of Coconut

C. Sustainable Nature of Coconut

D. Consuming Coconut and Eradicating Malnutrition

Answer & Explanation

Answer: A. Growing coconut for a better future and life

  • September 2 is observed as World Coconut Day across the world. This year’s theme for World Coconut Day is ‘Growing coconut for a better future and life. Coconuts are some of the most popular and versatile food product in the world. This day highlights the significance of coconuts in our daily lives and its benefits for health.

7. Ramon Magsaysay Awards are associated with which field?

A. Journalism

B. Social Service

C. Sports

D. Theatre Art

Answer & Explanation

Answer: B. Social Service

  • Ramon Magsaysay Award is also regarded as Asia’s version of the Nobel Prize. Named after the late Philippine president, it is presented annually to individuals or organizations in Asia who undertakes selfless service and transformational actions. This year’s award has been presented to four people across the world for their selfless service to the people of Asia.

8. Alappuzha, which recently became a fully digital banking district, is in which state?

A. Tamil Nadu

B. Kerala

C. Gujarat

D. Uttar Pradesh

Answer & Explanation

Answer: B. Kerala

  • Alappuzha has become the fifth fully digital banking district in the State of Kerala. This was declared by Reserve Bank of India (RBI). As part of the initiative, at least one digital transaction facility, such as debit–credit card, Internet banking, mobile banking, UPI etc, has been enabled in 26 lakh bank accounts in 29 banks in the district. Banking services in Thrissur, Kottayam, Palakkad and Kasaragod have already become digital.

9. Who is the head of the restructured SEBI its high–level panel on cyber security (September 2022)?

A. Navin Kumar Singh

B. Ajay Tyagi

C. Nandan Nilekani

D. Subhash Chandra Garg

Answer & Explanation

Answer: A. Navin Kumar Singh

  • The Securities and Exchange Board of India (SEBI) has restructured its high–level panel on cyber security The committee, which has now six members, will be chaired by Navin Kumar Singh, DG at National Critical Information Infrastructure Protection Centre (NCIIPC). The Steering committee has been given the task of overseeing and providing guidance on cyber security initiatives for SEBI as well as for the capital market.

10. Which country is hit by the strongest tropical storm of 2022, dubbed Super Typhoon ‘Hinnamnor’?

A. China

B. Philippines

C. Japan

D. New Zealand

Answer & Explanation

Answer: C. Japan

  • The strongest tropical storm of 2022, dubbed Super Typhoon ‘Hinnamnor’, has been moving across the western Pacific Ocean with wind speeds of up to 241 kilometres per hour. It was classified as the category 5 typhoon, the highest classification on the scale. The typhoon is expected to develop further, as it moves towards the Japanese islands. Japan’s Meteorological Agency has warned of flooding, heavy downpour, landslides and thunderstorm warnings.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!