Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

21st & 22nd May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

21st & 22nd May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 21st & 22nd May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட, ‘இராம்கர் விஷதாரி சரணாலயம்’ அமைந்துள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. மத்திய பிரதேசம்

இ. இராஜஸ்தான் 

ஈ. பஞ்சாப்

  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் அறிவித்தபடி, இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இராம்கர் விஷதாரி சரணாலயம் இந்தியாவின் 52ஆவது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராந்தம்போர், சரிஸ்கா மற்றும் முகுந்த்ராவுக்குப் பிறகு இராஜஸ்தானின் நான்காவது புலிகள் காப்பகம் இதுவாகும். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையமானது கடந்த ஆண்டு இராம்கர் விஷதாரி வனவுயிரி சரணாலயத்தை புலிகள் காப்பகமாக மாற்றுவதற்கு தனது ஒப்புதலை அளித்தது.

2. பாதுகாப்பு அமைச்சரால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சூரத்’ மற்றும் ‘உதயகிரி’ என்பவை என்ன?

அ. போர்க்கப்பல்கள் 

ஆ. எறிகணைகள்

இ. விண்வெளி ஏவூர்திகள்

ஈ. போர் வானூர்திகள்

  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘சூரத்’ என்ற 15B வகையைச் சேர்ந்த போர்க்கப்பலையும், ‘உதயகிரி’ என்ற 17A வகை போர்க்கப்பலையும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் மும்பையில் வைத்து அறிமுகப்படுத்தினார். இந்த இரு போர்க்கப்பல்களையும் மசகான் கப்பல்கட்டும் நிறுவனம் காட்டியுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு போர்க்கப்பல்கள் ஒன்றாக அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

3. XV உலக வனவியல் கூட்டத்தை நடத்தும் நாடு எது?

அ. ஜப்பான்

ஆ. அமெரிக்கா

இ. தென் கொரியா 

ஈ. அர்ஜென்டினா

  • தென் கொரியாவின் சியோலில் நடைபெற்ற XV உலக வனவியல் கூட்டத்தின்போது, ‘சியோல் பிரகடனம்’ ஏற்றுக் கொள்ளப்பட்டது. பங்கேற்ற 141 நாடுகளால் கையெழுத்திடப்பட்ட பிரகடனம், மனிதகுலத்தின் பல நெருக்கடிகளைச் சமாளிக்க உதவும் முக்கிய பகுதிகளை அடையாளங்காண்பதில் கவனஞ்செலுத்துகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் பாழ்நிலங்களை மீட்டெடுப்பதற்கான முதலீடுகளை மும்மடங்காக உயர்த்த வேண்டியதன் அவசியத்தையும் இது சிறப்புற எடுத்துரைத்தது.

4. ‘SRESTHA’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, கீழ்காணும் எந்த மாநிலத்திற்கு, உலக வங்கி, $350 பில்லியன் டாலர்களை வழங்கியது?

அ. அஸ்ஸாம்

ஆ. குஜராத்

இ. இராஜஸ்தான்

ஈ. தென் கொரியா

  • குஜராத் மாநிலத்தில், Systems Reform Endeavours for Transformed Health Achievement in Gujarat (SRESTHA-G) முன்னெடுப்புகளைச் செயல்படுத்த உலக வங்கி $350 பில்லியன் டாலர்களை குஜராத் மாநிலத்திற்கு வழங்கியது. SRESTHA-G திட்டத்தின்கீழ், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு சுகாதார சேவைகளை விரிவுபடுத்துவதற்கும், மாநிலத்தின் தொற்றுநோய் தடுப்புமுறையை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளும்.

5. 2021-இல் அயல்நாடுகளிலிருந்து தாய்நாட்டிற்கு அதிகம் பணமனுப்பிய நாடுகளில் முதலிடம் பிடித்த நாடு எது?

அ. இந்தியா 

ஆ. எகிப்து

இ. இந்தோனேசியா

ஈ. மெக்ஸிக்கோ

  • 2021-இல் அயல்நாடுகளிலிருந்து தாய்நாட்டிற்கு அதிகம் பணமனுப்பிய முதல் 5 நாடுகளாக இந்தியா, மெக்ஸிக்கோ, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் உள்ளன. உலக வங்கியின் சமீபத்திய இடம்பெயர்வு மற்றும் வளர்ச்சி குறித்த சுருக்கமான அறிக்கையின்படி, குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்கொண்ட நாடுகளுக்கு அனுப்பப்படும் பணம் இந்த ஆண்டு 4.2 சதவீதம் அதிகரித்து $630 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6. ‘இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு’டன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

அ. நிதியமைச்சகம்

ஆ. வெளியுறவு அமைச்சகம் 

இ. அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

  • இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) திட்டம் என்பது வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு முன்னெடுப்பாகும். இதில், ITECஇன் உறுப்பினர்களின் பங்கேற்பாளர்கள் பயிற்சிபெறுகின்றனர். இந்தியக்குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்தின் ஜமைக்கா பயணம், வரலாற்றில் இந்தியக்குடியரசுத்தலைவரொருவர் ஜமைக்கா நாட்டுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகப் பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் ரீதியான உறவுகள் நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவும் இதோடு ஒத்திசைகிறது.

7. சமீபத்திய அறிக்கையின்படி, காற்று மாசு காரணமாக நிகழ்ந்த இறப்புகளில் அதிகபட்ச எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ள நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. ரஷ்யா

இ. இந்தியா 

ஈ. சீனா

  • லான்செட் இதழில் வெளியிடப்பட்ட மாசு மற்றும் நலம் குறித்த அண்மைய அறிக்கையின்படி, 2019ஆம் ஆண்டில், இந்தியாவில் நிகழ்ந்த 16.7 இலட்சம் இறப்புகளுக்கு காற்று மாசுபாடு காரணமாக அமைந்துள்ளது. இது அந்த ஆண்டு நாட்டில் நிகழ்ந்த மொத்த இறப்புகளில், 17.8 சதவீதம் ஆகும். இந்தியாவில் காற்று மாசு தொடர்பான இறப்புகளில் பெரும்பாலானவை PM2.5 மாசுபாட்டால் ஏற்படுகின்றன. உலக அளவில், காற்று மாசுபாடு மட்டும் 66.7 இலட்சம் இறப்புகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

8. வாட்நகர் சர்வதேச மாநாட்டை நடத்தும் மாநிலம் எது?

அ. இராஜஸ்தான்

ஆ. குஜராத் 

இ. மகாராஷ்டிரா

ஈ. மத்திய பிரதேசம்

  • மத்திய கலாச்சார விவகார அமைச்சகத்துடன் இணைந்து காந்திநகரில் வாட்நகர் சர்வதேச மாநாட்டை குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் தொடங்கிவைத்தார். சர்வதேச அருங்காட்சியக நாளன்று, குஜராத் மாநில அரசு வாட்நகர் நகரத்தை உலகத்தரம்வாய்ந்த பாரம்பரிய சுற்றுலாத் தலமாக மாற்றுவதாக அறிவித்தது. வாட்நகர் அதன் நினைவுச்சின்னங்கள், கலைப்படைப்புகள் மற்றும் தொல்பொருள் மற்றும் வரலாற்று பாரம்பரியத்திற்காக பிரபலமாக அறியப்படுகிறது. வாட்நகர், பிரதமர் நரேந்திர மோதியின் சொந்த ஊராகும்.

9. கீழ்காணும் எந்த நாட்டின் அடுத்த அதிபராக ஹசன் ஷேக் முகமது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?

அ. தென்னாப்பிரிக்கா

ஆ. பிரான்ஸ்

இ. சோமாலியா 

ஈ. அர்ஜென்டினா

  • ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் அடுத்த அதிபராக அந்நாட்டுச் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் தலைவர் ஹசன் ஷேக் முகமதுவைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 2012 முதல் 2017 வரை சோமாலியாவின் அதிபராக பதவி வகித்த ஹசன் ஷேக் முகமது, தலைநகரம் மொகடிஷுவில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்றார்.

10. பன்னிரண்டாவது ஹாக்கி இந்தியா சீனியர் மகளிர் தேசிய சாம்பியன்ஷிப் – 2022இல் சாம்பியன் பட்டம் வென்ற மாநிலம் எது?

அ. கர்நாடகா

ஆ. ஜார்கண்ட்

இ. ஒடிஸா 

ஈ. மேற்கு வங்கம்

  • 12ஆவது ஹாக்கி இந்தியா சீனியர் மகளிர் தேசிய சாம்பியன்ஷிப் – 2022இல் ஒடிஸா சாம்பியன் பட்டம் வென்றது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற இந்தச் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் கர்நாடகாவை 2-0 என்ற கோல் கணக்கில் ஒடிஸா வென்றது. ஹரியானாவை வீழ்த்தி ஜார்கண்ட் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. நிதியாண்டு 2021-22-இல் $83.57 பில்லியன் அமெரிக்கன் டாலர் என்ற அளவுக்கு மிக அதிகமான வருடாந்திர அயல்நாட்டு நேரடி முதலீட்டை இந்தியா பெற்றுள்ளது

நிதியாண்டு 2021-22-இல் $83.57 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு மிக அதிகமான வருடாந்திர அயல்நாட்டு நேரடி முதலீட்டை இந்தியா பெற்றுள்ளது. இது 2014-2015-இல் வெறும் $45.15 பில்லியன் டாலராக இருந்தது. உக்ரைனில் இராணுவ நடவடிக்கை, COVID-19 பெருந்தொற்று ஆகியவை இருந்தபோதும், 2020-21ஐ விட வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரவு 1.60 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகமாக வரப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

பொருள் உற்பத்தித் துறையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு உகந்த நாடாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தத் துறையில் 2020-21 நிதியாண்டுடன் ($12.09 பில்லியன் டாலர்) ஒப்பிடுகையில், 2021-22 நிதியாண்டில் 76% உயர்வு ($21.34 பில்லியன் டாலர்) இருந்தது. இந்தியாவில் கொவிடுக்கு முந்தைய காலத்தில் (2018 பிப்ரவரி முதல் 2020 பிப்ரவரி வரை) $141.10 பில்லியன் டாலராக இருந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரவு கொவிடுக்கு பிந்தைய காலத்தில் (2020 மார்ச் முதல் 2022 மார்ச் வரை) 23% அதிகரித்து $171.84 பில்லியன் டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அயல்நாட்டு நேரடி முதலீட்டு வரவில் 2021-22 நிதியாண்டில் முதன்மை நாடாக 27 சதவீதத்துடன் சிங்கப்பூரும், 18 சதவீதத்துடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், 16 சதவீதத்துடன் மொரீஷியஸ் மூன்றாவது இடத்திலும் இருந்தன.

2. 2022 மே.20 – உலக தேனீக்கள் நாள்.

கருப்பொருள்: Bee Engaged: Celebrating the Diversity of Bees and Beekeeping Systems.

3. 2022 மே.20 – உலக எடை அளவியல் நாள்.

கருப்பொருள்: Metrology in the Digital Era.

4. விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில-இந்திய நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் – ஏப்ரல், 2022 அதிக புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம்

ஏப்ரல், 2022 மாதத்திற்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில-இந்திய நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் (அடிப்படை: 1986/87=100) 10 புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு 1,108 மற்றும் 1,119 புள்ளிகளாக உள்ளது. அரிசி, கோதுமை-ஆட்டா, சோளம், கம்பு, கேழ்வரகு, காய்கறி & பழங்கள் போன்றவற்றின் விலை உயர்வே, விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான பொதுக்குறியீடு உயர்வுக்கு முக்கியக்காரணமாக அமைந்து உள்ளது. இந்தக் குறியீடு உயர்வு / வீழ்ச்சி, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். விவசாயத் தொழிலாளர்களைப் பொருத்தவரை, 19 மாநிலங்களில் 1 புள்ளி முதல் 20 புள்ளிகள் வரை உயர்ந்துள்ள வேளையில், தமிழ்நாட்டைப் பொருத்தவரை 7 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது.

நுகர்வோர் விலைக்குறியீட்டுப்பட்டியலில் 1,275 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது; அதேவேளையில் ஹிமாச்சல பிரதேசம் 880 புள்ளிகளுடன் கடைசியில் உள்ளது. கிராமப்புறத் தொழிலாளர்களைப் பொருத்தவரை, 19 மாநிலங்களில் 2 முதல் 19 புள்ளிகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 7 புள்ளிகள் குறைந்துள்ளது. இந்தக் குறியீட்டில், 1263 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்திலும், 931 புள்ளிகளுடன் ஹிமாச்சல பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன. தமிழ்நாட்டில் அரிசி, மீன், வெங்காயம், காய்கறி & பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததே, இந்த சாதனைக்குக் காரணமாகும்.

5. உதகையில் 124ஆவது மலர்க்காட்சி

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 124ஆவது மலர்க்காட்சியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

6. சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறை…

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, முதல்முறையாக கோடைக்காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதற்கு முன்பாக, 1942, 1943, 1944 மற்றும் 1945 ஆகிய ஆண்டுகளில் மேட்டூர் அணையில் இருந்து கோடைக்காலமான மே மாதத்தில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

1. ‘Ramgarh Vishdhari Sanctuary’ which was notified as tiger reserve, is located in which state?

A. Gujarat

B. Madhya Pradesh

C. Rajasthan 

D. Punjab

  • The Ramgarh Vishdhari Sanctuary in Rajasthan was notified as India’s 52nd tiger reserve, as announced by the Union Environment Minister Bhupender Yadav. This is Rajasthan’s fourth tiger reserve after Ranthambore, Sariska and Mukundra. The National Tiger Conservation Authority (NTCA) approved to make Ramgarh Vishdhari Wildlife Sanctuary as tiger reserves last year.

2. What are ‘Surat’ and ‘Udaygiri’ recently launched by the Defence Minister?

A. Warships 

B. Missiles

C. Space Launch Vehicles

D. Fighter Jets

  • Defence minister Rajnath Singh launched two made–in–India warships ‘Surat’ and ‘Udaygiri’ in Mumbai. This is the first time two indigenously built warships have been launched together, the Mazgaon Dock Shipbuilders Ltd (MDL). Surat is the fourth guided missile destroyer of P15B class, and Udaygiri is the second stealth frigate of P17A class. Both warships have been designed in–house by the Directorate of Naval Design (DND) and built at Mazgaon Dock Shipbuilders, Mumbai.

3. Which country is the host of the XV World Forestry Congress?

A. Japan

B. USA

C. South Korea 

D. Argentina

  • During the XV World Forestry Congress, held in Seoul, South Korea, the Seoul Declaration was adopted. The Declaration, signed by 141 participant countries, focuses on identifying key areas that can help to tackle multiple crises of the humanity. It also highlighted the need to triple investments for restoring degraded land by 2030.

4. The World Bank sanctioned USD 350 billion to which state for implementing the ‘SRESTHA’ Project?

A. Assam

B. Gujarat 

C. Rajasthan

D. West Bengal

  • The World Bank sanctioned USD 350 billion to Gujarat for the implementation of Systems Reform Endeavours for Transformed Health Achievement in Gujarat (SRESTHA–G). Under the SRESTHA–Gujarat project, the government will undertake the initiative to expand the health services to the rural and urban people and strengthening the epidemic prevention system of the state.

5. Which was the top recipient countries for remittances in 2021?

A. India 

B. Egypt

C. Indonesia

D. Mexico

  • The top five recipient countries for remittances in 2021 were India, Mexico, China, the Philippines, and Egypt. According to the World Bank’s latest Migration and Development Brief, remittance flows to low– and middle–income countries are expected to increase by 4.2 percent this year to reach USD 630 billion.

6. ‘India Technical and Economic Cooperation (ITEC)’ is associated with which Ministry?

A. Ministry of Finance

B. Ministry of External Affairs 

C. Ministry of Science & Technology

D. Ministry of Electronics & IT

  • India Technical and Economic Cooperation (ITEC) Programme is an initiative of the Ministry of External Affairs, wherein participants from ITEC member countries are trained.
  • The President of India Ramnath Kovind’s visit to Jamaica is the first ever visit of an Indian President to the country. This is taking place in the 60th anniversary year of the establishment of diplomatic relations between the two countries.

7. As per a recent report, which country recorded the maximum number of air–pollution–related deaths?

A. USA

B. Russia

C. India 

D. China

  • According to a recent report on pollution and health published in The Lancet Planetary Health, Air pollution was responsible for 16.7 lakh deaths in India in 2019, which is 17.8% of all deaths in the country that year. The majority of the air pollution–related deaths in India were caused by PM2.5 pollution. Globally, air pollution alone contributes to 66.7 lakh deaths.

8. Which state is the host of ‘Vadnagar International Conference’?

A. Rajasthan

B. Gujarat 

C. Maharashtra

D. Madhya Pradesh

  • Gujarat Chief Minister Bhupendra Patel inaugurated the Vadnagar International Conference in Gandhinagar in collaboration with the Union Ministry of Cultural Affairs. On International Museum Day, the Gujarat government announced to make the city of Vadnagar into a world–class heritage tourism destination.
  • Vadnagar is known for its monuments, works of art, and archaeological and historical heritage. Vadnagar is also the native place of Prime Minister Narendra Modi.

9. Hassan Sheikh Mohamud has been selected as the next President of which country?

A. South Africa

B. France

C. Somalia 

D. Argentina

  • Somali legislators have elected former leader Hassan Sheikh Mohamud as the African country’s next president. Hassan Sheikh Mohamud, who served as Somalia’s president between 2012 and 2017, won the contest in the capital, Mogadishu.

10. Which state is the champion of the 12th Hockey India Senior Women National Championship 2022?

A. Karnataka

B. Jharkhand

C. Odisha 

D. West Bengal

  • Odisha were crowned as the champions of the 12th Hockey India Senior Women National Championship 2022. Odisha clinched a 2–0 victory over Karnataka in the final of the competition, held in Bhopal, Madhya Pradesh. Jharkhand earned a third–place finish in the competition after defeating Haryana.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!