Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

21st & 22nd November 2020 Current Affairs in Tamil & English

21st & 22nd November 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. IIT கரக்பூரைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் கீழ்க்காணும் எந்தப் பொருளைப் பயன்படுத்தி உணவுப் பொட்டலங்கட்ட பயன்படும் பொருளை உருவாக்கியுள்ளனர்?

அ. நெகிழி

ஆ. நானோ கலவை

இ. வெள்ளரித்தோல்

ஈ. வாழைப்பழத்தோல்

  • கரக்பூரின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுமமானது வெள்ளரித் தோல்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவுப் பொட்டலங்கட்ட பயன்படும் பொருளை உருவாக்கியுள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, வெள்ளரித் தோல்களில் அதிக செல்லுலோஸ் உள்ளது. வெள்ளரித் தோல்களிலிருந்து பெறப்பட்ட நானோ படிகங்கள் மக்கக்கூடிய உணவுப் பொட்டலங்கட்ட பயன்படும் பொருளை உருவாக்குவதற்கு ஏற்றதாக அமைகின்றன.

2. ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) அமைப்பில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை?

அ. 5

ஆ. 11

இ. 17

ஈ. 21

  • ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) அமைப்பு என்பது 21 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் அமைப்பாகும். இது சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இது, பசிபிக் விளிம்பு நாடுகளிடையேயான ஒரு கட்டற்ற வர்த்தக சங்கமாகும். அண்மையில், இதன் அனைத்து 21 உறுப்பு நாடுகளின் அமைச்சர்களும், COVID-19 தொற்றுநோய்க்குப்பின்னான பொருளாதார மீட்சிக்கு ஆதரவாக ஒன்றிணைந்து செயல்படுவதாக உறுதியளித்துள்ளனர்.

3. UNESCO’ஆல் பன்னாட்டு சகிப்புத்தன்மை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. நவம்பர் 16

ஆ. நவம்பர் 17

இ. நவம்பர் 18

ஈ. நவம்பர் 19

  • ஆண்டுதோறும் நவ.16 அன்று பன்னாட்டு சகிப்புத்தன்மை நாள் அனுசரிக்கப்படுகிறது. மக்களிடையே சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதும், சகிப்புத்தன்மை சமூகத்தின் ஓர் அங்கம் என்பதை அவர்களுக்குப் புரியவைப்பதும் இதன் நோக்கமாகும். சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையை ஊக்கப்படுத்துவதற்கான UNESCO மதன்ஜீத் சிங் பரிசு, காங்கோ ஜனநாயக குடியரசில், ‘மோதல்களைத் தீர்ப்பதற்கான மையம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

4. இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) வர்த்தகத் தடையின்கீழ் வைக்கப்பட்டுள்ள தனியார் வங்கி எது?

அ. இலக்ஷ்மி விலாஸ் வங்கி

ஆ. கருர் வைஸ்யா வங்கி

இ. இரத்னாகர் வங்கி

ஈ. தனலக்ஷ்மி வங்கி

  • இந்திய ரிசர்வ் வங்கியானது இலக்ஷ்மி விலாஸ் வங்கியை (LVB) தடைக்கு உட்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவ்வங்கியிலிருந்து குறிப்பிட்ட ஓரளவுக்கு மேலான வைப்புத்தொகையை அவ்வங்கியின் வாடிக்கையாளரால் எடுக்கவியலாது. LVB வங்கியை DBS வங்கி இந்தியாவுடன் இணைக்க ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது. இம்முடிவு, கடந்த மூன்று ஆண்டுகளில் LVB’இன் நிதிநிலை மோசமாக சரிவடைந்ததைத் தொடர்ந்து எடுக்கப்பட்டது. மோசமான கடன்களின் அதிகரிப்பு காரணமாக, அவ்வங்கி தற்போது பெரும் வாராக்கடனில் தத்தளித்து வருகிறது.

5. COVID-19 தடுப்பூசிகள்பற்றி பரப்படும் போலியான தகவல்களை எதிர்கொள்வதற்காக, ‘Halo’ என்னும் ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ள அமைப்பு எது?

அ. உலக நலவாழ்வு அமைப்பு

ஆ. ஐக்கிய நாடுகள் அவை

இ. உலக பொருளாதார மன்றம்

ஈ. உலக வங்கி

  • ஐக்கிய நாடுகள் அவையானது இலண்டன் பல்கலைக்கழகத்தின் ‘Vaccine Confidence’ திட்டத்துடன் கூட்டிணைந்து, ‘Halo’ என்றவொரு புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. COVID-19 தடுப்பூசிகள் பற்றி பரப்படும் போலியான தகவல்களை கையாளுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த உண்மையான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்துகொள்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இந்தி -யாவிலிருந்து, 22’க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் அடங்கிய அணி ‘Halo’இல் சேர்ந்துள்ளது.

6. இந்திய உயராணையர் அலுலகமானது கீழ்க்காணும் எந்த நாட்டில், சிறப்பு பதிப்பு கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?

அ. இலங்கை

ஆ. வங்கதேசம்

இ. நேபாளம்

ஈ. மியான்மர்

  • ‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் இரகுமானின் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில், இந்திய உயர் ஆணையர் அலுவலகமானது சிறப்பு பதிப்பு கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கதேசம் அதன் முதல் அதிபரும், தேசத்தின் தந்தையுமான ‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் இரகுமானின் பிறந்த நூற்றாண்டை முஜிப் நூற்றாண்டாக, ‘முஜிப் போர்ஷோ’ என்று கொண்டாடுகிறது. இந்தச்சிறப்பு பதிப்பு கைக்கடிகாரங்கள் அனைத்தும், ஷேக் முஜிபுர் இரகுமானின் நிழற்படத்தையும் கையொப்பத்தையும் தாங்கி நிற்கின்றன.

7. கொரோனா வைரஸைக் கண்டறியும் முதல் தன்-பரிசோதனை கருவிக்கு ஒப்புதல் அளித்த நாடு எது?

அ. இந்தியா

ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ. இரஷ்யா

ஈ. சீனா

  • அமெரிக்க உணவு & மருந்து நிர்வாகமானது வீட்டிலேயே தன்-பரிசோதனையின்மூலம் கொரோனா வைரஸைக் கண்டறியும் முதல் கருவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ‘Lucira COVID-19 All in One Test Kit’ என்பது மூலக்கூறு அடிப்படையில் இயங்கும் ஒருமுறை மட்டுமே பயன்பாட்டுக்குரிய ஒரு பரிசோதனை கருவியாகும். இது, முப்பது அல்லது அதற்கும் குறைவான நிமிடங்களில் முடிவுகளை வழங்கக்கூடிய முதல் பரிசோதனையாகும். 14 வயதுக்கு மேற்பட்டவர்களால் இதனை தாமாக நிர்வகிக்க முடியும்.

8. பசுக்களின் பாதுகாப்பிற்காக, “பசு அமைச்சரவை” என்றவொன்றை அமைக்கவுள்ள மாநில அரசு எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. மத்திய பிரதேசம்

இ. பீகார்

ஈ. குஜராத்

  • பசுக்களின் பாதுகாப்பிற்காக மாநிலத்தில் ‘பசு அமைச்சரவை’ அமைக்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். அந்த அமைச்சரவையில் கால்நடைப் பராமரிப்பு, வனம், பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி, வருவாய், வீட்டுவசதி மற்றும் உழவர் நலத்துறை ஆகியவை உள்ளடங்கும். அவ்வமைச்சரவையின் முதல் கூட்டம் நவ.22 அன்று நடைபெற்றது.

9. உலக மீனவர் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. நவம்பர் 19

ஆ. நவம்பர் 20

இ. நவம்பர் 21

ஈ. நவம்பர் 22

  • மீனவர்களின் வாழ்வு செழிப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள மீனவ மக்களால் நவ.21 அன்று ‘உலக மீனவர் நாள்’ கொண்டாடப்படுகிறது. உலகில் மீனவர்களின் முக்கியத்துவத்தை சிறப்பிக்கும் விதமாக பேரணிகள், பயிலரங்கங்கள், பொதுக்கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள், நாடகங்கள், கண்காட்சி, இசை நிகழ்ச்சி மற்றும் செய்முறை விளக்கங்கள் ஆகியவற்றின்மூலம் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

10. இலண்டனிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட வெண்கல சிலைகளை, நடுவண் கலாச்சார அமைச்சர் எந்த மாநிலத்திடம் ஒப்படைத்துள்ளார்?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளம்

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. இராஜஸ்தான்

  • இலண்டனிலிருந்து மீட்கப்பட்ட இராமன், சீதை, இலக்குவனின் வெண்கல சிலைகளை தமிழ்நாடு அரசிடம், மத்திய கலாச்சார துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் ஒப்படைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் ஆனந்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீ இராஜகோபால் விஷ்ணு கோவிலானது விஜயநகர பேரரசு காலத்திய கோவிலாகும். இங்கிருந்த இராமன், சீதை, இலக்குவன் மற்றும் அனுமன் வெண்கல சிலைகள் கடந்த 1978ஆம் ஆண்டு திருடுபோனது. இந்தத் திருட்டு குறித்து இலண்டன் காவல் துறையிடம், இந்திய தூதரகம் புகார் செய்தது.
  • இலண்டன் காவல்துறையினர் விசாரணை நடத்தி, இலண்டனில் சிலைகளை வைத்திருந்த நபரிடம் இருந்து இராமன், சீதை, இலக்குவன் மற்றும் அனுமன் சிலைகளை மீட்டு இந்திய தூதரகத்திடம் கடந்த செப்.15 அன்று ஒப்படைத்தனர். தமிழ்நாட்டு கோவிலில் திருடப்பட்ட சிலைகள் 42 ஆண்டுகளுக்குப்பின் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1. Researchers of IIT Kharagpur have developed food packaging material using which material?

[A] Plastic

[B] Nano Composite

[C] Cucumber Peels

[D] Banana Peels

  • A team of researchers from Indian Institute of Technology (IIT) Kharagpur have developed environment safe food packaging material using cucumber peels. According to them, cucumber peels have greater cellulose content and the nanocrystals derived from the peels makes it suitable for making bio–degradable food packaging material.

2. How many countries constitute the Asia–Pacific Economic Cooperation (APEC)?

[A] 5

[B] 11

[C] 17

[D] 21

  • Asia–Pacific Economic Cooperation (APEC), an inter–governmental forum for 21 member nations is headquartered at Singapore. It is a free trade association among the Pacific Rim nations. Recently, the Ministers of all the 21 member countries have vowed for working together to support the economic recovery post the COVID–19 pandemic

3. When is the International Day of Tolerance observed by UNESCO?

[A] November 16

[B] November 17

[C] November 18

[D] November 19

  • The International Day of Tolerance observed every year on November 16th. It aims to promote tolerance among cultures and people and make them understand that tolerance is an integral part of society. “The UNESCO Madanjeet Singh Prize for the Promotion of Tolerance and Non–Violence” has been awarded to the NGO named Résolution Conflits (Centre for Resolution of Conflicts) in the Democratic Republic of Congo.

4. Which private bank has been placed under moratorium with a cap in deposit withdrawals, by the Reserve Bank of India?

[A] Lakshmi Vilas Bank

[B] Karur Vysya Bank

[C] Ratnakar Bank

[D] Dhanlakshmi Bank

  • The Reserve Bank of India has placed Lakshmi Vilas Bank (LVB) under moratorium and has capped its deposit withdrawals. The RBI has also proposed to amalgamate the bank with DBS Bank India. This decision followed the steep deterioration of the financial position of LVB over the past three years. Due to the rise in bad loans and provisions, the bank has been witnessing heavy loans.

5. Which organisation has launched ‘Halo’ initiative to counter the misinformation around COVID–19 vaccines?

[A] WHO

[B] UN

[C] WEF

[D] World Bank

  • The United Nations (UN) has collaborated with the Vaccine Confidence Project at the University of London, to launch a new initiative named ‘Halo’. It aims to tackle the issue of misinformation around COVID–19 vaccines.
  • Over 100 scientists have come together to share authentic information on safety and effectiveness of vaccines via the social media. Over 22 scientists have joined Team Halo from India.

6. High Commission of India has launched Special Edition wrist watches in which country?

[A] Sri Lanka

[B] Bangladesh

[C] Nepal

[D] Myanmar

  • High Commission of India has launched Special Edition wrist watches to commemorate the Centenary year of Bangabandhu Sheikh Mujibur Rahman. Bangladesh is celebrating the birth centenary year of its founder president and Father of Nation Bangabandhu Sheikh Mujibur Rahman as Mujib Centenary year ‘Mujib Borsho’. The wristwatches in the limited–edition series bear the image and the signature of Sheikh Mujibur Rahman.

7. Which country has approved the first self–testing kit to detect coronavirus?

[A] India

[B] United States of America

[C] Russia

[D] China

  • The US Food and Drug Administration has approved the first coronavirus diagnostic kit for self–testing at home. The Lucira COVID–19 All–In–One Test Kit is a molecular single–use test. It is also the first test that can be fully self–administered and provide results in 30 minutes or less. It can be self–administered for those who are above 14 years old.

8. Which state government is set to have “Cow Cabinet” for protection of cows in the state?

[A] Uttar Pradesh

[B] Madhya Pradesh

[C] Bihar

[D] Gujarat

  • The Chief Minister Shivraj Singh Chauhan has recently announced that a Cow cabinet will be formed for the protection of cows in the state. The state cabinet will also include Animal Husbandry, Forest, Panchayat and Rural Development, Revenue, Home and Farmers Welfare Department. The first meeting of the cabinet is to be held on November 22.

9. The World Fisheries Day is observed on which date?

[A] November 21

[B] November 22

[C] November 23

[D] November 24

  • The World Fisheries Day is observed every year on 21st of November throughout the world by fishing communities. This day is celebrated through rallies, workshops, public meetings, cultural programs, dramas, exhibition, music show, and demonstrations to highlight the importance of maintaining the world’s fisheries.

10. Union Culture Minister has handed over bronze idols retrieved from London to which state?

[A] Tamil Nadu

[B] Kerala

[C] Andhra Pradesh

[D] Rajasthan

  • Union Minister of Culture Prahlad Singh Patel recently handed over the bronze idols of Lord Rama, Lakshmana and Goddess Sita to Idol Wing of Tamil Nadu Government. These Bronze idols were handed over to High Commission of India in London by the London Metropolitan Police, in September 2020. These idols belong to a temple in Nagapattinam district of Tamil Nadu, from where they were stolen in 1978.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!