Tnpsc

21st April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

21st April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 21st April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

21st April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தில் ஈடுபடவுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?

அ) அமேஸான்

ஆ) பேஸ்புக்

இ) மைக்ரோசாப்ட்

ஈ) சாம்சங்

  • தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், இந்தியாவில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற ஓர் ஒப்பந்தத்தில் பேஸ்புக் ஈடுபடுவது இது முதல் முறையாகும். இந்தியாவின் மின்சார கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்குவதற்காக பேஸ்புக் மற்றும் கிளீன்மேக்ஸ் இணைந்து செயல்படவுள்ளன. 32 மெகாவாட் காற்றாலை மின்னுற்பத்தி திட்டமானது கர்நாடகவில் அமைந்துள்ளது.

2.  “EatSmart Cities” சவால் மற்றும் “Transport 4 All” சவால் என இரு சவால்களை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

இ) சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம்

ஈ) பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது “EatSmart Cities Challenge மற்றும் Transport 4 All Challenge” ஆகிய இரு சவால்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘EatSmart Cities’ சவாலானது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மற்றும் சீர்மிகு நகரங்கள் திட்டத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டு -ள்ளது. சீர்மிகு நகரங்கள் நிலையான உணவுச் சூழலை வளர்ப்பதை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ‘Transport 4 All’ என்ற சவால் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவதற் -காக போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக்கொள்கை நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.

3. பயங்கரவாதிகளால் இணையம் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்த BRICS கருத்தரங்கை நடத்திய அமைப்பு எது?

அ) NITI ஆயோக்

ஆ) இந்திய இராணுவம்

இ) தேசிய புலனாய்வு முகமை

ஈ) CDAC

  • தேசிய புலனாய்வு முகமை ஏற்பாடுசெய்த “பயங்கரவாத நோக்கங்களுக் -காக இணையத்தை தவறாக பயன்படுத்துதல் மற்றும் பயங்கரவாத புலனாய்வுகளில் டிஜிட்டல் தடயவியலின் பங்கு” என்ற BRICS கருத்தரங் -கை இந்தியா நடத்தியது. இது, மெய்நிகர் வடிவத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட 2 நாள் நிகழ்வாகும். இது, சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் இணைய பயங்கரவாதத்தை கையாள்வதில் நன்னடைமுறைகளை தடையின்றி பகிர்ந்துகொள்வது ஆகியவற்றை வலியுறுத்தியது.

4. செப்.11’க்குள் பின்வரும் எந்நாட்டிலிருந்து அமெரிக்க துருப்புகளை திரும்பப்பெற ஐக்கிய அமெரிக்க நாடுகள் முடிவு செய்துள்ளது?

அ) ஈரான்

ஆ) ஈராக்

இ) உக்ரைன்

ஈ) ஆப்கானிஸ்தான்

  • அதிபர் பைடன் தலைமையிலான அமெரிக்கா, அடுத்த சில மாதங்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து அமெரிக்க துருப்புக்களையும் திரும்பப்பெற முடிவுசெய்துள்ளது. 2021 செப்.11’க்குள் இது நிறைவடைய உள்ளது. இத்தேதி, தாலிபான்கள், அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்திய 20ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

5. ஆறு மாநிலங்களில் உள்ள நூறு கிராமங்களில் ஒரு சோதனை திட்டத்தை மேற்கொள்வதற்காக, மத்திய வேளாண் அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமைப்பு எது?

அ) அமேசான்

ஆ) மைக்ரோசாப்ட்

இ) NSDC

ஈ) ONGC

  • உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, இராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களின் உள்ள நூறு கிராமங்களில் சோதனை அடிப்படையிலான திட்டத்தை செயல்படுத்த மத்திய வேளாண் அமைச்சகம் மைக்ரோசாப்ட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், சீரான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத்திற்கான உழவர் இடைமுகத்தை மைக்ரோசாப்ட் உருவாக்கும். இதில், அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை மற்றும் விநியோகம் ஆகியவை அடங்கும்.

6. எந்த அமைச்சகத்தின் ஆதரவின்கீழ், “ஹைட்ரஜன் பொருளாதாரம் – இந்திய பேச்சுவார்த்தை – 2021” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?

அ) பெட்ரோலிய & இயற்கை எரிவாயு அமைச்சகம்

ஆ) புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

இ) எரிசக்தி அமைச்சகம்

ஈ) பாதுகாப்பு அமைச்சகம்

  • மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ், எரிசக்தி மன்றமும் இந்திய பெட்ரோலிய தொழிற்துறை கூட்டமைப்பும் இணைந்து “ஹைட்ரஜன் பொருளாதாரம்-இந்திய உரையாடல்-2021” என்ற தலைப்பில் ஒரு வட்டமேசை மாநாட்டை ஏற்பாடு செய்தன.
  • இந்த வட்டமேசை மாநாடு, 2021 ஏப்.15 அன்று ஒரு மெய்நிகர் முறையில் நடத்தப்பட்டது. வளர்ந்துவரும் ஹைட்ரஜன் சூழல் அமைப்புகள் பற்றிய விவாதங்கள் மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வது இம்மாநாட்டின் நிகழ்ச்சி நிரலாகும்.

7. “My Body My Own” என்ற தலைப்பிலான அறிக்கையொன்றை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) உலக வங்கி

ஆ) UNFPA

இ) பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை

ஈ) ஐநா பெண்கள் அமைப்பு

  • ஐநா மக்கள்தொகை நிதியத்தின் (UNFPA) உலக மக்கள்தொகை அறிக் -கை 2021 ஆனது அண்மையில் வெளியிடப்பட்டது.
  • “My Body My Own” என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, 55% பெண்கள் மட்டுமே தங்களின் முடிவை தாங்களே எடுத்துக்கொள்ள முழு அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர். 57 வளரும் நாடுகளைச் சார்ந்த பாதி பெண்கள், அவர்களின் உடல்குறித்து முடிவெடுப்பதற்கும், கருத்தடை சாதனங்களைப்பயன்படுத்துவதற்கும், நலத்தைப்பேணுவதற்-கும் / அவர்களின் பாலுணர்வு எண்ணம்குறித்து முடிவெடுப்பதற்கும்கூட உரிமையற்றவர்களாக உள்ளனர்.

8. ஜான்சன் மற்றும் ஜான்சன் மற்றும் அஸ்ட்ராஜெனெகா தயாரித்த COVID-19 தடுப்பூசிகள், கீழ்காணும் எந்த வைரசை அடிப்படையாகப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டன?

அ) அடினோ வைரஸ்

ஆ) பப்பாவா வைரஸ்

இ) ஹெர்பெஸ் வைரஸ்

ஈ) பாக்ஸ் வைரஸ்

  • அடினோவைரஸ்கள் என்பது மனிதர்களில் கோழை, இரைப்பை / குடல் தொற்று, இளஞ்சிவப்புக்கண் நோய் போன்ற பலவிதமான நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களின் ஒரு குடும்பமாகும்.
  • மனிதர்களைப் பாதிக்கும் 88 வகையான அடினோவைரஸ் உள்ளன, இவை A-G என ஏழு வெவ்வேறு இனங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், ஜான்சன் & ஜான்சன் மற்றும் அஸ்ட்ராஜெனெகா உள்ளிட்ட பல்வேறு COVID-19 தடுப்பூசிகளின் உற்பத்திக்கு இந்த வைரஸ் அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

9. காடுகளைப் பொறுத்தவரை, குளிர்காலம் மற்றும் பருவமழைக் காலம் ஆகியவற்றுக்கு இடையேயான பருவம் என்ன?

அ) மழைக்காலம்

ஆ) காட்டுத்தீ காலம்

இ) பின்பனிக்காலம்

ஈ) வசந்த காலம்

  • ‘காட்டுத்தீ காலம்’ என்று குறிப்பிடப்படும் குளிர்காலம் & பருவமழைக் காலத்துக்கு இடையிலான பருவம், இந்தியாவில், காலநிலை மாற்றம் மற்றும் இமயமலைப் பகுதிகளில் பொழிந்த பெருமழையின் காரணமாக அதிகரித்து வருகிறது. உத்தரகாண்ட் காடுகள், கடந்த ஆறு மாதங்களாக காட்டுத்தீக்கு உள்ளாகி வருகின்றன. உத்தரகாண்ட் காடுகளில் நவம்பர் 2020 முதல் ஜனவரி 2021 வரை 470 தீ விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 39 ஆக இருந்தது.

10.’பழங்குடி மக்கள் பதிவேட்டை’ தயாரிப்பதற்காக குழுவொன்றை அமைக்கவுள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) அருணாச்சல பிரதேசம்

இ) கேரளா

ஈ) நாகாலாந்து

  • நாகாலாந்து மாநில அரசாங்கம் அம்மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கான ஒரு பதிவேட்டை உருவாக்குவதற்காக ஒரு கூட்டு ஆலோசனை குழுவை அமைக்க முடிவுசெய்துள்ளது. 2019 ஜூலையில், நாகாலாந்து அரசாங்கம் RIIN’ஐ அறிமுகப்படுத்தியது. அது, அஸ்ஸாம் மாநி -லத்தின் தேசிய குடிமக்களின் பதிவேட்டின் ஒரு வகையாகும். இந்தக் குழு, நாகாலாந்து மாநில பழங்குடி மக்களின் பதிவேட்டைத் (Register of Indigenous Inhabitants of Nagaland (RIIN)) தயாரிக்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இறக்குமதி செய்யப்படும் கரோனா தடுப்பூசிகளுக்கு சுங்க வரி தள்ளுபடி

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள கரோனா தடுப்பூசிகளுக்கு சுங்கவரியில் 10% தள்ளுபடி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் 45 வயதைக்கடந்தோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில், உள்நாட்டுத்தயாரிப்பான கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் மட்டுமே மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளபோதிலும், அது மக்களுக்கு இன்னும் செலுத்தப்படவில்லை. தொடக்கத்தில் அத்தடுப்பூசி ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு மக்களுக்கு அளிக்கப்படவுள்ளது. பின்னர் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படவுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள COVID தடுப்பூசிகளை இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

18 வயதைக் கடந்த அனைவரும் மே 1ஆம் தேதிமுதல் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான சூழலில், கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவாமல் இருப்பதை உறுதி செய்ய வெளிநாடுகளில் இருந்து கரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கரோனா தடுப்பூசிகளுக்கு 10 சதவீத சுங்கவரித் தள்ளுபடி அளிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளின் விலை, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளின் விலைக்கு இணையாக இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளுக்குத் தற்போதைய சூழலில், 10% சுங்கவரியும், 16.5% சரக்கு-சேவை வரியும் விதிக்கப்படுகிறது. சுங்கவரிக்கு தள்ளுபடி அளிப்பது தொடர்பான முடிவை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. 57 லட்சம் வழக்குகள் தேக்கம்: ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் புதிய வழிமுறைகள்

உயா்நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் சுமார் 57 லட்சம் வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வுகாண ஓய்வுபெற்ற நீதிபதிகளை தற்காலிக முறையில் நியமிக்க ஏதுவாக புதிய வழிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது. இதன்மூலம் மிகவும் அரிதான வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 224A பிரிவைப் பயன்படுத்தி, உயர்நீதிமன்ற தலை -மை நீதிபதிகள் எந்த நேரத்திலும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று 2 அல்லது மூன்று ஆண்டு காலத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமனம் செய்ய வழிவகுக்கிறது.

‘லோக் பிரஹாரி’ என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு தாக்கல் செய்த மனு மீது தலைமை நீதிபதி SA போப்டே, நீதிபதிகள் S K கெளல், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு 37 பக்கங்களைக்கொண்ட உத்தரவை வழங்கியது.

‘நாட்டிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிக நிலுவை வழக்குகள்’

நாட்டில் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் அதிகபட்சமாக 5.8 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் காலிப்பணியிடங்கள் வெறும் ஏழு சதவீதமாக இருந்தாலும், நிலுவை வழக்குகளின் அடிப்படையில் அனுபவம்மிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிக்கும் தேவை எழுந்துள்ளது என்று தலைமை நீதிபதி உள்ள அமர்வு தெரிவித்தது.

சென்னை, மும்பை, இராஜஸ்தான், அலாகாபாத், பஞ்சாப் & ஹரியானா ஆகிய ஐந்து நீதிமன்றங்களில் மட்டும் 57,51,312 இலட்சம் வழங்குகள் நிலுவையில் உள்ளன என்றும் தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டது.

3. G7 வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு: இந்தியாவுக்கு பிரிட்டன் அழைப்பு

G7 வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இந்தியாவுக்கு பிரிட்டன் அரசு அழைப்புவிடுத்துள்ளது. இதுகுறித் -து பிரிட்டன் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: G7 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு, இலண்டனில் வரும் மே.3 முதல் 5 வரை நடக்கவு -ள்ளது. அமைச்சர்கள் நேரில் பங்கேற்கும் இம்மாநாட்டில் கனடா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய 7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கும் ASEAN (தென்கிழக்காசிய நாடுகள்) அமைப்பின் பொதுச்செயலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் S ஜெய்சங்கர் பங்கேற்பார் என்று தெரிகிறது.

4. அன்னபூர்ணா சிகரத்தில் ஏறி இந்தியப் பெண் சாதனை

உலகின் பாத்தாவது உயரமான சிகரமான அன்னபூர்ணா சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 28 வயது பெண் பிரியங்கா மோஹிதே. இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியப் பெண் அவர். இமயமலைத்தொடரில் நேபாளத்தில் அமைந்துள்ள சிகரம் அன்னபூர்ணா. இது 8,091 மீட்டர் உயரம் கொண்டது. ஏறுவதற்கு மிகக் கடினமான மலைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

மேற்கு மகாராஷ்டிரத்தின் சதாரா பகுதியைச் சார்ந்த அவர், மருந்து உற்பத்தி நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றி வருகிறார். கடந்த 2013இல் உலகின் மிகவுயரமான எவரெஸ்ட் சிகரத்திலும் (8,849 மீட்டர்), 2018இல் லோட்ஸே சிகரத்திலும் (8,516 மீட்டர்), 2016இல் மக்காலு சிகரம் (8,485 மீட்டர்), கிளிமஞ்சாரோ சிகரம் (5,895 மீட்டர்) ஆகியவற்றிலும் பிரியங்கா ஏறியுள்ளார்.

கடந்த 2017-2018இல் சாகச விளையாட்டுகளுக்காக மகாராஷ்டிர அரசின் “சிவ சத்ரபதி” விருது பெற்றுள்ளார் பிரியங்கா.

5. துளிகள்

ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 73 கிலோ ‘குரூப் பி’-இல் இந்தியாவின் அச்சிந்தா ஷியுலி 7-ஆம் இடமும், 67 கிலோ பிரிவில் ஜெரிமி லால்ரினுங்கா 8-ஆம் இடமும் பிடித்தனர்.

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல்-லீட்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல்கணக்கில் டிரா ஆனது. லிவர்பூல் தரப்பில் சாடியோ மனே, லீட்ஸ் தரப்பில் டியேகோ லாரென்டே ஆகியோர் கோலடித்தனர்.

இலங்கை-வங்கதேச அணிகள் மோதும் இரண்டு டெஸ்டுகள்கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் பல்லகேலேவில் தொடங்குகிறது.

இந்தியாவில் முதன்முறையாக வரும் மே.1 அன்று நடத்தப்படும் டபிள்யூபிசி இந்திய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் சாந்தினி மெஹரா -சுமன் குமாரி லைட்வெயிட் பிரிவில் மோதுகின்றனர்.

6. கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வுப் பணிகள் தொடக்கம்

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம், மாளிகைமேட்டில் முதற்கட்ட அகழாய்வுப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கீழடி, ஆதிச்சநல்லூர் மற்றும் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வுப்பணிகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறைமூலம் அகழாய்வுக்கான இடம்தேர்வு செய்யும் பணிகள் கடந்த ஜனவரியில் தொடங்கியது. அப்போது முதற்கட்டமாக கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் ஆளில்லா விமானம்கொண்டு நிழற்படக்கருவிமூலம் நிழற்படம் எடுத்து மத்திய தொல்லியல் துறைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிவைத்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது கங்கைகொண்ட சோழபுரத்தில் மாளிகைமே -டு என்ற இடத்தில் அகழாய்வுப்பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ‘மாமன்னன்’ இராஜேந்திர சோழன் வாழ்ந்த அரண்மனை, செப்பேடுகள், பயன்படுத்தப்பட்ட பொருள்கள்போன்ற வரலாற்று பொக்கிஷங்களைக் கண்டறியும் வகையில் அகழாய்வுப்பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தொல்லியல் துறையினர் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் ஏழு மாவட்டங்களில் அகழாய்வுப்பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே கீழடி, ஆதிச்சநல்லூர்போன்ற இடங்களில் அகழாய்வுப்பணிகள் தொடங்கிவிட்டன. கங்கைகொண்ட சோ -ழபுரத்தில் அகழாய்வுப்பணிகள் நடைபெறுவதற்கான இடங்கள் ஏற்கனவே முதல்நிலை ஆய்வுசெய்து முடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதற்கட்ட அகழாய்வை தற்போது மாளிகைமேடு என்ற பகுதியில் தொடங்கியுள்ளோம். தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் நால்வர் கொண்ட குழுவினர் தலைமையில் 35 தொழிலாளர்களைக் கொண்டு அகழாய்வு நடைபெற்று வருகிறது. மேற்கண்ட ஆய்வில் பழங்கால கூரை ஓடுகள், பானை ஓடுகள், இரும்பினால் ஆன பொருள்கள், செம்புக்காசுகள் ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளன. செப்டம்பர் மாதம் வரை இந்த ஆய்வு நடைபெறும்.

1. Which technology company has entered the Renewable energy project in India?

A) Amazon

B) Facebook

C) Microsoft

D) Samsung

  • Technology and Social media giant Facebook have signed a deal to buy renewable energy in India. This is the first such deal of Facebook in the country. Facebook and CleanMax are working together for supplying renewable power into India’s electrical grid. The 32–megawatt wind power project is located in the state of Karnataka.

2. Which Union Ministry has launched the EatSmart Cities Challenge and Transport 4 All Challenge?

A) Ministry of Home Affairs

B) Ministry of Housing and Urban Affairs

C) Ministry of Health and Family Welfare

D) Ministry of Women and Child Development

  • Union Ministry of Housing and Urban Affairs launched the EatSmart Cities Challenge and Transport 4 All Challenge. EatSmart Cities Challenge was organized in association with Food Safety and Standards Authority of India (FSSAI) and Smart cities mission. It aims to encourage smart cities develop a sustainable food environment.
  • Transport 4 All Challenge was launched in association with Institute for Transportation and Development Policy (ITDP), to improve public transport.

3. Which organization hosted the BRICS seminar on misuse of the Internet by terrorists?

A) NITI Aayog

B) Indian Army

C) National Investigation Agency

D) CDAC

  • India hosted the BRICS seminar on “Misuse of Internet for Terrorist Purposes and Role of Digital Forensics in Terrorist Investigations”, which was organised by the National Investigation Agency (NIA).
  • It is a two–day event organized in a virtual format which emphasized on international cooperation and seamless sharing of good practices in tackling cyber terrorism.

4. USA has decided to withdraw all American troops from which country by September 11?

A) Iran

B) Iraq

C) Ukraine

D) Afghanistan

  • The United States of America headed by President Biden has decided to withdraw all American troops from Afghanistan over the next few months. The exit of troops is set to be completed by September 11th this year, which marks the 20th year anniversary of Twin tower attacks on the USA by the Taliban.

5. Union Agriculture Ministry has signed a MoU with which organization, for a pilot project in 100 villages of six states?

A) Amazon

B) Microsoft

C) NSDC

D) ONGC

  • The Union Ministry of Agriculture, has entered into an MoU with Microsoft for implementing a pilot project in 100 villages of six states – Uttar Pradesh, Madhya Pradesh, Gujarat, Haryana, Rajasthan and Andhra Pradesh. Under the project, Microsoft will develop a farmer interface for smart and well–organized agriculture, which includes post–harvest management and distribution.

6. Under the aegis of which ministry, the “Hydrogen Economy– the Indian Dialogue–2021” is organized?

A) Ministry of Petroleum and Natural Gas

B) Ministry of New and Renewable Energy

C) Ministry of Power

D) Ministry of Defense

  • Under the aegis of Union Ministry of Petroleum and Natural Gas, The Energy Forum (TEF) and the Federation of Indian Petroleum Industry (FIPI) have organized a round table conference titled – “Hydrogen Economy– the Indian Dialogue–2021”. The round table was conducted in a virtual mode on 15th April 2021.
  • Discussions on emerging hydrogen ecosystems and exploring opportunities for collaboration were agenda for discussion.

7. Which institution released a report titled “My Body is My Own”?

A) World Bank

B) UNFPA

C) Bill & Melinda Gates Foundation

D) UN Women

  • The United Nations Population Fund’s (UNFPA) flagship State of World Population Report 2021 was released recently. As per the report titled ‘My Body is My Own’, only 55% of women are fully empowered to make choices. Around half the women from 57 developing countries do not have the right to make decisions regarding their bodies, using contraception, seeking healthcare or on their sexuality.

8. Vaccines produced by Johnson & Johnson and AstraZeneca use which virus as the basis for COVID–19 vaccines?

A) Adeno Virus

B) Papova Virus

C) Herpes Virus

D) Pox Virus

  • Adenoviruses are a family of viruses that can cause a wide variety of illnesses in humans, including the common cold, gastrointestinal infections and pink eye. There are 88 types of adenovirus that would infect humans, and these are grouped into 7 different species, A–G.
  • Recently, in several COVID–19 vaccines, including those produced by Johnson & Johnson and AstraZeneca, these viruses are the basis for several COVID–19 vaccines.

9. With reference to forest, what is the season between winter and monsoon referred to as?

A) Rainfall Season

B) Forest fire season

C) Post–winter season

D) Spring Season

  • The season between winter and monsoon, referred to as the ‘forest fire season’, is increasing in India due to climate change and scarce rainfall in the Himalayan regions. The forests of Uttarakhand have not stopped burning in the last six months. There were 470 incidents of fire in Uttarakhand’s forests between November 2020 and January 2021 against the previous year’s count of 39.

10. Which state is set to form a committee to prepare the “Register of Indigenous Inhabitants” of the state?

A) Tamil Nadu

B) Arunachal Pradesh

C) Kerala

D) Nagaland

  • The Nagaland government has decided to form a joint consultative committee (JCC) for taking an exercise to register the State’s indigenous inhabitants.
  • In July 2019, the Nagaland government launched the RIIN, seen as a variant of Assam’s National Register of Citizens. The committee will prepare the Register of Indigenous Inhabitants of Nagaland (RIIN).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!