21st August 2020 Current Affairs in Tamil & English

21st August 2020 Current Affairs in Tamil & English

21st August 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

21st August 2020 Current Affairs Pdf Tamil

21st August 2020 Current Affairs Pdf English

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.மத்திய எஃகு அமைச்சகமானது எந்த அமைப்போடு இணைந்து, “வீட்டுவசதி மற்றும் கட்டட கட்டுமானம் & வானூர்தி துறைகளில் எஃகுப் பயன்பாட்டை வளர்த்தெடுப்பது” என்ற தலைப்பில் ஓர் இணையவழிக் கருத்தரங்கை நடத்தவுள்ளது?

அ. CII

ஆ. FICCI

இ. ASSOCHAM

ஈ. L&T

 • “தற்சார்பு இந்தியா: வீட்டு வசதி, கட்டடக்கட்டுமானம் மற்றும் விமானத்துறையில் எஃகுப் பயன்பாட்டை அதிகரித்தல்” என்னும் தலைப்பிலான இணையக் கருத்தரங்கை இந்தியத் தொழில் கூட்டமைப்புடன் (CII) இணைந்து, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் எஃகு அமைச்சகம் நடத்தவிருக்கிறது. எஃகு சார்ந்த வடிவமைப்பு மற்றும் கட்டடம், வீடுகள் மற்றும் வானூர்தி நிலையம் ஆகியவற்றின் கட்டுமானங்களில் எஃகுப் பயன்பாட்டை அதிகரித்தல் குறித்த பயனர்களின் எண்ணங்கள் மீது இந்த இணையவழிக்கருத்தரங்கு தனது கவனத்தைச் செலுத்தும்.

2.எந்த நிறுவனத்தின் ஆதரவின்கீழ், அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற விலைக்கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது?

அ. தேசிய மருந்துக்கல்வி ஆராய்ச்சி நிறுவனம்

ஆ. தேசிய மருந்து விலை ஆணையம்

இ. இந்திய பொதுத்துறை மருந்து நிறுவனங்களின் பணியகம்

ஈ. ஹிந்துஸ்தான் இயற்கை வேதிகள் லிட்

 • கர்நாடக மாநிலத்தில், மத்திய வேதியியல் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் NPPA’இன் (தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்) கீழ், புதிய விலைக்கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. சந்தையில் மருந்துகளின் விலையை கண்காணிக்க NPPA’க்கு உதவுவதும் அவற்றின் கிடைப்பை உறுதிசெய்வதும் இந்தப் பிரிவின் முக்கிய செயல்பாடாகும்.
 • NPPA அதன் நுகர்வோர் விழிப்புணர்வு, விளம்பரம் மற்றும் விலைக் கண்காணிப்பு (CAPPM) என்னும் மத்தியத்துறைத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே பன்னிரண்டு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் விலைக்கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப்பிரிவை (PMRU) அமைத்துள்ளது.

3.அண்மையில் தொடங்கப்பட்ட, மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் செயல்திறன் தகவல் பலகையின் பெயரென்ன?

அ. பழங்குடியினருக்கு அதிகாரம்; இந்தியாவில் மாற்றம்

ஆ. பழங்குடியினரின் தகவல் பலகைக்கு செல்லுங்கள்

இ. பழங்குடிகளின் மாற்றம் குறித்த தகவல் பலகை

ஈ. இந்திய பழங்குடியினரின் தகவல் பலகை

 • மத்திய பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள, “பழங்குடியினருக்கு அதிகாரம்; இந்தியாவில் மாற்றம்” என்ற இணையவழி செயல்திறன் தகவல்பலகை ஒன்றை NITI ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், NITI ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் ஆகியோர் தொடக்கிவைத்தனர். நீடித்த வளர்ச்சி இலக்குகளை (SDG) அடைவதுபற்றி பதினொரு திட்டங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து இந்தத் தகவல் பலகையில் உடனுக்குடன் பதிவுசெய்யப்படும். ஐந்து உதவித்தொகை திட்டங்கள் குறித்தும், இந்தத் தகவல் பலகையில் விவரங்கள் வெளியிடப்படும்.

4.போர்ப்ஸ் பட்டியலில், உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகர் யார்?

அ. வில் ஸ்மித்

ஆ. ஜாக்கி சான்

இ. சிவகார்த்திகேயன்

ஈ. டுவைன் ஜான்சன்

 • ‘தி ராக்’ என அழைக்கப்படும் டுவைன் ஜான்சன், உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் முதல் பத்து நடிகர்கள் இடம்பெற்ற போர்ப்ஸ் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ‘ராக்’, 2020ஆம் ஆண்டில் வாங்கிய சம்பளம் மட்டும் $87.5 மில்லியனாகும். $48.5 மில்லியன் சம்பளத்துடன் நடிகர் அக்‌ஷய்குமார் ஆறாவது இடத்தில் உள்ளார்; இந்தப் பட்டியலில் உள்ள ஒரே இந்திய நடிகர் இவர்தான்.

5. ‘Air Bubble’ ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்ட முதல் அண்டை நாடு எது?

அ. இலங்கை

ஆ. வங்கதேசம்

இ. மாலத்தீவுகள்

ஈ. நேபாளம்

 • ‘Air Bubble’ ஒப்பந்தத்தின்கீழ், இந்தியா, போக்குவரத்து சேவைகளை இயக்கும் முதல் அண்டை நாடாக மாலத்தீவுகள் உள்ளது. அண்மையில், உள்நாட்டு வான்போக்குவரத்து இயக்குநரகம், எந்தவொரு செல்லுபடியாகும் நுழைவு இசைவை (visa) வைத்திருக்கும் இந்தியர்கள், ‘Air Bubble’ ஒப்பந்தத்தின்கீழ் ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐக்கியப் பேரரசு, கனடா ஆகிய நாடுகளுக்கு விமானம் வழியாக பயணிக்க முடியும் என்று அறிவித்தது.

6.யாருக்கு அவரின் வீரமறைவுக்குப்பின், ‘கீர்த்தி சக்ரா’ விருதை வழங்கி இந்தியக்குடியரசுத்தலைவர் கெளரவித்தார்?

அ. அப்துல் ரஷீத் கலாஸ் ஆ. கிருஷன் சிங் ராவத்

இ. அனில் அர்ஸ் ஈ. அலோக் குமார் துபே

 • ராணுவப்படைகளின் தலைமைத்தளபதியாக இருக்கக்கூடிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ராணுவப்படை வீரர்களுக்கும், துணைராணுவப்படை வீரர்களுக்கும் 84 விருதுகள் & பதக்கங்களை வழங்குவதற்கு அனுமதி அளித்துள்ளார். இவற்றில் 1 கீர்த்தி சக்ரா விருது, 9 சௌர்யா சக்ரா விருதுகள், சேனா பதக்கம் பெற்ற ஐந்து வீரர்களுக்கு ஆடைப்பட்டயம் (தீரச்செயல்), அறுபது சேனா பதக்கங்கள் (தீரச்செயல்), 4 நவசேனா பதக்கங்கள் (தீரச்செயல்) மற்றும் ஐந்து வாயுசேனா பதக்கங்கள் (தீரச்செயல்) ஆகியன அடங்கும். இதில், “ஆபரேஷன் மேகதூத்” மற்றும் “ஆபரேஷன் ரக்‌ஷக்” ஆகியவற்றில் உயிர் இழந்த எட்டு வீரர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்குவதும் அடங்கும்.

7.பிரதமர் தனது விடுதலை நாள் உரையில் கீழ்க்கண்ட எவ்விரு விலங்கினங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு புதிய திட்டத்தை பரிந்துரைத்தார்?

அ. சிறுத்தைப்புலி மற்றும் காண்டாமிருகம்

ஆ. சிங்கம் மற்றும் ஓங்கில்

இ. காண்டாமிருகம் மற்றும் கலைமான்

ஈ. வங்கப்புலி மற்றும் ஆமை

 • இந்தியப் பிரதமர் மோடி, அண்மையில் 2020 ஆகஸ்ட்.15 அன்று தனது விடுதலை நாள் உரையை ஆற்றினார். அவ்வுரையில், சிங்கத்திட்டம் மற்றும் ஓங்கில் திட்டம் ஆகிய இரண்டு புதிய திட்டங்களைத் தொடங்குவது குறித்து அவர் குறிப்பிட்டார்.
 • சிங்கத்திட்டமானது ஆசிய சிங்கங்களையும் அதன் வசிப்பிடத்தையும் ஒரு முழுமையான முறையில் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மனித-வனவுயிரி மோதலைச் சமாளிக்கவும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கவும் உதவும். ஓங்கில் திட்டமானது ஆறுகள் & பெருங்கடல்களில் வாழும் ஓங்கில்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது.

8. COVID-19 தொற்றுநோயை சிறப்புற எதிர்த்துப் போராடியதற்காக, தமிழ்நாட்டு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டவர் யார்?

அ. சுந்தர் பிச்சை

ஆ. செளமியா சுவாமிநாதன்

இ. கமலா ஹாரிஸ்

ஈ. சத்யா நாதெல்லா

 • COVID-19 (கொரோனா) நோய்த்தடுப்புப்பணியில் சிறப்பான பங்களிப்பை ஆற்றியதற்காக, உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) முதன்மை ஆராய்ச்சியாளர் செளமியா சுவாமிநாதனுக்கு ‘தமிழ்நாட்டு முதலமைச்சரின் சிறப்பு விருது’ அளிக்கப்பட்டது. ‘முதலமைச்சரின் சிறந்த நடைமுறைகள் விருது’ கருவூலத்துறைக்கு அளிக்கப்பட்டது. COVID-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியமைக்காக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

9.மூன்று ICC கோப்பைகளையும் வெல்வதற்கு தனது அணியை வழிநடத்திய உலகின் ஒரே கிரிக்கெட் அணித்தலைவர் யார்?

அ. ரிக்கி பாண்டிங்

ஆ. மகேந்திர சிங் தோனி

இ. செளரவ் கங்குலி

ஈ. விராத் கோலி

 • இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் அணித்தலைவருமான மகேந்திர சிங் தோனி (MSD), பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதான MS தோனி, மூன்று ICC கோப்பைகளையும் வெல்வதற்கு தனது அணியை வழிநடத்திய உலகின் ஒரே கிரிக்கெட் அணித் தலைவராக திகழ்கிறார். அவரது தலைமையின்கீழ், இந்தியா, 2007’இல் ICC உலக T20, 2010 மற்றும் 2016’இல் ஆசியக்கோப்பை, 2011’இல் ICC கிரிக்கெட் உலகக்கோப்பை மற்றும் 2013ஆம் ஆண்டில் ICC சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை வென்றது. MS தோனியைத் தொடர்ந்து மற்றொரு கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரைனாவும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

10.எல்லையோர மற்றும் கடலோர மாவட்டங்களை உள்ளடக்கும் எந்த இளையோர் சேவைப்பிரிவை விரிவுபடுத்த, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்?

அ. நாட்டு நலப்பணித் திட்டம் (NSS)

ஆ. தேசிய மாணவர் படை (NCC)

இ. இந்திய சாரணர் சங்கம்

ஈ. காவலர் நண்பர்கள்

 • அனைத்து எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள இளையோரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்வதற்காக, தேசிய மாணவர் படையை (NCC) பேரளவில் விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இத்திட்டம் குறித்த பரிந்துரையை பிரதமர் நரேந்திர மோடி, ஆக.15 அன்று தனது விடுதலை நாள் உரையில் அறிவித்தார்.
 • ஒட்டுமொத்தமாக 173 எல்லையோர மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள 1 இலட்சம் பேர், தேசிய மாணவர் படையில் (NCC) சேர்க்கப்படுவார்கள். இதில், மூன்றில் ஒரு பங்கினர் சிறுமிகளாக இருப்பர். விரிவாக்கத் திட்டத்தின் ஓர் அங்கமாக, எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில், படையினருக்கு NCC பயிற்சியளிப்பதற்காக ஒட்டுமொத்தமாக 83 தேசிய மாணவர்படைப்பிரிவுகள் (ராணுவம் 53, கடற்படை 20, விமானப்படை 10) மேம்படுத்தப்படும்.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

74ஆவது இந்திய விடுதலை நாளன்று தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்ட விருதுகள்:

கல்பனா சாவ்லா விருது – செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவள்ளி மற்றும் முத்தம்மாள்.

 • நீரில் தத்தளித்து உயிருக்குப் போராடிய நான்கு பேரை துணிச்சலுடன் காப்பாற்றியதற்காக
 • `5 இலட்சம் காசோலை, 8 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் அடங்கியது.

டாக்டர் ஆ. ப. ஜெ அப்துல்கலாம் விருது – ச. செல்வகுமார், ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை.

 • பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வியை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதற்காக
 • 8 கிராம் தங்கப்பதக்கம், `5 இலட்சம் ரொக்கம், பாராட்டுச்சான்றிதழ் ஆகியன அடங்கியது.

சிறந்த சமூக சேவகர் – கோதனவள்ளி.

சிறந்த நிறுவனம் – கிரீட் எனப்படும் கிராமப்புற கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு மையம்.

சிறந்த உள்ளாட்சி அமைப்புகள்:

 • சிறந்த மாநகராட்சி – வேலூர் மாநகராட்சி (`25 இலட்சம்).
 • சிறந்த நகராட்சிகள் – விழுப்புரம் (`15 இலட்சம்) நகராட்சி முதல் பரிசையும், கரூர் (`10 இலட்சம்) இரண்டாவது பரிசையும், கூத்தநல்லூர் (`5 இலட்சம்) மூன்றாவது பரிசையும் பெற்றது.
 • சிறந்த பேரூராட்சிகள் – சேலம் மாவட்டம் வனவாசி (`10 இலட்சம்) முதல் பரிசையும், இரண்டாம் பரிசு சேலம் மாவட்டம் வீரபாண்டிக்கு `5 இலட்சமும், கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரைக்கு `3 இலட்சமும் வழங்கப்பட்டது.

1. Steel Ministry is to conduct a Webinar titled “Fostering Steel Usage in Housing & Building Construction and Aviation Sectors”, along with which organization?

[A] CII

[B] FICCI

[C] ASSOCHAM

[D] L&T

 • The Union Steel Ministry, in association with Confederation of Indian Industry (CII), has proposed to organise a webinar titled ‘Atmanirbhar Bharat: Fostering Steel Usage in Housing & Building Construction and Aviation Sectors’. The webinar would be conducted with the Union Ministry of Housing and Urban Affairs, and Ministry of Civil Aviation. It would focus on promoting designs and construction in Building, Housing, and Airport Projects.

2. Price Monitoring and Resource Units (PMRU), seen in news recently, is set up under the aegis of which agency?

[A] National Institute of Pharmaceutical Education Research

[B] National Pharmaceutical Pricing Authority

[C] Bureau of Pharma PSUs of India

[D] Hindustan Organic Chemicals Ltd

 • A new PMRU (Price Monitoring and Resource Unit) has been set up in the state of Karnataka under NPPA (National Pharmaceutical Pricing Authority), Union Ministry of Chemicals and Fertilizers. The main function of the PMRU is to assist NPPA to monitor the price of drugs in the market and also to ensure their availability. NPPA has established PMRUs in 12 States/ UTs under its Central Sector Scheme called Consumer Awareness, Publicity and Price Monitoring (CAPPM).

3. What is the name of the performance dash board of Ministry of Tribal Affairs launched recently?

[A] Empowering Tribals, Transforming India Dashboard

[B] Go Tribal Dashboard

[C] Tribal Transformation Dashboard

[D] Tribes India Dashboard

 • The Online Performance dashboard of Ministry of Tribal Affairs called the “Empowering Tribals, Transforming India” has been launched. The dashboard was launched by Amitabh Kant, CEO of NITI Aayog and Ramesh Chand, Member of NITI Aayog.
 • The Dashboard is an interactive online platform that shows the real–time details of 11 schemes / initiatives of the Ministry of Tribal Affairs. It also displays performance of 5 Scholarship Schemes of the Ministry.

4. Which actor has topped the Forbes List of Top 10 highly paid male actors of the world?

[A] Will Smith

[B] Jackie Chan

[C] Sivakarthikeyan

[D] Dwayne Johnson

 • Dwayne Johnson, also known as the Rock, has topped the Forbes List of Top 10 highly paid male actors of the world. The recently released annual list stated that the actor was paid an estimate of USD 87.5 million in the year 2020. Indian Actor Akshay Kumar was positioned 6th in the list with earnings of USD 48.5 million.

5. Which is the first neighbouring country with which India has made the ‘Air Bubble’ agreement?

[A] Sri Lanka

[B] Bangladesh

[C] Maldives

[D] Nepal

 • Maldives is the first neighbouring country with which India is operating transport services under the air bubble agreement. Recently, the Director–General of Directorate General of Civil Aviation announced that Indians holding any kind of valid visa can travel through air to US, UK, Canada under air bubble agreement.

6. Who has been posthumously awarded the Kirti Chakra award, by the President of India?

[A] Abdul Rashid Kalas

[B] Krishan Singh Rawat

[C] Anil Urs

[D] Alok Kumar Dubey

 • President Shri Ram Nath Kovind, who is also the Supreme Commander of the Armed Forces, has approved 84 awards and decorations to the Armed Forces personnel and members of the Paramilitary Forces.
 • The awards include one Kirti Chakra, nine Shaurya Chakras, five Bar to Sena Medals (Gallantry), 60 Sena Medals (Gallantry), four Nao Sena Medals (Gallantry)and five Vayu Sena Medals (Gallantry). The President has also approved 19 Mention–in–Despatches to the Army Personnel for their significant contributions in different military operations which include eight posthumous for ‘Operation Meghdoot’ and ‘Operation Rakshak’.

7. A New Project for conservation of which two animals was referred by the Prime Minister in his Independence Day speech?

[A] Leopard and Rhino

[B] Lion and Dolphin

[C] Rhino and Black buck

[D] Bengal Tiger and Turtle

 • The Indian Prime Minister Narendra Modi has recently delivered his Independence Day speech on August 15, 2020. In the speech, he mentioned about the launch of two new projects: Project Lion and Project Dolphin. The Project Lion aims to conserve Asiatic Lions and its landscape in a holistic manner. It will also help to tackle the Human–wildlife conflict and provide livelihood opportunities. Project Dolphin aims to conserve and protect Dolphins in the rivers and in oceans.

8. Who has been awarded the Tamil Nadu Chief Minister’s special award for his/her contribution in fighting COVID–19?

[A] Sundar Pichai

[B] Soumya Swaminathan

[C] Kamala Harris

[D] Sathya Nadella

 • Soumya Swaminathan, the Chief Scientist of World Health Organisation, was conferred with the Tamil Nadu Chief Minister’s special award, for her advisory role in fighting the COVID–19 in the state. The Chief Minister’s Best Practices award was given to the Department of treasuries. Greater Chennai Corporation and Tamil Nadu Medical Services Corporation were also awarded for their significant roles in the fight against the pandemic.

9. Who is the only Cricket Captain in the world who led his team to win all three ICC trophies?

[A] Ricky Ponting

[B] Mahedra Singh Dhoni

[C] Sourav Ganguly

[D] Virat Kohli

 • Indian cricket icon and former captain Mahendra Singh Dhoni has announced retirement from international cricket. The 39–year–old star is the only captain in the world who led his team to win all three ICC trophies so far. Under his captaincy, India won the ICC World Twenty20 in 2007, Asia Cups in 2010 and 2016, the ICC Cricket World Cup in 2011 and the ICC Champions Trophy in 2013. Another Cricketer Suresh Raina also announced his retirement.

10. Union Defence Minister approved to expand which youth service wing to cover border and coastal districts?

[A] National Service Scheme (NSS)

[B] National Cadet Corps (NCC)

[C] The Bharat Scouts and Guides

[D] Friends of Police

 • Defence Minister Rajnath Singh has approved a proposal of the National Cadet Corps (NCC) to expand to cover border and coastal districts. The proposal regarding the scheme was announced by the Prime Minister Narendra Modi in his Independence Day address. As many as one lakh cadets from 173 border and coastal districts will be inducted to the NCC with one–third Cadets being girls. Over 80 NCC units will also be upgraded as a part of this expansion.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *