Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

21st December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

21st December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

21st December 2020 Tnpsc Current Affairs in Tamil

நடப்பு நிகழ்வுகள்

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, NERPSIP என்ற வடகிழக்குப் பிராந்திய மின்சார அமைப்பின் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துகிற அமைப்பு எது?

அ. REC

ஆ. POWERGRID

இ. NTPC

ஈ. ONGC

  • வடகிழக்குப் பிராந்திய மின்சார அமைப்பின் மேம்பாட்டுத் திட்டத்திற்கான `6700 கோடி மதிப்பிலான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய ஆறு வடகிழக்கு மாநிலங்களில் மின்சாரப்பகிர்மானமும், விநியோகமும் வலுவடையும். மேற்கண்ட 6 மாநிலங்களுடன் இணைந்து, மத்திய மின்சக்தி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவன -மான பவர்கிரிட் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

2. ‘பிராண்ட் இந்தியா’வை முன்னிலைப்படுத்துவதற்காக கீழ்க்காணும் எந்த வகை வலைத்தளத்தை மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது?

அ. பொருளாதார செயலாண்மைத் திறன் வலைத்தளம்

ஆ. பயங்கரவாத எதிர்ப்பு வலைத்தளம்

இ. சைபர் செயலாண்மைத் திறன் வலைத்தளம்

ஈ. கலாச்சார வளர்ச்சி வலைத்தளம்

  • பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு, ‘பிராண்ட் இந்தியா’வை வெளிச்சம்போட்டுக்காட்டுவதற்காக, மத்திய வெளியுறவு அமைச்சகமானது சமீபத்தில் ஒரு பொருளாதார செயலாண்மைத்திறன் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது. இது, வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார செயலாண்மைத்திறன் பிரிவால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார, பிராந்திய மற்றும் மாநில வாரியான போக்குகள், மாநில / யூனியன் பிரதேசங்களின் பொருளாதார மற்றும் கொள்கை சுயவிவரங்களையும் இவ்வலைத் தளம் காண்பிக்கும். இது, APEDA போன்ற முகமைகள்மூலம் இந்திய வணிகங்களையும், ஆர்வமுள்ள முதலீட்டாளர்களையும் இணைக்கிறது.

3. ISO சான்றிதழ்பெற்ற முதல் இந்திய விலங்கியல் பூங்கா எது?

அ. ‘பேரறிஞர்’ அண்ணா விலங்கியல் பூங்கா

ஆ. நேரு விலங்கியல் பூங்கா

இ. திருவனந்தபுரம் உயிரியல் பூங்கா

ஈ. அலிபூர் தேசிய பூங்கா

  • இங்கிலாந்தைச் சார்ந்த அங்கீகார அமைப்பான ASCB’இன் மதீப்பிட்டைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் அமைந்துள்ள நேரு விலங்கியல் பூங்காவுக்கு அண்மையில் ISO சான்றிதழ் வழங்கப்பட்டது. ISO 9001: 2015 தர மேலாண்மை தரச் சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதல் விலங்கியல் பூங்காவாக இந்தப் பூங்கா அமைந்துள்ளது. சுகாதாரம், உணவுப்பதப்படுத்துதல், விலங்கு இனப்பெருக்கம் போன்றவற்றில் பின்பற்றப்பட்ட தரநிலைகள் மதிப்பீடு செய்யப்பட்டன.

4. ‘PHDI’ என்ற புதிய அளவுருவை கணக்கில் எடுத்துக்கொண்டால், மனிதவள மேம்பாட்டுக்குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ. 101

ஆ. 108

இ. 121

ஈ. 123

  • ஐநா வளர்ச்சித்திட்டம் HDI அல்லது PHDI எனப்படும் புதிய அளவுருவை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு நாட்டின் தனிநபர் CO2 உமிழ்வு மற்றும் அதன் பொருள் தடம் ஆகியவற்றால் ஏற்படும் தாக்கத்தை இது மதிப்பிடுகிறது. மனிதவள மேம்பாட்டுக்குறியீட்டில் (HDI) இந்தியா 131ஆவது இடத்தில் உள்ளது. இந்த அளவுருவை கருத்தில்கொள்ளும்போது, இந்தியா, இப்பட்டியலில் 123ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் அயர்லாந்து முதலிடத்தில் உள்ளது.

5. சிலாஹட்டி-ஹல்திபாரி என்பது எவ்விரு நாடுகளுக்கு இடையிலான இரயில் வழித்தடமாகும்?

அ. இந்தியா – பாகிஸ்தான்

ஆ. இந்தியா – வங்காளதேசம்

இ. இந்தியா – பூடான்

ஈ. இந்தியா – நேபாளம்

  • இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையிலான 1965’க்கு முந்தைய இரயில்தட இணைப்பான சிலாஹட்டி-ஹல்திபாரி இரயில் இணைப்பு தற்போது திறக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையி -லான இரயில் இணைப்பை மேம்படுத்துவதற்காக, 1965’க்கு முந்தைய 6 இரயில் பாதைகள் மீண்டும் திறக்கப்படும் என முடிவுசெய்யப்பட்டது. சிலாஹட்டி-ஹல்திபாரி இரயில் இணைப்பு திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆறு வழித்தடங்களில் ஐந்து வழித்தடங்கள் இந்தியாவிற்கும் வங்காளதேசத்துக்கும் இடையே இயக்கப்படுகின்றன.

6. 2020 மனித சுதந்திரக் குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 110

ஆ. 111

இ. 112

ஈ. 113

  • நடப்பாண்டின் (2020) மனித சுதந்திரக் குறியீடை அமெரிக்காவின் கேடோ நிறுவனமும் கனடாவின் பிரேசர் நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ளன. இது உலகின் மனித சுதந்திரத்தின் நிலையை அளவிடுகிறது. இந்தக் குறியீட்டில் இடம்பெற்ற 162 நாடுகளில், இந்தியா 111ஆவது இடத்தில் உள்ளது. தனிப்பட்ட சுதந்திரத்தின் அடிப்படையில் 110ஆவது இடத்திலும், பொருளாதார சுதந்திரத்தில் 105ஆவது இடத்திலும் இந்தியா உள்ளது. ஒட்டுமொத்த சராசரி மதிப்பெண்ணான பத்துக்கு 6.43 இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. உலகின் சராசரி மதிப்பெண் 6.93 ஆகும்.

7. அண்மையில் CMS-01 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவிய அமைப்பு எது?

அ. NASA

ஆ. ISRO

இ. JAXA

ஈ. ROSCOSMOS

  • இந்திய தகவல்தொடர்பு செயற்கைக்கோளான CMS-01’ஐ இந்திய விண்வெளி ஆய்வுமையம் (ISRO) வெற்றிகரமாக ஏவியது. ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் SHAR ஏவுதளத்திலிருந்து PSLV C-50 என்ற ஏவுகலத்தில் இந்தச் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. PSLV-C50 என்பது PSLV’இன் 52ஆவது பயணமாகும். இம்முறையோடு, SHAR’இலிருந்து 77ஆவது முறையாக செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.

8. சீன விண்கலமான சாங் 5 புவிக்குத் திரும்பியுள்ளது. அது, கீழ்க்காணும் எந்த வானியல் பொருளில் இருந்து மாதிரிகளை எடுத்து வந்துள்ளது?

அ. வியாழன்

ஆ. சனி

இ. திங்கள்

ஈ. ஞாயிறு

  • சீனத்து விண்கலமான சாங் 5, நிலவிலிருந்து பாறை மற்றும் குப்பைகளின் மாதிரிகளுடன் புவிக்குத் திரும்பியுள்ளது. இந்த விண்கலம் திங்களில் தரையிறங்கி திங்களின் மேற்பரப்பை துளையிட்டு சுமார் 2 கிலோகிராம் மாதிரிகளைச்சேகரித்தது. 1976’இல் சோவியத் யூனியனின் லூனா 24 ரோபோவின் ஆய்வுக்குப்பிறகு, நிலவுப் பாறைகளின் புதிய மாதிரிகளைக் கொண்டு வந்தது இந்த விண்கலந்தான்.

9. யோகாசனாவுக்கு விளையாட்டுப்போட்டி என்ற அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கிய நாடு எது?

அ. இந்தியா

ஆ. பாகிஸ்தான்

இ. இலங்கை

ஈ. சீனா

  • யோகாசனத்தை விளையாட்டுப்போட்டியாக அரசு முறையாக அங்கீகரித்திருப்பதாக மத்திய AYUSH அமைச்சகமும் இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகமும் அறிவித்துள்ளன. அண்மையில், யோகாவை ஒரு விளையாட்டுப்போட்டியாக வளர்த்தெடுப்பதற்காக இந்தியா தேசிய யோகாசனா விளையாட்டு கூட்டமைப்பை நிறுவியது.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Great Astronomical Conjunction’ என்பது கீழ்க்காணும் எவ்விரு கோள்களின் நெருக்கமான ஒருங்கமைவாகும்?

அ. வியாழன் மற்றும் சனி

ஆ. சனி மற்றும் வெள்ளி

இ. வியாழன் மற்றும் வெள்ளி

ஈ. புதன் மற்றும் வெள்ளி

  • புவியின் பார்வைப்புலத்திலிருந்து, 2 மிகப்பெரிய வாயுக்கோள்களான வியாழன் & சனி ஆகியவற்றின் பெரும் ஒருங்கமைவு 2020 டிச.21 அன்று நிகழ்ந்தது. இக்கோள்கள் ஒன்றுக்கொன்று மிகநெருக்கமாக தோன்றும்போது, அவை வானத்தில் ஒரு பிரகாசமான புள்ளிபோன்று தோற்றமளிக்கும். இருப்பினும், அவற்றின் மெய்யான தொலைவு 735 மில்லியன் கிமீ ஆகும். 1623ஆம் ஆண்டில் இந்தக் கோள்கள் இவ்வாறு மிகநெருக்கமாக தோன்றின.

21st December 2020 Tnpsc Current Affairs in English

1. The North East Power Project, NERPSIP which was seen in the news recently, is implemented by which organisation?

[A] REC

[B] POWERGRID

[C] Tripura

[D] Andhra Pradesh

  • The North Eastern Region Power System Improvement Project (NERPSIP) was approved in 2014 as a Central Sector Scheme and is being funded with the assistance of World Bank fund. It is being implemented through POWERGRID, a Public Sector Undertaking under Ministry of Power in association with six beneficiary North Eastern States namely, Assam, Manipur, Meghalaya, Mizoram, Nagaland, and Tripura. The Union Cabinet has approved the Revised Cost Estimate of the scheme at Rs 6700 crore.

2. Union External Affairs Ministry has launched which category of website, to highlight ‘Brand India’?

[A] Economic Diplomacy website

[B] Counter Terrorism website

[C] Cyber Diplomacy website

[D] Cultural Growth website

  • The Ministry of External Affairs has recently launched an Economic diplomacy website, to project ‘Brand India’ to global investors. It is managed by the Economic Diplomacy Division of the Ministry. The website will also showcase India’s economic, regional and state–wise trends, the economic and policy profiles of state/ UTs. It connects the Indian businesses and the interested investors through agencies like APEDA.

3. Which is the first Indian zoological park to receive ISO Certification?

[A] Arignar Anna Zoological Park

[B] Nehru Zoological Park

[C] Thiruvananthapuram Zoo

[D] Alipore National Park

  • Nehru Zoological Park, Hyderabad, recently received the ISO Certification, after an assessment from the UK–based accreditor ASCB. The park became the first zoological park in India to acquire the ISO 9001:2015 Quality Management Standards Certification. The standards followed in the Park in the area of sanitation, food processing, animal breeding, among others were assessed.

4. What is the rank of India in the Human Development Index, if the new metric ‘PHDI’ is taken into account?

[A] 101

[B] 108

[C] 121

[D] 123

  • The United Nations Development Programme introduced a new measure named called the Planetary Pressures–adjusted HDI, or PHDI. It assesses the impact caused by each country’s per–capita carbon emissions and its material footprint. While India stands at 131st rank in the Human Development Index, when this metric is considered, India is placed at 123rd rank in the list, which is topped by Ireland.

5. Chilahati–Haldibari is a railway link between which two countries?

[A] India – Pakistan

[B] India – Bangladesh

[C] India – Bhutan

[D] India – Nepal

  • The pre 1965 rail link between India and Bangladesh – Chilahati–Haldibari rail link has been inaugurated. In order to enhance the rail connectivity between the two countries, it was decided that six number of pre 1965 rail routes would be reopened. With the Chilahati–Haldibari rail link declared opened, five out of the said six routes are operational between India and Bangladesh.

6. What is India’s rank in the Human Freedom Index 2020?

[A] 110

[B] 111

[C] 112

[D] 113

  • The Human Freedom Index 2020 is released by the Cato Institute in the United States and Fraser Institute in Canada, which measures the state of Human Freedom in the world. Out of 162 countries that were ranked in the index, India has been placed at 111th rank. India was ranked 110 in terms of personal freedom and 105 on economic freedom. An overall score of 6.43 out of 10 was given to India, with the global average score being 6.93.

7. Communication satellite CMS–01, which was launched recently, was launched by which organisation?

[A] NASA

[B] ISRO

[C] JAXA

[D] ROSCOSMOS

  • India’s communication satellite CMS–01 was successfully launched by the Indian Space Research Organisation (ISRO). The satellite was launched aboard the launch vehicle, PSLV–C50, from the Satish Dhawan Space Centre (SDSC) SHAR, Sriharikota. The vehicle injected the satellite into its planned orbit. PSLV–C50 is the 52nd flight of PSLV and this was the 77th launch vehicle mission from SDSC SHAR.

8. Chinese spacecraft Chang’e 5 has returned to the Earth, carrying samples from which astronomical body?

[A] Jupiter

[B] Saturn

[C] Moon

[D] Sun

  • Chinese spacecraft Chang’e 5 probe has returned to Earth with the first samples of rock and debris from the moon. The modules of the probe landed on the moon and collected about 2 kilograms of samples by drilling the surface of the moon. After Soviet Union’s Luna 24 robot probe in 1976, only this probe brought fresh samples of lunar rocks.

9. Which country offered official recognition to Yogasana as a competitive sport?

[A] India

[B] Pakistan

[C] Sri Lanka

[D] China

  • The Government of India has recently offered official recognition to Yoga as a competitive sport, as a push to make it a part of the Olympic Games. Recently, India established the National Yogasana Sport Federation of India (NYSFI) for the development of yoga as a competitive sport. Ministry of Youth Affairs and Sports and Ministry of AYUSH are collaborating in this regard.

10. ‘Great Astronomical Conjunction’, which was seen in the news recently, is the closer appearance of which two planets?

[A] Jupiter and Saturn

[B] Saturn and Venus

[C] Jupiter and Venus

[D] Mercury and Venus

  • An Astronomical Conjunction, which is the closer appearance of the heavenly bodies from the Earth’s perspective, is to occur on the night of December 21. The planets will appear extremely close to each other, making them look like one bright dot in the sky. However, the actual distance from each other will be around 735 million kms. The planets were seen very close only in 1623.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!