Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

21st December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

21st December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 21st December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இந்தியா, அண்மையில் பிரம்மோஸின் ஏர் பதிப்பை பரிசோதனை செய்தது. இது ஒரு____?

அ) சூப்பர்சோனிக் சீர்வேக ஏவுகணை 

ஆ) பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை

இ) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை

ஈ) வழிகாட்டப்பட்ட ஏவுகணை அமைப்பு

  • வானிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை ஒடிஸா கடற்கரைக்கு அப்பால் சந்திப்பூர் ஒருங்கிணைந்த பரிசோதனைப் பகுதியில் இருந்து சுகோய் 30 எம்கே-I சூப்பர் சோனிக் போர் விமானம்மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.
  • பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை மேம்பாடு, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துவதில் இந்தியாவும் (DRDO), ரஷ்யாவும் கூட்டு முயற்சியில் உள்ளன.

2. பாக்யாங் & சோரெங் ஆகிய இரு புதிய மாவட்டங்கள், கீழ்கண்ட எந்த மாநிலத்தில் உருவாக்கப்படவுள்ளன?

அ) அருணாச்சல பிரதேசம்

ஆ) சிக்கிம் 

இ) அஸ்ஸாம்

ஈ) நாகாலாந்து

  • சிக்கிம் மாநில சட்டமன்றமானது சிக்கிம் (மாவட்டங்களை மறுசீரமைத்தல்) மசோதா, 2021 மசோதாவை பாக்யாங் & சோரெங் என்ற 2 மாவட்டங்களை உருவாக்குவதற்கான மசோதாவை நிறைவேற்றியது.
  • ஆளுநர் கங்கா பிரசாத், இம்மசோதாவுக்கு ஒப்புதலளித்த பிறகு சிக்கிம் மாநிலத்தில் ஆறு மாவட்டங்கள் இருக்கும். சிக்கிம் மாநில பல்கலைக்கழகத்திற்கு மக்களின் காவல் தெய்வமான கஞ்சஞ்சங்கா மலையின் பெயரை சூட்டுவத -ற்கான திருத்த மசோதாவையும் அது நிறைவேற்றியது.

3. சமீபத்திய பணவியல் கொள்கையில், ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்கள் முறையே …….. மற்றும் ………. என நிர்ணயிக்கப்பட்டன.

அ) 4 சதவீதம் மற்றும் 3.35 சதவீதம் 

ஆ) 4.75 சதவீதம் மற்றும் 4 சதவீதம்

இ) 5 சதவீதம் மற்றும் 4.5 சதவீதம்

ஈ) 5 சதவீதம் மற்றும் 4.75 சதவீதம்

  • இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பணவியல் கொள்கைக்குழுவானது வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இதன்மூலம் ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்கள் தற்போது முறையே 4% மற்றும் 3.35 சதவீதமாக உள்ளது.
  • இது ஒன்பதாவது கொள்கைக் கூட்டம் ஆகும். FY22’இல் மெய்யான GDP வளர்ச்சிக்கான கணிப்பு 9.5% ஆகவும், CPI பணவீக்கம் 5.3% ஆகவும் உள்ளது.

4. சீனாவில் நடக்கும் 2022 – குளிர்கால ஒலிம்பிக்கை அரசியல் ரீதியாக புறக்கணிப்பதாக அறிவித்த நாடு எது?

அ) அமெரிக்கா 

ஆ) இந்தியா

இ) ஜப்பான்

ஈ) ஆஸ்திரேலியா

  • 2022ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அரசியல்ரீதியாக புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
  • சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்த அச்சுறுத்தல் காரணமாக, விளையாட்டுப் போட்டிகளுக்கு அதிகாரபூர்வ பிரதிநிதிகள் யாரும் அனுப்பப்பட மாட்டார்கள் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.
  • மேலும் அமெரிக்க நாட்டு விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளலாம் என்றும், அரசின் முழு ஆதரவும் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது. இந்நடவடிக்கையை ‘தன்னியக்க அரசியல் கேலிக்கூத்து’ என்று சீனா அழைக்கிறது.

5. 2021’இல் ‘உலக பெட்ரோலிய மாநாட்டை’ நடத்தும் நாடு எது?

அ) அமெரிக்கா 

ஆ) ஐக்கிய அரபு அமீரகம்

இ) UK

ஈ) உஸ்பெகிஸ்தான்

  • தொழிற்துறையின் மிகப்பெரிய மாநாடாகக் கருதப்படும் ‘உலக பெட்ரோலிய மாநாடு’ தென்-மத்திய அமெரிக்க மாநிலமான டெக்சாஸின் பெருநகரமான ஹூஸ்டனில் தொடங்கியது. சுமார் 70 நாடுகள் & பிராந்தியங்களில் இருந்து 300’க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் இந்நிகழ்ச்சி மற்றும் தொழில்நுட்ப மன்றங்களில் பங்கேற்க உள்ளனர்.
  • உலக பெட்ரோலிய மாநாடானது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 65 உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய லண்டனைச் சார்ந்த உலக பெட்ரோலிய கவுன்சிலால் நடத்தப்படுகிறது.

6. முதலாம் சவுதி அரேபிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற பந்தய ஓட்டுநர் யார்?

அ) லூயிஸ் ஹாமில்டன் 

ஆ) வால்டேரி போட்டாஸ்

இ) டேனியல் ரிச்சியார்டோ

ஈ) மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்

  • 36 வயதான சிறந்த பிரிட்டிஷ் பந்தய ஓட்டுநர் லூயிஸ் ஹாமில்டன் சவுதி அரேபிய கிராண்ட்பிரிக்ஸ் போட்டியின் முதல் போட்டியில் வென்றார். ஜெட்டாவில் உள்ள 30 கிமீ நீள சுற்றில் நடந்த பந்தயத்தில் ஆறு சுற்றுகள் மீதமுள்ள நிலையில் அவர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பனை முந்தினார். இந்த வெற்றியின்மூலம், ரெட்புல் ஓட்டுநர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பனின் புள்ளிகளை ஹாமில்டன் சமன் செய்தார்.

7. கோவாவாக்ஸ், எந்தத் தடுப்பூசியின் உரிமத்தின்கீழ் சீரம் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது?

அ) பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி

ஆ) மாடர்னா COVID-19 தடுப்பூசி

இ) ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி

ஈ) நோவாவாக்ஸ் தடுப்பூசி 

  • உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி ‘Covovax’ -க்கு அவசர அனுமதி வழங்கியுள்ளது.
  • அமெரிக்காவைச் சார்ந்த நோவாவாக்ஸின் உரிமத்தின் கீழ் இந்தத் தடுப்பூசியை சீரம் நிறுவனம் இந்தியாவில் தயாரித்து வருகிறது. அவசரகால பயன்பாட்டிற்கான 9ஆவது COVID-19 தடுப்பூசியாக கோவோவாக்ஸை WHO அறிவித்துள்ளது.

8. இந்திய போட்டி ஆணையமானது (CCI) சமீபத்தில் எந்த நிறுவனத்திற்கு `202 கோடி அபராதம் விதித்துள்ளது?

அ) பிளிப்கார்ட்

ஆ) அமேசான் 

இ) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஈ) டி-மார்ட்

  • சில்லறை விற்பனையாளரான பியூச்சர் கூப்பன்ஸ் லிட் நிறுவனத்தில் பங்குகளை வாங்குவதற்கான அமேசானின் ஒப்பந்தத்திற்கு இந்திய போட்டி ஆணையம் தடை விதித்துள்ளது. 2019ஆம் ஆண்டில் ஒழுங்குமுறை அனுமதிகளை கோரும்போது உண்மைகளை மறைத்து தவறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக அமெரிக்காவைச் சார்ந்த இ-காமர்ஸ் நிறுவனத்திற்கு CCI `202 கோடி அபராதம் விதித்தது.
  • 2019ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மேற்கோள்காட்டி, ரிலைய -ன்ஸ் உடனான பியூச்சர் கூப்பன்ஸின் ஒப்பந்தத்திற்கு அமேசான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

9. பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பிற்கு (NATO) வரைவு ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ள நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) ரஷ்யா 

இ) யுகே

ஈ) பிரான்ஸ்

  • வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பிற்கு (NATO) இருதரப்பு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்த வரைவு ஒப்பந்தத்தை ரசியா முன்மொழிந்துள்ளது. ரஷ்யாவும் நேட்டோவும் ஒன்றையொன்று எதிரிகளாகக் கருதவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அது பரிந்துரைத்தது.
  • நேட்டோ அமைப்பை மேலும் விரிவுபடுத்துதல், உக்ரைன் நுழைவை நிறுத்துதல், உக்ரைன் & கீழை ஐரோப்பா, தெற்கு காகசஸ் மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள பிற நாடுகளில் எந்தவொரு இராணுவ நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருக்குமாறு ரஷ்யா NATO’விடம் கேட்டுக் கொண்டுள்ளது.

10. தமிழ்நாட்டின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்ட ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ப்பாடலின் ஆசிரியர் யார்?

அ) சுப்ரமணிய பாரதி

ஆ) பாரதிதாசன்

இ) ‘மனோன்மணியம்’ சுந்தரனார் 

ஈ) உ வே சுவாமிநாதர்

  • தமிழ்நாடு அரசு, ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ப்பாடலை, அரசு ஆணை பிறப்பித்து, மாநிலப் பாடலாக அறிவித்துள்ளது. இது பொதுவாக அனைத்து கல்வி நிறுவனங்களிலும், பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் பாடப்படுகிறது.
  • சுந்தரனார் எழுதிய ‘மனோன்மணியம்’ என்ற புகழ்பெற்ற தமிழ் நாடகத்திலிருந்து எடுக்கப்பட்ட பாடலாகும் இது. பாடல் ஒலிபரப்பின்போது மாற்றுத்திறனாளிகளைத் தவிர கலந்துகொண்ட அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஒமைக்ரான் பாதிப்பை கண்டறியும் கருவி: ICMR உருவாக்கியது

உருமாறிய கரோனா வகையான ஒமைக்ரான் பாதிப்பைக் கண்டறியும் பரிசோதனை கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) உருவாக்கியுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பரிசோதனை கருவிகளை உருவாக்க தனியார் நிறுவனங்களுக்கு ICMR அழைப்பு விடுத்துள்ளது.

வடகிழக்கு மாநிலம், திப்ரூகரில் உள்ள ICMR கிளை இந்தப்புதிய தொழில்நுட்பக் கருவியை உருவாக்கியுள்ளது. கரோனாவை கண்டறிய உதவும் RT-PCR கருவியைப் போலவே ஒமைக்ரானை கண்டறியும் கருவியும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ICMR வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்தப் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கு ICMR-தான் உரிமையாளராக இருக்கும். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பரிசோதனை கருவிகளை உருவாக்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்வரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு வர்த்தக ரீதியில் கருவிகள் தயாரிக்கப்படும்.

இந்தக் கருவிக்கு சந்தையில் மிகுந்த தேவை உள்ளதால், இதன் உற்பத்தியை அதிகரிக்க பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். தயாரிப்பு உரிமைக்கான செலவை ICMR’க்கு அந்த நிறுவனங்கள் அளிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.`3.73 லட்சம் கோடி துணைநிலை மானிய கோரிக்கை மசோதா: மக்களவை ஒப்புதல்

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.3.73 லட்சம் கோடி துணைநிலை மானியம் கோரிய மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது.

தொகுப்பு நிதியில் இருந்து துணைநிலை மானியம் கோரும் 2-ஆவது தொகுதி மசோதா மீதான விவாதம் மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது:

கூடுதல் செலவுக்காகப் பெறப்படும் தொகையில் ரூ.62,057 கோடியானது ஏா் இந்தியாவின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும். எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்துக்காக ரூ.1,153 கோடி வழங்கப்படும். பாதுகாப்புத் துறைக்கு ரூ.5,000 கோடியும், மத்திய உள்துறைக்கு ரூ.4,000 கோடியும் கூடுதலாக வழங்கப்படும்.

வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துக்கு ரூ.14,000 கோடி வழங்கப்படவுள்ளது. உரங்களுக்கான கூடுதல் மானியமாக ரூ.58,430 கோடியும், நிலுவையில் உள்ள ஏற்றுமதி ஊக்கத்தொகையை வழங்க ரூ.53,123 கோடியும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட நிதிக்கு ரூ.22,039 கோடியும் வழங்கப்படவுள்ளது. உணவு-பொது விநியோகத் துறைக்குக் கூடுதலாக ரூ.49,805 கோடியும், வா்த்தகத் துறைக்கு ரூ.2,400 கோடியும் வழங்கப்படவுள்ளது.

சமையல் எண்ணெய், அத்தியாவசியப் பொருள்கள் ஆகியவற்றின் விலையைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொள்ளும். வங்கிகளில் கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோரிடம் இருந்து ரூ.13,109 கோடியை வங்கிகள் மீட்டுள்ளன என்றாா் அவா்.

எதிா்க்கட்சிகளின் அமளிக்கிடையே துணைநிலை மானியக் கோரிக்கை மசோதா மீது நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் பெரும்பாலான எம்.பி.க்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தனா். மக்களவை ஒப்புதல் அளித்த மசோதா, மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

செலவினம் அதிகரிப்பு: நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் செலவினம் ரூ.34.83 லட்சம் கோடியாக இருக்கும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்யப்பட்ட முதல் தொகுதி துணைநிலை மானிய கோரிக்கை மசோதாவின் மூலமாக ரூ.23,675 கோடியை மத்திய அரசு பெற்றது.

தற்போது இரண்டாவது தொகுதி மசோதாவின் மூலமாக ரூ.3.73 லட்சம் கோடியை மத்திய அரசு பெறவுள்ளது. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் செலவினம், நிா்ணயிக்கப்பட்டதைவிட அதிகரிக்கும் என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

3. நகர்ப்புற சேவைகளை மேம்படுத்த இந்தியாவுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2,655 கோடி கடனுதவி

இந்தியாவில் நகா்ப்புற சேவைகளை மேம்படுத்த ஆசிய வளா்ச்சி வங்கி 350 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.2,655 கோடி) கடனுதவி அளிக்கவுள்ளது.

இதுதொடா்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நீடித்த நகா்ப்புற வளா்ச்சி மற்றும் சேவை விநியோகத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் நகா்ப்புற சேவைகளை மேம்படுத்த ஆசிய வளா்ச்சி வங்கி 350 மில்லியன் டாலா்கள் கடனுதவி அளிக்கவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள முதல் துணைத் திட்ட ஒப்பந்தத்தில் இந்திய நிதியமைச்சக கூடுதல் செயலா் ரஜத் குமாா் மிஸ்ரா, ஆசிய வளா்ச்சி வங்கியின் மூத்த அதிகாரி டக்கியோ கொனிஷி ஆகியோா் கையொப்பமிட்டனா்.

முதல் துணைத் திட்டம் மூலம் தேசிய அளவில் நகா்ப்புற சீா்திருத்தங்களுக்கான முக்கிய கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் செயல்படுத்தப்படும். அதனைத்தொடா்ந்து இரண்டாவது துணைத் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள் மற்றும் திட்டப் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.

நகா்ப்புற சேவைகளை மேம்படுத்துவதற்கான திட்ட அமலாக்கத்தில் இந்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு ஆசிய வளா்ச்சி வங்கி ஆலோசனைகள் வழங்கும்.

குறிப்பாக கொள்கைரீதியான சீா்திருத்தங்களை அமல்படுத்த வேண்டிய குறைந்த வருவாய் கொண்ட மாநிலங்களை தோ்வு செய்தல், முதலீட்டு திட்டங்களைத் தயாரித்தல், பருவநிலை மாற்றம், பாலின சமத்துவம் போன்ற விவகாரங்களில் பரிந்துரைகள் வழங்குதல் உள்ளிட்டவற்றில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆசிய வளா்ச்சி வங்கி உதவும்.

நகரமயமாக்கல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் பொருளாதார நடவடிக்கையை அதிகரிக்க, வேலைவாய்ப்புகளை உருவாக்க, நகா்ப்புறங்களில் கண்ணியமான வாழ்க்கையைப் பெற, சுற்றுச்சூழலை பாதுகாக்க வளா்ச்சியின் வலிமையான சக்தியாக நகரங்கள் உருவெடுக்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

4. டாவோஸ் உலக பொருளாதார மாநாடு ஒத்திவைப்பு

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிப்பு எதிரொலியால் டாவோஸிஸ் அடுத்த ஆண்டு நடைபெற இருந்த உலக பொருளாதார கூட்டமைப்பின் ஆண்டு மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு ஸ்விட்ஸா்லாந்திலுள்ள டாவோஸில் ஜனவரி 17 முதல் 21-ஆம் தேதி வரையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகின் முன்னணி தலைவா்கள் பங்கேற்பதாக இருந்தது.

உலகின் பல்வேறு நாடுகளில் உருமாறிய கரோனா தீநுண்மியான ஒமைக்ரானின் பரவல் அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு மாநாட்டை சிங்கப்பூருக்கு மாற்ற திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்பவா்களின் உடல் நல பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து மாநாட்டை ஒத்தி வைப்பதாக உலக பொருளாதார கூட்டமைப்பு திங்கள்கிழமை அறிவித்தது.

இந்தியா உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவா்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பதை உறுதி செய்திருந்தனா்.

5. கோவையில் புதிய தொழில்நுட்பப் பயிற்சி மையம்: மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல்

நாட்டில் 18 புதிய தொழில் நுட்பப் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் ஒன்று கோவையில் தொடங்கப்படும் என்றும் மத்திய திறன் மேம்பாடு, தொழில் முனைவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தில் தெரிவித்தாா். கோவையில் அமைய இருக்கும் இந்த மையத்திற்கான நிலத்தை மாநில அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்யும்பட்சத்தில் இது விரைவாக அமைக்கப்படும் என்றும் அமைச்சா் தெரிவித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், மாறி வரும் தொழில்நுட்பங்கள் அடிப்படையிலும் அந்நிய உற்பத்தி நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் விதமாக நாட்டில் தொடங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப பயிற்சி மையங்கள் குறித்தும் திறன்களை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் குறிப்பாக கோவையில் தொழில் பயிற்சி மையங்கள் தொடங்கும் முடிவு உள்ளதா என்பது குறித்து கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய திறன் மேம்பாடுத்துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் மக்களவையில் கேள்வி நேரத்தில் அளித்த பதில் வருமாறு: திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோா் அமைச்சகத்தின் கீழ் இது வரை தொழில்நுட்பப் பயிற்சி மையங்கள் எதுவும் இல்லை. அதே சமயத்தில் பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா திட்டம், கைவினைஞா் பயிற்சித் திட்டம் போன்றவற்றின் கீழ் அரசு மற்றும் தனியாா் ஐடிஐக்கள் (தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள்) மூலம் 22 பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாடு முழுக்க 3,178 அரசு ஐடிஐக்கள் உள்பட 14,711 ஐடிஐக்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் 84 அரசு ஐடிஐக்கள் உள்பட 494 ஐடிஐக்கள் உள்ளன.

இதில் கோவையில் உள்ள 3 அரசு ஐடிஐக்கள் உள்பட 19 ஐடிஐக்களில் 32 பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இது தவிர கோயம்புத்தூா் மாவட்ட சிறுதொழில் சங்கம்(கொடிசியா) தொழில் குழுமமாக (கிளஸ்டா்) உள்ளது. இதற்கு ரூ.40 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

இந்த பதிலில் பி.ஆா். நடராஜன் அதிருப்தியடைந்து துணைக் கேள்வி எழுப்பினாா். அப்போது, இந்த ரூ.40 லட்சம் 2008- ஆம் ஆண்டு மத்திய அரசால் வழங்கப்பட்டது. தற்போது, பாதுகாப்பு, ஜூவல்லரி போன்ற தொழில் வழித்தடங்கள் அமைய உள்ள நிலையில் புதிய தொழில்நுட்ப பயிற்சிகளுக்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? எனவும் கேள்வி எழுப்பினாா். இதற்கு பதிலளித்த அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா், ‘வெளிநாட்டு உற்பத்தியாளா்களுடன் போட்டியிட. நாடு முழுவதும் 18 புதிய தொழில்நுட்பப் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் மாநில அரசின் இடத்தில் கோவையில் ஒன்று தொடங்கப்படும்’ என்றாா்.

6. சீனாவுக்கான புதிய தூதா் பிரதீப்குமாா் ராவத்

சீனாவுக்கான இந்தியாவின் அடுத்த தூதராக பிரதீப்குமாா் ராவத் நியமிக்கப்பட்டுள்ளாா்.

1990-ஆம் ஆண்டு பிரிவு ஐஎஃப்எஸ் அதிகாரியான ராவத், இப்போது நெதா்லாந்து தூதராகப் பணியாற்றி வருகிறாா். அவா் விரைவில் புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்வாா் என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராவத் ஏற்கெனவே பெய்ஜிங் மற்றும் ஹாங்காங்கில் பணியாற்றிய அனுபவம் உள்ளவா். இந்தோனேசிய தூதராகவும் பணியாற்றியுள்ள அவா், சீன மொழியில் சரளமாகப் பேசும் திறனுள்ளவா் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது சீன தூதராக உள்ள விக்ரம் மிஸ்ரியைத் தொடா்ந்து பிரதீப்குமாா் ராவத் அந்தப் பொறுப்பை ஏற்க இருக்கிறாா். சீனாவுடன் கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை உள்பட பல்வேறு விஷயங்களில் பிரச்னைகள் உள்ள நிலையில் இந்தப் புதிய நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

1. India, recently test–fired the air version of the BrahMos, a ………….?

A) Supersonic cruise missile

B) Anti Tank missile

C) Intercontinental Ballistic Missile

D) Guided Rocket System

  • India successfully test–fired the air version of the BrahMos supersonic cruise missile from the integrated test range of Chandipur, off the coast of Odisha. The air version of the missile was test–fired from supersonic fighter aircraft Sukhoi 30 MK–I. BrahMos is a Joint Venture between India (DRDO) and Russia (NPOM) for the development, production and marketing of the supersonic cruise missile.

2. Pakyang and Soreng, are the two new districts, to be formed in which state?

A) Arunachal Pradesh

B) Sikkim 

C) Assam

D) Nagaland

  • The Sikkim Assembly passed Sikkim (Re–Organisation of Districts) Bill, 2021 bill, for the creation of two more districts named Pakyang and Soreng. Sikkim will have six districts after Governor Ganga Prasad gives his assent to the bill.
  • The House also passed an amendment bill to rename Sikkim State University after Mt Kanchenjunga, the guardian deity of the people.

3. In the recent monetary policy, Repo and reverse repo rates were fixed at ……..and ………. respectively

A) 4 percent and 3.35 percent 

B) 4.75 percent and 4 percent

C) 5 percent and 4.5 percent

D) 5 percent and 4.75 percent

  • The Reserve Bank of India Governor Shaktikanta Das announced that the Monetary Policy Committee had opted to keep the rates unchanged. With this Repo and reverse repo rates currently stand at 4 percent and 3.35 percent, respectively. This is the 9th policy meeting where committee has maintained the key lending rate, in a row. Projection for real GDP growth is retained at 9.5% and CPI inflation at 5.3% in FY22.

4. Which country announced a diplomatic boycott of the 2022 Winter Olympics in China?

A) USA 

B) India

C) Japan

D) Australia

  • The United States has announced a diplomatic boycott of the 2022 Winter Olympics in China. The White House announced that no official delegation would be sent to the Games because of concerns about China’s human rights record. It also said that US athletes could attend and would have the government’s full support. China called this move as a ‘self–directed political farce’.

5. Which country hosts the ‘World Petroleum Congress’ in 2021?

A) USA 

B) UAE

C) UK

D) Uzbekistan

  • ‘World Petroleum Congress’, the largest gathering in the industry, began in Houston, the largest city of south–central U.S. state Texas. More than 300 speakers are set to participate in the programme and technical forums, from about 70 countries and regions. The World Petroleum Congress is organized every three years by the London–based World Petroleum Council which includes 65 member countries.

6. Which Racing Driver won the inaugural Saudi Arabian Grand Prix Tournament?

A) Lewis Hamilton 

B) Valtteri Bottas

C) Daniel Ricciardo

D) Max Verstappen

  • 36–year–old Top British Racing Driver Lewis Hamilton won the inaugural Saudi Arabian Grand Prix Tournament. He passed Max Verstappen with six laps remaining in the race on the street circuit on the 30–kilometer coastal resort area in Jeddah. With this victory, Hamilton also levelled points with Red Bull rival Max Verstappen.

7. Covovax is produced by the Serum Institute of India under the licence from which vaccine?

A) Pfizer–BioNTech Vaccine

B) Moderna COVID–19 Vaccine

C) Johnson & Johnson Vaccine

D) Novovax Vaccine 

  • The World Health Organisation (WHO) has granted emergency approval to the India–manufactured coronavirus vaccine Covovax. The vaccine is produced by Serum Institute of India under licence from the U.S.–based Novavax. WHO listed the Covovax as the ninth COVID–19 vaccine for emergency use.

8. Competition Commission of India (CCI) has recently fined Rs 202 crores on which company?

A) Flipkart

B) Amazon 

C) Reliance Industries

D) D–Mart

  • The Competition Commission of India (CCI) suspended its over two–year–old approval for Amazon’s deal to acquire stake in retailer Future Coupons Private Limited. The CCI also imposed a ₹ 202 crore penalty on the US–based e–commerce major for hiding facts and making false statements while seeking regulatory approvals in 2019. Amazon objected to Future’s deal with Reliance, citing the 2019 deal.

9. Which country has published a draft agreement to the North Atlantic Treaty Organization (NATO) to ensure security?

A) USA

B) Russia 

C) UK

D) France

  • Russia has proposed a draft agreement to the North Atlantic Treaty Organization (NATO) on measures to ensure the security of both sides. It suggested that Russia and NATO reaffirm that they do not consider each other as adversaries. Russia asked NATO to stop further enlargement, the accession of Ukraine, and to cease any military activity in Ukraine and other countries in Eastern Europe, the South Caucasus and Central Asia.

10. Who is the author of the “Tamil Thai Vaazhthu”, declared as the State Song of Tamil Nadu?

A) Subramania Bharathi

B) Bharathidasan

C) ‘Manonmaniam’ Sundaranar 

D) U Ve Swaminathar

  • The Tamil Nadu government has declared ‘Tamil Thai Vaazhthu’ as the State Song, by issuing a Government Order (GO). It is usually sung , at the beginning of functions in all educational institutions and public events. The song is taken from ‘Manonmaneeyam’, the famous Tamil drama written by Sundaranar. The order directs everyone who is present during the rendition of the song, barring differently abled persons, should remain standing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!