TnpscTnpsc Current Affairs

21st December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

21st December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 21st December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

21st December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. குன்மிங்–மாண்ட்ரீல் உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பானது எந்த ஆண்டுக்குள் உலகம் அடையவேண்டிய 23 இலக்குகளைக் கொண்டுள்ளது?

அ. 2025

ஆ. 2030

இ. 2035

ஈ. 2040

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 2030

  • COP15–உயிரியல் பன்முகத்தன்மைக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடானது குன்மிங்–மாண்ட்ரீல் உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டது. 2030ஆம் ஆண்டிற்குள் உலகம் அடையவேண்டிய 23 இலக்குகளை இந்தக்கட்டமைப்பு கொண்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் அடையவேண்டிய, கடைசி இலக்கான ஐச்சி இலக்குகளை உலகம் அடைய தவறிவிட்டது. COP15 தளம் 188 அரசாங்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது; அவர்கள் அனைவரும் அக்கட்டமைப்பை ஒப்புக்கொண்டனர்.

2. “Coal 2022: Analysis and forecast to 2025” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. UNEP

ஆ. FAO

இ. UNFCC

ஈ. IEA

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. IEA

  • பன்னாட்டு எரிசக்தி முகமையானது (IEA) “Coal 2022: Analysis and forecast to 2025” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையில், உலகளாவிய நிலக்கரி தேவை 2022இல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. முக்கியமாக இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் சிறு அளவிலான நிலக்கரி அடிப்படையிலான ஆற்றல் உற்பத்தியின் காரணமாக இது ஏற்பட்டுள்ளது. அதீத நிலக்கரி பயன்பாடு சீனா, இந்தியா மற்றும் தென்கிழக்காசியாவில் ஏற்படும் என இவ்வறிக்கை கணித்துள்ளது. உலகளாவிய நிலக்கரி பயன்பாடு 2022ஆம் ஆண்டில் 1.2% உயரும் எனக் கூறப்பட்டுள்ளது. முதல் முறையாக ஒரே ஆண்டில் 8 பில்லியன் டன் அளவை நிலக்கரி பயன்பாடு தாண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

3. நாட்டின் முதல் பிணைமுறி காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடுவண் அமைச்சகம் எது?

அ. நடுவண் நிதி அமைச்சகம்

ஆ. நடுவண் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்

இ. நடுவண் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

ஈ. நடுவண் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நடுவண் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்

  • நடுவண் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நாட்டின் முதல் பிணை முறி காப்பீட்டுத் திட்டத்தைத் தொடக்கிவைத்தார். வங்கி பிணைமுறியைப்போலன்றி, இப்பிணைமுறி காப்பீட்டிற்காக ஒப்பந்தக்காரரிடமிருந்து ஒரு பெரிய பிணைத்தொகையை கேட்காது. இதன்விளைவு, ஒப்பந்தக்காரர் அந்த நிதியை அவர்களின் வணிகத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த முடியும்.

4. அமைதிகாக்கும் படையினருக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்காக, ‘நண்பர்கள் குழுவைத்’ தொடங்கியுள்ள நாடு எது?

அ. உக்ரைன்

ஆ. இந்தியா

இ. இலங்கை

ஈ. வங்காளதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்தியா

  • ஐநா பாதுகாப்பு அவையின் தற்போதைய தலைவராக இருக்கும் இத்தருணத்தில், அமைதி காக்கும் படையினருக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை ஊக்கப்படுத்துவதற்காக இந்தியா சமீபத்தில், ‘நண்பர்கள் குழுவை’த் தொடங்கியது. அமைதி காக்கும் படையினருக்கு எதிரான அனைத்து குற்றங்களையும் பதிவுசெய்யும் தரவுத்தளம் விரைவில் புது தில்லியில் அமையாவுள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்தார். இந்தியா, வங்காளதேசம், எகிப்து, பிரான்ஸ், மொராக்கோ மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இந்தக் குழுவின் இணைத் தலைவர்களாக இருக்கும். ஐநா அமைதி காக்கும் பணியில் அதிக அளவில் துருப்புக்களை வழங்கும் நாடுகளில் இந்தியா உள்ளது. 177 அமைதி காக்கும் படை வீரர்களை இந்தியா இழந்துள்ளது.

5. இந்திய மின் சந்தையிலிருந்து மின்சாரம் பெறுவதற்காக PTC இந்தியாவுடன் கூட்டிணைந்துள்ள நாடு எது?

அ. நேபாளம்

ஆ. இலங்கை

இ. வங்காளதேசம்

ஈ. பூடான்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. பூடான்

  • பூடான், டுரூக் கிரீன் பவர் கார்ப்பரேஷன்மூலம், வறண்ட குளிர்காலத்தில் அதன் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, இந்திய மின் சந்தையிலிருந்து மின்சாரம் பெறும் நோக்கத்திற்காக, PTC இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அனைத்து ஒப்புதல்களுடன், பூடான் தற்போது இந்திய மின் சந்தையில் இருந்து PTCமூலம் 600 MW (மெகாவாட்) வரை மின்சாரத்தைக் கொள்முதல் செய்யும்.

6. மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை `1,000லிருந்து `1,500ஆக உயர்த்திய அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. ஆந்திர பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. தமிழ்நாடு

  • தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகையை எதிர்வரும் 2023 ஜனவரி மாதம் முதல் `1000லிருந்து `1500ஆக வழங்க ஆணை பிறப்பித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தப்படக்கூடிய அனைத்து துறைகளிலும் உள்ள காலியிடங்களைக் கண்டறிவதற்காக தமிழ்நாடு அரசால் ஒரு சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

7. சமீபத்தில் அதன் அரசால் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டின்போது `10.5 இலட்சம் கோடி முதலீட்டு திட்டங்களை ஈர்த்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. குஜராத்

ஈ. ஒடிஸா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. ஒடிஸா

  • மேக் இன் ஒடிஸா மாநாட்டின்போது ஒடிஸா மாநிலம் `10.5 லட்சம் கோடி முதலீட்டைப் பெற்றது. மூன்று நாள் நடந்த இம்மாநாட்டின்போது, `10.5 இலட்சம் கோடி மதிப்பிலான ஒட்டுமொத்த முதலீட்டை ஒடிஸா மாநிலம் ஈர்த்தது. இங்கிலாந்தைச் சார்ந்த ‘ஸ்ராம் மற்றும் மிராம்’ குழுமம் ஒடிஸாவில் ஒரு குறைக்கடத்தி அலகை அமைப்பதற்கான `2 இலட்சம் கோடி முதலீட்டை ‘மேக் இன் ஒடிஸா’ மாநாட்டில் அறிவித்தது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற எஸ்டோனியா நாடு அமைந்துள்ள கண்டம் எது?

அ. ஆசியா

ஆ. ஐரோப்பா

இ. ஓசியானியா

ஈ. ஆப்பிரிக்கா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஐரோப்பா

  • எஸ்டோனியா என்பது வட ஐரோப்பாவின் பால்டிக் பகுதியிலுள்ள நாடாகும். இந்த நாடு பின்லாந்து வளைகுடாவின் எல்லையில் அமைந்துள்ளது. இந்திய நடுவண் அமைச்சரவை 3 புதிய தூதரகங்களைத் திறப்பதற்கான வெளியுறவு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. கடந்த 2021ஆம் ஆண்டில், எஸ்டோனியா (ஐரோப்பா), பராகுவே (தென்னமெரிக்கா) மற்றும் டொமினிகன் குடியரசு (வட அமெரிக்கா) ஆகிய நாடுகளில் இந்தியாவின் மூன்று புதிய தூதரகங்கள் திறக்கப்பட்டது. இந்நடவடிக்கை அரசியல் உறவுகளை வலுப்படுத்தும் மற்றும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற உன்னதி ஹூடா என்பவருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. டென்னிஸ்

ஆ. ஸ்குவாஷ்

இ. பூப்பந்து

ஈ. ஹாக்கி

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. பூப்பந்து

  • ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் U–17 பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா ஆவார். தாய்லாந்தின் நொந்தபுரியில் நடந்த சாம்பியன்சிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆடவர் இரட்டையர் பிரிவில் அர்ஷ் முகமது மற்றும் சன்ஸ்கர் சரஸ்வத் ஜோடியும், 15 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் அனிஷ் தோப்பானியும் வெள்ளிப்பதக்கங்களை வென்றனர்.

10. ‘ஒரு மாவட்டம் ஒரு விளையாட்டு’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

அ. ஒடிஸா

ஆ. உத்தர பிரதேசம்

இ. குஜராத்

ஈ. ஹிமாச்சல பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. உத்தர பிரதேசம்

  • உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அரசாங்கத்தின் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ (ODOP) திட்டத்தின் வரிசையில் ‘ஒரு மாவட்டம் ஒரு விளையாட்டு’ திட்டத்தைத் தொடங்கியுள்ளார். இத்திட்டத்தின் நோக்கம் விளையாட்டு கலாச்சாரத்தை மேம்படுத்துதல், இளம் தலைமுறையினரை ஆரோக்கியமாக வைத்திருப்பது மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்கான ஒரு தளத்தை வழங்குதல் ஆகியவை அடங்கும். இந்தத் திட்டத்தின்கீழ், உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள 75 மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு விளையாட்டு அடையாளம் காணப்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய கடற்படைக்கு மேலும் ஒரு நவீன நீர்மூழ்கிக்கப்பல்.

சுயசார்பு திட்டத்தின்கீழ் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐந்தாவது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக்கப்பலான ‘வாகீர்’ இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியப்பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த அதிநவீன நீர்மூழ்கிக்கப்பல் இந்திய கடற்படைக்கு கூடுதல் வலுசேர்த்துள்ளது.

உள்நாட்டிலேயே 6 ஸ்கார்பீன் இரக நீர்மூழ்கிக்கப்பல்களை உருவாக்கும் புராஜக்ட்-75 என்ற திட்டத்தை பிரான்ஸ் கடற்படைக் குழுவுடன் சேர்ந்து மும்பையில் நடுவணரசு செயல்படுத்தி வருகிறது.

2. சமூக முன்னேற்ற குறியீடு: வாய்ப்புகளில் தமிழ்நாடு முதலிடம்.

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள சமூக முன்னேற்ற குறியீட்டில் (Social Progress Index) தனிநபர் உரிமைகள், தனிநபர் சுதந்திரம் உள்ளிட்டவை அடங்கிய வாய்ப்புகள் அளவீட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த சமூக முன்னேற்ற குறியீட்டில் புதுச்சேரி முதலிடம் பிடித்துள்ளது.

சமூக முன்னேற்ற குறியீடு அறிக்கையை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் விவேக் தேராய் வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையின்படி மக்களின் அடிப்படை தேவைகள், நல்வாழ்வுக்கான அடித்தளங்கள், வாய்ப்புகள் ஆகிய மூன்று அளவீடுகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறனை சமூக முன்னேற்ற குறியீடு மதிப்பிடுகிறது.

மக்களின் அடிப்படை தேவைகள் அளவீடு: ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை மருத்துவ சேவை, குடிநீர் மற்றும் கழிவு நீரகற்றல், தனிநபர் பாதுகாப்பு மற்றும் உறைவிடம் ஆகியவற்றில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாட்டை மதிப்பிடப்படுகிறது.

நல்வாழ்வுக்கான அடித்தளங்கள் அளவீடு: அடிப்படை கல்வி, தகவல் மற்றும் கருத்துப்பரிமாற்றம், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, சுற்றுச்சூழல் தரம் ஆகியவற்றில் நாடு கண்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடப்படுகிறது.

வாய்ப்புகள் அளவீடு: தனிநபர் உரிமைகள், தனிநபர் சுதந்திரம் மற்றும் விருப்புரிமை, சமூகத்துக்குப் பங்களிக்கும் நபராக அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய தன்மை, மேம்பட்ட கல்விக்கான வாய்ப்பு ஆகியவற்றில் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் செயல்பாட்டை அளவிடுகிறது.

ஒட்டுமொத்த சமூக முன்னேற்ற குறியீட்டில் (SPI) தமிழ்நாடு 63.33 புள்ளிகளுடன் 6ஆவது இடம்பிடித்துள்ளது. இதில் வாய்ப்புகள் அளவீட்டில் 72 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. குஜராத்தைவிட ஜம்மு-காஷ்மீர் (60.76) அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளது. இக்குறியீட்டில் 43.95 புள்ளிகளுடன் ஜார்க்கண்ட் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

21st December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. The Kunming–Montreal Global Biodiversity Framework (GBF) has 23 targets that the world needs to achieve by which year?

A. 2025

B. 2030

C. 2035

D. 2040

Answer & Explanation

Answer: B. 2030

  • The COP15 to the UN Convention on Biological Diversity adopted the Kunming–Montreal Global Biodiversity Framework. The framework has 23 targets that the world needs to achieve by 2030. In 2020, the world had failed to meet the last set of targets, the Aichi Targets.  COP15 had representatives of 188 governments on site and agreed on the framework.

2. Which institution released the report titled ‘Coal 2022: Analysis and forecast to 2025’?

A. UNEP

B. FAO

C. UNFCC

D. IEA

Answer & Explanation

Answer: D. IEA

  • International Energy Agency (IEA) released a report titled ‘Coal 2022: Analysis and Forecast to 2025’. As per the report, the global coal demand is set to increase to an all–time high in 2022, mainly driven by coal power growth in India, the European Union (EU) and to a smaller extent by China. The largest increases in coal burn are forecast for China, India and Southeast Asia. The global coal use is set to rise by 1.2% in 2022, surpassing 8 billion tonnes in a single year for the first time.

3. Which Union Ministry launched the country’s first–ever surety bond insurance product?

A. Union Finance Ministry

B. Union Road Transport and Highways Ministry

C. Union Corporate Affairs Ministry

D. Union Commerce and Industry Ministry

Answer & Explanation

Answer: B. Union Road Transport and Highways Ministry

  • Union Road, transport, and highways minister Nitin Gadkari launched the country’s first–ever surety bond insurance product. Unlike a bank guarantee, the Surety Bond Insurance does not require large collateral from the contractor, resulting in freeing up funds for the contractor, which they can utilise for the growth of the business.

4. Which country has launched ‘Group of Friends’ to promote accountability for crimes against peacekeepers?

A. Ukraine

B. India

C. Sri Lanka

D. Bangladesh

Answer & Explanation

Answer: B. India

  • India has recently launched a ‘Group of Friends’ to promote accountability for crimes against peacekeepers, during its current presidency of the UN Security Council. External Affairs Minister S Jaishankar announced that New Delhi will soon have a database that will record all crimes against the peacekeepers. India, Bangladesh, Egypt, France, Morocco and Nepal are co–chairs of the group. India, among the largest troop–contributing countries to UN peacekeeping, has lost 177 of its peacekeepers in the line of duty.

5. Which country has partnered with PTC India for supply of power from Indian power market?

A. Nepal

B. Sri Lanka

C. Bangladesh

D. Bhutan

Answer & Explanation

Answer: D. Bhutan

  • Bhutan, through Druk Green Power Corporation, has entered into an agreement with PTC India, for purchase of power from Indian power market, to meet its power requirement during the dry winter season. With all approvals, Bhutan will now start procuring up to 600 MW of power, through PTC, from the Indian power market.

6. Which state increased the monthly aid for Persons with disabilities from ₹1,000 to ₹1,500?

A. Tamil Nadu

B. Kerala

C. Karnataka

D. Andhra Pradesh

Answer & Explanation

Answer: A. Tamil Nadu

  • Tamil Nadu Government has raised the monthly pension amount of differently–abled persons from Rs. 1000 to Rs. 1500 from January 2023. An expert committee has been formed by the state to identify vacancies in all the departments where differently abled can be employed.

7. Which state recently got over ₹10.5 lakh cr investment proposals during its state–organised conclave?

A. Tamil Nadu

B. Karnataka

C. Gujarat

D. Odisha

Answer & Explanation

Answer: D. Odisha

  • Odisha received over ₹10.5 lakh cr investment proposals during Make in Odisha (MIO Conclave 2022). During the three–day (MIO Conclave 2022), the state received an overall investment proposal worth ₹10.5 lakh crores. UK–based Sram and Mram Group announced Rs 2–lakh crore investment for a semiconductor unit in Odisha at the ‘Make in Odisha Conclave’.

8. Estonia, which was seen in the news recently, is a country in which continent?

A. Asia

B. Europe

C. Oceania

D. Africa

Answer & Explanation

Answer: B. Europe

  • Estonia is a country in Northern Europe, bordering the Baltic Sea and Gulf of Finland. The Union Cabinet of India approved the proposal of the Ministry of External Affairs to open three new missions. In 2021, three new missions of India were opened in Estonia (Europe), Paraguay (South America) and the Dominican Republic (North America). This move would strengthen political relations and promote growth of bilateral trade and investment.

9. Unnati Hooda, who was seen in the news, is associated with which sports?

A. Tennis

B. Squash

C. Badminton

D. Hockey

Answer & Explanation

Answer: C. Badminton

  • Unnati Hooda becomes first Indian to enter U–17 women’s singles final in Asia Junior Badminton Championships. She clinched the silver medal in the Championships held in Nonthaburi, Thailand. Men’s doubles pair of Arsh Mohammad and Sanskar Saraswat and U–15 men’s singles shuttler Anish Thoppani also won silver medals.

10. Which state launched the ‘One District One Sport’ scheme?

A. Odisha

B. Uttar Pradesh

C. Gujarat

D. Himachal Pradesh

Answer & Explanation

Answer: B. Uttar Pradesh

  • Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has launched One District One Sport (ODOS) on the lines of the One District One Product (ODOP) scheme of the government. The aim of the scheme includes promoting sports culture, keeping the younger generation healthy and providing a platform for sportspersons to nurture their talents. Under ODOS, one sport will be identified in each of the 75 districts of Uttar Pradesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!