Tnpsc

21st February 2020 Current Affairs in Tamil & English

21st February 2020 Current Affairs in Tamil & English

21st February 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

21st February 2020 Current Affairs in Tamil

21st February 2020 Current Affairs in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதா, 2020இன்கீழ், முறைகேடான பூச்சிக்கொல்லி நிறுவனங்களிட -மிருந்து வசூலிக்கப்பட்ட அபராதங்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் பங்களிப்புகளில் இருந்து திரட்டப்பட்ட மொத்தம் நிதியின் அளவு என்ன?

அ. ரூ.20,000 கோடி

ஆ. ரூ.30,000 கோடி

இ. ரூ.40,000 கோடி

ஈ. ரூ.50,000 கோடி

  • முறைகேடான பூச்சிக்கொல்லி நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதங்கள் மற்றும் மத்திய & மாநில அரசுகளின் பங்களிப்பிலிருந்து திரட்டப்பட்ட மொத்த நிதியின் அளவு `50,000 கோடியாகும்.

2. 2020 பிப்ரவரி நிலவரப்படி, GSTஇன்கீழ் வராத மூன்று பொருட்கள் எது?

அ. எரிபொருள், கட்டுமானம், மது

ஆ. எரிபொருள், திரையரங்க அனுமதிச்சீட்டு, மது

இ. எரிபொருள், புகையிலை, மது

ஈ. எரிபொருள், பால் பொருட்கள், புகையிலை

  • 2020 பிப்ரவரி மாத நிலவரப்படி எரிபொருள், கட்டுமானம், மது ஆகிய மூன்றுக்கும் GSTஇலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. `100’க்கும் குறைவான திரையரங்க அனுமதிச்சீட்டுகளுக்கு 18% GSTஉம் `100’க்கும் அதிகமான திரையரங்க அனுமதிச்சீட்டுகளுக்கு 28% GSTஉம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • கட்டுமானத்தின்கீழுள்ள சொத்து முன்பதிவுக்கான வீதம் 12%ஆகும். பால் பொருட்கள், ஆலை தொழிற் துறைகளின் தயாரிப்புகள், புதிய காய்கறிகள் மற்றும் பழங்கள், இறைச்சிப்பொருட்கள், மற்றும் பிற மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் போன்ற சிலவற்றுக்கு அரசாங்கத்தால் GST விலக்களிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3. GSTஇன்கீழ், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு, ______ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய பொருட்களை எடுத்துச்செல்லும்போது இ-வே பில் கட்டாயமாகிறது?

அ. ரூ.25,000

ஆ. ரூ.50,000

இ. ரூ.75,000

ஈ. ரூ.1,00,000

  • இ-வே பில் என்பது எந்தவொரு பொருளையும் அனுப்புவதற்கான ஒரு மின்னணு அனுமதிச்சீட்டாகும். கடந்த 2018 ஜூன் 1 முதல், மாநிலங்களுக்கு இடையேயான பொருட்களின் போக்குவரத்திற்கு இது கட்டாயமாக்கப்பட்டது.
  • மாநிலங்களுக்கு இடையேயான பொருட்களின் போக்குவரத்தில், பயணதூரமானது 10 கி.மீட்டருக்கும் அதிகமாக இருக்கும் சமயத்திலும், `50,000’க்கும் அதிகமான மதிப்புடைய பொருட்களை எடுத்துச் செல்லும்போதும் இ-வே பில் கட்டாயமாகிறது.

4.2020-21 வரவுசெலவுத்திட்டத்திற்குப்பிறகு, இந்தியாவின் அதிகபட்ச வருமானவரி விகிதம் எவ்வளவு?

அ. 20%

ஆ. 25%

இ. 30%

ஈ. 40%

  • 2020-21 பட்ஜெட்டில் வருமானவரி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தற்போது வருமான வரி கணிக்கிடும் முறையிலும் சில மாற்றங்கள் செய்து புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய திட்டத்தின்படி குறைக்கப்பட்ட வரி விவரம்: `5 இலட்சம் வரை வருமான வரி இல்லை. `5 இலட்சம் முதல் `7.5 இலட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 20% வரி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 10 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
  • `7.5 இலட்சம் முதல் `10 இலட்சம் வரையிலான வருவாய்க்கு 20% வரி வசூலிக்கப்படும் நிலையில், தற்போது 15% வரி மட்டுமே வசூலிக்கப்படும். `10 இலட்சம் முதல் `12.5 இலட்சம் வரையிலான வருவாய்க்கு 30% வரி வசூலிக்கப்படும் நிலையில், தற்போது 20% வரி மட்டுமே வசூலிக்கப்படும். `12.5 இலட்சம் முதல் `15 இலட்சம் வரையிலான வருவாய்க்கு 30% வரி வசூலிக்கப்படும் நிலையில், தற்போது 25% வரி மட்டுமே வசூலிக்கப்படும். `15 இலட்சத்திற்கு அதிகமான வருவாய்க்கு தற்போது உள்ளபடி 30% வரி தொடரும்.

5.அஹ்லு சுன்னா வால்ஜாமா என்னும் துணை இராணுவ சூபி குழு, எந்த நாட்டில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில், தீவிர இஸ்லாமியக்குழுவுடன் போராடிவருகிறது?

அ. சூடான்

ஆ. சோமாலியா

இ. சிரியா

ஈ. தெற்கு சூடான்

  • அஹ்லு சுன்னா வால்ஜாமா என்பது சோமாலியா நாட்டைச் சேர்ந்த ஒரு சூபி துணை இராணுவக்குழு. தீவிர இசுலாமிய அல்-ஷபாப் குழுவை எதிர்க்கும் மிதவாதிகளால் குழுதான் அந்த இராணுவக் குழு. இவ்விரு குழுக்களுக்கிடையேயான சண்டைதான் சோமாலியாவின் உள்நாட்டுப்போர்.

6. “ஆபரேஷன் கார் வாஷ் – Operation Car Wash” தொடர்புடைய நாடு எது?

அ. அர்ஜென்டினா ஆ. பிரேசில்

இ. தென்னாப்பிரிக்கா ஈ. இரஷ்யா

  • ‘ஆபரேஷன் கார் வாஷ்’ என்பது பிரேசிலில் நடைபெற்றுவரும் குற்றவியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு குறித்த ஒரு விசாரணையின் பெயராகும்.

7.அண்மையில், ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி மீண்டும் வெற்றிபெற்றார். அஷ்ரப் கானி அரசியல் கட்சியின் பெயர் என்ன?

அ. தேசிய ஆப்கானிஸ்தான் கூட்டணி

ஆ. தேசிய ஆப்கானிஸ்தான் காங்கிரஸ் கட்சி

இ. ஹெஸ்ப்–இ இஸ்லாமி குல்புதீன்

ஈ. மேற்கூறிய எதுவும் இல்லை

  • அஷ்ரப் கானி ஒரு சுயேச்சை வேட்பாளராவார். கடந்த 2019 செப்டம்பரில் நடைபெற்ற தேர்தலின் முடிவு 2020 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. அதன் முடிவுகளின்படி, அஷ்ரப் கானி 50.64% வாக்குகள் பெற்று மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

8. “Key Starting Material (KSM)” தொடர்புடைய தொழில் எது?

அ. ஜவுளி

ஆ. மருத்துவம்

இ. சிமென்ட்

ஈ. தாள்

  • “Key Starting Material” என்பது மருந்துத்துறையில் பயன்படுத்தப்படும் முதன்மைப் பொருட்களாகும். இவை மருந்துத்துறையின் கட்டுமானத்தொகுதிகளாகும். பல மருந்துத்தயாரிப்புகளுக்காக, இந்தியா, சீனாவிலிருந்து KSM’ஐ இறக்குமதி செய்துவருகிறது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, நாட்டின் மருந்துத்தொழிற்துறையானது மந்தநிலையை எதிர்கொண்டுள்ளது.

9.சிக்கலான ஜெட் ஏர்வேஸிற்கான விழைவு ஆவணத்தை, சமீபத்தில் சமர்ப்பித்த தூர கிழக்கு மேம்பாட்டு நிதியம், எந்த நாட்டில் அமைந்துள்ளது?

அ. பிரான்ஸ்

ஆ. இங்கிலாந்து

இ. இரஷ்யா

ஈ. ஜெர்மனி

  • தூர கிழக்கு மேம்பாட்டு நிதியம் என்பது, இரஷ்ய அரசாங்கத்தால், உட்கட்டமைப்பு நிதியுதவிக்காக நிறுவப்பட்டதாகும். இது கீழ்க்கோடி & பைக்கால் பிராந்தியங்களில் முதலீடுகளை மேற்கொள்வதை எளிதாக்குகிறது. உட்கட்டமைப்பு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வேளாண்மை போன்ற உற்பத்தி தொழில்சார் திட்டங்களுக்கு நீண்டகால நிதியுதவியை இது வழங்குகிறது. ஜெட் ஏர்வேஸ் (இந்தியா) லிட் நிறுவனத்தை அந்நிதியம் ஏலமெடுக்க ஆர்வங்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

10.அண்மையில், “நம்பகமான செயற்கை நுண்ணறிவுக்கான கட்டமைப்பை” முன்மொழிந்த, நாடுகடந்த சங்கம் / ஒன்றியம் / கூட்டமைப்பு எது?

அ. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ASEAN)

ஆ. ஐரோப்பிய ஒன்றியம்

இ. அரேபிய கூட்டமைப்பு

ஈ. வளைகுடா ஒத்துழைப்பு கழகம்

  • ஐரோப்பிய ஒன்றியம் ஒரு டிஜிட்டல் உத்தியைப்பின்பற்றி, (1) மக்களுக்கு பணியாற்றும் தொழில்நுட்பம்; (2) நியாயமான மற்றும் போட்டி நிறைந்த பொருளாதாரம்; மற்றும் (3) திறந்த, ஜனநாயக & நிலையான சமூகம் ஆகிய 3 முக்கிய நோக்கங்களை மையமாகக்கொண்டு, “Framework for Trustworthy Artificial Intelligence – நம்பகமான செயற்கை நுண்ணறிவுக்கான கட்டமைப்பை” உருவாக்கவுள்ளது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

Image result for tamilnadu map logo

  • பிப்ரவரி 24ஆம் தேதி, ‘மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக’க் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், அரசு இல்லங்களில் வாழ்ந்துவரும் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21 வயதாகும்போது, `2 இலட்சம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
  • திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில், `77.94 கோடி செலவில் 53.36 ஏக்கர் பரப்பளவில் பேரளவிலான உணவுப்பூங்கா அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2020-21ஆம் நிதியாண்டில் பிரதமர் விவசாயிகள் நிதியுதவித்திட்டத்தின்கீழ் `218 கோடி செலவில் சேலம், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரை மாவட்டங்களில், மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • கீழடி மற்றும் அதைச்சுற்றியுள்ள மணலூர், அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ள ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகளை சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி மூலமாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் பழனிசாமி தொடக்கிவைத்தார்.
  • பிரபல தவுல் இசைக்கலைஞர் டி. ஏ. கலியமூர்த்தி அண்மையில் காலமானார். இவர், தமிழ்நாட்டரசின், ‘கலைமாமணி’, மத்திய அரசின், ‘சங்கீத நாடக அகாதமி’ ஆகிய விருதுகளைப்பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!