Tnpsc

21st January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

21st January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 21st January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

21st January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. இந்தியாவில் முதன்முதலில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்பட்ட ஆண்டு எது?

அ) 2010

ஆ) 2015

இ) 2017

ஈ) 2021

 • சாலைப்பாதுகாப்புபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நாட்டில் சாலை விபத்துக்களை குறைக்கவும் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம், முதல் முறையாக தொடங்கிவைக்கப்பட்டது.
 • கடந்த சில ஆண்டுகளாக, சாலைப்பாதுகாப்பு வாரம் நடத்தப்பட்டது. ஆனால், இதன் முக்கியத்துவம் கருதி, சாலைப்பாதுகாப்பு நிகழ்ச்சி நடப்பாண்டு (2021) ஒருமாதகாலம் நடத்தப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்வை, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கிவைத்தார். சாலைப்பாதுகாப்புக்கான விருதுகளையும் அமைச்சர் அப்போது வழங்கினார்.

2. DRDOஐ எண்ணத்தில் வைத்துக்கொண்டால், அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘ரக்ஷிதா’ என்பது என்ன?

அ) ஆளில்லா வானூர்தி

ஆ) இருசக்கர வாகன அடிப்படையிலான அவசர ஊர்தி

இ) விமான அவசர ஊர்தி

ஈ) நீர்வழி அவசர ஊர்தி

 • தில்லியில் இருக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஆய்வகமான அணு மருத்துவம் மற்றும் தொடர்புடைய அறிவியலுக்கான நிறுவனம், இருசக்கர அவசர சிகிச்சை ஊர்தியான ‘ரக்‌ஷிதா’வை மத்திய சேமக்காவல்படைக்கு வழங்கியது.
 • குறைந்த அளவு பிரச்சனை உள்ள பகுதிகளிலிருந்து காயம்பட்டவர்களை மீட்பதற்கும், உயிர்காக்கும் உதவியை வழங்குவதற்கும் இவை வழி வகுக்கும். நெரிசலான தெருக்களையும், தொலைதூர இடங்களையும் இவற்றின் மூலம் சென்றடைவது எளிதாக இருக்கும்.

3. t2021 ஜனவரியில் நடைபெற்ற WHO’இன் நிர்வாகக் குழுவின் அமர்வுக்கு தலைமைதாங்கிய நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) இந்தியா

இ) சீனா

ஈ) ஆஸ்திரேலியா

 • உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) நிர்வாக வாரியத்தின் 148ஆவது அமர்வுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் Dr ஹர்ஷ் வர்தன் காணொலிக்காட்சிமூலம் தலைமைதாங்கினார். அதன்சமயம், அறிவியலைப் பொருத்தவரையில் 2020ஆம் ஆண்டு என்பது அளப்பரிய அறிவியல் சாதனைக்கான ஆண்டாக அமைந்தது என்றும் உலகளாவிய ஒற்றுமைக்கான, வாழ்வுக்கான ஆண்டாக 2021ஆம் ஆண்டு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

4. கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின்கீழ், மத்திய மண் மற்றும் பொருட்கள் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) ஜல் சக்தி அமைச்சகம்

இ) வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ) சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சகம்

 • பேரளவிலான நீர்வளத் திட்டங்களில் சவாலான புவி-தொழில்நுட்ப சூழலியலில் சிறப்பான ஆய்வு, ஆலோசனை, ஆராய்ச்சிப் பணிகளுக்கு புகழ்பெற்ற மத்திய மண், பொருள் ஆராய்ச்சி நிலையம் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தை மத்திய ஜல்சக்தித்துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா நடத்தினார்.
 • மண், பாறைகள், காரை, செயற்கை புவியியல் பொருட்கள் உள்ளிட்ட நீர்வளத்திட்டங்களின் பல்வேறு விஷயங்களைக் கையாளும் ஒரே மைய அமைப்பு மத்திய மண், பொருள் ஆராய்ச்சி நிலையமாகும்.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘தாவோஸ் நிகழ்ச்சி நிரல்’ என்பது எவ்வமைப்பின் இணையவழி நிகழ்வாகும்?

அ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஆ) உலக பொருளாதார மன்றம்

இ) G7 சங்கம்

ஈ) பன்னாட்டு ஒலிம்பிக் குழுமம்

 • ‘தாவோஸ் நிகழ்ச்சி நிரல்’ என்பது சுவிச்சர்லாந்தின் தாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தின்போது நடைபெறும் ஓர் இணையவழி நிகழ்வாகும். இந்த ஆண்டு (2021), COVID-19 தொற்றுநோயைக் கருத்தில்கொண்டு, மெய்நிகர் பயன்முறையில், ஜனவரி 25 முதல் 29 வரை இந்த ஐந்து நாள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 • WEF’இன் ‘பெரும் மீட்டமைவு முன்னெடுப்பானது’ இந்தக்கூட்டத்தின் போது தொடங்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் இந்தியாவில் இருந்து பல்வேறு மத்திய அமைச்சர்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

6. சிவப்புப் பாண்டா இனங்களை எண்ணத்தில் வைத்துக் கொண்டால், அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சியாங் நதி அமைந்துள்ள மாநிலம் எது?

அ) அருணாச்சல பிரதேசம்

ஆ) மத்திய பிரதேசம்

இ) மேற்கு வங்கம்

ஈ) ஒடிசா

 • இந்திய விலங்கியல் ஆய்வுமையத்தின் (ZSI) சமீபத்திய ஆய்வின்படி, பாண்டாவின் இரண்டு இனங்கள், அதாவது இமயமலை சிவப்புப் பாண்டா (Ailurus fulgens) மற்றும் சீன சிவப்புப் பாண்டா (Ailurus styani) ஆகியவை இந்தியாவில் உள்ளன.
 • அருணாச்சல பிரதேசத்தில் பாயும் சியாங் ஆறு இவ்விரு வேறுபட்ட மரபணுகொண்ட சிவப்புப்பாண்டா இனங்களின் எல்லையாக செயல்படுகிறது என்பதையும் இது வெளிப்படுத்தியது. மற்றொரு ஆய்வின்படி, ப்ளீஸ்டோசீன் பனிப்பாறைகாலகட்டத்தின்போது இமயமலை சிவப்புப்பாண்டா இனம் அதிகம் பாதிக்கப்பட்டது.

7. “பெண்களின் மண வயது” குறித்து இந்திய அரசு அமைத்த பணிக்குழுவின் தலைவர் யார்?

அ) மேனகா காந்தி

ஆ) உஷா தோரத்

இ) ஜெயா ஜேட்லி

ஈ) G ரோகிணி

 • பெண்களின் திருமணத்திற்கான பொருத்தமான வயதை மறுபரிசீலனை செய்வதற்காக, இந்திய அரசு, முன்பு, ஜெயா ஜேட்லி அவர்களின் தலைமையில் ஒரு பணிக்குழுவை அமைத்திருந்தது. “பெண்களுக்கு சரியான திருமண வயது” என்ற பிரதமரின் சுதந்திர தின உரையின்படி இந்தக்குழு அமைக்கப்பட்டது.
 • அண்மையில், இக்குழு தனது கண்டுபிடிப்புகளை அறிக்கை வடிவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளது.

8. குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்கும் இந்தியாவின் முதல் பெண் போர் விமானி யார்?

அ) பாவனா காந்த்

ஆ) மோகனா சிங்

இ) அவனி சதுர்வேதி

ஈ) சிவாங்கி

 • இந்திய குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்கும முதல் பெண் போர் விமானியாக விமான லெப்டினன்ட் பவானா காந்த் திகழ்கிறார். அவர் இந்திய விமானப்படையின் காட்சி ஊர்தியின் ஒரு பகுதியாக இருப்பார், அது இலக்கு இரக போர் விமானம், இலகு இரக போர் ஹெலிகாப்டர் மற்றும் சுகோய்-30 போர் விமானம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
 • 2016ஆம் ஆண்டில், அவர், இரண்டு போர் விமானிகளான மோகனா சிங் மற்றும் அவனி சதுர்வேதி ஆகியோருடன் முதல் நாட்டின் முதல் போர் விமானியாக அறிவிக்கப்பட்டார்.

9. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ‘டெசர்ட் நைட்-21’ என்பது இந்தியாவுக்கும் கீழ்க்காணும் எந்த நாட்டிற்கும் இடையிலான இராணுவப் பயிற்சியாகும்?

அ) பிரேசில்

ஆ) பிரான்ஸ்

இ) ஜப்பான்

ஈ) ஐக்கியப் பேரரசு

 • இந்திய வான்படை, பிரான்ஸ் வான் மற்றும் விண் படை ஆகியவை இணைந்து ‘டெசர்ட் நைட்-21’ (பாலைவன வீரன்) என்ற பெயரில், கூட்டுப் பயிற்சியை, இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் ஜன.24 வரை மேற்கொள்கின்றன.
 • பிரான்ஸ் தரப்பில் ரபேல், ஏர்பஸ் ஏ-330 டேங்கர், ஏ-400 எம் போக்குவரத்து விமானம் மற்றும் 175 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்திய வான்படை சார்பில் மிராஜ்-2000, சுகாய், ரபேல், ஐஎல்-78, அவாக்ஸ் மற்றும் ஏஇடபிள்யூ&சி விமானங்கள் பங்கேற்கின்றன. இந்தியா-பிரான்ஸ் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இருநாட்டு வான்படைகளும், ‘கருடா’ என்ற பெயரில் ஆறு முறை கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டுள்ளன.

10. ‘இந்திய புதுமை குறியீட்டை’ வெளியிடுகிற நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) CSIR

இ) RBI

ஈ) ISRO

 • NITI ஆயோக் அதன் இரண்டாவது இந்திய புதுமை குறியீட்டெண் 2020’ஐ சமீபத்தில் வெளியிட்டது. புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு வழங்கி, அதன்மூலம் தங்களது புதுமையான கொள்கைகளை மேம்படுத்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றிற்கான தரவரிசையை இந்திய புதுமை குறியீட்டெண் 2020 வழங்குகிறது.
 • முதலாவது புதுமை குறியீட்டெண், கடந்த 2019 அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை முறையாக ஒப்பிடும் வகையில் 17 முக்கிய மாநிலங்கள்; 10 வடகிழக்கு, மலைப்பிரதேச மாநிலங்கள்; 9 நகர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என அவை பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு குறியீட்டில் கர்நாடகா முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா உள்ளது.

1. The first–ever National Road Safety Month was observed in which year, in India?

A) 2010

B) 2015

C) 2017

D) 2021

 • The Union Road Transport Minister and Union Defence Minister Nitin Gadkari inaugurated the first–ever National Road Safety Month on January 18, 2021. The campaign seeks to build awareness on road safety and reduce road accidents in India.
 • In the recent past, only ‘Road safety week’ was being organised. The Minister also presented various awards including best performing State in Road Safety works, Good Samaritan award, Best State Transport Corporations, among others.

2. With reference to DRDO, what is ‘Rakshita’, which was making news recently?

A) Unmanned Aerial Vehicle

B) Bike–based Ambulance

C) Air Ambulance

D) Water Ambulance

 • A bike–based ambulance named ‘Rakshita’ has been developed by the Institute of Nuclear Medicine and Allied Sciences (INMAS), a laboratory of the Defence Research and Development Organisation (DRDO).
 • It has been handed over to the Central Reserve Police Force. It seeks to provide quicker medical support to those living in narrow populous streets and remote locations.

3. Which country chaired the recent session of Executive Board of WHO, held in January 2021?

A) United States

B) India

C) China

D) Australia

 • Union Health Minister Dr. Harsh Vardhan chaired the 148th session of the Executive Board of the World Health Organization, through video conference. He also said that the year 2020 is described as the Year of Science, while the Year 2021 would be the year of global solidarity and survival. He also sought for fair and equitable distribution of the COVID vaccines.

4. The Central Soil and Materials Research Station (CSMRS), which was making news, functions under which Ministry?

A) Ministry of Home Affairs

B) Ministry of Jal Sakthi

C) Ministry of Agriculture and Rural Development

D) Ministry of Environment, Forests & Climate Change

 • The Central Soil and Materials Research Station (CSMRS) is an attached office of the Department of Water Resources, River Development & Ganga Rejuvenation, Jal Shakti ministry.
 • Based at New Delhi, it deals with investigations and research in Geotechnical engineering, construction materials and river valley projects. It helps in development of water resources sector in the country, through Central Water Commission. Minister of State Jal Shakti conducted a Review Meeting of CSMRS recently.

5. ‘Davos Agenda’, which was making news recently, is the online event of which organisation?

A) International Monetary Fund

B) World Economic Forum

C) G7 Association

D) International Olympic Committee

 • Davos Agenda is the online event of World Economic Forum’s annual meeting held at Davos, Switzerland. The rich and powerful of the world are said to be the participants.
 • This year, the five–day meeting is scheduled to be held between January 25 and 29, in the virtual mode, on account of COVID pandemic. WEF’s ‘Great Reset Initiative’ is also to be launched during the meeting. Several Union Ministers and top businesspersons from India are to attend the event.

6. Siang River, which was making news with reference to Red Panda species, is located in which state?

A) Arunachal Pradesh

B) Madhya Pradesh

C) West Bengal

D) Odisha

 • As per the recent study by the Zoological Survey of India (ZSI), Both the species of Panda, namely Himalayan red panda (Ailurus fulgens) and the Chinese red panda (Ailurus styani) are present in India.
 • It also revealed that the Siang River in Arunachal Pradesh serves as the boundary by splitting the red panda into these two genetic species. As per another study, the Himalayan red panda was affected more during the Pleistocene glaciation.

7. Who is the Chairperson of the task force set up by Government of India on “age of marriage for women”?

A) Menaka Gandhi

B) Usha Thorat

C) Jaya Jaitley

D) G Rohini

 • The Government of India had earlier set up a task force under the chairmanship of Jaya Jaitley, to revisit the apt age for marriage of women.
 • This committee was set up in accordance to the Prime Ministers Independence Day speech on “right age of marriage for women”. Recently, the panel has submitted its findings in the form of a report to the Ministry of Women & Child Development and to the Prime Minister’s Office.

8. Who is the first woman Fighter pilot of India at the Republic Day parade?

A) Bhawana Kanth

B) Mohana Singh

C) Avani Chaturvedi

D) Shivangi

 • Flight lieutenant Bhawana Kanth is to become the first woman fighter pilot to take part in India’s Republic Day parade. She will be a part of the Indian Air Force’s tableau which will showcase the light combat aircraft, light combat helicopter and the Sukhoi–30 fighter plane. In 2016, She was declared as the first combat pilot along with two other pilots Mohana Singh, and Avani Chaturvedi.

9. ‘Desert Knight–21’, which was making news recently, is the Military exercise between India and which country?

A) Brazil

B) France

C) Japan

D) United Kingdom

 • The bilateral Air Exercise, ‘Desert Knight Exercise’ between Indian Air Force and French Air and Space Force is scheduled to be held this month. To participate in the exercise, A–400M tactical aircraft from France arrived at Jodhpur.
 • Indian Air Force’s Mirage 2000, Su–30 MKI, Rafale, and IL–78 Flight Refuelling Aircraft will feature in the exercise. The two countries have organised six editions of air exercises named Garuda.

10. Which institution releases the ‘India Innovation Index’?

A) NITI Aayog

B) CSIR

C) RBI

D) ISRO

 • NITI Aayog released the second edition of its India Innovation Index, which ranks different states and UTs based on the basis of their support to innovation.
 • The first edition of the index was launched in October 2019. The states and UTs have been divided into 17 ‘Major States’, 10 ‘North–East and Hill States’, and 9 ‘City–States and UTs’. Karnataka retained the first spot in 6this year’s index followed by Maharashtra.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button