Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

21st January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

21st January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 21st January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. RBI’இன் அண்மைய அறிக்கையின்படி, குறைதீர்ப்புத் திட்டத்தின்கீழ் அதிகபட்ச புகார்களைப்பெற்ற மண்டலம் எது?

அ) தென் மண்டலம்

ஆ) கிழக்கு மண்டலம்

இ) வடக்கு மண்டலம் 

ஈ) மேற்கு மண்டலம்

  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2020 ஏப்ரல் – 2021 மார்ச்சில் பல்வேறு குறைதீர்க்கும் திட்டங்களின்கீழ் 4,04,143 புகார்களைப் பெற்றுள்ளது. புகார்களின் அளவு 22.27% சதவீதம் அதிகரித்துள்ளது. சண்டிகர், கான்பூர் மற்றும் தில்லி ஆகியவை அதிகபட்ச புகார்களைப் பெற்றுள்ளன. மேலும் 2020-21’இல் வடக்கு மண்டலத்தில் அதிகபட்ச புகார்கள் (43.10 சதவீதம்) வந்துள்ளன. அதைத் தொடர்ந்து மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்கள் உள்ளன.
  • கிழக்கு மண்டலம் தொடர்ந்து குறைவான புகார்களைக் கொண்டுள்ளது. ATM மற்றும் பற்றட்டைகள், மொபைல் பேங்கிங் மற்றும் கடனட்டைகள் ஆகியவை புகார்களின் முக்கிய காரணங்களாக உள்ளன.

2. இந்தியாவுடன் முறையான கட்டற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை சமீபத்தில் தொடங்கிய நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) இங்கிலாந்து 

இ) ரஷ்யா

ஈ) ஜப்பான்

  • 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் நோக்குடன், முறையான கட்டற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இருநாடுகளும் தொடங்கின. இருநாடுகளுக்கு இடையிலான இந்த இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு ஆண்டுக்கு சுமார் $50 பில்லியன் ஆகும்.
  • விவசாயம் மற்றும் பால்வளத்துறைபோன்ற முக்கியமான துறைகளில் இருநாடுகளும் ஒப்பந்தித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

3. தொலைக்காட்சி மதிப்பீடு புள்ளி (TRP) சேவைகளை வலுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட பணிக்குழுவின் தலைவர் யார்?

அ) சசி சேகர் வேம்படி 

ஆ) அனுராக் சிங் தாக்கூர்

இ) L முருகன்

ஈ) சுகந்த் வத்சா

  • மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகமானது செய்தி சேனல்களின் பார்வையாளர் மதிப்பீட்டை உடனடியாக வெளியிடுமாறு தொலைக்காட்சி கண்காணிப்பு நிறுவனமான பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில் இந்தியாவை (BARC) கேட்டுக்கொண்டுள்ளது.
  • பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அதிகாரி சசி சேகர் வேம்படியின் தலைமையில் செயற்குழு ஒன்றை தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இது தொலைக்காட்சி மதிப்பீடு புள்ளி (TRP) சேவைகளை வலுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

4. ககன்யான் திட்டத்தின் பணியாளர் திறன் என்ன?

அ) 2

ஆ) 3 

இ) 4

ஈ) 5

  • ககன்யான் திட்டத்திற்கான கிரையோஜெனிக் எஞ்சினின் தகுதிச்சோதனையை இந்திய விண்வெளி ஆய்வுமையம் (ISRO) 720 வினாடிகளுக்கு வெற்றிகரமாக நடத்தியது.
  • தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ உந்துதல் வளாகத்தில் இச்சோதனை நடத்தப்பட்டது. இந்த நீண்டகால சோதனையானது, ககன்யான் திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

5. முர்ரி என்பது பின்வரும் எந்த நாட்டின் பிரபலமான மலைவாசஸ்தலமாகும்?

அ) இலங்கை

ஆ) பாகிஸ்தான் 

இ) ஆப்கானிஸ்தான்

ஈ) நேபாளம்

  • பாகிஸ்தானின் பிரபலமான மலைவாசஸ்தலமான முர்ரி, வரலாறு காணாத பனிப்பொழிவு காரணமாக குறைந்தது 21 பேர் உறைந்து இறந்ததை அடுத்து, ‘பேரிடர் பாதித்த பகுதி’யாக அறிவிக்கப்பட்டது.
  • ‘முர்ரி’ என்பது பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் இராவல்பிண்டி மாவட்டத்தில் உள்ள பிர்பஞ்சால் மலைத் தொடரில் அமைந்துள்ள ஒரு மலையக நகரமாகும்.

6. ‘பிரவாசி பாரதிய திவாஸ்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஜனவரி 9 

ஆ) ஜனவரி 10

இ) ஜனவரி 11

ஈ) ஜனவரி 12

  • ஜன.9 அன்று, இந்திய அரசாங்கத்துடன் வெளிநாடுகளில் உள்ள இந்திய சமூகத்தின் ஈடுபாட்டை வலுப்படுத்துவதற் -காக ‘பிரவாசி பாரதிய திவாஸ்’ அனுசரிக்கப்பட்டது. 1915ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியதை நினைவுகூரும் விதமாக இந்த நிகழ்வு ஜனவரி.9 அன்று கொண்டாடப்படுகிறது.

7. மெல்போர்ன் சம்மர் செட் ATP 250 நிகழ்வு பட்டத்தை வென்ற டென்னிஸ் வீரர் யார்?

அ) ரோஜர் பெடரர்

ஆ) ரபேல் நடால் 

இ) டேனியல் மெட்வெடேவ்

ஈ) நோவக் ஜோகோவிச்

  • டென்னிஸ் வீரர் ரபேல் நடால் சமீபத்தில் மெல்போர்ன் சம்மர் செட் ஏடிபி 250 நிகழ்வு பட்டத்தை வென்றார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற சாம்பியனான அமெரிக்க வீரர் மேக்சிம் கிரெஸ்ஸியை நடால் தோற்கடித்தார். இது ரபேல் நடாலின் 89ஆம் சுற்றுப்பயண நிலை பட்டமாகும்.

8. ஆசிய உட்கட்டமைப்பு & முதலீட்டு நிதியத்தின் (AIIB) புதிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?

அ) இரகுராம் இராஜன்

ஆ) உர்ஜித் படேல் 

இ) D சுப்பாராவ்

ஈ) Y V ரெட்டி

  • இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநரான உர்ஜித் படேல், ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கியின் (AIIB) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட இப்பலதரப்பு வங்கியின் ஐந்து துணைத் தலைவர்களுள் ஒருவராக அவர் மூன்றாண்டு காலம் பணியாற்றுவார்.

9. ‘மிஷன் பர்வாரிஷ்’ உடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ) அஸ்ஸாம் 

ஆ) உத்தர பிரதேசம்

இ) பஞ்சாப்

ஈ) மகாராஷ்டிரா

  • அஸ்ஸாம் மாநிலத்தின் கச்சார் மாவட்டம் ‘மிஷன் பர்வாரிஷ்’ என்ற திட்டத்தை மேற்கொண்டது. அது ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரை உள்ள எண்ணூறு குழந்தைகளில் 704 குழந்தைகளை கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து மீட்டுள்ளது.
  • அரசாங்க நிறுவனங்கள், உள்ளூர் சிவில் அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வணிகர்களை உள்ளடக்கிய இந்தத்திட்டம் அண்மையில் ‘SKOCH’ விருதை வென்றது.

10. இந்தியாவில் நீர் மெட்ரோ திட்டம் கொண்ட முதல் நகரம் எது?

அ) சென்னை

ஆ) கொல்கத்தா

இ) கொச்சி 

ஈ) மும்பை

  • கேரளாவின் கொச்சி நகரம் மின்கலம்மூலம் இயங்கும் மின்சார படகுகளை அறிமுகப்படுத்திய பிறகு, நீர் மெட்ரோ திட்டத்தைக்கொண்ட இந்தியாவின் முதல் நகரமாக மாறியது. அடையாளங்காணப்பட்ட 15 வழித்தடங்களுடன் ஒருங்கிணைந்த நீர்வழிப் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டு உள்ளது. கொச்சி மெட்ரோ இரயில் லிமிடெட் மூலம் இது இயக்கப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நிகழாண்டில் 3 இடங்களில் புதிதாக அகழாய்வுகள்: 4 பகுதிகளில் தொடர் ஆய்வுகள்

தமிழகத்தில் நிகழாண்டில் மூன்று இடங்களில் புதிதாக அகழாய்வுப் பணிகள் நடைபெறும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், நான்கு இடங்களில் பல்வேறு நிலைகளில் உள்ள ஆய்வுப்பணிகள் நிகழாண்டிலும் தொடர்ந்து நடக்கும் என அவர் அறிவிப்புச் செய்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிவிப்பு:

கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் எட்டாம் கட்ட அகழாய்வும், தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் மூன்றாம் கட்டமும், அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இரண்டாம் கட்டமும், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் இரண்டாம் கட்டமாகவும் அகழாய்வுப் பணிகள் நடைபெறும்.

முதற்கட்டப்பணிகள்: முதற்கட்டமாக விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, தருமபுரி மாவட்டம் பெரும்பாலை ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடக்கும். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இருந்து ஆறு கிமீ தொலையில் நம்பி ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ள துலுக்கர்பட்டியில் நடைபெறவுள்ள முதல்கட்ட ஆய்வானது, இரும்புக்காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடுவதாக இருக்கும்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து 15 கிமீ தொலை -வில் வைப்பாறு ஆற்றின் இடதுகரையில் அமைந்துள்ள வெம்பக்கோட்டையில் ஏற்கெனவே, நுண்கற்கருவிகள், பல்வேறு வகையான மணிகள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள், காதணிகள், சுடுமண்ணால் ஆன வட்டுகள், இரும்புக் கசடுகள் ஆகியன கிடைத்துள்ளன.

இப்போது அங்கு மேற்கொள்ளப்பட உள்ள அகழாய்வின் நோக்கமானது, அதிக எண்ணிக்கையில் நுண்கற்கருவி -களை சேகரிப்பதாக அமையும்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இருந்து 25 கிமீ தொலையில் பாலாறு ஆற்றின் இடதுகரையில் பெரும்பாலை அமைந்துள்ளது. காவிரியின் கிளை ஆறான பாலாற்றின் ஆற்றங்கரைகளில் இரும்புக்காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடுவதே அங்குள்ள முதல் கட்ட ஆய்வின் நோக்கமாக இருக்கும்.

கொற்கைத் துறைமுகம்: தன்பொருநை ஆற்றின் முகத் துவாரத்துக்கு எதிரில் கடற்கரையோர முன்கள புலஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும். அதில் முதல் கட்டமாக சங்ககால கொற்கைத் துறைமுகத்தின் தொல்லியல் வளத்தைக் கண்டறிய கடலோரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்தியக் கடலாய்வு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கடலாய்வு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

அகழாய்வுப் பணிகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை நடைபெறும்.

2. ராணுவத்துக்கு ‘ஏடி4’ பீரங்கி எதிா்ப்பு ஆயுதம்: ஒப்பந்தம் பெற்றது ஸ்வீடன் நிறுவனம்

இந்திய ராணுவத்துக்கு ‘ஏடி4’ பீரங்கி எதிா்ப்பு ஆயுதங்களைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை ஸ்வீடன் நிறுவனம் பெற்றுள்ளது.

ஸ்வீடனில் உள்ள சாப் நிறுவனம், இராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பலத்த போட்டிக்குப் பிறகு, இந்திய ராணுவத்துக்கு ‘ஏடி4’ பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களை வழங்கும் ஒப்பந்தத்தை சாப் நிறுவனம் பெற்றுள்ளது. அந்த ஆயுதங்கள் விமானப் படையிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆயுதத்தை வீரர் ஒருவரே தனது தோள்பட்டையில் வைத்து பயன்படுத்த முடியும்.

எதிரியின் இருப்பிடம், போர்க்கப்பல், ஹெலிகாப்டர்கள், பீரங்கி வண்டிகள் மற்றும் வீரர்களை இந்த ஆயுதத்தால் எளிதில் குறிவைத்துத் தாக்க முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவீந்த் குமார் ஜுக்நாத் ஆகியோர் இணைந்து திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளனர்

இந்திய உதவியுடன் கட்டப்பட்ட சமூக வீட்டு வசதி அலகுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மொரிஷியஸ் பிரதமர் திரு பிரவீந்த் குமார் ஜுக்நாத் ஆகியோர் 2022 ஜனவரி.20 அன்று காணொளிமூலம் திறந்து வைக்க உள்ளனர்.

இந்தியாவின் வளர்ச்சி ஆதரவுடன் மொரிஷியஸில் நிறுவப்படும் குடிமை சேவை கல்லூரி மற்றும் 8 MW சூரியசக்தி ஒளிமின்னழுத்த பண்ணை திட்டங்களையும் இரு தலைவர்களும் தொடங்கி வைக்க உள்ளனர்.

மெட்ரோ எக்ஸ்பிரஸ் திட்டம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்தியா மொரிஷியசுக்கு வழங்கும் 190 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்கான ஒப்பந்தம், சிறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்டவையும் பகிர்ந்து கொள்ளப்படும்.

4. சர்வதேச செஸ் வீரருக்கு `8 லட்சம் ஊக்கத் தொகை

தமிழகத்தைச் சேர்ந்த சர்வதேச செஸ் வீரர் பரத் சுப்ரமணியத்துக்கு, `8 இலட்சம் ஊக்கத் தொகையை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

தலைமைச் செயலகத்தில் முதல்வரை நேரில் சந்தித்து அவரிடம் இருந்து ஊக்கத் தொகையை பெற்றார் பரத் சுப்ரமணியம்.

சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் பரத் சுப்ரமணியம், 2019ஆம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்றார்.

மேலும், நிகழாண்டில் தனது 14ஆவது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டம் வென்றதற்காக `3 இலட்சமும், கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றதற்காக `5 இலட்சமும் சேர்த்து மொத்தம் `8 இலட்சத்துக்கான ஊக்கத் தொகைக்குரிய காசோலையை அவருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

1. Which zone received maximum share of complaints under Ombudsman schemes, as per recent RBI Report?

A) South Zone

B) East Zone

C) North Zone 

D) West Zone

  • The Reserve Bank of India (RBI) witnessed a 22.27 per cent rise in the volume of complaints under various ombudsman schemes during April 2020-March 2021, at 4,04,143. Chandigarh, Kanpur and Delhi got the maximum number of complaints and the North zone accounted for the maximum share of complaints (43.10 per cent) in 2020-21.
  • It was followed by the West zone and the South zone. East zone continued to have the least share of complaints. ATM and debit cards, mobile banking and credit cards accounted for the most reasons of complaints.

2. Which country recently launched formal Free Trade Agreement negotiations with India?

A) USA

B) UK 

C) Russia

D) Japan

  • With an aim of doubling the trade between India and the United Kingdom (UK) by 2030, the countries launched formal Free Trade Agreement (FTA) negotiations. Bilateral trade between the countries is worth about $50 billion per year.
  • Commerce Minister Piyush Goyal said both countries had agreed to sensitive sectors such as agriculture and dairy sectors.

3. Who is the head of the Working group set up to strengthen television rating point (TRP) services?

A) Shashi Shekhar Vempati 

B) Anurag Singh Thakur

C) L Murugan

D) Sukant Vatsa

  • The Ministry of Information and Broadcasting has asked television monitoring agency Broadcast Audience Research Council India (Barc) to release viewership ratings of news channels with immediate effect.
  • The Ministry has also set up a Sukant Vatsa under the chairmanship of Prasar Bharti CEO Shashi Shekhar Vempati to study different aspects of capturing data and to strengthen television rating point (TRP) services.

4. What is the Crew capacity of the Gaganyaan programme?

A) 2

B) 3 

C) 4

D) 5

  • The Indian Space Research Organisation (ISRO) successfully conducted the qualification test of the Cryogenic Engine for the Gaganyaan programme for a duration of 720 seconds. The test was conducted at ISRO Propulsion Complex (IPRC), Mahendragiri in Tamil Nadu. This long-duration test is a major milestone for the three-crewed Human Space Programme Gaganyaan.

5. Murree is a popular hill station of which country?

A) Sri Lanka

B) Pakistan 

C) Afghanistan

D) Nepal

  • Pakistan’s popular hill station Murree was declared a calamity-hit area after at least 21 people, froze to death due to unprecedented snowfall. Murree is a mountain town, located in the Pir Panjal Range, in the Rawalpindi District of Punjab, Pakistan.

6. When is the ‘Pravasi Bharatiya Diwas’ observed in India?

A) January 9 

B) January 10

C) January 11

D) January 12

  • On Jan,9, the Pravasi Bharatiya Diwas is observed to strengthen the engagement of Indian community overseas with the India government, Jan.9 was chosen as the day to celebrate this occasion as, in 1915, Mahatma Gandhi returned to India from South Africa.

7. Which Tennis player won the Melbourne Summer Set ATP 250 event Title?

A) Roger Federer

B) Rafael Nadal 

C) Daniil Medvedev

D) Novak Djokovic

  • Tennis Player Rafael Nadal won the Melbourne Summer Set ATP 250 event title recently. The 20-time Grand Slam champion defeated American Maxime Cressy. It was also Rafael Nadal’s 89th tour-level crown.

8. Which Indian has been appointed as the New Vice President of Asian Infrastructure Investment Fund (AIIB)?

A) Raghuram Rajan

B) Urjit Patel 

C) D Subbarao

D) Y V Reddy

  • Former Reserve Bank of India (RBI) Governor Urjit Patel has been appointed Vice-President of the Asian Infrastructure Investment Bank (AIIB). He will serve a three-year term as one of the five Vice-Presidents Beijing-based multilateral bank.

9. ‘Mission Parvarish’ is associated with which state?

A) Assam 

B) Uttar Pradesh

C) Punjab

D) Maharashtra

  • Cachar district of Assam carried out ‘Mission Parvarish’, which recovered 704 out of 800 children aged six months to five years from severely acute malnourishment. The mission, which involved Government agencies, local civic bodies, NGOs and businessmen recently, won the SKOCH Award.

10. Which is the first city in India to have a water metro project?

A) Chennai

B) Kolkata

C) Kochi 

D) Mumbai

  • Kochi city of Kerala became the first city in India to have a water metro project, after it launched battery-powered electric boats. The project aims to develop an integrated water transport system with 15 identified routes. It is operated by Kochi Metro Rail Ltd.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!