Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

21st July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

21st July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 21st July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2021–இல் இந்தியக் குடியுரிமையைத் துறந்த இந்தியக்குடிகளின் சிறந்த தேர்வாக இருந்த நாடு எது?

அ. இங்கிலாந்து

ஆ. அமெரிக்கா 

இ. ஐக்கிய அரபு அமீரகம்

ஈ. ஜெர்மனி

  • உள்துறை அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, 2021ஆம் ஆண்டில் 1.63 இலட்சத்திற்கும் அதிகமான இந்தியக் குடிமக்கள் தங்களின் இந்தியக்குடியுரிமையை துறந்துள்ளனர். இது கடந்த 3 ஆண்டுகளில் மிகவதிகமானதாகும். அதில் சரிபாதி இந்தியர்கள் அமெரிக்கக் குடிமக்களாக மாற விரும்புவதால் அமெரிக்காவே முதன்மையான தேர்வாக உள்ளது. அமெரிக்காவை அடுத்து ஆஸ்திரேலியா, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்தியர்கள் குடியுரிமை பெற விரும்புகின்றனர்.

2. ஆண்டுதோறும், ‘சர்வதேச நிலவு நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.18

ஆ. ஜூலை.20 

இ. ஜூலை.22

ஈ. ஜூலை.23

  • ஐக்கிய நாடுகள் பொது அவையானது, ‘சர்வதேச நிலவு நாளானது’ ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.20ஆம் தேதியன்று கொண்டாடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடந்த 1969ஆம் ஆண்டில் நிலவில் மனிதர்கள் முதன் முதலில் இறங்கிய நாளைக் கொண்டாடும் விதமாக இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. 1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதியன்று அப்பல்லோ 11 என்ற செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்கியது. இந்த நிலவுப் பயணத்தின் வலவனான எட்வின் ஆல்ட்ரின் 19 நிமிடங்கள் கழித்து நீல் ஆம்ஸ்ட்ராங்கைப் பின்தொடர்ந்து சுமார் இரண்டே கால் மணி நேரம் விண்கலத்திற்கு வெளியே இருந்தனர். அவர்கள் 21.5 கிலோ நிலவுப்பொருட்களைச் சேகரித்தனர்.

3. திறன்மேம்பாட்டு ஆணையமானது சமீபத்தில் எந்த நிறுவனங்களுக்காக தேசிய தரநிர்ணயக் கட்டமைப்பை உருவாக்கியது?

அ. வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள்

ஆ. குடிமைப்பணிகள் பயிற்சி நிறுவனங்கள் 

இ. உயர்கல்வி நிறுவனங்கள்

ஈ. MSME–கள்

  • குடிமைப்பணிகள் பயிற்சி நிறுவனங்களுக்கான தேசிய தரநிர்ணயக் கட்டமைப்பை (National Standards for Civil Service Training Institutions – NSCSTI) நடுவண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் Dr ஜிதேந்திர சிங் தொடங்கிவைத்தார். தேசிய அளவில் குடிமைப்பணிகளுக்கான பயிற்சிகளை அளிக்கும் நிறுவனங்க –ளுக்கான தரநிர்ணயத்தை உருவாக்க, திறன் மேம்பாட்டு ஆணையத்தால் தரநிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

4. ரிசர்வ் வங்கியானது கீழ்க்காணும் எந்த நிறுவனங்களுக்கான நான்கு அடுக்கு ஒழுங்குமுறை கட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளது?

அ. தொடக்க வேளாண் சங்கங்கள்

ஆ. நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 

இ. ஊரக கூட்டுறவு வங்கிகள்

ஈ. நிதி நிறுவனங்கள்

  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு (UCB) எளிய நான்கு அடுக்கு ஒழுங்குமுறை கட்டமைப்பை ஏற்க முடிவுசெய்துள்ளது. இந்தக் கட்டமைப்பானது வைப்புத்தொகைகளின் அளவை அடிப்படையாகக் கொண்டது; அவற்றின் நிதியியல் உறுதித்தன்மையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இது இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் NS விஸ்வநாதன் தலைமையிலான நிபுணர் குழு, UCB–களை வலுப்படுத்த வேண்டி பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.

5. கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்ட அனைத்து வணிக ரீதியிலான வாகனங்களையும் Emergency Response Support System (ERSS) உடன் இணைக்கும் முதல் இந்திய மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. ஹிமாச்சல பிரதேசம் 

இ. புது தில்லி

ஈ. ஹரியானா

  • வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வணிகரீதியிலான வாகனங்களையும் Emergency Response Support System (ERSS) உடன் இணைக்கும் நாட்டின் முதல் மாநிலமாக ஹிமாச்சல பிரதேசம் ஆனது. இதன்மூலம் இவ்வாகனங்களை VLTDமூலம் நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறையால் கண்காணிக்க முடியும்.
  • அவசரநிலை பொத்தானை அழுத்தினால், செயற்கைக்கோள்மூலம் 112–க்கு ஒரு சமிக்ஞை அனுப்பப்படும். அதன்பின் இடரிலிருப்பவர் இணைக்கப்பட்டு காவல்துறைக்கு தகவல் அளிக்கப்படும்.

6. ‘15 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்’ இந்தியாவின் நிலை என்ன?

அ. முதலாவது

ஆ. மூன்றாவது 

இ. ஐந்தாவது

ஈ. பத்தாவது

  • 15 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் ஈரான் ஆசிய பட்டத்தை வென்றது; கஜகஸ்தான் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இந்தியா 172 புள்ளிகளுடன் 3ஆமிடத்தைப் பிடித்தது. பக்ரைனில் நடைபெற்று வரும் 15 வயதுக்குட்பட்ட கிரேக்க ரோமன் மல்யுத்தப் போட்டியில் இந்திய அணி இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப்பதக்கங்களை வென்றது. 68 கிலோ பிரிவில் சச்சினும், 72 கிலோ எடைப்பிரிவில் அபையும் அந்தந்தப் பிரிவுகளில் தங்கப்பதக்கங்களை வென்றனர்.

7. அண்மைச் செய்திகளில் இடம்பிடித்த, ‘ARYABHAT–1’ என்றால் என்ன?

அ. எறிகணை

ஆ. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்

இ. அனலாக் சிப்செட்டின் முன்மாதிரி 

ஈ. மீத்திறன் கணினி

  • இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) ஆராய்ச்சியாளர்கள் அடுத்த தலைமுறை அனலாக் கம்ப்யூட்டிங் சிப்செட்களை உருவாக்குவதற்கான வடிவமைப்பு கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். அம்முன்மாதிரிக்கு ARYABHAT–1 (Analog Reconfigurable Technology and Bias–scalable Hardware for AI Tasks) என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் சில்லுத் தொகுதிகளை மறுகட்டமைக்கப்பட்டு நிரல்படுத்தி மீண்டும் பயன்படுத்தலாம்; இதனால் ஒரே அனலாக் தொகுதிகளை வெவ்வேறு தலைமுறை வடிவமைப்பு மற்றும் வெவ்வேறு பயன்பாடுகளில் பயன்படுத்த முடியும்.

8. ஒவ்வோர் ஆண்டும், ‘உலக ஜூனோசிஸ் நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.02

ஆ. ஜூலை.04

இ. ஜூலை.06 

ஈ. ஜூலை.08

  • விளங்கிலிருந்து மனிதர்க்குப்பரவும் தொற்றுநோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூலை.6ஆம் தேதி உலக ஜூனோசிஸ் நாள் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. 1885 ஜூலை.6 அன்று முதன்முதலில் ரேபிஸ் தடுப்பூசியை வெற்றிகரமாக செலுத்திய பிரெஞ்சு உயிரியலாளர் லூயி பாஸ்டரின் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஜூனோடிக் நோய்கள் விலங்குகளில் தோன்றி மனிதர்களுக்கும் பரவும்.

9. ‘Mind Master: Winning Lessons from a Champion’s Life’ என்பது யாரின் நினைவுக்குறிப்பாகும்?

அ. மேக்னஸ் கார்ல்சன்

ஆ. விஸ்வநாதன் ஆனந்த் 

இ. இரகுராம் இராஜன்

ஈ. இரஜினிகாந்த்

  • ‘Mind Master: Winning Lessons from a Champion’s Life’ என்பது செஸ் மேதையும் 5 முறை உலக செஸ் சாம்பியனும் ஆன விஸ்வநாதன் ஆனந்தின் நினைவுக்குறிப்பாகும். அண்மையில், 44ஆவது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முன்னதாக, இந்நூலின் மென்னட்டை பதிப்பை வெளியிடுவதாக ‘Hachette India’ அறிவித்தது. தொற்றுகாலத்திற்குப் பிறகு, நிச்சயமற்ற தன்மை மற்றும் விரைவாக மாறிவரும் யதார்த்தங்களை எவ்வாறு கையாளுவது என்பது குறித்த மேலதிக அத்தியாயத்தையும் இந்த நூல் கொண்டுள்ளது.

10. அண்மைச் செய்திகளில் இடம்பிடித்த, ஓன்ஸ் ஜபேர் என்பவருடன் தொடர்புடைய துறை எது?

அ. விளையாட்டு 

ஆ. வணிகம்

இ. அறிவியல்

ஈ. அரசியல்

  • துனிசியாவைச் சார்ந்த உலகின் நெ:2 டென்னிஸ் வீராங்கனை ஓன்ஸ் ஜபேர், விம்பிள்டனில் செக் குடியரசின் மேரி பௌஸ்கோவாவை தோற்கடித்து கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் அரையிறுதியை எட்டிய முதல் அரபு அல்லது வட ஆப்பிரிக்க பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். 27 வயதான டென்னிஸ் வீராங்கனையான ஓன்ஸ் ஜபேர் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிமீது தடை

காது சுத்தப்படுத்தும் பஞ்சு பொருத்திய நெகிழிக்குச்சிகள், பலூன்களுக்கான நெகிழிக்குச்சிகள், நெகிழிக்கொடிகள், மிட்டாய் பொருத்தும் நெகிழிக்குச்சிகள், ஐஸ்கிரீம் பொருந்திய நெகிழிக்குச்சிகள், அலங்காரத்திற்கான தெர்மாகோல் ஆகியவையும் நெகிழித்தட்டுகள், கிண்ணங்கள்,  குவளைகள், கரண்டிகள், கத்திகள், உறிஞ்சுக்குழல், இனிப்பு பெட்டிகளில் சுற்றப்படும் அல்லது பேக் செய்யப்படும் நெகிழி, அழைப்பிதழ்கள், சிகரெட் பெட்டிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும், 100 மைக்ரானுக்கு குறைவாகவுள்ள  நெகிழி (அ)  PVC பதாகைகள் ஆகியவற்றை தயாரிப்பது, இறக்குமதி செய்வது, இருப்பு வைப்பது, விநியோகிப்பது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு தடைவிதிக்கும் நெகிழிக்கழிவு நிர்வாக சீர்திருத்த விதிகள், 2021-ஐ, ஆகஸ்ட் 12 அன்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலைமாற்ற அமைச்சகம் அறிவித்தது.

75 மைக்ரானுக்கும் குறைவான தடிமனுள்ள நெகிழிப்பைகள் தயாரிப்பு, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கும் தடைவிதித்தும் 2021 செப்டம்பர் 30 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் 120 மைக்ரானுக்கும் குறைவான தடிமனுள்ள நெகிழிப்பொருட்களுக்கு 2022 டிச.31 முதல் தடை விதிக்கப்பட உள்ளது.  நெகிழிப்பைகள் (அ) ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பொருட்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றை தடைசெய்வதற்கான அறிவிப்புகளை ஏற்கனவே 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வெளியிட்டுள்ளன.

2. நாட்டில் கடற்கரைகளுக்கான நீலக்கொடி தரநிலைச் சான்றுகள்

ஒருங்கிணைந்த கடற்கரை பகுதி நிர்வாக திட்டத்தின்கீழ் சுற்றுச்சூழல் வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் கடற்கரை, சுற்றுச்சூழல் மற்றும் அழகியல் நிர்வாக சேவைகள் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மாசுக்கட்டுப்பாடு, கடற்கரை விழிப்புணர்வு, அழகியல், பாதுகாப்பு கண்காணிப்பு பணிகள், சுற்றுச்சூழல் கல்வி தொடர்பான பல்வேறு பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. நீலக்கொடி கடற்கரை சான்றிதழுக்காக சர்வதேச தரநிலைகளை எட்டுவதை நோக்கமாககொண்டு தெரிவான கடற்கரைகளில் இந்தப்பணிகள் செய்யப்படுகின்றன.

மிகச்சிறந்த சர்வதேச கடற்கரைகளுக்கு இணையாக மேம்படுத்த 6 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 10 கடற்கரைகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட கோவளம் கடற்கரையும், புதுச்சேரியின் ஈடன் கடற்கரையும் அடங்கும்.

3. ஜல் சக்தி இயக்கம்

ஜல்சக்தி இயக்கம்-I திட்டம், 2019-ல், 1592 வட்டாரங்களில், நாட்டின் 256 வறட்சியான மாவட்டங்களில், நீர் பாதுகாப்பு மற்றும் நீர் வள மேலாண்மையை மேம்படுத்துவதற்காக, 5 திட்டங்களை துரிதமாக செயல்படுத்துதற்காக தொடங்கப்பட்டது. நீர்ப்பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, பாரம்பரிய மற்றும் பிற நீர்நிலைகளை புதுப்பித்தல், நீரை மறுசுழற்சி செய்தல், நீர்நிலைகள் மேம்பாடு மற்றும் தீவிர காடு வளர்ப்பு மேலும் வட்டார மற்றும் மாவட்ட நீர் பாதுகாப்புத் திட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்துதல், கிருஷி அறிவியல் கேந்திரா திட்டங்கள், நகர்ப்புற கழிவுநீர் மறுபயன்பாடு மற்றும் அனைத்து கிராமங்களையும் முப்பரிமாண தொழில்நுட்பம் மூலம் கண்காணித்தல் ஆகியவை அடங்கும்.

பின்னர் ஜல் சக்தி இயக்கம் 2019-ல் விரிவுப்படுத்தப்பட்டு, “ஜல் சக்தி இயக்கம்: மழைநீரைச்சேகரி, மழைநீரைப்பிடி – எங்கே விழுந்தாலும், எப்போது விழுந்தாலும்” என்ற கருப்பொருளுடன், அனைத்து மாவட்டங்கள், வட்டாரங்களையும் உள்ளடக்கியதாக விரிவுப்படுத்தப்பட்டது.

4. அடல் நிலத்தடி நீர் மேலாண்மை திட்டம்

அடல் நிலத்தடி நீர் மேலாண்மைத் திட்டமானது குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, இராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில், எண்பது மாவட்டங்களிலுள்ள 8,562 கிராமப் பஞ்சாயத்துகளில் நிலையான நிலத்தடிநீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. நிலத்தடிநீர் மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள்குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடல் நிலத்தடி நீர் மேலாண்மைத் திட்டம் 01.04.2020 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

5. NITI ஆயோக்கின் இந்திய புதுமை கண்டுபிடிப்புகள் 2021 பட்டியலில் கர்நாடகா, மணிப்பூர், சண்டிகர் ஆகியவை முன்னணியில் உள்ளன

NITI ஆயோக்கின் இந்திய புதுமை கண்டுபிடிப்புகள் 2021 பட்டியலின் மூன்றாவது பகுதியில் கர்நாடகா, மணிப்பூர், சண்டிகர் ஆகியவை தங்களது பிரிவில் முன்னணியில் உள்ளன.

இதுகுறித்த பட்டியலை NITI ஆயோக்கின் துணைத்தலைவர் சுமன் பெரி வெளியிட்டார்.

பெரிய மாநிலங்கள் பிரிவில் கர்நாடகா மீண்டும் முதலிடத்தையும், வடகிழக்கு மற்றும் மலைப்பிரதேச மாநிலங்கள் பிரிவில் மணிப்பூரும், யூனியன் பிரதேசங்கள் பிரிவில் சண்டிகரும் முதலிடம் வகிக்கின்றன. மாநிலங்கள் பிரிவில் தமிழ்நாடு 15.69 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. தெலங்கானா, ஹரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தர பிரதேசம், கேரளா, ஆந்திர பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்கள் முதல் பத்து இடத்தில் இடம்பெற்றுள்ளன.

6. மாதத்தவணையை செலுத்த ‘நம்ம குடியிருப்பு’ செயலி அறிமுகம்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புதாரர்கள் தவணைகளை எளிய முறையில் செலுத்தும் வகையில் ‘நம்ம குடியிருப்பு’ என்ற புதிய செயலியை அந்தத் துறையின் அமைச்சர் தா மோ அன்பரசன் (ஜூலை 20) அன்று தொடக்கி வைத்தார்.

இந்தச் செயலியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புதாரர்கள் வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய தவணைகளை எளிய முறையில் செலுத்தலாம். இந்தச் செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து வாரியத்துக்குச் செலுத்தவேண்டிய மாதத்தவணைத்தொகை, பராமரிப்புத்தொகை, நிலுவைத்தொகை போன்றவற் -றை செலுத்தலாம்.

7. சிறு ஜவுளி பூங்கா அமைக்க மானியம்: தமிழக அரசு அறிவிப்பு

சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்களை அமைக்கும் திட்டத்துக்கு மானியம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ஜவுளி துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா ஏற்படுத்தும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின்கீழ், குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பில் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் 50 சதவீதம் அல்லது `2.50 கோடி என இரண்டில் எது குறைவோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.

சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் வழியாக தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும்.

1. Which country was the top choice of Indian nationals, who renounced their Indian citizenship in 2021?

A. UK

B. USA 

C. UAE

D. Germany

  • As per the data provided by the Ministry of Home Affairs, over 1.63 lakh Indian nationals renounced their Indian citizenship during 2021. This is the highest during the last three years. The US was the top choice with almost half of Indians preferring to become US citizens. After the US, Indians preferred to get citizenship in Australia, Canada and the UK.

2. When is the ‘International Moon Day’ celebrated annually?

A. July.18

B. July.20 

C. July.22

D. July.23

  • The United Nations General Assembly had officially declared International Moon Day to be marked every year on 20 July. It celebrates the day humans first walked on the moon in 1969. This was the day when Apollo 11 landed on the Moon, Earth’s only satellite on 20 July 1969. Lunar module pilot Edwin Aldrin followed Neil Armstrong 19 minutes later and they spent about two and a quarter hour outside the spacecraft while collecting 21.5 kg of lunar material.

3. Capacity Building Commission (CBC) recently developed a set of National standards (NSCSTI) for which institutions?

A. Banking and Finance Institutions

B. Civil Service Training Institutions 

C. Higher Education Institutions

D. MSMEs

  • Union Personnel Minister Jitendra Singh launched the “National Standards for Civil Service Training Institutions” (NSCSTI). The standards are developed by the Capacity Building Commission (CBC), to create standards for civil service training institutions at national level.

4. The Reserve Bank has adopted a four–tiered regulatory framework for which institutions?

A. Primary Agriculture Societies

B. Urban Co–operative Banks 

C. Rural Cooperative Banks

D. Nidhi Companies

  • The Reserve Bank of India (RBI) has decided to adopt a simple four–tiered regulatory framework for Urban Co–operative Banks (UCBs). The framework will be based on size of deposits, with an aim to strengthen their financial soundness. An expert committee, headed by former RBI deputy governor N S Vishwanathan, made a host of recommendations for strengthening the UCBs.

5. Which is the first Indian state to connect all commercial vehicles equipped with Tracking Device with Emergency Response Support System (ERSS)?

A. Gujarat

B. Himachal Pradesh 

C. New Delhi

D. Haryana

  • Himachal Pradesh has become the first state in the country to connect all registered commercial vehicles equipped with Vehicle Location Tracking Device (VLTD) with Emergency Response Support System (ERSS).
  • Now these vehicles can be tracked anywhere in the country through VLTD by both the police and the transport department. When the panic button is pressed, a signal will be received through satellite to 112 and the person in distress would be connected and alert the police.

6. What is India’s position on the ‘Under–15 Asian Wrestling Championship’?

A. First

B. Third 

C. Fifth

D. Tenth

  • Iran clinched Asia Title in the Under–15 Asian Wrestling Championship while Kazakhstan was runner–up. India secured 3rd place with 172 Points.
  • The Indian Under–15 Greco Roman Wrestling Team clinched two gold, two silver and four bronze medals in the Championship being held at Bahrain. Sachin in the 68 kg and Abhay in the 72 kg bagged gold medals in their respective categories.

7. What is ‘ARYABHAT–1’ which was seen in the news recently?

A. Ballistic Missile

B. Earth Observation Satellite

C. Prototype of Analog chipset 

D. Super Computer

  • Researchers at the Indian Institute of Science (IISc) have developed a design framework to build next–generation analog computing chipsets. The prototype is named ARYABHAT–1 (Analog Reconfigurable Technology and Bias–scalable Hardware for AI Tasks). Its chipset can be reconfigured and programmed so that the same analog modules can be ported across different generations of design and across different applications.

8. When is the ‘World Zoonosis Day’observed every year?

A. July.02

B. July.04

C. July.06 

D. July.08

  • World Zoonosis Day is observed annually on July 6 across the world to raise awareness about the infectious diseases called zoonotic diseases. The day is celebrated in memory of Louis Pasteur, a French biologist who successfully administered the first–ever Rabies vaccine to a patient on July 6, 1885. Zoonotic diseases originate in animals and can spread to humans.

9. ‘Mind Master: Winning Lessons from a Champion’s Life’ is the memoir of which personality?

A. Magnus Carlsen

B. Viswanathan Anand 

C. Raghuram Rajan

D. Rajinikanth

  • ‘Mind Master: Winning Lessons from a Champion’s Life’ is the memoir of chess legend and five–time world chess champion Viswanathan Anand. Recently, Hachette India announced the expanded paperback edition of the book, ahead of the 44th FIDE Chess Olympiad.
  • The book features a bonus chapter on how to navigate uncertainty and rapidly changing realities in the wake of the pandemic.

10. Ons Jabeur, who was seen in the news, is associated with which field?

A. Sports 

B. Business

C. Science

D. Politics

  • Tunisia’s world No:2 tennis player Ons Jabeur became the first Arab or North African woman to reach a Grand Slam singles semifinal She achieved this record after defeating Marie Bouzkova of the Czech Republic at Wimbledon. The 27–year–old tennis player is ranked No. 2 in the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!