Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

21st November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

21st November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 21st November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

21st November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ‘ஆர்டெமிசினின்’ என்பது கீழ்க்காணும் எந்த நோய்க்கெதிரான மருந்துகளின் முக்கிய கூறாக அமைந்துள்ளது?

அ. நீரிழிவு நோய்

ஆ. மலேரியா

இ. சார்ஸ்

ஈ. உயர் இரத்த அழுத்தம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மலேரியா

  • உலக நுண்ணுயிர்க்கொல்லி குறித்த விழிப்புணர்வு வாரத்தின்போது, ஆப்பிரிக்காவில் மலேரியா எதிர்ப்பு மருந்து எதிர்ப்பை எதிர்த்து உலக நலவாழ்வு நிறுவனம் ஒரு புதிய உத்தியை அறிமுகம் செய்தது. நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பின் காரணமாக அதிகரித்து வரும் அச்சுறுத்தலைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான இந்த வார அனுசரிப்பு, ஆண்டுதோறும் உலகளாவிய பிரச்சாரமாக நடத்தப்படுகிறது. சில ஒட்டுண்ணிகள் மலேரியாவுக்கான மருந்துகளின் முதன்மை கூறாக விளங்கும் ஆர்ட்டெமிசினினுடன் கூடிய மருந்துகளை எதிர்க்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

2. ‘ஹ்வாசாங்–17’ அல்லது மான்ஸ்டர் ஏவுகணையை ஏவிய நாடு எது?

அ. ஜெர்மனி

ஆ. வட கொரியா

இ. இங்கிலாந்து

ஈ. பிரான்ஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. வட கொரியா

  • வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான, ‘ஹ்வாசாங்–17’ஐ அண்மையில் ஏவியது. இது ‘மான்ஸ்டர் ஏவுகணை’ என்றும் அழைக்கப்படுகிறது. ‘Hwasong–17’ ஏவுகணையானது வடகொரியாவின் மிகப் பெரிய ஏவுகணையாகும். இது திரவ எரிபொருள்மூலம் இயங்கும், கண்டம் விட்டு கண்டம் பாயும் உலகின் மிகப் பெரிய ஏவுகணையாகும்.

3. 2022 – உலக குழந்தைகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Inclusion, For Every Child

ஆ. Children’s Rights

இ. International togetherness

ஈ. Digital Access for all

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. Inclusion, For Every Child

  • சர்வதேச ஒற்றுமை, உலகெங்கிலும் உள்ள குழந்தைகளிடையே விழிப்புணர்வு மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்துவதற்காக நவ.20 அன்று, ‘உலக குழந்தைகள் நாள்’ கொண்டாடப்படுகிறது. இது முதன்முதலில் 1954 இல் உலகளாவிய குழந்தைகள் நாளாக நிறுவப்பட்டது. ஐநா பொதுச்சபை குழந்தைகளின் உரிமைகள் பற்றிய பிரகடனம் மற்றும் மாநாடு இரண்டையும் ஏற்றுக்கொண்ட தேதியின் ஆண்டு நிறைவையும் இந்த நாள் குறிக்கிறது. இந்த ஆண்டு, “Inclusion, For Every Child” என்பது இந்த நாளுக்கானக் கருப்பொருளாக உள்ளது.

4. அண்மையில் திறக்கப்பட்ட கமெங் நீர் மின்னுற்பத்தி நிலையம் அமைந்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. கேரளம்

ஈ. அருணாச்சல பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. அருணாச்சல பிரதேசம்

  • அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 600 மெகாவாட் (MW) உற்பத்தித் திறன்கொண்ட கமெங் நீர்மின்னுற்பத்தி நிலையத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார். எரிசக்தி அமைச்சகத்தின்கீழ் உள்ள ‘மினி இரத்னா’ மின் உற்பத்தி பொதுத்துறை நிறுவனமான, ‘NEEPCO’ லிமிடெட் மூலம் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய நீர் மின்னுற்பத்தி திட்டம் இதுவாகும். இது வடகிழக்கில் அமைந்துள்ள ஆறாவது நீர் மின்னுற்பத்தி நிலையமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 3353 மில்லியன் அலகுகளை உற்பத்தி செய்வது அருணாச்சல பிரதேச மாநிலத்தை மின் மிகை மாநிலமாக மாற்றும். இந்த மின்னுற்பத்தி தேசிய கட்டத்திற்கும் பங்களிக்கும்.

5. 2021–22 இந்திய மாநிலங்கள் குறித்த புள்ளிவிவரங்களின் கையேட்டை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. SEBI

ஆ. இந்திய ரிசர்வ் வங்கி

இ. NITI ஆயோக்

ஈ. பொருளாதார விவகாரங்கள் துறை

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்திய ரிசர்வ் வங்கி

  • இந்திய ரிசர்வ் வங்கி தனது புள்ளிவிவர வெளியீட்டின் ஏழாவது பதிப்பை, “இந்திய மாநிலங்கள் குறித்த கையேடு 2021–22” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2022–23இல் சுமார் 7% இருக்கும். இது இந்த நிதியாண்டின் ஜூன்–செப்டம்பர் காலாண்டில் 6.1% முதல் 6.3% வரை வளர்ச்சி விகிதத்தை பதிவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கையேட்டின் சமீபத்திய பதிப்பில், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் என்ற இரண்டு புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

6. கல்வி அமைச்சகத்தின் செயல்திறன் தரவரிசைக் குறியீட்டின்படி, 2020–21ஆம் ஆண்டில் எத்தனை மாநிலங்கள் நிலை–2 தரத்தை எட்டியுள்ளன?

அ. ஒன்றுமில்லை

ஆ. இரண்டு

இ. நான்கு

ஈ. ஏழு

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. ஏழு

  • 2020–21ஆம் ஆண்டிற்கான மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களுக்கான செயல்திறன் தரவரிசை குறியீட்டை நடுவண் கல்வியமைச்சகம் வெளியிட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிக்கல்வி முறைகளின் ஆதார அடிப்படையிலான விரிவான பகுப்பாய்வை இந்தக் குறியீடு கொண்டுள்ளது. கேரளம், பஞ்சாப், சண்டிகர், மகாராஷ்டிரா, குஜராத், இராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசம் என மொத்தம் ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 2020–21இல் நிலை–2 என்ற தரத்தை எட்டியுள்ளன. PGI 2020–21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பத்துத்தரங்களாக வகைப்படுத்தியுள்ளது; அதில் ஒரு மாநிலமோ அல்லது யூனியன் பிரதேசமோ அதிகபட்சமாக அடையக்கூடிய தரம் ‘நிலை–1’ ஆகும்.

7. ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டத்துடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

அ. வேதிகள் மற்றும் உரங்கள் அமைச்சகம்

ஆ. உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. நகர்ப்புற மற்றும் வீட்டு விவகாரங்கள் அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. வேதிகள் மற்றும் உரங்கள் அமைச்சகம்

  • 2022–23 ரபி பருவத்திற்கான P&K உரங்களுக்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களை பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அங்கீகரித்துள்ளது. 2022–23ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசிக் (P&K) உரங்களுக்கு `51,875 கோடி மானியம் வழங்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. நடுவண் வேதிகள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உர உற்பத்தியாளர்கள்/இறக்குமதியாளர்கள்மூலம் மானிய விலையில் உழவர்களுக்கு உரங்களை இந்திய அரசாங்கம் கிடைக்கச் செய்கிறது.

8. ‘நகர்ப்புற போக்குவரவு இந்தியா மாநாடு மற்றும் கண்காட்சி – 2022’ நடத்தப்படுகிற மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. மகாராஷ்டிரா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கேரளா

  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது கேரள மாநில அரசுடன் இணைந்து கொச்சியில் 15ஆவது நகர்ப்புற போக்குவரவு இந்தியா மாநாடு மற்றும் கண்காட்சி – 2022 ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளது. சர்வதேச அளவில் நடைமுறையில் உள்ள நவீன மற்றும் சிறந்த நகர்ப்புற போக்குவரத்து நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் தெரிந்து கொள்வதற்காகவே இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது. நடுவண் மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள், கொள்கை வடிவமைப்பாளர்கள், மெட்ரோ இரயில் நிறுவனங்களின் மேலாண் இயக்குநர்கள், போக்குவரத்து நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், பன்னாட்டு வல்லுநர்கள், தொழிற்துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் முதலியவர்கள் இதில் கலந்துகொள்வார்கள்.

9. அமெரிக்க செய்திகள் மற்றும் உலக அறிக்கையின்படி, மலிவான உற்பத்தி செலவைக் கொண்டுள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. வங்காளதேசம்

இ. சீனா

ஈ. இந்தோனேசியா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. இந்தியா

  • அமெரிக்க செய்திகள் மற்றும் உலக அறிக்கையின்படி, 85 நாடுகளில், சீனா மற்றும் வியட்நாமை விஞ்சி மலிவான உற்பத்தி செலவைக்கொண்ட நாடாக இந்தியா தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சிறந்த நாடுகளின் தர வரிசையில் இந்தியா 31ஆம் இடத்தைப்பிடித்துள்ளது; அதே வேளையில், ‘வணிகத்திற்கான திறந்த’ பிரிவில் 37ஆம் இடத்தைப்பிடித்தது. ஒட்டுமொத்த சிறந்த நாடுகளின் தரவரிசையில், சுவிச்சர்லாந்து முதலிடத்திலும், ஜெர்மனி, கனடா, அமெரிக்கா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

10. இந்தியா, எந்த மாதத்தில், ‘கங்கா உத்சவத்தை’க் கொண்டாடவுள்ளது?

அ. அக்டோபர்

ஆ. நவம்பர்

இ. டிசம்பர்

ஈ. ஏப்ரல்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நவம்பர்

  • இந்திய அரசு இந்த ஆண்டு நவ.1–3 வரை ‘கங்கா உத்சவத்தை’க் கொண்டாடவுள்ளது. கங்கையாற்றுக்குப் புத்துயிர் அளிப்பதில் பங்கேற்பாளர்களின் ஈடுபாடு & பொதுமக்கள் பங்கேற்பை ஊக்குவிப்பதில் இது கவனஞ்செலுத்துகிறது. தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கத்தின்படி, தேசிய மற்றும் மாநில அளவில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகள், நேரடி முறை மற்றும் மெய்நிகர் முறையில் ஏற்பாடு செய்யப்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கம்போடியாவில் இந்தியா-ஆசியான்பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு: இராஜ்நாத் சிங் நவ.22இல் பயணம்

இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் கம்போடியாவுக்கு 2 நாள் பயணமாக நவ.22-இல் செல்லவிருக்கிறார்.

கம்போடியாவின் துணைப்பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான சாம்டெக் பிச்சே சேனாவின் அழைப்பின் பேரில், இராஜ்நாத் சிங் செல்லவுள்ளார். ஆசியான் அமைப்பில் பேச்சுவார்த்தைரீதியிலான கூட்டுறவு நாடாக 1992இல் இந்தியா சேர்ந்தது. ஆசியான்+ நாடுகளின் மாநாடு மற்றும் இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு தவிர, பல்வேறு உறுப்புநாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் இராஜ்நாத் சிங் இருதரப்பு விவாதங்களை நடத்த உள்ளார். பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இருதரப்புக்கும் நன்மைபயக்கும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இராஜ்நாத் சிங் ஆலோசிக்கவுள்ளார்.

2. குறைந்த எடை குழந்தைகள்! பாதிப்புகளும்… பாதுகாப்பும்…

ஆண்டுதோறும் நவ.15-21ஆம் தேதி வரை பச்சிளங்குழந்தைகள் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டைப் பொருத்தவரை சராசரி அளவைவிடக் குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.

குறைப்பிரசவம் மற்றும் மிகக்குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் உறுப்புகளின் செயல்திறன் குறையும் என்றும் இரத்தநோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பிறக்கும் குழந்தைகள் – 12 இலட்சம்

சராசரி எடை – 2.5 கிலோ முதல் 3.4 கிலோ வரை

சராசரி எடையில் பிறந்த குழந்தைகள்

2018-19 – 87 சதவீதம்

2021-22 – 82 சதவீதம்

எடை குறைவு பிரசவங்கள்

100-இல் 13 குழந்தைகள் (2021-22)

100-இல் 8 குழந்தைகள் (2018-19)

குறைந்த எடை குழந்தைகள் விகிதம் – 22 சதவீதம் (2021-22)

பேறுகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு நோய்கள் (2021-22)

இரத்தசோகை – 13%

சர்க்கரை நோய் – 3%

உயர் இரத்த அழுத்தம் – 1%

அதீத உடற்பருமன் – 10%

எடை குறைவுக்கான காரணங்கள்

பேறுகால ஊட்டச்சத்துக் குறைபாடு

மருத்துவக்கண்காணிப்பு இல்லாமை

மரபணு பாதிப்புகள்

இரட்டைக்குழந்தைகள் உருவாதல்

தாய்க்கு மனவழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு

உடற்பயிற்சி இல்லாமை

தேவையற்ற மருந்துகளை உட்கொள்ளுதல்

மது, புகைப்பழக்கம்

சினைப்பை, தொப்புள்கொடி கிருமித்தொற்று

எடை குறைவு குழந்தைகளுக்கான அச்சுறுத்தல்கள்

டைப்-1 சர்க்கரை நோய்

கற்றலில் குறைபாடு

நரம்புசார் பாதிப்புகள்

ஹைபாக்சியா (மூச்சுத்திணறல்)

நிமோனியா பாதிப்பு

இரத்தவோட்டத்தில் சுணக்கம்

சிவப்பணுக்கள் அதிகரிப்பு நோய்

குடற்புழு மருந்துகள்…

19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறாருக்கு, ‘அல்பெண்டசோல்’ எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் பள்ளிகளிலோ அல்லது வீடுகளில் நேரடியாகவோ வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, ஆண்டுக்கு இருமுறை தமிழ்நாட்டில் 8 கோடி, ‘அல்பெண்டசோல்’ மாத்திரைகள் விநியோகிக்கப்படுகின்றன.

குடற்புழு நீக்க மாத்திரைகள் உட்கொள்ளாதபட்சத்தில் ஊட்டச்சத்துக்குறைபாடு, பசியின்மை, இரத்தசோகை, வயிற்று உபாதைகள், சோர்வுநிலை உள்ளிட்ட பிரச்னைகள் குழந்தைகளுக்கு ஏற்படும்.

தடுப்பூசி அட்டவணை…

காலம் – தடுப்பூசிகள்

பிறந்தவுடன் – பிசிஜி (காசநோய்), ஹெபிடைடிஸ் பி (கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய்), ஓபிவி (இளம்பிள்ளை வாதம்)

ஆறு வாரங்கள் – ஓபிவி (இளம்பிள்ளை வாதம்), ஐபிவி (இளம்பிள்ளை வாதம்), பென்டா (கக்குவான் இருமல், இரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ஃப்ளூயன்ஸா தொற்று, கல்லீரல் தொற்று), பிசிவி (நிமோனியா), ரோட்டா (வயிற்றுப்போக்கு)

10 வாரங்கள் – ஓபிவி, பென்டா, ரோட்டா

14 வாரங்கள் – ஓபிவி, ஐபிவி, பென்டா, பிசிவி, ரோட்டா

9 மாதங்கள் – பிசிவி (பூஸ்டர்), எம் ஆர் (தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்), சப்பானிய மூளைக்காய்ச்சல், விட்டமின் – ஏ

16-24 மாதங்கள் – ஓபிவி, எம் ஆர்., சப்பானிய மூளைக்காய்ச்சல், டிபிடி பூஸ்டர் (கக்குவான் இருமல், தொண்டை அடைப்பான், இரண ஜன்னி)

5-6 வயது – டிபிடி இரண்டாவது பூஸ்டர் தவணை

10 வயது – டெட்டனஸ் (டிடி)

16 வயது – டெட்டனஸ் (டிடி)

21st November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. ‘Artemisinin’ which was seen in the news, is a major component of drugs against which disease?

A. Diabetes

B. Malaria

C. SARS

D. Hypertension

Answer & Explanation

Answer: B. Malaria

  • The World Health Organization has launched a new strategy to combat antimalarial drug resistance in Africa, during World Antimicrobial Awareness Week. It is an annual global campaign to raise awareness about the growing threat of antibiotic resistance. WHO warned that there are indications that some parasites are resistant to drugs that are combined with artemisinin, the major component of malaria drugs.

2. Which country launched the ‘Hwasong–17’ or the Monster missile?

A. Germany

B. North Korea

C. UK

D. France

Answer & Explanation

Answer: B. North Korea

  • North Korea launched the ‘Hwasong–17’ intercontinental ballistic missile. It is also dubbed as the Monster missile. The Hwasong–17 is North Korea’s biggest missile yet. It is also the largest road–mobile, liquid–fuelled intercontinental ballistic missile in the world.

3. What is the theme of the ‘World Children’s Day 2022’?

A. Inclusion, For Every Child

B. Children’s Rights

C. International togetherness

D. Digital Access for all

Answer & Explanation

Answer: A. Inclusion, For Every Child

  • The ‘World Children’s Day’ is celebrated on 20 November to promote international togetherness, awareness among children worldwide, and improving children’s welfare. It was first established in 1954 as Universal Children’s Day. It also marks the anniversary of the date that the UN General Assembly adopted both the Declaration and the Convention on children’s rights. This year, the theme is ‘Inclusion, For Every Child.’

4. Kameng Hydro Power Station, which was inaugurated recently, is located in which state/UT?

A. Tamil Nadu

B. Andhra Pradesh

C. Kerala

D. Arunachal Pradesh

Answer & Explanation

Answer: D. Arunachal Pradesh

  • Prime Minister Narendra Modi inaugurated the 600 MW Kameng Hydro Power Station in Arunachal Pradesh. It is the biggest Hydro Power Project implemented by NEEPCO Ltd, a Mini Ratna Power PSU under Ministry of Power. This is also the sixth hydro power plant in the North East. Generation of 3353 million Units annually from the project will make Arunachal Pradesh a power surplus state, also contributing to the National Grid.

5. Which institution released the ‘Handbook of Statistics on Indian States 2021–22’?

A. SEBI

B. Reserve Bank of India

C. NITI Aayog

D. Department of Economic Affairs

Answer & Explanation

Answer: B. Reserve Bank of India

  • The Reserve Bank of India has released the seventh edition of its statistical publication titled ‘Handbook of Statistics on Indian States 2021–22’. As per the report, India’s gross domestic product (GDP) is expected to register a growth rate of about 7% in 2022–23 and between 6.1% and 6.3% in the June–September quarter of this fiscal. In the current edition of the Handbook, two new sections namely Health and Environment have been introduced.

6. As per the Education Ministry’s Performance Grading Index (PGI), how many states attained Level–2 grading in 2020–21?

A. None

B. Two

C. Four

D. Seven

Answer & Explanation

Answer: D. Seven

  • The Ministry of Education has released the Performance Grading Index (PGI) for States and Union Territories for 2020–21. The index has evidence–based comprehensive analysis of school education systems across States and UTs. A total of seven States and UTs namely Kerala, Punjab, Chandigarh, Maharashtra, Gujarat, Rajasthan, and Andhra Pradesh have attained Level –2 grading in 2020–21. PGI 2020–21 classified the States and UTs into ten grades of which the highest achievable Grade is Level 1.

7. Which Union Ministry is associated with the Nutrient Based Subsidy (NBS) scheme?

A. Ministry of Chemicals and Fertilisers

B. Ministry of Agriculture and Farmers Welfare

C. Ministry of Rural Development

D. Ministry of Urban and Housing Affairs

Answer & Explanation

Answer: A. Ministry of Chemicals and Fertilisers

  • The Cabinet Committee on Economic Affairs (CCEA) approved nutrient–based subsidy (NBS) rates for P&K fertilisers for the 2022–23 rabi season. The government approved a subsidy of Rs 51,875 crore for phosphatic and potassic (P&K) fertilisers for the second half of 2022–23. The scheme is implemented by the Ministry of Chemicals and Fertilisers. The government makes available fertilisers to farmers at subsidised prices through fertiliser manufacturers/importers.

8. Which state is the host of the ‘Urban Mobility India Conference and Expo 2022’?

A. Tamil Nadu

B. Kerala

C. Karnataka

D. Maharashtra

Answer & Explanation

Answer: B. Kerala

  • Ministry of Housing and Urban Affairs in collaboration with the state government of Kerala is organising the 15th Urban Mobility India (UMI) Conference and Expo 2022 in Kochi. The primary objective of the conference is to spread information to the cities, to help them keep up–to–date with latest and best urban transport practices globally. Senior officers from Central and State Governments policy makers, Managing Directors of Metro Rail Companies, Chief Executives of transport undertakings will participate in this event.

9. As per the US News and World Report, which country has the cheapest manufacturing cost?

A. India

B. Bangladesh

C. China

D. Indonesia

Answer & Explanation

Answer: A. India

  • According to the US News and World Report, out of 85 nations, India has been ranked as the nation with the cheapest manufacturing cost ahead of China and Vietnam. India has bagged the 31st position in the overall Best Countries ranking while it featured at the 37th spot in the ‘Open for Business’ category. In the overall Best Countries ranking, Switzerland has topped the chart, followed by Germany, Canada, US and Sweden.

10. India is set to celebrate ‘Ganga Utsav’ in which month?

A. October

B. November

C. December

D. April

Answer & Explanation

Answer: B. November

  • The Indian Government is set to celebrate Ganga Utsav from November 1 to November 3, this year. It focusses on encouraging stakeholder engagement and public participation towards rejuvenation of the Ganga River. Several activities, designed for the central and state levels, will be organised in both physical and virtual mode, as per the National Mission for Clean Ganga.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!