Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

21st October 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “கடன்களுக்கான கூட்டு வட்டி தள்ளுபடி” என்பது கீழ்க்காணும் எத்தனை வகை கடன்களுக்கு பொருந்தும்?

அ. மூன்று

ஆ. நான்கு

இ. எட்டு

ஈ. பத்து

  • வங்கிகளில் கடன் பெற்றவர்கள் COVID-19 பேரிடர் காலத்தில் திரும்பச் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, அவர்களுக்கு நடப்பாண்டு மார்ச்-ஆகஸ்ட் வரையிலான ஆறு மாத காலத்துக்கு மாதாந்திர தவணை ஒத்திவைப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. இச்சலுகையை பயன்படுத்தியோருக்கு கூட்டு வட்டி (வட்டிக்கு வட்டி) விதிக்க முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, `2 கோடி வரை கடன்பெற்றவர்களுக்கு இந்த வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
  • அதன்படி, ரூ.2 கோடி வரையில் கடன் பெற்ற குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) மற்றும் தனிநபர் கடனாளிகளுக்கு கூட்டு வட்டி தள்ளுபடி செய்யப்படவுள்ளது. இவைதவிர, கல்வி, வீட்டு வசதி, நுகர்வோர் சாதனங்கள், கடனட்டை நிலுவை, மோட்டார் வாகனம், நுகர்வு ஆகிய பிரிவுகளுக்கும் இந்த கூட்டு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தும். இந்தத் திட்டத்தை வரும் 2020 நவம்பர்.2ஆம் தேதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்கான திட்டவட்டமான திட்டத்தை கொண்டுவருமாறு இந்திய உச்சநீதிமன்றம் அண்மையில் நடுவணரசுக்கு அறிவுறுத்தியது.

2. COVID-19 தொற்றை சமாளிப்பதற்கு ஏழ்மையான நாடுகளுக்கு உதவுவதற்காக, $25 பில்லியன் டாலர் மதிப்பிலான அவசரகால நிதியுதவிக்கு அழைப்பு விடுத்துள்ள நிறுவனம் எது?

அ. ADB

ஆ. AIIB

இ. உலக வங்கி

ஈ. IMF

  • உலகின் ஏழ்மையான நாடுகளுக்கு உதவ, COVID-19 தொற்றுநோயின் சவால்களை கையாள, $25 பில்லியன் அமெரிக்க டாலர் அவசர நிதியுதவிக்கு உலக வங்கி அழைப்பு விடுத்துள்ளது. அண்மையில், உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ், நிதியமைச்சர்கள் மற்றும் G20 முதன்மை பொருளாதார -ங்களின் மத்திய வங்கி ஆளுநர்களிடம், பன்னாட்டு வளர்ச்சி சங்கத்தின் பிரதிநிதிகளிடம் இந்த உதவி நிதித்தொகுப்பை வழங்கப்போவதாக தெரிவித்தார்.

3. “Grow, nourish, sustain. Together. Our actions are our future” என்பது அக்.16 அன்று கொண்டாடப்படும் எந்தச் சிறப்பு நாளின் கருப்பொருளாகும்?

அ. உலக புவி நாள்

ஆ. உலக உணவு நாள்

இ. உலக ஊட்டச்சத்து நாள்

ஈ. உலக வாழ்வாதார நாள்

  • நல்ல உணவு மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக உணவு நாள், ஆண்டுதோறும் அக்டோபர்.16 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. “Grow, nourish, sustain. Together. Our actions are our future” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். உலகம் முழுவதும் இந்த நாளில் நடத்தப்படும் கொண்டாட்டங்கள் மற்றும் செயற்பாடுகளுக்கு உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) தலைமை வகிக்கிறது.

4. அதிநவீன பன்னாட்டு வைராலஜி நிறுவனம் திறக்கப்பட்டுள்ள மாநிலம் எது?

அ. கர்நாடகா

ஆ. மகாராஷ்டிரா

இ. கேரளா

ஈ. உத்தர பிரதேசம்

  • அதிநவீன பன்னாட்டு வைராலஜி நிறுவனத்தை கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் சமீபத்தில் திறந்துவைத்தார். அது, திருவனந்தபுரத்தில் உள்ள தொனக்கல்லில் உள்ள வாழ்வறிவியல் பூங்காவில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற வைராலஜிஸ்ட், Dr அகில் பானர்ஜி, தற்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின்கீழ் உள்ள இவ்வாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

5. எந்த நாட்டுடனான அமைதி ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது?

அ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. இரஷ்யா

ஈ. ஈரான்

  • இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் (UAE) இடையில் கையெழுத்திடப்பட்ட சுமூகமாக்குதல் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலும் ஐக்கிய அரபு அமீரகமும் செப்.15 அன்று வாசிங்டனில் தங்கள் உறவுகளை சுமூகமாக்குதலுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மேலும் பக்ரைனுடனான ஓர் அமைதி ஒப்பந்தத்திலும் இஸ்ரேல் கையெழுத்திட்டது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைன் ஆகியவை இஸ்ரேலுடனான உத்தியோகபூர்வ உறவுகளுக்கு உடன்பட்ட முதல் வளைகுடா நாடுகளாகும்.

6. “தாலசீமியா பால் சேவா யோஜனா” என்பது ஹீமடோபாய்டிக் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சையின் ஒரு பகுதியாகும். இதற்கு நிதியுதவி அளித்துவரும் பொதுத்துறை நிறுவனம் எது?

அ. NTPC

ஆ. இந்திய நிலக்கரி நிறுவனம்

இ. SAIL

ஈ. ONGC

  • தலசீமியாவால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய நோயாளிகள் பயன்பெறும் வகையில், 2ஆம்கட்ட, “தலசீமியா பால் சேவா யோஜனா” திட்டத்தை மத்திய நலவாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் Dr. ஹர்ஷ வர்தன் தொடங்கிவைத்தார். இந்திய நிலக்கரி நிறுவனத்தின் சமூகப்பணியாக கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்மூலம் தலசீமியா மற்றும் அரிவாள் செல் நோயாளிகளுக்கு குருதியில் உள்ள ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘e-VIN’ என்பதன் விரிவாக்கம் என்ன?

அ. Electronic Vaccine Intelligence Network

ஆ. Emergency Vaccine Infrastructure Network

இ. Electronic Voting Intelligence Network

ஈ. Electronic Voluntary Intelligence Network

  • சுமார் 200-250 மில்லியன் மக்களை உள்ளடக்கிய சுமார் 400-500 மில்லியன் தடுப்பூசிகளை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் அரசாங்கம் செயலாற்றி வருவதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அண்மையில் அறிவித்தார். மின்னணு தடுப்பூசி நுண்ணறிவு நெட்வொர்க் (e-VIN) ஆனது நோய்த்தடுப்பு திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும், தடுப்பூசி இயக்கத்தின் நிகழ்நேர கண்காணிப்புக்கும்; கொள்முதல் முதல் சேமிப்புக்கும், விநியோகத்திற்கும் அது பயன்படுத்தப்படுகிறது.

8. “இந்தியா – பன்னாட்டு உணவு மற்றும் வேளாண் வாரம்” என்பதை தொடங்கிய அமைச்சகம் எது?

அ. வேளாண் அமைச்சகம்

ஆ. உணவுப் பதனிடுதல் அமைச்சகம்

இ. புவி அறிவியல் அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • அக்டோபர்.16-22 வரை ஒருங்கிணைக்கப்படும் “இந்தியா-பன்னாட்டு உணவு மற்றும் வேளாண் வாரத்தை” இணையவாயிலாக மத்திய வேளாண் மற்றும் உழவர்கள் நலன், உணவு பதப்படுத்தும் தொழிற்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்வில் உரையாற்றிய நரேந்திர சிங் தோமர், இந்திய உணவு சந்தையில் இந்தியாவின் உணவுப் பதப்படுத்தும் துறையின் பங்கு 32% இருப்பதாக கூறினார். இந்த நிகழ்வை முன்னிட்டு, ‘அன்ன தேவோ பவா’ என்று தலைப்பிடப்பட்ட இயக்கத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.

9. தோல் துறை திறன் கழகம் (LSSC) அறிமுகப்படுத்தியுள்ள திறன்பேசி செயலியின் பெயர் என்ன?

அ. Skill India

ஆ. Leather India

இ. Scale India

ஈ. Scale Skill

  • “Scale India” என்ற ஆண்ட்ராய்டு அடிப்படையிலான திறன்பேசி செயலியை, இலாப நோக்கற்ற அமைப்பான Leather Sector Skill Council தொடங்கியுள்ளது. திறன் மற்றும் வேலைவாய்ப்பு சூழலியலில் உள்ளோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை இந்தச் செயலி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தச் செயலியை, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, ஒரு மெய்நிகர் நிகழ்வில் அறிமுகப்படுத்தினார்.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பெபிகொலம்போ என்பது எந்தக் கோள் / வான் பொருளை ஆராய ஏவப்பட்ட விண்கலமாகும்?

அ. சனி

ஆ. செவ்வாய்

இ. புதன்

ஈ. வெள்ளி

  • ‘BepiColombo’ என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) ஆகியவற்றின் கூட்டுத்திட்டமாகும்; இது, புதன் கோளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமீபத்தில் இவ்விண்கலம், முதன்முறையாக வெள்ளிக் கோளைக் கடந்து, வெள்ளிக்கு 17,000 கிலோமீட்டர் தொலைவிலிருந்து வெள்ளியை படம் பிடித்தது. புதனுக்கு ஏழாண்டு பயணத்தை மேற்கொள்வதற்காக இந்த விண்கலம் கடந்த 2018ஆம் ஆண்டில் ஏவப்பட்டது.

1. The “Waiver of compound interest for loans” that is seen in the news recently, is applicable to how many categories of loans?

[A] Three

[B] Four

[C] Eight

[D] Ten

  • The scheme for “Waiver of compound interest (interest on interest)” accumulated during moratorium against loans of up to Rs 2 crore has been proposed for eight different sectors. These include MSME, education, housing, consumer durables, credit card, auto, personal and consumption loans. The Supreme Court of India has recently advised the Union Government to come out with a definite plan for implementing this scheme by 2nd November 2020.

2. Which institution has called for emergency financing of USD 25 billion to help the poorest countries to tackle COVID–19?

[A] ADB

[B] AIIB

[C] World Bank

[D] IMF

  • The World Bank has called for an emergency financing of USD 25 billion, to help the poorest countries of the world, to tackle the challenges of Covid–19 pandemic. Recently, the World Bank head David Malpass told the Finance ministers and Central bank Governors of the G20 major economies that he would propose the supplemental financing package to deputies of the International Development Association (IDA).

3. “Grow, nourish, sustain. Together. Our actions are our future” is the theme of which special day celebrated on October 16?

[A] World Earth Day

[B] World Food Day

[C] World Nutrition Day

[D] World Livelihood Day

  • The World Food Day 2020 is celebrated every year on October 16 across the world, to raise awareness about the importance of good food and nutrition.
  • The World Food Day 2020 theme is “Grow, Nourish, Sustain. Together. Our actions are our future”. The Food and Agricultural Organisation (FAO) is leading the celebrations and activities conducted on this day across the world.

4. In which state/UT, was the operation of first phase of International Institute of Advanced Virology (IIAV) inaugurated?

[A] Karnataka

[B] Maharashtra

[C] Kerala

[D] Uttar Pradesh

  • Kerala Chief Minister Pinarayi Vijayan has recently inaugurated operations of the first phase of the International Institute of Advanced Virology. It has been located at the Life Science Park at Thonakkal in Thiruvananthapuram. Renowned virologist, Dr Akhil Banerjee was appointed as the Head of the research Institute, which is currently under the Department of Science and Technology.

5. The Parliament of Israel has approved Peace Deal with which country?

[A] USA Top of Form

USA

[B] UAE

[C] Russia

[D] Iran

  • Israel’s parliament has recently approved the normalization deal signed between Israel and the United Arab Emirates (UAE). Israel and the UAE signed an agreement to normalize their relations in Washington on September 15. Israel also signed a peace deal with Bahrain and the UAE and Bahrain became the first Gulf countries to agree for official relations with Israel.

6. “Thalassemia Bal Sewa Yojna” is a part of the Hematopoietic Stem Cell Transplantation project, funded by which PSU?

[A] NTPC

[B] Coal India

[C] SAIL

[D] ONGC

  • Union Minister for Health and Family Welfare Dr Harsh Vardhan launched the second phase of “Thalassemia Bal Sewa Yojna” for the underprivileged Thalassemic patients. This scheme is a part of the Hematopoietic Stem Cell Transplantation (HSCT) program which is funded by Coal India’s Corporate Social Responsibility (CSR). It was launched in the year 2017 that aims to provide a one–time cure opportunity for Thalassaemia and Sickle Cell Disease

7. What is the abbreviation of e–VIN, that was seen in news recently?

[A] Electronic Vaccine Intelligence Network

[B] Emergency Vaccine Infrastructure Network

[C] Electronic Voting Intelligence Network

[D] Electronic Voluntary Intelligence Network

  • Union Health minister Harsh Vardhan recently announced that the government is looking at procuring and utilizing about 400–500 million vaccine doses, covering about 200–250 million people. Electronic Vaccine Intelligence Network (eVIN) that is used for the immunisation programme, is used for real–time tracking of vaccine movement, from procurement to storage, to delivery and distribution.

8. The “India – International Food and Agri Week” has been launched by which ministry?

[A] Ministry of Agriculture

[B] Ministry of Food Processing

[C] Ministry of Earth Sciences

[D] Ministry of Home Affairs

  • The India – International Food and Agri Week has been launched by the Ministry of Food Processing and industries. The Union Minister Narendra Singh Tomar launched the event virtually. During the inaugural event, the minister stated that 32% of India’s food market is constituted by food processing. The Ministry has also started an awareness programme named “Anna Devo Bhava”.

9. What is the name of the mobile application launched by Leather Sector Skill Council (LSSC)?

[A] Skill India

[B] Leather India

[C] Scale India

[D] Scale Skill

  • An android based application named “SCALE India” has been launched by Leather Sector Skill Council, a non–profit organization (NGO). The app aims to cater the needs of stakeholders of the skilling and employment ecosystem. The app was launched by the Union Minister of Skill Development and Entrepreneurship Mahendra Nath Pandey, at a virtual event.

10. BepiColombo, which was in news recently, is a spacecraft launched to explore which planet / celestial body?

[A] Saturn

[B] Mars

[C] Mercury

[D] Venus

  • ‘BepiColombo’ is a joint mission of the European Space Agency (ESA) and the Japan Aerospace Exploration Agency (JAXA), which aims to explore Mercury. Recently, the spacecraft has crossed Venus for the first time and captured an image of Venus from a distance of 17,000 kilometres. The spacecraft was launched in 2018 to undergo a seven–year trip to Mercury.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!