Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

21st September 2020 Current Affairs in Tamil & English

21st September 2020 Current Affairs in Tamil & English

21st September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

21st September Tamil Current Affairs 2020

21st September English Current Affairs 2020

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.தேசிய உர நிறுவனத்தின் (National Fertilizers Ltd) தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ. மும்பை

ஆ. சென்னை

இ. நொய்டா

ஈ. கொல்கத்தா

  • மத்திய இரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் உரங்கள் துறையின்கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான தேசிய உர நிறுவனம், 2020-21’இன் முதல் ஐந்து மாதங்களில், 16.11 இலட்சம் டன் உரத்தை உற்பத்தி செய்து உற்பத்தி இலக்குகளை தாண்டியுள்ளது. 2019-20’இன் இதேகாலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 14.26 டன்னுடன் ஒப்பிடும்போது, இது 13 சதவீதம் அதிகமாகும். தேசிய உரங்கள் நிறுவனத்தின் தலைமையகம் நொய்டாவில் அமைந்துள்ளது

2. துளிர்-நிறுவன சூழலியலுக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ. சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சகம்

ஆ. வணிகம் & தொழிற்துறை அமைச்சகம்

இ. வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சகம்

ஈ. நிதி அமைச்சகம்

  • துளிர்-நிறுவன சூழலியலுக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலின் 2ஆம் பதிப்பை மத்திய வணிகம் & தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடையே போட்டித்தன்மையை ஊக்குவிக்கவும், பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் சூழ்நிலையை மேம்படுத்தவும் இந்தத் தரவரிசை பட்டியலை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை தயாரித்துள்ளது.
  • இந்தத் தரவரிசை கட்டமைப்பில், 30 செயற்பாட்டுப் புள்ளிகளுடன் கூடிய 7 பரந்த சீர்திருத்த பகுதிகள் உள்ளன. இத்தரவரிசையில், 22 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் பங்கேற்றன. இதில், வளர்ந்துவரும் சூழலியல்களில் ஒன்றாக தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது.

3.அண்மையில் காலமான சமூக ஆர்வலரும், ஆர்ய சமாஜத்தின் தலைவருமானவரின் பெயரென்ன?

அ. சுவாமி அக்னிவேஷ்

ஆ. நரேந்திர குமார் ஸ்வைன்

இ. கோவிந்த் ஸ்வரூப்

ஈ. கேசவானந்த பாரதி

  • மூத்த சமூக ஆர்வலரும், ஹரியானா முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சுவாமி அக்னிவேஷ், கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அண்மையில் தில்லியில் காலமானார். சுவாமி அக்னிவேஷ், ஆர்ய சமாஜத்தின் ஒரு புரட்சிகர தலைவராக கருதப்பட்டார். கொத்தடிமைத் தொழிலாளர் முறைக்கும் பெண்சிசுக்கொலைக்கும் எதிராக பல்வேறு போராட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கியுள்ளார்.

4. G20 நாடுகளின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்களின் மெய்நிகர் கூட்டத்தில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவர் யார்?

அ. பியூஷ் கோயல்

ஆ. சந்தோஷ் கங்வார்

இ. நிர்மலா சீதாராமன்

ஈ. ஜிதேந்திர சிங்

  • G20 உறுப்பு நாடுகளின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்களின் மெய்நிகரான கூட்டத்தில், மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார். இந்தச் சந்திப்பு, ‘G20 இளையோருக்கான செயல்திட்டம் 2025’ஐ மையமாகக் கொண்டு நடந்தது. மேலும், தொழிலாளர் சந்தையில் COVID-19 சூழலின் தாக்கத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. முதன்முறையாக இளையோர் தொடர்பான செயல்திட்டத்தை இந்தச் சந்திப்பு அடையாளம் கண்டுள்ளது.

5. DPIIT’இன் 2019ஆம் ஆண்டுக்கான துளிர்-நிறுவன சூழலியலுக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலில், சிறந்த மாநிலமாக தெரிவாகியுள்ள இந்திய மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. குஜராத்

இ. கேரளம்

ஈ. கர்நாடகா

  • தொழில் & உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையானது (DPIIT) சமீபத்தில் 2019ஆம் ஆண்டுக்கான துளிர்-நிறுவன சூழலியலுக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்தத் தரவரிசைப்படி, மாநிலங்களுள் குஜராத் சிறந்ததாகவும், யூனியன் பிரதேசங்களுள் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் சிறந்ததாகவும் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. கர்நாடகா & கேரளா ஆகிய மாநிலங்கள் வளர்ந்துவரும் சிறந்த மாநிலங்களாக தெரிவாகியுள்ளன. இந்தக் கட்டமைப்பானது 7 பரந்த சீர்திருத்த பகுதிகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.

6.மாநிலத்தில் உள்ள MSME’களுக்கு ஆதரவு வழங்குவதற்காக, SIDBI வங்கியுடன் கூட்டிணைந்துள்ள இந்திய மாநிலம் எது?

அ. இராஜஸ்தான்

ஆ. கர்நாடகா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. கேரளம்

  • சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியானது (SIDBI) இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள MSME சூழலை மேம்படுத்துவதற்காக அம்மாநில அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள MSME’களுக்கு நிதியியல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக இராஜஸ்தான் மாநிலத்தின் தொழிற்துறை ஆணையாத்தால் எடுக்கப்பட்ட முன்னெடுப்பாக்கும் இது.
  • தொழில்களை ஊக்குவிப்பதற்கும், அனுமதி மற்றும் ஆய்வுகளிலிருந்து வணிகங்களுக்கு 3 ஆண்டுகள் விலக்களிப்பதற்குமாக, MSME சட்டத்தையும் இராஜஸ்தான் மாநில அரசு திருத்தியுள்ளது.

7.பன்றி இறைச்சி இறக்குமதியைக் குறைப்பதற்காக, ‘பன்றிப்பண்ணை இயக்க’த்தைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. மேகாலயா

இ. உத்தர பிரதேசம்

ஈ. நாகாலாந்து

  • ​மேகாலயா மாநில அரசானது அண்மையில், `200 கோடி திட்ட மதிப்பிலான, ‘பன்றிப் பண்ணை இயக்க’த்தை தொடங்கியது. ஆண்டுக்கு `150 கோடி மதிப்புள்ள பன்றி இறைச்சியின் இறக்குமதியைக் குறைப்பதே இந்த மிகப்பெரிய ‘பன்றிப் பண்ணை இயக்க’த்தின் நோக்கமாகும்.
  • மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் K சங்மா இத்திட்டத்தை தொடங்கினார். தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகமானது மேகாலயா மாநிலத்துடன் கூட்டிணைந்து, இந்த ‘மேகாலயா மாநில பன்றிப் பண்ணை இயக்க’த்தை செயல்படுத்தியுள்ளது.

8.குஜராத் மாநிலத்தின் இராகனேஸ்தா சூரிய மின்னுற்பத்தி பூங்காவில், 200 MW திறனுடைய சூரிய மின்னாற்றல் உற்பத்தி திட்டத்திற்கு நிதியுதவி செய்யவுள்ள அமைப்பு எது?

அ. ஆசிய வளர்ச்சி வங்கி

ஆ. ஆசிய உட்கட்டமைப்பு & முதலீட்டு வங்கி

இ. BRICS வங்கி

ஈ. உலக வங்கி

  • குஜராத் மாநிலத்தில் 200 MW சூரிய மின்னுற்பத்தி திட்டத்தை அமைப்பதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியும் (ADB) பிரான்சின் ENGIE குழுமமும், `466 கோடி வரையிலான நீண்டகால கடன் ஒப்பந்தத் -தில் கையெழுத்திட்டுள்ளன. இராகனேஸ்தா சூரிய மின்னுற்பத்தி பூங்காவில் உருவாக்கப்படவுள்ள இந்தத் திட்டம், 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ENGIE குழுமத்திற்கு சொந்தமான எலக்ட்ரோ சோலைர் பிரைவேட் லிட் இத்திட்டத்தை செயல்படுத்தும்.

9.இந்தியாவின் எந்த ஒழுங்காற்று அமைப்பு அதன் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை சீரமைக்கவுள்ளது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி

ஆ. தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி

இ. இந்திய பங்கு & பரிவர்த்தனை வாரியம்

ஈ. இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை

  • இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) தனது தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வலையமைப்பு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை சீரமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், தனது வலையமைப்பில் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டைக்கொண்டிருக்கவும் SEBI திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, பாரதி ஏர்டெல், விப்ரோ, TCS, HP, IBM, NTT இந்தியா, ஆரஞ்சு வணிக சேவைகள் இந்தியா தொழினுட்பம் மற்றும் சிபி தொழினுட்பங்கள் உள்ளிட்ட 8 நிறுவனங்களை SEBI தெரிவு செய்துள்ளது.

10. BREXIT’க்குப் பிறகு, ஐக்கியப் பேரரசு, எந்த நாட்டோடு தனது முதல் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?

அ. இந்தியா

ஆ. ஜப்பான்

இ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ. சீனா

  • ஜப்பானுடனான பொருளாதார கூட்டொப்பந்தத்தில் ஐக்கியப்பேரரசு (UK) கையெழுத்திட்டுள்ளது. இந்தக் கூட்டாண்மை ஒரு வரலாற்று நடவடிக்கையாகக் கருதப்படுகிறது; ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியத்தி -லிருந்து ஐக்கியப் பேரரசு (UK) வெளியேறிய பிறகு அது கையெழுத்திட்ட முதல் வர்த்தக ஒப்பந்தமாகும் இது. இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை சுமார் 15 பில்லியன் யூரோக்கள் மதிப்புக்கு உயர்த்தும் எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

  • தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பால் நடத்தப்பட்ட, ‘Connect 2020’ மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை-2020; தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கொள்கை-2020 மற்றும் தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்கை-2020 ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் க பழனிசாமி வெளியிட்டார்.
  • எளிதாக தொழில்புரிய ஏற்ற மாநிலங்கள் தரவரிசைப்பட்டியலில் தமிழ்நாடு பதினான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2018’இல் பதினைந்தாவது இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறியுள்ளது.

1. Where is the headquarters of National Fertilizers Limited located?

[A] Mumbai

[B] Chennai

[C] Noida

[D] Kolkata

  • The National Fertilizers Ltd is a Mini Ratna PSU under the Ministry of Chemicals and Fertilizers. It is head quartered at Noida. Recently, it is in news because, it has surpassed its productions targets by producing 16.11 Lakh MT of urea in first 5 months of 2020–21. This figure is 13% higher compared to the production made by the company during the same period of previous year.

2. “Ranking of States on Support to Start–up Ecosystems” is released by which Ministry?

[A] Ministry of Environment, Forest and Climate Change

[B] Ministry of Commerce and Industry

[C] Ministry of Agriculture & Farmers’ Welfare

[D] Ministry of Finance

  • The Results of the 2nd edition of “Ranking of States on Support to Start–up Ecosystems – 2019” was released by the Ministry of Commerce & Industry. The ranking exercise has been carried out by Department for Promotion of Industry and Internal Trade (DPIIT).
  • The ranking frame work has 7 broad reform areas, consisting of 30 action points. In this ranking exercise, 22 States and 3 Union Territories participated.

3. What is the name of the social activist and Arya Samaj Leader who has passed away recently?

[A] Swami Agnivesh

[B] Narendra Kumar Swain

[C] Govind Swarup

[D] Kesavananda Bharati

  • Veteran Social activist and former Haryana MLA Swami Agnivesh has recently passed away in Delhi, after he was suffering from liver cirrhosis. Swami Agnivesh was considered as a revolutionary leader of Arya Samaj and had led a campaign against bonded labour and female foeticide. He was also an advocate for the dialogue between religions.

4. Who represented India in the virtual Meeting of Labour and Employment Ministers of G20 nations?

[A] Piyush Goyal

[B] Santosh Gangwar

[C] Nirmala Sitharaman

[D] Jitendra Singh

  • Union Labour and employment minister Santosh Gangwar represented India in the virtual Meeting of Labour and Employment Ministers of G20 nations. The G20 meet focussed on the G20 Youth Roadmap 2025 and discussed measures to curb the impact of COVID–19 on the Labour market. The meet also identified indicators relating to youth for the first time.

5. Which Indian state has been ranked as the best performer in the States’ Start–up Ranking Framework 2019 of DPIIT?

[A] Uttar Pradesh

[B] Gujarat

[C] Kerala

[D] Karnataka

  • The Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) has recently released the States’ start–up Ranking Framework 2019. As per the ranking, Gujarat has been named as the best performer among states and Andaman & Nicobar Islands has been named as the best performer in the category of Union Territory. Karnataka and Kerala emerged as the Top performers. The framework is based on 7 broad reform areas.

6. Which Indian state has partnered with SIDBI to provide support to MSMEs in the state?

[A] Rajasthan

[B] Karnataka

[C] Andhra Pradesh

[D] Kerala

  • The Small Industries Development Bank of India (SIDBI) has signed a memorandum of understanding (MoU) with the Rajasthan government to develop the MSME ecosystem in the state.
  • This is the initiative of the Department of Industries, Rajasthan to provide financial and technical support to MSMEs in the state. The state has also amended the MSME Act to promote industries and exempt businesses from permissions and inspections for three years.

7. Which state has launched ‘Piggery Mission’ to reduce the import of pork?

[A] Assam

[B] Meghalaya

[C] Uttar Pradesh

[D] Himachal Pradesh

  • Meghalaya government has recently launched Piggery Mission with an outlay of Rs 200 Crore. The biggest piggery project aims to reduce the annual import of pork worth Rs 150 Crore. Chief Minister Conrad K. Sangma has launched the project. National Cooperative Development Corporation (NCDC) has partnered with Meghalaya to implement the ‘Meghalaya State Piggery Mission’.

8. Which development institution is to finance the 200–MW solar power project in Raghanesda Solar Park, Gujarat?

[A] Asian Development Bank

[B] Asian Infrastructure & Investment Bank

[C] BRICS Bank

[D] World Bank

  • The Asian Development Bank (ADB) and France’s ENGIE group have signed a long–term loan of up to Rs 466 crore to set up a 200–MW solar power project in Gujarat. The project that is to be developed in the Raghanesda Solar Park, is expected to be commissioned in the first half of 2021. Electro Solaire Private Ltd (ESPL), a special purpose vehicle owned by the ENGIE group, will implement the project.

9. Which regulator in India is set to revamp its IT infrastructure network & communication systems?

[A] RBI

[B] SEBI

[C] NABARD

[D] IRDAI

  • Security and Exchange Board of India (SEBI) has proposed to revamp its IT infrastructure network and communication systems. Also, SEBI has proposed to have a centralised control over its network. In this regard, SEBI has shortlisted 8 companies which includes Bharti Airtel, Wipro, TCS, HP, IBM, NTT India, Orange Business Services India Technology and Sify Technologies.

10. Post Brexit, UK signed its first economic partnership agreement with which country?

[A] India

[B] Japan

[C] USA

[D] China

  • The United Kingdom (UK) has entered into an Economic Partnership Agreement with Japan. This partnership is seen as a historic move, since this is the first trade agreement signed by the UK post Brexit. The agreement is said to foster trade between the two countries by about 15 billion Euros.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!