TnpscTnpsc Current Affairs

21st September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

21st September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 21st September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. பின்வரும் எந்த நகரத்தில், இராஜ மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்?

அ) அலிகார் 

ஆ) மீரட்

இ) ஜெய்ப்பூர்

ஈ) வாரணாசி

  • அலிகரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரர், கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான ராஜா மகேந்திர பிரதாப் சிங்கின் நினைவாகவும், அவரை கௌரவிக்கும் வகையிலும், உபி மாநில அரசால் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்படுகிறது. அலிகார் பிரிவில் உள்ள 395 கல்லூரிகளுக்கு இப்பல்கலை அங்கீகாரமளிக்கும்.

2. பொறியாளர்கள் நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?

அ) செப்டம்பர்.14

ஆ) செப்டம்பர்.10

இ) செப்டம்பர்.15 

ஈ) செப்டம்பர்.11

  • சர் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு செப்.15 அன்று பொறியாளர்கள் நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நாள் பொறியியல் மற்றும் கல்வித்துறையில் சர் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வ -ரையாவின் பங்களிப்புகளைக் குறிக்கிறது. இந்தியா முழுவதும் அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்மின்திட்டங்களை அமைப்பதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார்.

3. சமீபத்தில், மத்திய மறைமுக வரிகள் & சுங்கங்கள் வாரியத்தால் சுங்க விமான நிலையமாக அறிவிக்கப்பட்ட விமான நிலையம் எது?

அ) காங்க்ரா விமான நிலையம்

ஆ) பாக்கியோங் விமான நிலையம்

இ) சுவாமி விவேகானந்தா சர்வதேச விமான நிலையம்

ஈ) குஷிநகர் விமான நிலையம் 

  • மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கநங்கள் வாரியமானது (CBIC), குஷிநகர் விமான நிலையத்தை, சுங்க விமான நிலையமாக அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு பௌத்த யாத்திரீகர்கள் உட்பட பன்னாட்டுப் பயணிகளின் போக்குவரத்துக்கு உதவும்.

4. ஹிந்தி திவாஸின்போது “உதான் திட்டத்தை” தொடங்கிய அமைப்பு எது?

அ) ஐஐடி கௌகாத்தி

ஆ) ஐஐடி பம்பாய் 

இ) ஐஐடி காந்திநகர்

ஈ) ஐஐடி தில்லி

  • 2021 செப்.14 அன்று ஹிந்தி திவாஸ் நாளன்று ஐஐடி-பாம்பே தனது “உதான் திட்டத்தை” அறிமுகப்படுத்தியது. உயர்கல்வி நிறுவனங்களில் சேரும்போது பல மாணவர்கள் எதிர்கொள்ளும் மொழி ரீதியிலான தடையை உடைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • இந்த “உதான் திட்டம்” பாடப்புத்தகங்கள் & பிற ஆய்வுப்பொருட்களை ஆங்கில மொழியிலிருந்து ஹிந்தி மற்றும் பிற இந்திய மொழிகளுக்கு மொழிபெயர்க்க உதவுகிறது.

5. 2021 – சுவாமி பிரம்மானந்த் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

அ) H C வர்மா

ஆ) அரவிந்த் கெஜ்ரிவால்

இ) ஆனந்த் மஹிந்திரா

ஈ) ஆனந்த் குமார் 

  • ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு ஆதரவற்ற மாணவர்களைத் தயார்படுத்தும் “சூப்பர் 30” முயற்சியின்மூலம் கல்வித்துறைக்கு அவர் ஆற்றிவரும் பங்களிப்பிற்காக கணிதவியலாளர் ஆனந்த் குமாருக்கு 2021 – சுவாமி பிரம்மானந்த் விருது வழங்கப்பட்டது.

6. US ஓபன் பெண்கள் இரட்டையர் பட்டத்தை வென்றவர் யார்?

அ) கோகோ காஃப் மற்றும் கேட்டி மெக்னலி

ஆ) சமந்தா ஸ்டோசூர் மற்றும் ஜாங் ஷுவாய் 

இ) சமந்தா ஸ்டோசூர் மற்றும் எம்மா ரடுகானு

ஈ) பெங் சுவாய் மற்றும் வாங் கியாங்

  • ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் மற்றும் சீனாவின் ஜாங் ஷுவாய் ஆகியோர் தொடர்ச்சியாக 11ஆவது ஆட்டத்தில் வெற்றிபெற்று அமெரிக்க ஓபன் மகளிர் இரட்டையர் இறுதிப்போட்டியில் அமெரிக்க இளம்பெண்க -ளான கோகோ காப் மற்றும் கேட்டி மெக்னலி ஆகியோரை வீழ்த்தி வெற்றிபெற்றனர்.

7. எந்நாட்டின் கடற்படையுடன் இணைந்து, INS தபார், செங்கடலில் இராணுவப்பயிற்சியை நடத்தியது?

அ) சூடான் 

ஆ) எகிப்து

இ) எத்தியோப்பியா

ஈ) ஓமன்

  • இந்திய கடற்படையும் சூடான் கடற்படையும் சூடான் கடலுக்கு அப்பால் செங்கடலில் இருதரப்பு கடற்பயிற்சியை மேற்கொண்டன. INS தபார் மற்றும் அல்மாஸ் & நிமர் ஆகிய இரண்டு சூடான் கடற்படை கப்பல்கள் இந்திய கடற்படையுடன் இணைந்து இந்தப் பயிற்சியில் பங்கேற்றன.

8. 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலிருந்து சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தால் இடைநீக்கம் செய்யப்பட்ட நாடு எது?

அ) கியூபா

ஆ) வட கொரியா 

இ) வெனிசுலா

ஈ) பெரு

  • COVID தொற்றுநோயைக்காரணங்காட்டி டோக்கியோ விளையாட்டுக்கு ஓர் அணியை அனுப்ப மறுத்ததற்காக, 2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கிலிருந்து, வட கொரியாவை பன்னாட்டு ஒலிம்பிக் குழுமம் முறையாக இடைநீக்கம் செய்துள்ளது.

9. மருத்துவ படிப்புகளின் சேர்க்கைக்கு NEET விலக்கு கோரும் மசோதாவை நிறைவேற்றிய மாநிலம் எது?

அ) தமிழ்நாடு 

ஆ) கேரளா

இ) மகாராஷ்டிரா

ஈ) ஒடிஸா

  • NEET (தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு)’இலிருந்து மாநிலத்திற்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை தமிழ்நாட்டின் சட்டசபை நிறைவேற்றியது. இம்மசோதா நிறைவேறியவுடன், மாணவர்கள் NEET அமல்படுத்தப்படுவதற்கு முன்பு இருந்ததுபோல், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ இலங்கலை பட்டப்படிப்புக-ளில் சேர்க்கப்படுவார்கள்.

10. பின்வரும் எந்த நாட்டிடம், இந்தியா, டார்னியர் விமானத்தை ஒப்படைத்துள்ளது?

அ) சிங்கப்பூர்

ஆ) வியட்நாம்

இ) மொரிஷியஸ் 

ஈ) இலங்கை

  • இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக விஷன் சாகர் திட்டத்தின் ஒருபகுதியாக, இந்தியா, மொரிஷியஸிடம் டார்னியர் இரக விமானத்தை ஒப்படைத்துள்ளது.
  • “Security and Growth for All in the Region” என்பதன் சுருக்கந்தான் SAGAR. இதன்மூலம் இந்தியா தனது கடல்சார் அண்டை நாடுகளுடன் பாதுகாப்பு & பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த எண்ணுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. NEET தேர்வு நீடித்தால் தமிழகம் 75 ஆண்டுகாலம் பின்னோக்கி சென்றுவிடும்

நீட் தோ்வு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் ஆய்வறிக்கை மக்கள் நல்வாழ்வுத் துறை இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நீட் தோ்வு இன்னும் சில ஆண்டுகள் தொடா்ந்தால் சுதந்திரத்துக்கு முன்பு இருந்த பின்னடவை தமிழகம் மீண்டும் சந்திக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் மருத்துவத் துறை மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படக் கூடும் என்றும், நகா்ப்புறங்கள், கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு மருத்துவக் கல்வி எட்டாக்கனியாகிவிடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தியும், புதிய சட்ட முன்வடிவைக் கொண்டு வந்தும் நீட் தோ்வு முறையை தமிழகத்தில் ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும் என்று நீதிபதி ராஜன் குழு பரிந்துரைத்துள்ளது. நாடு முழுதும், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு நீட் நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை மாநில அரசு அத்தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறது.

அதன் தொடா்ச்சியாக நீட் தோ்வில் உள்ள பாதகங்களை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா், மருத்துவக் கல்வி இயக்குநா் உள்பட 9 போ் அடங்கிய உயா்நிலைக் குழு ஒன்றை அரசு அமைத்தது. இக்குழுவானது அதுதொடா்பான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியதுடன், பொதுமக்களிடம் இருந்தும் கருத்துகளைக் கேட்டிருந்தது. அதன்படி, சுமாா் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து இருந்தனா்.

அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீதிபதி ராஜன் குழு சமா்ப்பித்தது. இதற்கிடையே, சட்டப் பேரவையில் நீட் தோ்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றி, அதனை ஆளுநா் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது. இந்நிலையில், ராஜன் குழுவின் ஆய்வறிக்கை மக்கள் நலத் துறை இணையப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

நீட் தோ்வின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்ததுடன் அதுதொடா்பாக பொது மக்களிடம் கருத்தறியப்பட்டது. அதற்காக விளம்பரம் வெளியிடப்பட்டு, முறையாகக் கருத்துகள் பெறப்பட்டன. மொத்தம் 86,342 பேரிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டன. அவற்றில், 85,953 கருத்துகள் மின்னஞ்சல் மூலமாகவும், 332 அஞ்சல் மூலமாகவும், 57 டிராப்-பாக்ஸ் மூலமாகவும் பெறப்பட்டன. அவற்றைப் பரிசீலித்தபோது அதில் 65,007 போ் நீட் தோ்வுக்கு எதிராகவும், 18,966 போ் ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருந்தனா். 1,453 போ் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தனா். அவா்கள் அளித்த ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை ஆய்வு செய்ததில் நீட் தோ்வு தமிழகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர முடிகிறது.

இந்தத் தோ்வு முறை தொடா்ந்தால், மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்பு சீா்குலையும். சுதந்திரத்துக்கு முன்பு கிராமங்களிலும், சிறுநகரங்களிலும், அடிப்படை மருத்துவப் பயிற்சிகளை மட்டுமே கற்ற சுகாதார ஊழியா்கள் மருத்துவம் பாா்த்து வந்தனா். அந்த நிலைக்குத்தான் தமிழகம் தள்ளப்படும். இதைத் தவிா்க்க தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு மருத்துவ இடங்களை மாநில அரசே நிரப்பலாம். அல்லது சட்ட மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம். அதைத் தொடா்ந்து பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்க நடத்த வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2. உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தியா-நேபாளம் கூட்டு ராணுவ பயிற்சி

இந்தியா மற்றும் நேபாள நாட்டின் ராணுவம் கூட்டாக 15 நாட்கள் போர்ப் பயிற்சி பெறுகின்றன. இந்த பயிற்சி உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகரில் நேற்று தொடங்கி உள்ளது. இதையொட்டி கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றன. அக்டோபர் 3-ந்தேதி வரை பயிற்சி நடக்கிறது. இந்த போர்ப்பயிற்சிக்கு சூர்யகிரண் என்று பெயரிடப்பட்டு உள்ளது. முன்னதாக கடந்த சனிக்கிழமை இந்த போர் பயிற்சிக்காக உத்தரகாண்ட் வந்திறங்கிய நேபாள ராணுவ குழுவினருக்கு இந்திய ராணுவ அணிவகுப்பு நடத்தி வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது இந்தியாவும், நேபாளமும் இணைந்து பங்குபெறும் 15-வது பயிற்சியாகும். இரு நாட்டு ராணுவ தடைப்படை குழுக்கள், தங்கள் பயங்கரவாத தடுப்பு யுத்திகள் மற்றும் பேரிடர் மீட்பு உத்திகள் பற்றிய பயிற்சிகளை பங்கிட்டு கொள்வதுடன், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றன” என்று கூறப்பட்டு உள்ளது.

3. இந்திய, இந்தோனேசிய கடற்படை கூட்டுப் பயிற்சி தொடக்கம்

இந்திய, இந்தோனேசிய கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இந்தியா, இந்தோனேசியா கடற்படைகள் இணைந்து ‘சமுத்திர சக்தி’ என்ற பெயரில் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்தப் பயிற்சி 3-ஆவது முறையாக இந்தோனேசியாவின் ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே உள்ள சுன்டா நீரிணைப் பகுதியில் திங்கள்கிழமை தொடங்கியது. இந்தப் பயிற்சியில் இந்திய கடற்படையின் ஷிவாலிக், கட்மத் போா்க்கப்பல்களும், கடற்பகுதியில் நீண்ட தூரம் உளவு பாா்க்கும் பி81 விமானமும் பங்கேற்கின்றன.

இதுதொடா்பாக இந்திய கடற்படை செய்தித்தொடா்பாளரும் கமாண்டருமான விவேக் மத்வால் கூறுகையில், ‘‘கடல்சாா் நடவடிக்கைகளில் இந்தியா, இந்தோனேசியா கடற்படைகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதையும், பரஸ்பர புரிதல் மற்றும் கூட்டாக செயல்படுவதை மேம்படுத்துவதையும் ‘சமுத்திர சக்தி’ பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. கடல்சாா் பாதுகாப்பு நடவடிக்கைகள் சாா்ந்த பொதுவான புரிதலை வளா்த்துக் கொள்ளவும், இருதரப்பிலுமுள்ள சிறந்த நடைமுறைகளை பகிா்ந்துகொள்ளவும் இந்தப் பயிற்சி உதவும்’’ என்று தெரிவித்தாா்.

4. புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது: எஸ்.வி. சரஸ்வதிக்கு குடியரசுத் தலைவா் வழங்கினாா்

ராணுவ செவிலியா் சேவை (எம்என்எஸ்) துணைத் தலைமை இயக்குநா் பிரிகேடியா் எஸ்.வி.சரஸ்வதிக்கு 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவித்தாா். ராணுவ செவிலியா் சேவையில் மகத்தான பங்களிப்புக்காக அவருக்கு செவிலியா்களுக்கான மிக உயா்ந்த விருது வழங்கப்பட்டுள்ளது. காணொலி வாயிலாக திங்கள்கிழமை நடைபெற்ற இந்த விழாவில் குடியரசுத் தலைவா், பிரிகேடியா் எஸ்.வி.சரஸ்வதிக்கு இந்த விருதை வழங்கினாா்.

1. In which city, PM Modi has laid foundation stone of Raja Mahendra Pratap Singh University?

A) Aligarh 

B) Meerut

C) Jaipur

D) Varanasi

  • Prime Minister Narendra Modi has laid the foundation stone of Raja Mahendra Pratap Singh State University in Aligarh. The university is being established by the Uttar Pradesh government in the memory and honour of Raja Mahendra Pratap Singh, freedom fighter, educationist and social reformer. The university will provide affiliation to 395 colleges of the Aligarh division.

2. On which date, Engineers Day 2021 was observed?

A) September.14

B) September.10

C) September.15 

D) September.11

  • Engineers Day 2021 was observed on September 15, to mark the birthday of Sir Mokshagundam Visvesvaraya. This day marks the contributions of Sir Mokshagundam Visvesvaraya in the field of engineering and education. He played a significant role in constructing dams, reservoirs and hydro–power projects across India.

3. Recently, which airport has been declared as a Customs notified airport by The Central Board of Indirect Taxes and Customs?

A) Kangra Airport

B) Pakyong Airport

C) Swami Vivekananda International Airport

D) Kushinagar Airport 

  • The Central Board of Indirect Taxes and Customs (CBIC) has declared Kushinagar Airport as a Customs notified airport. This would also facilitate international passenger movements including that of Buddhist pilgrims.

4. Which organization has launched “Project Udaan” on the occasion of Hindi Diwas?

A) IIT Guwahati

B) IIT Bombay 

C) IIT Gandhinagar

D) IIT Delhi

  • IIT–Bombay launched its “Project Udaan” on the occasion of Hindi Diwas on September 14, 2021. Project Udaan was launched with the aim of breaking the language barrier that many students face while joining the institutes of higher education. Project Udaan enables the translation of textbooks and other study material of the engineering and other streams from English to Hindi & other Indian Languages.

5. Who has been conferred with the Swami Brahmanand Award 2021?

A) H C Verma

B) Arvind Kejriwal

C) Anand Mahindra

D) Anand Kumar 

  • Mathematician Anand Kumar was conferred with the Swami Brahmanand Award 2021 for his contribution in the field of education through his ”Super 30” initiative, which prepares underprivileged students for the IIT entrance exam.

6. Who has won the US Open women’s doubles title?

A) Coco Gauff and caty Mcnally

B) Samantha Stosur and Zhang Shuai 

C) Samantha Stosur and Emma Raducanu

D) Peng Shuai and Wang Qiang

  • Samantha Stosur of Australia and Zhang Shuai of China won their 11th straight match to triumph in the US Open women’s doubles final over American teenagers Coco Gauff and Caty McNally at Flushing Meadows.

7. With which country’s navy, INS Tabar has conducted a military exercise in the Red Sea?

A) Sudan 

B) Egypt

C) Ethiopia

D) Oman

  • Indian Navy and Sudanese Navy carried out a bilateral maritime exercise in the Red Sea off the Sudanese. INS Tabar and two Sudanese Navy ships– Almazz and Nimer– participated in this maiden exercise with the Indian Navy.

8. Which country has been suspended from the 2022 Beijing Winter Olympics by the International Olympic Committee?

A) Cuba

B) North Korea 

C) Venezuela

D) Peru

  • North Korea was formally suspended from the 2022 Beijing Winter Olympics by the International Olympic Committee (IOC) as punishment for refusing to send a team to the Tokyo Games citing the COVID–19 pandemic.

9. Which state has passed a bill seeking exemption from NEET for medical courses’ admissions?

A) Tamil Nadu 

B) Kerala

C) Maharashtra

D) Odisha

  • Tamil Nadu assembly has passed a bill seeking a permanent exemption to the state from NEET (National Eligibility cum Entrance Test). With the passing of this bill, students would get admissions to UG Medical degree courses based on the qualifying HSC or class 12 marks, just like it used to happen before NEET was implemented.

10. India has handed over Dornier Aircraft to which country?

A) Singapore

B) Vietnam

C) Mauritius 

D) Sri Lanka

  • India has handed over Dornier Aircraft to Mauritius as part of Vision SAGAR for enhanced maritime cooperation in the Indian Ocean Region. SAGAR stands for Security and Growth for All in the Region. Through this India seeks to enhance security and economic cooperation with its maritime neighbours.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!