Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

21st September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

21st September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 21st September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

21st September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘மாயா’ என்பது கீழ்க்காணும் எந்த விலங்கின் முதல் குளோனிங் ஆகும்?

அ. காட்டு ஆர்க்டிக் ஓநாய்

ஆ. ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம்

இ. சோலைமந்தி

ஈ. கானமயில்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. காட்டு ஆர்க்டிக் ஓநாய்

  • சீனாவைச் சேர்ந்த சினோஜீன் என்ற உயிரித்தொழில்நுட்ப நிறுவனம், ஆர்க்டிக் ஓநாய் ஒன்றை குளோனிங்மூலம் வெற்றிகரமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இந்த ஆர்க்டிக் ஓநாய்க்கு, ‘மாயா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகில் குளோனிங் முறையில் பிறந்த முதல் ஆர்க்டிக் ஓநாய் இதுவாகும். அரிதான மற்றும் அழிந்துவரும் உயிர் இனங்களைப் பாதுகாப்பதில், ‘குளோனிங்’ முறை ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
  • ‘மாயா’வை உருவாக்க பயன்படுத்தப்பட்ட அடிப்படை செல் ஒரு பெண் ஆர்க்டிக் ஓநாயின் தோல் மாதிரியிலிருந்து எடுக்கப்பட்டது. அது வளரத் தேவையான முட்டை ஒரு பெண் நாயிடமிருந்து பெறப்பட்டது. அதன் வாடகைத்தாயாக ஒரு பீகிள் இன நாய் விளங்கியது.

2. ‘CM தா ஹைசி’ (முதலமைச்சருக்குத் தெரிவிக்கவும்) என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. அஸ்ஸாம்

இ. மணிப்பூர்

ஈ. ஒடிஸா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. மணிப்பூர்

  • மணிப்பூர் மாநில முதலமைச்சர் N பிரேன் சிங் சமீபத்தில், ‘CM Da Haisi’ (முதலமைச்சருக்குத் தெரிவிக்கவும்) என்ற இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். பொதுமக்களிடமிருந்து புகார்கள் மற்றும் குறைகளைப் பெறுவதற்கு இது எண்ணுகிறது. புகார்தாரர்கள் தங்கள் புகார்களின் நிலையைச் சரிபார்க்கலாம். முதலமைச்சர் செயலகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர் மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் கூட்டிணைந்து பணியாற்ற இந்த இணையதளத்தைப் பயன்படுத்தும்.

3. ‘அஸ்தானா’ என்பது எந்த நாட்டின் புதிய தலைநகரமாகும்?

அ. துர்க்மெனிஸ்தான்

ஆ. கஜகஸ்தான்

இ. ஆப்கானிஸ்தான்

ஈ. உஸ்பெகிஸ்தான்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கஜகஸ்தான்

  • கஜகஸ்தானின் அதிபர் காசிம்–ஜோமார்ட் டோகாயேவ், அதிபரின் பதவிக்காலத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு சட்டத்தில் கையெழுத்திட்டார்; அதோடு நாட்டின் தலைநகரத்திற்கு அதன் பழைய பெயரான, ‘அஸ்தானா’வைச் சூட்டினார். இம்மசோதா அதிபரின் அதிகாரத்தை ஐந்திலிருந்து 7 ஆண்டுகளாக நீட்டிக்கிறது. எந்தவொரு அதிபரும் இரண்டாம் முறையாக பதவிக்குப் போட்டியிடுவதையும் இது தடுக்கிறது. இம்மசோதா தலைநகரத்தின் பெயரை, ‘அஸ்தானா’ என்று மீண்டும் நிறுவியுள்ளது. அஸ்தானாவின் பெயர் கடந்த 2019ஆம் ஆண்டில் நூர்–சுல்தான் என மாற்றப்பட்டது; அது, அப்போதைய அதிபர் நர்சுல்தான் நசர்பாயேவின் நினைவாக மாற்றம் செய்யப்பட்டது.

4. இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்களின் முதல் முத்தரப்பு வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தை கீழ்க்காணும் எந்த நகரத்தில் நடத்தின?

அ. புது தில்லி

ஆ. துபாய்

இ. நியூயார்க்

ஈ. பாரிஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. நியூயார்க்

  • இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்களது முதல் முத்தரப்பு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரில் நடத்தின. உத்திசார் பங்காளர்கள் மற்றும் UNSC உறுப்பினர்களுக்கு இடையே செயலில் கருத்துப்பரிமாற்றத்தை மையமாகக்கொண்டு, அரசியல் புரிவதற்கான சமகால வழிகள்குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைத்தலைவரைச் சந்தித்து, உலகம் முழுவதும் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் இருதரப்புச் சந்திப்புகளை நடத்தினார்.

5. 2022ஆம் ஆண்டில், ‘குளோபல் ஃபின்டெக் மாநாட்டை’ நடத்தும் இந்திய நகரம் எது?

அ. புது தில்லி

ஆ. அகமதாபாத்

ஈ. பெங்களூரு

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. மும்பை

  • இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI), இந்திய தேசிய கொடுப்பனவுக் கவுன்சில் (PCI) மற்றும் ஃபின்டெக் கன்வர்ஜென்ஸ் கவுன்சில் ஆகியவற்றால் குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். நிலையான நிதிச்சூழலைக் கட்டியெழுப்புவதற்கு பசுமை நிதியத்தில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நடுவண் நிதியமைச்சர் நிதியியல் தொழில்நுட்பத் துறைக்கு அழைப்புவிடுத்தார்.

6. 2022ஆம் ஆண்டில், இந்தியாவில், ‘தாய் வர்த்தக கண்காட்சி’ நடைபெற்ற இடம் எது?

அ. மும்பை

ஆ. ஹைதராபாத்

இ. மைசூர்

ஈ. வாரணாசி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஹைதராபாத்

  • தெலுங்கானா மற்றும் தாய்லாந்து இடையே வலுவான உறவுகளை உருவாக்கும் நோக்கத்துடன், சென்னையில் உள்ள தாய்லாந்து வர்த்தக மையம் ஐதராபாத்தில் தனது முதல் வர்த்தக கண்காட்சியைத் தொடங்கியது. வர்த்தக கண்காட்சி, தாய்லாந்து நிறுவனங்களுக்கும் ஹைதராபாத் வணிக சமூகத்திற்கும் இடையே வணிக உறவுகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தும். இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கும் விதமாக தெலுங்கானா மாநில அரசுக்கும் தாய்லாந்தின் வர்த்தக அமைச்சகத்துக்கும் இடையே ஏற்கெனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, பிதர்கனிகா தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. மேற்கு வங்கம்

ஆ. ஒடிஸா

இ. பீகார்

ஈ. ஆந்திர பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஒடிஸா

  • பிதர்கனிகா தேசியப்பூங்காவானது ஒடிஸா மாநிலத்தில் அமைந்துள்ளது. இது பல்வேறு அரிய மற்றும் அழிந்துவரும் வனவுயிரிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சமீபத்தில் பிதர்கனிகா தேசியப்பூங்காவில், 122 கூடுகளில் இருந்து 3,700 உவர்நீர் முதலைகள் பிறந்தன. அறிக்கையின்படி, கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும், 84 கூடுகளில் இருந்து சுமார் 2,500 முதலைகள் பிறந்தன.

8. வோஸ்டாக் – 2022 என்ற பலதரப்புப் பயிற்சியை நடத்தும் நாடு எது?

அ. சீனா

ஆ. ரஷ்யா

இ. அமெரிக்கா

ஈ. ஆஸ்திரேலியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ரஷ்யா

  • பலதரப்பு உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவப் பயிற்சி, ‘வோஸ்டாக் – 2022’ ரஷ்யாவில் தொடங்கியுள்ளது. இப்பயிற்சியானது பங்கேற்கும் அனைத்து இராணுவக்குழுக்கள் மற்றும் பார்வையாளர்களை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 7/8 கோர்க்கா ரைபிள்ஸ் துருப்புகளை உள்ளடக்கிய இந்திய இராணுவக்குழு, கூட்டு களப்பயிற்சிகள் மற்றும் போர்ப் பயிற்சிகள் உள்ளிட்ட கூட்டுப்பயிற்சிகளை மேற்கொள்கிறது.

9. திபெத்திய மக்களாட்சி நாள் கொண்டாடப்படும் தர்மஷாலா அமைந்துள்ள இந்திய மாநிலம்/UT எது?

அ. அருணாச்சல பிரதேசம்

ஆ. ஹிமாச்சல பிரதேசம்

இ. சிக்கிம்

ஈ. மணிப்பூர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஹிமாச்சல பிரதேசம்

  • திபெத்திய மக்களாட்சி நாளானது செப்டம்பர்.2 அன்று தர்மசாலாவில், புறநிலை அரசாங்கமாக திபெத்திய அரசாங்கம் ஆனதின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. தர்மசாலாவில் உள்ள புறநிலை திபெத்திய அரசின் நடுவண் திபெத்திய நிர்வாகம், உலகம் முழுவதும் உள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகளை நிர்வகித்து வருகிறது. இது தலாய் லாமா மற்றும் நாடுகடத்தப்பட்ட அனைத்து திபெத்தியர்களின் இல்லமாக விளங்குகிறது. இந்த ஆண்டு, திபெத்திய மக்களாட்சி நாளின் 62ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

10. கரிமமற்ற அணுவாற்றலிலிருந்து தயாரிக்கப்படும் ஹைட்ரஜனுக்குப் பெயர் என்ன?

அ. பச்சை ஹைட்ரஜன்

ஆ. வெள்ளை ஹைட்ரஜன்

இ. இளஞ்சிவப்பு ஹைட்ரஜன்

ஈ. ஆரஞ்சு ஹைட்ரஜன்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இளஞ்சிவப்பு ஹைட்ரஜன்

  • கரிமமற்ற அணுவாற்றலிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கரிமமற்ற ஹைட்ரஜன் இளஞ்சிவப்பு (பிங்க்) ஹைட்ரஜன் என்று அழைக்கப்படுகிறது. இளஞ்சிவப்பு ஹைட்ரஜனை மின்னாற்பகுப்பு மூலமாகவும் தயாரிக்கலாம்; அவ்வாறு தயாரிப்பதற்கு அணுமின் நிலையங்கள்மூலம் மின்சாரம் வழங்கப்பட வேண்டும். பச்சை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய, மின்பகுப்பிகள் வழங்கப்பட்டு, காற்றாலை அல்லது சூரிய ஆற்றல்மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சரக்குப் போக்குவரத்து சேவைகளில் அதிக செயல்திறனை ஊக்குவிக்கும் நடுவண் சரக்குப் போக்குவரத்து கொள்கைக்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை தேசிய சரக்குப்போக்குவரத்து கொள்கைக்கு ஒப்புதலளித்துள்ளது. இந்தக் கொள்கையானது சரக்குப் போக்குவரத்துத் துறைக்கான கட்டமைப்பை வகுத்துள்ளது.  இந்தக் கொள்கை, பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தை செயல்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது.

இக்கொள்கையின்மூலம் சரக்குப் போக்குவரத்து மற்றும் மனித வளங்களை ஒழுங்குபடுத்தும் செயல்முறைகள், ஒழுங்குமுறை கட்டமைப்பு, திறன்மேம்பாடு ஆகியவற்றின்மூலம் செயல்திறனைக் கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விரைவுபடுத்தப்பட்ட அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக தொழில்நுட்ப ரீதியாக செயல்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த, செலவு-திறனுள்ள, நெகிழ்ச்சியான, நிலையான மற்றும் நம்பகமான சரக்குப் போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

2030ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய அளவுகோல்களுடன் ஒப்பிடக்கூடிய வகையில் இந்தியாவில் சரக்குப் போக்குவரத்தில் கட்டணத்தை குறைப்பது, செயல்திறன் குறியீட்டு தரவரிசையை மேம்படுத்தி, 2030-க்குள் முதல் 25 நாடுகளில் ஒன்றாக கொண்டுவருவது, திறமையான சரக்குப்போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்புக்கான தரவு சார்ந்த பொறிமுறையை உருவாக்குவது ஆகியவை இதன் நோக்கமாகும்.

தேசிய சரக்குப்போக்குவரத்து கொள்கை, இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள், தொழிற்துறை பங்குதாரர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் பலசுற்று ஆலோசனைகள் நடத்தப்பட்டு, உலகளாவிய சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்ளும் ஓர் ஆலோசனை செயல்முறையின்மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை செயல்பாட்டுக்கு வரும்போது, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் ஆகியோருக்கு பயனளிக்கும்.

2. இந்திய பொருளாதார வளர்ச்சி 7%-க்கும் அதிகமாக இருக்கும்: தலைமைப் பொருளாதார ஆலோசகர்

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று நடுவணரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: COVID பரவல், ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பின்விளைவுகளை உலகம் எதிர்கொண்டு வருகிறது. இவை வளர்ச்சியைப் பாதிக்கின்றன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. விரைவில் இதன் மறுமதிப்பீடு இறங்குமுகமாக இருக்கும் என்று சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் பொருளாதார வளர்ச்சிகுறித்து மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடு தற்போது சரிந்துள்ளது. அதன்படி, இந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும். இத்தசாப்தத்தின் (10 ஆண்டுகள்) எஞ்சிய ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதமாக தக்கவைக்கும் வகையில், இந்தியா நல்ல நிலையில் உள்ளது என்றார் அவர்.

3. ஆஸ்கருக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ பரிந்துரை, ‘செல்லோ ஷோ’

ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ பரிந்துரையாக குஜராத்தி மொழியின், ‘செல்லோ ஷோ’ என்ற திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

95ஆவது ஆஸ்கர் விழா 2023 மார்ச்.12-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் நடைபெறவுள்ளது. அந்த விழாவுக்காக இந்தியா சார்பில் அனுப்பப்படும் திரைப்படத்தைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளை இந்திய திரைப்படக் கூட்டமைப்பு மேற்கொண்டு வந்தது. அக்கூட்டமைப்பின் பதினேழு உறுப்பினர்களைக்கொண்ட குழு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்நிலையில், ஆஸ்கர் விழாவுக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ பரிந்துரையாக ‘செல்லோ ஷோ’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக FFI தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 13 திரைப்படங்கள் ஆய்வுசெய்யப்பட்டன. பிரம்மாஸ்த்ரா, தி காஷ்மீர் ஃபைல்ஸ், அனேக், ஜுண்ட், பதாய் ஹோ, ராக்கெட்ரி ஆகிய ஹிந்தி திரைப்படங்களும், இரவின் நிழல் (தமிழ்), RRR (தெலுங்கு), அபராஜிதோ (வங்கமொழி), செல்லோ ஷோ (குஜராத்தி) உள்ளிட்டவையும் ஆய்வுசெய்யப்பட்டன. இறுதியில் ‘செல்லோ ஷோ’ திரைப்படத்தை அதிகாரபூர்வமாகப் பரிந்துரைக்க குழுவின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக ஒப்புதல் தெரிவித்தனர்” என்றார்.

படத்தின் கதைக்களம்:

குஜராத்தின் கிராமப்புறத்தில் வசிக்கும் 9 வயது சிறுவன், திரைப்படங்கள் மீது ஆர்வம்கொண்டு திரையரங்கில் உள்ள ஊழியர்களுக்குக் குறைந்த பணத்தைக் கொடுத்து புரொஜக்ஷன் அறையில் இருந்து திரைப்படங்களைக் கண்டு கோடைக்காலத்தைக் கழிப்பதை அடிப்படையாகக்கொண்டு, ‘செல்லோ ஷோ’ படம் எடுக்கப்பட்டுள்ளது. பான் நளின் இப்படத்தை இயக்கியுள்ளார். சித்தார்த் ராய் கபூர் தயாரித்துள்ளார். அப்படம் அக்.14ஆம் தேதியன்று திரைக்கு வரவுள்ளது.

21st September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. ‘Maya’, which was seen in the news, is the world’s first cloning of which animal?

A. Wild Arctic Wolf

B. One–horned Rhino

C. Lion–tailed Macaque

D. Great Indian Bustard

Answer & Explanation

Answer: A. Wild Arctic Wolf

  • A Beijing–based gene firm successfully cloned a wild Arctic wolf for the first time in the world. The wild Arctic wolf is also called as the white wolf or polar wolf. The animal is native to the High Arctic tundra of Canada’s Queen Elizabeth Islands.
  • The cloning is regarded as a milestone achievement in conserving rare and endangered species. Maya’s donor cell came from skin sample of wild female Arctic wolf, while its oocyte came from a female dog. Maya’s surrogate mother is a beagle dog.

2. Which state has launched a web portal named ‘CM Da Haisi’ (Inform to CM)?

A. Gujarat

B. Assam

C. Manipur

D. Odisha

Answer & Explanation

Answer: C. Manipur

  • Manipur Chief Minister N. Biren Singh recently launched a web portal named ‘CM Da Haisi’ (Inform to CM). It seeks to receive complaints and grievances from the general public. The complainants can also check the status of their complaints. The Public Grievances Redressal and Anti–Corruption Cell at CM Secretariat will also use the portal to collaborate with the concerned departments.

3. ‘Astana’ is the new Capital of which country?

A. Turkmenistan

B. Kazakhstan

C. Afghanistan

D. Uzbekistan

Answer & Explanation

Answer: B. Kazakhstan

  • Kazakhstan’s President Kassym Jomart Tokayev has signed a law limiting presidential terms and reverting to the old name of the country’s capital to Astana. The bill extends presidential mandates to a seven–year term, from five. It also bars any president from running for a second term in office. The bill also reinstated the capital’s name to Astana, whose name was changed to Nur–Sultan in 2019, in honour of outgoing President Nursultan Nazarbayev.

4. India, the UAE and France held their first trilateral Foreign Ministers’ meeting in which city?

A. New Delhi

B. Dubai

C. New York

D. Paris

Answer & Explanation

Answer: C. New York

  • India, the UAE and France held their first trilateral Foreign Ministers’ meeting in New York on the sidelines of a UN General Assembly (UNGA) session. The Ministers discussed contemporary ways of doing diplomacy with a focus on active exchange of ideas between strategic partners and UNSC members. India’s External Affairs Minister S Jaishankar also met UN General Assembly President and had bilateral meetings with his counterparts from across the world.

5. Which Indian city is the host of ‘Global Fintech Conference’ in 2022?

A. New Delhi

B. Ahmedabad

C. Mumbai

D. Bengaluru

Answer & Explanation

Answer: C. Mumbai

  • Global Fintech Fest is being organized by the National Payments Corporation of India (NPCI), the Payments Council of India (PCI) and the Fintech Convergence Council (FCC). It was attended by Union Finance Minister Nirmala Sitharaman and RBI Governor Shaktikanta Das. The finance minister called upon fintech industry to take advantage of opportunities in green finance for building a sustainable financial environment.

6. Where was the ‘Thai Trade Expo’ held in India in 2022?

A. Mumbai

B. Hyderabad

C. Mysuru

D. Varanasi

Answer & Explanation

Answer: B. Hyderabad

  • The Thai trade centre in Chennai launched its first trade expo in Hyderabad, with the aim to build stronger ties between Telangana and Thailand. The trade expo will focus on building business relations between Thai companies and Hyderabad business community. An MoU that was earlier signed between the Government of Telangana and the Ministry of Commerce, Thailand to increase bi–lateral trade.

7. Bhitarkanika National Park, which was seen in the news, is located in which state?

A. West Bengal

B. Odisha

C. Bihar

D. Andhra Pradesh

Answer & Explanation

Answer: B. Odisha

  • Bhitarkanika National Park is located in the state of Orissa. It houses several rare and endangered varieties of wildlife species. A record 3,700 saltwater crocodiles were born in Bhitarkanika National Park recently from 122 nests. As per reports, last year, around 2,500 crocodiles were born from 84 nests.

8. Which country is the host of the multilateral command Exercise Vostok – 2022?

A. China

B. Russia

C. USA

D. Australia

Answer & Explanation

Answer: B. Russia

  • A multilateral strategic and command Exercise Vostok – 2022 has begun in Russia. The exercise is aimed at coordination among other participating military contingents and observers. The Indian Army contingent comprising of troops from 7/8 Gorkha Rifles undertakes joint drills including joint field training exercises, combat discussions, and firepower exercises.

9. Dharamshala, where the Tibetan Democracy Day is celebrated, is located in which Indian state/UT?

A. Arunachal Pradesh

B. Himachal Pradesh

C. Sikkim

D. Manipur

Answer & Explanation

Answer: B. Himachal Pradesh

  • Tibetan Democracy Day is celebrated on September 2, to mark the inception of the Tibetan government–in–exile in Dharamshala. The Central Tibetan Administration (CTA), Tibetan government–in–exile in Dharamshala, governs over 1 lakh refugees across the world. It is the home of the Dalai Lama and all the Tibetans in exile. This year, the 62nd anniversary of Tibetan Democracy Day was celebrated.

10. What is the name of the Hydrogen that is produced from a carbon–free nuclear power?

A. Green Hydrogen

B. White Hydrogen

C. Pink Hydrogen

D. Orange Hydrogen

Answer & Explanation

Answer: C. Pink Hydrogen

  • The Carbon–free hydrogen produced from a carbon–free nuclear power is referred as the Pink Hydrogen. Pink hydrogen can also be manufactured via electrolysis, where the electricity supplied by nuclear power plants. To manufacture green hydrogen, where electrolyzers are supplied by and electricity is supplied by a wind or solar farm.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!