Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

21st June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

21st June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 21st June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ஸ்கைடிராக்ஸ் உலக வானூர்தி நிலைய விருதுகளில், ‘இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிறந்த பிராந்திய வானூர்தி நிலையம்’ என அறிவிக்கப்பட்ட இந்திய வானூர்தி நிலையம் எது?

அ. சென்னை சர்வதேச வானூர்தி நிலையம்

ஆ. தில்லி சர்வதேச வானூர்தி நிலையம்

இ. பெங்களூரு சர்வதேச வானூர்தி நிலையம் 

ஈ. கொச்சி சர்வதேச வானூர்தி நிலையம்

  • ஸ்கைடிராக்ஸ் உலக வானூர்தி நிலைய விருதுகளில், ‘இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிறந்த பிராந்திய வானூர்தி நிலையம்’ என பெங்களூருவில் அமைந்துள்ள கெம்பேகௌடா சர்வதேச வானூர்தி நிலையம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. வருகை, இடமாற்றம், ஷாப்பிங், பாதுகாப்பு, குடியேற்றம் மற்றும் புறப்படும் வாயில்களில் உள்ள ஏற்பாடுகள் வரையிலான அனுபவம் குறித்து உலகளவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் வாடிக்கையாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது. முன்னதாக விங்ஸ் இந்தியா விருதுகளில் பெங்களூரு வானூர்தி நிலையம் சிறந்த வானூர்தி நிலையம் விருதை வென்றிருந்தது.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஷிண்டே சாம்பாஜி சிவாஜி, உஜ்ஜல் புயான், அம்ஜத் அஹ்தேஷாம் சயீத் ஆகியோருடன் தொடர்புடையது எது?

அ. அறிவியலாளர்கள்

ஆ. நீதியரசர்கள் 

இ. அரசியல்வாதிகள்

ஈ. அதிகாரத்துவவாதிகள்

  • சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின்படி, 5 உயர்நீதிமன்றங்களில் புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க அரசு அனுமதியளித்துள்ளது. உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் மற்றும் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முறையே நீதிபதி விபின் சங்கி மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர்.
  • நீதிபதி அம்ஜத் அஹ்தேஷாம் சயீத் மற்றும் நீதிபதி ஷிண்டே சாம்பாஜி சிவாஜி ஆகியோர் முறையே ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றம் மற்றும் இராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளனர். தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி ரஷ்மின் எம் சாயா ஆகியோர் முறையே தில்லி மற்றும் கௌகாத்தி உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டனர்.

3. கல்வியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான UNESCOஇன் அங்கீகாரத்தைப்பெற்ற நிறுவனம் எது?

அ. மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனம் 

ஆ. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்

இ. பல்கலைக்கழக மானியக் குழு

ஈ. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்

  • 2021ஆம் ஆண்டிற்கான கல்வியில் ICT (தகவல் & தொடர்பு தொழில்நுட்பம்) பயன்பாட்டிற்காக UNESCOஇன் கிங் ஹமத் பின் இசா அல்-கலிபா பரிசு NCERT-இன் ஒரு பிரிவான மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனம் பெற்றுள்ளது. COVID தொற்றுகாலத்தின்போது, ‘PM eVidya’ திட்டத்தின்கீழ் ICT-ஐ அது பயன்படுத்தியது. டிஜிட்டல், ஆன்லைன், ஆன்-ஏர் கல்வி தொடர்பான அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைக்க 2020 மேயில், ‘ஆத்மநிர்பார் பாரத் அபியான்’ திட்டத்தின் ஒருபகுதியாக ‘PM eVIDYA’ திட்டம் தொடங்கப்பட்டது.

4. வெளிநாட்டவர் குறித்த தரவு வங்கியை விரிவுபடுத்துவதற்காக, ‘புலம்பெயர்வு கணக்கெடுப்பு’ நடத்துவதாக அறிவித்துள்ள மாநிலம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. கேரளா 

இ. பஞ்சாப்

ஈ. குஜராத்

  • கேரள ‘புலம்பெயர்தல் கணக்கெடுப்பின்’மூலம் கேரளத்திலிருந்த புலம்பெயர்ந்த மலையாளிகளின் தரவு வங்கி விரிவுபடுத்தப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். இந்தக்கணக்கெடுப்புக்காக ஒரு, ‘பிரவாசி தரவுத்தளம்’ தயாரிக்கப்படும் என அவர் அறிவித்தார்.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஆபரேஷன் சங்கல்ப்’ என்பதுடன் தொடர்புடைய ஆயுதப்படை எது?

அ. இந்திய இராணுவம்

ஆ. இந்திய கடற்படை 

இ. இந்திய வான்படை

ஈ. இந்திய கடலோர காவல்படை

  • இந்திய கடற்படையின் மறைந்திருந்து தாக்கும் போர்க்கப்பலான INS தல்வார், இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதற்காக வளைகுடாவில் பணியாற்றி வருகிறது. அது தனது 3ஆமாண்டு பணிநிறைவை இவ்வாண்டு நினைவுகூர்ந்தது. ‘ஆபரேஷன் சங்கல்ப்’ என்ற நடவடிக்கைக்காக அது பயன்படுத்தப்படுகிறது. 2019 ஜூனில் ஓமன் வளைகுடாவில் வணிகக்கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததை அடுத்து, இந்திய கடற்படையானது வளைகுடா பிராந்தியத்தில் ‘Op SANKALP’ என பெயரிடப்பட்ட கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது.

6. 2022 – ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியாவின் நிலை என்ன?

அ. முதலில்

ஆ. இரண்டாவது

இ. மூன்றாவது 

ஈ. மேற்கண்ட எதுவும் இல்லை

  • ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் 8 அணிகள் பங்கேற்ற போட்டியில் இந்தியா இரண்டாவது முறையாக ஜப்பானை வீழ்த்தி வெண்கலம் வென்றது. இறுதிப்போட்டியில் தென் கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றது. தென் கொரியா ஐந்தாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் மும்முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளன.

7. ‘ஆபரேஷன் மகிளா சுரக்ஷா’ என்பது எதன் முன்னெடுப்பாகும்?

அ. தேசிய பெண்கள் ஆணையம்

ஆ. இரயில்வே பாதுகாப்புப் படை 

இ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஈ. NITI ஆயோக்

  • இரயில்வே பாதுகாப்புப் படை (RPF) ஒரு நாடு தழுவிய இயக்கமாக, ‘ஆபரேஷன் மகிளா சுரக்ஷா’வை மே.3 முதல் மே.31, 2022 வரை தொடங்கியது. இதன்போது, RPF, பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் அங்கீகாரம் இல்லாமல் பயணம் மேற்கொண்ட 7,000-க்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்தது. ஆட்கடத்தலுக்கு ஆளான 150 பெண்களை RPF மீட்டுள்ளது. பெண் பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்க மற்றொரு நாடு தழுவிய முயற்சியான ‘மேரி சஹேலி’யும் செயல்பட்டு வருகிறது.

8. சிங்கப்பூரில் நடக்கும் உலக நகரங்களின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட முதலமைச்சர் யார்?

அ. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

ஆ. பினராயி விஜயன்

இ. அரவிந்த் கெஜ்ரிவால் 

ஈ. அசோக் கெலாட்

  • சிங்கப்பூரில் நடைபெறும் உலக நகரங்கள் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்கு தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் ‘தில்லி மாதிரி’யை வழங்கவும், நகர்ப்புற தீர்வுகள் குறித்து மற்ற தலைவர்களுடன் விவாதிக்கவும் செய்வார். சிங்கப்பூரின் வாழக்கூடிய நகரங்களுக்கான மையம் மற்றும் நகர்ப்புற மறுவடிவமைப்பு ஆணையம் ஆகியவை கூட்டாக இதனை ஏற்பாடு செய்துள்ளன.

9. லோகார்னோ திரைப்பட விழாவில் ‘லோகார்னோ கிட்ஸ் அவார்டு லா மொபிலியார்’ விருதுக்குத் தெரிவு செய்யப்பட்ட இந்திய திரைப்பட இயக்குநர் யார்?

அ. கீதாஞ்சலி இராவ் 

ஆ. லோகேஷ் கனகராஜ்

இ. ஸ்ரீராம் இராகவன்

ஈ. K S இரவிக்குமார்

  • லோகார்னோ திரைப்பட விழாவின் 75ஆவது பதிப்பின்போது இந்திய திரைப்பட இயக்குநர் கீதாஞ்சலி இராவுக்கு விருது வழங்கப்படவுள்ளது. அவர், லோகார்னோ கிட்ஸ் விருது லா மொபிலியாரேவைப் பெறுவார். இது இளைய பார்வையாளர்களுக்கு நோக்கி திரைக்கலையின் நேசத்தை வெளிப்படுத்தும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சுவிச்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.

10. 2023 முதல் யூரோ நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் 20ஆவது ஐரோப்பிய நாடு எது?

அ. மொனாக்கோ

ஆ. மால்டா

இ. குரோஷியா 

ஈ. லக்சம்பர்க்

  • குரோஷியா ஐரோப்பிய ஆணையத்தில் சேருவதற்கான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த பின்னர் 2023ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து யூரோ நாணயத்தை ஏற்றுக்கொள்ளவுள்ளது. இந்த நடவடிக்கையானது யூரோ நாணயத்தைப் பயன்படுத்தும் 20ஆவது ஐரோப்பிய நாடாக குரோஷியாவை உருவாக்கும். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஓர் அறிக்கையில், குரோஷியா யூரோ பொது நாணயத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஒருபடி எடுத்துள்ளது எனக் கூறினார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

 

1. காமன்வெல்த் ஹாக்கி: மன்பிரீத் தலைமையில் இந்திய அணி

பிர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய ஹாக்கி அணி மன்பிரீத் சிங் தலைமையில் 18 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், சீனாவில் நடைபெறுவதாக இருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இடையேயான கால இடைவெளி குறைவாக இருந்ததால் பிரதான இந்திய அணியை ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கும், 2ஆம் நிலை அணியை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கும் அனுப்புவதென ஹாக்கி இந்தியா முடிவு செய்திருந்தது.

ஏனெனில், ஆசிய விளையாட்டுப் போட்டியானது 2024 பாரீஸ் ஒலிம்பிக்கிற்கான தகுதிப் போட்டியாக இருந்தது. இந்நிலையில், COVID சூழல்காரணமாக ஆசிய விளையாட்டுப்போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், தற்போது பிரதான இந்திய அணியையே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்ப ஹாக்கி இந்தியா முடிவு செய்துள்ளது.

காமன்வெல்த் போட்டிகள் ஜூலை 28-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஹாக்கி விளையாட்டில் இந்திய அணி குரூப் ‘பி’-யில் பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பிரிவில் இங்கிலாந்து, கனடா, வேல்ஸ், கானா அணிகள் உள்ளன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் கானாவை ஜூலை.31-ஆம் தேதி எதிர்கொள்கிறது.

மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியிருந்தது. அதன் பிறகு எஃப்ஐஹெச் புரோ லீக் போட்டியின் ஆட்டங்களுக்கு அமித் ரோஹிதாஸ் அணியின் கேப்டனாகச் செயல்பட்டிருந்தார். தற்போது காமன்வெல்த் போட்டிகளுக்காக மன்பிரீத் மீண்டும் அணித் தலைவராக்கப்பட்டுள்ளார்.

2. 21-06-2022: உலக யோகா நாள்

கருப்பொருள்: “Yoga for Humanity”.

3. கடலோர காவல் படையில் கிழக்குப் பிராந்தியத்தில் இணைந்த அதிநவீன புதிய ஹெலிகாப்டர்

இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்தியத்தில் மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் ரோந்துப் பணியில் இணைக்கப்பட்டது.

இந்தியக் கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்தியப் பிரிவு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரி முதல் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணாபட்டனம் வரை கடலோர பகுதி இப்பிராந்தியத்தின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. ரோந்துக் கப்பல்கள், இடைமறிக்கும் படகுகள், டோர்னியர் ரோந்து விமானங்கள், நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் ஹோவர்கிராப்ட், சேடக் ஹெலிகாப்டர்கள் ரோந்து வாகனங்கள் கண்காணிப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

அதிநவீன வசதிகள் கொண்ட ஹெலிகாப்டர்:

இதில் தற்போது மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் இணைக்கப்பட்டது. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள கடலோர காவல்படை விமானதளத்தில் நடைபெற்ற நிகழ்வில் இப்புதிய ஹெலிகாப்டர் இணைக்கப்பட்டது. இப்புதிய ஹெலிகாப்டர் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் லிமிடெட் மூலம் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இப்புதிய ஹெலிகாப்டர்மூலம் இந்திய பொருளாதாரக் கடல் எல்லைக்குள் பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, கடத்தல்களைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளில் கூடுதல் கவனம் செலுத்திட இயலும்.

1. Which Indian airport was named the ‘best regional airport in India and South Asia’ in Skytrax World Airport awards?

A. Chennai International Airport

B. Delhi International Airport

C. Bengaluru International Airport 

D. Cochin International Airport

  • The Kempegowda International Airport in Bengaluru was named the best regional airport in India and South Asia title in the 2022 Skytrax World Airport awards.
  • The award is based on the feedback from the customers in a globally conducted survey about experience from check– in to arrivals, transfers, shopping, security, immigration and arrangements in the departure’s gates. The Bengaluru airport had also won the Best Airport and Aviation Innovation Award at Wings India Awards earlier.

2. Shinde Sambhaji Shiwaji, Ujjal Bhuyan, Amjad Ahtesham Sayed, who were seen in the news recently, are associated with which profession?

A. Scientists

B. Judges 

C. Politicians

D. Bureaucrats

  • The Government has cleared the appointment of new chief justices in five high courts, as per the Law and Justice Ministry. Justice Vipin Sanghi and Justice Ujjal Bhuyan will be appointed as the Chief Justice of the Uttarakhand High Court and Telangana High Court. Justice Amjad Ahtesham Sayed and Justice Shinde Sambhaji Shiwaji will take over as the Chief Justice of Himachal Pradesh High Court and Rajasthan High Court. Chief Justice Satish Chandra Sharma and Justice Rashmin M Chhaya were appointed as the Chief Justice of the Delhi and Guwahati High Courts respectively.

3. Which institution has won UNESCO’s recognition for use of Information and Communication Technology in Education?

A. Central Institute of Educational Technology 

B. Central Board of Secondary Education

C. University Grants Commission

D. All India Council for Technical Education

  • The Central Institute of Educational Technology (CIET), a unit of the NCERT has been awarded with the UNESCO’s King Hamad bin Isa Al– Khalifa Prize for the use of ICT (Information And Communication Technology) in Education for the year 2021. The institution has used ICT under the ‘PM eVidya’ scheme during the Covid pandemic.
  • The PM eVIDYA programme was launched as part of the ‘Atmanirbhar Bharat Abhiyaan’ in May 2020 to unify all efforts related to digital, online, on– air education Each prize– winner receives USD 25,000, a medal and a diploma.

4. Which state has announced to conduct a ‘Migration Survey’ to expand the data bank of expatriates?

A. Maharashtra

B. Kerala 

C. Punjab

D. Gujarat

  • Kerala Chief Minister Pinarayi Vijayan announced that the data bank of Expatriate Malayalees will be expanded by conducting the Kerala Migration Survey. A ‘Pravasi data portal’ will be prepared for the survey while the state will conduct an extensive global registration campaign.

5. ‘Operation Sankalp’, which was seen in the news, is associated with which armed force?

A. Indian Army

B. Indian Navy 

C. Indian Air Force

D. Indian Coast Guard

  • Indian Navy’s stealth Frigate, INS Talwar is deployed for Operation Sankalp commemorating the 3rd continuous year of Indian Navy’s presence in the Gulf for protection of India’s Maritime Interests. After attacks on merchant ships in the Gulf of Oman in June 2019, and the deteriorating security situation in the Gulf region, Indian Navy had commenced Maritime Security Operations, code named ‘Op SANKALP’, in the Gulf Region to ensure safe passage of Indian Flag Vessels transiting through the Strait of Hormuz.

6. What is the position of India in the Asia Cup hockey tournament 2022?

A. First

B. Second

C. Third 

D. None of the above

  • India beat Japan for the second time in the eight– team tournament to win bronze in the Asia Cup hockey in Jakarta. South Korea beat Malaysia 2– 1 in the final match to clinch the gold medal. South Korea won the Asia Cup for the fifth time, the most in the list. India and Pakistan have won the Asia cup title thrice.

7. ‘Operation Mahila Suraksha’ is an initiative of which institution?

A. National Commission for Women

B. Railway Protection Force 

C. Ministry of Women and Child Development

D. NITI Aayog

  • Railway Protection Force (RPF) launched a pan India drive “Operation Mahila Suraksha” was launched from May 3 to May 31, 2022. During this drive, RPF has arrested more than 7,000 persons who were travelling in the coaches reserved for women without being authorised. RPF also rescued 150 women from becoming victims of human trafficking. Another pan India initiative “Meri Saheli” is also operational to provide safety and security to lady passengers.

8. Which Chief Minister from India has been invited to attend the World Cities Summit in Singapore?

A. Muthuvel Karunanidhi Stalin

B. Pinarayi Vijayan

C. Arvind Kejriwal 

D. Ashok Gehlot

  • Delhi Chief Minister Arvind Kejriwal has been invited to attend the World Cities Summit (WCS) in Singapore to present the ‘Delhi Model’ and to discuss urban solutions with other leaders. It is jointly organised by Singapore’s Centre for Liveable Cities and the Urban Redevelopment Authority.

9. Which Indian film– maker has been selected for the ‘Locarno Kids Award la Mobiliare’ at Locarno Film Festival?

A. Gitanjali Rao

B. Lokesh Kanagaraj

C. Sriram Raghavan

D. K S Ravikumar

  • Indian Film– maker Gitanjali Rao is set to be honoured with an award during the 75th edition of the Locarno Film Festival. The filmmaker will receive the Locarno Kids Award la Mobiliare, the award dedicated to personalities for conveying the love of cinema to younger viewers. The award will be presented at the film gala, held every year in Locarno, Switzerland.

10. Which is the 20th European country to adopt the euro currency from 2023?

A. Monaco

B. Malta

C. Croatia 

D. Luxembourg

  • Croatia is set to adopt the euro currency from the start of 2023 after meeting all the criteria to join the European Commission. This move will make Croatia the 20th European country to use the single currency. European Commission President Ursula von der Leyen said in a statement that Croatia has made a step towards adopting the Euro common currency.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!