Tnpsc

22nd April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

22nd April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 22nd April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

22nd April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. அத்தியாவசிய சேவைகளில் பணியாற்ற மறுப்பது எச்சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது?

அ) அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டம் (ESMA)

ஆ) பேரிடர் மேலாண்மை சட்டம்

இ) தொற்று நோய்கள் சட்டம்

ஈ) கொள்ளை நோய் நிலைகள் சட்டம்

  • சில அத்தியாவசிய சேவைகளையும் சமூகத்தின் இயல்பு நிலையையும் பராமரிப்பதற்காக, கடந்த 1968’இல் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டமானது (ESMA) இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் அதன் சாசனத்தில் அத்தியாவசிய சேவைகளின் பட்டியலை கொண்டுள்ளது. COVID-19 பாதிப்புகள் விரைவாக அதிகரித்ததை அடுத்து, சத்தீஸ்கர் மாநில அரசு அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
  • அத்தியாவசிய சேவைகளில் பணியாற்ற மறுப்பது தடைசெய்யப்பட்டுள் -ளது. இதில் சுகாதார ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், நீர் மற்றும் மின்சாரம் விநியோகிக்கும் சேவைகளில் பணியாற்றும் பனியாளர்கள் உள்ளனர்.

2. “IP குரு” என்ற வல்லுநர் குழுவை தொடக்கிய நிறுவனம் எது?

அ) மின்னணு & தகவல் தொடர்பு அமைச்சகம்

ஆ) NITI ஆயோக்

இ) NIXI

ஈ) NASSCOM

  • இந்தியாவின் தேசிய இணைய பரிமாற்றகம் (NIXI), இந்தியாவில் IPv6 நெறிமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சில புதிய முயற்சிகளை அறிவித்தது. கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில், 2020 மார்ச் மாதத்துக்குள் அனைத்து அரசாங்க நிறுவனங்களையும் IPv6’க்கு மாற்றுமாறு தொலை தொடர்புத்துறை ஆணையிட்டது.
  • IPv6 முறைகளுக்கு மாறுவதை ஆதரிப்பதற்காக ‘IP குரு’ என்ற நிபுணர் குழுவை NIXI அறிமுகப்படுத்தியது. NIXI, IPv6’க்கான கல்வி தளத்தையும் உருவாக்குகிறது. அது, NIXI அகாதமி மற்றும் ஒரு NISI IP-Index என அழைக்கப்படுகிறது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பெனின் வெண்கலங்கள் காணப்பட்ட நாடு எது?

அ) தென்னாப்பிரிக்கா

ஆ) நைஜீரியா

இ) கிரேக்கம்

ஈ) எகிப்து

  • பெனின் வெண்கலங்கள் என்பவை பெனின் இராச்சியத்தின் அரச அரண்மனையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலோக தகடுகள் மற்றும் சிற்பங்களின் ஒரு தொகுப்பாகும். பெனின் நகரம், நவீன தெற்கு நைஜீரியாவில் அமைந்துள்ளது. வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத் -துவம்வாய்ந்த படைப்புகளை உருவாக்கிய திறமையான கைவினை -ஞர்களுக்கு இது புகழ்பெற்றதாகும்.
  • 1897ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் வீரர்கள் பெனின் நகரத்தை சூறையாடி, உலோக சிற்பங்களின் தொகுப்பைத்திருடினர். அண்மையில், அந்த உலோக சிற்பங்கள் அனைத்தையும் இங்கிலாந்து அதன் தற்போதைய ஐரோப்பிய சுங்க அதிகாரிகளால் மூன்று ஆண்டுகளுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டது.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற INS நிரீக்ஷக், கீழ்காணும் எந்த வகை கப்பலின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது?

அ) நீர்மூழ்கிக்கப்பல்

ஆ) நீர்மூழ்கு ஆதரவு கலம்

இ) கடலோர ரோந்து கலம்

ஈ) அழித்தொழிப்பான்

  • காணாமல்போன மீனவர்களை தேடி மீட்பதற்காக இந்திய கடற்படை தனது சிறப்பு நீர்மூழ்கு ஆதரவு கலமான INS நிரீக்ஷக்கை மங்களூரு கடற்கரையில் நிறுத்தியுள்ளது.
  • அண்மையில், கேரளாவில் பதிவு செய்யப்பட்ட எந்திர மீன்பிடி படகில் சென்ற ஒன்பது மீனவர்கள் காணாமல்போயினர். இந்தப்பிரச்சனையின் காரணமாக, இந்திய கடற்படை சிறப்பு உபகரணங்கள் மற்றும் கடற்ப டை மூழ்காளர்களைப் பயன்படுத்தி ஆழ்கடல் மூழ்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

5. லாக்ஹீட் மார்டினுடன் இணைந்து இந்திய விமானப்படைக்கு முதலாவது லேசான குண்டு துளைக்காத வாகனங்களை வழங்கிய நிறுவனம் எது?

அ) BEL

ஆ) DRDO

இ) அசோக் லேலண்ட்

ஈ) TATA மோட்டார்ஸ்

  • ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட், முதல் லேசான குண்டு துளைக்காத வாகனங்களை இந்திய வான் படைக்கு வழங்கியுள்ளது. இந்த வாகனங்கள் அமெரிக்காவைச் சார்ந்த விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான லாக்ஹீட் மார்டினுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

6. சமீப செய்திகளில் இடம்பெற்ற, “MK-4482” என்றால் என்ன?

அ) ஏவுகணை துவக்கி

ஆ) வைரஸ் எதிர்ப்பு மருந்து

இ) நீர்மூழ்கி கப்பல்

ஈ) ஆளில்லா வான்வழி வாகனம்

  • ஓர் அண்மைய ஆய்வின்படி, ஒரு சோதனை வைரஸ் தடுப்பு மருந்தான MK-4482, SARS-CoV-2 நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட வெள்ளெலிகளின் நுரையீரலில் வைரஸின் அளவை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் அறிவியலாளர்கள் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் இந்த ஆய்வை வெளியிட்டனர்.
  • MK-4482, தற்போது மனிதர்களில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இது வாய்வழி மருந்தாக வழங்கப்படுகிறது. இத்தகவல்கள்மூலம் MK-4482 சிகிச்சையானது, கொரோனா வைரசால் அதிக ஆபத்து ஏற்படுவதைக் குறைக்கக்கூடும் என்று தெரிகிறது.

7. தேசிய அளவிலான பருவநிலை பாதிப்பு குறித்து விரிவான மதிப்பீட்டு அறிக்கையை வெளியிடுகிற துறை எது?

அ) சுற்றுச்சூழல் துறை

ஆ) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை

இ) அணுவாற்றல் துறை

ஈ) விண்வெளித் துறை

  • “தேசிய அளவிலான பருவநிலை பாதிப்பு குறித்து விரிவான மதிப்பீட்டு அறிக்கை” என்ற தலைப்பிலான அறிக்கையொன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் வெளியிடப்படவுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் & மாவட்டங்களின் காலநிலைமாற்ற பாதிப்பு குறித்த விரிவான தேசிய அளவிலான மதிப்பீட்டை இவ்வறிக்கை வழங்குகிறது.
  • அறிவியல் தொழில்நுட்பத் துறை, வளர்ச்சி & ஒத்துழைப்புக்கான சுவிஸ் முகமை ஆகியவற்றின் உதவியுடன் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டது.

8. சுற்றுச்சூழல் பாதிப்பு குற்றச்செயல்களுக்கு தண்டனை வழங்கு -வதற்காக ‘ஈகோசைட்’ மசோதாவை உருவாக்கியுள்ள நாடு எது?

அ) ஜெர்மனி

ஆ) பிரான்ஸ்

இ) நியூசிலாந்து

ஈ) பிரேஸில்

  • சுற்றுச்சூழல் பாதிப்புச் செயல்களைத் தண்டிக்க முற்படும் “சுற்றுச்சூழல் குற்றத்தை” அமல்படுத்தும் மசோதவை உருவாக்க பிரான்ஸின் தேசிய சட்டமன்றம் அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. ஆறொன்றை மாசுபடு -த்துதல்போன்ற தேசிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் மிகமோசமான நிகழ்வுகளுக்கு இந்த மசோதா பயன்படுத்தப்படும்.
  • சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் ஒரு குற்றம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தண்டனைக்குரியதாகும்.

9. மூளையின் அளவை அதிகரிக்கவும் குறைக்கவும் திறன்கொண்ட முதல் உயிரினம் எது?

அ) இந்திய குதிக்கும் எறும்பு

ஆ) சிங்கவால் குரங்கு

இ) இந்திய கானமயில்

ஈ) ஆலிவ் ரிட்லி ஆமை

  • இந்திய குதிக்கும் எறும்புகள் அதன் மூளையை கிட்டத்தட்ட 20 சதவீத அளவுக்கு சுருக்கி அதன் உடலை இனப்பெருக்கம் செய்ய தயார் செய்கிற -து என அண்மையில் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வின்படி, எறும்பு அதன் மூளையின் அளவை அதற்கடுத்த வாரங்களி -ல் மீண்டும் அதிகரிக்கக்கூடும்.
  • மூளையின் அளவை அதிகரிக்கும் மற்றும் குறைக்கும் திறன்கொண்ட முதல் பூச்சியினம் இதுவாகும். தேனீ உள்ளிட்ட பிற பூச்சிகள் அவற்றின் மூளையின் அளவை அதிகரிக்கும் திறன் கொண்டதாகும்.

10. உலகின் முதல் மலிவான மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய நலவாழ்வு தயாரிப்பை, ‘டியூரோகீ சீரிஸ்’ என்ற பெயரில் உருவாக்கி உள்ள நிறுவனம் எது?

அ) IISc, பெங்களூர்

ஆ) IIT ஹைதராபாத்

இ) IIT மெட்ராஸ்

ஈ) NIT வாரங்கல்

  • மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, உலகின் முதல் மலிவான மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய நலவாழ்வு தயாரிப்
    -பை, ‘டியூரோகீ சீரிஸ்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தினார்.
  • IIT ஹைதராபாத் ஆராய்ச்சியாளர்களால் இந்த நலவாழ்வு தயாரிப்பு உரு -வாக்கப்பட்டுள்ளது. இப்புதுமையான மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் COVID-19 பரவலை எதிர்த்து உருவாக்கப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 70 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள்: 6 இந்திய நிறுவனங்கள் தயாரிப்பு

ஆண்டுதோறும் எழுபது கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை ஆறு இந்திய நிறுவனங்கள் தயாரிக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயிரிதொழில்நுட்பத் துறை செயலர் ரேணு ஸ்வருப் கூறியது:

தற்போது மூன்று கரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இவைதவிர பாரத்பயோடெக்கின் மூக்கு வழியாக செலுத்தும் தடுப்புமருந்து, ஸைடஸ் கடிலா, பயோஇ, ஜெனோவா நிறுவனங்களின் தடுப்பூசிகள் பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன. அவற்றை உருவாக்கும் ஆரம்பகட்டப்பணிகளின்போது அந்த நிறுவனங்களுக்கு மத்திய உயிரிதொழில்நுட்பத்துறை ஆலோசனைகள், தொ -ழில்நுட்பம் மற்றும் நிதியுதவி வழங்கியது. அந்தத் தடுப்பூசி மருந்துகளின் தற்போதைய பணிகளுக்கு சுமார் `400 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது.

அந்தத் தடுப்பூசி மருந்துகளை மாதந்தோறும் 1.5 கோடி முதல் 2 கோடி அளவில் தயாரிக்கும் விதமாக ஏற்கனவே உற்பத்தித்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அவற்றுக்கு ஒப்புதல் கிடைத்தவுடன், அந்தத் தடுப்பூசி மருந்துக -ளை பயன்பாட்டுக்கு கொண்டுவரமுடியும். ரஷியா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை ஆண்டுதோறும் 70 கோடி அளவில் 6 இந்திய நிறுவனங்கள் தயாரிக்கவுள்ளன என்று தெரிவித்தார்.

2. இந்தியாவில் தினசரி 7,500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி: மத்திய அரசு

இந்தியாவில் தினசரி 7,500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதில் 6,600 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மருத்துவப் பயன்பாட்டுக் -காக மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தில்லியில் மத்திய சுகாதாரத் துறை செயலர் இராஜேஷ் பூஷன், NITI ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) VK பால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சுகாதாரச் செயலர் இராஜேஷ் பூஷன் கூறியது:

தொழிற்துறைகளில் ஒன்பது துறைகளைத்தவிர இதர துறைகளின் பயன்பாட்டுக்காக ஆக்சிசன் விநியோகிக்க தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மருத்துவபயன்பாட்டுக்கு கூடுதலாக ஆக்சிசன் விநியோகிக்க முடியும். இந்தியாவில் தினசரி 7,500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கப்படுகிறது. இதில் 6,600 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மருத்துவப் பயன்பாட்டுக் -காக மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.

3. பிரான்ஸிலிருந்து இந்தியா வரும் மேலும் 4 ரபேல் போர் விமானங்கள்: விமானப்படைத் தளபதி பதெளரியா கொடியசைத்து அனுப்பி வைப்பு

பிரான்ஸ் நாட்டிலிருந்து ஐந்தாவது தவணையாக நான்கு ரபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பிரான்ஸின் மெரிக்னேக்-போர்டியாக்ஸ் விமானப்படைத்தளத்தில் நடந்த நிகழ்ச்சியில், அங்கு ஐந்து நாள் பயணமாக சென்றுள்ள இந்திய விமானப்படைத்தளபதி RKS பதெளரியா பங்கேற்று விமானங்களை கொடியசைத்து இந்தியா அனுப்பிவைத்தார்.

பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. `59,000 கோடியில் இந்த விமானங்க -ளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, இதுவரை 14 ரபேல் போர் விமானங்களை அந்த நிறுவனம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இப்போது மேலும் நான்கு விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன.

4. வேளாண் பொருள்கள் ஏற்றுமதி 16.88 சதவீதம் அதிகரிப்பு

கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை, இந்தியாவின் வேளாண் உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி 16.88% அதிகரித்துள்ளதாக, மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது: கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் `2.74 இலட்சம் கோடி மதிப்பிலான வேளாண் உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் `2.31 இலட்சம் கோடி மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதாவது, வேளாண் உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி 16.88% அதிகரித்துள்ளது.

இதேபோன்று, அதே காலகட்டத்தில் வேளாண் உற்பத்திப் பொருள்களின் இறக்குமதி 3 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு `1,37,014 கோடி மதிப்பிலான வேளாண் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் `1,41,034 கோடியாக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று பரவலால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்ட போதிலும், வேளாண் துறை வர்த்தகம் `93,097.76 கோடியிலிருந்து `1,32,579.69 கோடியாக அதிகரி -த்துள்ளது.

பல ஆண்டுகளாக அதிக அளவிலான வேளாண் உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்து, வர்த்தக உபரி நிலையை இந்தியா தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டு வருகிறது. கரோனா தொற்று பரவல் காலகட்டத்தில் கூட, உணவுப்பொருள்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பத -ற்காக, இந்தியா தொடர்ந்து உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்து வந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. பைங்குடில் வாயு வெளியேற்றத்தை 55% குறைக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் பைங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்
-தை 55% குறைக்க ஐரோப்ய யூனியன் நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வோன்டெர் லேயன் கூறியதாவது: வரும் 2050ஆம் ஆண்டுக்குள் காற்றிலிருந்து அகற்றப்படும் பைங்குடில் வாயுக்களின் அளவுக்கும் காற்றில் கலக்கப்படும் அந்த வகை வாயுக்களின் அளவுக்கும் இடையே வேறுபாடில்லாமல் செய்வதற்கான எங்களது வாக்குறுதி, தற்போது சட்டப்பூர்வமாகியுள்ளது.

இந்த இலக்கை எட்டுவதற்கு ஐரோப்பிய யூனியன் உறுப்புநாடுகளும் ஐரோப்பிய நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளன. முதற்கட்டமாக, வரும் 2030ஆம் ஆண்டுக்குள் காற்றில் பைங்குடில் வாயுக்களின் அளவை கடந்த 1990ஆம் ஆண்டில் இருந்ததைவிட 55 சதவீதம் குறைப்பதற்கும் உறுப்புநாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன என்றார் அவர்.

பூமி கடுங்குளிரில் உறைந்து போகாமல், அதில் பசுமைத் தாவரங்களும் பிற உயிரினங்களும் வாழ்வதற்கேற்ற வெப்பத்தை ஏற்படுத்தித் தரும் கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் வாயு ஆகியவை பைங்குடில் வாயுக்கள் என்றழைக்கப்படுகின்றன. இந்த வாயுக்களின் விகிதம், தொழிற்புரட்சி காரணமாக வளிமண்டலத்தில் அதிகரித்து வருகிற -து. இதன் காரணமாக புவியின் வெப்பம் அதிகரித்து, வளிமண்டலத்தின் சுழற்சிப் போக்கில் மாற்றம் ஏற்பட்டு வறட்சி, அனல்காற்று, காட்டுத்தீ, பனிப் பாறைகள் உருகி கடல்மட்டம் அதிகரித்தல், அதீத மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்து வருகின்றன.

‘பருவநிலை மாற்றம்’ என்றழைக்கப்படும் இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக சர்வதேச நாடுகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 2015ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டன. அதில், இந்தப் பிரச்சனைக்குக் காரணமான கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டிய அவசியத்தை உலக நாடுகள் ஒப்புக்கொண்டன. இதுதொடர்பான சர்வேதச முயற்சியின் ஒருபகுதியாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் சுமார் 40 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச பருவநிலை மாநாடு வரும் ஏப். 22 மற்றும் 23’இல் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக, ஐரோப்பிய யூனியன் நாடுகள் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.

6. ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு விருது:

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் அரியலூர் ஆலைக்கு இந்தியா உச்ச தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு விருதுகள்-2020 சார்பில் ‘தங்கரகம்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

7. பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு: கல்லூரிகளில் நடத்த UGC உத்தரவு

பல்கலைக்கழக மானியக்குழு (UGC) செயலர் ரஜ்னிஸ் ஜைன், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: மத்திய நாடாளுமன்ற நிலைக்குழுவின் 230ஆவது அறிக்கையில், பெண்கள் மற் -றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வழிகாட்டுதல்களை நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அவசியம் பின்பற்ற வேண்டும். பாலின சமத்துவம், பெண்கள் உடல்நலன், அதிகாரப்பகிர்வு, பாதுகாப்பு, தலைமைப்பண்பு உள்ளிட்ட அம்சங்களை பாடத்திட்டத்தில் கூடுதலாக இணைக்க வேண்டும்.

அதேபோல, பெண்களிடம் மரியாதையாகவும், கண்ணியத்துடனும் நடந்து கொள்வது குறித்து ‘பெண்கள் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் இணையவழி -யில் கருத்தரங்குகளை நடத்தவேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தயாரித்து UGC’க்கு அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

8. கரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை அதிகம் வீணாக்கும் மாநிலங்கள்: தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக RTI மூலம் அம்பலம்

தடுப்பூசியை மாநிலங்கள் அதிக அளவில் வீணாக்கி வருவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் தெரியவந்துள்ளது. இதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. உலக நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில்தான் மிகமோசமாக உள்ளது. நாள்தோறும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படுகிறது.

கரோனா பாதிப்பில் நான்காம் இடம்: இந்நிலையில் கரோனா பாதிப்பில் தமிழ்நாடு 4ஆவது இடத்தில் உள்ளது. பல மாநிலங்களில் கரோனா கால கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பதினைந்து நாட்கள் முழு ஊரடங்கும், தில்லியில் ஆறு நாட்களுக்கு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா அதிகம் உள்ள மாநிலங்களில் கரோனா வைரஸ் தடுப்பூசிகளும் அதிக அளவில் போடப்பட்டு வருகின்றன.

ஆனால் பல்வேறு மாநிலங்களில் கரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் மாநிலங்கள் அதிக அளவில் கரோனா தடுப்பூசிகளை வீணாக்கி வருவதாக RTIமூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக இவ்வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

சுமார் 12 கோடி தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்களில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் 44 லட்சம் டோஸ்கள் மாநிலங்களால் வீணாக்கப்பட் டுள்ளன. வீணாக்கப்பட்ட டோஸ்களில் தமிழ்நாடு 12.10 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.

ஹரியாணா 9.74 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், பஞ்சாப் 8.12 சதவீதத்துடன் 3ஆவது இடத்திலும், மணிப்பூர் 7.8 சதவீதத்துடன் 4ஆவது இடத்திலும், தெலங்கானா 7.5 சதவீதத்துடன் 5ஆம் இடத்திலும் உள்ளன. கடந்த 11ஆம் தேதியுடன் முடிவடைந்த காலத்தில் இவ்வளவு தடுப்பூசி டோஸ்கள் வீணாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கேரளா, மேற்கு வங்கம், ஹிமாச்சல பிரதேசம், மிசோரம், கோவா, டாமன் & டையூ, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகளில் தடுப்பூசிகள் குறைந்த அளவில் வீணாக்கப்பட்டுள்ளன. இதனிடையே தடுப்பூசி மருந்து உற்பத்திக்காக சீரம் நிறுவனத்துக்கு `3,000 கோடியும், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு `1,500 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

1. Refusal to work in essential services is prohibited under which act?

A) Essential Services Maintenance Act (ESMA)

B) Disaster Management Act

C) Epidemic Diseases Act

D) Pandemic Conditions Act

  • The Essential Services Maintenance Act (ESMA) was enacted in 1968, to maintain certain essential services and the normal life of the community. The Act includes a list of essential services in its charter. After the rapid increase in Covid–19 cases, the Chhattisgarh Government has invoked the Essential Services Maintenance Act (ESMA).
  • The refusal to work in essential services has been prohibited. It includes health workers, sanitation workers, workers in water and power supply services etc.

2. Which institution launched an expert panel called “IP Guru”?

A) MEITY

B) NITI Aayog

C) NIXI

D) NASSCOM

  • The National Internet Exchange of India (NIXI), announced some new initiatives to raise awareness of the IPv6 protocol in India. The Department of Telecom (DoT) had, in February last year, mandated all government organizations to transition to IPv6 by March 2020.
  • NIXI launched an expert panel called IP Guru to support transition to IPv6 systems. NIXI is also creating an education platform for IPv6, called NIXI Academy and a NISI IP–Index.

3. The Benin Bronzes, which was seen in the news recently, were found in which country?

A) South Africa

B) Nigeria

C) Greece

D) Egypt

  • The Benin Bronzes are a group of over a thousand metal plaques and sculptures located in the royal palace of the Kingdom of Benin. The Benin city is situated in modern–day southern Nigeria. It was famous for its skilled artisans that produced works of huge historic and cultural importance.
  • In 1897, the British soldiers plundered Benin City, stealing a set of metal sculptures. Recently, UK accepted that the objects will be supplied by their current European custodians, initially on loan for three years.

4. INS Nireekshak, which was making news recently, is classified under which type of vessel?

A) Submarine

B) Diving Support Vehicle

C) Offshore Patrol Vehicle

D) Destroyer

  • The Indian Navy deployed its specialised diving support, INS Nireekshak for the search and rescue of the missing fishermen, off the Mangalore coast. Recently, nine fishermen of a Kerala–registered mechanised fishing boat went missing.
  • On account of this issue, the Indian Navy is carrying out deep–sea diving operations using specialised equipment and naval divers.

5. Which company has delivered the first lot of light bulletproof vehicles to the Indian Air Force, in collaboration with Lockheed Martin?

A) BEL

B) DRDO

C) Ashok Leyland

D) TATA Motors

  • Ashok Leyland, which is a flagship firm of the Hinduja group, has delivered the first lot of light bulletproof vehicles to the Indian Air Force. These vehicles have been designed and developed in collaboration with Lockheed Martin, which is a US based aerospace and defence technology company.

6. What is “MK–4482”, which was seen in the news recently?

A) Missile Launcher

B) Antiviral Drug

C) Submarine

D) Unmanned Aerial Vehicle

  • As per a recent study, MK–4482, an experimental antiviral drug, is said to have decreased levels of virus in the lungs of hamsters treated for SARS–CoV–2 infection.
  • The scientists from the US National Institutes of Health published the study in the journal Nature Communications. MK–4482 is now in human clinical trials, and is delivered orally. These data suggest that MK–4482 treatment could mitigate high–risk exposures to the corona virus.

7. ‘Climate Vulnerability Assessment for Adaptation Planning in India’ Report is set to be released by which department?

A) Department of Environment

B) Department of Science and Technology

C) Department of Atomic Energy

D) Department of Space

  • A report titled “Climate Vulnerability Assessment for Adaptation Planning in India” is set to be released by the Department of Science and Technology (DST). The report gives a detailed national level assessment of climate change vulnerability of states and districts all over India. The compilation of data pertaining to the report was supported by the Swiss Agency for Development & Cooperation (SDC).

8. Which country has drafted ‘Ecocide’ bill to punish acts of environmental damage?

A) Germany

B) France

C) New Zealand

D) Brazil

  • The National Assembly of France has recently approved the creation of an “ecocide” offence, which seeks to punish acts of environmental damage. The bill will be applied to the most serious cases of environmental damage at national level, such as the pollution of a river. An offence of endangering the environment is punishable on the lines of endangering life.

9. Which is the first known species to be capable of both increasing and decreasing its brain size?

A) Indian Jumping Ant

B) Lion Tailed Macaque

C) Great Indian Bustard

D) Olive Ridley Turtle

  • Scientists have recently found that the Indian jumping ant can shrink its brain by nearly 20 percent to prepare its body for reproduction. As per the study, the ant can again increase its brain size over the following weeks. The Indian jumping ant is the first insect known to be capable of both increasing and decreasing its brain size.
  • There are other insects including the honey bee which can increase their brain size.

10. Which institution developed the world’s first affordable and long–lasting hygiene product named “DuroKea Series”?

A) IISc Bangalore

B) IIT Hyderabad

C) IIT Madras

D) NIT Warangal

  • Union Minister of Education Ramesh Pokhriyal ‘Nishank’ virtually launched world’s first affordable and long–lasting hygiene product in the name of “DuroKea Series”. The hygiene product has been launched by IIT Hyderabad researchers. This innovative and long–lasting technologies was developed to combat COVID–19 virus spreading.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!