TnpscTnpsc Current Affairs

22nd April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

22nd April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 22nd April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘Gaofen-3 03’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை ஏவிய நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) இஸ்ரேல்

இ) சீனா 

ஈ) ஐக்கிய அரபு அமீரகம்

  • ‘Gaofen-3 3’ என்ற புதிய புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை லாங் மார்ச்-4C ஏவுகலம்மூலம் சீனா வெற்றிகர -மாக விண்ணில் செலுத்தியது. இந்தச்செயற்கைக்கோள் அதன் தரை-கடல் ரேடார் செயற்கைக்கோள் தொகுப்பின் ஒருபகுதியாக மாறும்.
  • மேலும் நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாக்க உதவும் சிறந்த தெளிவுத்திறன் படங்களை இது பிடிக்கும். இந்தச் செயற்கைக்கோள் ‘Gaofen-3’ மற்றும் ‘Gaofen-3 02’ செயற்கைக்கோள்களுடன் இணைக்கப்பட்டு, தரை-கடல் ரேடார் செயற்கைக்கோள் குழுமத்தை உருவாக்கும்.

2. ‘Expanding Heat Resilience – விரிவு வெப்ப நெகிழ்வு’ அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) இந்திய வானிலை ஆய்வு மையம்

ஆ) உணவு மற்றும் உழவு அமைப்பு

இ) NITI ஆயோக்

ஈ) இயற்கை வளங்கள் பாதுகாப்பு கவுன்சில் 

  • ஒரு இலாபநோக்கற்ற அமைப்பான இயற்கை வளங்கள் பாதுகாப்பு கவுன்சில், ‘Expanding Heat Resilience’ என்ற அறிக்கையை எழுதியுள்ளது. இவ்வறிக்கையின்படி, வெப்ப அலைகள் வரலாறு காணாத மாநிலங்களான இமாச்சல பிரதேசம் மற்றும் கேரளாவில் தீவிர வெப்பநிலை பதிவாகி வருகிறது.
  • வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை கடந்த 2019-இல் 28-ஆக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு இது 19-ஆக இருந்தது.

3. சாலிட் பியூயல் டக்டட் ராம்ஜெட் பூஸ்டரை விமானத்தில் சோதனை செய்த அமைப்பு எது?

அ) HAL

ஆ) DRDO 🗹

இ) ISRO

ஈ) BEL

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (DRDO) ஒடிஸாவின் கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் சாலிட் பியூயல் டக்டட் ராம்ஜெட் பூஸ்டரை (SFDR) விமானத்தில் சோதனை செய்தது. SFDR-அடிப்படையிலான உந்துவிசையானது சூப்பர்சானிக் வேகத்தில், மிகநீண்ட தூரத்தில் வான்வழி இடர்களை இடைமறிக்க ஏவுகணைக்கு உதவுகிறது.

4. இந்தியாவிற்கு, ‘MH-60 ரோமியோ’ என்ற பல-பாத்திர உலங்கு வானூர்திகளை வழங்கும் நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) அமெரிக்கா 

இ) இஸ்ரேல்

ஈ) பிரான்ஸ்

  • ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்துடனான `15,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, இந்தியா, 24 MH-60 ரோமியோ பல பாத்திர ஹெலிகாப்டர்களை வாங்குகிறது. ‘MH-60 ரோமியோ’ ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கான பயிற்சியை இந்திய கடற்படையின் முதல் தொகுதி வான்படையினர் ஐக்கிய அமெரிக்காவில் முடித்துள்ளனர்.

5. ‘Corruption-Free App – 1064’ஐ அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?

அ) கர்நாடகா

ஆ) தெலுங்கானா

இ) உத்தரகண்ட் 

ஈ) ஜம்மு-காஷ்மீர்

  • உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ‘Corruption-Free App-1064’ஐ அறிமுகப்படுத்தினார். இந்தச் செயலியானது மாநிலத்தை ஊழலற்ற மாநிலமாக மாற்றுவதையும், மாநிலத்தில் நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தச் செயலி ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இருமொழிகளிலும் கிடைக்கும்.

6. பன்னாட்டு புக்கர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் ஹிந்தி நாவல் எது?

அ) டோம்ப் ஆஃப் சாண்ட் 

ஆ) சாம்ராட் அசோக்

இ) சீலேட்டி ஹியூ அப்னே கோ

ஈ) பாரிஜாதம்

  • எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீயின் ‘டோம்ப் ஆஃப் சாண்ட்’ என்ற நாவல் சர்வதேச புக்கர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் ஹிந்தி மொழி புனைகதை படைப்பாகும்.
  • டெய்சி இராக்வெல் என்பவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இந்நூல், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர் -ப்பாளருக்கிடையே பகிர்ந்துகொள்ளப்படும் மதிப்புமிக்க 50,000 பவுண்டுகள் இலக்கியப்பரிசுக்காக உலகெங்கும் உள்ள மற்ற ஐந்து தலைப்புகளுடன் போட்டியிடும்.

7. ஜதின் கோஸ்வாமி, சோனல் மான்சிங் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகியோர் கீழ்காணும் எந்த விருது / பெல்லோஷிப்பைப் பெற்றுள்ளனர்?

அ) சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப் 

ஆ) கிராமி விருதுகள்

இ) சாகித்ய அகாடமி

ஈ) பத்மஸ்ரீ

  • கடந்த 2018ஆம் ஆண்டிற்கான சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப் மற்றும் சங்கீத நாடக விருதுகளை, சிறந்த கலைஞர்களுக்கு இந்தியக்குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா வழங்கினார்.
  • சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப் 4 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது: தபேலா மேதை ஜாகிர் உசேன், நடன இயக்குநர் ஜதின் கோஸ்வாமி, நடனக்கலைஞர் சோனல் மான்சிங் மற்றும் நடன ஆசிரியர் திருவிடைமருதூர் குப்பையா கல்யாணசுந்தரம். மேலும் 40 பேருக்கு சங்கீத நாடக அகாடமி விருதுகள் மற்றும் லலித் கலா அகாடமி விருதுகளும் வழங்கப்பட்டன.

8. அண்மையில் கலப்பு இரட்டையர் மற்றும் பெண்கள் இரட்டையர் பட்டத்தை வென்ற தீபிகா பல்லிகல் சார்ந்த விளையாட்டு எது?

அ) டேபிள் டென்னிஸ்

ஆ) ஸ்குவாஷ் 

இ) பாட்மிண்டன்

ஈ) டென்னிஸ்

  • தீபிகா பல்லிகல், 2018 அக்டோபருக்குப் பிறகு தனது முதல் போட்டி நிகழ்வில் சௌரவ் கோஷலுடன் இணைந்தார். மேலும், இங்கிலாந்தின் அட்ரியன் வாலர் மற்றும் அலிசன் வாட்டர்ஸை வென்றதன்மூலம் கலப்பு இரட்டையர் பட்டத்தையும் அவர் வென்றார்.
  • மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் தீபிகா மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஜோடி, இங்கிலாந்தின் சாரா ஜேன் பெர்ரி மற்றும் வாட்டர்ஸ் ஜோடிக்கு எதிராக வென்றது. இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த ஆறு மாதங்களுக்குள் தீபிகா இச்சாதனையை நிகழ்த்தினார்.

9. 2022-இல் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கூட்டத்தை நடத்துகிற மாநிலம் எது?

அ) இராஜஸ்தான்

ஆ) அருணாச்சல பிரதேசம் 

இ) குஜராத்

ஈ) அஸ்ஸாம்

  • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் இருபதாவது கூட்டம் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பக்கே புலிகள் காப்பகத்தில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் தலைமையில் நடைபெற்றது. வரலாற்றில் முதன்முறையாக NTCA கூட்டம் தேசிய தலைநகரத்துக்கு வெளியே நடைபெற்றது.

10. ஒற்றை வனவிலங்குகளின் சட்டபூர்வ உரிமைகளை அங்கீகரித்த முதல் நாடு எது?

அ) தென்னாப்பிரிக்கா

ஆ) ஈக்வடார் 

இ) சிலி

ஈ) ஆஸ்திரேலியா

  • தென்னமெரிக்காவில் அமைந்துள்ள ஈக்வடார், ஒற்றை வனவிலங்குகளின் சட்டபூர்வ உரிமைகளை அங்கீகரித்த முதல் நாடாக வரலாறு படைத்துள்ளது. எஸ்ட்ரெல்லிட்டா என்ற பெயர்கொண்ட கம்பளி குரங்குக்கு இயற்கையின் அனைத்து உரிமைகளும் உள்ளதென அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வாடகைத்தாய்மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு 270 நாள்கள் விடுப்பு

வாடகைத்தாய்மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 270 நாள்களுக்கு விடுப்பு வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.

1. Which country launched the Earth observation satellite ‘Gaofen–3 03’?

A) Russia

B) Israel

C) China 

D) UAE

  • China successfully launched a new Earth observation satellite named ‘Gaofen–3 03’ by a Long March–4C rocket.
  • The satellite will become part of its land–sea radar satellite constellation and capture fine–resolution images to help the country safeguard its maritime interests. The satellite will be networked with the Gaofen–3 and Gaofen–3 02 satellites to form a land–sea radar satellite constellation.

2. Which institution released the ‘Expanding Heat Resilience’ report?

A) Indian Meteorological Department

B) Food and Agricultural Organization

C) NITI Aayog

D) Natural Resources Defense Council 🗹

  • Natural Resources Defense Council (NRDC), a non–profit has authored the ‘Expanding Heat Resilience’ report.
  • As per the report, extreme temperatures are being recorded in Himachal Pradesh and Kerala, the states with no history of heat–waves. The number of states affected by heat–waves was at 28 in 2019, up from 19 the year before.

3. Which organisation flight–tested the Solid Fuel Ducted Ramjet (SFDR) booster?

A) HAL

B) DRDO 

C) ISRO

D) BEL

  • The Defence Research and Development Organisation (DRDO) flight–tested the Solid Fuel Ducted Ramjet (SFDR) booster at the Integrated Test Range, Chandipur off the coast of Odisha. SFDR–based propulsion enables the missile to intercept aerial threats at very long range, even at supersonic speeds.

4. Which country supplies ‘MH–60 Romeo’ multi–role helicopters’ to India?

A) Russia

B) USA 

C) Israel

D) France

  • India is procuring 24 MH–60 Romeo Multi–role helicopters as part of an Rs 15,000–crore deal with the US Government.
  • The first batch of the aircrew of the Indian Navy has completed its training in the US to operate the MH–60 ‘Romeo’ multi–role helicopters.

5. Which state government launched the ‘Corruption–Free App– 1064’?

A) Karnataka

B) Telangana

C) Uttarakhand 

D) Jammu and Kashmir

  • Uttarakhand Chief Minister Pushkar Singh Dhami launched the ‘Corruption–Free Uttarakhand App–1064’. The application aims to make the state corruption–free and ensure that governance in the state is carried out in a transparent manner. The application will be available in both Hindi and English.

6. Which is the first Hindi novel to be shortlisted for the International Booker Prize?

A) Tomb of Sand 

B) Samraat Ashok

C) Chheelatey Hue Apne Ko

D) Parijat

  • Author Geetanjali Shree’s novel ‘Tomb of Sand’ became the first Hindi language work of fiction to be shortlisted for the International Booker Prize. The book, translated into English by Daisy Rockwell, will compete with five other titles from around the world for the prestigious 50,000–pound literary prize, which is shared between the author and translator.

7. Jatin Goswami, Sonal Mansingh and Kalyanasundaram are the recipients of which award/fellowship?

A) Sangeet Natak Akademi Fellowship 

B) Grammy Awards

C) Sahitya Akademi

D) Padma Shri

  • Vice President M Venkaiah Naidu conferred the Sangeet Natak Akademi Fellowship and Sangeet Natak Awards for the year 2018 on distinguished artists.
  • The Sangeet Natak Akademi Fellowship was given to four artistes: Tabla maestro Zakir Hussain, Dancer and choreographer Jatin Goswami, Dancer Sonal Mansingh and Dance teacher Thiruvidaimarudur Kuppiah Kalyanasundaram. 40 others were honoured with Sangeet Natak Akademi Awards and the Lalit Kala Akademi Awards were also presented.

8. Dipika Pallikal, who won the mixed doubles and women’s doubles title recently, plays which game?

A) Table Tennis

B) Squash 

C) Badminton

D) Tennis

  • Dipika Pallikal teamed up with Saurav Ghosal, in her first competitive event since October 2018 and clinched the mixed doubles title with win over England’s Adrian Waller and Alison Waters. Dipika and Joshna Chinappa won in the women’s doubles final, against England’s Sarah Jane Perry and Waters.
  • Dipika achieved this feat less than six months after giving birth to twins.

9. Which state is the host of the Meeting of National Tiger Conservation Authority (NTCA) in 2022?

A) Rajasthan

B) Arunachal Pradesh 

C) Gujarat

D) Assam

  • The 20th Meeting of National Tiger Conservation Authority (NTCA) was held in Pakke tiger reserve in Arunachal Pradesh under the chairmanship of Union Minister for Environment, Forest & Climate Change Shri Bhupender Yadav.
  • For the first time in history the NTCA meeting was held outside the national capital.

10. Which is the first country to recognise the legal rights of individual wild animals?

A) South Africa

B) Ecuador 

C) Chile

D) Australia

  • Ecuador, located in South America, has made history by becoming the first country to recognise the legal rights of individual wild animals.
  • The ruling by the top court in the country is believed to be the first time a court has applied the rights of nature to an animal, a woolly monkey named Estrellita.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!