Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

22nd August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

22nd August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 22nd August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

22nd August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. எந்தச் சட்டத்தின்கீழ், நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தின் நிகழ்வுக்குறிப்புகள் வெளியிடப்படுகின்றன?

அ. வங்கி ஒழுங்குமுறை சட்டம்

ஆ. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம்

இ. நிதிக்கொள்கை சட்டம்

ஈ. கொடுப்பனவு மற்றும் தீர்வு சட்டம்

விடை மற்றும் விளக்கம்

விடை:ஆ. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 

  • இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934இன் பிரிவு 45ZLஇன்படி, நிதிக்கொள்கைக்குழுவின் ஒவ்வொரு கூட்டத்திற்குப் பிறகு பதினான்காவது நாளில், ரிசர்வ் வங்கி, நிதிக்கொள்கை கூட்டத்தின் நிகழ்வுக்குறிப்புகளை வெளியிடுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட MPC கூட்டத்தின் நிகழ்வுக்குறிப்புகளின்படி, RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ், மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து ரெப்போ விகிதத்தை 5.40%ஆக 50 அடிப்படைப்புள்ளிகள் உயர்த்த முன்மொழிந்தார்.

2. குரங்கம்மை நோயைப் பரிசோதிப்பதற்காக இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட RT–PCR கருவியை உருவாக்கிய நிறுவனம் எது?

அ. பயோகான்

ஆ. பாரத் பயோடெக்

இ. டிரான்ஸாசியா பயோ–மெடிக்கல்ஸ்

ஈ. இந்திய சீரம் நிறுவனம்

விடை மற்றும் விளக்கம்

விடை:இ. டிரான்ஸாசியா பயோ–மெடிக்கல்ஸ்

  • குரங்கு அம்மை நோயைப் பரிசோதிப்பதற்கான இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட RT–PCR கருவியை டிரான்ஸாசியா பயோ–மெடிக்கல்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்தக் கருவியை நடுவண் அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜை குமார் சூட் சமீபத்தில் வெளியிட்டார். WHOஇன் கூற்றுப்படி, குரங்கு அம்மை என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப்பரவும் ஒரு தீநுண்ம (வைரசு) நோயாகும். இது பெரியம்மைபோன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது.

3. “பொதுத்துறை வங்கிகளின் தனியார்மயமாக்கல்: ஒரு மாற்றுக்கண்ணோட்டம்” என்ற தலைப்பிலான கட்டுரை ஒன்றை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. இந்திய ரிசர்வ் வங்கி

இ. பாரத வங்கி

ஈ. பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில்

விடை மற்றும் விளக்கம்

விடை:ஆ. இந்திய ரிசர்வ் வங்கி 

  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது 2022 ஆகஸ்ட் இதழில், “பொதுத்துறை வங்கிகளின் தனியார்மயமாக்கல்: ஒரு மாற்றுக்கண்ணோட்டம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அந்தக் கட்டுரையின் ஆசிரியர்களின் கூற்றுப்படி, “Big–bang” அணுகுமுறைக்குப் பதிலாக, அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட படிப்படியான அணுகுமுறை சிறந்த விளைவுகளை ஏற்படுத்தும்.

4. ‘பிட்ச் பிளாக்’ என்ற விமானப் போர்ப்பயிற்சியை நடத்தும் நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. ஆஸ்திரேலியா

இ. பிரான்ஸ்

ஈ. ஜப்பான்

விடை மற்றும் விளக்கம்

விடை:ஆ. ஆஸ்திரேலியா

  • இந்திய வான்படை, அதன் நான்கு சுகோய்–30 MKI போர் விமானங்கள் மற்றும் இரண்டு C–17 விமானங்களுடன் ‘பிட்ச் பிளாக்’ பயிற்சியில் இணைந்தது. இது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 17 நாடுகள் பங்கேற்கும் விமானப்போர் பயிற்சியாகும்; இதனை இராயல் ஆஸ்திரேலிய வான்படை (RAAF) நடத்துகிறது. ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட விமானங்களும், 2,500 விமானப்படை வீரர்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.

5. ஆர்ட்டெமிஸ் III என்பது கீழ்க்காணும் எந்த நாட்டின் நிலவு ஆய்வுத்திட்டமாகும்?

அ. ஜப்பான்

ஆ. அமெரிக்கா

இ. இங்கிலாந்து

ஈ. ஆஸ்திரேலியா

விடை மற்றும் விளக்கம்

விடை:ஆ. அமெரிக்கா 

  • ஆர்ட்டெமிஸ் III என்பது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASAஇன் நிலவு ஆய்வுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின்கீழ், நிலவுக்கு முதன்முறையாக கறுப்பினத்தவரும் பெண்மணியுமான ஒருவரை அனுப்ப NASA திட்டம் வகுத்துள்ளது. இது 2025–இல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்திற்கு அருகாமையில் உள்ள இடங்களில் தரையிறங்குவாதற்கான 13 சாத்தியமான தளங்களை NASA சமீபத்தில் அறிவித்தது. நிலவின் தென் துருவம் மனிதர்களால் ஆராயப்படாத ஒன்று என்பதால் அதன் ஒவ்வொரு தளமும் அறிவியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதப்படுகிறது.

6. 2022ஆம் ஆண்டில், ASEAN சங்கத்திற்கான தலைவராக உள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. சிங்கப்பூர்

இ. கம்போடியா

ஈ. தாய்லாந்து

விடை மற்றும் விளக்கம்

விடை:இ. கம்போடியா 

  • கம்போடியாவானது “ASEAN சட்டம்: சவால்களை ஒன்றாக எதிர்கொள்வது” என்ற கருப்பொருளின்கீழ், நடப்பு 2022ஆம் ஆண்டிற்கு ASEAN அமைப்புக்குத் தலைமைதாங்குகிறது. கம்போடியாவின் தலைநகரமான புனோம் பென் நகரத்தில் ASEAN–இந்தியா வெளியுறவு அமைச்சர்களின் வருடாந்திர கூட்டத்திற்குச் சிங்கப்பூர் தலைமை தாங்குகிறது. தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) – இந்திய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.

7. இந்தியாவுக்காக பதக்கங்கள் வென்ற துலிகா மான் மற்றும் சுசீலா லிக்மாபம் சார்ந்த விளையாட்டு எது?

அ. டேபிள் டென்னிஸ்

ஆ. பூப்பந்து

இ. ஜூடோ

ஈ. வாள்சண்டை

விடை மற்றும் விளக்கம்

விடை:இ. ஜூடோ

  • 2022 – காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 78 கிலோ பிரிவில் ஜூடோவில் இந்தியாவுக்காக துலிகா மான் வெள்ளிப்பதக்கம் வென்றார். முன்னதாக, ஜூடோவில் பெண்கள் 48 கிலோ பிரிவில் சுசீலா லிக்மாபம் வெள்ளிப் பதக்கமும், ஆடவர் 60 கிலோ பிரிவில் விஜய் குமார் யாதவ் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கிண்டி தேசியப்பூங்கா அமைந்துள்ள மாவட்டம் எது?

அ. சென்னை

ஆ. செங்கல்பட்டு

இ. காஞ்சிபுரம்

ஈ. திருவாரூர்

விடை மற்றும் விளக்கம்

விடை:அ. சென்னை

  • கிண்டி தேசியப்பூங்காவானது சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஒரு நகரத்திற்குள் அமைந்துள்ள மிகச்சில தேசியப்பூங்காக்களுள் இதுவும் ஒன்றாகும். காயமடைந்த மற்றும் மீட்கப்பட்ட வனவிலங்குகளுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு வனத்துறையால் இந்தத் தேசியப் பூங்காவில் முதன்முறையாக, ‘நகர்ப்புற விலங்குகள் மீட்பு மையம்’ அண்மையில் அமைக்கப்பட்டது.

9. கண்காணிப்பு பணியை முடித்த லெப்டினன்ட் கமாண்டர் ஆஞ்சல் சர்மா தலைமையிலான பெண்கள் குழுவுடன் தொடர்புடைய ஆயுதப்படை எது?

அ. இந்திய வான்படை

ஆ. இந்திய இராணுவம்

இ. இந்திய கடற்படை

ஈ. இந்திய கடலோர காவல்படை

விடை மற்றும் விளக்கம்

விடை:இ. இந்திய கடற்படை

  • குஜராத்தின் போர்பந்தரில் உள்ள இந்திய கடற்படையின் வான்படை 314–ஐச் சேர்ந்த ஐந்து பெண் அதிகாரிகள், டோர்னியர் 228 விமானத்தில் வட அரபிக்கடலில் அனைத்து கடல்சார் உளவு மற்றும் கண்காணிப்பு பணியை முடித்து வரலாறு படைத்தனர். மிஷன் கமாண்டர் லெப்டினன்ட் கமாண்டர் ஆஞ்சல் ஷர்மா இந்த விமானத்தின் கேப்டனாக இருந்தார்; அதில் விமானிகள் லெப்டினன்ட் ஷிவாங்கி மற்றும் லெப்டினன்ட் அபூர்வ கீட் மற்றும் அவரது குழுவில் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த அதிகாரிகள் இருந்தனர்.

10. தனது முதல் நிலவு திட்டத்தை சுற்றுக்கலனான ‘தனூரி’மூலம் தொடக்கிய நாடு எது?

அ. இந்தியா

ஆ. தென் கொரியா

இ. இஸ்ரேல்

ஈ. நியூசிலாந்து

விடை மற்றும் விளக்கம்

விடை:ஆ. தென் கொரியா

  • தென் கொரியா தனது முதல் நிலவு திட்டத்தை அண்மையில் தொடங்கியது. அதன் நிலவு சுற்றுக்கலனான, ‘தனூரி’ கொரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (KARI) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது. இந்தச் சுற்றுக்கலன் என்பது பால்கன் 9 ஏவுகலத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த, “நிலவை அனுபவியுங்கள்” என்று பொருள்படும். இது ஓராண்டு கண்காணிப்பு பணியைத் தொடங்குவதற்கு முன் டிசம்பரில் நிலவின் சுற்றுப்பாதையில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வெற்றிபெற்றால், தென் கொரியா, நிலவினை ஆயும் உலகின் ஏழாம் நாடாகவும், ஆசியாவின் நான்காம் நாடாகவும் மாறும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பேருந்து புணேயில் தொடக்கம்

ஹைட்ரஜன் எரிபொருள்மூலம் இயங்கும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் பேருந்தை நடுவண் அறிவியல் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் புணேயில் தொடக்கி வைத்தார். நடுவண் அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலும் (CSIR) – கேபிஐடி தனியார் நிறுவனம் இணைந்து இந்தப் பேருந்தை உருவாக்கியுள்ளன.

2. தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை இன்று தமிழ்நாடு ஆளுநரிடம் வழங்கப்பட்டது

2021- மார்ச் 31 உடன் முடிவடைந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநரிடம் வழங்கினார். இந்த அறிக்கை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தணிக்கை அறிக்கையை ஆளுநரிடம் அளிக்க இந்திய அரசியல் சட்டம் பிரிவு 152 (2) வகை செய்கிறது.

22nd August 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Under which act, the minutes of the Monetary Policy Committee Meeting are released?

A. Banking Regulation Act

B. Reserve Bank of India Act

C. Monetary Policy Act

D. Payment and Settlement Act

Answer & Explanation

Answer:B. Reserve Bank of India Act 

  • According to Section 45ZL of the Reserve Bank of India Act, 1934, the Reserve Bank publishes the minutes of the proceedings of the meeting on the fourteenth day after every meeting of the Monetary Policy Committee. As per the minutes of the MPC meeting released recently, Governor Shaktikanta Das along with other members proposed a 50 basis points hike in repo rate to 5.40 per cent.

2. Which company has developed India’s first indigenously–developed RT–PCR kit for testing monkeypox disease?

A. Biocon

B. Bharat Biotech

C. Transasia Bio–Medicals

D. Serum Institute of India

Answer & Explanation

Answer:C. Transasia Bio–Medicals

  • India’s first indigenously–developed RT–PCR kit for testing monkeypox disease has been developed by Transasia Bio–Medicals. The kit was recently unveiled by Principal Scientific Adviser to the Centre Ajay Kumar Sood. According to WHO, monkeypox is a a virus transmitted to humans from animals, with symptoms similar to smallpox but clinically less severe.

3. Which institution released an article titled “Privatisation of Public Sector Banks: An Alternate Perspective”?

A. NITI Aayog

B. Reserve Bank of India

C. State Bank of India

D. National Council of Applied Economic Research

Answer & Explanation

Answer:B. Reserve Bank of India

  • The Reserve Bank of India (RBI) published an article titled “Privatisation of Public Sector Banks: An Alternate Perspective” in the August 2022 issue of its bulletin. As per the authors of the article, instead of a big bang approach, a gradual approach as announced by the government would result in better outcomes.

4. Which country is the host of the ‘Pitch Black’ air combat exercise?

A. USA

B. Australia

C. France

D. Japan

Answer & Explanation

Answer:B. Australia 

  • The Indian Air Force, with its four Sukhoi–30 MKI fighter jets and two C–17 heavy–lift aircraft joined the ‘Pitch Black’ exercise. It is a 17–nation air combat exercise in Australia, being hosted by the Royal Australian Air Force (RAAF). Over 100 aircraft and 2,500 air force personnel from 17 countries namely Australia, Canada, France, Germany, India, Japan, , the UAE, the US, the UK among others participate in the exercise.

5. Artemis III is the crewed Moon landing mission of which country?

A. Japan

B. USA

C. England

D. Australia

Answer & Explanation

Answer:B. USA

  • Artemis III mission is the crewed Moon landing mission of the US Space agency NASA. Under the mission, NASA has planned to send the first woman and person of colour to the Moon. It is scheduled for launch in 2025. NASA has recently announced 13 potential landing sites for the missions, which are in proximity to the lunar South Pole. Each site is scientifically significant as the lunar South Pole is unexplored by humans and it has some regions rich in resources.

6. Which country is the chair of ASEAN association for the year 2022?

A. India

B. Singapore

C. Cambodia

D. Thailand

Answer & Explanation

Answer:C. Cambodia

  • Cambodia chairs the ASEAN partnership this year (2022) under the theme “Asean Act: Addressing challenges together. Singapore co–chairs the annual Asean–India foreign ministers’ meeting in Phnom Penh, Capital of Cambodia. India’s External affairs minister S Jaishankar attended the Association of Southeast Asian Nations (ASEAN) – India Foreign Minister’s meeting.

7. Tulika Maan and Sushila Likmabam, who clinched medals for India, play which sports?

A. Table Tennis

B. Badminton

C. Judo

D. Fencing

Answer & Explanation

Answer:C. Judo

  • Tulika Maan clinched a silver medal for India in Judo at the Commonwealth Games 2022 in the 78 kg category. Earlier, Sushila Likmabam got a silver medal in the Women’s 48kg category, and Vijay Kumar Yadav won a bronze medal in the Men’s 60kg category in Judo.

8. Guindy National Park, which was seen in the news recently, is located in which district?

A. Chennai

B. Chengalpattu

C. Kanchipuram

D. Thiruvarur

Answer & Explanation

Answer:A. Chennai

  • Guindy National Park is located in Chennai district. It is one of the very few national parks situated inside a city. A first–of its kind urban animal rescue centre has been set up recently in the national park by the Tamil Nadu Forest Department to help the injured and rescued wildlife.

9. The women crew led by Lt Commander Aanchal Sharma which completed surveillance mission, is associated with which armed force?

A. Indian Air Force

B. Indian Army

C. Indian Navy

D. Indian Coast Guard

Answer & Explanation

Answer:C. Indian Navy

  • Five women officers of the Indian Naval Air Squadron 314 based at Porbandar in Gujarat created history by completing the first all–women independent maritime reconnaissance and surveillance mission over the north Arabian Sea onboard a Dornier 228 aircraft. The aircraft was captained by Mission Commander Lt Commander Aanchal Sharma, who had pilots Lt Shivangi and Lt Apurva Gite and tactical and sensor officers in her team.

10. Which country launched its first moon mission with the orbiter ‘Danuri’?

A. India

B. South Korea

C. Israel

D. New Zealand

Answer & Explanation

Answer:B. South Korea

  • South Korea launched its first moon mission recently. Its lunar orbiter ‘Danuri’ was indigenously developed by the Korea Aerospace Research Institute (KARI). The orbiter means “enjoy the moon” successfully separating from the Falcon 9 rocket. It is expected to enter the moon’s orbit in December before starting a yearlong observation mission. If it succeeds, South Korea will become the world’s seventh lunar explorer, and the fourth in Asia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!