Tnpsc

22nd December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

22nd December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

22nd December 2020 Tnpsc Current Affairs in Tamil

நடப்பு நிகழ்வுகள்

1. முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களின் செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் ISRO’இன் முதல் ஏவுகலம் எது?

அ. PSLV C31

ஆ. PSLV G7

இ. PSLV C51

ஈ. PSLV Mark II

  • இந்திய விண்வெளி ஆய்வுமையமானது (ISRO) PSLV C51 ஏவுகலத்தில் தனியார் நிறுவனங்களின் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவுள்ளது. இதில், ‘பிக்சல் இந்தியா’ என்ற துளிர் நிறுவனத் -தால் முழுமையாக கட்டப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், ’ANAND’, ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற துளிர் நிறுவனத்தின், ‘சதீஷ் சாட்’, பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பால் கட்டப்பட்ட ‘யுனிட்-சாட்’ ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களும் அடங்கும்.

2. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ‘பெங்களூரு மிஷன் 2022’ என்பதுடன் தொடர்புடையது எது?

அ. நலவாழ்வு

ஆ. உட்கட்டமைப்பு

இ. விளையாட்டு

ஈ. காலநிலை மாற்றம்

  • விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் அடுத்த ஈராண்டுகளில் பெங்களூரு நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கர்நாடக முதலமைச்சர் B S எடியூரப்பா, ‘பெங்களூரு மிஷன் 2022’ தொடங்கியுள்ளார். பெங்களூரு நகரத்துக்கான உட்கட்டமைப்பு புனரமைப்பில் கவனம் செலுத்தும் பகுதிகள் விரைவான பயணம், பசுமை நகரம், சேவைகளுக்கான அணுகல் மற்றும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வழங்கும். மின்சார வாகனங்கள், புறநகர் ரயில், மரப்பூங்காக்களுக்கான வசதிகளும் அதில் திட்டமிடப்பட்டுள்ளன.

3. பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவோருக்கு வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கான சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நாடு எது?

அ. சீனா

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. இலங்கை

ஈ. பாகிஸ்தான்

  • பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவோருக்கு வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கான சட்டத்திற்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப்புதிய சட்டமானது முதல்முறை குற்றத்தில் ஈடுபடுவோருக்கும் ஏற்கனவே குற்றத்தில் ஈடுபட்டோருக்கும் பொருந்தும். இந்த விதிமுறை பாலியல் வன்புணர்வு தடுப்பு அவசர ஆணை – 2020’இல் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இந்த அவசர ஆணையின்படி, வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கு உத்தரவிடுவது என்பது அவ்வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிபதியின் சொந்த விருப்பமாகும்.

4. உழவர்களின் வெற்றிக்கதைகளை எடுத்துரைத்து, அரசு வெளியிட்டுள்ள மின்-நூலின் பெயரென்ன?

அ. Farmer’s Friend

ஆ. Putting Farmer First

இ. Height of Farmers

ஈ. Mera Kisan

  • ‘உழவர்களை முதலிடத்தில் வைப்பது’ என்ற மின் நூலை நடுவணரசு வெளியிட்டுள்ளது. 3 வேளாண் சட்டங்கள் / சீர்திருத்தங்கள் இயற்றப்பட்ட பின்னர், ஒப்பந்த விவசாயத்தால் பயனடைந்த உழவர்களின் வெற்றிக்கதைகளை சித்தரிக்கும் 106 பக்க நூல் இது. ஹிந்தி மொழியிலும் ஆங்கிலத்திலும் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.

5. ஆண்டுதோறும் பன்னாட்டு புலம்பெயர்ந்தோர் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. டிசம்பர் 18

ஆ. டிசம்பர் 19

இ. டிசம்பர் 20

ஈ. டிசம்பர் 21

  • ஆண்டுதோறும் டிச.18ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் அவை, பன்னாட்டு புலம்பெயர்ந்தோர் நாளாகக் கொண்டாடுகிறது. உலகெங்கும் பேரளவில் அதிகரித்துவரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு, 2000ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை இந்த முடிவை எடுத்தது. “Reimagining Human Mobility” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

6. ஆண்டுதோறும் பன்னாட்டு மனித ஒற்றுமை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. டிசம்பர் 18

ஆ. டிசம்பர் 19

இ. டிசம்பர் 20

ஈ. டிசம்பர் 21

  • ஒற்றுமையின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பன்னாட்டு மனித ஒற்றுமை நாள் (International Human Solidarity Day) ஆண்டுதோறும் டிச.20 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்த நாள், பன்முகத்தன்மையில் ஒற்றுமையைக் கொண்டாடுவதையும், வறுமை ஒழிப்புப்பணியில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு நினைவூட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வறுமை ஒழிப்பு உள்ளிட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு ஒற்றுமையை ஊக்குவிப்பதற் -கான வழிகள் குறித்த விவாதத்தை ஊக்குவிக்கும் நாளாகும் இது.

7. நடப்பாண்டுக்கான (2020) எளிதாக தொழில்புரிவது குறித்த உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ. 85

ஆ. 72

இ. 63

ஈ. 56

  • நடப்பாண்டுக்கான (2020) எளிதாக தொழில்புரிவது குறித்த உலகவங்கியின் சமீபத்திய அறிக்கையின் படி, 190 நாடுகளில் இந்தியா 63ஆவது இடத்தில் உள்ளது. இந்த அறிக்கையின்படி, உலக வங்கியானது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இந்தியாவை முன்னேறி வரும் முதல் பத்து நாடுகளுள் ஒன்றாக அங்கீகரித்துள்ளது. நொடித்துமீள்வதன்கீழ், இந்தியாவின் மீட்பு விகிதம் 26.5%-71.6% வரை கணிசமாக முன்னேறியுள்ளது.
  • நொடிப்பிலிருந்து மீள்வதற்கான காலம் 4.3 ஆண்டுகளில் இருந்து 1.6 ஆண்டுகளாகக் குறைந்துள்ளது. கட்டுமான அனுமதிவழங்குவதற்கான நடைமுறைகளின் எண்ணிக்கையை இந்தியா பெருமளவு குறைத்துள்ளது. இதுதவிர, தெற்காசிய நாடுகளில் இந்தியா தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

8. ஆயுதப்படைகளிடம் ஒப்படைக்கப்பட்ட ASTRA Mk-I ஏவுகணை, IMSAS மற்றும் BOSS அமைப்பு ஆகியவை கீழ்க்காணும் எந்த அமைப்பால் உருவாக்கப்பட்டவையாகும்?

அ. DRDO

ஆ. OFB

இ. BHEL

ஈ. HAL

  • இராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (DRDO) தயாரித்த 3 கருவிகளை, முப்படைத்தளபதிகளிடம், பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் வழங்கினார். இதில், இந்திய கடல்சார் கண்காணிப்புக் கருவியை (IMSAS) கடற்படைத்தளபதி கரம்பீர் சிங்கிடமும், ASTRA Mk-I இரக ஏவுகணையை வான் படைத்தளபதி இராகேஷ் குமார் சிங் பதாரியாவிடமும், எல்லைக் கண்காணிப்புக் கருவியை (BOSS), தரைப்படைத்தளபதி MM நரவானேவிடமும் பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் வழங்கினார்.

9. UNESCO கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள, ‘கூஸ்கூஸ்’ என்பது கீழ்க்காணும் எந்தப் பிராந்தியத்தின் முதன்மை உணவாகும்?

அ. ஆஸ்திரேலியா

ஆ. வட ஆப்பிரிக்கா

இ. வட அமெரிக்கா

ஈ. தெற்காசியா

  • வட ஆப்பிரிக்க பிராந்தியத்தின் ‘கூஸ்கூஸ்’ என்ற முதன்மை உணவானது, UNESCO’இன் தொட்டுணர முடியாத பாரம்பரியங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அல்ஜீரியா மற்றும் மொராக்கோ, துனிசியா மற்றும் மூரித்தானியா ஆகிய நாடுகள், UNESCO பட்டியலில் இந்த உணவைச் சேர்ப்பதற்காக, 2019 மார்ச்சில் தங்களது மனுவைச் சமர்ப்பித்திருந்தன. ‘கூஸ்கூஸ்’ என்பது வட ஆப்பிரிக்க பிராந்தியத்தில், செக்ஸூ, குஸ்க்ஸி மற்றும் கெக்ஸூ என்றும் அழைக்கப்படுகிறது.

10. மாநில திட்டங்கள்பற்றிய அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைப்பதற்காக பொதுநலத்திட்டங்கள் வலைத்தளம் அல்லது ஜன் கல்யாண் வலைத்தளம் என்றவொன்றை தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. இராஜஸ்தான்

இ. பஞ்சாப்

ஈ. மத்திய பிரதேசம்

  • இராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், முதலீட்டாளர்களுக்குத் தேவையான நூற்றுக்கும் மேற்பட்ட வகையான அனுமதிகளையும் சேவைகளையும் கிடைக்கச் செய்வதற்காக ‘ஒன் ஸ்டாப் ஷாப்’ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளார். தகுதி, மாநில திட்டங்களின் பயன்கள், பயனுள்ள சுற்றறிக்கைகள் மற்றும் ஆணைகள்போன்ற தகவல்களை ஒருங்கிணைப்பதற்காக பொதுநலத்திட்டங்கள் வலைத்தளம் அல்லது ஜன் கல்யாண் வலைத்தளம் என்றவொன்றையும் முதலமைச்சர் தொடங்கியுள்ளார். இந்த வலைத்தளம், கடந்த ஈராண்டுகளில் அம்மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது.

22nd December 2020 Tnpsc Current Affairs in English

1. Which is the 1st launch vehicle of the ISRO, that will entirely carry the satellites of private players?

[A] PSLV C31

[B] PSLV G7

[C] PSLV C51

[D] PSLV Mark II

  • The Indian Space Research Organisation (ISRO) is set to launch satellites of private players onboard PSLV C51. The first of its kind mission would launch an earth observation satellite ‘ANAND’, fully built by a start–up named Pixel India. Two more satellites named ‘SATISH SAT’’, built by ‘Space Kids India’, and ‘UNIT–SAT’, built by consortium of universities would also be sent.

2. ‘Bengaluru Mission 2022’, which was seen in the news recently, is associated with which projects?

[A] Health

[B] Infrastructure

[C] Sports

[D] Climate Change

  • The Karnataka Chief Minister B S Yediyurappa launched the ‘Bengaluru Mission 2022’, to enhance the infrastructure facilities in the city in next two years to mark 75 years of independence. The Focus areas in infrastructure renovation for Bengaluru will be providing Faster commute, Green City, Access to services and Culture and heritage. Facilities for Electric Vehicles, Suburban rail, Tree parks are also being planned.

3. Which country has approved a law for Chemical castration of rapists?

[A] China

[B] United Arab Emirates

[C] Sri Lanka

[D] Pakistan

  • The Government of Pakistan has approved a legislation that permits chemical castration of rapists. This new legislation is applicable to repeat as well as first–time offenders. This provision has been added to the Anti–Rape Ordinance 2020. As per the ordinance, it is the discretion of the trial judge to order chemical castration.

4. What is the name of the e–booklet that has been launched by the Government highlighting the success stories of farmers?

[A] Farmer’s Friend

[B] Putting Farmer First

[C] Height of Farmers

[D] Mera Kisan

  • The central Government has released an e–book named ‘Putting Farmers First’. It is a 106–page book that portrays the success stories of farmers who have benefited from contract farming, after enactment of the three farm legislations / reforms. The book has been released in Hindi as well as in English.

5. When is the International Migrants Day observed every year?

[A] December 18

[B] December 19

[C] December 20

[D] December 21

  • Every year, 18th of December is observed as the International Day of Migrants by the United Nations. This decision was made by the United Nation General Assembly in the year 2000, taking into consideration large and increasing number of migrants around the world. The theme for this year’s Migration day is “Reimagining Human Mobility”.

6. On which date, the International Human Solidarity Day (IHSD) was observed recently?

[A] December 18

[B] December 19

[C] December 20

[D] December 21

  • The International Human Solidarity Day (IHSD) is observed every year on December 20 to raise public awareness of the importance of solidarity. This day aims to celebrate unity in diversity and remind people of the importance of solidarity in working towards eradicating poverty.
  • It is a day to encourage debate on the ways to promote solidarity for the achievement of the Sustainable Development Goals (SDGs) including poverty eradication.

7. What is the India’s rank in the World Bank’s Ease of Doing Business 2020 report?

[A] 85

[B] 72

[C] 63

[D] 56

  • India has been ranked 63rd among 190 countries, as per latest Doing Business Report (DBR, 2020) of World Bank (WB). As per report, the World Bank (WB) has recognized India as one of the top 10 improvers for the third consecutive year.
  • India’s recovery rate under resolving insolvency has improved significantly from 26.5% to 71.6%. The time taken for resolving insolvency has also come down significantly from 4.3 years to 1.6 years. India has reduced the number of procedures in granting construction permits. Apart from this, India continues to maintain its first position among South Asian countries.

8. ASTRA Mk–I Missile, IMSAS and BOSS System, which were handed over to the Armed Forces, were developed by which organisation?

[A] DRDO

[B] OFB

[C] BHEL

[D] HAL

  • Defence Minister Rajnath Singh handed over three indigenously developed Defence Research and Development Organisation (DRDO) systems to Army, Navy and Air Force. Rajnath Singh handed over the Indian Maritime Situational Awareness System (IMSAS) to the Chief of Naval Staff Admiral Karambir Singh, ASTRA Mk–I Missile to AirChief Marshal Rakesh Kumar Singh Bhadauria and Border Surveillance System (BOSS) to the Chief of Army Staff General MM Naravane.

9. Couscous, the staple food of which region, has been included in the UNESCO Cultural Heritage List?

[A] Australia

[B] North Africa

[C] North America

[D] South Asia

  • The staple food of the North African region, Couscous has been included in the UNESCO list of the world’s intangible cultural heritage. The rival countries Algeria and Morocco along with Tunisia and Mauritania had submitted the petition to add the dish in the UNESCO list, in March 2019. Couscous is also known as Seksu, Kusksi and Kseksu, in the North African region.

10. Which state launched Public Welfare Portal or Jan Kalyan Portal, to consolidate all information about the state schemes?

[A] Gujarat

[B] Rajasthan

[C] Punjab

[D] Madhya Pradesh

  • Rajasthan Chief Minister Ashok Gehlot has launched ‘One Stop Shop’ facility, to make available over 100 types of clearances and services, required by investors. The Chief Minister also launched Public Welfare Portal or Jan Kalyan Portal, to consolidate the information of eligibility, benefits of the state schemes, useful circulars and orders etc. It also highlights the efforts of the Government in two years.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!