Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

22nd December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

22nd December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 22nd December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. டிச.18 அன்று எந்த மொழி நாள் அனுசரிக்கப்படுகிறது?

அ) பிரஞ்சு

Arabic - Wikipedia

ஆ) கிரேக்கம்

இ) அரபு 

ஈ) உருது

  • உலகளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் மொழியைக் கௌரவிக்கும் வகையில் டிச.18 அன்று உலக அரபு மொழி நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • ஐநா அவையின் ஆறாவது அலுவல் மொழியாக அரபு மொழியை ஐநா பொது அவை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. “Arabic Language, a bridge between civilisations” என்பது இந்த ஆண்டு, உலக அரபு மொழி நாளுக்கானக் கருப்பொருளாகும்.

2. பிரதமர் ஆவாஸ் யோஜனா (கிராமப்புறம்) திட்டத்தை 2021ஆம் ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ) 2022

SEO title of the page | Yadadri Bhuvanagiri District, Govt of Telangana | India

ஆ) 2023

இ) 2024 

ஈ) 2025

  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் கருத்துருவான பிரதமர் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தை (PMAY-G) 2021 மார்ச்சுக்கு பின்னர் 2024 மார்ச் மாதம் வரை தொடர்ந்து செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின்கீழ் முடிக்கப்பட வேண்டிய 2.95 கோடி வீடுகள் இலக்கை எட்டுவதற்கு ஏற்றவகையில் இந்தத் திட்டம் நீட்டிக்கப்படுகிறது. எஞ்சிய 155.75 இலட்சம் வீடுகளை கட்டி முடிக்க இந்த நீட்டிப்பு உதவும்.

3. சமீப செய்திகளில் இடம்பெற்ற குன்னூர், தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

அ) நீலகிரி 

ஆ) கோயம்புத்தூர்

இ) திண்டுக்கல்

ஈ) தேனி

  • தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள குன்னூரில் இராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் சென்ற இந்திய வான்படை உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ‘சௌர்ய சக்ரா’ விருதுபெற்ற, விபத்திலிருந்து உயிர்பிழைத்த குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

4. இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹியூமன் பிராண்ட்ஸ் (IIHB) பவர் கப்பிள் தரவரிசை-2021’இன்படி, முதலிடம் பிடித்த ஜோடி எது?

அ) தீபிகா படுகோன் – ரன்வீர் சிங்

5 unusual habits of Mukesh Ambani's wife, Nita Ambani – who drinks beetroot juice daily and never wears the same pair of shoes twice | South China Morning Post

ஆ) விராட் கோலி – அனுஷ்கா சர்மா

இ) விக்னேஷ் சிவன் – நயன்தாரா

ஈ) முகேஷ் அம்பானி- நீதா அம்பானி 

  • இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹியூமன் பிராண்ட்ஸால் (IIHB) ஆண்டுதோறும் வெளியிடப்படும் பவர் ஜோடி தரவரிசையில் இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி -அவரது மனைவி நீதா அம்பானி முதலிடம் பிடித்துள்ளனர். இந்தியா முழுவதும் 25-40 வயதுக்குட்பட்ட 1000’க்கும் மேற்பட்டவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
  • இந்த ஜோடியை தொடர்ந்து தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் இரண்டாவது இடத்திலும், கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா இணை மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

5. சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற Olaf Scholz, எந்த நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அ) ஆஸ்திரேலியா

Olaf Scholz Sworn In As German Chancellor - Impakter

ஆ) ஜெர்மனி 

இ) நியூசிலாந்து

ஈ) ஸ்பெயின்

  • 16 ஆண்டுகள் வரலாற்று சிறப்புற ஆட்சி புரிந்த ஏஞ்சலா மேர்க்கெலை தொடர்ந்து Olaf Scholz ஜெர்மனியின் புதிய அதிபராக பதவியேற்றுள்ளார். 63 வயதான அவர் சமூக ஜனநாயகக் கட்சியினை செப்டம்பரில் தேர்தல் வெற்றிக்கு வழிநடத்தினார். அவர், துணைவேந்தர் பொறுப்பில் ஏஞ்சலா அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

6. சமீப செய்திகளில் இடம்பெற்ற ‘சரயு தேசிய கால்வாய் திட்டம்’ அமைக்கப்படவுள்ள மாநிலம் எது?

அ) குஜராத்

Saryu Canal National Project: Key Facts | Sakshi Education

ஆ) உத்தர பிரதேசம் 

இ) பீகார்

ஈ) மத்திய பிரதேசம்

  • உத்தர பிரதேச மாநிலம் பலராம்பூர் மாவட்டத்தில் `9,802 கோடி மதிப்பிலான ‘சரயு தேசிய கால்வாய் திட்டத்தை’ பிரதமர் மோடி தொடங்கிவைக்கவுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய திட்டமான இது, காக்ரா, சரயு, ரப்தி, பங்கங்கா மற்றும் ரோகின் ஆகிய ஐந்து ஆறுகளை இணைக்கிறது.
  • 6,600 கிமீ நீளமுள்ள பல துணை கால்வாய்கள் 318 கிமீ நீளமுள்ள பிரதான கால்வாயுடன் இணைக்கப்பட்டுள்ளன.

7. 56ஆவது ஞானபீட விருதை வென்ற நீலமணி பூகன் ஜூனியர், கீழ்காணும் எந்த மொழிசார் கவிஞராவார்?

அ) தமிழ்

Nilmani Phookan (Junior) - Alchetron, the free social encyclopedia

ஆ) மலையாளம்

இ) அஸ்ஸாமி 

ஈ) குஜராத்தி

  • அஸ்ஸாமிய கவிஞர் நீலமணி பூகன் ஜூனியர், 56ஆவது ஞானபீட விருதை வென்றுள்ளார். அவர் கடந்த 1990’இல் ‘பத்மஸ்ரீ’ விருது மற்றும் 2002’இல் சாகித்திய அகாதமி பெல்லோஷிப் பெற்றுள்ளார். கொங்கனி நாவலாசிரியர் தாமோதர் மௌசோ 57ஆவது ஞானபீட விருதை வென்றுள்ளார். 1983ஆம் ஆண்டு தனது கார்மெலின் நாவலுக்காக சாகித்திய அகாதமி விருதை அவர் பெற்றார்.

8. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சமீபத்திய மசோதா -க்களின்படி, ED & CBI தலைவர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்?

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஐந்து 

ஈ) ஆறு

  • மத்திய ஊழல் விழிப்புணர்வு ஆணையம் (திருத்த) மசோதா, 2021 மற்றும் தில்லி சிறப்பு காவல்பிரிவு நிறுவல் (திருத்த) மசோதா, 2021 ஆகியவற்றை பரிசீலித்தல் & நிறைவேற்றலுக்காக மக்களவை நிறைவேற்றியது.
  • இந்த மசோதாக்கள் அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய புலனாய்வுப் பணியகம் (CBI) ஆகியவற்றில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஐந்து ஆண்டுகள் வரை பதவிக்கால நீட்டிப்பு வழங்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கும். தற்போது, இந்த இரு அதிகாரிகளுக்கும் 2 ஆண்டுகள் பதவிக்கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

9. “ஆற்றல் பாதுகாப்பு வாரம்” ஒவ்வோர் ஆண்டும் எந்த மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது?

அ) அக்டோபர்

ENERGY CONSERVATION DRAWING EASY ||HOW TO DRAW SAVE ENERGY - YouTube

ஆ) நவம்பர்

இ) டிசம்பர் 

ஈ) ஜனவரி

  • 2021 டிச.8 முதல் 14 வரை ஆற்றல் பாதுகாப்பு வாரத்தை எரிசக்தி அமைச்சகம் கொண்டாடுகிறது.
  • எரிசக்தி திறன் பணியகத்தால் இந்தக் கொண்டாட்டம் நடத்தப்படுகிறது. இது தொழிலகங்களுக்கு தேசிய ஆற்றல் பாதுகாப்பு விருதுகளையும் புதுமையான ஆற்றல் திறன் தொழில்நுட்பங்களை அங்கீகரிக்க தேசிய ஆற்றல் திறன் கண்டுபிடிப்பு விருதுகளையும் வழங்குகிறது.

10. 2021’ஆம் ஆண்டில் ‘ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடு’ நடத்திய நாடு எது?

அ) அமெரிக்கா 

An urgent matter': Biden warns democracy is under threat at summit | Joe Biden | The Guardian

ஆ) இந்தியா

இ) சுவிச்சர்லாந்து

ஈ) ஆஸ்திரேலியா

  • அமெரிக்க அதிபர் ஜோ பிடன், வெள்ளை மாளிகையில் ஜனநாயகத்திற்கான முதல் உச்சிமாநாட்டை தொடங்கி வைத்தார். இது இரண்டு நாள் மெய்நிகர் உச்சிமாநாடாக தொடங்கப்பட்டது. அமெரிக்க அதிபர் பிடன், உலக அளவில் ஜனநாயக வீழ்ந்து வருவதாக எச்சரித்தார்.
  • அரசாங்கங்கள், சிவில் சமூகம் மற்றும் தனியார் துறை தலைவர்கள் உள்ளிட்ட 100’க்கும் மேற்பட்டோர் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அரசுத் துறைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் எண்ம பலகைத் திட்டம்:

தமிழக அரசுத் துறைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் எண்ம பலகைத் திட்டத்தை, முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கிவைக்கிறாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.

தமிழக அரசில் 42 துறைகள் உள்ளன. இந்தத் துறைகளில் உள்ள நலத் திட்டங்கள், செயல்பாடுகள் ஒரு இடத்தில் மட்டுமே இருந்து கண்காணிக்கும் வகையிலான எண்ம பலகைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தகவல் தொழில்நுட்பவியல் துறை சாா்பில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை தொடக்கிவைக்கிறாா்.

அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் கடைக்கோடியில் உள்ள கிராமங்களுக்கும் சென்று அடைந்துள்ளதா என்பதைக் கண்காணிக்கும் வகையில் இந்த பலகைத் திட்டம் அமைந்திடும் என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

2. தேவைதான் திருத்தம்! | பெண்களின் திருமண வயதை குறித்த தலையங்கம்

பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்துவதற்கான சிறாா் திருமணச் சட்டம் 2006-இல் திருத்தம் கொண்டுவரப்படுவதற்கான திருத்த மசோதா சில எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பைத் தொடா்ந்து நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அரசு கொண்டுவரும் எந்தவொரு மசோதாவையும் எதிா்ப்பது, தடுப்பது என்கிற மனோபாவம் ஆக்கபூா்வமானதல்ல.

ஒவ்வொரு துறையிலும் பாலின சமத்துவமும் பாலின பேதமின்றி அதிகாரமும் வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது. ஆனால், பெண்களின் திருமண வயது 18-ஆகவும், ஆண்களின் மண வயது 21-ஆகவும் இதுவரை இருந்துவரும் முரண் புதிய சட்டத்திருத்தத்தால் அகற்றப்படும்.

சமதா கட்சியின் தலைவா் ஜெயா ஜேட்லி தலைமையில் சட்டபூா்வ திருமண வயதை உயா்த்துவது குறித்து ஆய்வு செய்ய 10 போ் கொண்ட குழு 2020 ஜூன் மாதம் அமைக்கப்பட்டது. அந்தக் குழு 2020 டிசம்பா் மாதம் தனது அறிக்கையை பிரதமா் அலுவலகத்துக்கும், மத்திய மகளிா் – குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் வழங்கியது. அதனடிப்படையில்தான் 2006 சிறாா் திருமணச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

குழந்தைத் திருமணம் என்பது நீண்டகாலமாக இந்திய சமுதாயத்தில் காணப்பட்ட மிகப் பெரிய குறைபாடு. இது சட்டபூா்வமாக தடை செய்யப்பட்டிருந்தாலும்கூட இந்தியாவின் சில மாநிலங்களில் இன்னும்கூட அவ்வப்போது ‘பால்ய விவாகம்’ என்று அறியப்படும் குழந்தைத் திருமண முறை காணப்படும் அவலம் தொடா்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளில் சிறாா் திருமண தடைச்சட்டமும், இப்போது கொண்டுவரப்படும் சட்டத் திருத்தமும் அடங்கும்.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி, இந்தியாவில் நான்கு பெண்களில் ஒருவா் 18 வயது பூா்த்தியாவதற்கு முன்னால் திருமணம் செய்துகொள்கிறாா்கள். 56% பெண்கள் 21 வயதை எட்டுவதற்கு முன்பு திருமணம் செய்து கொள்கிறாா்கள். அடித்தட்டு மக்கள் மத்தியில் அதுவே 75% ஆகும். பெரும்பாலான பெண் குழந்தைகளுக்கு, பள்ளிப் படிப்பு முடிந்ததும் திருமணமாகி விடுவதால் கல்லூரி சென்று படிக்கும் வாய்ப்பு அவா்களுக்கு மறுக்கப்படுகிறது. அதைப் போக்கும் வகையில்தான் ஆண்களுக்கு நிகராக பெண்களின் திருமண வயதை உயா்த்த வேண்டும் என்று ஜெயா ஜேட்லி குழு பரிந்துரை செய்தது.

1955 ஹிந்து திருமணச் சட்டம், 1872 இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் இரண்டுமே பெண்களுக்கு 18 வயதையும், ஆண்களுக்கு 21 வயதையும் திருமண வயதாக வரையறுக்கின்றன. 1954-இல் அமல்படுத்தப்பட்ட வெவ்வேறு மதங்களுக்கு இடையேயான சிறப்புத் திருமண சட்டத்தின்படியும், பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் அனுமதிக்கப்படுகிறது. 1937 இஸ்லாமிய தனியுரிமை சட்டத்தின்படி (ஷரியத்), ஆணும் பெண்ணும் வயதுக்கு வந்தால் மணவாழ்க்கையில் ஈடுபட தகுதியுடையவா்கள் என்று கூறப்படுகிறது.

சமூக சீா்திருத்தங்களுக்கு அடிப்படையாக இருப்பது ஆண் – பெண் இருபாலரின் கல்வி. குறிப்பாக, கல்வி, பெண்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி, காலங்காலமாக அவா்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நீக்கி, மறுக்கப்பட்ட வாய்ப்புகளைப் பெற்றுத்தருகிறது. திருமண வயதை உயா்த்துவது என்கிற முடிவுக்கு பெண்களின் கல்வி முக்கியமான காரணம்.

18 வயது என்பது பெண்கள் பிளஸ் 2 முடித்திருக்கும் பருவம். அந்தக் கல்வித் தகுதியின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்பையோ பொருளாதார சுதந்திரத்தையோ பெற முடியாது. திருமண வயதை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கும்போது அவா்களது கல்லூரிக் கல்விக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. அவா்களது எண்ணம் விரிவடைந்து வருங்கால இலக்கை நிா்ணயித்துக் கொள்ளவும், வாழ்க்கை குறித்த முக்கியமான முடிவுகளை எடுக்கவும் உதவும் என்பதுதான் ஜெயா ஜேட்லி குழுவின் கருத்து.

இந்தியாவில் திருமணம் என்பது தனிப்பட்ட முடிவாக இல்லாமல், சமுதாய வழிமுறையாகவும் இருப்பதால் பெண்களின் படிப்பு முடிந்ததும், அவா்களின் திருமணத்தை உறுதிப்படுத்துவது பெற்றோரின் கடமையாகக் கருதப்படுகிறது. 18 வயதிலேயே கல்லூரி அளவிலான கல்வித் தகுதியும், தங்களது வாழ்க்கையை நிா்ணயித்துக்கொள்ளும் பொருளாதாரத் தகுதியும் பெண்களுக்கு வாய்ப்பதில்லை. அதனால் திருமணமும் குழந்தைப் பேறும் கட்டாயமாகிறது.

21 வயதில் திருமணம் செய்துகொள்ளும்போது தங்களது ஆரோக்கியம் குறித்தும், பொருளாதாரம் குறித்தும் தெளிவாக சிந்திக்கும் பக்குவம் ஏற்படுவதால் சுகாதார பிரச்னைகள் குறையும் என்று அக்குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது. பிரசவ கால, சிசு மரண விகிதம் குறைவது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து குறைவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் 21 வயது வரம்பு உதவக்கூடும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

18 வயதானவா்கள் வாக்களிக்கலாம்; வாகனம் ஓட்டலாம்; கல்லூரிக்குச் செல்லலாம்; போட்டித் தோ்வுகளில் கலந்துகொள்ளலாம்; விளையாட்டுப் போட்டிகளில் பங்குகொண்டு தேசத்தைப் பிரதிநிதித்துவம் செய்யலாம் எனும்போது, திருமண வயதை 21-ஆக அதிகரிக்க வேண்டிய அவசியம்தான் என்ன என்கிற கேள்வி எழாமல் இல்லை. பெண்களின் திருமண வயதை உயா்த்துவதால் மட்டும் குழந்தைத் திருமணங்கள் குறைந்துவிடுமா என்கிற கேள்விக்கு பதிலும் இல்லை.

ஆண்களுக்கு நிகராக பெண்களின் மண வயதை உயா்த்தும் அதே வேளையில், மக்கள் மத்தியில் காணப்படும் பெண்கள் குறித்தான மனநிலையில் மாற்றமும், அவா்களுக்கான பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதும் முக்கியம். புதிய சட்டத் திருத்தத்தின் பயனாக பெண்களின் கல்வி இடைநிற்றல் குறையுமானால் அதுவேகூட மிகப் பெரிய வெற்றிதான்!

3. பெண்கள் திருமண வயது 21: மக்களவையில் மசோதா தாக்கல்

பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்த வகை செய்யும் மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. எதிா்க்கட்சி உறுப்பினா்களின் எதிா்ப்பைத் தொடா்ந்து இந்த மசோதாவை நிலைக் குழுவுக்கு அனுப்ப மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி அவைத் தலைவரை கேட்டுக்கொண்டாா். அதன்படி, அந்த மசோதா நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

பெண்களின் சட்டபூா்வமான திருமண வயதை 18-இலிருந்து 21-ஆக உயா்த்த வகை செய்யும் குழந்தை திருமண தடுப்பு திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இந்த மசோதாவை மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி மக்களவையில் தாக்கல் செய்தாா். இந்த மசோதாவானது இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம், பாா்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம், முஸ்லிம் தனிநபா் (ஷரியத்) சட்டம், சிறப்புத் திருமண சட்டம், ஹிந்து திருமணச் சட்டம், வெளிநாட்டு திருமணச் சட்டம் ஆகிய தனிநபா் சட்டங்களில் திருத்தங்களைச் செய்வதற்கு வகை செய்கிறது.

மசோதாவை அறிமுகம் செய்து பேசிய அமைச்சா் ஸ்மிருதி இரானி, ‘நாட்டின் வரலாற்றில் இது ஒரு தீா்க்கமான நடவடிக்கை’ என்றாா்.

சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்காமல் அவசரகதியில் இந்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்வதாக எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி பேசுகையில், ‘இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்ட விதமானது எந்த ஆலோசனையும் நடத்தாத அரசின் தவறான நோக்கங்களை பிரதிபலிக்கிறது’ என்றாா்.

காங்கிரஸ் துணைத் தலைவா் கெளரவ் கோகோய், ‘ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான திருமண வயதாக 18 என நிா்ணயிக்க வேண்டும் என்ற சட்ட ஆணையத்தின் பரிந்துரைக்கு முரண்பாடாக இந்த மசோதாவின் ஷரத்துகள் உள்ளன’ என்றாா்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினா் இ.டி.முகமது பஷீா், ‘இந்த மசோதா தேவையற்றது, சட்டவிரோதமானது, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 25-ஐ மீறுவதாக உள்ளது. தனிநபா் சட்டங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலாகும்’ என்றாா்.

அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, ‘18 வயதில் ஒரு பெண் பிரதமரைத் தோ்ந்தெடுக்க முடியும் எனும்போது, அந்தப் பெண்ணின் திருமண உரிமையை நீங்கள் மறுக்கிறீா்கள்’ என்றாா்.

தேசியவாத காங்கிரஸ் உறுப்பினா் சுப்ரியா சுலே, திமுக உறுப்பினா் கனிமொழி ஆகியோா் இந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டுமென வலியுறுத்தினா்.

புரட்சிகர சோஷலிச கட்சி உறுப்பினா் என்.கே.பிரேமசந்திரன், ‘இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்த திட்டத்தை அரசு விளக்க வேண்டும்’ என்றாா்.

அமைச்சா் பதில்: எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்குப் பதிலளித்து அமைச்சா் ஸ்மிருதி இரானி பேசியதாவது: ஒரு ஜனநாயக நாடாக, திருமணம் செய்வதற்கான வயதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை வழங்குவதில் 75 ஆண்டுகள் பின்தங்கியுள்ளோம். நாட்டில் 15-18 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 7 சதவீத போ் கா்ப்பமடைவதாகவும், 23 சதவீத சிறுமிகள் 18 வயதுக்குள் திருமணம் செய்துவைக்கப்படுவதாகவும் அறியப்பட்டுள்ளது. வளரிளம் பருவத்தில் கா்ப்பமாதலை தடுப்பதும் முக்கியமானது; வளரிளம் பருவ கா்ப்பமானது பெண்களின் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமின்றி, கருச்சிதைவுக்கும், குழந்தைகள் இறந்து பிறப்பதற்கும் வழிவகுக்கிறது. மகப்பேறு இறப்பு விகிதம், சிசு இறப்பு விகிதத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அத்துடன் குழந்தை பிறக்கும்போது ஊட்டச்சத்து அளவு, பாலின விகிதத்தை மேம்படுத்துவதும் முக்கியம்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, மசோதாவை நிலைக்குழுவின் ஆலோசனைக்கு அனுப்ப அவைத் தலைவரை அமைச்சா் கேட்டுக்கொண்டாா். அதன்படி, அந்த மசோதா நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

4. ஐ.நா. உலக உணவுத் திட்ட ஆராய்ச்சி: நீதி ஆயோக் கையொப்பம்

ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்துடன் ஆராய்ச்சிக்கான உடன்பாட்டில் நீதி ஆயோக் கையொப்பமிட்டது. 2023-ஆம் ஆண்டு சிறு தானியங்களுக்கான சா்வதேச ஆண்டாக இருக்கும் நிலையில், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உலகளவில் அறிவு பரிமாற்றம் செய்வதில் தலைமையேற்க இந்தியாவிற்கு உதவ இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும்.

மேலும் சிறிய அளவு நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கான வாழ்வாதாரங்களை உறுதியாகக் கட்டமைப்பதையும் பருவநிலை மாற்றத்திற்கான திறன்களை பயன்படுத்துவதையும் உணவு முறைகளில் மாற்றம் செய்வதையும் இது நோக்கமாக கொண்டுள்ளது.

இந்தியாவில் விரிவடைந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கு பருவநிலையைத் தாக்குப் பிடிக்கும் வேளாண்மையை பலப்படுத்துவதற்கு உக்திகள் வகுத்தல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கு இந்த உடன்பாடு கவனம் செலுத்தும். இது கடந்த டிச.20-ஆம் தேதி கையொப்பமானது.

மத்திய அரசின் அமைச்சகங்கள், மாநில அரசுகளில் உள்ள சம்பந்தப்பட்ட துறைகள், தெரிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்கள், சிறு தானியங்களை ஊக்கப்படுத்துவதற்கான துறையில் செயல்படும் அமைப்புகள் ஆகியவற்றுடன் இரு தரப்பினரும் கூட்டாக தேசிய அளவில் கலந்தாலோசனை நடத்த இந்த உடன்பாடு வகை செய்கிறது.

மத்திய செய்தி தகவல் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. ஊக்கமருந்து தடுப்பு விதிமீறல்: உலக அளவில் இந்தியா 3-ஆம் இடம்

கடந்த 2019-ஆம் ஆண்டில் ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியது தொடா்பான ஆண்டறிக்கையில் உலக நாடுகளில் இந்தியா 3-ஆவது இடத்தில் இருக்கிறது. விளையாட்டுத் துறையில் ஊக்கமருந்து பயன்பாட்டை தடுப்பதற்காக இருக்கும் உலக அமைப்பு (டபிள்யூஏடிஏ) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஊக்கமருந்து பயன்பாடு தடுப்பு விதிகளை மீறியதாக கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 152 நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. பட்டியலில் முதலிரு இடங்களில் ரஷியா (167), இத்தாலி (157) உள்ளன. 4 மற்றும் 5-ஆவது இடங்களில் பிரேஸில் (78), ஈரான் (70) நாடுகள் உள்ளன.

இந்தியாவில் அதிகபட்சமாக உடற்கட்டமைப்பு (பாடி பில்டிங்) பிரிவில் 57 விதிமீறல்கள் பதிவாகியுள்ளன. ஒலிம்பிக் விளையாட்டுகளில் முதன்மையாக, பளுதூக்குதலில் 25 விதிமீறல்களும், தடகளத்தில் 20 விதிமீறல்களும், மல்யுத்தத்தில் 10 விதிமீறல்களும் நிகழ்ந்துள்ளன. குத்துச்சண்டை மற்றும் ஜூடோவில் தலா 4 விதிமீறல்கள் இருக்கின்றன. இதுதவிர, கிரிக்கெட்டிலும் 4 விதிமீறல்கள் நிகழ்ந்துள்ளன.

கடந்த 2018-இல் வெளியான அறிக்கையில் இந்தியா மொத்தம் 107 விதிமீறல்களுடன் 4-ஆவது இடத்தில் இருந்தது. அதிலும் அதிகபட்சமாக பளுதூக்குதலில் 22 விதிமீறல்களும், அடுத்தபடியாக தடகளத்தில் 16 மீறல்களும் இருந்திருக்கின்றன.

இந்த அறிக்கையானது, சம்மந்தப்பட்ட விளையாட்டு போட்டியாளா்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதில் சோதனை நடத்தி விதிமீறல் உறுதி செய்யப்பட்டு, அவா்களுக்கான தடையும் விதிக்கப்பட்டதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகும்.

2019-இல் உலக அளவில் மொத்தம் 2,78,047 மாதிரிகள் ஊக்கமருந்து பயன்பாடு தொடா்பாக சேகரிக்கப்பட்டன. அதில் 2,701 மாதிரிகளில் (1 சதவீதம்) விதிமீறல்களுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிந்தது.

ஆய்வு முடிவில் 1,535 மாதிரிகளில் விதிமீறல்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்களுக்கு தடை விதிக்கப்பட்டது. உலக அளவிலான எண்ணிக்கையில் உடற்கட்டமைப்பில் தான் அதிக விதிமீறல்கள் (227) உள்ளன. அடுத்து தடகளத்திலும் (227), பளுதூக்குதலிலும் (160) அதிகமாக உள்ளன.

1. Which language Day is observed on 18 December?

A) French

Arabic - Wikipedia

B) Greek

C) Arabic 

D) Urdu

  • World Arabic Language Day is observed on 18 December to honour the language, which is spoken by over 400 million people globally. It has been celebrated since 2012 to mark the adoption of Arabic as the sixth official language of the United Nations by the UN General Assembly.
  • This year, the theme of the World Arabic Language Day is “Arabic Language, a bridge between civilisations”.

2. The Union Cabinet approved the continuation of Pradhan Mantri Awaas Yojana (Rural) till which year, from 2021?

A) 2022

SEO title of the page | Yadadri Bhuvanagiri District, Govt of Telangana | India

B) 2023

C) 2024 

D) 2025

  • The Union Cabinet approved the continuation of Pradhan Mantri Awaas Yojana (Rural) for another three years till March 2024. The extension of the scheme will help in the construction of the remaining 155.75 lakh houses. It will help achieve the target of 2.95 crore ‘pucca’ houses.

3. Coonoor, which was seen in the news recently, is located in which district of Tamil Nadu?

A) The Nilgiris 

B) Coimbatore

C) Dindigul

D) Theni

  • An Indian Air Force helicopter with Chief of Defence Staff General Bipin Rawat on board crashed in Tamil Nadu’s Coonoor. Thirteen people have been confirmed dead in the incident. Group Captain Varun Singh, honoured with the Shaurya Chakra this year, who was the lone survivor of the crash, is in critical condition.

4. As per the Institute of Human Brands (IIHB) Power Couple ranking 2021, which couple topped the list?

A) Deepika Padukone – Ranveer Singh

5 unusual habits of Mukesh Ambani's wife, Nita Ambani – who drinks beetroot juice daily and never wears the same pair of shoes twice | South China Morning Post

B) Virat Kohli – Anushka Sharma

C) Vignesh Shivan – Nayanthara

D) Mukesh Ambani– Nita Ambani 

  • Indian billionaire Mukesh Ambani and wife Nita Ambani topped the annual Power Couple ranking done by the Indian Institute of Human Brands (IIHB). The survey was conducted among over 1000 respondents across India aged 25–40 years. The couple is followed by Deepika Padukone and Ranveer Singh at the second place and Cricket captain Virat Kohli and his actress wife Anushka Sharma at third place.

5. Olaf Scholz, who was seen in the news recently, has been elected as the new head of which country?

A) Australia

Olaf Scholz Sworn In As German Chancellor - Impakter

B) Germany 

C) New Zealand

D) Spain

  • Olaf Scholz has been sworn in as Germany’s new chancellor, officially taking over from Angela Merkel, who served historic 16 years as the Chancellor. The 63–year–old leader steered the Social Democrats to election victory in September. He has played a key role in the Merkel government as vice–chancellor.

6. The ‘Saryu Canal National project’ which was seen in the news recently, is to be set up in which state?

A) Gujarat

Saryu Canal National Project: Key Facts | Sakshi Education

B) Uttar Pradesh 

C) Bihar

D) Madhya Pradesh

  • Prime Minister Narendra Modi is set to inaugurate the ₹9,802 crore Saryu Canal National project in Uttar Pradesh’s Balrampur district. The project, which is the biggest in Uttar Pradesh, connects five rivers which include Ghagra, Saryu, Rapti, Banganga and Rohin. Many sub canals with a length of 6,600kms have been linked to the 318 km long main canal.

7. Nilmani Phookan Jr, who won the 56th Jnanpith Award, is a poet in which language?

A) Tamil

Nilmani Phookan (Junior) - Alchetron, the free social encyclopedia

B) Malayalam

C) Assamese 

D) Gujarati

  • Assamese poet Nilmani Phookan Jr has won the 56th Jnanpith Award. He was awarded the Padma Shri in 1990 and received the Sahitya Akademi Fellowship in 2002. Konkani novelist Damodar Mauzo has won the 57th Jnanpith Award. He won the Sahitya Akademi Award in 1983 for his novel Karmelin.

8. As per the recent bills passed in Lok Sabha, the tenure of chiefs of ED and CBI can be extended up to how many years?

A) Three

B) Four

C) Five 

D) Six

  • Lok Sabha has passed the Central Vigilance Commission (Amendment) Bill, 2021 and the Delhi Special Police Establishment (Amendment) Bill, 2021 for consideration and passage.
  • These Bills intend to provide enabling power to the government to extend tenure of the Chiefs of Enforcement Directorate (ED) and the Central Bureau of Investigation (CBI) up to five years. At present, both the officers are given a term of two years.

9. “Energy Conservation Week” is observed every year in which month?

A) October

ENERGY CONSERVATION DRAWING EASY ||HOW TO DRAW SAVE ENERGY - YouTube

B) November

C) December 

D) January

  • Ministry of Power is celebrating the Energy Conservation Week from 8th to 14th December 2021. The Celebration is led by Bureau of Energy Efficiency.
  • It also provides National Energy Conservation Awards (NECA) for Industries and National Energy Efficiency Innovation Awards (NEEIA) to recognize innovative energy efficiency technologies.

10. Which country hosted the ‘Summit for Democracy’ in 2021?

A) USA 

An urgent matter': Biden warns democracy is under threat at summit | Joe Biden | The Guardian

B) India

C) Switzerland

D) Australia

  • US President Joe Biden inaugurated the first Summit for Democracy at White House. It was launched as a two–day virtual summit. The US President Biden warned about a global slide for democratic institutions. Over 100 participants representing governments, civil society and private–sector leaders participated in the summit.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!