Tnpsc

22nd February 2020 Current Affairs in Tamil & English

22nd February 2020 Current Affairs in Tamil & English

22nd February 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

22nd February 2020 Current Affairs in Tamil

22nd February 2020 Current Affairs in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. “தொற்றுப்பத்திரங்கள்” எந்த பன்முக மேம்பாட்டு வங்கியால் வழங்கப்படுகின்றன?

அ. உலக வங்கி

ஆ. ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி

இ. ஐரோப்பிய முதலீட்டு வங்கி

ஈ. ஆசிய வளர்ச்சி வங்கி

  • சியரா லியோன், கினியா மற்றும் லைபீரியாவில் 2013-2016ஆம் ஆண்டு வரை எபோலா வைரஸ் பாதித்ததற்கு பதிலளிக்கும் விதமாக, “Pandemic Bonds” என்னும் பத்திரங்களை உலக வங்கி அதன் 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தொற்று அவசர நிதியத்தின்கீழ் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • உலக வங்கியின் சர்வதேச புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியால் வழங்கப்பட்ட இப்பத்திரங்கள் பல்வேறு தொற்று நோய்களால் தொற்று ஏற்பட்டால், முதலீட்டாளர்களுக்கு சில அல்லது அனைத்து நிதியையும் கைவிடவேண்டிய நிலைக்குத் தள்ளாமல் அதற்கீடாக அதிக சலுகைளை வழங்குகிறது.

2.நியாண்டர்தால் எஞ்சியுள்ள இடமான ஷானிதார் குகை, அமைந்துள்ள நாடு எது?

அ. சிரியா

ஆ. ஈராக்

இ. தஜிகிஸ்தான்

ஈ. எகிப்து

  • ஈராக்கின் குர்திஸ்தானில் அமைந்துள்ள ஜாக்ரோஸ் மலைகளில் ஷானிதார் குகை அமைந்துள்ளது. 1950களில் ஷானிதர் குகை தோண்டப்பட்டபோது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ரால்ப் சோலெக்கி பத்து நியாண்டர்தால் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதங்களைக் கண்டறிந்தார். அதிலிருந்த ஓர் எலும்புக்கூடைச்சுற்றி பண்டைய பூங்கொத்துகளின் எச்சங்களும் இருந்தன.
  • இது, நியாண்டர்தால்கள், இறந்தவர்களை அடக்கஞ்செய்து, ‘மலரஞ்சலி’ செய்து இறுதிச்சடங்குகளை நடத்தியிருக்கலாம் எனச் சோலெக்கி கருதினார்.

3.அலைபேசிகள் மற்றும் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் மின்கலங்களில் எதிர்மின்வாயாக பயன்படுத்தப்படும் கோபால்ட், எந்நாட்டிலிருந்து அதிகமாக வெட்டியெடுக்கப்படுகிறது?

அ. சீனா

ஆ. கஜகஸ்தான்

இ. சூடான்

ஈ. காங்கோ குடியரசு

  • அலைபேசிகள் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் மின்சார வாகனங்களுக்கும் கோபால்ட் ஒரு முக்கியமான தேவையாக உள்ளது. வெட்டியெடுக்கப்படும் கோபால்ட்டில் சுமார் 60% காங்கோ குடியரசிலிருந்தே பெறப்படுகிறது. காங்கோ குடியரசின் அரசியல் சூழல் காரணமாக அதன் தொடர்ச்சியான கிடைப்புத்தன்மை ஒரு பிரச்சனையாகி வருகிறது.

4.இந்தியாவில், தற்போதுள்ள (2020) தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எண்ணிக்கை?

அ. 10

ஆ. 8

இ. 6

ஈ. 4

  • அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிட் உட்பட, இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எண்ணிக்கை, 2016இல் இருந்த ஒன்பது என்ற எண்ணி -க்கையிலிருந்து, தற்போது 2020இல் நான்காகக் குறைந்துள்ளது.
  • அலைபேசி சேவைகளின் நுகர்வு மாதத்துக்கு ஒரு பயனருக்கு 366 நிமிடங்களிலிருந்து 691 ஆக 88% அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், தரவு நுகர்வு 0.5 GBஇலிருந்து 2016 மற்றும் 2019க்கு இடையில் கிட்டத்தட்ட 11 GB அளவுக்கு அதிகரித்துள்ளது என இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5.உலகின் மிகப்பெரிய பனையெண்ணை இறக்குமதியாளராக உள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. சீனா

இ. இரஷ்யா

ஈ. சவுதி அரேபியா

  • 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் மிகப்பெரிய பனையெண்ணை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. கடந்த அக்.31ஆம் தேதியுடன் முடிவடைந்த சந்தைப்படுத்தல் ஆண்டில், இந்தியா, 9.4 மில்லியன் டன் பனையெண்ணையை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதில், 2.72 மில்லியன் டன் சுத்திகரிக்கப்பட்ட பனையெண்ணை அடங்கும்.
  • இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெ பயன்பாட்டில் 2/3 பங்கு பனையெண்ணையாக உள்ளது. இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து பனையெண்ணை இறக்குமதி செய்யப்படுகிறது. அவை, முறையே உலகின் முதல் & இரண்டாவது பனையெண்ணை பெரிய உற்பத்தியாளராக உள்ளன.

6.தற்போது, இந்தியாவில் எத்தனையாவது பொருளாதாரக் கணக்கெடுப்பு நடந்துவருகிறது?

அ. ஐந்தாவது

ஆ. ஆறாவது

இ. ஏழாவது

ஈ. எட்டாவது

  • 7ஆவது பொருளாதார கணக்கெடுப்பை, மத்திய புள்ளிவிவர அமைச்சகம் & திட்ட அமலாக்கத்தின் மத்திய புள்ளிவிவர அலுவலகம் (பொருளாதார புள்ளிவிவர பிரிவு) நடத்திவருகிறது. வளரும் நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பன்னாட்டு நடைமுறைகளின்படி மற்றும் UNSD பரிந்துரைகளுக்கு ஏற்ப, நாடு தழுவிய இந்த வணிகப்பதிவை நடத்திவருகிறது.
  • பொருளாதாரக் கட்டமைப்பைப்பற்றிய விரிவான பகுப்பாய்விற்காக அகில இந்திய, மாநிலம், மாவட்டம், சிற்றூர் மட்டங்களில் இது விரிவான தகவல்களை வழங்கும்.

7.தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்படி, ஒரு நபர், கடந்த எத்தனை மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்கு ஓர் உள்ளூர் பகுதியில் வசித்துவந்தால், அவர், ‘உள்ளூர்வாசி’ எனக் கருதப்படுவடுவார்?

அ. ஆறு மாதங்கள்

ஆ. ஓராண்டு

இ. பதினெட்டு மாதங்கள்

ஈ. ஈராண்டுகள்

  • தேசிய மக்கள்தொகை பதிவேடு (National Population Register) என்பது இந்தியாவில் குடியிருப்போர் தொடர்பான விவரங்களை பராமரிக்கும் பதிவேடாகும். தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்படி, ஒரு “வழக்கமான குடியிருப்பாளர்” என்பவர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறைந்தது ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் வாழ்ந்த நபரையோ அல்லது அடுத்த ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ விரும்பும் நபரையோ குறிக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு “வழக்கமான குடியிருப்பாளரும் – Usual Resident” இதில் பதிவு செய்வது கட்டாயமாகும்.

8.தொழில்நுட்ப அமலாக்கத்தைச் சார்ந்த அமைச்சகங்கள், துறைகள் & பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் 12 உறுப்பினர்களைக்கொண்ட, “தொழினுட்பக்குழு”வுக்கு தலைமைதாங்குபவர் யார்?

அ. Dr. R சிதம்பரம்

ஆ. ரிஷிகேஷ் நாராயணன்

இ. Dr. K விஜய் ராகவன்

ஈ. பாஸ்கர் சஹா

  • நடுவணரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரை தலைவராகக்கொண்ட பன்னிரண்டு உறுப்பினர் தொழில்நுட்பக்குழுவை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நவீன தொழில் நுட்பங்கள், தொழில்நுட்ப வரைவு மற்றும் தொழில்நுட்ப உற்பத்திப் பொருட்கள், தேசிய பரிசோதனைக் கூடங்கள், அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகளில் உருவாக்கப்பட்ட இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குதல் குறித்த கொள்கை ஆலோசனைகளை உடனுக்குடன் அளிக்க இந்தக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
  • குறிப்பிட்ட முக்கிய தொழினுட்பங்களுக்கான திட்டத்தை உள்நாட்டிலேயே உருவாக்குதல், தொழினுட்ப மேம்பாட்டுக்கு உதவும் உரிய ஆராய்ச்சி & மேம்பாட்டுத்திட்டங்களை தேர்வு செய்தல் பணிகளையும் இக்குழு மேற்கொள்ளும்.

9.உலகில் C வகை கல்லீரலழற்சிநோய் அதிக விகிதத்தில் பாதிக்கப்பட்டுள்ள நாடும் 2020ஆம் ஆண்டில் அந்நோயை ஒழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிற நாடும் எது?

அ. சவூதி அரேபியா

ஆ. சீனா

இ. எகிப்து

ஈ. இந்தியா

  • எகிப்தில், 15-20% அளவுக்கு C வகை கல்லீரலழற்சிநோய் பாதிப்பு உள்ளது. இந்த நோய்க்கு எதிரான நாடுதழுவிய பரப்புரையை அடுத்து, எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குள் அந்நாடு இந்த C வகை கல்லீரலழற்சிநோய் நோயை ஒழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10.முதலீட்டு திட்டங்களுக்கான தொழிற்துறை உரிமங்களை, ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழங்குவதை உறுதிசெய்யும், “காலவரையறைக்குட்பட்ட அனுமதிச்சட்டம் – Time-Bound Clearance Act” இயற்றுவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ள மாநில அமைச்சரவை எது?

அ. இராஜஸ்தான்

ஆ. ஹரியானா

இ. மத்திய பிரதேசம்

ஈ. குஜராத்

  • காலவரையறைக்குட்பட்ட அனுமதிச்சட்டத்தை இயற்றுவதற்கான வரைவு மசோதாவை ம.பிரதேச மாநில அமைச்சரவை அனுமதித்துள்ளது. இந்தச் சட்டம், முதலீட்டு திட்டங்களுக்கான தொழிற்துறை உரிமங்களை ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழங்குவதை உறுதிசெய்யும். ஏறக்குறைய 10 மாநிலத்துறைகள் தொடர்பான சுமார் 40 அனுமதிகள் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்கப்பட வேண்டும் என்பதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!