Tnpsc

22nd January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

22nd January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 22nd January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

22nd January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. பின்வரும் எந்த விடுதலைப் போராட்ட வீரரின் பிறந்தநாள், ஆண்டுதோறும் ‘பராக்கிரம திவாஸ்’ என கொண்டாடப்படும்?

அ) சர்தர் வல்லபபாய் படேல்

ஆ) ‘நேதாஜி’ சுபாஷ் சந்திரபோஸ்

இ) திருப்பூர் குமரன்

ஈ) பாலகங்காதர் திலகர்

  • ஜன.23ஆம் தேதியன்று வரும் ‘நேதாஜி’ சுபாஸ் சந்திரபோஸின் பிறந்த நாள், இனி ஆண்டுதோறும், “பராக்கிர திவாஸ்” என்று கொண்டாடப்படும் என்று மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்தது. ‘துணிவுக்கான நாள்’ என்பது இதன் பொருளாகும். 2021 ஜனவரி 23 முதல் அன்று ‘நேதாஜி’ சுபாஸ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாள் விழாவை இந்திய அரசு கொண்டாடவுள்ளது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. ஜனவரி 23 முதல் 2022 ஜனவரி 23 வரை தொடர் நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

2. MGNREGA’இன்கீழ், வேலை நாட்களின் எண்ணிக்கையை நூறிலிருந்து 150 நாட்களாக உயர்த்தியுள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) குஜராத்

இ) உத்தரகண்ட்

ஈ) ஹிமாச்சல பிரதேசம்

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் (MGNREGA)கீழ், வேலை நாட்களின் எண்ணிக்கையானது நூறிலிருந்து 150ஆக உயர்த்தப்படும் என்று உத்தரகண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்தின் கூற்றுப்படி, அதற்கான முழுச்செலவும் மாநில அரசாலேயே ஏற்றுக்கொள்ளப்படும்.
  • மாநிலத்தில் உள்ள வேலையில்லாதவர்கள் வேலைவாய்ப்புகளைத் தேட உதவும் வகையில், ‘உத்தரகண்ட் ஆஜீவிகா’ செயலியும் தொடங்கப்பட்டது.

3. நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து வாகன விதிகள் -2021’இன்படி, நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் எந்த ஆணையத்திற்கு உள்ளது?

அ) சாலைப் போக்குவரத்து அமைச்சகம்

ஆ) மாநில போக்குவரத்து ஆணையம்

இ) மண்டல போக்குவரத்து அலுவலகம்

ஈ) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

  • மத்திய சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகமானது அண்மையில், நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து வாகன விதிகள்-2021’ஐ அறிவித்தது.
  • இந்தப் புதிய விதிகளின்படி, மாநில போக்குவரத்து ஆணையத்தால் நாடுகளுக்கிடையேயான போக்குவரத்தை மேற்கொள்வதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்க முடியும். அதன் செல்லுபடிகாலம் ஓராண்டாகும். இப்புதிய விதிகள் இந்தியாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘டெபீசியா’ அமைந்துள்ள மாநிலம் எது?

அ) அஸ்ஸாம்

ஆ) மேகாலயா

இ) மணிப்பூர்

ஈ) திரிபுரா

  • அஸ்ஸாம் மாநில முதலமைச்சர், கெளகாத்தியின் புறநகரில் உள்ள ‘டெபீசியா’ என்னும் அறிவியல் நகரத்திற்கு அடிக்கல் நாட்டினார். இது மொத்தம் `184 கோடி செலவில் கட்டப்படவுள்ளது. இதன் பிரதான கட்டடம் தேசிய அறிவியல் அருங்காட்சியகம், நடுவணரசின் கலாசார விவகாரத்துறை மற்றும் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் கட்டப்பட்டு வருகிறது.

5. ரிசர்வ் வங்கியின் அண்மைய அறிவிப்பின்படி, இந்தியாவில், எத்தனை வங்கிகள் உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கிகள் (D-SIB’s) என வகைப்படுத்தப்பட்டுள்ளன?

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

  • பாரத வங்கி, ICICI வங்கி மற்றும் HDFC வங்கி ஆகியவற்றை உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கிகளாக (D-SIB) இந்திய ரிசர்வ் வங்கி வகைப்படுத்தியுள்ளது. மார்ச் 31, 2020 அன்று சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த வகைப்படுத்தல் நிகழ்ந்துள்ளது. இந்த வங்கிகளின் நொடிப்பு, நாட்டை கணிசமாக பாதிக்கும் என்பதே இதன் பொருளாகும்.

6. எந்தப் பிரபலமான பயணிகள் ரயிலுக்கு ‘நேதாஜி எக்ஸ்பிரஸ்’ என்று பெயர்மாற்றஞ்செய்யப்பட்டுள்ளது?

அ) ஹெளரா – கல்கா மெயில்

ஆ) மும்பை – தானே மெயில்

இ) லக்னோ – தில்லி மெயில்

ஈ) கான்பூர் – தில்லி மெயில்

  • இரயில்வே அமைச்சகம், ஹெளரா – கல்கா மெயில் இரயிலுக்கு, ‘நேதாஜி எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் மாற்றியுள்ளது. ஹெளரா – கல்கா மெயில் மிகவும் பிரபலமான மற்றும் இந்திய இரயில்வேயின் மிகவும் பழைய இரயில்களுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
  • ‘நேதாஜி’ சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாளின் ஒரு பகுதியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1941’இல் கல்கத்தாவில் உள்ள தனது வீட்டிலிருந்து தப்பியபோது, ‘நேதாஜி’ பீகாரிலிருந்து இந்த இரயிலில் சென்றதாகக் கூறப்படுகிறது.

7. அண்மையில் காலஞ்சென்ற மூத்த புற்றுநோயியல் நிபுணரும், அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவருமானவரின் பெயர் என்ன?

அ) Dr. முத்துலெட்சுமி ரெட்டி

ஆ) Dr. V சாந்தா

இ) Dr. ஆனந்தி

ஈ) Dr. காதம்பனி

  • இந்தியாவின் மூத்த புற்றுநோயியல் நிபுணரும், அடையாறு புற்று நோய் நிறுவனத்தின் தலைவருமான Dr V சாந்தா (93) சமீபத்தில் காலமானார். அவர் தனது ஐம்பதாண்டுகால மருத்துவ சேவை வாழ்வில், அந்நிறுவனத்தில் ஏழை எளியோருக்கு சேவைசெய்வதில் பெயர்பெற்றவர். பத்மஸ்ரீ, மகசேசே விருது, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

8. சமீப செய்திகளில் வந்த, ‘டிராகன் பழத்தின்’ பூர்வீகம் எது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) அமெரிக்கா

இ) ஐரோப்பா

ஈ) ஆசியா

  • ‘டிராகன் பழம்’ என்பது அமெரிக்காவை பூர்வீகமாகக்கொண்ட ஒரு காட்டுக்கற்றாழை தாவர இனமாகும். இது அந்தப் பிராந்தியங்களில் ‘பிதாஹயா’ என அழைக்கப்படுகிறது. இவ்வகை பழ இனங்கள் முதன் முதலில் 1990’க்குப்பிறகு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
  • தமிழ்நாடு, குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் இப்பழங்களை பயிரிடுகின்றன. இருப்பினும், இந்தியா தனது தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இந்தப் பழத்தை இறக்குமதி செய்கிறது. சமீபத்தில், குஜராத் மாநில அரசு, டிராகன் பழத்தை ‘கமலம்’ என்று பெயர்மாற்ற செய்ய முன்மொழிந்தது.

9. சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகமானது புவிசார்ந்த இடையூறுக்கான மேலாண்மைக்காக கீழ்க்காணும் எந்த அமைப்புடன் கூட்டிணைந்துள்ளது?

அ) ISRO

ஆ) DRDO

இ) BARC

ஈ) CSIR

  • தொழில்நுட்பப் பரிமாற்றம், புவிசார்ந்த இடையூறுக்கான நிலையான மேலாண்மை ஒத்துழைப்பு ஆகியவற்றிற்காக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகமும், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமும் (DRDO), புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • DRDO ஆய்வகங்களுள் ஒன்றான Defence Geo Informatics Research Establishment (DGRE) இதற்கான பணியில் பயன்படுத்தப்படும். நிலச் சரிவுபோன்ற இயற்கைப்பேரிடர்களால் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலைப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

10. ‘சிந்தன் பைதக்’ என்பது எந்த நடுவண் அமைச்சகத்தின் ஆய்வுக்கூட்டமாகும்?

அ) தகவல்தொடர்பு அமைச்சகம்

ஆ) கலாச்சார அமைச்சகம்

இ) துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம்

ஈ) சுற்றுலா அமைச்சகம்

  • துறைமுகங்கள் மேம்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் (சிந்தன் பைதக்), குஜராத்தின் கட்ச் பகுதியில் நடைபெறுகிறது. இதில் கடல்சார் தொலைநோக்கு-2030’க்கான திட்டங்கள் இறுதி செய்யப்படுகின்றன. முதன்மை துறைமுகங்களின் தலைவர்கள் மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
  • துறைமுகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான கருத்துக்களைப் பெறுவது, சரக்குகள் கையாளும் செலவைக் குறைப்பதற்கு சர்வதேச நடைமுறைகளைப் பின்பற்றுவது, தொழில் செய்வதை எளிதாக்குவது போன்ற விஷயங்கள் குறித்து இந்த மூன்று நாள் ஆய்வுக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

1. The birth anniversary of which freedom fighter is to be celebrated as “Parakram Diwas” every year?

A) Sardar Vallabh Bhai Patel

B) ‘Netaji’ Subash Chandra Bose

C) Tiruppur Kumaran

D) Bal Gangadhar Tilak

  • The Union Culture Ministry announced that the birth anniversary of Subhas Chandra Bose, January 23, would be celebrated as “Parakram Diwas” every year. It means the ‘Day of courage’.
  • The Ministry also said that the government is to celebrate the leader’s 125th birth anniversary year starting from January 23, 2021. A series of events from January 23 till January 23, 2022 is also planned.

2. Which state has raised the number of working days under MGNREGA from 100 to 150 days?

A) Tamil Nadu

B) Uttarakhand

C) Himachal Pradesh

D) Gujarat

  • Uttarakhand Government announced that the number of working days under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) will be increased from 100 to 150. As per the Chief Minister Trivendra Singh Rawat, the entire cost will be borne by the state government. He also launched the ‘Uttarakhand Aajeevika App’ to help unemployed people in the state to search for job opportunities.

3. As per the Inter Country Transport Vehicles Rules–2021, which authority has the power to grant Inter Country Transport Permit?

A) Ministry of Road Transport

B) State Transport Authority

C) Regional Transport Office

D) National Highways Authority of India

  • Union Ministry of Road Transport and Highways has recently notified Inter Country Transport Vehicles Rules, 2021. As per the rules, the State Transport Authority can grant the Inter Country Transport Permit, which will remain valid for a period of one year.
  • The new rules regulate the movement of passenger and goods vehicles between India and its neighbouring countries.

4. Tepesia, which was making news recently, is located in which Indian city?

A) Assam

B) Meghalaya

C) Manipur

D) Tripura

  • The Assam Chief Minister laid the foundation stone of Science City at Tepesia, in the outskirts of Guwahati. It would be built at a total expenditure of Rs. 184 crores. The main building is being built by National Council of Science Museum, Union’s Cultural Affairs department and state’s Science and Technology Department.

5. As per the RBI’s recent announcement, how many banks in India are classified as Domestic systemically important banks (D–SIBs)?

A) Two

B) Three

C) Four

D) Five

  • The Reserve Bank of India (RBI) has retained State Bank of India, ICICI Bank and HDFC Bank as domestic systemically important banks (D–SIBs), by data collected as on March 31, 2020. D–SIBs are also called as the banks which are considered as “too big to fail” meaning its failure will impact the country significantly.

6. Which famous commercial passenger train has been renamed as the ‘Netaji Express’?

A) Howrah – Kalka Mail

B) Mumbai – Thane Mail

C) Lucknow – Delhi Mail

D) Kanpur – Delhi Mail

  • The Indian Railways has recently renamed one of the oldest trains, the Howrah–Kalka Mail, as the ‘Netaji Express’. The Mail was started in the 19th Century as one of the early commercial passenger train services in India. This has been announced as a part of the 125th birth anniversary of Subash Chandra Bose. It is said Netaji took this train from Bihar, when he escaped from his house in Kolkata in 1941.

7. What is the name of the veteran oncologist and Chairman of the Adyar Cancer Institute, who recently passed away?

A) Dr Muthulakshmi Reddy

B) Dr V Shanta

C) Dr Anandi

D) Dr Kadambini

  • India’s senior oncologist and chairperson of the Adyar Cancer Institute Dr V Shanta passed away at the age of 93. She was known for serving the poor and downtrodden at the institute during her 50 yearlong medical service career.
  • The veteran was presented various awards Padma Shri, Magsaysay Award, Padma Bhushan and Padma Vibhushan.

8. ‘Dragon Fruit’, which was making news recently, is native to which region?

A) Australia

B) United States of America

C) Europe

D) Asia

  • Dragon fruit is a wild cactus species native to the Americas and it is called pitahaya in those regions. The fruit–bearing species was first introduced to India after 1990. Many states of India including Gujarat, Tamil Nadu, West Bengal cultivate the fruits.
  • However, India imports the fruit to meet its demand. Recently, Gujarat state government proposed to rename dragon fruit as ‘Kamalam’.

9. Road Transport and Highways Ministry has partnered with which organisation for Geo–hazard management?

A) ISRO

B) DRDO

C) BARC

D) CSIR

  • The Ministry of Road Transport and Highways (MoRTH) signed an agreement with the Defence Research and Development Organisation (DRDO) to collaborate in sustainable geo–hazard management.
  • The expertise of one of the DRDO labs, Defence Geo Informatics Research Establishment (DGRE), would be used. This move aims to ensure Road safety of users on National highways (NHs) against the effects of landslides and other natural calamities.

10. ‘Chintan Baithak’ is the Brainstorming Conference cum Review Meeting of which Union Ministry?

A) Ministry of Communication

B) Ministry of Culture

C) Minister of Ports, Shipping and Waterways

D) Ministry of Tourism

  • Ministry of Ports, Shipping and Waterways has organised a three–day Ports Review Meeting named ‘Chintan Baithak’ at Kutch, Gujarat. Chairpersons of Major Ports and Officials of the Ministry will participate in the brainstorming conference.
  • The resulting ideas from the meeting will be used to finalise the Maritime Vision – 2030. Improving Port performance, infrastructure and Ease of Doing Business are focus areas.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!