TnpscTnpsc Current Affairs

22nd July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

22nd July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 22nd July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. NITI ஆயோக்கின் 2021 – இந்திய புதுமை கண்டுபிடிப்பு குறியீட்டில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா 

இ. கேரளா

ஈ. தெலுங்கானா

  • NITI ஆயோக்கின் இந்திய புதுமை கண்டுபிடிப்பு குறியீட்டில் (2021) கர்நாடகா தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் முதல் பதிப்பு 2019 அக்டோபரிலும் இரண்டாவது பதிப்பு 2021 ஜனவரியிலும் வெளியிடப்பட்டது. இந்தியா புதுமை கண்டுபிடிப்பு குறியீடானது புத்தாக்க திறன்களின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை தரவரிசைப்படுத்துகிறது. தெலுங்கானா, ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை சிறந்த மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன. மணிப்பூர், ‘வடகிழக்கு மற்றும் மலையக மாநிலங்கள்’ பிரிவில் முதலிடத்தையும், சண்டிகர், ‘யூனியன் பிரதேசம் மற்றும் நகரிய மாநிலங்கள்’ பிரிவில் முதலிடத்தையும் வென்றன.

2. அண்மைச் செய்திகளில் இடம்பிடித்த, ‘பாந்தியா ஆணைய’ அறிக்கையுடன் தொடர்புடைய துறை எது?

அ. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இட ஒதுக்கீடு

ஆ. உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு 

இ. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு

ஈ. குறைந்தபட்ச ஆதரவு விலை

  • பாந்தியா ஆணையத்தின் அறிக்கையை ஏற்று, அந்த அறிக்கையின்படி தேர்தலை நடத்துமாறு மகாராஷ்டிர மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது, மாநிலத்தில் நடக்கும் உள்ளாட்சித்தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த வேட்பாளர்களுக்கு அரசியல் ரீதியான இடஒதுக்கீட்டிற்கு வழிவகுக்கிறது. இதன்மூலம் அம்மாநில உள்ளாட்சித்தேர்தலில் வேட்பாளர்களுக்கு 27 சதவீத அரசியல் இடஒதுக்கீடு கிடைக்கும்.

3. இந்தியாவின் 15ஆவது குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ. யஷ்வந்த் சின்ஹா

ஆ. திரௌபதி முர்மு 

இ. இராம்நாத் கோவிந்த்

ஈ. ஜகதீப் தங்கர்

  • நடந்து முடிந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு 64.03 சதவீத வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவர் தனது போட்டியாளரான யஷ்வந்த் சின்ஹாவைவிட 6,76,803 வாக்குகள் பெற்று வென்றுள்ளார். திரௌபதி முர்மு, இந்தியாவின் குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பழங்குடி சார்ந்த அரசியல் தலைவர் என்ற வரலாற்றையும் உருவாக்கியுள்ளார்.

4. சமீப செய்திகளில் இடம்பெற்ற வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டம், 2021–உடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 

இ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஈ. வெளியுறவு அமைச்சகம்

  • செயற்கைக் கருத்தரிப்பு நுட்ப (ஒழுங்குமுறை) சட்டம், 2021 மற்றும் வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டம், 2021 ஆகியவற்றின்படி மனித கருமுட்டைகளை இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடைசெய்துள்ளது. இதனை அயல் நாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது. முன்னதாக, நலவாழ்வு ஆராய்ச்சித்துறையின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஆராய்ச்சி நோக்கங்களுக்காகத்தவிர வேறு எந்தக் காரணங்களுக்காகவும் மனித கருமுட்டைகளின் இறக்குமதி தடைசெய்யப்பட்டது.

5. சிறுத்தை மற்றும் வனவுயிரிகள் பாதுகாப்பை மீண்டும் தொடங்குவதற்காக கீழ்க்காணும் எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. நமீபியா 

இ. கென்யா

ஈ. கானா

  • புது தில்லியில் இந்திய நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சரும் நமீபிய துணைப்பிரதமரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் எட்டுச் சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்த வழிவகுக்கிறது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வனவுயிரிகள் பாதுகாப்பு மற்றும் நிலையான பல்லுயிர் பயன்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை உள்ளடக்கியது. இந்திய வனவுயிரிகள் நிறுவனத்தில் வனவுயிரிகள் மேலாண்மை படிப்புகளில் நமீபிய மாணவர்களுக்கு இந்தியா பயிற்சியளிக்கும்.

6. நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகமானது கீழ்க்காணும் எந்த மாநிலம்/UT–இல் ‘ஹரியாலி மகோத்சவத்தை’ ஏற்பாடு செய்தது?

அ. மகாராஷ்டிரா

ஆ. புது தில்லி 

இ. உத்தர பிரதேசம்

ஈ. பஞ்சாப்

  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் புது தில்லியில் ‘அமுதப் பெருவிழாவின்’ ஒருபகுதியாக ‘ஹரியாலி மகோத்சவத்தை’ ஏற்பாடு செய்துள்ளது. ‘ஹரியாலி மகோத்சவம்’ என்பது மரங்களின் முக்கியத்துவம் மற்றும் வனப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘மர விழா’வாகும். ‘ஹரியாலி மகோத்சவம்’, மாநில அரசுகள், காவல்துறை அமைப்புகள் மற்றும் தில்லியின் பள்ளிகளுடன் இணைந்து நடவுசார் இயக்கங்களை மேற்கொள்வதற்காக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7. அண்மைச் செய்திகளில் இடம்பிடித்த, ‘வாரணாசி பேரறிவிப்பு’டன் தொடர்புடைய துறை எது?

அ. சுற்றுச்சூழல்

ஆ. கல்வி 

இ. விண்வெளி அறிவியல்

ஈ. மருத்துவ அறிவியல்

  • கல்வி அமைச்சகமும் பல்கலைக்கழக மானியக்குழுவும் இணைந்து வாரணாசியில் அகில பாரதிய சிக்ஷா சமகத்தை (ABSS) ஏற்பாடு செய்துள்ளன. உயர்கல்வி குறித்த வாரணாசி பேரறிவிப்பு, ABSS–இன் எதிர்பார்க்கப்படும் விளைவு, இந்திய உயர்கல்வி ஆணையத்திற்கான காலவரிசையை அறிவிக்கும்.
  • இப்பேரறிவிப்பின் மற்றொரு கூறு ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு (RIE) அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்வதாகும்.

8. ‘நியூஸ் இனிஷியேட்டிவ் இந்தியா டிரெய்னிங் நெட்வொர்க்’ என்பது எந்த நிறுவனத்தின் முனைவாகும்?

அ. மைக்ரோசாப்ட்

ஆ. கூகுள் 

இ. அமேசான்

ஈ. மெட்டா

  • 5 புதிய இந்திய மொழிகளை உள்ளடக்கும் வகையில் கூகுள் தனது ‘கூகுள் செய்திகள் முனைவு இந்தியா பயிற்சி வலையமைப்பை’ விரிவுபடுத்தியுள்ளது. கூகுளின் இம்முனைவானது, இணையத்தில் பரவும் போலிச்செய்திகளைக் கையாளத் தேவையான டிஜிட்டல் திறன்களை பத்திரிக்கையாளர்களுக்கும் செய்தி நிறுவனங்களுக்கும் கற்பிக்க உதவுகிறது. இது இப்போது பஞ்சாபி, அஸ்ஸாமி, ஒடியா, குஜராத்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் கிடைக்கும். “Google News Initiative India Training Network” ஆனது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு DataLeads உடன் இணைந்து தொடங்கப்பட்டது. கூகுள் DataLeads உடன் இணைந்து Fact–Check அகாதமியை தொடங்கவுள்ளது.

9. இந்தியாவில், ‘முதலாவது இந்திய கால்நடைகள் நலவாழ்வு குறித்த உச்சிமாநாடு–2022’ நடைபெறும் இடம் எது?

அ. புது தில்லி 

ஆ. சிக்கிம்

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. கர்நாடகா

  • மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா, இந்தியாவில், முதலாவது கால்நடைகள் நலவாழ்வுகுறித்த உச்சிமாநாட்டைத் தொடங்கிவைத்தார். இந்த முதலாவது கால்நடைகள் நலவாழ்வுகுறித்த உச்சிமாநாடு – 2022 ஆனது புது தில்லியில் நடைபெற்றது. இது இந்திய உணவு மற்றும் உழவு அமைப்பு (ICFA) மற்றும் அக்ரிகல்ச்சர் டுடே குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

10. கூடங்குளத்தில் உள்ள அணுமின்னுற்பத்தி நிலையத்திற்கு தொழில்நுட்பம் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. ரஷ்யா 

இ. பிரான்ஸ்

ஈ. இஸ்ரேல்

  • கூடங்குளம் அணுமின்னுற்பத்தி நிலையத்தின் (KNPP) நான்கு மின்னுற்பத்தி அலகுகளுக்கு தெர்மோகப்பிள்களை வழங்குவதற்கு உருசிய அணுவாற்றல் நிறுவனமான Rosatom State Corporation–இன் ஒரு பிரிவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. LUCH அறிவியல் தயாரிப்பு சங்கம், Rosatom–இன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவின் ஒரு பகுதியான NPP, செயற்முறை உபகரணங்களின் வெப்பக்கட்டுப்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய உணரிகளை வழங்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. உழவர் இரயில் திட்டம்

2020 ஆக.7ஆம் தேதி தொடங்கப்பட்ட உழவர் இரயில் சேவை, கடந்த ஜூன்.30ஆம் தேதி வரை 2,359 உழவர் இரயில் சேவைகளை இரயில்வே இயக்கியுள்ளது. வெங்காயம், வாழைப்பழம், உருளைக்கிழங்கு, இஞ்சி, பூண்டு, மாம்பழம், திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, சப்போட்டா, எலுமிச்சை, குடைமிளகாய், முட்டைக்கோஸ், காலிபிளவர் உள்ளிட்ட அழுகும் பொருட்களை சுமார் 7.9 இலட்சம் டன்கள் வரை ஏற்றிச்சென்றுள்ளது.

2. இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு சர்வதேச எரிசக்தி விருது

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் கௌசிக் இராஜசேகராவுக்கு மதிப்புமிக்க சர்வதேச எரிசக்தி விருது கிடைத்துள்ளது.

கௌசிக் இராஜசேகரா, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படும் சர்வதேச எரிசக்தி விருது வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மின் மயமாக்கம், எரிசக்தி செயல்திறன் தொழில்நுட்பம், மின்னுற்பத்தியின்போது கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக இராஜசேகராவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

3. முதல் மலேரியா தடுப்பூசி: ஆப்பிரிக்காவில் அறிமுகம்

பொதுமக்களுக்குச் செலுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள உலகின் முதல் மலேரியா தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு (WHO) மாலாவி, கானா, கென்யா ஆகிய 3 ஆப்பிரிக்க நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கிளாக்ஸோஸ்மித்கிளைன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும், ‘மஸ்கிரிக்ஸ் – Mosquirix’ என்ற அந்தத்தடுப்பூசி 30% மட்டும் மலேரியாவைக் கட்டுப்படுத்தும் திறன்கொண்டது. மேலும், அத்தடுப்பூசியை நான்கு தவணைகள் செலுத்திக் கொள்ளவேண்டும். எதிர்பார்த்ததைவிட அதிக விலையும் மிகவும் குறைவான செயல்திறனைக் கொண்டுள்ளதால் இந்தத்தடுப்பூசிக்கு அளித்து வந்த நிதி ஆதரவை விலக்கிக்கொள்வதாக பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

1. Which state is ranked first in the NITI Aayog’s India Innovation Index (2021)?

A. Tamil Nadu

B. Karnataka 

C. Kerala

D. Telangana

  • Karnataka has been ranked first in the NITI Aayog’s India Innovation Index (2021) for third third time in a row. The first edition was released in October 2019 and second in January 2021.
  • The India Innovation Index ranks states and union territories on the basis of innovation capabilities. Telangana, Haryana and Maharashtra stood second, third and fourth in the list of top states. Manipur topped the ‘North East and Hill States’ section and Chandigarh won the ‘Union Territory and City States’ category.

2. ‘Banthia Commission’ report, which was seen in the news, is associated with which field?

A. Reservation in Lok Sabha and Rajya Sabha

B. Reservation in Local bodies 

C. Reservation in Promotion

D. Minimum Support Price

  • The Supreme Court has accepted the report of the Banthia Commission and directed the Maharashtra State Election Commission to hold elections as per the report. It paves way for political reservation for candidates belonging to Other Backward Classes in the Local Bodies’ Elections in the state. The candidates will get 27 percent political reservation in local self–government elections in the state.

3. Who has been selected as the 15th President of India?

A. Yashwant Sinha

B. Draupadi Murmu 

C. Ramnath Govind

D. Jagdeep Dhankhar

  • Draupadi Murmu, the NDA’s presidential candidate, emerged victorious in the presidential election with 64.03 percent votes. She bagged a total of 6,76,803 votes over her rival Yashwant Sinha who got 3,80,177 votes. Draupadi Murmu also scripted history to become the first tribal leader to be elected as the President of India.

4.  Surrogacy (Regulation) Act, 2021, which was seen in the news, is associated with which Ministry?

A. Ministry of Home Affairs

B. Ministry of Health and Family Welfare 

C. Ministry of Women and Child Development

D. Ministry of External Affairs

  • The Government has prohibited import of human embryos in line with the Assisted Reproductive Technology (Regulation) Act, 2021 and The Surrogacy (Regulation) Act, 2021. This was announced by the Directorate General of Foreign Trade. Earlier, imports were prohibited except for research purposes based on the guidelines of the Department of Health Research.

5. India signed a MoU with which country for reintroduction of cheetah and wildlife conservation?

A. Australia

B. Namibia 

C. Kenya

D. Ghana

  • An MoU was signed by Union Environment Minister of India and Deputy Prime Minister of Namibia, in New Delhi. It paves way for reintroduction of eight cheetahs in Kuno National Park in Madhya Pradesh. The MoU also covers cooperation on wildlife conservation and sustainable biodiversity utilisation. India will train Namibian candidates in wildlife management courses at the Wildlife Institute of India.

6. Environment Ministry organised the ‘Hariyali Mahotsav’ in which state/UT?

A. Maharashtra

B. New Delhi 

C. Uttar Pradesh

D. Punjab

  • Ministry of Environment, Forest & Climate Change has organised ‘Hariyali Mahotsav’ in New Delhi in the spirit of ‘Azadi Ka Amrit Mahotsav’. Hariyali Mahotsav, the ‘Tree Festival’ is organized to create awareness about the importance of trees and forest conservation. Hariyali Mahotsav is being organized by Ministry of Environment, Forest and Climate Change in collaboration with the State Governments, Police Institutions and Schools of Delhi for undertaking plantation drives.

7. ‘Varanasi Declaration’, which was seen in the news recently, is associated with which field?

A. Environment

B. Education 

C. Space Science

D. Medical Science

  • Ministry of Education (MoE) and University Grants Commission (UGC) have organised Akhil Bharatiya Shiksha Samagam (ABSS) in Varanasi. Varanasi Declaration on Higher Education, an expected outcome of the ABSS will announce a timeline for the Higher Education Commission of India. Another component of the Declaration will be to ensure that research, innovation and entrepreneurship (RIE) becomes accessible to all Higher Education Institutions.

8. ‘News Initiative India Training Network’ is an initiative of which company?

A. Microsoft

B. Google 

C. Amazon

D. Meta

  • Google has expanded its Google News Initiative India Training Network to cover five new Indian languages. This Google initiative helps teach journalists and newsrooms learn digital skills needed to tackle misinformation online. It will now be available in Punjabi, Assamese, Odia, Gujarati, and Malayalam.
  • The Google News Initiative India Training Network was launched four years ago in partnership with DataLeads. Google is set to launch a Fact–Check Academy in partnership with DataLeads.

9. Which is the venue of ‘First India Animal Health Summit 2022’ in India?

A. New Delhi 

B. Sikkim

C. Arunachal Pradesh

D. Karnataka

  • Parshottam Rupala, Union Minister of Fisheries, Animal Husbandry and Dairying inaugurated First India Animal Health Summit 2022. The First India Animal Health Summit 2022 was held in New Delhi. It was organized by Indian Chamber of Food and Agriculture (ICFA) and the Agriculture Today Group.

10. Which country has signed pact for supplying technology for Kudankulam nuclear power plant?

A. USA

B. Russia 

C. France

D. Israel

  • A unit of Russian nuclear major Rosatom State Corporation has signed an agreement to supply thermocouples for four power units of the Kudankulam Nuclear Power Plant (KNPP) in Tamil Nadu. LUCH Scientific Production Association, part of the R&D unit of Rosatom will provide the new sensors designed for thermal control of NPP process equipment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!