Tnpsc

22nd June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

22nd June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 22nd June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

22nd June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. ‘உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள்’ என்ற அறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) இந்திய ரிசர்வ் வங்கி

இ) உலக வங்கி

ஈ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

  • உலக வங்கியானது 2021-22ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.3 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. அது முந்தைய மதிப்பீட்டில் 10.1 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது. இது, உலக வங்கியின் ‘உலகளாவிய பொருளாதார வாய்ப்பு’ அறிக்கையின் சமீபத்திய இதழில் வெளியிடப்பட்டுள்ளது. COVID-19’இன் இரண்டாவது அலையின் தாக்கத்தின் காரணமாக இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.

2. 2021ஆம் ஆண்டில், உலகின் மிகவும் வாழத்தகுந்த நகரங்களைப் பற்றிய த எகனாமிஸ்ட்டின் வருடாந்திர ஆய்வுப்பட்டியலில் முதலிடம் பிடித்த நகரம் எது?

அ) புது தில்லி

ஆ) ஆக்லாந்து

இ) மதுரை

ஈ) வியன்னா

  • 2021ஆம் ஆண்டில் உலகின் மிகவும் வாழத்தகுந்த நகரங்களைப்பற்றிய த எகனாமிஸ்ட்டின் வருடாந்திர ஆய்வின்படி, ஆக்லாந்து (நியூசிலாந்து) உலகின் மிகவும் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து ஜப்பானின் ஒசாகா மற்றும் டோக்கியோ ஆகிய நகரங்கள் உள்ளன.
  • முன்னர் உலகின் மிகவும் வாழத்தகுந்த நகரமான வியன்னா 12ஆவது இடத்திற்கு வந்துவிட்டது. COVID-19’ஐ கையாளுவதில் வெற்றிகரமான அணுகுமுறை காரணமாக ஆக்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.

3. எந்த அரசியலமைப்பு ரீதியான பதவிக்கு அனுப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்?

அ) இந்திய தலைமை நீதிபதி

ஆ) தேர்தல் ஆணையர்

இ) CAG

ஈ) தலைமை வழக்குரைஞர்

  • மூத்த தேர்தல் அதிகாரியான அனுப் சந்திர பாண்டே, இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1984ஆஆம் ஆண்டு இஆப அதிகாரியான அவர், உத்தர பிரதேச மாநிலத்தின் தலைமைச்செயலராக பணியாற்றியுள்ளார். உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்று -ம் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை அனுப் சந்திர பாண்டே மேற்பார்வையிடவுள்ளார்.

4. 2030ஆம் ஆண்டளவில் AIDS’ஐ முடிவுக்குக்கொண்டுவருவதற் -கான அரசியல் ரீதியான தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட சர்வதேச நிறுவனம் எது?

அ) ஐநா பொது அவை

ஆ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

இ) WHO

ஈ) UNICEF

  • வரும் 2030ஆம் ஆண்டிற்குள் AIDS’ஐ உலகிலிருந்து முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐநா பொது அவைய அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பான ஒப்புதலையும் அது அளித்துள்ளது. இந்தத் தீர்மானத்தற்கு 165 வாக்குகள் ஆதரவாகவும் 4 வாக்குகள் எதிராகவும் கிடைத்தது.

5. ஆபரேஷன் பாஞ்சியா XIV’ஐ நடத்திய அமைப்பு எது?

அ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஆ) இந்திய இராணுவம்

இ) இந்திய வான்படை

ஈ) பன்னாட்டுக் காவலகம்

  • “ஆபரேஷன் பாஞ்சியா XIV” என்ற பெயரிலான ஒரு பயிற்சியை பன்னா -ட்டுக்காவலகம் (INTERPOL) நடத்தியது. இதில், மருந்துகள் மற்றும் மருத்துவ தயாரிப்புகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதில் ஈடுபட்ட வலைத்தளங்கள் மற்றும் இணையசந்தைகள் உட்பட 1.10 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைய இணைப்புகளை அவ்வமைப்பு தடை செய்துள்ளது. இந்த நடவடிக்கையில் இந்தியாவும் பங்கேற்றது. இந்தியாவுடன் 92 நாடுகளும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றன.

6. டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் என்பது எந்த அமைச்சகத்தின் கீழுள்ள ஒரு நிறுவனமாகும்?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இ) நிதி அமைச்சகம்

ஈ) கார்ப்பரேட் விவகார அமைச்சகம்

  • டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் என்பது ஒரு இலாபநோக்கற்ற நிறுவ -னமாகும். அது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் செயல்படுகிறது. சமீபத்தில் இந்நிறுவனம், உழவர்களுக்கு ‘தேவை அடிப்படையிலான தொலைநிலை வேளாண் ஆலோசனைகளை’ வழங்குவதற்காக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
  • இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ், ICAR’இன் “DIC’இன் அளவளாவும் தகவல் பரவல் அமைப்பு மற்றும் மற்றும் கிசான்சாரதி இயங்குதளம்” ஆகியவை ஒருங்கிணைந்து சிறந்த சேவைகளை வழங்கும்.

7. “இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள்” என்ற அறிக்கையின்படி, காலநிலை மாற்றம் காரணமாக 2040ஆம் ஆண்டளவில், இந்தியாவின் வறுமை விகிதம் எவ்வளவு உயரும்?

அ) 2%

ஆ) 3.5%

இ) 4%

ஈ) 10%

  • ‘இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள்’ என்ற தலை -ப்பில் இலண்டனைச்சார்ந்த உலகளாவிய மதியுரையகமான ஓவர்சீஸ் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக 2040ஆம் ஆண்டளவில் இந்தியாவின் வறுமை 3.5 சதவிகிதம் அதிகரிக்கும் என்று அவ்வறிக்கை கூறுகிறது.
  • 2100ஆம் ஆண்டளவில் காலநிலை மாற்றம் காரணமாக, இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 முதல் 10% வரை இழக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

8. எந்த நிறுவனத்துடன் இணைந்து, ILO, ‘குழந்தைத் தொழிலாளர்: உலகளாவிய மதிப்பீடுகள் 2020, போக்குகள் மற்றும் முன்னோக்கி செல்லும்பாதை’ என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டுள்ளது?

அ) UNICEF

ஆ) உலக நலவாழ்வு அமைப்பு

இ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஈ) உலக வங்கி

  • பன்னாட்டு தொழிலாளர் அமைப்பும் UNICEFஉம் இணைந்து ‘குழந்தைத் தொழிலாளர்: உலகளாவிய மதிப்பீடுகள் 2020, போக்குகள் மற்றும் முன்னேற்ற பாதை’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு -ள்ளன. இது, ஜூன்.12 அன்று வரும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக நாளுக்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது.
  • உலகெங்கிலும் குழந்தைத்தொழிலாளர்களின் எண்ணிக்கை 16 கோடி -யாக உயர்ந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

9. வட இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், சூறாவளி உருவாவதைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?

அ) IIT மெட்ராஸ்

ஆ) IISc, பெங்களூரு

இ) IIT கரக்பூர்

ஈ) தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம்

  • கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் சீனாவின் கரையோர மண்டல ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாள -ர்கள், வட இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் சூறாவளி உருவாவ
    -தைக்கண்டறிவதற்கான ஒரு நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்த ஆய்வு, காலநிலை மாற்றத் திட்டத்தின்கீழ், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.

10. உழவின் பின்னணியில், ‘NUE’ என்பது எதைக் குறிக்கிறது?

அ) Nitrogen Utility Exposure

ஆ) Nitrogen Use Efficiency

இ) Nitrogen Ultra Efficiency

ஈ) Nitro Benzene Use Efficiency

  • Nitrogen Use Efficiency (NUE) என்பது தாவரத்தால் உறிஞ்சப்பட்டு பயன்படுத்தப்படும் பயனுறு நைட்ரஜனின் பின்னம் என வரையறுக்கப்படுகிறது. சமீபத்தில், இந்திய உயிரி தொழில்நுட்ப வல்லுநர்கள், அரிசியில் நைட்ரஜன் பயன்பாட்டு செயல்திறனுக்கான மரபணுக்களை அடையாளங்கண்டுள்ளனர். இது, நைட்ரஜன் மாசையும் பில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள உரங்களையும் மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 16000’க்கும் மேற்பட்ட மரபணுக்களை ஆராய்ந்த பின்னர், ஆராய்ச்சியாளர்கள் 6 உயர்திறன் மரபணுக்களை பட்டியலிட்டனர்.

செய்தித்தாள் நடப்புநிகழ்வுகள்

1. முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு

ஐந்து பேர் அடங்கிய பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் இடம்பெறுவோர்:

1. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் இரகுராம் இராஜன்

2. நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப்பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ

3. மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்.

4. ராஞ்சி பல்கலைக்கழக தில்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ்

5. மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன்

இவர்கள் பணிப்பொருளாதார நிலையை ஆராய்ந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த முதலமைச்சருக்கு ஆலோசனைகளை அளிப்பார்கள். இந்த முயற்சி அரசியல் வரலாற்றில் முதல்முயற்சி என்பதாகப் பார்க்கப்படுகிறது.

2. உலக அளவில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்ததில் இந்தியாவுக்கு ஐந்தாவது இடம்

கடந்த 2020-ஆம் ஆண்டில் அதிக அளவில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த நாடுகளின் பட்டியலில் 6,400 கோடி டாலர் (`4.7 லட்சம் கோடி) முதலீட்டுடன் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்து ஐநா’இன் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளதாவது:

கரோனா பேரிடர் சா்வதேச அந்நிய நேரடி முதலீட்டில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, கடந்த 2020’இல் சர்வதேச நாடுகளில் அந்நிய நேரடி முதலீட்டின் அளவு 35 சதவீதம் சரிவடைந்து 1 இலட்சம் கோடி டாலர்களாக குறைந்துள்ளது.

அதேசமயம், கரோனா பாதிப்புக்கு முந்தைய 2019’ஆம் ஆண்டில் இந்த முதலீடு 1.5 இலட்சம் கோடி டாலராக காணப்பட்டது. அதேசமயம், இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டில் 5,100 கோடி டாலராக (`3.78 லட்சம் கோடி) காணப்பட்ட அந்நிய நேரடி முதலீடு பேரிடர் காலாமான 2020ஆம் ஆண்டிலும் 27% வளர்ச்சியைக்கண்டு 6,400 கோடி டாலராக (`4.7 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இதற்கு, தகவல் & தொலைத்தொடர்பு தொழில்நுட்பத் துறையே முக்கிய காரணம். இது, உலக அளவில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகம் ஈர்த்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 5ஆவது இடத்தை பிடிக்க உதவியுள்ளது.

கரோனா பேரிடர் காரணமாக, சர்வதேச அளவில் டிஜிட்டல் கட்டமைப்பு, சேவைகளுக்கான தேவை சூடுபிடித்துள்ளது. இதன் விளைவாக, ITC துறையில் புதிய அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கான அறிவிப்புக -ள் 22% அதிகரித்து 8,100 கோடி டாலராக (`6 இலட்சம் கோடி) அதிகரித் -துள்ளது. இதில், இந்தியாவில் ITC உள்கட்டமைப்பை உருவாக்க அமே -ஸான் அறிவித்துள்ள 280 கோடி டாலர் (`20,773 கோடி) திட்டமும் முக்கிய அங்கமாகும் என ஐநா வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

3. பள்ளிகளில் புகார்பெட்டி, மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, ஆடை கட்டுப்பாடு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளிக் குழந்தைகளைப் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல் மற்றும் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகள் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்த அரசாணையை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.

வழிகாட்டுதல்கள், நெறிமுறைகளின் விவரம்:

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்வி வாரியங்களைச் சேர்ந்த அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்த நெறிமுறைகள் பொருந்தும். மாணவர் பாதுகாப்
-பைத் தொர்ச்சியாக மேற்பார்வை செய்யவும், அதுசார்ந்த நடவடிக்கைக -ளை மேற்பாா்வை செய்யவும் ஒவ்வொரு பள்ளியிலும், ‘மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு’ அமைக்கப்படும்.

இக்குழுவில் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியரிருவர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் இருவர், பள்ளி நிர்வாக உறுப்பினர் ஒருவர், ஆசிரியரல்லாத பணியாளர் ஒருவர் மற்றும் தேவைக்கேற்ப பள்ளி சாரா வெளிநபர் ஒருவர் என உறுப்பினர்களாக இருப்பர்.

வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளின் முக்கிய அம்சங்கள்…

* பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு

* ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு

* புகார்களைத் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

* போக்ஸோ சட்டம் குறித்து பயிற்சி

* புகார்களைத் தெரிவிக்க பாதுகாப்புப் பெட்டிகள்

* நவ.15 முதல் 22 வரை குழந்தைகள் துன்புறுத்தலைத் தடுக்கும் வாரம்

4. சேதி தெரியுமா?

ஜூன்.11: பிட்காயினைச் சட்டபூர்வ நாணயமாக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்ட முதல் நாடாகியுள்ளது மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சால்வடார்.

ஜூன்.12: நெதர்லாந்தில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான மகளிர் 10,000 மீ ஓட்டத்தை எத்தியோப்பியாவைச்சேர்ந்த லெட்சென்பெ -ட் கிடி 29:01:03 நிமிடங்களில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.

ஜூன்.13: கரோனா தடுப்பூசிகளை அதிகம் வீணடித்த மாநிலங்களில் ஜார்கண்ட் முதலிடம் பெற்றது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

ஜூன்.14: இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதிதர அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு மறுத்துவிட்டது.

ஜூன்.15: சீனாவின் மனித உரிமைமீறல்களை அம்பலப்படுத்திய இந்திய வம்சாவளி செய்தியாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆப்ரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலையைப் படம் பிடித்த 18 வயது இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியர் புலிட்சர் விருதின் சிறப்புப் பரிசுக்குத் தேர்வானார்.

ஜூன்.15: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் அனைத் -துக்கும் ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம் என்கிற புதிய விதிமுறை அமலுக்கு வந்தது.

ஜூன்.15: தமிழ்நாட்டில் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இரண்டாம் கட்டமாக `2,000 COVID நிவாரண நிதி வழங்கும் திட்டம் தொடங்கியது.

ஜூன்.17: பிரெஞ்சு ஓப்பன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் செர்பி -யாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவருடைய 19ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.

1. ‘Global Economic Prospects’ is the flagship report of which institution?

A) NITI Aayog

B) RBI

C) World Bank

D) IMF

  • The World Bank has forecasted GDP growth of India to be 8.3 per cent for FY22, as against its earlier estimate of 10.1 percent. This has been published in the World Bank’s Global Economic Prospects Report’s latest issue. This slash in GDP is on account of unprecedented impact of second wave of COVID 19.

2. Which city has topped the list of The Economist’s annual survey of the world’s most liveable cities in 2021?

A) New Delhi

B) Auckland

C) Madurai

D) Vienna

  • As per the Economist’s annual survey of the world’s most liveable cities in 2021, Auckland (New Zealand) has topped the list of most liveable cities in the world. This is followed by Osaka and Tokyo in Japan.
  • Vienna, previously the world’s most liveable city has fallen to 12th position. Auckland has topped the list owing to its successful approach in containing the COVID–19.

3. Anup Chandra Pandey has been appointed to which constitutional position?

A) Chief Justice of India

B) Election Commissioner

C) CAG

D) Solicitor General

  • Senior bureaucrat Anup Chandra Pandey has been appointed as the Election Commissioner of India. Mr. Pandey is a 1984–batch IAS officer who has served as the Chief Secretary of Uttar Pradesh. Anup Chandra Pandey is set to oversee the forthcoming assembly elections of Uttar Pradesh, Punjab, Goa, Manipur and Uttarakhand.

4. Which international agency has adopted a political declaration to end AIDS by the year 2030?

A) UN General Assembly

B) IMF

C) WHO

D) UNICEF

  • The General Assembly of the United Nations has called for an immediate action to end AIDS from the world by the year 2030. The assembly had passed an approval in this regard and has noted the present condition of AIDS with an alarm. The declaration was adopted with 165 votes in favour and four against.

5. Operation Pangea XIV was exercised by which agency?

A) IMF

B) Indian Army

C) Indian Airforce

D) INTERPOL

  • An exercise named the “Operation Pangea XIV” was conducted by the Interpol, in which the agency has taken down more than 1.10 lakh web links, including websites and online marketplaces, which were involved in illegal sale of medicines and medical products. India also participated in this operation and along with India, 92 countries participated in this exercise.

6. Digital India Corporation is an institution under which Ministry?

A) Ministry of Home Affairs

B) Ministry of Electronics and Information Technology

C) Ministry of Finance

D) Ministry of Corporate Affairs

  • The Digital India Corporation is a Not–for–profit company, working under the Union Ministry of Electronics and Information Technology.
  • Recently, the company has entered into an MoU with Indian Council for Agricultural Research (ICAR) for providing ‘Demand Based Tele Agriculture Advisories’ to farmers. Under the MoU, “Interactive Information Dissemination System of DIC and KisanSarathi Platform” of ICAR will be collaborated to provide better extension services.

7. As per the report “The Costs of Climate Change in India”, by what % India’s poverty rate would increase by 2040 due to climate change?

A) 2%

B) 3.5%

C) 4%

D) 10%

  • The report titled ‘The Costs of Climate Change in India’ has been released by London–based global think tank Overseas Development Institute. The report states that India’s poverty would increase by 3.5% by the year 2040 on account of climate change. The report also stated that India would lose around 3 to 10 per cent GDP due to climate change by the year 2100.

8. The report titled ‘Child Labour: Global estimates 2020, trends and the road forward’ has been released by ILO in association with which organization?

A) UNICEF

B) WHO

C) IMF

D) World Bank

  • The International Labour Organization (ILO) and the UNICEF have released a report titled ‘Child Labour: Global estimates 2020, trends and the road forward’.
  • This has been released ahead of the World Day Against Child Labour in June 12th. As per the report, the number of child labour has risen to an alarming number of 16 crore across the world.

9. Which Indian institution has developed a technique to detect cyclone formation in North Indian Ocean region?

A) IIT Madras

B) IISc Bengaluru

C) IIT Kharaghpur

D) National Geophysical Research Institute

  • Researchers at the Indian Institute of Technology, Kharagpur and Yantai Institute of Coastal Zone Research in China have developed a technique to detect cyclone formation in the North Indian Ocean region, in advance.
  • The study was conducted under the Climate Change Program with support from the Centre’s Department of Science and Technology.

10. With reference to Agriculture, what does ‘NUE’ stand for?

A) Nitrogen Utility Exposure

B) Nitrogen Use Efficiency

C) Nitrogen Ultra Efficiency

D) Nitro Benzene Use Efficiency

  • Nitrogen use efficiency (NUE) is defined as the fraction of applied nitrogen that is absorbed and used by the plant. Recently, Indian biotechnologists have identified candidate genes for nitrogen use efficiency (NUE) in rice.
  • This is expected to save nitrogenous pollution and fertilisers worth billions of rupees. After analysing over 16000 genes, researchers shortlisted 6 high priority target genes, to improve NUE in rice.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!