22nd March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

22nd March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 22nd March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

22nd March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. தேசிய பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநராக நியமிக்கப் -பட்டுள்ளவர் யார்?

அ) ஸ்வபன் தாஸ்குப்தா

ஆ) M கணபதி

இ) P K சின்ஹா

ஈ) A P மகேஸ்வரி

 • மூத்த இ கா ப அதிகாரியான M A கணபதி, தேசிய பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர், உள்நாட் -டு வான் போக்குவரத்து பாதுகாப்பகத்தின் தலைமை இயக்குநராக பணியாற்றி வருகிறார். மற்றொரு இ கா ப அதிகாரியான குல்தீப் சிங், மத்திய சேமக்காவல்படையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டு -ள்ளார்.

2. பின்வரும் எவ்வாண்டில், கட்சித்தாவல் தடைச்சட்டம் என்றழைக்கப்படும் 10ஆவது அட்டவணை அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது?

அ) 1972

ஆ) 1985

இ) 1992

ஈ) 2005

 • கட்சித்தாவல் தடைச்சட்டம் என்று பொதுவாக அறியப்படும் பத்தாவது அட்டவணை, 1985ஆம் ஆண்டில் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்வபன் தாஸ்குப்தா தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே மாநிலங்களவையில் இருந்து விலகினார்.
 • மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 2016’இல் அவர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு நியமன நாடாளுமன்ற உறுப்பினர், பதவி ஏற்ற 6 மாதத்துக்கு பிறகு ஏதேனும் ஓர் அரசியல் கட்சியில் சேர்ந்தால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என அரசியல் சட்டத்தின் பத்தாவது அட்டவணை கூறுகிறது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற P K சின்ஹா, தனது எந்தப் பதவியிலிருந்து அண்மையில் விலகினார்?

அ) பொருளாதார விவகாரங்கள் செயலாளர்

ஆ) பிரதமரின் முதன்மை ஆலோசகர்

இ) நிதி செயலாளர்

ஈ) NITI ஆயோக்கின் தலைமைச் செயலதிகாரி

 • பிரதமரின் முதன்மை ஆலோசகராக பதவி வகித்து வந்த P K சின்ஹா, சமீபத்தில் தனது பதவியிலிருந்து விலகினார். பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் முதல் பதவிக்காலத்தில், அமைச்சரவை செயலாளராக P K சின்ஹா பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. திறன் மேம்பாட்டிற்காக, `81 இலட்சம் மதிப்புள்ள பயிற்சிக்கருவிக -ளை, எந்த நாட்டில் உள்ள இந்திய தூதர் ஒப்படைத்தார்?

அ) நேபாளம்

ஆ) மியான்மர்

இ) மாலத்தீவு

ஈ) இலங்கை

 • இலங்கையில் உள்ள இந்திய தூதர், அண்மையில், சுமார் `81,00,000 மதிப்புள்ள பயிற்சிக்கருவி உதவிகளை இலங்கையின் கடற்படைக்கு திறன் மேம்பாட்டிற்காக வழங்கியுள்ளார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்தபோது, உயராணையர் கோபால் பாக்லே பயிற்சிக்கருவிகளை முறையாக வழங்கினார். அவர், கின்டெல் மின்னூல்களையும் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் நூலகத்தில் ஒப்படைத்தார்.

5. இந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி ஏற்றுமதிக் கழகம் அமைந்துள்ள இடம் எது?

அ) புது தில்லி

ஆ) உத்தர பிரதேசம்

இ) குஜராத்

ஈ) மத்திய பிரதேசம்

 • உத்தர பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் அமைந்துள்ள கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி ஏற்றுமதிக்கழகத்தை மூட, அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி ஏற்றுமதிக்கழகம் என்பது மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள, அரசுக்கு சொந்தமான ஒரு நிறுவனமாகும்.
 • இது, கடந்த 2015-16 காலகட்டம் முதல் தொடர்ச்சியாக இழப்புகளைச் சந்தித்ததாக கூறப்படுகிறது. அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கப்படவுள்ளது.

6. ‘உலகின் பழங்குடி மக்களின் நிலை’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?

அ) உலக வங்கி

ஆ) பன்னாட்டு செலவாணி நிதியம்

இ) ஐக்கிய நாடுகள் அவை

ஈ) ஆசிய வளர்ச்சி வங்கி

 • ஐநா பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையானது ‘உலகின் பழங்குடி மக்களின் நிலை’ குறித்த அறிக்கையின் அண்மைய பதிப்பை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, பழங்குடி மக்கள் புவியின் பல்லுயிர் வகைமையில் 80% பகுதிகளில் வாழ்கின்றனர். ஆனால் அவர்களுள் பலர், நிலம் மற்றும் வளங்களுக்கான சட்ட உரிமைகளை காப்பதற்கு இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

7. ‘பேரிடர் தடுப்பு உட்கட்டமைப்பிற்கான கூட்டணி’யின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ) ஜெனிவா

ஆ) பாரிஸ்

இ) புது தில்லி

ஈ) ஜாகர்த்தா

 • பேரிடர் தடுப்பு உட்கட்டமைப்பிற்கான கூட்டணி என்பது நாடுகள், ஐநா முகமைகள், பலதரப்பு வளர்ச்சி வங்கிகள், தனியார்துறை மற்றும் கல்வியாளர்களின் ஓர் உலகளாவிய கூட்டணியாகும். இது பேரிடர் நெகிழ் திறன்மிக்க உட்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது.
 • பேரிடர் தடுப்பு உட்கட்டமைப்பிற்கான கூட்டணியானது அதன் உறுப்பு நாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து,  பேரிடர் தடுப்பு உட்கட்டமைப்பு தொடர்பான பன்னாட்டு மாநாட்டை சமீபத்தில் நடத்தியது.

8. எந்தத் திட்டத்தின்கீழ், CSIR, இந்தியப் பெருங்கடலில், மரபணு வேறுபாட்டை வரைபடமாக்க உள்ளது?

அ) Project IOR

ஆ) Project Bio

இ) Project TraceBioMe

ஈ) Project 21

 • ‘TraceBioMe’ திட்டத்தின்கீழ், – கோவாவில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கழகத்தின் தேசிய கடல்சார் நிறுவனமானது (CSIR -NIO) இந்தியப்பெருங்கடலில் உள்ள உயிரினங்களின் மரபணு வேறு பாட்டை வரைபடமாக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில், மரபணு வரைபடத்தை உருவாக்குவதற்கு கடலின் வெவ்வேறு இடங்களில் உள்ள நீர், வண்டல், மிதவை நுண்ணுயிரிகள் மற்றும் பல்வேறு உயிரினங்களின் பெரிய அளவிலான மாதிரிகள் சேகரிக்கப்படும்.

9. IBSA (இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா) பெண்கள் மன்றக் கூட்டம் நடைபெற்ற இடம் / முறை எது?

அ) இந்தியா

ஆ) சீனா

இ) பிரேஸில்

ஈ) மெய்நிகர் முறையில்

 • IBSA (இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா) பெண்கள் மன்றக் கூட்டம் சமீபத்தில் மெய்நிகர் முறையில் நடைபெற்றது. இது, சந்திப்பின் 6ஆவது பதிப்பாகும். இந்தியாவைச்சார்ந்த தூதுக்குழுவிற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தலைமைதாங்கியது.
 • இக்கூட்டத்தின்போது ஒரு கூட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது, IBSA இலக்குகள் மற்றும் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பாலின சமத்து -வத்தை அடைவதற்கான உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.

10. பிரிட்ஸ்கர் பரிசுடன் தொடர்புடைய துறை எது?

அ) இலக்கியம்

ஆ) இதழியல்

இ) கட்டுமானக்கலை

ஈ) அறிவியல் & தொழில்நுட்பம்

 • பிரிட்ஸ்கர் பரிசு என்பது கட்டடக்கலைத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய கெளரவமாகும். 2021 பிரிட்ஸ்கர் கட்டடக்கலை பரிசு, அன்னே லாகடன் மற்றும் ஜீன்-பிலிப் வசல் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 • இவ்விரு பிரெஞ்சு வெற்றியாளர்களும் லாகடன் & வசாலின் நிறுவனத் -தின் நிறுவனர்களாவர். தி ஹையாத் அறக்கட்டளையின் தலைவர் வெற்றியாளர்களை அறிவித்தார். அன்னே லாகடன், இந்த விருதை வென்ற முதல் பிரெஞ்சு பெண் கட்டடக்கலைஞராவார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஓய்வூதியதாரர்கள் ஆயுள்சான்று பெற ஆதார் இனி கட்டாயமில்லை

ஓய்வூதியதாரர்கள் மின்னணுமுறையில் ஆயுள்சான்றுபெற ஆதார் அட்டை எண்ணை அளிக்க வேண்டியது கட்டாயமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம்பெற ஆண்டு தோறும் தங்கள் ஆயுள்சான்றை அளிக்க வேண்டியது கட்டாயமாகும். அப்போதுதான் அவர்களுக்கு தடையில்லாமல் ஓய்வூதியம் அளிக்கப்படும்.

இந்த ஆயுள்சான்றைப்பெற ஆதார் எண்ணை அளிக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. இந்நிலையில், இதனை மாற்றி மத்திய மின்னணு, தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மின்னணு முறையில் ஆயுள்சான்றுபெற ஆதார் எண் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விருப்பத்தின் பேரில் ஆதார் எண்ணை அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்கள் ஆதார் அல்லாத வேறு அடையாள சான்றை அளித்தால் போதுமானது. அரசு அலுவலகங்களில் வருகைப்பதிவு நிர்வாகத்துக்கும், மத்திய தகவல் மையம் உருவாக்கிய சந்தேஷ் செயலியை (வாட்ஸ்அப் போன்றது) உபயோகிக்கவும் ஆதார் எண் கட்டாயமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. ஆறு கோடி கரோனா தடுப்பூசிகளை 76 நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வைப்பு: ஹர்ஷ் வர்தன்

இந்தியா இதுவரையில் 6 கோடி கரோனா தடுப்பூசிகளை 76 நாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். சண்டிகரில் உள்ள நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவன -த்தில் (CSIR-IMTech) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 76 நாடுகளுக்கு 6 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. நமது நாட்டைப் பொருத்தவரையில் இதுவரையில் பயனாளர்களுக்கு 4.5 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி திட்டம் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக (ஜன்-அந்தோலன்) மாறவேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி அழைப்புவிடுத்துள்ளார் என்றார் அவர்.

3. முதல் ATP டூர் பட்டம் வென்றார் அஸ்லான்

துபாய் ஓப்பன் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் அஸ்லான் கராட்சேவ் சாம்பியன் ஆனார். இது அவரது முதல் ATP டூர் பட்டமாகும். முன்னதாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் அவர் தென்னாப்ரிக்காவின் லாய்ட் ஹாரிஸை 6-3, 6-2 என்ற செட்களில் வீழ்த்தினார். இந்த வெற்றியின்மூலம், கடந்த 1997’க்குப் பிறகு துபாய் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வைல்டு கார்டு வீரார் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

4. டி20 தொடரை வென்றது தென் ஆப்பிரிக்க மகளிரணி

தென்னாப்பிரிக்க மகளிரணிக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிரணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்விகண்டது. ஏற்கனவே முதல் ஆட்டத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா, இவ்வெற்றியால் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை தன்வசப்படுத்தியுள்ளது.

லக்னோவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் அடித்து வென்றது.

5. உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியா இன்று இரண்டு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றது.

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியா இரண்டு தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கத்தை வென்றது. புது தில்லியில் நடைபெற்று வரும் இப்போட்டியின் மகளிர் குழுப்பிரிவில் யஷஸ்வினி சிங் தேஸ்வால், மனு பாக்கர், ஸ்ரீநிவேதா ஆகியோரைக்கொண்ட அணி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றது.

ஆடவர் பிரிவில் செளரவ் சௌத்ரி, அபிஷேக் வர்மா, சாஷர் ரிஸ்வி ஆகியோரைக்கொண்ட அணி இறுதிப்போட்டியில் வியட்நாமை வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. மற்றோர் ஆடவர் குழுப்பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இப்போட்டியில் இந்தியா இதுவரை மூன்று தங்கம், மூன்று வெள்ளி, 2 வெண்கலப்பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

6. உலகின் பலம்வாய்ந்த இராணுவம்: இந்தியாவுக்கு 4ஆவது இடம்

உலகின் பலம்வாய்ந்த இராணுவத்தைக்கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்திய இராணுவம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இப்பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.

பாதுகாப்புத்துறை தொடர்பான இணையதளமான ‘மிலிட்டரி டைரக்ட்’ இது தொடர்பாக ஆய்வுநடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு, இராணுவத்தில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை, தரைப்படை, கடற்படை, வான்படைகளின் பலம், அணு ஆயுதங்கள், தளவாடங்களின் அளவு, இராணுவத்தினருக்கான சராசரி ஊதியம் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பான செயல்பாடுகளுடன் பலம் வாய்ந்த இராணுவத்தை சீனா கொண்டுள்ளது. அந்நாடு நூற்றுக்கு 82 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா அதிக செலவுசெய்து பலம்வாய்ந்த ராணுவத்தைக் கட்டமைத்து வைத்துள்ளது. அந்நாட்டு ராணுவம் 74 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் ரஷியா 69 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், இந்தியா 61 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.

பிரான்ஸ் (58 புள்ளிகள்) 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பிரிட்டன் 43 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் வான்படை பலத்தில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டிடம் 14,141 போர் விமானங்கள் உள்ளன. இதற்கு அடுத்து ரஷியாவிடம் 4,682 போர் விமானங்களும், சீனாவிடம் 3,587 போர் விமானங்களும் உள்ளன.

அதே நேரத்தில் தரைப்படையில் பயன்படுத்தும் பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களில் ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. கடற்படையில் 406 போர்க் கப்பல்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து ரஷியாவிடம் 278 போர்க் கப்பல்கள் உள்ளன. இதற்கு அடுத்து அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் தலா 200’க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் உள்ளன.

உலகிலேயே மிகவதிகமாக அமெரிக்க, ராணுவத்திற்காக ஆண்டுதோறும் 732 பில்லியன் டாலர் (சுமார் `53 இலட்சம் கோடி) வரை செலவிடுகிறது. இதற்கு அடுத்து சீனா 261 பில்லியன் டாலர் (சுமார் `18 இலட்சம் கோடி), மூன்றாவதாக இந்தியா 71 பில்லியன் டாலர் (`5 லட்சம் கோடி) செலவிட்டு வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முதல் 5 நாடுகள்

1) சீனா – 82 புள்ளிகள்

2) அமெரிக்கா – 74 புள்ளிகள்

3) ரஷியா – 69 புள்ளிகள்

4) இந்தியா – 61 புள்ளிகள்

5) பிரான்ஸ் – 58 புள்ளிகள்

7. கரோனா ஊரடங்கால் சேமிப்பில் கடும் வீழ்ச்சி; நாட்டு மக்களின் கடன் சுமை அதிகரிப்பு: இந்திய ரிசர்வ் வங்கி தகவல்

கரோனா வைரஸ் பரவலால் கடந்த ஆண்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டு மக்களின் கடன்சுமை அதிகரித்துள்ளதாகவும் சேமிப்பு கடுமையாக சரிந்துள்ள தாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. நடப்பு 2020-21 நிதியாண்டின் 2ஆவது காலாண்டில் நாட்டு மக்களின் கடன்சுமை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியி -ல் (GDP) 37.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

வீடுகளில் சேமிக்கும் அளவு GSP’இல் 10.4 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் (2020-21) முதல் காலாண்டில் வீடுகளின் சேமிப்பு அளவு GDP’இல் 21 சதவீதமாக இருந்தது, இரண்டாம் காலாண்டில் 10.4 சதவீதமாக சரிந்துவிட் -டது. இதேபோன்று 2008-09ஆம் நிதியாண்டில் சர்வதேச பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டபோது சேமிப்பு அளவு 170 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரித்தது. 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டிலிருந்தே குடிமக் -களின் கடன்வாங்கும் அளவு படிப்படியாக அதிகரித்துள்ளது. இது 2020-21 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 37.1 சதவீத அளவை எட்டியது.

இப்போது கரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கியுள்ளதால் வீடுகளின் சேமிப்பு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என RBI அறிக்கை தெரிவித்துள்ளது. வங்கிகள் கடன் வழங்கும் அளவு இரண்டாம் காலாண்டில் 20 புள்ளிகள் அதிகரித்து `102.7 லட்சம் கோடியாக உள்ளது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1. Who has been appointed as the Director General of National Security Guard?

A) Swapan Dasgupta

B) M. A. Ganapathy

C) P.K. Sinha

D) A P Maheshwari

 • Senior IPS officer M.A Ganapathy was appointed as the Director General of National Security Guard (NSG). The 1986 batch officer is currently serving as the Director General, Bureau of Civil Aviation Security (BCAS). Another IPS officer Kuldiep Singh was appointed as the Director General of the Central Reserve Police Force.

2. The tenth schedule, known as the Anti–defection law was added in the constitution in which year?

A) 1972

B) 1985

C) 1992

D) 2005

 • The Tenth Schedule, popularly known as the anti–defection law, was added to the Constitution in the year 1985. As per the anti–defection law, Nominated MP Swapan Dasgupta resigned from Rajya Sabha, a year before completion of his term.
 • He has been named as candidate in the West Bengal Assembly elections. After his nomination to Rajya Sabha in 2016, he did not join a political party within the mandatory period of six months.

3. PK Sinha, who was making news recently stepped down from which position?

A) Economic Affairs Secretary

B) Principal Advisor to PM

C) Finance Secretary

D) NITI Aayog CEO

 • The Prime Minister’s Principal adviser, PK Sinha, recently stepped down from his position. In the first tenure of the Prime Minister Narendra Modi government, he served as the Cabinet secretary.

4. India’s envoy in which country has handed over training kits worth Rs 81 lakhs, for capacity building?

A) Nepal

B) Myanmar

C) Maldives

D) Sri Lanka

 • India’s envoy in Sri Lanka has recently handed over training aids worth about Rs 81,00,000 to the country’s Navy for capacity building. High Commissioner Gopal Baglay formally handed over the training aids, during a visit to the Northern and Eastern Provinces of Sri Lanka.
 • He also handed over Kindle e–book readers and books to the library of the Naval and Maritime Academy.

5. Where is the Handicrafts and Handlooms Export Corporation of India (HHEC) located?

A) A) New Delhi

B) Uttar Pradesh

C) Gujarat

D) Madhya Pradesh

 • The Cabinet recently approved the closure of Handicrafts and Handlooms Export Corporation of India (HHEC), located at Noida, Uttar Pradesh. HHEC is a government–owned company under the administrative control of the Union Textile ministry. It is said to have incurred losses since 2015–16 continuously.
 • The employees in the company will be given the option of Voluntary Retirement.

6. Which institution publishes the ‘State of the World’s Indigenous People’ report?

A) World Bank

B) International Monetary Fund

C) United Nations

D) Asian Development Bank

 • The United Nations Department of Economic and Social Affairs (DESA) publishes the latest edition of the State of the World’s Indigenous People report. As per the report, the world’s indigenous peoples live in areas around 80% of the planet’s biodiversity.
 • But many of them still struggle to maintain their legal rights to lands and resources.

7. Where is the headquarters of the ‘Coalition for Disaster Resilient Infrastructure’ located?

A) Geneva

B) Paris

C) New Delhi

D) Jakarta

 • The Coalition for Disaster Resilient Infrastructure is a global coalition of countries, UN agencies, multilateral development banks, private sector, and academia, that aims to promote disaster–resilient infrastructure. It is headquartered in New Delhi. CDRI, in partnership with member countries and institutions, hosted the International Conference on Disaster Resilient Infrastructure – ICDRI 2021.

8. Under which project, CSIR is set to map genetic diversity in the Indian Ocean?

A) Project IOR

B) Project Bio

C) Project TraceBioMe

D) Project 21

 • Under the Project TraceBioMe, the Council of Scientific and Industrial Research–National Institute of Oceanography (CSIR–NIO) – Goa has initiated to map the genetic diversity of organisms in the Indian Ocean. The project involves large scale sampling of water, sediments, planktons and various organisms in different location of the ocean to arrive at the genetic map.

9. Where or using which mode was the IBSA (India Brazil South Africa) Women’s Forum meeting held?

A) India

B) China

C) Brazil

D) Virtual Mode

 • The IBSA (India Brazil South Africa) Women’s Forum meeting was held recently in a virtual format. This is the 6th edition of the meet.
 • The delegation from India was led by the Union Ministry of Women and Child Development. A joint declaration was issued during the meet which highlights IBSA goals and commitments for achieving gender equality in all spheres of life.

10. Pritzker Prize is associated with which field?

A) Literature

B) Journalism

C) Architecture

D) Science & Technology

 • Pritzker Prize is the highest international honour given in the field of Architecture. The 2021 Pritzker Architecture Prize, has been granted to Anne Lacaton and Jean–Philippe Vassal.
 • The French duo winners are the founders of Lacaton & Vassal. Chairman of The Hyatt Foundation announced the winners and Anne Lacaton became the first French female architect to ever win the award.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *