22nd October 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. உலக நலவாழ்வு அமைப்பின் அண்மைய அறிக்கையின்படி, 26 சதவீதத்துடன் உலகில் மிக அதிகமாக காசநோயால் பாதிப்படைந்துள்ள நாடு எது?

அ. நைஜீரியா

ஆ. இந்தியா

இ. மத்திய ஆப்பிரிக்க குடியரசு

ஈ. காங்கோ குடியரசு

 • உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) சமீபத்தில், ‘உலகளாவிய காசநோய் அறிக்கை-2020’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, COVID-19 கொள்ளைநோயின் காரணமாக விதிக்கப்பட்ட நாடடங்கை அடுத்து, 2020 ஏப்ரலில் காசநோய் பாதிப்பு சதவீதத்தில், சுமார் 85% அளவுக்கு இந்தியாவில் குறைந்துள்ளது. இருப்பினும், 26 சதவீதத்துடன் உலகில் மிக அதிகமாக காசநோயால் பாதிப்படைந்துள்ள நாடாக இந்தியா உள்ளது.

2. உலக வங்கி வளர்ச்சிக்குழுவின் 102ஆவது கூட்டத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவர் யார்?

அ. நரேந்திர மோடி

ஆ. பியூஷ் கோயல்

இ. நிர்மலா சீதாராமன்

ஈ. ஹர்ஷ் வர்தன்

 • உலக வங்கி வளர்ச்சிக் குழுவின் 102ஆவது கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலிக்காட்சிமூலம் கலந்துகொண்டார். COVID-19 தொற்று நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை அவர் அப்போது எடுத்துரைத்தார். அதில், ஏழைகளுக்கு நேரடி பயன் பரிமாற்றம் மற்றும் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைளுக்கு முதற்கட்டமாக $23 பில்லியன் டாலர் நிதியை நடுவணரசு அறிவித்தது; அதையடுத்து பிரதமரின் தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ் $271 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியுதவி திட்டங்கள் அறிவிக்கப்பட்டதை அமைச்சர் கூறினார்.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ENFUSER & SILAM ஆகியவற்றுடன் தொடர்புடைய துறை எது?

அ. பாதுகாப்பு

ஆ. சுற்றுச்சூழல்

இ. கல்வி

ஈ. கலாச்சாரம்

 • காற்றின் தரம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கும் அதிநவீன அமைப்பை தில்லி மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளுக்காக இந்திய வானிலை துறை செயல்படுத்தியுள்ளது. “System for Integrated Modelling of Atmospheric Composition (SILAM)” எனப்படும் காற்றின் தரத்தை முன்கூட்டியே கணிக்கும் ஒருங்கி -ணைந்த அமைப்பு தற்போது மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
 • “Environmental Information Fusion Service (ENFUSER)” என்னும் அதீத திறன்வாய்ந்த, மாநகரத்துக்கான அளவிடும் அமைப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்லாந்து வானிலை நிறுவனத்துடன் இணைந்து SILAM & ENFUSER ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இவ்விரு அமைப்புகளின் துணைகொண்டு காற்றின்தரத்தை துல்லியமாக முன்கூட்டியே கணித்து மாசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை, செயற்பாடுகளை எடுக்கலாம்.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘உத்திசார் ஆயுதக்குறைப்பு ஒப்பந்தம் (START)’ தொடர்புடைய இரு நாடுகள் எவை?

அ. சீனா மற்றும் இரஷ்யா

ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் இரஷ்யா

இ. இந்தியா மற்றும் இரஷ்யா

ஈ. இஸ்ரேல் மற்றும் இரஷ்யா

 • இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிப்ரவரியில் காலாவதியாகும் புதிய உத்திசார் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் (START) நீட்டிக்கப்படவேண்டும் என முன்மொழிந்துள்ளார். எவ்வாறாயினும், எந்தவொரு நிபந்தனையும் விதிக்காமல் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு ஒப்பந்தத்தை நீட்டிக்கும் இரஷ்ய அதிபரின் முன்மொழிவை அமெரிக்கா நிராகரித்துள்ளது. 2010’இல் கையெழுத்திடப்பட்ட புதிய START ஒப்பந்தம், இருநாடுகளும் பயன்படுத்தக்கூடிய உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த அணுவாற்றல் சாதனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது.

5. நடப்பாண்டின் (2020) உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா அடைந்த தரநிலை (rank) என்ன?

அ. 102

ஆ. 105

இ. 94

ஈ. 97

 • அண்மையில் வெளியிடப்பட்ட பசி மற்றும் ஊட்டச்சத்தின்மையால் வாடும் நாடுகளின் பட்டியல்–2020 அறிக்கையின்படி, 107 நாடுகளுள் இந்தியா 94ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 27.2 மதிப்பெண்களை இந்தியா பதிவுசெய்துள்ளது. பசியின் அளவு “தீவிரம்” என்ற அளவில் உள்ளதை இது காட்டுகிறது. கடந்த ஆண்டு, 117 நாடுகளுள் இந்தியா 102ஆம் இடத்தில் இருந்தது. இந்திய மக்கள்தொகையில் 14 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என்றும் இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

6. இந்தியாவை எந்த ஆண்டுக்குள் மாறுபக்க கொழுப்பு பாதிப்பற்ற நாடாக மாற்றவேண்டும் என அரசு நோக்கம் கொண்டுள்ளது?

அ. 2021

ஆ. 2022

இ. 2025

ஈ. 2030

 • வரும் 2022ஆம் ஆண்டுக்குள் மாறுபக்க கொழுப்பபு பாதிப்பற்ற (Trans Fat Free) நாடாக மாற்றவேண்டும் என இந்தியா இலக்கு வைத்துள்ளது. இது உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்ணயித்த இலக்கைவிட ஓராண்டு முன்னதாகும். மாறுபக்க கொழுப்பு என்பது ஓரளவு ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய் -களில் உள்ள ஒரு நச்சுப்பொருளாகும். சுட்ட மற்றும் வறுத்த உணவுகளானது இந்திய ஒன்றியத்தில் பரவா நோய்கள் ஏற்படுவதற்கான ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

7. லான்செட் இதழில் வெளியான சமீபத்திய தரவின்படி, 2019’இல் இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் என்ன?

அ. 65

ஆ. 66.6

இ. 70.8

ஈ. 80.8

 • லான்செட் இதழின் ஓர் அண்மைய வெளியீட்டின்படி, கடந்த 1990ஆம் ஆண்டில் 59.6 ஆண்டுகளாக இருந்த இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம், தற்போது 2019’இல் 70.8 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. இதன் மதிப்பு கேரளத்தில் 77.3 ஆண்டுகளாகவும், உத்தரபிரதேசத்தில் 66.9 ஆண்டுகளாகவும் உள்ளது. ஆயுட்காலம் அதிகரித்தாலும், இந்தியர்கள் தங்கள் வாழ்நாளின் கடைசியில் பெரும்பாலான நாட்களை நோயுடனும், நலக்குறைவுடனும் அவதிப்பட்டபடியே கழிக்கின்றனர் என இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. உயர் இரத்தவழுத்தம், புகையிலை பயன்பாடு, வளி மாசுபாடு மற்றும் COVID-19 தொற்றுநோய் ஆகியவை கடுமையான சுகாதார பாதிப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளன.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, நியூ ஷெப்பர்ட் என்ற ஏவுகனையுடன் தொடர்புடைய விண்வெளி நிறுவனம் எது?

அ. ISRO

ஆ. NASA

இ. புளூ ஆர்ஜின்

ஈ. வர்ஜின் அட்லாண்டிக்

 • ‘நியூ ஷெப்பர்ட்’ என்ற ஏவுகணையை சமீபத்தில் புளூ ஆர்ஜின் நிறுவனம் சோதனை செய்தது. இந்த ‘நியூ ஷெப்பர்ட்’ ஏவுகலம், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகலத்தைக் கொண்டதாகும். இந்தச் சோதனையின்போது, பொதியுறை மற்றும் ஏவுகல ஊக்கிகள் இரண்டும் வெற்றிகரமாக புவிக்கு தரையிறங்கின. ‘புளூ ஆர்ஜின்’ என்பது அமேசான் தலைமைச் செயல் அலுவலர் ஜெப் பெசோஸால், கடந்த 2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமாகும்.

9. இந்தியாவில் தேர்தல் பத்திரங்களை வழங்குவதற்கு எந்த வங்கிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி

ஆ. பாரத வங்கி

இ. இந்தியன் வங்கி

ஈ. பஞ்சாப் தேசிய வங்கி

 • அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்தல் செலவினங்களுக் -கான நன்கொடைகளை, தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு அறிவித்தது. இந்தத் தேர்தல் பத்திரங்களை, பாரத வங்கி (SBI) தனது 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் 19.10.2020 முதல் 28.10.2020 வரை விற்பனை செய்கிறது.
 • இந்தத் தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்களை டெபாசிட் செய்து பணமாக்கி கொள்ளவேண்டும். டெபாசிட் செய்த அதேநாளில், அரசியல் கட்சிகளின் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். 15 நாட்களுக்குப்பின் தேர்தல் பத்திரங்களை தாக்கல் செய்தால் பணம் வழங்கப்படாது.

10.ஆறாண்டுகால தடைக்குப் பிறகு, சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வை மீண்டும் தொடங்கவுள்ள நாடு எது?

அ. தாய்லாந்து

ஆ. தைவான்

இ. பிலிப்பைன்ஸ்

ஈ. சிங்கப்பூர்

 • இயற்கைவள ஆய்வு தொடர்பான 6 ஆண்டுத்தடையை முடிவுக்குக்கொண்டுவந்து, தென்சீனக்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மீண்டும் தொடங்குவதாக பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது. முன்னாள் அதிபர் பெனிக்னோ அக்வினோ III, சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் கடந்த 2014’இல் ஆய்வை நிறுத்திவைத்தார். சீனாவின் நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்கா பிலிப்பைன்ஸை ஆதரித்து வருகிறது.

1. Which country has the highest TB burden across the globe at 26%, as per the recent report of WHO?

[A] Nigeria

[B] India

[C] Central African Republic

[D] Republic of the Congo

 • The World Health Organisation (WHO) has released a report titled ‘The Global Tuberculosis Report, 2020’ recently. As per the report, India recorded a decline in the notification of tuberculosis (TB) cases by about 85 percent in April 2020, after the imposition of COVID–19 induced lockdown. However, India has the highest TB burden across the globe at 26 percent.

2. Who represented India in the 102nd meeting of World Bank Development Committee Plenary?

[A] Narendra Modi

[B] Piyush Goyal

[C] Nirmala Sitharaman

[D] Harsh Vardhan

 • Union Minister of Finance & Corporate Affairs Nirmala Sitharaman participated in the 102nd meeting of World Bank Development Committee Plenary through video conferencing. She highlighted the measures taken by the Government to tackle the COVID–19 crisis, including the USD 23 billion and USD 271 Billion as a part of the economic stimulus package.

3. ENFUSER and SILAM, that were in news recently, is associated with which field?

[A] Defence

[B] Environment

[C] Education

[D] Culture

 • The Indian Meteorological Department (IMD) has operationalized an advanced high–resolution air quality early warning system for the national capital named ENFUSER (Environmental Information Fusion Service). Another model has also been made operationalized for the rest of the country. IMD has also improved the air quality forecast model ‘System for Integrated Modelling of Atmospheric Composition (SILAM)’, by implementing global emission inventories.

4. ‘Strategic Arms Reduction Treaty (START)’, which was in news recently is associated with which countries?

[A] China and Russia

[B] USA and Russia

[C] India and Russia

[D] Israel and Russia

 • Russian President Vladimir Putin has proposed that the New Strategic Arms Reduction Treaty (START) that expires in February, to be extended. However, the USA has rejected the Russian President’s proposal of extending the accord for at least a year without imposing any conditions. The New START treaty, that was signed in 2010, limits the numbers of strategic nuclear equipment that the two countries can deploy.

5. What is the rank of India in the Global Hunger Index 2020 report?

[A] 102

[B] 105

[C] 94

[D] 97

 • As per the Global Hunger Index 2020 report released recently, India ranks 94 among 107 countries in the world. India registered a score of 27.2, which means a level of hunger that is “serious”. Last year, India ranked at 102nd position out of 117 countries. The report also revealed that 14 percent of India’s population is undernourished.

6. By which year does the Government aim to make India Trans Fat Free?

[A] 2021

[B] 2022

[C] 2025

[D] 2030

 • India has aimed to make it Trans Fat Free by 2022. This is a year ahead of the target set by World Health Organisation (WHO). Trans Fat is a toxic substance present in Partially Hydrogenated Vegetable Oils, baked and fried foods are seen as an important source of non–communicable disease in India.

7. As per the recent publication in Lancet journal, what is the life expectancy of India in 2019?

[A] 65

[B] 66.6

[C] 70.8

[D] 80.8

 • As per a recent publication by the Lancet journal, life expectancy in India has risen from 59.6 years in 1990 to 70.8 years in 2019. The value ranges between 77.3 years in Kerala to 66.9 years in Uttar Pradesh. The report has however pointed out that, in India, people are living more years with illness and disability. High Blood pressure, use of tobacco, air pollution and COVID pandemic has resulted in acute health emergencies.

8. The rocket named New Shepard that is in news recently is associated with which space agency?

[A] ISRO

[B] NASA

[C] Blue Origin

[D] Virgin Atlantic

 • The rocket named New Shepard has been test launched recently by Blue Origin. It was an unscrewed test. The New Shepard launch vehicle consists of a reusable rocket and space capsule. During the test, both the capsule and the rocket boosters were brought down to earth successfully. Blue Origin is a private spaceflight company founded in 2000 by Amazon CEO Jeff Bezos.

9. Which Bank has been authorized to issue Electoral Bonds in India?

[A] Reserve Bank of India

[B] State Bank of India

[C] Indian Bank

[D] Punjab National Bank

 • The Ministry of Finance has authorised State Bank of India (SBI) to issue and encash Electoral Bonds. These bonds would be made available through SBI’s 29 Authorized Branches from 19th October to 28th of October this year. The is the 14th phase of sale. Electoral Bonds will be valid for fifteen calendar days from the date of issue and no payment will be made to any payee Political Party if the Electoral Bond is deposited after expiry of the validity period.

10. Which country is to resume its oil & gas exploration in disputed South China Sea after a six–year moratorium?

[A] Thailand

[B] Taiwan

[C] Philippines

[D] Singapore

 • The Philippines announced that it will resume oil and gas exploration in the South China Sea, by ending a six–year moratorium on resource exploration. Former President Benigno Aquino III suspended exploration in the disputed sea in 2014 amid tensions with China. The United States had also supported Philippines against the move of China.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *