TnpscTnpsc Current Affairs

22nd October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

22nd October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 22nd October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. நடப்பாண்டில் (2021) வரும் கிராமப்புற பெண்களுக்கான உலக நாளின் கருப்பொருள் என்ன?

அ) Rural women cultivating good food for all 

ஆ) Gender Equality

இ) Empowering Rural Women

ஈ) Good Village; Good Country

 • ஆண்டுதோறும் அக்.15 அன்று ‘கிராமப்புற பெண்களுக்கான உலக நாள்’ கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பாலின சமத்துவம் மற்றும் கிராமப் புறங்களில் பெண்களை மேம்படுத்துவதில் கவனஞ்செலுத்துகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள், “Rural women cultivating good food for all” என்பதாகும். ஐநா பொது அவை, கடந்த 2007 டிச.18 அன்று இந்நாளை நிறுவியது. ஐநா சபையின் அறிக்கையின்படி, வளரும் நாடுகளில் உள்ள மொத்த வேளாண் தொழிலாளர் படையில் 40 சதவீதம், பெண்களையும் உள்ளடக்கியது.

2. சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற LORROS என்பது பின்வரும் எதனுடன் தொடர்புடைய ஓர் அமைப்பாகும்?

அ) வேளாண்மை

ஆ) கண்காணிப்பு 

இ) செயற்கை நுண்ணறிவு

ஈ) நிதி

 • Long Range Reconnaissance and Observation System என்பதன் சுருக்கந்தான் LORROS. இது நீண்ட தொலைவு கண்காணிப்பு அமைப்பைக் குறிக்கிறது; இது, நீண்ட தூர பகல்நேர மற்றும் இரவு நேர கண்காணிப்பை வழங்குவதற்கான உணரி அமைப்பாகும். இது இந்திய இராணுவம் போன்ற தேசிய பாதுகாப்புப் படையினரால் ஊடுருவலை எதிர்கொள்ள பயன்படுத்தப்படுகிறது.

3. G சத்தியன், ஹர்மீத் தேசாய் மற்றும் A சரத் கமல் ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) டேபிள் டென்னிஸ் 

ஆ) டென்னிஸ்

இ) துப்பாக்கிச்சுடுதல்

ஈ) குத்துச்சண்டை

 • கத்தாரின் தோகாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி (சத்தியன், ஹர்மீத் தேசாய் மற்றும் சரத் கமல்) ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளது. அந்த அணி அரையிறுதியில் 0-3 புள்ளிகளுடன் தென்கொரியாவிடம் தோற்றது. இதில், இந்திய மகளிர் அணி 5ஆவது இடத்தைப் பிடித்தது.

4. பன்னாட்டு அகிம்சை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) அக்டோபர் 1

ஆ) அக்டோபர் 2 

இ) அக்டோபர் 4

ஈ) அக்டோபர் 5

 • இந்தியாவின் ‘தேசத்தந்தை’ மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர்.2 அன்று பன்னாட்டு அகிம்சை நாளாக அனுசரிக்கப்படுகிறது. கல்வி மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வுமூலம் அகிம்சையை பரப்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்நாள் அனுசரிக்கப்ப -டுகிறது. 2004ஆம் ஆண்டில், நோபல் பரிசு பெற்ற ஈரானியர் ஷிரின் எபாடி, இந்த நினைவேந்தல் யோசனையை முன்மொழிந்தார்.

5. காஷ்மீர் வால்நட்டுகளின் முதல் சரக்கைப் பெறவுள்ள மாநிலம் எது?

அ) மகாராஷ்டிரா

ஆ) கர்நாடகா 

இ) கேரளா

ஈ) பஞ்சாப்

 • இறக்குமதியை குறைக்கும் முயற்சியாக, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு (ODOP) திட்டத்தின்கீழ் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்திலிருந்து பெங்களூருக்கு 2,000 கிலோ வால்நட் அனுப்பிவைக்கப்பட்டது.
 • இந்தியாவில் வால்நட் உற்பத்தியில் 90% காஷ்மீரில் நடைபெறுகிறது. ODOP திட்டத்தின்கீழ் காஷ்மீரில் உற்பத்தியாகும் வால்நட்டை பிற இடங்களுக்கு அனுப்பும் முயற்சியில் மத்திய வர்த்தக & தொழில்துறை அமைச்சகம் முயற்சி மேற்கொண்டது. இதையடுத்து காஷ்மீரில் புத்காம் மாவட்டத்திலிருந்து, 2000 கி வால்நட் பெங்களூருக்கு அனுப்பப்பட்டது. இது முதல் தரமானது, சுவை மற்றும் ஊட்டச்சத்துமிக்கது.

6. இந்தியாவின் முதல் இ-மீன் சந்தை செயலியான ‘பிஷ்வாலே’ தொடங்கப்பட்டுள்ள மாநிலம் / UT எது?

அ) மேற்கு வங்கம்

ஆ) ஆந்திர பிரதேசம்

இ) அஸ்ஸாம் 

ஈ) கேரளா

 • அஸ்ஸாம் மாநில மீன்வள அமைச்சகம் சமீபத்தில் ஒரு செயலியை அறிமுகப்படுத்தியது. அது இந்தியாவின் முதல் மின்னணு-மீன் சந்தை செயலியான ‘பிஷ்வாலே’ ஆகும். வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் இருவரும் ஆர்டர் கொடுக்க மற்றும் மீன், மீன் வளர்ப்பு உபகரணங்கள் மற்றும் மருந்து, மீன் தீவனம் மற்றும் மீன் குஞ்சுகளை ஆன்லைனில் விற்க இச்செயலி உதவும். நன்னீர் மற்றும் உவர்நீர் உறைந்த மீன், உலர்மீன் மற்றும் பதப்படுத்தப்பட்ட மீன்பொருட்கள்போன்ற பொருட்கள் விற்கப்படும். இச்செயலியை மாநில மீன்வளத்துறையுடன் இணைந்து, அக்வா புளூ குளோபல் மீன் வளர்ப்பு தீர்வுகள் உருவாக்கியுள்ளது.

7. இந்தியாவில் ‘மாதாந்திர பொருளாதார’ ஆய்வினை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ) இந்திய ரிசர்வ் வங்கி

ஆ) நிதி அமைச்சகம் 

இ) ASSOCHAM

ஈ) FICCI

 • நிதி அமைச்சகத்தின் ‘மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வின்படி’, பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும் விரைவான மீட்புக்கான பாதையில் உள்ளன. செப் மாதத்தில், பொருளாதார நடவடிக்கைகள் மேலும் வேகமடைந்து வருவதாகவும் நிதி அமைச்சர் கூறினார். 2021-22 நிதியாண்டில் தொடர்ச்சியாக 6ஆம் மாதமாக இந்தியப்பொருட்களின் ஏற்றுமதி 30 பில்லியன் டாலர்களைத் தாண்டியது. 2021 செப்டம்பர்.10 உடன் முடிவடையும் 15 வாரங்களில் வங்கிக்கடனின் வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக இருந்தது; இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 5.3 சதவீதமாக இருந்தது.

8. உலகின் முதல் தானியங்கி, ஓட்டுநரில்லா இரயிலை அறிமுகம் செய்துள்ள நாடு எது?

அ) ஜெர்மனி 

ஆ) ரஷ்யா

இ) நெதர்லாந்து

ஈ) சுவீடன்

 • ஜெர்மன் இரயில் ஆபரேட்டர் டாய்ச் பான் மற்றும் சீமென்ஸ் குழுமம் இணைந்து உலகின் முதல் தானியங்கி, ஓட்டுநரில்லா இரயிலை ஹாம்பர்க் நகரத்தில் அறிமுகப்படுத்தினர். இந்தத் திட்டம் 60 மில்லியன் யூரோ (70 மில்லியன் டாலர்) மதிப்புடைய ஹாம்பர்க்கின் விரைவான
 • நகர்ப்புற இரயிலமைப்பு நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒருபகுதியாகும். இந்தத் திட்டம் 30% அதிக பயணிகளை அந்நாட்டுக்கு வரவழைக்கும். இதன்மூலம், 30 சதவீதத்திற்கும் அதிகமான ஆற்றலை சேமிக்க முடியும்.

9. IMF’இன் சமீபத்திய உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக் -கையின்படி, 2021-22’க்கான இந்தியாவின் வளர்ச்சிக் கணிப்பு என்ன?

அ) 7.5 %

ஆ) 9.5 % 

இ) 10.0 %

ஈ) 12.0 %

 • பன்னாட்டுச் செலவாணி நிதியம் தனது சமீபத்திய உலகப் பொருளாதார கண்ணோட்ட அறிக்கையில், 2021-22ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சிக் கணிப்பை 9.5%ஆக வைத்துள்ளது. மேலும், இந்தியாவின் பொருளாதாரம் 2022-23 நிதியாண்டில் 8.5% வளர்ச்சியடையும் என்று கணித்துள்ளது. உலகளாவிய வளர்ச்சித் திட்டத்தை 6%’லிருந்து 5.9% ஆக IMF குறைத்துள்ளது. முன்னேறிய பொருளாதாரங்களில் விநியோக இடையூறுகள் மற்றும் வளரும் நாடுகளில் தொற்றுநோய் தாக்கம் மோசமடைவதே இதற்கான காரணங்களாக கூறப்பட்டுள்ளன.

10. “U Fill” என்னும் தொழில்நுட்ப தீர்வை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?

அ) இந்தியன் ஆயில்

ஆ) NTPC

இ) BPCL 

ஈ) டாடா பவர்

 • பாரத் பெட்ரோலிய நிறுவனமானது (BPCL) எரிபொருள் விற்பனை நிலையங்களில் தானியங்கி எரிபொருள் தொழில்நுட்பமான ‘U Fill’ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தொழில்நுட்பம், வாகனத்தில் எரிபொருளை நிரப்பும்போது மனிதத்தலையீட்டை அகற்றி வாடிக்கையாளர் அனுபவத் -தை மேம்படுத்தும் எனக்கூறப்படுகிறது. இந்நிறுவனம் 65 நகரங்களில் இத்தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ராணுவ தளவாட ஏற்றுமதியில் 25 முன்னணி நாடுகள் பட்டியலில் இந்தியா: அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யும் 25 முன்னணி நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் 2020-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இவ்விவரம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். இந்த மையத்தின் பட்டியலில் இந்தியா முதல் முறையாக இடம்பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ராணுவ தளவாட ஏற்றுமதி என்பது நமது பாதுகாப்பு திறன்அதிகரித்துள்ளது மற்றும் சர்வதேச தரத்துக்கு இணையான பொருட்களை தயாரிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது என்பதைக் காட்டுவதாகும். ராணுவ தளவாட ஏற்றுமதியை ஊக்குவிக்க பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

விமானப்படை பாதுகாப்பு தளவாட ஏற்றுமதிமூலம் `35 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு 2024-25-க்குள் எட்டப்படும் என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். வளர்ந்த நாடுகள் மட்டுமே ராணுவதளவாட ஏற்றுமதியில் முன்னணியில் இருந்த நிலையில், இந்தியாவும் அதில் சேர்ந்துள்ளது.

2. கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி 9 மாதத்தில் – 100 கோடி டோஸ் செலுத்தி இந்தியா சாதனை: பிரதமர் மோடிக்கு உலக சுகாதார நிறுவனம் வாழ்த்து

திட்டம் தொடங்கப்பட்ட 9 மாதங்களில் 100 கோடிக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக சுகாதார நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. முதல்கட்டமாக, சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. பின்னர், முன்களப் பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த மே 1ஆம் தேதி முதல் 18 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடக் கத்தில், தடுப்பூசி தொடர்பான அச்சம் காரணமாக, அதை செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருந்தது.

இதையடுத்து, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முன்னெடுத்தன. இதன் பயனாக, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயரத் தொடங்கியது. நாட்டில் முதல் 10 கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்த 85 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், அடுத்த 10 கோடி டோஸ் களை 45 நாட்களிலேயே இந்தியாவால் செலுத்த முடிந்தது. இவ்வாறு அடுத் தடுத்த 10 கோடி தடுப்பூசி டோஸ் இலக்குகளை மிகக் குறுகிய நாட்களிலேயே மத்திய, மாநில அரசுகள் அடைந்தன.

அதன்படி, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி 50 கோடி டோஸ்களை செலுத்தி மிகப்பெரிய மைல்கல்லை இந்தியா தொட்டது. டிசம்பர் இறுதிக்குள் 100 கோடி டோஸ்கள் என்ற இலக்கினை மத் திய அரசு நிர்ணயித்தது. நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. அவ்வப்போது நாடு தழுவிய அளவில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.

இந்நிலையில், நேற்று (அக்.21) 100 கோடி தடுப்பூசி டோஸ்களை கடந்து மிகப்பெரிய சாதனையை இந்தியா படைத்திருக்கிறது. நிர்ணயிக் கப்பட்ட இலக்கை 2 மாதங்களுக்கு முன்பாகவே இந்தியா எட்டியிருப்பது உலக நாடுகள் அனைத்தையும் ஆச் சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெ ரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ் போன்ற தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சி அடைந்த நாடுகள்கூட, தங்கள் மக்களுக்கு இவ்வளவு வேகமாக தடுப்பூசிகளை செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே, நாட்டிலேயே அதிக அளவில் கரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

3. கடலூர், காஞ்சிபுரம், கரூர், சிவகாசி நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்கின்றன

கடலூர், காஞ்சிபுரம், கரூர், சிவகாசி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 15 மாநகராட்சிகள் உள்ளன. கும்பகோணத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு பரிந்துரைகள் ஏற்கப்பட்டு அதற்கான உத்தரவு அரசால் அண்மையில் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்தது.

4 நகராட்சிகள்: தற்போது நகராட்சிகளாக உள்ள கடலூர், காஞ்சிபுரம், கரூர், சிவகாசி ஆகியவற்றையும் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்துவதற்கான பணிகளை மாநில அரசு தொடங்கியது. இதற்கான பரிந்துரைகள் நகராட்சி தனி அதிகாரிகள் மூலமாக நகராட்சி நிர்வாகத் துறைக்கு வரப்பெற்றது. இந்தப் பரிந்துரைகள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்தப் பரிந்துரைகளை ஏற்று கடலூர், காஞ்சிபுரம், கரூர், சிவகாசி ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரமுயர்த்துவதற்கான அவசர சட்டத்தை, தமிழக சட்டத் துறை செயலாளர் (சட்டம்) சி கோபி ரவிகுமார், பிறப்பித்தார். இதையடுத்து, நான்கு நகராட்சிகளும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான உத்தரவு அரசிதழில் வெளியிடப்படும். இந்த உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டவுடன் அது நடைமுறைக்கு வரும்.

சட்டம் இயற்றப்படும்: சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்து வைக்கப்பட் -டதால், அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேரவைக் கூட்டத் தொடரில் இதற்கான சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவே -ற்றப்படும். தமிழகத்தில் கும்பகோணம் மாநராட்சி உத்தரவுடன் சேர்த்து, 16 மாநகராட்சிகளும், 121 நகராட்சிகளும், 528 பேரூராட்சிகளும் என மொத்தம் 664 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

இப்போது நான்கு நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டதால், தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு, நாகர்கோவில், மதுரை, சேலம், தஞ்சாவூர், ஆவடி, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், ஒசூர் ஆகிய மாநகராட்சிகள் உள்ளன. அவற்றுடன் கும்பகோ -ணம், கடலூர், காஞ்சிபுரம், கரூர், சிவகாசி ஆகிய 5 நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

4. சுற்றுலா வளர்ச்சிக்கென தனித்த கொள்கை: இரண்டு இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கென தனித்த கொள்கை வெளியிடப்படு -ம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், ஹெலிகாப்டர் சுற்றுலா -வை ஏற்படுத்துவதற்கான நிலங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, சுற்றுலாத்துறை வெளியிட்ட செய்தி:

சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகள் முன்னணி இணையதள பயண நிறுவனங்களில் இடம்பெறச் செய்யப்பட்டன. இதன்மூலம் கடந்த மாதத்தில் மட்டும் 137 முன்பதிவுகள் பெறப்பட்டன. கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள் -ளுவர் சிலையை சுற்றுலாப் பயணிகள் இரவிலும் கண்டுகளிக்கும் விதமாக லேசர் தொழில்நுட்ப உதவியுடன் ஒளியூட்டம் செய்வதற்கு நடவ -டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பிச்சாவரம் படகு குழாம் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஹெலிகாப்டர் சுற்றுலா: முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் விதமாக கொடைக்கானல், ராமேசுவரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்ட -ர் சுற்றுலா தொடங்கப்பட உள்ளன. இதற்காக ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்க ராமேசுவரத்தில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானலில் ஆய்வுப் பணிகள் நடைபெறவுள்ளன. அணைக்கட்டு பகுதிகளில் படகு சவாரி, உணவகம் போன்றவற்றை ஏற்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு வரும் பயணிகளை ஈர்க்க பார்வையாளர் மாடம் உள்ளிட்ட பிற வசதிகளை ஏற்படுத்த பெரும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சுற்றுலாத் துறையில் அந்நிய செலாவணியை ஈட்டுதல் உள்பட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, பிரபலம் அடையாத தலங்களை மேம்படுத்துவது ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சுற்றுலாத் துறையின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட்டை விண்ணில் ஏவியது, தென்கொரியா

தென் கொரியாவில் முதன்முதலாக உள்நாட்டில் நூரி என்ற ராக்கெட்டை அங்குள்ள கொரியா விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் உருவாக்கினர். இந்த ராக்கெட் 47 மீட்டர் (154 அடி) நீளம் கொண்டது. இந்த ராக்கெட் 1.6 பில்லியன் டாலர் மதிப்பில் (சுமார் `12 ஆயிரம் கோடி) உருவாக்கப்பட்டடது. இந்த ராக்கெட், சியோலில் இருந்து 310 மைல் தொலைவில் உள்ள கோஹுங் என்ற இடத்தில் உள்ள நாரோ விண்வெளி மையத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது.

1990-களின் முற்பகுதியில் இருந்து தனது செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு தென்கொரியா பிற நாடுகளை நம்பி வந்தது.

10ஆவது நாடு

இந்தநிலையில் இப்போதுதான் தனது சொந்த தொழில்நுட்பத்தில் விண்வெளிக்கு செயற்கைக்கோளை அனுப்பும் 10ஆவது நாடாக மாறுவதற்கு தென் கொரியா முயற்சிக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதம் மற்றொரு ராக்கெட்டையும் விண்ணில் ஏவி சோதிக்க தென்கொரியா முடிவு செய்துள்ளது. தென்கொரியா கடைசியாக 2013ஆம் ஆண்டு ஒரு ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. ஆனால் இது ரஷிய தொழில் நுட்பத்தில் உருவானது ஆகும்.

1. What is the theme of the ‘International Day for Rural Women 2021’?

A) Rural women cultivating good food for all 

B) Gender Equality

C) Empowering Rural Women

D) Good Village; Good Country

 • ‘International Day for Rural Women 2021’ is celebrated on October 15. The day focuses on gender equality and empowering women in rural areas. The theme for this year is “Rural women cultivating good food for all”. The United Nations General Assembly had established this day on December 18, 2007.
 • According to a report by the United Nations, 40% of the total agricultural labour force in developing countries includes women.

2. LORROS, which is in news recently, is a system associated with which field?

A) Agriculture

B) Surveillance 

C) Artificial Intelligence

D) Finance

 • LORROS stands for Long Range Reconnaissance and Observation System, which is a sensor system to provide for long–range day–time and night–time surveillance. It is used by the national security forces like the Indian Army, to counter infiltration.

3. G Sathiyan, Harmeet Desai and A Sharath Kamal are associated with which sport?

A) Table Tennis 

B) Tennis

C) Shooting

D) Boxing

 • Indian Men’s Table Tennis team which includes ace players G Sathiyan, Harmeet Desai and A Sharath Kamal have won bronze medal at the Asian Championships at Doha, Qatar. The team lost to South Korea with a 0–3 point at the semi–finals. During the event, the Indian women’s team secured the 5th position.

4. When is the ‘International Day of Non–Violence’ observed every year?

A) October 1

B) October 2 

C) October 4

D) October 5

 • The birth anniversary of India’s ‘Father of Nation’ Mahatma Gandhi is observed as the ‘International Day of Non–Violence’ every year, on Oct.2.
 • The United Nations General Assembly (UNGA), in a resolution adopted in 2007, established the day as an occasion to spread the message of non–violence through education and public awareness. In 2004, Iranian Noble Laureate Shirin Ebadi proposed the idea of the commemoration.

5. Which state is set to receive the first consignment of Kashmiri walnuts, flagged off for the first time?

A) Maharashtra

B) Karnataka 

C) Kerala

D) Punjab

 • The first consignment of Kashmiri walnuts was recently flagged off from Budgam. The consignment with 2,000 kgs of walnuts was despatched to Bengaluru, Karnataka under the One District, One Product (ODOP) initiative.
 • ODOP is a flagship initiative of Ministry of Commerce and Industry. Kashmir accounts for 90% of India’s walnut production. They are known for the superior quality, taste and nutrients and hence widely in demand across the globe.

6. India’s first e–fish market app ‘Fishwaale’ has been launched in which state/UT?

A) West Bengal

B) Andhra Pradesh

C) Assam 

D) Kerala

 • Assam Fisheries Ministry recently launched an application, stated to be India’s first e–fish market app named ‘Fishwaale’. The application will help both buyers and sellers to place orders and sell fish, aquaculture equipment and medicine, fish feed and fish seed online.
 • Products such as Freshwater and seawater frozen fish, dry fish and processed fish items will be sold. The app was developed by Aqua Blue Global Aquaculture Solutions, in collaboration with the state fisheries department.

7. ‘Monthly Economic Review’ is released by which institution in India?

A) Reserve Bank of India

B) Finance Ministry 

C) ASSOCHAM

D) FICCI

 • As per the Finance Ministry’s Monthly Economic Review, India is well–placed on the path to swift recovery with growth impulses visibly transmitted to all sectors of the economy. The finance minister also said that economic activity is gaining further momentum in September. India’s merchandise exports crossed the $30–billion mark for the sixth consecutive month in fiscal year 2021–22.
 • The rate of growth of bank credit stood at 6.7 per cent year–on–year in the fortnight ending September 10, 2021, compared to 5.3 per cent in the corresponding period of the previous year, it added.

8. Which country has launched the world’s first automated, driverless train?

A) Germany 

B) Russia

C) The Netherlands

D) Sweden

 • German rail operator Deutsche Bahn and industrial group Siemens unveiled the world’s first automated, driverless train in the city of Hamburg. The project is part of a 60–million–euro ($70 million) modernisation of Hamburg’s rapid urban rail system. As per the operator, this project can bring up to 30 percent more passengers, can improve punctuality and save more than 30 percent energy.

9. What is India’s growth forecast for 2021–22, as per IMF’s recent World Economic Outlook report?

A) 7.5 %

B) 12.0 %

C) 9.5 % 

D) 10.0 %

 • The International Monetary Fund (IMF) has kept India’s growth forecast for 2021–22 unchanged at 9.5%, in its latest World Economic Outlook report. It also projected India’s economy to grow 8.5% in FY23. It has lowered the global growth projection marginally to 5.9% from 6% earlier. Supply disruptions in advanced economies and worsening pandemic impact in developing countries are the reasons.

10. Which company has launched the technology solution named “U Fill”?

A) Indian Oil

B) NTPC

C) BPCL 

D) Tata Power

 • Bharat Petroleum Corporation Limited (BPCL) has launched “U Fill” which is an automated fueling technology at the fuel outlets. The technology is said to eliminate manual intervention during vehicle fueling enhance the customer experience. The company has launched the technology in 65 cities.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button