Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

22nd September 2020 Current Affairs in Tamil & English

22nd September 2020 Current Affairs in Tamil & English

22nd September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

22nd September Tamil Current Affairs 2020

22nd September English Current Affairs 2020

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.சிறார்களின் உரிமைகளை மேம்படுத்துதற்கு ஆதரவாக வாதிடுவதற்கு, UNICEF’ஆல் தெரிவு செய்யப்பட்ட நடிகர் யார்?

அ. அமிதாப் பச்சன்

ஆ. இரம்யா கிருஷ்ணன்

இ. ஆயுஷ்மான் குர்ரானா

ஈ. ஐஸ்வர்யா ராய்

  • “ஒவ்வொரு குழந்தைக்கும்” என்ற பெயரிலான தனது குழந்தைகள் உரிமை பரப்புரைத் திட்டத்துக்காக UNICEF இந்தியா, நடிகர் ஆயுஷ்மான் குர்ரானாவை தெரிவு செய்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான UNICEF’இன் குரலாக ஆயுஷ்மான் குர்ரானா இனி விளங்குவார். முன்னதாக, கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், இதே திட்டத்திற்காக UNICEF’இல் இணைந்தார்.

2.சமீபத்தில் வெளியிடப்பட்ட பொருளாதார சார்பற்ற நிலை குறியீடு – 2020’இல், இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 55

ஆ. 105

இ. 125

ஈ. 128

  • பொருளாதார சார்பற்ற நிலை குறியீடு – 2020’இல், இந்தியா 105ஆவது இடத்தில் உள்ளது. ‘உலகின் பொருளாதார சார்பற்ற நிலை: 2020 ஆண்டறிக்கை’யை புது தில்லியைச் சார்ந்த மதியுரையகமான குடிமை சமூக மையத்துடன் இணைந்து கனடாவின் பிரேசர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை இக்குறியீட்டில் முதலிடத்தில் உள்ளன.

3.தலைமை தகவிணக்க அலுவலர் நியமனம் தொடர்பாக வங்கிகளுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்ட அமைப்பு எது?

அ. நிதி அமைச்சகம்

ஆ. இந்திய பங்கு & பரிவர்த்தனை வாரியம்

இ. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்

ஈ. இந்திய ரிசர்வ் வங்கி

  • வங்கிகளில் இணக்க செயல்பாடுகள் மற்றும் தலைமை தகவிணக்க அலுவலரின் பங்கு தொடர்பான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. அனைத்து வங்கிகளிலும் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட இணக்கக்கொள்கை மற்றும் நியமிக்கப்பட்ட ஒரு தலைமை தகவிணக்க அலுவலர் கட்டாயம் இருக்கவேண்டும் என இவ்வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன. இத்தலைமை தகவிணக்க அலுவலர், வங்கியின் பொது மேலாளர் பதவிக்கு இணையாக மூத்த நிர்வாகியாக இருப்பார்.

4.இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி விளைவதற்காக, ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA), எந்த நாட்டுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?

அ. இந்தியா

ஆ. மாலத்தீவு

இ. இலங்கை

ஈ. ஜப்பான்

  • மாலத்தீவுக்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் இடையே ஓர் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. “அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கான கட்டமைப்பு – மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இடையேயான உறவு” இந்தியப் பெருங்கடலில் அமைதி மற்றும் பாதுகாப்பைப்பேணுவதற்கான ஒத்துழைப்பை ஊக்குவிக்க முற்படுகிறது. முன்னதாக, கடந்த 2013ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கிடையில் முன்மொழியப்பட்ட, படைகளின் ஒப்பந்தத்தை இந்தியா எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.

5.எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ், தரைவிரிப்பு ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம் செயல்படுகிறது?

அ. MSME அமைச்சகம்

ஆ. ஜவுளி அமைச்சகம்

இ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

ஈ. வட கிழக்குப் பிராந்திய வளர்ச்சி அமைச்சகம்

  • இந்தியாவிலிருந்து தரைவிரிப்புகள் மற்றும் பிற தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப் -பதற்காக, கடந்த 1982ஆம் ஆண்டில், ஜவுளி அமைச்சகத்தால் தரைவிரிப்பு ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம் (CEPC) நிறுவப்பட்டது. அண்மையில், மெய்நிகராக மூன்று நாட்களுக்கு நடைபெறும் வாங்குபவர் -விற்பனையாளர் சந்திப்பை இவ்வமைப்பு அறிவித்ததால், அண்மைச் செய்திகளில் இடம்பிடித்தது.
  • ஆஸ்திரேலியா மற்றும் அதையொட்டிய நாடுகளில், இந்தச் சந்திப்பு தனது கவனத்தைச் செலுத்தும். ஏனெனில், அந்நாடுகளுக்கு கையால் தயாரிக்கப்பட்ட தரைவிரிப்புகளை இந்தியா மிகப்பெரிய அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது.

6.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, பக்ஜான் எண்ணெய்க் கிணறு அமைந்துள்ள மாநிலம் எது?

அ. மேகாலயா

ஆ. அஸ்ஸாம்

இ. மணிப்பூர்

ஈ. மிசோரம்

  • கிழக்கு அஸ்ஸாமின் டின்சுகியா மாவட்டத்தில் அமைந்துள்ள எண்ணெய் இந்திய நிறுவனத்தின் (OIL) பக்ஜான் எண்ணெய்க் கிணறு மூடப்பட்டுள்ளது. உபகரணங்கள் செயலிழந்த காரணத்தால், இந்த எண்ணெய்க் கிணற்றில், பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கட்டுப்பாடற்ற எரிவாயு பரவல் காரணமாக அதிக வேகத்தில் அத்தீ பரவியது. எண்ணெய் இந்திய நிறுவனமும் அயல்நாட்டு வல்லுநர்களும் இணைந்து கிட்டத்தட்ட 110 நாட்களுக்குப் பிறகு அத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

7.வெனிஸ் திரைப்பட விழா – 2020’இல், “சிறந்த திரைக்கதை” விருதை வென்ற இந்திய திரைப்படம் எது?

அ. ஹெலாரோ

ஆ. சன் ரைஸ்

இ. சீமராஜா

ஈ. தி டிசைபிள்

  • ​மராத்தி மொழி திரைப்படமான ‘The Disciple’, வெனிசு திரைப்பட விழா–2020’இல் ‘சிறந்த திரைக்கதை’ விருதை வென்றுள்ளது. இந்தத் திரைப்படத்தை சைதன்யா தம்ஹானே இயக்கியுள்ளார். பாரம்பரிய ஹிந்துஸ்தானி பாடகரின் தனிப்பட்ட மற்றும் தொழிற்முறை அனுபவங்களை இப்படம் விவரிக்கிறது. மதிப்புமிக்க, ‘FIPRESCI’ விருதையும் இது பெற்றுள்ளது. சோலி ஜாவோ இயக்கிய ‘நோமட்லேண்ட்’ திரைப்படம், இந்த விழாவில், “தங்க சிங்கம்” விருதை வென்றது.

8.இந்திய வாகனங்களில் உமிழ்வு & பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்கான விதிமுறைகளை அறிவித்துள்ள அமைச்சகம் எது?

அ. வீட்டுவசதி & நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

ஆ. நிதி அமைச்சகம்

இ. சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • இந்திய வாகனங்களில் உமிழ்வு & பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய வாகனங்களுக்கான பூட்டுதல் இல்லா நிறுத்த அமைப்பு (ABS), வளிப்பைகள், பின்புற வாகன நிறுத்த உதவி அமைப்பு மற்றும் மோதல் தரநிலைகளுக்கான வரைவு அறிவிப்புகளையும் அவ்வமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • இத்தகைய விதிமுறைகளில் வளர்ந்த நாடுகளுக்கிணையாக இந்திய வாகனத் தொழிற்துறையைக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் உள்ளன என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

9.அண்மையில் எந்த மாநிலத்தில் அமைந்துள்ள மூன்று பெட்ரோலிய திட்டங்களை இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார்?

அ. உத்தர பிரதேசம்

ஆ. மத்திய பிரதேசம்

இ. பீகார்

ஈ. அஸ்ஸாம்

  • பிரதமர் மோடி, பீகார் மாநிலத்தில், பெட்ரோலியத்துறை தொடர்பான மூன்று முக்கியத் திட்டங்களை காணொலிக்காட்சிமூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். துர்காபூர்–பங்கா பிரிவில், பாரதிப் –ஹால்தியா- துர்காபூர் பைப்லைன் விரிவாக்கத் திட்டம் மற்றும் 2 LPG நிரப்பும் நிலையங்கள் இந்தத் திட்டங்களுள் அடங்கும். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் இந்திய எண்ணெய் நிறுவனமும் (IOC) ஹிந்துஸ்தான் நிறுவனமும் (HPCL) இவற்றை நிர்மாணித்துள்ளன.

10.சமீபத்தில் நடந்த ASEAN-இந்தியா அமைச்சர்கள் கூட்டத்திற்கு இணைந்து தலைமைதாங்கியவர் யார்?

அ. உள்துறை அமைச்சர்

ஆ. வெளியுறவு அமைச்சர்

இ. பிரதமர்

ஈ. வெளியுறவு செயலாளர்

  • மத்திய வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியதோடு ASEAN -இந்தியா அமைச்சர்கள் கூட்டத்திற்கும் இணைந்து தலைமைதாங்கினார். இக்கூட்டம் ஒரு மெய்நிகர் முறைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் 10 ASEAN உறுப்பு நாடுகளின் அமைச்சர்களும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தின்போது, புதிய ASENA – இந்தியா செயல் திட்டம் (2021-2025) ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

  • திருச்சி சரக காவல்துறை மற்றும் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் இணைந்து திருச்சி சரகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் “கேடயம்” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளன. இத்திட்டமானது திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் & புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
  • ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் உதவியுடன், உயர்தர மேம்பாட்டு மையம் நிறுவிட தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கும், இராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • தமிழ்நாட்டில், ஐம்பதாயிரம் வேலையற்ற நபர்களுக்கு, இணையவழியில், இலவசமாக கல்வி மற்றும் பயிற்சியளிப்பதற்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் க பழனிசாமி முன்னிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்திற்கும், கோர்ஸெரா நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தமாகியுள்ளது.
  • தில்லியில், 2019 ஜூலையில், 55ஆவது அகில இந்திய திறன் போட்டி நடந்தது. இதில், கைவினைஞர் பயிற்சியில், தமிழ்நாடு சிறந்த மாநிலமாக தேர்வுசெய்யப்பட்டது. மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் சார்பில், பாராட்டுச்சான்றிதழ் மற்றும் சுழற்கேடயம் வழங்கப்பட்டது.

1. Which actor has been chosen by UNICEF to advocate for promoting rights of children?

[A] Amitabh Bachchan

[B] Ramya Krishnan

[C] Ayushmann Khurrana

[D] Aishwarya Rai

  • UNICEF India chosen Indian actor Ayushmann Khurrana, as a celebrity to advocate its child rights campaign named “For Every Child”. The actor would support UNICEF in its work around India to end violence against children. Earlier, the football star David Beckham had joined UNICEF for the same campaign.

2. What is India’s rank in the Economic Freedom Index 2020, released recently?

[A] 55th

[B] 105th

[C] 125th

[D] 128th

  • India has been ranked at 105th position in the Economic Freedom Index 2020. “The Economic Freedom of the World: 2020 Annual Report” has been released by Fraser Institute of Canada in collaboration with New Delhi based think tank “Centre For Civil Society”. As per the report, Hong Kong and Singapore have topped the index.

3. Which body has issued guidelines to Banks regarding the appointment of Chief Compliance Officer (CCO)?

[A] Finance Ministry

[B] SEBI

[C] CVC

[D] RBI

  • The Reserve Bank of India (RBI) has issued guidelines regarding Compliance Functions in Banks and Role of Chief Compliance Officer (CCO). The guidelines direct that all banks should have a board approved Compliance Policy and Appointment of CCO. The CCO shall be a senior executive of the bank, preferably in the rank of a General Manager.

4. The United States has signed a Defence Cooperation agreement with which country, for peace in Indo–Pacific region?

[A] India

[B] Maldives

[C] Sri Lanka

[D] Japan

  • A strategic Defence and Security agreement has been recently signed between the Maldives and the United States. The “Framework for U.S. Department of Defense–Maldives Ministry of Defence and Security Relationship” seeks to promote cooperation maintaining peace and security in the Indian Ocean. India had previously opposed a proposed Status of Forces Agreement between the two countries in 2013.

5. The Carpet Export Promotion Council (CEPC) functions under which Union Ministry?

[A] Ministry of MSME

[B] Ministry of Textiles

[C] Ministry of Commerce and Industry

[D] Ministry of Development of North Eastern Region

  • The Carpet Export Promotion Council (CEPC) was established by the Ministry of Textiles in 1982, to promote export of Carpets and other allied Products from India. Recently, CEPC was in news as the organization has announced a three–day virtual Buyer–Seller Meet.
  • The programme is to focus on Australia and adjoining countries, as India is the biggest exporter of handmade carpets to those countries.

6. Bhagjan Oil Well, that was seen in news, is located in which state?

[A] Meghalaya

[B] Assam

[C] Manipur

[D] Mizoram

  • The Baghjan Oil Well of Oil India Limited (OIL) is located in Eastern Assam’s Tinsukia district has been put off. A massive fire occurred in the Oil well due to equipment failure and it turned out into a blowout, which means uncontrolled escape of gas at great speed. Oil India Limited (OIL) and foreign experts managed to tame the fire after 110 days.

7. Which Indian Movie has won the “Best Screen Play” award at the Venice Film Festival 2020?

[A] Hellaro

[B] Son Rise

[C] Seema Raja

[D] The Disciple

  • Marathi language movie ‘The Disciple’ has won the Best Screenplay award at Venice Film Festival. The film is directed by Chaitanya Tamhane. The movie describes the personal and professional experiences of a Hindustani classical singer. It also bagged the prestigious FIPRESCI award. “Nomadland”, directed by Chloe Zhao won the “Golden Lion” award in the file festival.

8. Which Ministry has notified regulations for upgrading emission & safety features in Indian automobiles?

[A] Ministry of Housing and Urban Affairs

[B] Ministry of Finance

[C] Ministry of Road Transport & Highways

[D] Ministry of Home Affairs

  • The Union Ministry of Road Transport has notified regulations for upgrading emission & safety features in Indian automobiles. The Ministry has also issued draft notifications for anti–lock braking systems (ABS), airbags, reverse parking assist and crash standards for Indian vehicles. The Ministry has stated that there are plans to bring Indian automotive industry at par with developed nations in such regulations.

9. PM of India has inaugurated three petroleum projects recently, located in which state?

[A] Uttar Pradesh

[B] Madhya Pradesh

[C] Bihar

[D] Himachal Pradesh

  • Prime Minister of India Narendra Modi has recently dedicated three petroleum projects at Bihar to the nation. Indian Oil’s Durgapur–Banka section of the Paradip–Haldia–Durgapur LPG pipeline, Indian Oil’s Cooking gas bottling plant at Banka and HPCL’s LPG bottling plant at Harsidh are the three projects at Bihar which have been inaugurated by the Prime Minister.

10. Which Indian head co–chaired the ASEAN–India Ministerial Meeting that was virtually held recently?

[A] Union Home Minister

[B] Union External Affairs Minister

[C] Prime Minister

[D] External Affairs Secretary

  • The Union External Affairs Minister S Jaishankar represented India and co–chaired the ASEAN–India Ministerial Meeting. The meeting was held in a virtual mode. The meeting was participated by Foreign Ministers of the 10 ASEAN Member countries and India. During the meeting, a new ASEAN–India Plan of Action (2021–2025) was adopted.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!