Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

22nd September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

22nd September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 22nd September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. PM KUSUM திட்டத்தின்கீழ் ஆஃப்-கிரிட் சோலார் பம்புகளை நிறுவுவதில், நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

அ) பீகார்

ஆ) இராஜஸ்தான்

இ) ஹரியானா 

ஈ) மத்திய பிரதேசம்

  • 2020-21ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த 15,000 பம்புகளில் 14,418 பம்புகளை நிறுவி, பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா இவம் உத்தன் மகாபியான் (PM KUSUM) கீழ் ஆஃப்-கிரிட் சோலார் பம்புகளை நிறுவுவதில் ஹரியானா நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது.

2. தேசிய வன தியாகிகள் நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?

அ) செப்டம்பர்.14

ஆ) செப்டம்பர்.10

இ) செப்டம்பர்.15

ஈ) செப்டம்பர்.11 

  • செப்.11 அன்று தேசிய வன தியாகிகள் நாள் கொண்டாடப்படுகிறது. 2013 ஆம் ஆண்டில், சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் அறிவித்த பிறகு, இந்த நாள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. கடந்த 1730’இல் இதே தேதியில், பலரறியா கெஜார்லி படுகொலை நடந்ததைக் குறிக்கும் வகையில் இத்தேதி தேர்வு செய்யப்பட்டது இத்துயரச்சம்பவத்தின்போது, இராஜஸ்தானின் அப்போதைய மன்னர் மகாராஜா அபை சிங்கின் உத்தரவின் பேரில் மக்கள் கெஜார்லி மரங்களை வெட்டத்தொடங்கினர். இந்த மரங்கள், ராஜஸ்தானின் கெஜார்லி கிராமத்தில் உள்ள பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த மக்களால் புனிதமாகக் கருதப்பட்டன.

3. ‘இந்தியாவில் நகர்ப்புற திட்டமிடல் திறனில் சீர்திருத்தங்கள்’ பற்றிய அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ) தேசிய மேம்பாட்டுக் கழகம்

ஆ) NITI ஆயோக் 

இ) புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்

ஈ) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

  • ‘இந்தியாவில் நகர்ப்புற திட்டமிடல் திறனில் சீர்திருத்தங்கள்’ பற்றிய அறிக்கையை, NITI ஆயோக் வெளியிட்டுள்ளது.
  • சுகாதாரமான நகரங்களைத் திட்டமிடுதல், நகர்ப்புற நிலத்தின் உகந்த பயன்பாடு, மனிதவள திறன்களை அதிகரித்தல், நகர்ப்புற நிர்வாகத்தை வலுப்படுத்துதல், உள்ளூர் தலைமையை உருவாக்குதல், தனியார் துறையின் பங்கை மேம்படுத்துதல் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் கல்வி முறையை மேம்படுத்துதல் ஆகியவை உட்பட நகர்ப்புற திட்டமிடல் குறித்த பல அம்சங்களின் பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளன.

4. காவல்துறையினரின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை அறிந்துகொள்வதற்காக புதிய காவலாணையத்தை அமைக்க முடிவு செய்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு 

ஆ) இமாச்சல பிரதேசம்

இ) குஜராத்

ஈ) மணிப்பூர்

  • காவல்துறையினரின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை அறிந்து கொள்வதற்காக தமிழ்நாடு அரசு ஒரு புதிய காவல் ஆணையத்தை அமைக்கவுள்ளது. காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதற்கான வழிகள், தேவையான திட்டங்கள் மற்றும் காவல்துறையினருக்கான புதிய பயிற்சித்திட்டங்களை பரிந்துரைப்பது இதன் பணியாகும்.
  • பொதுமக்கள் தங்கள் குறைகளை காவல்துறையில் பதிவுசெய்வதற்காக ஒரு திறன்பேசி செயலியை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், ஓர் ஆன்லைன் புகார் தாக்கல் பொறிமுறையும் உருவாக்கப்படும். வங்கிகள், வேலைவாய்ப்பு மற்றும் பிற இணையவழி குற்றங்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களைச் சமாளிக்க நிபுணர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

5. டிஜிட்டல் விவசாயத்தை முன்னெடுப்பதற்காக பின்வரும் எந்த நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது?

அ) சிஸ்கோ

ஆ) நிஞ்சாகார்ட்

இ) ITC லிட்

ஈ) மேலே உள்ள அனைத்தும் 

  • டிஜிட்டல் விவசாயத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக தனியார் நிறுவனங்களுடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வேளாண் மற்றும் உழவர்கள் நல அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. இத்திட்டங்களின் அடிப்படையில், எப்பயிரை விளைவிக்கலாம், எந்த வகை விதையைப் பயன்படுத்தலாம், அதிக மகசூலைப் பெறுவதற்காக என்ன செயல் முறைகளைப் பின்பற்றலாம் உள்ளிட்டவை குறித்த விவரமான முடிவுகளை விவசாயிகள் எடுக்க இயலும்.

6.கதிரியக்கத்தரவைப்பெறக்கூடிய புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திய நாடு எது?

அ) சீனா 

ஆ) இந்தியா

இ) ஜெர்மனி

ஈ) ஜப்பான்

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளை கண்காணிக்கும் மற்றும் அதன் இயற்கைவள கண்காணிப்பை அதிகரிக்கும் முயற்சியாக சீனா 24ஆவது காபென்-வரிசை புவி-கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. லாங் மார்ச் 4C ஏவுகலத்தில், ஷான்ஸி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் இருந்து இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
  • விண்வெளி, நிறமாலை மற்றும் கதிரியக்கத் தரவைப் பெறும் திறன் கொண்ட அந்த விண்கலத்தில் சீனா ஏழு இமேஜர்கள் மற்றும் சென்சார்களை பொருத்தியுள்ளது.

7. எந்த வங்கியின் பங்குதாரராக ரேகா ஜெயின் நியமிக்கப்பட்டார்?

அ) இந்தியன் வங்கி

ஆ) பஞ்சாப் நேஷனல் வங்கி 

இ) HDFC வங்கி

ஈ) ஐசிஐசிஐ வங்கி

  • ஆஷா பண்டார்கர், பங்குதாரர் இயக்குநராக இருந்து விலகிய பிறகு, ரேகா ஜெயினை தனது பங்குதாரர் இயக்குநராக பஞ்சாப் நேஷனல் வங்கி நியமித்துள்ளது. முன்னதாக, அவர் இந்திய தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் குழுவில், 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ஒரு சுயாதீன இயக்குநராக பணியாற்றினார். ஜெயின், TCIL வாரியத்தின் தணிக்கை குழுவிற்கும் தலைமைதாங்கியுள்ளார்.

8. கோளரங்க புதுமை சவாலை தொடங்கியுள்ள நிறுவனம் எது?

அ) மைகவ் இந்தியா 

ஆ) இஸ்ரோ

இ) NITI ஆயோக்

ஈ) பிர்லா கோளரங்கம்

  • இந்திய துளிர்நிறுவனங்கள் & தொழினுட்ப தொழில்முனைவோருக்காக கோளரங்க புதுமை சவாலை மைகவ் கடந்த வாரம் தொடங்கியது. 2021 அக்.10 வரை இதற்காக பதிவுசெய்துகொள்ளலாம். நமது கோளரங்குகளு -க்கான அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக புது நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோரிடமிருந்து விண்ணப்பங்களை இந்தச் சவால் வரவேற்கிறது.

9. சமீபத்தில், ஆசிய-பசிபிக் கட்டற்ற வர்த்தக குழுவில் சேருவதற்கு விண்ணப்பித்த நாடு எது?

அ) இந்தியா

ஆ) ஜப்பான்

இ) சீனா 

ஈ) சிங்கப்பூர்

  • பன்னாட்டு அரசியலில் தனது செல்வாக்கை அதிகரிக்க 11 நாடுகளைக் கொண்ட ஆசிய-பசிபிக் கட்டற்ற வர்த்தகக் குழுவில் சேருவதற்கு சீனா விண்ணப்பித்துள்ளது. சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ, நியூசிலாந்தின் வர்த்தக அமைச்சரிடம் டிரான்ஸ்-பசிபிக் பார்ட்னர்ஷிப் (CPTPP) அல்லது ஆசிய-பசிபிக் தடையற்ற வர்த்தகக் குழுவிற்கான விரிவான மற்றும் முன்னேற்ற ஒப்பந்தத்தின் பிரதிநிதியாக அந்த விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.
  • CPTPP என்பது ஆசியாவுடனான உறவை அதிகரிக்க அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவால் ஊக்குவிக்கப்பட்ட குழுவாகும். CPTPP ஆனது புருனே, ஆஸ்திரேலியா, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, பெரு, சிங்கப்பூர், நியூசிலாந்து மற்றும் வியட்நாம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

10. 2021 – ஸ்வச்சதா பக்வாடா தொடங்கப்பட்ட இடம் எது?

அ) மர்மகோவா துறைமுக அறக்கட்டளை

ஆ) கொச்சி துறைமுக அறக்கட்டளை 

இ) ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளை

ஈ) நவ ஷேவா சர்வதேச சரக்குகள் முனையம்

  • 2021 செப்.16 அன்று, கொச்சின் துறைமுக அறக்கட்டளையில் ‘ஸ்வச்சதா பக்வாடா-2021’ தொடங்கப்பட்டது. அனைத்து துறைகளிலும் ஸ்வச்சதா உறுதிமொழி வழங்கப்பட்டது. இதன்போது, துறைமுகப் பகுதிகளில் ‘ஷ்ரம்தான் தூய்மைப் பணிகள்’ தொடங்கப்பட்டன. முன்மொழியப்பட்ட பக்வாடா நடவடிக்கைகளின் போது துறைமுகப் பகுதிக்குள் வேலை செய்யும் இடங்கள், அலுவலக வளாகங்கள் மற்றும் பொது இடங்களை தூய்மை செய்வது ஆகியவை அடங்கும்.
  • ‘ஸ்வச்சதா பக்வாடா’ என்பது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரமாகும், இது தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய விமானப் படை புதிய தலைமைத் தளபதி விவேக் ராம் செளதரி

இந்திய விமானப் படையின் புதிய தலைமைத் தளபதியாக விவேக் ராம் செளதரி நியமிக்கப்படவுள்ளார் என்று நடுவண் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய வான்படைத்தலைமைத் தளபதி ஆர் கே எஸ் பதெளரியா செப்.30 ஓய்வு பெறுகிறார். இதையடுத்து விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் செளதரியை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2. பெங்களூரு-சென்னை எண்ணூர் அதிவேக விரைவுச்சாலை திட்டம்

பெங்களூரு-சென்னை எண்ணூர் 6 வழி விரைவுச்சாலை திட்டத்துக் -கான நில எடுப்புப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.

பிற மாநிலங்களில் இருந்து, சென்னை-எண்ணூர் காமராஜர் மற்றும் காட்டுப்பள்ளி தனியார் துறைமுகங்களுக்கு சரக்கு வாகனங்கள் வேகமாக வருவதற்காக பாரத்மாலா பரியோஜனா திட்டம்மூலம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் முதல், தமிழகத்தின் எல்லையான திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட தச்சூர் வரையில் 126.550 கிமீ தூரத்துக்கு, பெங்களூரு-சென்னை அதிவேக நெடுஞ்சாலை (6 வழிச்சாலை) அமைக்க திட்டமிடப்பட்டது.

இதில், ஆந்திர மாநிலத்தில் 75 கிமீ, தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி ஆகிய வட்டங்களில் 51.550 கிமீ தூரம் உள்ளது. இதற்கிடையே அமைய உள்ள இச்சாலைக்கு NH-716 என்று அழைக்கப்படுகிறது.

3. மதுரையும் மகாத்மாவும்! | மகாத்மா காந்தியின் மதுரை விஜயம் பற்றிய தலையங்கம்

சரியாக இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இதே செப்டம்பர் 22-ஆம் நாள். நமது தமிழகத்தின் மதுரை மாநகரில் அன்று நடந்த சம்பவம் ஒன்று, கடந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளில் ஒன்றாக உலகத்தவரால் கொண்டாடப்படுகிறது. அதுவரை அஹிம்சையையும், அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலையையும் மட்டுமே தனது குறிக்கோளாகக் கொண்டிருந்த காந்தியடிகளை, அடித்தட்டு சாமானியர் குறித்தும் சிந்திக்க வைத்த சரித்திரத் திருப்பம் அந்த நாளில் மாநகர் மதுரையில் அரங்கேறியது.

ஐந்து தடவை மதுரை மாநகருக்கு விஜயம் செய்திருக்கிறார் அண்ணல் காந்தியடிகள். அவரது ஒவ்வொரு மதுரை விஜயமும் ஒவ்வொரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது என்பதுதான் ஆச்சரியம். அண்ணல் காந்தியடிகளுக்கு மட்டுமல்ல, சுவாமி விவேகானந்தர், பாலகங்காதர திலகர், அரவிந்த கோஷ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்று ஏனைய பல தன்னிகரற்ற தலைமைப் பண்பாளர்களின் வாழ்க்கையிலும் தமிழகம் திருப்புமுனைத் திருத்தலமாக இருந்திருக்கிறது என்பதைத் தற்செயல் நிகழ்வாக ஒதுக்கிவிட முடியவில்லை. அந்த வகையில் பார்க்கும்போது, தமிழகம் காந்தியடிகளிடம் ஏற்படுத்திய தலைகீழ் மாற்றத்தை நாம் பெருமிதத்துடன் கொண்டாடக் கடமைப் பட்டிருக்கிறோம்.

மகாத்மா காந்தியின் இரண்டாவது மதுரை விஜயம்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயமாக அமைந்தது. 1921 செப்டம்பர் 21, 22 தேதிகளில் மதுரையில் தங்கியிருந்தார் அண்ணல். மதுரைக்கு ரயிலில் வந்து கொண்டிருக்கும்போதுதான் அண்ணலுக்கு அந்த மனமாற்றம் ஏற்பட்டது. அவரது சிந்தனையிலும் செயல்பாட்டிலும் சாமானியன் முன்னிலை பெற்றது அந்தப் பயணத்தின்போதுதான். மதுரையை நோக்கி விரைந்து கொண்டிருந்த அந்த ரயில், திண்டுக்கல்லைத் தாண்டிப் பயணித்துக் கொண்டிருந்தது. ரயில் பெட்டியில் அமர்ந்திருந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. குஜராத்தியினருக்கே உரித்தான பாணியில் உடையணிந்து, தலையில் பெரிய தலைப்பாகையுடன் சக பயணிகளுடன் உரையாடிக் கொண்டும், ரயில் பெட்டிக்கு வெளியே எழில் கொஞ்சும் தமிழகத்தின் வயல்வெளிகளைக் கண்குளிரப் பார்த்துக் கொண்டும் பயணித்துக் கொண்டிருந்தார்.

வெறும் கோவணத்துணியுடன் வயலில் உழவர்கள் உழுது கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்த வண்ணம் பயணித்துக் கொண்டிருந்த மோகன்தாஸின் மனதில் புயலடிக்கிறது. அங்கே பலர் கோவணத்துணியுடன் உழுது கொண்டிருக்க, இங்கே தான் பல முழம் துணிகளால் போர்த்தப்பட்ட உடையணிந்து கொண்டிருப்பதை நினைத்துத் துணுக்குறுகிறது அந்த மாமனிதரின் மனம். தனக்கும் சாமானிய இந்தியனுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை அவர் புரிந்து கொள்கிறார். அடுத்த நிமிடமே, தனது உதவியாளரை அழைத்து நீண்டதொரு அறிக்கையை அந்த ரயில் பெட்டியில் அமர்ந்தபடியே எழுதுகிறார். இடி முழக்கத்துக்கு முன்னால் வரும் மின்னல் வெட்டுப்போல, அவரது ஆடை மாற்றத்துக்கு முன்னால், அந்த ரயில் பெட்டியில் மனமாற்றம் ஏற்பட்டு விடுகிறது.

மதுரைக்கு வந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மேலமாசி வீதி 251 ஏ – இலக்க வீட்டில் தங்குகிறார். செப்டம்பர் 21-ஆம் தேதி இரவு தூங்கப் போவதற்கு முன்னால், அடுத்த நாள் அதிகாலையில் தான் மேற்கொள்ள இருக்கும் மாற்றத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டார். செப்டம்பர் 22 அதிகாலையில் முழுக்க மழித்தத் தலையுடனும், நான்கு முழ வேட்டியுடன் மேலே ஒரு துணியை மட்டும் போர்த்திக் கொண்டு காட்சியளித்த அந்தக் கணமே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி காற்றுடன் கரைந்து, அங்கே மகாத்மா காந்தி உருவெடுத்து விட்டார். “கடையனுக்கும் கடைத்தேற்றம்’ இல்லாமல் அஹிம்சையும், சுதந்திரமும் அர்த்தமற்றவை என்பதை அவர் தனது செயலால் உணர்த்த முற்பட்டார். பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் எளிமையின் அடையாளமாக இருந்தாக வேண்டும் என்று தீர்மானித்தார்.

“எனது வாழ்க்கையில் நீண்ட சிந்தனைக்குப் பிறகு நான் எடுத்த எந்தவொரு முடிவு குறித்தும் நான் வருத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படவே இல்லை” என்பார் மகாத்மா காந்தி. அப்படி எடுத்த முடிவுகளில் முக்கியமான முடிவுதான் செப்டம்பர் 22, 1921-இல் மதுரையில் அவர் மேற்கொண்ட ஆடை மாற்றம். “”பொது வாழ்க்கையிலும், அரசியலிலும் மற்றவர்களுக்கு வழிகாட்ட முற்படுபவர்கள், தாங்களே முன்மாதிரியாக இருக்க வேண்டும். அடித்தட்டு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பது போலவே அவர்களைப் போல வாழ்வதும் அவசியம். ஆடம்பரமும் படாடோபமும் அவர்களிடமிருந்து நம்மை அந்நியப்படுத்திவிடும்” – இதுவும் அண்ணல் காந்தியடிகள் செயல்படுத்திக் காட்டிய அவரது சொற்கள்.

அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கையில் மதுரை ஏற்படுத்திய மாற்றங்களின் அடிப்படையில்தான் அகில இந்திய அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டன. எளிமை, நேர்மை, தியாகம், சமத்துவம் உள்ளிட்ட காந்தியத்தின் அடையாளம்தான் காந்தியார் அணிந்த ஆடை. இடுப்பை மறைக்க நான்கு முழம் வேட்டியும், மார்பை மறைக்க மேல் துண்டும் என்பது அவரது அரசியல் வாழ்க்கையின் அடையாளம். டால்ஸ்டாய், பெர்ட்ரண்ட் ரஸல், பெர்னார்டு ஷா, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா என்று உலக ஆளுமைகள் அனைவரும் பேராளுமையாக ஏற்றுக்கொண்ட ஒரே இந்தியத் தலைவர் அண்ணல் காந்தியடிகள் மட்டும்தான். அரை நிர்வாண தரித்திர நாராயணர்கள் குறித்து அந்த மகாத்மாவை சிந்திக்க வைத்த பெருமை தமிழகத்துக்கு உண்டு. அதனால், காந்தியார் காட்டிய வழியை அரசியலிலும் வாழ்க்கையிலும் பின்பற்ற வேண்டிய கடமை நமக்கு உண்டு!

1. Which state has been adjudged first in the country in installation of off–grid solar pumps under PM KUSUM scheme?

A) Bihar

B) Rajasthan

C) Haryana 

D) Madhya Pradesh

  • Haryana has been adjudged first in the country in installation of off–grid solar pumps under Pradhan Mantri Kisan Urja Suraksha Evam Utthan Mahaabhiyaan (PM–KUSUM) with installation of 14,418 pumps against 15,000 sanctioned pumps for the year 2020–21.

2. On which date, National Forest Martyrs Day is observed?

A) September.14

B) September.10

C) September.15

D) September.11 

  • National Forest Martyrs Day is marked on September 11. The day as the name suggests is observed to pay tributes to those who laid down their lives in order to protect the jungles, forests and wildlife across India.
  • The day officially came into existence in 2013 after the Ministry of Environment and Forest made the declaration. The date of September 11 was chosen as on this date in 1730, the infamous Khejarli massacre took place. During this tragic incident, people started cutting Khejarli trees on the orders of the then king Maharaja Abhay Singh of Rajasthan. These trees were considered sacred by the people that belonged to the Bishnoi community in Rajasthan’s Khejarli village.

3. Which organization has launched a report titled ‘Reforms in Urban Planning Capacity in India?’

A) National Development Council

B) NITI Aayog 

C) Ministry of Statistics and Programme Implementation

D) Ministry of Housing and Urban Affairs

  • NITI Aayog has launched a report on ‘Reforms in Urban Planning Capacity in India’. The report comprises a set of recommendations on various aspects of urban planning—such as interventions for planning healthy cities, optimum utilization of urban land, ramping up human–resource capacities, strengthening urban governance, building local leadership, enhancing the role of private sector, and advancing the urban planning education system.

4. Which state has decided to set up a new Police Commission to get to know the demands and needs of cops?

A) Tamil Nadu 

B) Himachal Pradesh

C) Gujarat

D) Manipur

  • Tamil Nadu government will set up a new Police Commission to get to know the demands and needs of cops.
  • It will be constituted to recommend ways to strengthen the relationship between police and public, necessary schemes, and new training programs for police personnel. An online complaint filing mechanism would also be created, besides the launch of a mobile–based application for the benefit of the general public to register their grievances with the police. Experts would be hired to deal with offences involving banks, employment and other online crimes.

5. With which company, Ministry of Agriculture and Farmers welfare has signed MoU for taking forward Digital Agriculture?

A) CISCO

B) Ninjacart

C) ITC Ltd

D) All of the above 

  • Ministry of Agriculture and Farmers welfare has signed five MOUs with private companies for taking forward Digital Agriculture. Agriculture Minister Narendra Singh Tomar said the MOUs aimed at increasing farmer’s income and protecting their produce.
  • The MoUs were signed for pilot projects with CISCO, Ninjacart, Jio Platforms Limited, ITC Limited and NCDEX e–Markets Limited. Based on these pilot projects farmers will be able to take informed decisions on what crop to grow, what variety of seed to use and what best practises to adopt to maximise the yield.

6. Which country has launched an Earth observation satellite that can obtain radioactive data?

A) China 

B) India

C) Germany

D) Japan

  • China has launched the 24th Gaofen–series Earth–observation satellite in a bid to monitor environmental protection efforts and boost its natural resources surveillance.
  • The satellite was launched from the Taiyuan Satellite Launch Center in Shanxi province on a Long March 4C carrier rocket. China has mounted seven imagers and sensors on that spacecraft that are capable of obtaining spatial, spectral and radioactive data.

7. Rekha Jain has been appointed as a shareholder director of which bank?

A) Indian Bank

B) Punjab National Bank 

C) HDFC Bank

D) ICICI Bank

  • Punjab National Bank has appointed Rekha Jain as a shareholder director after Asha Bhandarker stepped down as shareholder director after completing her tenure of three years.
  • Previously, she has served as an independent director on the board of Telecommunication Consultants of India Ltd. (TCIL) from 2015 to 2019. Jain has also chaired the audit committee of the TCIL board.

8. Which organization has launched the Planetarium Innovation Challenge?

A) MyGov India 

B) ISRO

C) NITI Aayog

D) Birla Planetarium

  • The “Planetarium Innovation Challenge” has been launched by MyGov India for tech entrepreneurs and Indian start–ups. This Planetarium challenge was launched with the primary aim of bringing together local Start–ups and tech firms that have potential to build indigenous planetariums system software.

9. Recently, which country has applied to join the Asia–Pacific Free Trade grouping?

A) India

B) Japan

C) China 

D) Singapore

  • China has applied to join the Asia–Pacific Free Trade Grouping composed of 11 countries to increase its influence in international politics. Chinese Commerce Minister Wang Wentao submitted the application to the Trade Minister of New Zealand as a representative of Comprehensive & Progress Agreement for Trans–Pacific Partnership (CPTPP) or the Asia–Pacific free Trade grouping.
  • CPTPP was a group promoted by former USA President Barack Obama to increase its relations with Asia. CPTPP comprises of Brunei, Australia, Canada, Chile, Japan, Malaysia, Mexico, Peru, Singapore, New Zealand and Vietnam.

10. Where was Swachhata Pakhwada 2021 launched?

A) Mormugao Port Trust

B) Cochin Port Trust 

C) Jawaharlal Nehru Port Trust

D) Nhava Sheva International Container Terminal

  • On September 16, 2021, at the Cochin Port Trust Swachhata Pakhwada 2021 was launched and the Swachhata pledge was administered in all departments. On this occasion, shramdaan cleaning activities were started in the Port areas.
  • During the Pakhwada activities that were proposed comprised of cleaning of work places, office premises and crafts & public spaces within the Port area. Swachhata Pakhwada is an environment awareness campaign which was launched under the Swachh Bharat Mission.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!