TnpscTnpsc Current Affairs

22nd September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

22nd September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 22nd September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

22nd September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. IHCI என்ற உயர் இரத்தவழுத்தக் கட்டுப்பாட்டு முனைவு தொடங்கப்பட்ட நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. இந்தியா

இ. இந்தோனேசியா

ஈ. வங்காளதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்தியா

  • தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் இந்திய உயர் இரத்தவழுத்தக் கட்டுப்பாட்டு முனைவுமூலம் மேற்கொள்ளப்படும் பேரளவிலான திட்டத்திற்காக இந்தியாவிற்கு ஐக்கிய நாடுகள் விருது கிடைத்துள்ளது. ‘இந்திய உயர் இரத்தவழுத்த கட்டுப்பாட்டு முனைவு’ என்பது இந்தியாவின் தேசிய சுகாதாரத் திட்டத்தின்கீழ் செயலில் இருக்கும் ஒரு முனைவு ஆகும். இது நடுவண் சுகாதார அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR), மாநில அரசுகள் மற்றும் உலக சுகாதார நிறுவனம்–இந்தியா ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும்.

2. ‘குற்றவியல் நடைமுறை (அடையாளம்)’ மசோதாவுடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

அ. சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஈ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. உள்துறை அமைச்சகம்

  • விசாரணைக் காவலர்கள் கைதிகளின் பயோமெட்ரிக் விவரங்களைச் சேகரிக்க உதவும் குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா, 2022–ஐ நடுவணரசு அறிவித்துள்ளது. இந்தச் சட்டம், 2022 ஏப்ரலில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. ஒரு குற்றத்தின் விசாரணையின்போது ஒரு நபரின் அளவீடுகள் அல்லது நிழற்படங்களை ஆவணப்படுத்த உத்தரவிட இந்தச் சட்டம் ஒரு நீதியரசருக்கு அதிகாரமளிக்கிறது.

3. சமூக பங்குச் சந்தைக்கான விரிவான கட்டமைப்பை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?

அ. RBI

ஆ. SEBI

இ. NITI ஆயோக்

ஈ. நடுவண் நிதியமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. SEBI

  • இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமானது (SEBI) சமூக பங்குச்சந்தைக்கான விரிவான கட்டமைப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு இலாபநோக்கற்ற நிறுவனத்திற்கான பதிவு மற்றும் ஆவணங்களை வெளிப்படுத்தல் தேவைகளுக்கான குறைந்தபட்சத் தேவைகளைக் குறிப்பிடுகிறது. மூலதனச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான SEBI, சமூக பங்குச்சந்தைக்கான விதிகளை சமூக நிறுவனங்களுக்கு நிதி திரட்ட கூடுதல் வழியை வழங்குவதற்கு முன்னரே அறிவித்திருந்தது.

4. அண்மையில் வெளியிடப்பட்ட SCALE செயலி, கீழ்க்காணும் எந்தத் துறையில் உள்ள ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டுக்கான தீர்வுகளை வழங்குகிறது?

அ. ஜவுளி

ஆ. தானியங்கி

இ. தோல்

ஈ. மின்னணுவியல்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. தோல்

  • தோல் தொழிற்துறையின் வேலைவாய்ப்புத் தேவைகள், திறன்மேம்பாடு, கற்றல், மதிப்பீடு ஆகியவற்றுக்கு ஓரிடத் தேர்வு வழங்கும் தோல் துறை ஊழியர்களுக்கான திறன் மதிப்பீட்டு சான்றிதழ் (SCALE (Skill Certification Assessment for Leather Employees)) செயலியை சென்னையில் உள்ள CSIR– CLRI நிகழ்வில், நடுவண் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். தோல் தொழில் துறையில் பயிற்சி பெறுவோருக்கு வடிவமைத்தல் மற்றும் தயாரித்தளிப்பதற்காக தோல் திறன் துறை கவுன்சில், இந்தச் செயலியை உருவாக்கியுள்ளது.

5. அண்மைய ஆசிய வளர்ச்சிக்கண்ணோட்டத்தின் புதுப்பிப்பின்படி, 2022–23–க்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பு என்ன?

அ. 8.2%

ஆ. 7.6%

இ. 7.0%

ஈ. 6.8%

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. 7.0%

  • ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) அண்மையில் அதன் ஆசிய வளர்ச்சிக் கண்ணோட்டத்தின் மேம்பட்ட பதிப்பை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, 2022–23–க்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பு ஏப்ரல் மாதத்தில் மதிப்பிடப்பட்ட 7.5%இலிருந்து 7%ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட நிலையானதாக மாறியுள்ளது; மேலும், நாணயக் கொள்கையானது நுகர்வோரின் வாங்கும் ஆற்றலை சிதைக்கும் விதமாக உள்ளது என்று அவ்வறிக்கை கூறுகிறது.

6. எந்த நாட்டில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமைமீறல்கள் குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் (UN) அவை வெளியிட்டுள்ளது?

அ. இந்தியா

ஆ. சீனா

இ. அமெரிக்கா

ஈ. ஆஸ்திரேலியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சீனா

  • சீனா தனது வடமேற்கு ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உய்குர் மற்றும் பிற இசுலாமிய இன சிறுபான்மையினரை குறிவைத்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்த ஐக்கிய நாடுகள் (UN) அவையின் அறிக்கைக்கு பதிலளித்துள்ளது. பல்லாண்டுகளாக செயல்பாட்டில் உள்ள இந்த அறிக்கை அண்மையில்தான் வெளியிடப்பட்டது. 1 மில்லியனுக்கும் அதிகமான சிறுபான்மை இன உறுப்பினர்கள் மாற்று கல்வி நிலையங்களுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டதாக அவ்வறிக்கை கூறுகிறது.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஜிக்யாசா 2.0’ என்ற நிகழ்வுடன் தொடர்புடைய துறை எது?

அ. நிதியியல்

ஆ. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

இ. விளையாட்டு

ஈ. இசை

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

  • ஜிக்யாசா 2.0 திட்டத்தின்கீழ், ‘புதுப்பிக்கத்தக்க எரிபொருளுக்கான ஜிக்யாசா திட்டம்’ குவாலியரில் உள்ள சிந்தியா கன்யா வித்யாலயா பள்ளி மாணாக்கருக்காக டேராடூனில் அமைந்துள்ள CSIR–இந்திய பெட்ரோலிய நிறுவனத்தில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டது. உணவுக்குப் பயன்படாத தாவர எண்ணெய்கள், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் & நெகிழிக்கழிவுகளை பல்வேறு வகையான எரிபொருட்களாக பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை வெளிக்கொணர்வதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

8. அண்மையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுவின் விற்பனைக்கு அனுமதி தந்த இந்திய மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. மிசோரம்

இ. பஞ்சாப்

ஈ. சிக்கிம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மிசோரம்

  • மிசோரம் மாநில அமைச்சரவை உள்நாட்டில் விளையும் திராட்சையை தேறலாக பதப்படுத்தி சந்தையில் கட்டற்ற முறையில் விற்க அனுமதி தந்துள்ளது. இயற்கை திராட்சை முக்கியமாக கிழக்கு மிசோரமில் உள்ள சாம்பை மற்றும் ஹனாஹலான் பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. மிசோரம் மது (தடை) வரைவு விதிகள், 2022 ஆனது மாநிலத்தில் கண்டிப்பான முறையில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் அறிவித்தார்.

9. கிசான் கடனட்டையை (KCC) எண்மமயமாக்குவதற்கான சோதனைத் திட்டங்களை, இந்திய ரிசர்வ் வங்கி, கீழ்க்காணும் எந்தெந்த மாநிலங்களில் செயல்படுத்தவுள்ளது?

அ. தமிழ்நாடு மற்றும் கேரளா

ஆ. மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம்

இ. தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம்

ஈ. மத்திய பிரதேசம் மற்றும் கேரளா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம்

  • கிசான் கடனட்டைகளை (KCC) எண்மமயமாக்குவதற்கான சோதனைத் திட்டங்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இம்மாதம் முதல் தமிழ்நாடு மற்றும் மத்தியபிரதேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தும். இந்தத் திட்டத்தை ரிசர்வ் வங்கி புத்தாக்க மையம் (RBIH) உருவாக்குகிறது. இது KCC அடிப்படையிலான கடனளிப்பை மிகவும் திறமையானதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் செலவுகளைக் குறைப்பதன்மூலம் ஊர்ப் புற மக்களிடையே கடனோட்டத்தை இது மேம்படுத்துகிறது.

10. இந்தியாவில் தேசிய ஆசிரியர் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. செப்டம்பர்.05

ஆ. செப்டம்பர்.10

இ. செப்டம்பர்.15

ஈ. செப்டம்பர்.20

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. செப்டம்பர்.05

  • ஒவ்வோர் ஆண்டும் செப்.5ஆம் தேதி இந்தியா முழுவதும் ஆசிரியர் நாள் கொண்டாடப்படுகிறது. இது, இந்தியாவின் முதல் குடியரசுத்துணைத்தலைவரும், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத்தலைவருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. அவர், 1888ஆம் ஆண்டு செப்டம்பர்.5ஆம் தேதி பிறந்தார். ஆசிரியர் நாள் முதன்முதலில் 1962ஆம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது. உலக ஆசிரியர் நாள், சர்வதேச ஆசிரியர் நாள் என்றும் அழைக்கப்படுகிறது; அது ஆண்டுதோறும் அக்.5 அன்று கொண்டாடப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. செப்.28 முதல் கம்போடியாவில் உலகத் திருக்குறள் மாநாடு

கம்போடியா நாட்டில் செப்.28 முதல் அக்.3ஆம் தேதி வரை உலகத் திருக்குறள் மாநாடு நடக்கவிருக்கிறது. இந்த மாநாட்டையொட்டி, செப்.29ஆம் தேதி அங்கோர் நகரத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுகிறது. கம்போடியா நாட்டின் கெமர் மொழியில் திருக்கு வெளியிடப்படுகிறது.

2. இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம்: தமிழ்நாடு அரசு அறிவிக்கை

இந்தியாவிலேயே முதல் கடற்பசு பாதுகாப்பகம், தமிழக கடற்கரைப் பகுதியில் (பாக் விரிகுடா) 448 சதுர கிமீட்டரில் அமையவுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட உத்தரவு: தமிழக கடலோரப் பகுதிகளில் அழிந்துவரும் நிலையிலுள்ள, மிக அரிதான கடற்பசு இனத்தையும், அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு, மன்னார் வளைகுடா, பாக் விரிகுடா பகுதியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், 448 சதுர கிமீ பரப்பில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக் விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அறிவித்து தமிழ்நாடு அரசு அறிவிக்கை செய்துள்ளது.

கடற்பசுவின் சிறப்பு: உலகின் மிகப்பெரிய தாவர வகை கடல் பாலூட்டிகளான கடற்பசுக்கள், கடற்புற்களை உண்டு வளர்ந்து வருகின்றன. கடற்பசு, இனங்களை பாதுகாப்பதனால், கடல் பகுதிகளுக்கு அடியில் உள்ள கடற்புற்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், வளிமண்டல கார்பனை அதிகளவில் நிலைப்படுத்தவும் உதவி செய்கிறது. கடற்புல் படுகைகள் வணிகரீதியாக மதிப்புமிக்க பல மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு இனப்பெருக்கம் செய்ய ஏதுவாகவும், உணவளிக்கும் இடமாகவும் உள்ளது.

பாக் விரிகுடாவையொட்டிய கரையோர மக்கள் கடற்பசுக்களை பாதுகாப்பதன் அவசியத்தைப் புரிந்துகொண்டு, பல முறை மீன்பிடி வலையில் சிக்கிய கடற்பசுக்களை மீனவர்கள் வெற்றிகரமாக கடலில் விட்டுள்ளனர். இதைப் பாராட்டி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் அவர்களுக்கு அரசு சார்பில் பாராட்டுச்சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

கடற்பசுக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவருகின்றன. இப்போது சுமார் 240 கடற்பசுக்கள் மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பான்மையானவை தமிழ்நாட்டின் கடற்கரையில் காணப்படுகின்றன. எனவே, கடற்பசுக்கள், அவற்றின் வாழ்விடத்தை அழிவிலிருந்து பாதுகாக்க உடனடித் தேவை ஏற்பட்டுள்ளது. இந்த நோக்கங்களை நிறைவேற்ற, பாக் விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைத்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் இல்லை: தமிழக அரசின் அறிவிக்கை மூலமாக எந்தவொரு புதிய கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் விதிக்கப்படப் போவதில்லை. கடற்பசு பாதுகாப்பகம் என்பது இந்தியாவிலேயே முதன்முதலாக அமைக்கப்படும் பாதுகாப்பகமாகும். இதனால், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள வன உயிரின பாதுகாவலர்கள் அனைவரும் பெருமைகொள்வர் என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22nd September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. IHCI is a Hypertension Control Initiative launched by which country?

A. USA

B. India

C. Indonesia

D. Bangladesh

Answer & Explanation

Answer: B. India

  • ‘India Hypertension Control Initiative (IHCI)’ is a hypertension intervention under the National Health Mission of India. It is a collaborative initiative of Union Health Ministry, Indian Council of Medical Research (ICMR), state governments and World Health Organization–India. IHCI won the ‘2022 UN Interagency Task Force and WHO Special Programme on Primary Health Care Award’ was announced at the UN General Assembly side event.

2. Which Union Ministry is associated with ‘Criminal Procedure (Identification) Bill’?

A. Ministry of Law and Justice

B. Ministry of Home Affairs

C. Ministry of Women and Child Development

D. Ministry of Social Justice and Empowerment

Answer & Explanation

Answer: B. Ministry of Home Affairs

  • The Central government notified the Criminal Procedure (Identification) Bill, 2022, which would enable investigating Police Officers to collect the biometric details of prisoners. The law was passed by the Parliament in April 2022. The law also empowers a magistrate to order the documenting of measurements or photographs of a person during the probe of an offence.

3. Which institution has unveiled a detailed framework for Social Stock Exchange (SSE)?

A. RBI

B. SEBI

C. NITI Aayog

D. Union Finance Ministry

Answer & Explanation

Answer: B. SEBI

  • The Securities and Exchange Board of India (SEBI) has unveiled a detailed framework for Social Stock Exchange (SSE). It specifies minimum requirements for a Not–for–Profit Organisation (NPO) for registration and disclosure requirements. The capital markets regulator SEBI earlier notified rules for Social Stock Exchange (SSE) to provide social enterprises with an additional avenue to raise funds.

4. SCALE App, which was launched recently, provides skill–development solutions for employees of which field?

A. Textile

B. Automobile

C. Leather

D. Electronics

Answer & Explanation

Answer: C. Leather

  • Union Minister of Education and Skill Development Dharmendra Pradhan launched the SCALE (Skill Certification Assessment for Leather Employees) app. It provides a one–stop solution for skilling, learning, assessment, and employment needs of the leather industry. He launched the application during a visit to CSIR–Central Leather Research Institute, Chennai.

5. As per the recent Asian Development Outlook (ADO) update, what is the 2022–23 growth projection for India’s economy?

A. 8.2%

B. 7.6%

C. 7.0%

D. 6.8%

Answer & Explanation

Answer: C. 7.0%

  • The Asian Development Bank (ADB) has recently released a supplement to its Asian Development Outlook (ADO). As per the report, the 2022–23 growth projection for India’s economy was slashed to 7% from 7.5% estimated in April. The report says that India’s inflation has turned out to be more persistent than expected, and led to a sharp tightening in monetary policy, eroding consumers’ purchasing power.

6. The United Nations has released a report on alleged human rights abuses in which country?

A. India

B. China

C. USA

D. Australia

Answer & Explanation

Answer: B. China

  • China has responded to a United Nations report on alleged human rights abuses in its north–western Xinjiang region targeting Uyghurs and other mainly Muslim ethnic minorities. The report has been in the works for years and was released recently. The report claims that more than 1 million ethnic minority members were forcibly sent to re–education centers.

7. Jigyasa 2.0 program, which was seen in the news, recently is associated with which field?

A. Finance

B. Science and Technology

C. Sports

D. Music

Answer & Explanation

Answer: B. Science and Technology

  • ‘Jigyasa for Renewable Fuel program’ under Jigyasa 2.0 program was successfully organized for the school students of Scindia Kanya Vidyalaya, Gwalior at CSIR–Indian Institute of Petroleum, Dehradun. The main objective of the program is to give an exposure to different technologies developed for the utilization of non–edible vegetable oils, used cooking oil and waste plastic to different types of fuels.

8. Which Indian state recently allowed the sale of locally made wine?

A. Gujarat

B. Mizoram

C. Punjab

D. Sikkim

Answer & Explanation

Answer: B. Mizoram

  • The Mizoram cabinet allowed the locally grown grapes to be processed as wine and sold in the market freely. Natural grapes are mainly grown in Champhai and Hnahlan areas in eastern Mizoram. The Chief Minister announced that the Mizoram Liquor (Prohibition) Draft Rules, 2022 should be continued to be implemented strictly in the state.

9. RBI is set to run the pilot projects for digitalisation of Kisan Credit Card (KCC) in which states?

A. Tamil Nadu and Kerala

B. Madhya Pradesh and Uttar Pradesh

C. Tamil Nadu and Madhya Pradesh

D. Madhya Pradesh and Kerala

Answer & Explanation

Answer: C. Tamil Nadu and Madhya Pradesh

  • The Reserve Bank of India will run the pilot projects for digitalisation of Kisan Credit Card (KCC) lending from this month in the select districts of Madhya Pradesh and Tamil Nadu. The project is being developed by the Reserve Bank Innovation Hub (RBIH). It aims to make KCC–based lending more efficient by reducing costs and turn–around time for borrowers, and improving credit flow to the rural population.

10. When is the National Teachers Day celebrated in India?

A. September.05

B. September.10

C. September.15

D. September.20

Answer & Explanation

Answer: A. September.05

  • Every year the Teachers’ Day is celebrated on September 5 across India. It commemorates the birth anniversary of our first Vice President of India and the second President of India, Dr Sarvepalli Radhakrishnan. He was born on September 5 in the year 1888.The Teachers’ Day was first observed in the year 1962. World Teachers’ Day, also known as International Teachers Day, is an international day held annually on 5 October.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!