Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

23rd 24th February 2020 Current Affairs in Tamil & English

23rd 24th February 2020 Current Affairs in Tamil & English

23rd 24th February 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

23rd 24th February 2020 Current Affairs in Tamil

23rd 24th February 2020 Current Affairs in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. WHO ஆணையம் மற்றும் UNICEF வெளியிட்டுள்ள ‘சர்வதேச செழுமைக்குறியீட்டில்’* இந்தியாவின் தரநிலை என்ன? (*Global Flourishing Index)

அ. 91

ஆ. 101

இ. 121

ஈ. 131

  • “உலக குழந்தைகளுக்கான எதிர்காலம்” என்ற தலைப்பிலான அறிக்கையொன்றை அண்மையில் உலக நலவாழ்வு அமைப்பு (WHO) ஆணையம், UNICEF & லான்செட் இதழ் ஆகியவை இணைந்து வெளியிட்டன. குழந்தைகள் வாழத்தகுதியான இடம் மற்றும் நலவாழ்வுக்காக ஒரு நாட்டால் மேற்கொ –ள்ளப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் அவற்றை ஒப்பிடும் புதிய, “சர்வதேச செழுமைக்குறியீடு” ஒன்றும் இந்த அறிக்கையின் இணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
  • மதிப்பிடப்பட்ட மொத்த 180 நாடுகளில், இந்தியா, செழுமைக்குறியீட்டில் 131ஆவது இடத்திலும், நிலைத் -திருக்கும் தன்மைக்கான குறியீட்டில் 77ஆவது இடத்திலும் உள்ளது.

2. தேஜ் திட்டத்தைத்* தொடங்கியுள்ள இந்திய மாநிலம் எது? (*Project Tej)

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. ஒடிசா

இ. தெலுங்கானா

ஈ. உத்தர பிரதேசம்

  • Bio Asia 2020 – உயிரி தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கை அறிவியல் மாநாட்டின்போது, ‘MedTech Connect’ என்ற தளத்துடன் இணைந்து தெலுங்கானா அரசு தேஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத்திட்டம், மருத்துவ தொழில்நுட்பத்துறைசார்ந்த தொழில்முனைவோர்கள் தங்கள் கருத்து மாதிரி -களைச் பரிசோதிக்க உதவும் ஒரு தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
  • ஹைதராபாத்தில் உள்ள மாநில ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அமைப்பு மற்றும் MedTech Connect ஆகியவை, இதுதொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான Cyient மற்றும் Xynteoஇன், “இந்தியா 2022 கூட்டணி” என்னும் வணிகக்கூட்டணியின்கீழ் MedTech Connect தளம் நிறுவப்பட்டது.

3.வருடாந்திர, “இயற்கைத்தரவரிசை குறியீடு-2020”இன்படி, நாட்டிலேயே முதலிடத்திலுள்ள இந்திய நிறுவனம் எது?

அ. இந்திய அறிவியல் நிறுவனம் (IISc)

ஆ. அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம் (CSIR)

இ. டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR – மும்பை)

ஈ. ஹோமி பாபா தேசிய நிறுவனம் (HBNI)

  • நிறுவனங்கள் மேற்கொண்டமொத்த ஆராய்ச்சியை அடிப்படையாகக்கொண்ட, “Nature Ranking Index -2020”இன்படி, அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக்கழகம் (CSIR) நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. 2018 டிசம்பர் முதல் 2019 நவம்பர் வரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில், நிறுவனங்களுக்கு தரநிலை வழங்கப்பட்டுள்ளது.
  • பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), இந்தக்குறியீட்டில் இரண்டாவது இடத்தையும், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR-மும்பை) மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.

4.மிசோரம் & அருணாச்சல பிரதேசத்திற்கு, ‘இந்திய மாநிலத்தகுதி’ வழங்கப்பட்ட ஆண்டு எது?

அ. 1972

ஆ. 1949

இ. 1987

ஈ. 2001

  • இரண்டு வடகிழக்கு மாநிலங்களான மிசோரமும் அருணாச்சல பிரதேசமும் கடந்த பிப்ரவரி 20 அன்று தங்களது, ‘மாநில உதய தின’த்தைக் கொண்டாடின. கடந்த 1987ஆம் ஆண்டில் இதேநாளில், இரு மாநிலங்களுக்கும், ‘இந்திய மாநிலம்’ என்னும் தகுதி வழங்கப்பட்டது.
  • கடந்த 1972 வரை மிசோரம், அஸ்ஸாம் மாநிலத்தின் ஒருபகுதியாக இருந்தது. இது ஒரு தனி யூனியன் பிரதேசமாக 1987ஆம் ஆண்டிலேயே மாற்றப்பட்டது. பின்னர், பிப்ரவரி 20, 1987 அன்று இந்தியாவின் 23ஆவது மாநிலமாக உருவானது. வடகிழக்கு எல்லைப்புற முகமைக்கு அருணாச்சல பிரதேசம் எனப் பெயரிட்டு, கடந்த 1972இல் ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. பின்னர், 1987ஆம் ஆண்டில் ஒரு மாநிலமாக உருவாக்கப்பட்டது.

5.நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019இன் பின்னணியில் உள்ள, ‘CCPA’ எதைக் குறிக்கிறது?

அ. Common Consumer Protection Agency

ஆ. Central Consumer Protection Authority

இ. Company Consumer Protection Authority

ஈ. Centralised Consumer Protection Affairs

  • நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம், 2019ஐ அமல்படுத்துவதற்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்படும் என உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்திற்குள் இவ்வாணையம் நிறுவப்படும்.
  • நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் ஏமாற்று விளம்பரங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான அதிகாரத்துடன் பணியாற்றும் புலனாய்வுப்பிரிவு ஒன்று அமைக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த 1986ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச்சட்டத்தை மாற்றியமைத்த “நுகர்வோர் பாதுகாப்பு மசோதா, 2019”க்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

6. 2019ஆம் ஆண்டின் எர்ன்ஸ்ட் & யங் (EY) தொழில்முனைவோராக அறிவிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. ஆதி கோத்ரேஜ்

ஆ. உதய் கோடக்

இ. கிரண் மஜும்தார் ஷா

ஈ. ஸ்ரீதர் வேம்பு

  • கடந்த 2019ஆம் ஆண்டுக்கான எர்ன்ஸ்ட் & யங் (EY) விருதுகளின் 21ஆவது பதிப்பு அண்மையில் வழங்கப்பட்டது. இந்தியாவின் முன்னணி உயிரி மருந்துகள் நிறுவனமான Biocon’இன் நிறுவனரும் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான கிரண் மஜும்தார் ஷா, “2019ஆம் ஆண்டின் EY தொழில்முனைவோராக தேர்வுசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • வரும் ஜூன் மாதத்தின்போது மான்டே கார்லோவில் நடைபெறவுள்ள EY உலக தொழில்முனைவோர் விருதுகள் வழங்கும் விழாவில் அவர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். கோத்ரேஜ் குழுமத் தலைவர் ஆதி கோத்ரேஜுக்கு, “வாழ்நாள் சாதனையாளர் விருது” அறிவிக்கப்பட்டுள்ளது. ‘Blackstone’ இந்தியாவின் துகின் பாரிக், “ஆண்டின் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்திய நபர்” விருதைப்பெற்றவராவார்.

7. “இந்திய ஜவுளி மற்றும் கைவினைகளுக்கான வளர்ந்துவரும் வாய்ப்புகள்” குறித்த கருத்தரங்கத்தை நடத்திய நகரம் எது?

அ. வாரணாசி

ஆ. லக்னோ

இ. புது தில்லி

ஈ. ஹைதராபாத்

  • “இந்திய ஜவுளி மற்றும் கைவினைகளுக்கான வளர்ந்துவரும் வாய்ப்புகள்” குறித்த கருத்தரங்கம் அண்மையில் புது தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக்கருத்தரங்கை, மத்திய ஜவுளி & பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி திறந்துவைத்தார். இந்தத் தேசிய கருத்தரங்கத்தில், மத்திய வர்த்தகம் & தொழிற்துறை மற்றும் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

8.தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, “ESPNஇன் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை” விருதை வெல்லும் இந்திய விளையாட்டு வீராங்கனை யார்?

அ. மேரி கோம்

ஆ. P V சிந்து

இ. சாய்னா நேவால்

ஈ. சானியா மிர்சா

  • இந்திய வீராங்கனையும் உலக சாம்பியனுமான P V சிந்து, தொடர்ந்து 3ஆவது முறையாக ESPN’இன் “ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை” விருதை வென்றுள்ளார். P V சிந்துவின் உலக சாம்பியன்ஷிப் வெற்றியும், “ஆண்டின் சிறந்த தருணம்” எனத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ESPN’இன், “ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்” விருதை செளரப் செளத்ரி பெற்றுள்ளார்.
  • தலைமை தேசிய பூப்பந்து பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த், “ஆண்டின் சிறந்த பயிற்சியாளராக” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மானு பாக்கர்-செளரப் செளத்ரி அணி, “ஆண்டின் சிறந்த அணி”க்கான கெளரவத்தைப் பெற்றுள்ளது.

9.குடிமக்களை நோக்கிய சேவையை வழங்குவதில் சிறந்து விளங்கியதற்காக, இந்திய இரயில்வேயின் எந்த வலைத்தளம், தேசிய மின்னாளுகையின், ‘வெள்ளி’ விருதை வென்றுள்ளது?

அ. வேர் இஸ் மை டிரெயின்

ஆ. இரயில் சுவிதா

இ. இரயில் மதத்

ஈ. இரயில் சாரதி

  • இந்திய இரயில்வேயின் பயணிகள் குறைதீர் வலைத்தளமான இரயில்மதத், குடிமக்களை நோக்கிய சேவைகளை வழங்குவதில் சிறந்து விளங்கியதற்காக தேசிய மின்னாளுகை விருதை வென்றுள்ளது. குறைகளைக் கூறுதல், விசாரித்தல் மற்றும் உதவிக்கு பயன்படுத்தப்படும் இந்திய இரயில்வேயின் இப் புதிய ஒருங்கிணைந்த தளத்துக்கு, தேசிய மின்னாளுகை விருதுகளின் இரண்டாம் பிரிவின்கீழ், ‘வெள்ளி’ விருது வழங்கப்பட்டுள்ளது. நிர்வாக சீர்திருத்தங்கள் & பொதுமக்கள் குறைதீர் துறையானது ஆண்டுதோறும் தேசிய மின்னாளுகை விருதுகளை வழங்கிவருகிறது.

10. NITI ஆயோக்கின், “நீடித்த வளர்ச்சி இலக்குகள் (SDG) மாநாடு-2020”ஐ நடத்திய நகரம் எது?

அ. புது தில்லி

ஆ. கெளகாத்தி

இ. கொல்கத்தா

ஈ. ஷில்லாங்

  • NITI ஆயோக், அண்மையில், அஸ்ஸாம் மாநிலம் கெளகாத்தியில், “நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த கூட்டம் – 2020: கூட்டாண்மை, ஒத்துழைப்பு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி”யை ஏற்பாடுசெய்தது. வடகிழக்கு கவுன்சில், அஸ்ஸாம் மாநில அரசு, டாடா அறக்கட்டளை, ஐ.நா வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவலமைப்பு (RIS) ஆகியவற்றுடன் இணைந்து இம்மாநாடு ஏற்பாடுசெய்யப்பட்டது. 3 நாள் நீளும் இந்நிகழ்வு, பிப்.24 அன்று தொடங்கியது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

Image result for tamilnadu map logo

  • தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் (TNUSRB) தலைவராக சுனில்குமார், DGP நியமி –க்கப்பட்டுள்ளார்.
  • அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆய்வுமையத்துக்குச் (NASA) செல்லும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு தமிழ்நாட்டரசின் சார்பில் `2 இலட்சம் பணவுதவியை வழங்க முதலமைச்சர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
  • தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டணத்தில் அமைக்கப்பட்டுள்ள, ‘பத்மஸ்ரீ’ Dr பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!